என் மன்னவன் நீ தானோ
அத்தியாயம் 24
வார நாட்களில், காலையில் பல்கலைக்குச் செல்லுதல், மாலையில் வீட்டுக்கு வருதல், அதன் பின்னர் புத்தகங்கள் வாசித்தல், கட்டுரைகள் எழுதுதல், கருத்தரங்குகள் சம்பந்தமான ஏற்பாடுகள் செய்தல்…, வார இறுதி நாட்களில் கருத்தரங்குகளுக்கு செல்லுதல், நண்பர்களை சந்திப்பது என அகிலனின் நாட்கள் நகர்ந்தன.
சௌமிக்கு யூடியூப் பார்த்து, மற்றும் தாயிடம் கேட்டு சமைத்தல், வீட்டினை சுத்தம் செய்தல், நண்பர்களுடன் கதைத்தல், அவர்களை சந்தித்தல், வேலைக்கு விண்ணப்பித்தல், நேர்முகத் தேர்வுக்கு தன்னை தயார்படுத்தல் என நாட்கள் நகர்ந்தன.
அவர்கள் இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மிக குறைவாக தான் இருந்தது.
சௌமிக்கு அவனது செயல்கள் தன்னை புறக்கணிப்பது போல் இருக்க, அவளும் அவனைக் கவனியாமல் தனது வேலைகளை மட்டும் பார்த்தவாறு இருந்தாள்.
அவள் சமையலில் ஆரம்ப நிலை என்பதால் அவள் சமைக்கும் உணவு அவ்வளவு ருசியாக இருக்காது விட்டாலும் அகிலன் சமாளித்து சாப்பிடுவான்.
அவள், அவனுக்காக புதுசு புதுசா சமைப்பது, தனது தாயிடம் சமைக்கும் முறை கேட்டு அவனுக்கு விரும்பியதை சமைப்பது, ஆர்வத்துடன் உணவு பரிமாறுவது, வீட்டை நேர்த்தியாக பராமரிப்பது, தனது தாயுடன் அக்கறையாக ஒவ்வொரு நாளும் கதைப்பது என அவளின் ஒவ்வொரு செயல்களும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அத்துடன் அவள், அவனின் வீட்டுக்குள் நடமாடுவது புதுவிதமான இனிய உணர்வை அவனுக்கு கொடுத்தது.
முன்னர் தான் அவளிடம் ஓர் அலட்சியத் தன்மையை காண்பித்ததால் இப்போது அவளும் அதையே அவனுக்கு காண்பிக்கிறாள். அவன் ஏதாவது கேட்டால், பதில் சொல்வதில்லை, மீண்டும் கேட்டால் ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்பதை தவிர வேறு ஏதும் சொல்வதில்லை.
அவள் ஹாலில் இருக்கும் போது அவன் அங்கு வந்தால், அவள் உடனே எழுந்து தன்னறைக்கு சென்று விடுவாள், அவள் சமையலறையில் இருக்கும் போது அவன் அங்கு சென்றால், உடனே அவள் வெளியே வந்துவிடுவாள். அவளின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை அவனும் அவதானித்து கொண்டு தான் இருக்கிறான்.
இப்போதெல்லாம் அவளைக் காணும் போது, அவனின் மனதில் புதுவிதமான இனிமையான உணர்வுகள்! அவளின் அழகிய வதனம், அவனுக்கு புத்துணர்வை ஏற்படுத்தும். அவள் தன்னைப் பார்த்தால், அவன் மனதில் இறக்கை கட்டி பறப்பது போல் ஓர் உணர்வு. அவளை உணர்வதற்காக வீட்டில் அதிக நேரத்தை செலவிட விரும்பினான். வீட்டில் இருக்கும் நேரங்களில் அவள் இருக்கும் இடத்திலோ அல்லது அவளைப் பார்க்கும் படியான ஓர் இடத்திலோ இருப்பான்.
அவள், அவனைக் கவர வேண்டும் என்பதற்காக விதம்விதமாக சமைக்கவில்லை! தனது கடமையை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பதற்காகவும் சமையல் பழகுவதற்கு இது தான் பொருத்தமான நேரம், வேலைக்கு போகத் தொடங்கினால் சமையலில் அதிகம் நேரம் செலவிட முடியாது என்பதாலும், தனது நேரத்தை பயனுள்ள முறையில் கழிக்க வேண்டும் என்பதனாலும், தாயும் அவளை சமைக்கும் படி ஊக்குவிப்பதாலும் தான் அவள் ஒவ்வொரு நாளும் புது உணவை செய்வது.
அவன், அவளுடன் கதைக்க முயல்வது அவளுக்குப் புரிந்தாலும், அதை அவள் அசட்டை செய்து, தானும் அவனுக்கு சற்றும் சளைத்தவள் இல்லை என்பதை வெளிப்படுத்தி விடுவாள்.
அவன் அழகாக தயாராகி பல்கலைக்கு செல்லும் போதும், வீட்டில் சாதாரணமாக இருக்கும் போதும் அவள் அவனை ரகசியமாக ரசிக்கத் தவறுவதில்லை. சில நேரங்களில் அவள் மனம், அவனுக்காக ஏங்குவது உண்மைதான்.
இவ்வாறு இரண்டு மாதங்கள் கடந்துவிட்டன. அடுத்த நாள் காலையில் சௌமிக்கு ஓர் நேர்முகத் தேர்வு இருந்தது. அன்று முழுவதும் அதற்கு தயார் செய்வதும், அதற்கு ஆடையை தயார் செய்வதுமாக மிகுந்த பரபரப்பாகவே இருந்தாள். அகிலனும் அவளின் இந்த நடவடிக்கையை கவனிக்கத் தவறவில்லை.
இராவுணவின் போது, அவனுக்கு பரிமாறிவிட்டு, அவளும் அவனுக்கு எதிரே அமர்ந்து, உணவருந்திக் கொண்டிருந்தவள் “நாளைக்கு எனக்கு ஒரு இண்டர்வியூ இருக்கு..” என்றாள் உணவைப் பார்த்துக் கொண்டு.
அவளின் பரபரப்புக்கு இது தான் காரணமா என நினைத்தவன் அவளை பார்த்து முறைத்தான். அவள் வேலைக்குச் செல்வதில் அவனுக்கு எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை. இவ்வளவு நாளும் எதுவும் சொல்லாமல் நாளைக்கு நேர்முகத் தேர்வு என்றால், முதல் நாள் இரவா சொல்வது என்பதில் அவனுக்கு அத்தனை கோபம். முகம் இறுக “ இப்பவாவது என்னட்ட சொல்லணும் எண்டு உனக்கு தோணிச்சே அந்தளவில சந்தோசம்…” என்றான் அவளைப் பார்த்து.
அவனின் கோபம் அவளுக்குப் புரிந்தது. அவள் தலை நிமிர வில்லை.
“எத்தனை மணிக்கு…?” என்று கேட்டான் ஆத்திரத்தை அடக்கியவாறு.
“ஒன்பது மணிக்கு..” என்றாள் மெல்லிய குரலில்.
அவனுக்கு ஒன்பது மணிக்கு பல்கலைக்கழக துணைவேந்தருடன் முக்கிய கலந்துரையாடல் இருந்தது, விடுமுறை எடுக்க முடியாது. இவள் இரண்டு நாளைக்கு முதலே கூறியிருந்தாலும் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம். இவளின் திமிரைப்பார் என நினைத்தவனுக்கு ஆத்திரம் தான்.
விடாப்பிடியாக நின்று தன்னை மணம் முடித்தவள் இப்போது விலக்கி வைத்திருப்பது அவனுக்கு சினத்தை ஏற்படுத்தியது. தான் அவளை விலக்கியது அவனுக்கு ஞாபகத்தில் வரவில்லை!
எங்கே, என்ன வேலை என விபரம் கேட்டவன் “எட்டு மணிக்கு ரெடியாயிரு…” என்றவன் தட்டில் உள்ளதை விரைவாக சாப்பிட்டுவிட்டு எழும்பினான்.
அவள் “நான் பஸ்ஸில போவன்…” என்றாள் மெதுவாக. திரும்பி அவளைப் பார்த்து முறைத்தவனைப் பார்த்து, அவள் வாயை மூடிக்கொண்டாள்.
அடுத்த நாள் காலையில் மெரூன் கலர் சேலை உடுத்து, தலை முடியை உயர்த்தி ஓர் கிளிப்பினுள் அடக்கி, சிறிய பொட்டு வைத்து, லேசான ஒப்பனையுடன் வெளியே வந்தவளை கண்டதும், அவளை இறுக்கி அணைத்து, முத்தமிட உடலும் உள்ளமும் பரபரத்தது அவனுக்கு. பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டு, நீர் அருந்தி தன்னை சமன் படுத்திக் கொண்டான்.
ஓர் வித பதட்டத்துடன் பூஜை அறைக்கு செல்வதும் தனது பொருட்களை எடுப்பதுமாக இருந்தவளுக்கு, அவனின் அந்த மனநிலை புரியவில்லை.
....................
இவ்வாறு நாலைந்து, நேர்முகப்பரீட்சைகளுக்குச் சென்று, இறுதியில் அவள் விரும்பியது போல் ஓர் தனியார் வங்கியில் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைத்தது அவளுக்கு.
இருவரும் காலையில் தத்தமது நேரங்களுக்கேற்ப கிளம்பிச் செல்பவர்கள் மாலையில் அதே போல் அவரவர் வேலை முடிந்ததும் வீட்டுக்கு வருவார்கள். அவர்களின் வாழ்க்கையில் எந்தவித மாறுபாடும் இல்லாமல் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
சௌமி வேலைக்குப் போகத் தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்திருந்தன.
அன்று வெள்ளிக்கிழமை. அகிலன் வேலை முடித்து, வெளிநாட்டில் இருந்து வந்து ஹோட்டலில் தங்கியிருக்கும் தனது நண்பனை அங்கு சென்று சந்தித்து விட்டு வீட்டுக்கு வந்த போது நேரம் ஐந்தரை ஆகிவிட்டது. வீட்டுக்கு வந்தவனுக்கு சௌமி அங்கு இருப்பதற்கான அசுமாற்றத்தை காணவில்லை. அவளுக்கு நாலு மணிக்கு வேலை முடிந்து விடும், நாலரைக்கு வீட்டுக்கு வந்துவிடுவாள். இப்போது ஆறு மணியாகப் போகுது இன்னும் அவளைக் காணவில்லையே, எங்கே போனாள்…, அவள் தனக்கு கூறி தான் மறந்து விட்டேனா…? என்ற யோசனையுடன் தனது அறைக்குச் சென்று, குளித்து உடை மாற்றி வந்தவன் அவளுக்கு அழைப்பை ஏற்படுத்தினான். அது போகவில்லை, கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. மேலும் மேலும் முயன்றான், தொடர்பு கொள்ள முடியவில்லை.
வழமையாக, வெளியே எங்கும் செல்வது என்றாலோ அல்லது, வீட்டுக்கு வரத் தாமதமாகும் என்றாலோ இருவரும் ஒருவருக்கொருவர் தகவலளித்து விடுவார். இவ்வளவு நேரமாகியும் அவளிடம் இருந்து ஒரு தகவலும் வராத படியால் அகிலனுக்கு சிறு பதட்டம் ஏற்பட்டது. காரை எடுத்துக் கொண்டு அவளது வங்கிக்குச் சென்றான். அது பூட்டப்பட்டிருந்தது. வெளியே நின்ற காவலாளியிடம் விசாரித்தான். அவர், அவள் நாலு மணிக்கு கிளம்பி விட்டாள் எனக் கூறினார்.
அவன் பதட்டத்துடன் சாலையில் எங்கும் தென்படுகிறாளா என அவதானித்தவாறு காரை மெதுவாக செலுத்தியபடி மீண்டும் அவர்களின் குடியிருப்புக்கு வந்தவன், அங்கு நின்ற காவலாளியிடம் விசாரித்தான். அந்த குடியிருப்பில் உள்ள, அவள் செல்லும் வீடுகளுக்குச் சென்று விசாரித்தான். அவர்களும் இன்று அவள் அங்கு வரவில்லை எனக் கூறினார்கள்.
இரவு ஏழரை மணியாகப்போகிறது, இருண்டுவிட்டது. வீட்டுக்கு வந்தவன் மீண்டும் அவளின் கைப்பேசிக்கு அழைப்பை ஏற்படுத்தி கொண்டிருந்தான்…, அடுத்து என்ன செய்வது என்றும் ஏதும் புரியாத நிலை. அவனால் சோபாவில் உட்கார முடியவில்லை, எழும்பி அங்கும் இங்கும் நடந்தான், மீண்டும் அமர்ந்தான்…, சொல்லாமல் கொள்ளாமல் எங்கே சென்றிருப்பாள்…?, அவள் ஏதும் பிரச்சினையில் இருக்கிறாளோ… என எண்ணியவன் உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்தான். அவனின் மனம் தளர்ந்து, உடல் லேசாக நடுங்கியது. அப்போது சௌமி கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள். அவளைக் கண்டு பெரிதும் நிம்மதியடைந்தவன், தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டு, அவளருகே சென்று “ஏன் இவ்வளவு நேரம்…?” எனக் கேட்டான்.
அவள், வீட்டுக்கு வரும் வழியில் உள்ள சகல பொருட்களும் வாங்கக்கூடிய வணிக வளாகத்தின் பெயரைக்குறிப்பிட்டு “... போட்டு வாறன்” என்றாள் வெகு சாதாரணமாக.
அவளின் அந்த அலட்சியத்தில் அதிகமாகச் சீண்டப்பட்டவன் அவள் கொண்டு வந்திருந்த பைகளை பிடித்து இழுத்து, கீழே விசிறி எறிந்தான். அப்போதும் அவன் நிதானத்துக்கு வரவில்லை “நான் தேடுவன் எண்டு உனக்கு தெரியாதா..?” என்றவாறு அவளின் கன்னத்தில் அவனின் வலது கையை வேகத்துடன் இறக்கியிருந்தான்..! அதை எதிர்பாராதவள் நிலை தடுமாறி, நிற்க முடியாமல் அருகில் உள்ள சோபாவின் மீது விழுந்தாள்.
அவனால் இன்னும் நிதானத்துக்கு வர முடியவில்லை, அவனது கண்கள் சிவந்து, முகம் இறுகி கிடந்தது.
அவளை பார்த்தவாறு பெரிய மூச்சுக்களை நன்றாக இழுத்து விட்டான். என்ன நடந்தது என உணர்ந்து, தன்னை சமாளித்து நிமிர்ந்த அவளுக்கு கண்களில் நீர் வழிந்தது… கன்னம் எரிந்தது!
அவள் வாங்கியிருந்த சில அழகு சாதனப் பொருட்கள், ஆடைகள் என்பன நிலத்தில் சிதறிக் கிடந்தன.
சில கணங்களுக்கு அவளையே பார்த்திருந்தவன் கதிரையில் தொப்பென அமர்ந்தான். சற்று நிதானமடைந்திருந்தவனுக்கு, தான் அவசரப்பட்டு அவள் மீது கை வைத்தது புரிந்தது.
சோபாவில் எழுந்து அமர்ந்தவள் ‘என்னை அடிக்கிற அளவுக்கு வந்து விட்டாயா…?’ என்பது போல் அவனை பார்த்தாள். அவளின் அந்தப் பார்வையில் தான் கட்டுப்பாட்டை இழந்ததையிட்டு அவன் மனம் தவித்தது. அவனின் தவறு அவனுக்குப் புரிய “ஏன் உன்ர போன் வேலை செய்யேல்ல…?” எனக் கேட்டான்.
அவள் எதுவும் சொல்லாமல் எழுந்து விறுவிறுவென தனது அறைக்குள் சென்றாள்.
“சௌமி…?” என்றவனின் மனதில் தாங்கல்.
அவள் செல்வதைப் பார்த்தவனுக்கு தான் நிலை தடுமாறி விட்டோம் என்பதில் தன் மீதே அவனுக்கு எரிச்சல் ஏற்பட்டது.
இரண்டு மணித்தியாலங்களாக அவளைக் காணாததால் அதிக பதட்டம், பயம் என்பவற்றுடன் இருந்தவன் கேட்ட கேள்விக்கும் அவளின் பதிலும் ஒரு வித உதாசீனமாக இருந்தது போல் அவனுக்கு தோன்ற, ஏற்பட்ட ஆத்திரத்தில் கை நீட்டி விட்டான். இப்போது அது தவறு எனப் புரிந்தாலும் நடந்து விட்டதை மாற்ற முடியாது தானே!
ஒற்றைக்கையை தலைக்கு மேலே வைத்துக் கொண்டு கண்களை மூடியிருந்த அகிலனுக்கு அவளுக்கு வலித்திருக்குமோ….?, தன்னை அளவுக்கதிகமாக நேசிக்கிறவளுக்கு நான் செய்தது இதுதானா…? என எண்ணியவனுக்கு தன் மீதே வெறுப்பு. தன்னை நம்பி வந்தவளுக்கு தான் செய்த செயல் மூலம் தானும் ஆணாதிக்கம், மூர்க்க குணம் கொண்ட சராசரி மனிதன் தான் என்பதை நிரூபித்தது போல் ஆகிவிட்டதே என எண்ணி வேதனைப்பட்டான்.
ஒரு சிறு பெண் தனது அன்புப் பெற்றோர், சகோதரன் என எல்லாரையும் விட்டுவிட்டு, தான் தான் வேண்டும் என அடம் பிடித்து, தன்னுடன் வந்து தனது புறக்கணிப்பையும் சகித்துக் கொண்டு இத்தனை நாட்களும் கூட இருந்து தனக்கு சமைத்து தந்திருக்கிறாள் என்பது இப்போது தான் அவனது புத்திக்கு விளங்கியது. அவளளவு கூட தான் முதிர்ச்சியுடன் நடக்கவில்லை என்பதில் அவனுக்கு அவ்வளவு வருத்தம்.
அவனுக்கு கோபத்தை ஏற்படுத்திய எத்தனையோ பல விடயங்களில் பொறுமையாகவும் நிதானமாகவும் இருந்த நான் அவளின் விஷயங்களில் மட்டும் ஏன் அளவுக்கதிகமாக கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன் என்ற சிந்தனை அவனிடத்தில். இத்தனை நாட்களின் அவனின் நடவடிக்கைகளில் அவனுக்கே சங்கடமாக இருந்தது.
பல வித சிந்தனைகளுடன் இருந்தவனுக்கு பசித்தது, நேரத்தை பார்த்தான் ஒன்பது மணியாகப் போகுது. வழமையாக ஏழரை மணி அளவில் சாப்பிட்டு விடுவான்.
எழும்பி சிதறிக் கிடந்த பொருட்களை எடுத்து பையில் போட்டு மேசையில் வைத்தான். அவளின் கை பையினுள் கிடந்த அவளின் கைப்பேசி கண்ணில் பட்டது, அதை எடுத்துப் பார்த்தான். அது சார்ஜ் இல்லாமல் அணைக்கப்பட்டிருப்பதை அவதானித்தவன்,
அதை சார்ஜ் ஏறுவதற்காக இணைத்து வைத்தான்.