அத்தியாயம் 1
பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
கடல் தாண்டும் பறவைகெல்லாம்
இளைபாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோ முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
முடிவு என்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா…
சற்று சத்தமாகவே கேட்ட பாடலின் வரிகளில் தன்னைத் திரும்பிப் பார்த்த தாரணியின் விழிகளைப் பார்க்காமலேயே அவள் பார்வையை உணர்ந்த சக்தி முழுதாக அவள் புறமாக திரும்பி கண்களைச் சிமிட்டி சிரிக்க, எப்பொழுதும் போல அவளது வெளிர் பழுப்பு நிற விழிகளில் குப்புற தான் விழுந்தது தாரணியின் மனம்.
சில நொடிகள் அவளது அழகிய விழிகளில் தொலைந்த மனதை மிகவும் கடினப்பட்டு திருப்பிய தாரணி, “கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே அப்படின்னு பாட வேண்டிய வயசுல என்ன பாட்டு கேட்டுகிட்டு இருக்க நீ?” என்று கேட்டபடி சக்தியின் அருகில் வந்தாள்.
அதைக் கேட்ட உடனேயே அத்தனை நேரம் மலர்ந்திருந்த அவள் முகம் சட்டென்று கடினப்பட்டு விட, அமைதியாக மீண்டும் திரும்பி கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து திருத்த ஆரம்பித்தாள் சக்தி.
“இப்ப எதுக்கு மூஞ்ச முழம் நீளத்துக்கு நீட்டிக்கிட்டு நிக்கிற?” சக்தியின் தோளில் ஒரு அடியை போட்டபடி அவள் அருகே வந்து நின்ற தாரணி கேட்க, வாயை திறக்கவில்லையே சக்தி.
பிறந்து நினைவு தெரிந்த நாள் முதல் இருந்த குழந்தைகள் காப்பகத்தில் இருந்து படித்து வேலையைப் பெற்ற பிறகு வெளியே வந்த இந்த ஐந்து வருடங்களாக தன்னோடு உடன் இருக்கும் தாரணியைப் பற்றி தெரியாதா அவளுக்கு?
அதிலும் கடந்த இரண்டு மாதங்களாக தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி அவள் செய்யும் அறிவுரைகள் தான் எத்தனை எத்தனை…
அதனாலயே அவள் பேசுவதை கேட்ட பொழுது கோபம் வந்தாலும் ஒரு வார்த்தை பதில் பேசாமல் தன் வேலையிலேயே முனைப்பாக இருந்தாள் சக்தி.
சக்தி. தமிழகத்தின் முதல்வராய் இருந்த ஒரு பெண் எடுத்த முடிவினால் காப்பாற்றப்பட்ட கடவுளின் குழந்தை அவள்.
ஆண் பிள்ளைகள் வம்சத்தின் வாரிசு என்றும் பெண் பிள்ளைகள் குடும்பத்தின் பெரும் பாரம் என்றும் எண்ணி தமிழகத்தின் பெருவாரியான பகுதிகளில் மிக மிக இயல்பாகவும் எளிதாகவும் நடந்து கொண்டிருந்த பெண் சிசுக் கொலைகளுக்கு எதிராக ஒரு பெண் எடுத்த மிக மிகத் தெளிவான முடிவு தான் தொட்டில் குழந்தை திட்டம்.
ஆயிரம் ஆயிரம் பிஞ்சுக் குழந்தைகளை காப்பாற்றிய அந்தத் திட்டத்தினால் உயிர் பிழைக்க பெற்ற பிள்ளை தான் இந்த சக்தி. பெற்றவர்களால் கைவிடப்பட்டு அரசினால் வளர்க்கப்பட்ட பெண் சக்தி. தாய் தந்தையின் அரவணைப்புதான் கிடைக்கவில்லை அவளுக்கு. மற்றபடி சொல்லிக் கொள்ளும் படியான அழகிய சூழலில் தான் அவளது வளர் இளம் பருவம் இருந்தது.
அவள் வளர்ந்த வேலு நாச்சியார் இல்லத்தின் தலைவி பொன்நிலாவின் செல்லப்பிள்ளை சக்தி. பிறந்து இரண்டே நாட்களில் அந்த இல்லத்திற்கு வந்து சேர்ந்திருந்த அவளது வெளிர் பழுப்பு நிற கண்களுக்காகவே அந்த இல்லத்தில் இருந்த அனைவருக்கும் பிடிக்கும். குண்டு கன்னங்களுடன் அடர்ந்த கருமையான கேசத்துடன் வந்திருந்த அந்த பிஞ்சு குழந்தையை எல்லோருக்கும் பிடித்திருந்தது.
“இப்படி ஒரு பிள்ளையை எப்படித்தான் விட்டுட்டு போக மனசு வந்துச்சோ…” சக்தியை மார்போடு சேர்த்து அள்ளி கொஞ்சம் அங்கே வேலை பார்ப்பவர்கள் அனைவரும் சொல்லும் வார்த்தைகள் இவை.
அத்தோடு வளர வளர பொன்நிலாவினை அச்சில் வார்த்தது போல இருந்த அவளது செயல்பாடுகளும் அங்கிருந்த அனைவரையும் ஈர்த்திருந்தது.
பிள்ளைகள் கண்டதையும் கேட்டு வளர்வதில்லை. கண்களால் கண்டதை மட்டுமே பிடித்துக்கொண்டு வளர்கிறார்கள் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு சக்தி. பொன்நிலாவினை போலவே அழுத்தமும் நிதானமும் எப்பொழுதும் அவளது பார்வையிலும் செயலிலும் வார்த்தைகளிலும் இருந்தது.
படிப்பிலும் பேச்சிலும் அவளை வெல்ல அவளுடன் படித்த எவராலும் முடியவில்லை.
பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற பெண் என்பதால் அவளது கல்லூரி படிப்பு என்பது தானாக அவள் கைகளில் வந்து சேர்ந்தது.
மருத்துவத்தில் சேருவாள் என்று எல்லோரும் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் அவளது எண்ணங்களோ கட்டிடக்கலையின் பால் சாய்ந்தது.
படிப்பதற்கு இடம் கிடைக்கவே பெரும்பாடு பட வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத்தின் கதவுகள் அவளுக்காக ரத்தின கம்பளம் விரித்து வைத்து திறந்தது. கட்டிடக்கலையில் இளங்கலை பிரிவில் தேர்ச்சி பெற்று தங்கப்பதக்கத்தோடு வெளியே வந்தாள்.
வேலையைத் தேடி இளைஞர்கள் ஓடிக் கொண்டிருந்த நேரத்தில், எந்த இடத்தில் எந்த வேலையைச் செய்வது என்று தேர்ந்தெடுக்கும் இடத்தில் இருந்தாள் சக்தி.
அப்படி அவள் தேர்ந்தெடுத்த இடம் தான் ஈஸ்வர் பில்டர்ஸ். நான்கு தலைமுறைகளாக கட்டிடங்கள் கட்டுவதில் பெயர் போன அந்த நிறுவனத்தில் தன்னை இணைத்துக் கொண்டாள் சக்தி.
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற கூற்றினை மெய்பிப்பது போலவே ஜூனியர் ஆர்கிடெக்ட் பதவியில் சேர்ந்தவள் இரண்டே ஆண்டுகளில் ஆர்க்கிடெக்ட் பதவியைப் பெற்று இதோ இன்று சீனியர் ஆர்கிடெக்ட் பதவியை வெறும் ஐந்து வருடங்களில் பெற்றிருக்கிறாள், தனது திறமையினாலும் அயராத உழைப்பினாலும்.
நேற்று வரை எப்பொழுதாவது சென்று வந்து கொண்டிருந்த அவர்களது அலுவலகத்தின் தலைமை அலுவலகத்திற்கு இன்று முதல் தினமும் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மனதில் தோன்றிய மறு நொடி தன் கைகளில் வேகத்தை அதிகப்படுத்தினாள் சக்தி.
சென்னை மீது சூரியன் கொண்ட காதலின் அளவினை அறிந்தவளாக அளவில்லாமல் தீண்டி தகிக்கும் சூரிய கதிர்களில் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ளும் வண்ணம் ‘சன் ஸ்கிரீன் லோசனை’ வெயில் படும் உடலின் பாகங்களின் மீது பூசியவள் தனது கைப்பையில் வைக்க வேண்டிய பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் கண்ணாடி முன் வந்து நின்று சிறு கருப்பு பட்டினை இரு புருவங்களுக்கு நடுவே வைத்தாள்.
அவள் செய்வதையெல்லாம் கட்டிலின் மீது படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்த தாரணி, “வெறும் சன்ஸ்கிரீன் மட்டும் தானா? வேற எதுவும் போடலையா?” என்று கேட்க,
“இதுவே ஜாஸ்தி…” என்று அவள் பதில் சொல்ல,
“எது இது ஜாஸ்தியா? அப்போ இது எல்லாம்?” என்று தான் வாங்கி வைத்திருந்த அழகு சாதனப் பொருட்களை எல்லாம் காட்டி அவள் கேட்க,
“இது ஒன்னொன்னா முகத்துல போட்டு அது செட் ஆகுற வரைக்கும் வெயிட் பண்ற அளவுக்கு எனக்கு பொறுமை இல்லை” என்று சக்தி சொல்ல,
“யாரு? உனக்கு பொறுமை இல்ல…” என்று கேட்ட தாரணி,
“அப்படி பொறுமை இல்லாதவ தான் இதெல்லாம் செஞ்சியா?” என்றவள் திறந்திருந்த சக்தியின் மடிக்கணினியை அவள் முன்னே திருப்பிக் காட்டினாள்.
“தேங்க்யூ பேபி. மறந்தே போயிட்டேன். என் தங்கம் இல்ல… அப்படியே அந்த லேப்பை ஷட்டவுன் பண்ணி பேக்ல வச்சிருயா? டைம் ஆயிடுச்சு…” என்ற சக்தி அடுத்து அவள் கேள்வி கேட்பதற்கு முன்பாகவே,
“நான் சாப்பிட்டு கிளம்பறேன். உனக்கு சாப்பாடு எடுத்து வைக்க சொல்லிடுறேன் மகிமா அக்கா கிட்ட. மறக்காம சாப்பிட்டு படுத்து தூங்கு. பை பேபி…” என்றவள் வேகமாக கிளம்ப,
அவளை விட வேகமாக எழுந்த தாரணி அவளைக் கட்டி அணைத்துக் கொண்டு, “ஆல் தி பெஸ்ட் அண்ட் ஹார்ட்டி காங்கிரசுலேஷன்ஸ் பேபி… இன்னும் இன்னும் பெரிய உயரங்களைத் தொட என்னோட வாழ்த்துக்கள்…” என்றும் வாழ்த்த,
“தேங்க்ஸ் டா…” என்று அவள் சொல்லிய நொடி சக்தியின் கைப்பேசி அலறியது.
“மூன் அழைக்குது போல…” கிண்டலாக தாரணி சொல்ல,
“அவங்கள வம்புக்கு இழுக்கலைன்னா உனக்கு நாள் விடியாதில்லை…” என்று அவள் தோளில் அடியை போட்ட சக்தி அழைப்பை ஏற்று காதில் வைத்துக் கொண்டே தாரணியிடம் தலையசைத்து விடைபெற்றுக் கொண்டு கிளம்பினாள்.
“கிளம்பிட்டேன் மா… சாப்பிட்டு தான் போவேன். நீங்க என்ன பண்றீங்க… சாப்பிட்டு நேரத்துக்கு மாத்திரை போடுங்கம்மா..” என்று அவள் பேசிக்கொண்டே சென்ற சத்தம் தாரணியின் செவியை நிறைத்தது.
ஈஸ்வர் பில்டர்ஸ்… கண்முன்னே உயர்ந்து நின்ற கட்டிடத்தை கண்ட சக்தியின் மனதிற்குள் பெரும் சிலிர்ப்பு.
சீனியர் ஆர்கிடெக்ட் ஆக பணியாற்ற இருக்கும் ஈஸ்வர் பில்டர்ஸின் தலைமையகம். கட்டிடத்தின் அமைப்பு முதல் நிறம், அங்கே வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் என அனைத்தும் எளிமையின் பிரம்மாண்டத்தை எடுத்துக்காட்டுவதாக இருந்தது.
இது நாள் வரை அவள் வேலை பார்த்திருந்த நகரத்தின் மையத்தில் ஆடம்பரமாக அமைந்திருந்த ஐந்து மாடிகள் கொண்ட நவ நாகரிகமான அந்த அலுவலகத்தைக் காட்டிலும் இந்த மூன்று அடுக்கில் அமைந்திருந்த அலுவலகம் அவளை அதிகமாக ஈர்த்தது.
கண்களுக்கு இதமான ஆஃப்-வைட் நிறம் பூசப்பட்ட சுவர்கள், அதன் நடுவே சாண்ட்ஸ்டோன் நிற அலங்காரங்கள், நீளமான கண்ணாடி ஜன்னல்கள்… அனைத்தும் சேர்ந்து அந்த கட்டிடத்திற்கு காலத்தால் மாறாத ஒரு அழகை கொடுத்திருந்தது.
அதை விட அந்த அலுவலத்தைச் சுற்றி இருந்த பசுமை அவளது கவனத்தை இன்னும் கவர்ந்தது. கட்டப்பட்டிருந்த கட்டிடங்களை பாதிக்காத வண்ணம் சரியான இடைவெளியில் வரிசையாக நின்ற நிழல் தரும் மரங்களும் மெதுவாக காற்றில் ஆடிய அவற்றின் பசிய இலைகளும் கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது.
அதைக் காட்டிலும் அவளை அதிகமாக ஈர்த்தது… பச்சை புல்வெளியில் வைக்கப்பட்ட கல் பாதைகளும், அந்தப் பாதைக்கு அரண் அமைத்தது போல வளர்க்கப்பட்டிருந்த பல வண்ண மலர்கள் கொத்துக்கொத்தாய் மலர்ந்திருந்த பூச்செடிகளும் தான்.
கல்லூரியில் முதல் மாணவியாக தங்கப் பதக்கத்தோடு வெளியே வந்த சக்திக்கு கண்முன்னே வாய்ப்புகள் கொட்டிக் கிடந்த போதிலும் ஈஸ்வர் பில்டர்ஸ்ஸில் சேர்வதற்கு மிக முக்கியமான காரணம் அவர்களின் இந்த தலைமையகம் தான்.
“ஒரு பில்டர்ஸ் ஆபீஸ் இவ்வளவு உயிரோட்டமா இருக்குமா…?” என்று உள்ளுக்குள் ஆச்சரியப்பட்டவளின் மனதை மொத்தமாய் கொள்ளை கொண்டது அதை அடுத்து அவள் பார்த்த விடயங்கள்.
நுழைவு வாயிலின் கண்ணாடி கதவைத் தள்ளி உள்ளே நுழைந்தவுடன், அந்த இடத்தின் கம்பீரம் அவளை மெதுவாக சுற்றிக்கொண்டது.
உள்ளே இருந்த மர வாசனை, மெல்லிய மஞ்சள் விளக்குகள், சுவரில் மாட்டப்பட்டிருந்த பழைய கருப்பு-வெள்ளை புகைப்படங்கள்… அதில் அவர்கள் கட்டிய முதல் வீடு, பழைய வரைபடங்கள்… அந்த நிறுவனத்தின் பயணத்தை அமைதியாக சொல்லிக்கொண்டிருந்தது.
வரவேற்பு பகுதியில் இருந்த பெரிய தேக்கு மர மேசை, அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த பழமையான பித்தளை விளக்கு, ஒரு மூலையில் இருந்த பழைய டிராஃப்டிங் டேபிள்… அதில் இன்னும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கைவரைபடங்கள்… இவை எல்லாம் அந்த அலுவலகத்தின் பழமை மற்றும் மரியாதையை வெளிப்படுத்தி அவள் மனதை மொத்தமாக கொள்ளை கொண்டது.
நவீன கட்டிட கலையின் முன்னவர்களில் ஒருவரான லுட்விக் மீஸ் வான் டெர் ரோ கூறிய “less is more” “குறைவே நிறைவு” என்பதற்கு சாட்சியாக இருந்த அந்த அலுவலகம் அவளுக்குள்ளும் ஒரு நிறைவைத் தந்தது.
அலுவலகத்தில் அவள் கண்ணில் பட்டு கருத்தை நிறைத்தவற்றை எல்லாம் உள்வாங்கிக் கொண்டு அமர்ந்து இருந்தவளை, 'சக்தி… சீனியர் ஆர்கிடெக்ட்…' என்ற அவளது பணி நியமன கடிதத்தை பார்த்து அறிந்து கொண்ட வரவேற்பில் இருந்த பெண், “ஹார்டி கங்கிரஜிலேஷன் அண்ட் வெல்கம் சக்தி…” என்று புன்னகை முகமாக வரவேற்றாள்.
அவளது அந்த அழைப்பு சக்தியின் வாழ்வில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்த போகிறது என்பதை அழைத்த அந்த பெண்ணும் அறியவில்லை. அவளால் அழைக்கப்பட்ட சக்தியும் அறிந்து இருக்க நியாயமில்லை!