• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

காதல் ராஜ வீதியில் - 17

நிதனிபிரபு

Administrator
Staff member
17

அதன் பின் அங்கு வந்து பார்த்த ஜம்பு அந்த வேலைக்காரன் என்று சொல்லிக் கொண்ட அடியாளை திட்டிக் குமித்து விட்டார் என்பது கயல் அறிய வேண்டியதில்லை.

அவளையும் ஏதாவது வேலையாக வரச் சொல்லி இருப்பார் என்று நினைத்த அந்த அவன் தன் கண்டுபிடிப்பை நொந்து கொண்டே ஜம்புவிடம் திட்டுக்களை வாங்கிக் கொண்டான்.

அவனைத் திட்டி முடித்துவிட்டு இவள் பற்றி அக்கம் பக்கம் விசாரித்தார் ஜம்பு. அவர் ஏதோ வேண்டாத வேலை செய்கிறார் என்று தெரிந்தாலும் உடம்பு சரியில்லை என்றால் அவரிடம் போய் மந்தரித்துக் கொள்பவர்கள் அவர்கள்.

ஆகவே அவருக்கு தங்களுக்குத் தெரிந்த விவரங்களைக் கொடுத்தார்கள்.

அதன்படி ஊருக்கு வந்திருக்கும் குழு பற்றி அறிந்தவர் அதற்குமேல் எதுவும் செய்யவில்லை. சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல் ஆகிவிடக் கூடாது என விட்டு விட்டார். அப்படி பிரச்சனை வந்தால் அப்புறம் பார்ப்போம் என்று நினைத்தவர் எல்லாவற்றுக்கும் காரணமான அந்த அடியாளை கோபத்தில் கையைப் பிடித்து முறுக்க அவன் கை எலும்பு உடைந்து விட்டது. எந்த சூழ்நிலையிலும் ஜம்புவின் பெயரை அவன் வெளியில் சொல்லவில்லை.

ஜம்பு அதை அத்தோடு விட்டார். ஆனால் சரியான வைத்தியம் பார்க்காமல் விட்டதில் கூடுதல் வியாதிகளும் சேர்ந்து கொள்ள அவனே போய் சேர்ந்து விட்டான். அதில் அவன் பங்கு வேலை பாதிக்கப்பட்டது.

அதாவது மதிவதனி பின்னால் சுற்றி அவளை வளைத்துப் பிடிக்கும் வேலை. அப்போது வனி முதலாம் மூன்றாம் படித்து முடிக்கும் தருவாயில் இருந்தாள்.

ஏற்கனவே வனி தெற்கேயும் வடக்கேயும் தாவித் தாவி படித்ததில் அவளைப் பின் தொடர்ந்த இன்னொருவன் விபத்தில் இறந்திருந்தான்.

எஞ்சி இருப்பது இன்னும் இருவர் தான். ஜம்பு தன் அனுபவத்துக்கு வனி சவால் விடுவதை உணர்ந்தார்.

எதற்கும் இருக்கட்டும் என்று முன்பு நடந்த அந்த சாங்கியத்தை புகைப்படம் எடுத்து வைத்து இருந்தார் ஜம்பு.
இப்போதுதான் அது நினைவு வந்து எதற்கும் இருக்கட்டும் என்று அவருக்கு தெரிந்த ஒருவர் மூலம் பிரிண்ட் போட்டார். அதைத்தான் கயல் எடுத்துப் போனது.

அந்தக் கவரில் அப்படியும் இருக்குமோ இப்படியும் இருக்குமோ என்ற ஊகங்களை தரும் புகைப்படங்கள் இருந்ததில் அவர் பிறத்தியார் பார்த்தால் என்னாவது என்று யோசிக்கவில்லை. தவிர அவர் வீட்டில் அவர் கூடத்தில் வைத்த புகைப்படம் அவர் கையை மீறிச் செல்லும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏதோ அவருக்கு நடக்கக் கூடாதது நடக்கப் போகிறது என்று மட்டும் உள்ளுணர்வு சொன்னது.

வனியை எதற்காக ஜம்புவின் ஆட்கள் பின் தொடர்ந்தனர்?

முன்பு தன் பனிரெண்டு வயதில் வனி குணமான பின் ஜம்புவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. அது இதயம் சம்பந்தப்பட்ட வியாதி என்று அவர் புரிந்து கொண்டார். அதற்கு அவர் வாழ்க்கை முறைதான் காரணம் என்று நம்ப மறுத்தார்.

மருத்துவமனைக்கு செல்வது அவரை பொறுத்த வரை தவறானது. ஆகவே வேறு எப்படி இதில் இருந்து தப்பிக்கலாம் என்று நிறைய அவரைப் போன்றவர்கள் எழுதி வைத்த குறிப்புகளைப் படித்தபோது வித்தியாசமாக ஒரு புத்தகம் கிடைத்தது. அதில் குறித்தபடி தான் நீண்ட ஆயுள் பெற வனி போன்ற பெண்ணை வைத்து பூஜை செய்ய விரும்பினார் ஜம்பு.

அதற்காகத்தான் அவளை நான்கு பேர் வைத்து பின் தொடர்ந்தார். சிக்கினால் தூக்க ஏதுவாக இருக்கும் என்றுதான் நான்கு பேர். தவிர அவர்களுக்கும் ஒரு வேலை கொடுக்க வேண்டும் அல்லவா?

அந்த நான்கு பேரும் அவரின் சீடர்கள் என்றும் சொல்லலாம், அடியாட்கள் என்றும் சொல்லலாம். குடும்பத்தை விட்டுவிட்டு இவர் போடும் சோற்றுக்கு இவருக்கு வேலை செய்யும் யோசனையிலிகள்.

தமிழிடம் நேரே கேட்டு அவர் மகளை இவர் சாங்கியதுக்கு அனுப்ப சொல்ல முடியவில்லை. அந்த சாங்கியம் அப்படிப்பட்டது.

தவிர தற்போது எந்தத் தேவைகளும் இல்லாத தமிழ் நிச்சயம் இவருக்கு உதவ ஒத்துக் கொள்ள மாட்டார்.

ஆகவே தான் வனியை கடத்த முடிவு செய்தது. தன் தேவை முடிந்ததும் அவளைக் கடத்திய இடத்திலயே விட்டு விடலாம், அவள் வீட்டுக்குப் போனாலும் சரி இல்லை என்றாலும் அவருக்கு என்ன வந்ததாம்?

இப்படி அவர் திட்டம் போட அவளை தனியாகப் பிடிக்கவே முடியவில்லை.

யாரோ தனியாகவோ கூட்டமாகவோ வந்து அவளைப் பாதுகாத்து விடுவதாக இவன்கள் சொல்ல அவருக்கு மண்டை காய்ந்தது.

நோயின் காரணமாக இவருக்கும் வெளியே செல்ல முடியவில்லை. எப்படியோ ஆலமரத்தூரில் இருந்து பூதக்கிணறு வந்திருந்தார். அதற்கு மேல் எங்கும் செல்ல விரும்பவில்லை. முடியவும் இல்லை.

செல்வாவை கூடவே வைத்து அவனுக்கும் அவர் வேலைகளைப் பழக்கிவிட்டார். இது பகுதி நேரமும் முழு நேரம் கோழி வளர்ப்பு என்றும் சொல்லிக் கொடுத்தார். அவன் குருவை மிஞ்சிய சிஷ்யனாக இருந்ததில் அவருக்குப் பெருமைதான்.

இப்போதும் வனியை தேடுவதை அவனுக்குத் தெரியாமல்தான் வைத்து இருந்தார். தெரிந்தால் நேரே போய் தூக்கிவிடுவான். இப்போது அதெல்லாம் சரிப்பட்டு வராது. அவனுக்கு இவரைப் போல் முழுதும் புகழ் கிடைக்க இன்னொரு சடங்கு இருக்கிறது. அதுவரை பெண்ணை தொடக்கூடாது. அப்புறம் திருமணம் செய்து கொள்ளலாம்.

இவர் திட்டம் இப்படி இருக்க, வனியின் புகைப்படங்களை அவ்வப்போது அவருக்கு காட்டுவர் அந்த நால்வர். ஏதோ தாங்களும் வேலை செய்கிறோம் என்று காட்ட நினைத்தார்கள் போல.

“இவன்க என்ன வேலை செய்யுறானுங்க? எதுக்கு தண்டசோறு போட்டுட்டு இருக்கீங்க? நானும் பாக்கிறேன், ஏழேட்டு வருசமா அவனுங்களுக்கு தீவனம் போட்டுட்டு இருக்கீங்க? காசுக்கு பிடிச்ச கேடு“ என்று செல்வா கடந்த சில நாட்களாக முணுமுணுக்க ஆரம்பித்து இருந்தான்.

வனியை பின் தொடர்ந்த ஒருவன் விபத்தில் இறந்திருக்க, இன்னொருவன் இவர் கையை முறுக்கியதால் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்க ஒருவன் ஹார்ட் அட்டாக்கில் போய் சேர்ந்தந்திருந்தான்.
இன்னொருவனைக் காணவில்லை.

ஆக, கயல் வந்து போனது, இரண்டாமாவன் கை ஒடிந்தது, இவன்கள் எல்லாம் ஏன் இருக்கிறார்கள் என்று செல்வா கேட்டது எல்லாம் ஒரே கால கட்டம்தான்.

இப்படியே போக ஜம்புவுக்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. அப்படியும் காணாமல் போன அந்த ஒருவனை மட்டும் தேடித் தருமாறு மகனிடம் கேட்டுக் கொண்டார் ஜம்பு.

“என்னனு சொல்லித் தொலைஞ்சா என்ன?” என சுணங்கினாலும் செல்வா அந்த காணாமல் போனவனைத் தேட ஆரம்பித்தான்.

இரண்டு வருடங்களுக்குப் பின் காணாமல் போன அந்த ஒருவன் ஜம்புவின் கண்ணில் சிக்கினான்.

இங்கே வனி பத்திரக்கடை வைத்து இருந்தாள், மொழி அதே இல்லத்தின் சேர்மன் ஆனதுடன் சொந்த தொழிலிலும் ஜெயித்து இருந்தான்.

வனியை பெண் கேட்டு மொழி தமிழிடம் நேரே கேட்க அவர் மறுத்ததில் ஜார்ஜ் மூலம் கேட்டு விட்டான்.

ஜார்ஜிடம் பல வருடங்கள் முன்பு உள்ளதை சொல்லாமல் மேம்போக்காக தன்னுடன் தன் பிரச்சனைகள் தீர ஒரு பூஜை செய்ய மொழியை அனுப்பக் கேட்டு இருந்தார் தமிழ்.

ஜார்ஜ் அதை மூட நம்பிக்கை என்றும் தான் அதற்கு ஆதரவு தர மாட்டேன் என்றும் சொன்னதற்கு தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி தான் மொழியை அன்று அழைத்து வந்திருந்தார் தமிழ்.

இவர் பேச்சை அதிகபடியாக உணர்ந்தாலும் தொடர்ந்து இல்லத்தில் தன் பங்களிப்பை வழங்கும் தமிழை ஒரே அடியாக ஒதுக்கவும் ஜார்ஜ் விரும்பவில்லை.

சரி. போய்விட்டு வரட்டும் என்று நினைத்தவர் அங்கே மொழிக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது என்று தமிழிடம் எழுதி வாங்கிக் கொண்டார்.

மற்றபடி நிலா காலம் பெயர் எழுதிய சட்டையை அணியச் சொல்லி ஜார்ஜ் அன்று மொழியிடம் சொல்லி இருக்கவில்லை. சொல்ல போனால் அவன் உடை விஷயம் அவர் கவனிக்கவே இல்லை.

மொழிதான் வெளியே போகப் போகிறோம் என்றதும் தானாக அந்த நிலா காலம் சட்டையை எடுத்து அணிந்து இருந்தான்.

அது கிடக்கட்டும். இப்போது ஜார்ஜ் அந்த நிகழ்வை நினைவு கூர்ந்ததோடு இவர் எழுதிய பிட்டு பேப்பரையும் எடுத்துப் போட்டார்.

அதிர்ந்த தமிழ் இதிலிருந்து எப்படி தப்ப என்று யோசித்து ஜம்புவைத் தேடிப் போய் செல்வத்தை பார்த்துவிட்டு அவன் பேச்சைக் கேட்டு ஆடிக் கொண்டு இருக்கிறார்.

செல்வம் சொன்னது என்ன? அது இப்போதுவரை தமிழுக்குத்தான் வெளிச்சம்.

செல்வத்தை பொறுத்தவரை அவன் இனி ஜெயிக்க போகிறான்!

காணாமல் போன அந்த ஒரு அடியாளை தற்போதுதான் அதாவது ஜம்பு இறப்பதற்கு ஒரு வாரம் முன்பு தான் கண்டு பிடித்து இருந்தான் செல்வா.

மற்ற அடியாட்களைப் போல் அல்லாது அந்த அவனுக்கு - பட்டப்பெயர் உருளை - அந்த உருளைக்கு கொஞ்சம் தெளிவு இருந்தது. அத்துடன் அவனுக்கு வனி மீது வேறு ஒரு எண்ணமும் தோன்றியதில் அவளை சிலமுறை அவன் தப்பிக்க வைத்து இருக்கிறான்.

உருளையின் எண்ணம் அந்த ஹார்ட் அட்டாக்கில் போனவனுக்குத் தெரியவர அவன் இவனை எச்சரித்தான்.

அப்போதுதான் ஒருமுறை சேர்ந்து சுருட்டு பிடிக்கும் போது ஜம்பு தவறுதலாக வாயை விட்டார்.

“கருமம் பிடிச்சவ. ஒரு ரத்த பூசை மட்டும் இவளை வச்சு பண்ணிட்டா போதும். எனக்கு ஆயுசு நீண்டுரும். அதுக்கு பார்த்தா சிக்க மாட்டேன்கிறா “ என நொடித்து இருந்தார்.

இதைக் கேட்டவன் தான் அப்புறம் ஏதோ காரணத்தால் அட்டாக்கில் இறந்திருந்தான். இறப்பதற்கு முன்பு இந்த விஷயத்தை உருளையிடம் தெரிவித்துவிட்டே இறந்திருந்தான்.

உருளை ஒன்றும் தெய்வீக காதல் கொண்டு வனியை பின் தொடரவில்லை.

உருளைக்கும் அவளைப் பிடித்து இருந்தது. ஏற்கனவே உருளைக்கு ஒரு மனைவி இருக்கிறாள். ஒரு மகனும் இருக்கிறான். அப்புறம் ‘காசு குடு, வேலைக்கு போ’ என்ற அவள் நொச்சு பொறுக்க முடியாமல் வீட்டை விட்டு வந்து விட்டான்.

இப்போது இந்த வனி காலேஜில் கால் எடுத்து வைத்ததும் ஜொலிக்கவும் இவனுக்கு ஆசையாகிப் போனது.

மூன்று வருடங்கள் பல்லை இளித்துக் கொண்டு அவளை பின் தொடர்ந்தான். கரும்பு தின்ன கூலி வேறு!

அப்போதுதான் அந்த ஹார்ட் அட்டாக் பயல் இவனிடம் உண்மையைச் சொல்லிவிட்டு போய் சேர்ந்தான்.

அவன் சொன்னது புரியாவிட்டாலும் நமக்கு எதற்கு வம்பு என்று அங்கிருந்து தலைமறைவாகி விட்டான் உருளை.

அவனை இரண்டு வருடங்கள் கழித்து கண்டுபிடித்த செல்வா அவனுக்கு மது வாங்கிக் கொடுத்து,

“அப்பா உங்ககிட்ட என்ன செய்ய சொன்னாரு?” என்று நிதானமாகாக கேட்டான்.

அவன் கேட்டதும் உண்மையை உரக்கச் சொன்ன உருளை “அந்தப் பொண்ணை விட்ருங்க “ என்றான்.

“அதெல்லாம் நீ ஏன் சொல்ற?” கழுத்தில் நெட்டி முறித்த செல்வா,

“உனக்கு வேற என்ன தெரியும்?” என்றான்.

“வேற ஒன்னும் தெரியாது மணி “

“அப்புறம் இருந்து என்ன பண்ண போற?”

உருளை தலையில் கல் விழுந்து இறந்து விட்டதாக ஊரில் அவனை நல்லடக்கம் செய்தனர்.

அதன் பிறகு நேரே ஜம்புவை பார்த்து,

“நீங்க அதிகம் வெளியே வர்றதில்ல. வந்தா மூச்சு முட்டுதுன்னு சொல்வீங்க. சுருட்டு குடிக்கும் போது நீங்க நீங்களா இருக்க மாட்டீங்க. அதும் எப்பவாச்சு குடிக்கிறதால் ஒன்னும் பெருசா இல்லை உங்களுக்கு” என்று பாசத்தை பொழிந்தான்.

“அது கிடக்கட்டும். வெளியே என்ன சத்தம்? யார் மண்டையை போட்டா?” என்றார் ஜம்பு அசுவாரசியமாக.

“உருளை” என்றான் செல்வா நிதானமாக.
 
Top Bottom