• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன் காதலால் என்னை மீட்டுவிடு - 6

ரோசி கஜன்

Administrator
Staff member

விஜய் டைனிங் டேபிள் நோக்கி தன் முகத்தை துண்டால் துடைத்தபடி வந்தான் அவனுக்கு தெரியும் ராஜா கிளம்பி விடுவான் என்று அமைதியாக சாப்பிடும் விஜய் இடம் வந்து நின்றார் சரஸ்வதி அவர் மனநிலை நிலையை புரிந்து கொண்ட விஜய் சச்சிமா மகனுக்கு பார்த்து பார்த்து சமைத்தது போல தெரியுது எனக்கு பிடிச்ச ஐட்டம் எல்லாம் ரொம்ப குறைஞ்சு போச்சு என்று அவர் மன நிலையை மாற்ற முயற்சித்து வெற்றியும் கண்டான்

பின் மகிழினியை நோக்கி "பாப்பா நீ ஆபீஸ் பக்கம் வந்து எத்தனை நாள் ஆச்சு தெரியுமா?"
எப்பொழுது வருவதாக நினைப்பு இருவருக்கும், அங்க நான் மட்டும் எல்லா வேலையும் பார்க்க வேண்டியதிருக்கு நாளையிலிருந்து ஒழுங்கா ஆபீஸ் வாங்க இல்லையென்றால் அட்சயவை வேறு பிரான்ச்சுக்கும் மாற்றி அங்கு இன்சார்ஜ் ஆக்கி விடுவேன்
பாப்பா நீ பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் ஓனர் போல இல்ல.. ஏதோ.... பள்ளி குழந்தைகள் போல இருக்கு உங்க நடவடிக்கைகள்.
ரெண்டு பேரும் எம் ஈ சிவில் பைனல் இயர் இன்டர்ன்ஷிப் செய்ய அடம் பிடித்து என் பிரண்ட் ஆபிஸ் போனீங்க ...அதுவும் முடிஞ்சு ஒரு வாரம் ஆயிடூச்சி
ஒரு வாரம் உங்களுக்கு பிரேக் டைம் கொடுத்தாச்சு
நாளை முதல் ஆபீஸ்ல வாரீங்க "என்றான் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர் இருவருக்கும் தெரியும் எத்தனை பாசமான அண்ணனோ அதைவிட பல மடங்கு ஹிட்லர் வேலை விஷயத்தில் மட்டும் அவனை பொறுத்த வரையில் இருவரும் எதையும் சமாளிக்கும் திறம் கொண்டு பாரதி கண்ட புதுமைப்பெண் போல இருக்க வேண்டும் என்பதே அவனின் எண்ணம் அவன் இந்த நிலையடைய பட்ட சிரமங்கள் அதிகம் சிறு வயது... என்ன செய்ய தெரியும் என்று இவனிடம் வேலை கொடுக்க தயங்கியவர்கள், ஒதுங்கியவர்கள், அதிகம்

சிறு சிறு பில்டிங்கில் தொடங்கி இன்று விருட்சமாக வளர்ந்து நிற்கிறது மகிழினி கன்ஸ்ட்ரக்ஷன் அவன் பட்ட துயரங்கள் இருவரும் படக்கூடாது
அதேசமயம் எளிதில் எது கிடைத்தாலும் அதன் மதிப்பு தெரியாது என்பது அவனின் கருத்து

அதனாலேயே இரண்டு பேருக்கும் அடிமட்ட வேலை முதல் சி ஏ ஓ வேலை வரை அனைத்திலும் பயிற்சி அளிப்பான் எந்த சலுகைகளும் அவனும் தரமாட்டான் யாரையும் தரவும் அனுமதிக்க மாட்டான்

மும்பை
காலை உணவை முடித்தபின் அங்குள்ள இவர்களின் மருத்துவமனையை பார்க்க சென்றனர் அப்பா விவேகனும் மகன் செழியனும்அங்கு சென்று சில பல மாறுதல்களை சொல்லி மற்ற நகரங்களில் நடக்கும் வேலைகளில் விவரங்களையும் தம் கணினியின் வீடியோ கால் மூலம் கேட்டு தெரிந்து கொண்டு வீடு திரும்பினார்கள் இருவரும்

தன் அறைக்குள் சென்றவன் கதவைத் தாளித்துவிட்டு தன் சூட்கேஸ் வாக்கை ஓபன் செய்தான் ...அதிலிருந்து ஒரு டைரியை எடுத்து... மெல்ல தடவி பார்த்தான் பக்கங்களை புரட்டினான் தன் மார்பினை மெல்ல வருடி கொடுத்தான் அந்த டைரியின் முதல் பக்கத்தில் சிவப்பு பேனாவால் எழுதப்பட்ட ஒன்று என்ற எண்ணை டிக் செய்தான் பின் அந்த டைரியை பத்திரப்படுத்தினான் தன் கணினியில் கையில் எடுத்து தன் ஜெர்மனியில் விட்டு வந்த வேலைகளை தொடர உத்தரவு பிறப்பித்தான்.

ஜெர்மனி
பத்மினி விவேகனிடம் தானும் இந்தியா வருவதாக கூற அதை எப்படி தடுப்பது என்று தெரியாமல் குழம்பி நின்றார்
விவேகன் இங்கு உள்ள சீதோசன நிலைய சமாளிக்க இவரே திண்டாடிக் கொண்டிருக்கும் பொழுது ...அவருக்கும் தெரியதான் செய்தது அவர்களால் செழியனை விட்டு பல நாட்கள் இருக்க முடியாது ஆனால் .
அவர்கள் எண்ணி வந்த காரியம் முடிய பல நாள்கள் தேவைப்படுகிறது என்ன செய்வது இந்த சூழ்நிலையை சமாளிக்க அப்பா சேரமானால்தான் முடியும் என்று அவர் தனிப்பட்ட எண்ணுக்கு அழைப்பு விடுத்தார் விவேகன்

அங்கு தன் மனைவியிடம், ஆசிரியரின் வினாவிற்கு விடை சொல்ல திணரும் சிறுவன் போல் நின்று கொண்டு இருந்தார் அவரின் அப்பா சே..ர.மா..ன்
 
Top Bottom