• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் எங்கள் சொந்தம் - 24

நிதனிபிரபு

Administrator
Staff member
இருபத்தி ஐந்தாம் அத்தியாயம்.

காதல் எங்கள் சொந்தம்.... 25

ஏமாற்றம் வரும்போது மனசு கலங்கி தோல்வி மனப்பான்மை வரும். ஹேமா எனக்கு கல்யாணமே வேண்டாம்ன்னு சொல்லிட்டுப் போனதிலிருந்து நிர்மல் மனம் ஒடிந்து சோக கீதம் இசைக்க....

“நிர்மல்.. இப்ப என்ன ஆகிப் போச்சு.? எதுக்கு மூஞ்சியை தூக்கி வச்சிட்டு இருக்கே.?” என்று கேட்டாள் அக்கா கற்பகம்.

ரெண்டு தட்டில் பூரி கிழங்கு கொண்டு வந்து வச்ச மங்களம்..

“அம்மா.. தம்பி நேத்து ராவு கூட சாப்பிடல. வற்புறுத்தி பால் மட்டும் குடிச்சிட்டு படுக்கச் சொன்னேன். ஹேமாம்மா சொன்னதையே நினச்சிட்டு இருக்கு தம்பி.... சமாதானப்படுத்துங்க.” என்றுவிட்டுப் போனாள். தம்பியின் அருகில் வந்து, அவன் தலையை உயர்த்தி..
“என்ன நிர்மல்.? இந்த சின்ன விஷயத்துக்கு இப்படி ஓடிஞ்சு போயிட்டே.? அவ சம்மதம் சொல்லுவா பாரு....” என்றாள் கற்பகம்.

அந்த சமயம் ஃபோன் வர.. அக்கா ஹேமா தான் என்றான். பேசு பேசு.... ஸ்பீக்கரில் போடு.. “ஹலோ.. சொல்லு ஹேமா.?”

“பரீயா இருக்கீங்களா.? நா உங்க கூட பேசணும்.”

“ப்ரீ தான் சொல்லு. என்ன விஷயம்.?”

“அகில் பேசினான்....”

“ஓ....”

“என்ன ஓ.? அவன் என்னை பெங்களூரு வரச் சொல்றான். எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை.. நீ தானே என் ஒரே பிரெண்ட்.. சொல்லு நா போகவா வேண்டாவா.?”

“எதுக்கு வரச் சொல்றார்.? கேட்டியா.?’

“சர்பிரைஸ் அப்படிங்கறான்....” ஒரு கணம் ஒன்றும் பேசமுடியாமல் தினறினான் நிர்மல். பிரப்போஸ் பண்ணவன் கிட்டவே என்ன செய்யறதுன்னு கேட்டா.? அக்காவைப் பார்த்தான். போனை கையால் முடிக் கொண்டு என்ன சொல்றதுக்கா என்றான்.

“மடையா.... எதுக்கு கூப்பிடறானோ.? போயிட்டு வா, அப்ப தான் உன் வாழ்க்கை பத்தி ஒரு முடிவுக்கு நீ வர முடியும்ன்னு சொல்லு..” என்றாள். “ஹலோ நிர்மல் லையினில் இருக்கீங்களா.?”

“இருக்கேன் ஹேமா.. நா ஒண்ணு சொல்லவா.? நீ அவரைப் போய் பாரு. எதுக்கு கூப்பிடறார்ன்னு தெரிஞ்சுக்க. மறுவாயிப்புன்னா பிடிச்சிருந்தா எஸ் சொல்லு. தட்ஸ் ஆல். இல்ல அவர் சொல்றது உனக்கு உவப்பா இல்லைன்னா வந்திடு. பின்னாலே.. அய்யோ போகாம விட்டிட்டோமேன்னு காலமெல்லாம் ரிக்கரட் பண்ணக் கூடாது இல்லையா.?” அக்காவை பார்த்தான் சரியா சொன்னேனா என்றான் கண்ணால். பேர்பெக்ட்.. என்றாள் சத்தம் வராமல்.

“சரி நிர்மல். தேங்க்ஸ். நா நாளை போயிட்டு வரேன்....”

“அக்கா.... அவன் எதுக்குக்கா கூப்பிடறான்.? சரியா இல்லையே.”

“நீ வேற.. அவன் ஏதோ டிராமா பிளே பண்ணறான்னு தோணுது. நீ வேணா பார். ஹேமா இந்த சந்திப்புக்குப் பின் உனக்கு சரி சொல்லுவா.?” என்றாள். “சிரி டா..”

“போக்கா..... எனக்கு ஹோப் இல்ல. ஒருவேளை அவன் கட்டிக்கப் போற பொண்ணு கடைசி நிமிடத்தில் நோ சொல்லிடுச்சோ என்னவோ.? மீண்டும் ஹேமா என்று சாஞ்சிட்டான் போலிருக்கு....”

“அப்படியெல்லாம் இருக்காது.... நீ மனசை போட்டு குழப்பிக்காதே..”

நிர்மலுக்கு அன்று தூக்கம் வரவில்லை. கொடுத்து வச்ச ராஸ்கல் டா அகில் நீ.. அவ இன்னும் உன்னை நேசிப்பதை விடலை.... யாருக்கும் தெரியாமல் கண்ணீரால் தலையணையை நனைத்துக் கொண்டிருந்தான் நிர்மல். காதல் எல்லோருக்கும் சொந்தமானது. யாருக்கு யார் சொந்தம் என்பது தான் இறைவனின் விளையாட்டு.

ஆஸ்திரேலியாவில் கலாவும் காதலானது யாருக்கு யார் சொந்தம்.? என்ற அதே குழப்பத்தில் தான் இருந்தாள். நிரஞ்சன் அவள் அருகில் உட்கார்ந்து அவள் கண்ணீர் வடிப்பதை கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கலாவின் அழுகை அவன் மனசை வாட்டியது.

“நிரஞ்சன்.... நா இப்ப ஹோம்லெஸ். ஹோப்லெஸ். லவ்லெஸ். வெளிச்சமே தெரியலை..” என்றாள் முகத்தை துடைத்தபடி.

“இந்தா இந்த டீயை குடி முதலில். நீ அழுவ.. அதுக்கு வயிறும் அழணுமா.? பொறுமையா யோசி. எதுக்கு அழுகை.? படிச்ச பொண்ணு தானே நீ.? நெக்ஸ்ட் என்னன்னு யோசி.”

“நேத்து இரவு பூரா அருண் என் கூட போனில் பேசினான். ஜேனட் அவனை கல்யாணம் பண்ணிக் கொள்ள வற்புறுத்தறான்னு வெறுத்துப் பேசினான். காம்பிங் போது அவ அவனை குடிக்க வச்சு.. இப்படி நடந்து போச்சுன்னு ஒப்பாரி வைக்கிறான். நா உன்ன தான் நேசிக்கிறேன்.. காதல் நமக்கு தான் சொந்தம்ன்னு இருந்தேனேன்னு ரொம்ப பீல் பண்ணி அழுதான்.... ஜேனெட் கிட்டே போய் நா அவனை விட்டிடு, அவன் என்னைத் தான் காதலிக்கிறான்னு சொல்லவா.? குழந்தை மட்டும் ஒரு கல்யாணம் நடக்க போதுமானதா.? காதல் துளியாவது இருக்க வேண்டாமா.? எனக்கு பயமா இருக்கு அவன் சூயிசைட்....”

“கலா.... அவன் குட்டு வெளிபட்டிடுச்சு. சமாளிக்கிறான். அவன் காதலில் உண்மை இல்ல. நீ இனிமே இந்த விவகாரத்தை விட்டிடு.. பேசாம என்னோட இந்தியா வா. உனக்கு வேலை வாங்கித் தருவது என் பொறுப்பு. உனக்கு நல்ல கணவன் கிடைப்பான்.. நான் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கிறேன்....”

கலா எழுந்து கொண்டாள். என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேச ஆரம்பித்தாள்.. அவள் குரலில் குற்றச்சாட்டு இருந்தது. அவன் மனசை துவைத்துப் போட்டாள்..

“எனக்குத் தெரியும் நிரஞ்சன் நீங்க இப்படித்தான் பேசிவீங்கன்னு. அருண் பெற்றோரிடம் பேசறேன். அருண் கூட பேசறேன்னு சொல்ல உங்களுக்கு வாய் வரலை. எங்க காதலை கல்யாணத்தில் முடிக்க உதவி செய்வீங்கன்னு நினச்சேன்.. இப்படி நட்டாத்திலே விடறீங்க.? உங்களை காப்பாத்தினதுக்கு இது தான் எனக்கு பரிசு இல்ல.?”

“என்ன கலா இப்படி பேசற.? அருண் அந்த ஜேனெட்டிடம் முறை தவறி நடந்தது மிகப் பெரிய தவறு. உன்னையும் காதலிச்சிட்டு, அவளிடமும் போய்.. சே. ரொம்ப கேவலமான செயல்.. நல்ல வேளை இவனிடமிருந்து நீ தப்பிச்சேன்னு நான் சந்தோஷப்படறேன்.”

“இல்ல.... நீங்க என்னை வாழ வைக்க நினைக்கலை. எனக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருந்தா இப்படிதான் விட்டேத்தியா பதில் சொல்வாங்களா.? அருண் சட்டைக் காலரைப் பிடித்து நியாயம் கேக்க மாட்டாங்க.? மேல்நாட்டுக்காரி ஜேனட்.. அவ பாருங்க கோர்டுக்குப் போய் தன் காரியத்தை சாதிச்சுக்கிட்டா. நான் விரலை சுப்பிக்கிட்டு நிக்கணுமா.? என்னை காதலிச்சு கைவிட்டவன் ஜாலியா குடும்பம் நடத்துவான் நான் மட்டும்.. நாட்டை விட்டு ஓடனும். பிடிக்காத இடத்தில் போய் வாழணும். யாருமில்லாத அனாதை தானே நான். எனக்கு எதுக்கு நல்ல வாழ்க்கை.? சாவட்டும்ன்னு சமுதாயம் நினைக்கும் நம்ம நாட்டிலே....... என் விவகாரம் தெரிஞ்சா எவன் என்னைக் கட்டிக்குவான்.? பிச்சை எடுக்கப் போறேன் நிரஞ்சன்.. சந்தோஷம் தானே.? நீங்க ஒரு சுயநலவாதி..” ஓவென்று அழ ஆரம்பித்தாள் கலா. திடுக்கிட்டுப் போனான் அவன்.

கொஞ்சம் கூட மாரல் இல்லாத பையன் அவன். அவனிடம் போய் என்ன பேசமுடியும்.? சும்மா விடுவார்களா ஜேனெட்டின் பெற்றோர்.?

“கலா.. நீ பேசறது எனக்குப் புரியலை மா. ஒரு காதல் தோல்வியாலே வாழ்க்கை முடிஞ்சுடாது கலா. அவன் முன்னாடி நீ ஜெயிச்சு காட்டனும். வாழ்ந்து காட்டனும்....”

“நிரஞ்சன்.... பிளீஸ் கெஞ்சிக் கேக்கறேன். அவன் கிட்டே பேசுங்க. எனக்கு என்ன வழின்னு கேளுங்க.... எனக்கு நடந்த அநியாயத்துக்கு நீதி கேளுங்க.. போங்க. எனக்கு வயிறு எரியுது.”

நிரஞ்சன் ஒரு கணம் ஆடிப்போய்விட்டான். அவளுக்காக போய் பேசணும்னு தனக்குத் தோனாமல் போனதுக்காக வருந்தினான். உண்மை தான்.. கலா சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கு.

“சரி கலா. நீ பதட்டப்படாதே. நான் அருண் பெற்றோரிடமும் அவனிடமும் பேசறேன்...”

“அவன் ஒரு வழி சொல்லாட்டி, நாக்கை பிடுங்கிக் கொள்கிற மாதிரி திட்டிட்டு வாங்க. அப்ப தான் என் மனசு ஆறும்..”

நிரஞ்சன் அருணிடம் தான் முதலில் பேசினான். வாலிஸ் கார்டென்ஸ் அருகே அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். நடுவில் நீலநிற ஏரித் தண்ணீர் பளிங்கு போல் இருந்தது. அதை சுற்றி நடந்தார்கள். மெல்லிய காற்று வீசியது. அருண் உண்மையில் படு ஸ்மார்ட்டாகத் தான் இருக்கிறான். அன்று கோர்ட்டில் பார்த்ததை விட இன்று தான் அவனை நன்கு பார்த்தான் நிரஞ்சன். பிளேசர் அணிந்திருந்தான்.... நிட் ஸ்வெட்டர் அதன் மேல் கூடுதல் ஸ்டைலாக இருந்தது. நேவி பிளூ டீ ஷர்ட்.. ஸ்னிகர் ப்ளாக் கவுண்ட்டவுன் ஷூஸ் அணிந்திருந்தான். விலை ரெண்டாயிரம் டாலர் இருக்கும்.. முகத்தில் அப்பட்டமாக ஒரு ரிலாக்ஸ் மூட் தெரிந்தது. கோபம் வந்தது. இரு பெண்களோடு விளையாடிய மன்மதன்.. கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் நிமிர்ந்து என்னைப் பார்த்து.. “சொல்லுங்க நிரஞ்சன்.? வாட் கேன் ஐ டூ பார் யூ.” என்கிறான். படுபாவி.... கொஞ்சம் கூட அவனிடம் குற்ற உணர்வு இல்லையே.! இவனிடம் என்ன நியாயம் கிடைக்கப் போறது .?

“அருண்.... வாட் அபௌட் கலா.? அவளைக் காதலிச்சு இப்படி விட்டுப் போனா.. அது எவ்வளவு பெரிய பாவம் தெரியுமா.? பெண் பாவம் பொல்லாதது அருண்....”

பறவைகளின் இன்னொலி கேட்டது. அவன் நாராச பேச்சும் கேட்டது.

“பிராக்டிக்கலா யோசிச்சு பார்க்கணும். கோர்ட்வரை போய் மிரட்டி, கல்யாணம் வரை கொண்டு போயிட்டா. நா என்ன பண்ணறது.?”

“அருண்.. நா ஒண்ணு சொல்லவா.? நீ நேசிப்பது கலாவை தானே.? அதில் ஒண்ணும் டவுட் இல்லையே.?”

“எஸ். நோ டவுட் அபௌட் தட். ஜேனெட் ஒரு மாதிரி. என்னையும் கலாவையும் வாழவே விட மாட்டா. நா அவளுக்கு குழந்தை மூலம் லாக் ஆயிட்டேன். பிரேக் பண்ண முடியாது நிரஞ்சன். ஸோ.. நா அதை அக்செப்ட் பண்ண வேண்டிய கட்டாயம்.. புரிஞ்சுக்கோங்க. கலாவுக்கு என்னை விட நல்ல மாப்பிள்ளை வருவார்....”

“உனக்கு இப்படி சொல்ல வெட்கமா இல்லே அருண்.? கலாவை அப்படியே ஒதுக்கிட்டே. அந்த ஜேனெட் மூலம் நீ பெற்றுக் கொள்ளும் குழந்தைக்கு கோர்ட், பிள்ளையின் பதினெட்டு வயதுவரை நீ எல்லா செலவும் செய்யணும்னு தானே சொல்லுச்சு.? கல்யாணம் பண்ணச் சொல்லலையே. பணத்துக்கா பஞ்சம்.? குழந்தைக்கு கஸ்டடி கேர் கொடு. அது தார்மீக கடமை. ஆனா உன் வாழ்க்கை கலாவோடு தானே இருக்கணும். அது தானே நியாயம்.? காதல் உங்களுக்குத் தானே சொந்தம்... ப்ளீஸ் அருண். கலா பாவம். அவ அழுகையை என்னால் பார்த்திட்டு இருக்க முடியலை....” என்றான் நிரஞ்சன்.

கை இரண்டையும் அகலமாக விரித்து.... “ஓ மை காட். ஐ ஆம் டோட்டலி கண்பியூஸ்ட். ஜேனெட் பெற்றோர் என்னை உயிரோட விட மாட்டாங்க. ஐ ஆம் கமிட்டெட். ஸாரி கலாவுக்கு சொலுங்க. ஐ ரிக்ரெட். அவளுக்கு என் பிளசிங்ஸ்.. ஷால் வீ மூவ் ஆன். அது தான் இரண்டு பேருக்கும் நல்லது.... இங்க ஒரு நல்ல பார் இருக்கு.. கம்.”

குடிக்க கூப்பிடுகிறான். அதுக்கு மேல் அவன் பேசுவதை கேட்க நிரஞ்சணுக்கு அருவருப்பாக இருந்தது. “நா கிளம்பறேன்....”

அருண் பெற்றோரிடமும் போய் பேசினான். அவனைத் துரத்தாத குறையாக.. “எவரிதிங் இஸ் டிசைடெட்.. கம் டூ த வெட்டிங்..” என்றனர். அந்த அம்மா மட்டும்... போனால் போகிறது என்று....

“கலா தான் என் மறுமகளா வருவான்னு நினசிட்டு இருந்தோம். கடவுள் சித்தம் வேற மாதிரி இருக்கு. பாவம் அவ. அதனாலே அவளுக்கு அந்த வீட்டை எழுதி கொடுத்திடறோம் அஸ் ஏ காம்பன்ஷேசன்....” கசடு போல் அவளை தூர எறிந்து விட்டனர். கலாவிடம் இதை எப்படி சொல்ல.?

சொந்தம் தொடரும்.
 
Top Bottom