இருபத்தி எட்டாம் அத்தியாயம்.
காதல் எங்கள் சொந்தம்..28
அன்பு என்ற சொல் அழகானது. குழந்தை போன்றது அன்பு. அன்பை மென்மையா உச்சி முகர்ந்து பாதுகாக்கணும். வன்முறை அன்பு, வீம்பான அன்பு என்று அதில் கசடை திணிக்க, அது அன்புக்கு அவமானம்....காணாமல் போகும்.
கலா காலை உணவை தயாரித்து மேஜை மேல் வைத்தாள். நிரஞ்சன் சாப்பிட உட்கார்ந்தவன்.... நீயும் வா சேர்ந்தே சாப்பிடலாம்.. என்றான். இருவரும் ஒரு தெளிவுடன் இருந்தனர்.
“நீ சாப்பிடு நிரஞ்சன். நான் சாப்பிட்டு விட்டேன். ஆஸ்பத்திரி போறேன். டிக்கெட் புக் பண்ணிட்டேன். அடுத்த வாரம் திங்ககிழமை பிளைட். மலேஷியன் ஏர்லைன்ஸ் தான் கிடச்சுது. ஸ்டாப் ஓவர் அஞ்சு மணி நேரம். பரவாயில்ல.. அதனால் தான் சீப். வரட்டுமா.? போக்கும்வரை உழைத்துவிட்டுப் போவது நல்லது தானே.?”
கலா ஆஸ்பத்திரிக்குள் நுழையும்போதே நர்ஸ் நந்தினி ஓடிவந்தாள்.
“கலா.... நானே உன்னைக் கூப்பிடனும்னு நினச்சேன். ஜேனெட் விஷயம் தெரியுமா.? அவ ஐ.சி. யூ வில் இருக்கா.?”
“என்னாச்சு நந்தினி.?”
“போய் பாரு.... எனக்கு அவளைப் பார்க்கவே பரிதாபமா இருக்கு. இப்ப தான் வந்தா....”
கலா ஓடினாள். சார்ல்ஸ் விவரம் சொல்கிறான். ஜேனெட் அருண் கூட சண்டை போட்டிருக்கா. அவன்.. உன் மேல் காதல் இல்லை, கருணை இருக்கு அவ்வளவு தான். உன்னை என் குழந்தைக்காகத் தான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லியிருக்கான். அவளுக்கு அது ஷாக்.... அவன் போனதும் கையை கத்தியால் அறுத்து விட்டிருக்கா.. மல்டிப்பிள் டைம்ஸ்.. ரத்தம் ரொம்ப போயிருக்கு.. ட்ரீட்மெண்ட் போயிட்டிருக்கு.. என்றான்.
“மை காட். அருண் ஏன் அப்படி சொன்னான்.? கருணை காட்ட அவ என்ன அடிபட்ட நாய்குட்டியா.? அவன் வரலை.?”
சார்ல்ஸ் ரத்தம் கொடுத்து அவளைக் காப்பாற்றி இருக்கான். தவிப்புடன் கேட்டான்..
“கலா..அவளுக்கு ஒண்ணும் ஆகாதே. அவ இல்லைன்னா நா இல்ல.”
“ஒண்ணும் ஆகாது சார்ல்ஸ்.....”
டாக்டர் நுவாண்டி அவளை தன் கேபினுக்குள் கூப்பிட்டாள்.
“ஷீ இஸ் கெட்டிங் பெட்டர்...”
“தேங் காட்..” என்றாள் கலா.
“ஆனா அவள் மீண்டும் ஏதாவது செய்து கொள்ளாமல் இருக்க வேணும். அவளை தனியே விடவே கூடாது. நம் கண்காணிப்பில் இருக்கணும். கலா நீ திறமையான நர்ஸ். நீ தான் அவளை அருகில் இருந்து பார்த்துக்கணும். டே அண்ட் நைட். ஆர் யூ அவேலபிள்.? ஸ்ட்ரெஸ் அதிகமா இருந்ததால் கரு கலைந்துவிட்டது.”
“கடவுளே.... ஹவ் சேட்!. கண்டிப்பா டாக்டர் ஐ வில் மானிட்டர்..”
மூன்று நாள் மயக்கத்திலும் களைப்பிலும் கழிந்தது ஜெனெட்டுக்கு. நாலாவது நாள் கண் திறந்தாள். வாந்தி எடுத்தாள். டாய்லெட் போக கலாவின் உதவி தேவையாக இருந்தது. கை இரண்டிலும் கட்டு போடப்பட்டிருந்தது. டிரெஸ்சிங் மாத்தினாள் கலா.
“ஜேனெட்.. எதுக்கு நீ உன்னையே காயப்படுத்தின.?” அவள் ஓவென்று அழுதாள். அழக்கூடாது.... சமாதானப்படுத்தினாள் கலா.
“கலா.... நீ எவ்வளவு அன்பானவள்.! புரியுது. அதான் அருண் உன்னை இந்தளவு நேசிக்கிறான். இப்ப குழந்தையும் போச்சு. இனி அவன் என்னை வெறுப்பான்...”
“ஜேனெட்.... எல்லாம் நன்மைக்கே. நீ கவலைப்படாதே. அருண் உன்னைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். தவறு செய்தவன் பிராயச்சித்தம் செய்து தான் ஆகணும். லைப் கத்துக் கொடுக்கும் பாடம் இது தான்...”
கலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே அருண் வந்தான்.
“ஜேனெட் எப்படி இருக்கே.? எல்லாம் என்னால் தான். உன்னிடம் நா ரூடா நடந்துக்கிட்டேன். ஐ ஆம் ஸாரி. நீ நல்லாயிடுவே. வெட்டிங் டிரஸ் எடுக்க நானும் வரேன். சீர் அப்....” என்றான்.
சார்ல்ஸ் அடுத்து வந்தான். நர்ஸ் நந்தினியும் வந்தாள்.
“சார்ல்ஸ் மூன்று நாளும் இங்க தான் சுத்தி சுத்தி வந்தான். அவன் ரொம்ப பயந்திட்டான். உன்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டி வந்து சேர்த்ததே அவன் தான். லுக் ஹவ் பெயில் ஹீ இஸ்.! மூணு நாளும் அவன் சாப்பிடக் கூட இல்ல.... லவ்வபிள் பெர்சன். உன்னைக் காப்பாத்திட்டான்.” என்றுவிட்டுப் போனாள். ஜேனெடின் பெற்றோர் வந்தனர். கலாவை திட்டித் தீர்த்தனர்.
“ஸ்டாப் மம் அண்ட் டாட். நா தான் எல்லாத்துக்கும் காரணம். கலா என்னை இரவு பகலா பார்த்துக்கிட்டா. அவ எதுக்கு பார்க்கணும்.? அவ கிரேட்...” என்றாள்.
ஆஸ்பத்திரி விட்டு போகும்போது சொன்னாள்..
“சார்ல்ஸ் லவ்ஸ் மீ ஸோ மச்.... தெரியுமா அருண்?.”
வெட்டிங் உடைகள் வாங்க அருண் அவள் வீட்டுக்குப் போய் நின்றான். “என் வெட்டிங் உடைகள் வங்க சார்ல்ஸ் வரணும்.” அருண் திகைத்தான்.
“ஜேனெட் கவலைப்படாதே கரு கலைந்தது துரதிர்ஷ்டம் தான். அதுக்காக உன்னைக் கல்யாணம் பண்ண மாட்டேன்னு நினைக்காதே. ஐ வில் மேரி யூ.. இதோ வெட்டிங் ரிங்..” என்றான் மோதிரத்தை நீட்டியபடி. அவள் அதை வாங்கி அவன் பேக்கெட்டுக்குள் வைத்தாள். “தேவைப்படாது..”
“எனக்கு கருணை அன்பு வேண்டாம். நா அன்பா பேசினேன் நீ காது கொடுத்து கேட்கலை. உன்னை ஆசையோட பார்த்தேன் நீ என்னைப் பார்க்கலை. என்னை இக்நோர் பண்ணிட்டே இருந்தே. நா உனக்கு முக்கியமில்ல.. ஆனா சார்ல்ஸ் என்னை காதல் தேவதையா பார்க்கிறான். ஒரு பெரிய மாற்றம் என்னுள் நிகழ்ந்திருக்கு. நா நிறைய ரத்தம் சிந்தி தான் தெரிஞ்சுக்கிட்டேன். அவனுக்கு என் மீது மட்டுமே நியாபகம். சார்ல்ஸ் தான் என் ஹீரோ... நிரஞ்சன் சொன்னார். அப்ப அது எனக்குப் புரியலை. இப்ப புரிஞ்சுக்கிட்டேன்.”
அருண் மனசில் இருந்த பாரம் இறங்கியது. ஹாப்பி மேரிட் லைப் என்று வாழ்த்தினான்.
சார்ல்ஸ் முகமெல்லாம் பூரிக்க ஜேனெட்டை ஒரு குழந்தையைப் போல் அணைத்து கூட்டிச் சென்றான்.. அவர்கள் காரில் ஏறி ஜோடியாகப் போனார்கள். காதல் அவர்களுக்கு சொந்தமாயிற்று. இருவரையும் பார்க்க கண்ணில் நீர் நிரம்பியது அவளின் பெற்றோருக்கு. ஆனந்த நீர்.
அருணிடம் சொன்னார் ஜேனெட்டின் அம்மா..
“காதல் உனக்கும் கலாவுக்கும் தான் சொந்தம்.. உங்க வாழ்க்கை நல்லா இருக்க எங்க பிளஸ்சிங்ஸ்..”
காதல் கிளி கூண்டை விட்டு பறந்து போனது என்று நினைத்திருந்தாள் கலா. ஆனால் அது அடைக்கலமாக அவள் தோட்டத்துக்குள்ளவே ஆப்பிள் மரத்தில் அமர்ந்து, காதல் உங்கள் சொந்தம் என்று அறியவில்லையா.? என்று பாடுகிறதே.!
இங்கே....பிரிந்த காதல் ஜோடியான ஹேமா—அகில் என்னவாகப் போகிறார்கள்.? ஹேமா பெங்களூர் சென்றாள். அகில் அவளை அத்தனை உற்சாகத்துடன் எதிர்கொண்டான்.
“வா வா ஹேமா. எங்க நீ வராம போயிடுவியோன்னு பயந்தேன்.
உன்னைப் பார்த்ததும் தான் உயிர் வந்துச்சு.” என்றான். வீட்டுக்கு அழைத்துச் சென்றான். வீட்டில் யாருமில்லை.
“புது வீடு போல் இருக்கே.?”
“உனக்குத் தான் வாங்கினேன்.”
“எனக்கு வீடு வேண்டாம் அகில்.... உன் கல்யாண பத்திரிகை வந்துச்சு. மெயில் பண்ணியிருந்தே. என்னாச்சு.? ஒரு பரபரப்பும் இல்லையே.... ரோகிணி எங்க.?”
“சொல்றேன் வா. அதுக்கு என்ன அவசரம்.? உன்னை மிஸ் பண்ணிடுவேனோன்னு ஒரே டென்ஷனா இருந்துச்சு.... உனக்கு ஹாட் சாக்லேட் டிரிங் பிடிக்குமில்ல.? உனக்காகவே புது டின் வாங்கி வந்தேன்.... லவ் யூ ஹேமா.”
ஹேமாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ரோகிணி என்னவானா.? ஒருவேளை கடைசி நிமிடத்தில் கல்யாணம் நின்றுவிட்டதா.?
“இந்தா.. சாக்லேட் டிரிங். வித் லவ்.”
தொண்டைக்கு இதமாக இருந்தது பானம். “தேங்க்ஸ் அகில்.”
“நீ வரேன்னு மெயில் பண்ணதிலிருந்து எனக்குள் ஒரே ரொமான்ஸ் மூட் தெரியுமா.? கைகோர்த்தபடி எவ்வளவு நாட்கள் பார்க் பீச்ன்னு சுத்தி இருப்போம்!... எவ்வளவு இனிமையான நிலாக் காலம் அது.! நா உன்னை புறக்கணிச்சதுக்கு ரொம்ப ரொம்ப ஸாரி ஹேமா.. ஐ ஆம் ஏ இடியட்.” பழைய அகில் அவள் கண் முன் நின்றான். காதலான அகில். அன்பான அகில். உணர்வுபூர்வமா நேசித்த அகில்... அவளுள் நாணமும் சித்திர சிரிப்பும் வந்தது. கண்டிப்பாக இவன் கல்யாணம் நின்றுவிட்டது போலிருக்கு. அது பற்றி கேட்டு அவனை காயப்படுத்த வேண்டாம்.
“நீ எனக்கே சொந்தம் ஹேமா. உன்னை நேசித்த அளவில் கால் பங்கு கூட என்னால் ரோகினியை நேசிக்க முடியலை. அவளைக் கல்யாணம் பண்ணியும் கூட, என்னால் முழுமையா காதல் வாழ்க்கை வாழ முடியலை.. உன்னைத் தேடுகிறேன். நீ தான் என் வாழ்வை முழுமை பெற செய்யப் போகும் தேவதை.. நீ என்னை மன்னித்து ஏற்றுக் கொள்வாயா.?” உருக்கமாக அவன் சொல்ல, அவள் கேட்டாள்..
“அகில் உனக்கு டிவோர்ஸ் ஆகிவிட்டதா.? ஸாரி பா. நா இத எதிர்பார்க்கலை....”
“டிவோர்ஸ் பண்ணலை. வெல்.... உன்னால் குடுக்க முடியாத குழந்தை செல்வம் அவளால் எனக்கு கிடைக்குது.. ஆனா காதல் உன் மீது தான்..”
திடுக்கிட்டு எழுந்தாள் ஹேமா. “நீ என்ன சொல்றே அகில்.? எனக்குப் புரியலை. தப்பா இருக்கே..”
“ஹேமா.. நீ ஒரு பைத்தியக்காரனுக்கு சொந்தமாவதா.? ரோகிணி ஒரு புறம் கிடக்கட்டும்.. நா உனக்கு வாழ்வு தரேன். லெட் அஸ் லிவ் டுகெதர்..... உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்.”
அதிர்ச்சியில் உறந்து போனாள்.
“சீச்சீ உன்னையா நான் இத்தனை நாட்கள் எண்ணி எண்ணி ஏங்கினேன்னு அவமானமா இருக்கு. பொறுக்கி.”
“ஹேமா.... கோபத்திலே வார்த்தையை விடாதே. உன்னை யார் கல்யாணம் பண்ணிப்பா சொல்லு.? நீ ஆண்டவனின் அறைகுறை படைப்பு. யாரோ ஒரு கிராக்கிட்டே போய் வாழணும்ன்னு உனக்கு என்ன தலையெழுத்தா.? நமக்குள் காதல் இருக்கு.. நீ எனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு தாயா இருக்கலாம். யூ ஆர் லக்கி.” கொதித்துப் போனாள் ஹேமா. இவ்வளவு கொச்சையானவனா இவன்.? நெஞ்சில் ஈரமில்லாமல் எப்படி பேசறான்.! அரைகுறை படைப்பு.. என்ன வார்த்தை அது.! இந்த சாக்கடையை நம்பி வந்தது என் தவறு தான்....
“மனசாட்சியே இல்லாம இருக்கியே அதை விட, யூட்ரஸ் இல்லாம வாழ்றது மேல் டா....” கன்னத்தில் ஒரு அறை விட்டாள். யாரோ கை தட்டுவது போல் இருக்க.. ஜன்னலில் ஒரு பெண் முகம் தெரிந்தது... “ரோகிணி நீ எப்படி இங்க.?” பதறினான்.
“அவங்களை குறை சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு பிளடி அகில்?. பெண்மையை கேவலப்படுத்தும் நீ, ஒரு ஆண்மை இல்லாதவன். டிவோர்ஸ் நோட்டீஸ் வரும்....”
ரோகிணி காளி போல் நின்றாள். குழந்தை பிறக்கும் முன்னேயே அவனுக்கு வீடு வாங்கிட்டேன் ரோகிணி, ஒரு நாள் வந்து பாருன்னு அன்பொழுக சொல்லியிருந்தான். வந்தவள், அகிலின் அருவருப்பான திருவிளையாடலைப் பார்த்துவிட்டாள். அவள் கண்ணகி இல்ல மன்னிக்க...
“இந்த இடி போதுமா.? இன்னும் கொஞ்சம் வேணுமா.?.... பெண் ஆணின் கைப்பாவை இல்லடா..” சொல்லிவிட்டு கம்பீரமாக அங்கிருந்து ராணி போல் செல்லும் ஹேமாவையே பார்த்துக் கொண்டிருந்தான் அந்தக் கையாலாகாதவன். இரு மலர்களை கசக்க நினைத்தான். இருவரும் தப்பித்தனர்.
சொந்தம் தொடரும்.