அவர்கள் மட்டுமின்றி பிரார்த்தனாவைத் தவிர சம்யுக்தனின் பெற்றோரும் கூட அவனது இந்த உடல்மொழியைக் கண்டுப் பதட்டம் அடைந்தனர்.
“சம்யு!”என்ற தந்தையிடம்,
“ நான் இப்போ யார் கூடவும் சண்டை போடவோ, கத்திப் பேசவோ போவதில்லைப்பா. அதனால் நீங்க யாரும் பயப்படத் தேவையில்லை”என்றவனோ,
தனது மாமியாரிடம்,”வசுமதியோட அம்மா, அப்பாவை எங்களோட மறு வீட்டு விருந்துக்குக் கூப்பிடனும்னுத் தோன்றலைத்தை. அதே மாதிரி, இங்கே நடக்கிற எந்த நல்லது, கெட்டதுக்கும் நாங்க அவங்களைக் கூப்பிட்றதாக இல்லை!”என்று தீர்க்கமாக உரைத்து விட்டு,
“இதில் உங்களுக்கு வேற ஏதாவது சந்தேகம் இருக்கா?”என்று தன் இறுக்கத்தை தளர்த்திக் கொண்டுக் கேட்டான் சம்யுக்தன்.
அவனது அந்த திடீர் மாற்றத்தைக் கண்யு நடுங்கினாலும்,”இல்லை மாப்பிள்ளை”என்று பதட்டமாக கூறினார் கோமளா.
“நீ ஏன் வந்த இடத்தில் தேவையில்லாததை எல்லாம் பேசிக்கிட்டு இருக்கிற?”என மனைவியைக் கண்டித்து விட்டு,
“இவ இப்படி பேசினதுக்காக நான் உங்க எல்லார் கிட்டேயும் மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”என்ற சக்திவேலிடம்,
“ஐயோ! அதெல்லாம் வேண்டாம் சம்பந்தி”என்றிருந்தார் கலாவதி.
“நாங்கப் போயிட்டு வர்றோம்ங்க. வீட்டுக்குப் போய் மத்த வேலையைப் பார்க்கிறோம்”என்றுரைத்து விட்டுத் தங்கள் மகளிடம்,
“நாங்க கிளம்புறோம் பிரனா”எனக் கூறி விடைபெற்றுக் கொண்டுத் தன் மனைவியுடன் வெளியேறினார் சக்திவேல்.
“இதை இத்தோட விட்ருங்க. எல்லாரும் உங்க வேலையைப் போய்ப் பாருங்க”என்று பொதுவாக உரைத்து விட்டார் ஜெயராம்.
தங்களது அறைக்கு வந்ததும் தனது முகம் இறுக கட்டிலில் அமர்ந்தான் சம்யுக்தன்.
“அம்மா பேசினதுக்காக நான்…”என்ற மனைவியைத் தடுத்து,
“இருக்கட்டும். நான் அவங்களைத் தப்பாக எடுத்துக்கலை!”எனத் தீர்க்கமாக கூறி விட,
“சரி”என்றவளோ,
அடுத்து வந்த நாளில் தனது அன்னைக்கு அழைத்து,
“நானும் உங்களை எதுவும் சொல்லக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன்ம்மா. ஆனால் நீங்கப் பண்ற சில விஷயங்களை என்னால் பொறுத்துக்கவே முடிய மாட்டேங்குது! நீங்க ஏன்ம்மா இப்படி பண்றீங்க? நான் உங்களுக்கு என்னப் பாவம் பண்ணேன்? நானே இப்போ தான் எனக்குப் பிடிச்ச வாழ்க்கையை வாழ்ந்துட்டு இருக்கேன். அது உங்களுக்குப் பிடிக்கலையா?”அவரிடம் சங்கடப்பட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
“அப்படியெல்லாம் இல்லடி. என்ன இருந்தாலும் அவங்க உன் புகுந்த வீட்டாளுங்களோட முதல் சம்பந்தி. அதனால் தான் நான் அப்படி கேட்டேன். இனிமேல் சத்தியமாக அப்படி கேட்க மாட்டேன்!”என அவளுக்கு வாக்களித்தார் கோமளா.
“சரிம்மா. நான் உங்களை நம்புறேன்”என்று அவரிடம் மொழிந்து விட்டு அழைப்பை வைத்தவுடன்,
அந்த உரையாடலைத் தன் கணவரிடம் பகிர்ந்து கொள்ள,
அவரோ,“இனிமேல் இப்படி நடந்துக்காதேம்மா”எனத் தானும் மனைவிக்கு அறிவுறுத்தினார் சக்திவேல்.
அதற்குப் பிறகு மறு வீட்டு விருந்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் சுமூகமாகச் செய்து முடிக்கப்பட்டு அதற்கான நாளும் வந்து விட்டிருந்தது.
அன்றைய தினம், தங்களது இணையின் உடையைத் தான் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தார்கள் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனா.
ஏனெனில் அவர்கள் இருவருக்கும் ஒரே நிறத்தில் தான் உடைகளை எடுத்துக் கொடுத்து இருந்தனர் சக்திவேலும், கோமளாவும்.
அடர் ஊதா நிற உடைகள் அவ்விருவருக்கும் மிகவும் பொருத்தமாக இருந்தது எனலாம்!
தன்னுடைய சேலையைப் பாந்தமாக உடுத்திக் கொண்டுத் தனது அருகில் அமர்ந்து உணவுண்டு கொண்டிருந்த மனைவியைக் கண்டுப் பரவச நிலையை அடைந்து,”இன்னைக்கு நீ ரொம்ப அழகாக இருக்கிற”என அவளிடம் ரசனையுடன் உரைத்தான் சம்யுக்தன்.
அதைக் கேட்டதும், மனம் குளிர்ந்து போய்,”நான் எப்பவுமே அழகு தான். உங்களுக்குத் தான் அது லேட் ஆகப் புரிஞ்சு இருக்கு!”எனக் குறும்புடன் கூறியவளோ,
அதேபோல், அடர் ஊதா நிறச் சட்டையில் தனது மீசையைக் கொஞ்சம் முறுக்கி விட்டுக் கொண்டுத் தனது இறுக்கமற்ற, வசீகரமான முகத்தில் அனைவரையும் ஈர்த்துக் கொண்டிருந்த கணவனிடம்,”நீங்களும் ரொம்ப ஹேண்ட்சம் ஆக இருக்கீங்க!”என்று பாராட்டினாள் பிரார்த்தனா.
அதில் வெட்கம் தாளாமல் தனது புன்னைகையை மீசைக்குள் மறைத்துக் கொண்டான் சம்யுக்தன்.
அவர்களது அன்னியோன்யத்தைப் பார்த்த மொத்தக் குடும்பமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டர்கள்.
அவர்கள் மட்டுமின்றி அங்கே வந்திருந்த இரு வீட்டாரின் உறவினர்களும் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனாவின் ஜோடிப் பொருத்தத்தைக் கண்டு மூக்கின் மேல் விரல் வைக்காத குறையாக வியந்து போய் அவர்களைக் கிண்டல் மற்றும் குறை சொல்ல எந்தக் காரணமும் கிடைக்காமல் அலமலந்து போயினர்.
“அம்மா! நீங்க எங்கிட்ட சொன்ன மாதிரி இங்கே வந்திருக்கிற எல்லாரோட காலடி மண்ணை எடுத்தும் அண்ணாவுக்கும், அண்ணிக்கும் திருஷ்டி சுத்திப் போட்ருங்க! எல்லாரும் அவங்களை எப்படி வெறிச்சு, வெறிச்சுப் பார்க்கிறாங்கன்னுப் பாருங்க!”எனத் தாயின் காதைக் கடித்தான் பிரதீபன்.
உடனே தானும்,“ஆமாம்டா”எனப் பூரிப்புடன் உரைத்தார் கலாவதி.
“இப்படி சொல்லிட்டு நீங்களே அவங்களைக் கண்ணு வச்சா எப்படி? பந்தியைக் கவனிங்க”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார் ஜெயராம்.
அதே சமயம்,”நம்ம மகளையும், மருமகனையும் பார்க்கும் போது இனிமேல் நாமப் பிரார்த்தனாவோட வாழ்க்கையை நினைச்சுப் பயப்படத் தேவையில்லைன்னுத் தோணுதும்மா!”என்று தன் மனைவியிடம் பகிர்ந்து கொண்டார் சக்திவேல்.
“ஆமாங்க. நானும் இதைப் புரிஞ்சிக்காம ஏதேதோ பேசிட்டேன். இனிமேல் எந்த வார்த்தையும் விட மாட்டேன்”என உறுதியாக கூறி விட்டார் கோமளா.
அதேபோல், என்ன தான், அவர் வார்த்தையை விட்டிருந்தாலும் கூடத் தங்களது சம்பந்தியை விட்டுக் கொடுக்க கூடாது என்று பிரார்த்தனாவின் பெற்றோரை நல்லவிதமாகவே வரவேற்று இருந்தனர் சம்யுக்தனின் பெற்றோர்.
அதனாலேயே தனது தவறை உணர்ந்து இன்னொரு முறை அதைச் செய்யக் கனவிலும் நினைக்கக் கூடாது என்று உறுதி பூண்டார் கோமளா.
அதற்குப் பிறகுத் தாங்கள் இருவரும் உணவுண்டு விட்டுத் தங்களது குடும்ப உறுப்பினர்களைப் பந்தியில் உட்கார வைத்து உணவுப் பரிமாறினர் சம்யுக்தன் மற்றும் பிரார்த்தனா.
அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களை நிறையப் புகைப்படங்களை எடுத்து தள்ளி விட்டிருந்தான் பிரதீபன்.
அப்போது அவ்விடத்திற்குத் தாமதமாக வந்து சேர்ந்தாள் உத்ரா.
அவளைப் பொய்க் கோபத்துடன் முறைத்து,”இன்னும் சாயந்தரம் கிளம்பி வர வேண்டியது தானே?”எனக் குறைபட்டுக் கொண்டாள் பிரார்த்தனா.
“ஹேய் சாரி டி! வீட்டில் கொஞ்சம் வேலை வந்துடுச்சு. அதான், லேட் ஆயிடுச்சு”என்று அவளைச் சமாதானம் செய்யவும்,
“சரி வா” என்று அவளைத் தனது பிறந்த மற்றும் புகுந்த வீட்டாருக்கு அறிமுகப்படுத்தி வைத்து விட்டுப் பந்தியில் அமர வைத்ததும்,
“உன் வீட்டுக்காரர் எங்கே?”எனச் சம்யுக்தனைப் பற்றி விசாரித்தாள் உத்ரா.
“அதோ அங்கே இருக்கார்”என்று உறவினர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்த கணவனைக் காண்பித்தாள் பிரார்த்தனா.
“ஓஹோ! ஓகே டி”என்றவளும் உணவருந்த ஆரம்பிக்க,
தனது கணவனிடம் சென்று,”என்னங்க! உத்ரா வந்துட்டா. உங்களைப் பத்தி விசாரிச்சா. அவகிட்டே வந்து ஒரு ஹாய் சொல்லிட்டுப் போங்களேன்”என்றவளின் பேச்சைத் தட்டாமல்,”சரிம்மா. வா”எனக் கூறி அவளுடன் போய்,
”ஹாய் உத்ரா மேம். இப்போ தான் வந்தீங்களா?”என்றிருந்தான் சம்யுக்தன்.
அதில் வியப்பு மேலிட,”ஹாய் சார். ம்ஹ்ம். இப்போ தான் வந்தேன் சார்”என்றுரைக்க,
“ஓகே. நீங்க சாப்பிடுங்க”என்று அவளிடம் கூறி விட்டுத் தன் மனைவியுடன் பந்தியில் உட்கார்ந்திருந்த மற்றவர்களைக் கவனிக்கத் தொடங்கி விட்டான்.
அதற்குப் பிறகு அனைத்து உறவினர்களும், பிரார்த்தனாவின் தோழியும் கூட உணவருந்தி முடித்து விட்டு அவர்களை வாழ்த்தி விடைபெற்றுக் கொண்டதும்,
அந்த விருந்திற்காகப் போடப்பட்டு இருந்த கொட்டகை மற்றும் கேட்டரிங் ஆட்களுக்குக் கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தை தந்து விட்டு அவர்கள் தங்களது பொருட்களை எடுத்துச் செல்லும் வரை அங்கேயே இருந்து மேற்பார்வை பார்த்தனர் ஜெயராம், பிரதீபன் மற்றும் சக்திவேல்.
இங்கே, அன்றைய தினம் தாங்கள் சுவைத்த உணவு வகைகளைப் பற்றிப் புகழ்ந்து பேசிக் கொண்டு இருந்தார்கள் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
“சாப்பாடு பிரமாதமாக இருந்துச்சு சம்பந்தி! இவங்களையே நம்ம வீட்டில் நடக்கிற எல்லா விசேஷங்களுக்கும் கூப்பிடலாம்னு நினைக்கிறேன்”என்று பூரிப்பாய்க் கூறினார் கோமளா.
உடனே,”ஆமாம் சம்பந்தி. நம்ம உறவுக்காரங்க எல்லாரும் ருசிச்சு சாப்பிட்றதைப் பார்த்துப் பத்தாமல் போயிடுமோன்னு நினைச்சேன்! ஆனால் எல்லாரும் திருப்தியாகச் சாப்பிட்டுப் போனதைப் பார்த்ததும் தான் எனக்கும் நிம்மதியாக இருந்துச்சு”என்று தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார் கலாவதி.
அதேசமயம், தங்களது மேற்பார்வைப் பார்க்கும் வேலையை முடித்து விட்டுத் தாங்களும் வீட்டிற்குள் நுழைந்தார்கள் ஜெயராம், பிரதீபன் மற்றும் சக்திவேல்.
அவர்களுக்குப் பழச்சாறு கொண்டு வந்து கொடுத்தாள் பிரார்த்தனா.
“எனக்கு வயிறு ஃபுல் ஆயிடுச்சும்மா. நைட் சாப்பாடு வேண்டாம்”என்று அன்னையிடம் தெரிவித்தான் பிரதீபன்.
“நீ எங்கிட்ட அடி வாங்குவ! கொஞ்சமாக ரசம் சாப்பாடு சாப்பிட்டுத் தான் ஆகனும்”என்று அவனுக்கு அறிவுறுத்தவும்,
“சரிம்மா”என அதற்கு ஒப்புக் கொள்ள,
“நீ போய் டிரெஸ்ஸை மாத்து. நீ வந்ததுக்கு அப்பறம் நான் போய் மாத்திக்கிறேன்”என்று கூறி மனைவியை அறைக்கு அனுப்பி வைத்தான் சம்யுக்தன்.
“பிரனா வந்ததும் நாங்க அவ கிட்டேயும் சொல்லிட்டுக் கிளம்புறோம் சம்பந்தி”என்றிருந்தார் சக்திவேல்.
“சரிங்க சம்பந்தி. இந்த விருந்தில் உங்களுக்கு எந்தக் குறையும் இல்லையே?”என்று அவரிடம் கேட்டார் ஜெயராம்.
“அதெல்லாம் எதுவும் இல்லை சம்பந்தி! நாம எல்லாரும் சேர்ந்து தானே இந்த விருந்தை நடத்தி முடிச்சு இருக்கோம்! இதில் எங்களுக்கு என்னக் குறை இருக்கப் போகுது சொல்லுங்க? எல்லாமே நிறைவாக இருந்துச்சு”என்று மனதாரக் கூறினார் கோமளா.
“ரொம்ப சந்தோஷம் சம்பந்தி”என்றார் கலாவதி.
அப்போது தனது உடையை மாற்றிக் கொண்டு அங்கே வந்திருந்த தங்களது மகள் மற்றும் மருமகனிடமும், சம்பந்தி வீட்டாரிடமும் விடைபெற்றுக் கொண்டு அங்கேயிருந்து கிளம்பி விட்டார்கள் சக்திவேல் மற்றும் கோமளா.
அதற்குப் பிறகுத் தானும் உடை மாற்றிக் கொண்டு வந்த சம்யுக்தனையும், பிரார்த்தனாவையும் ஒன்றாக உட்கார வைத்து, தன் சின்ன மகனிடம் கூறியதைப் போலவே அவர்களுக்குத் திருஷ்டி கழித்து விட்டுத், தங்களுடன் சேர்ந்து, இரவு உணவை உண்ணச் செய்த பிறகு தான், அவர்களை அறைக்கு அனுப்பி வைத்தார் கலாவதி.
தங்கள் அறையில், தாங்கள் இருவரும் உறங்குவதற்கு ஆயத்தம் அடைந்த போது,”நான் என் ஸ்கூல் ஃப்ரண்ட்டைப் பார்க்கப் போகனும்னு உங்ககிட்ட முன்னாடியே சொல்லி இருந்தேன்ல? எப்போ போறது?”என்றவளோ,
தன் தோழி தங்கி இருக்கும் இடத்தையும் கணவனிடம் தெரிவித்தாள் பிரார்த்தனா.
“ம்ஹ்ம். தீபன், அவனோட ஃப்ரண்ட்டோட சிஸ்டர் மேரேஜூக்குப் போகனும்னு சொல்லி இருந்தானே? அன்னைக்கு அவன் கூடவே போய் அங்கே இறங்கிக்கோ. இப்போ தூங்கலாம். குட் நைட்”என்றுரைத்து விட்டு உறங்க ஆரம்பித்தான் சம்யுக்தன்.
உடனே தானும் படுக்கையில் படுத்துக் கொண்டு விழிகளை மூடி நித்திரையில் ஆழ்ந்தாள் பிரார்த்தனா.
- தொடரும்

Last edited by a moderator:
Author: STN 22
Article Title: என் தேசமிங்கே பூந்தோட்டமாக - 29
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.