19
கையில் எடுத்த மாத்திரை போன்ற வாஸ்துக்களை எடுத்துக்கொண்டு ஜம்புவை நோக்கி வந்தான் செல்வா.
“இப்ப என்னானா நீ தேடிக்கிட்டு இருக்கிறியே அந்த பொண்ணோட விவரத்தை எனக்கு சொல்ற. அப்படி சொல்லிட்டேனா உன்னை அப்படியே விட்ருவேன். இல்லன்னா உனக்கும் இந்த மாத்திரை தான். அது வேலை செஞ்சாலும் சரி. செய்யலைனாலும் சரி. இந்த கட்ட பிரிக்க மாட்டேன். நீ தண்ணி வெண்ணி குடிக்காம செத்தாலும் சரி இந்த மாத்திரையை தின்னு செத்தாலும் சரி.
அப்புறம் ஊருக்குள்ள என்னவோ நீ செத்தா நட்டமா நிக்க வச்சு புதைக்கணும்னு சொல்லி இருக்க போல? அதையே நானும் செஞ்சிருவேன் பயப்படாதே” என்றான். அவர் பயமே அவன் தான்.
அவன் சொன்னதற்கு பயந்து அந்த புகைப்படங்கள் இருக்கும் இடத்தை அவனுக்கு சொன்னார் ஜம்பு. மதிவதனி குறித்த தகவல்களையும் சொன்னார். அந்த பாழாய் போன புத்தகம் இருக்கும்
“எல்லாம் சொல்லிட்டேன். ஆனா இதெல்லாம் உனக்கு பொருந்தாது. எனக்குதான் சரி வரும் ” என்றவர் வாயிலேயே போட்டான் செல்வா.
“இந்த வாயை வச்சுக்கிட்டும் உனக்கு அடங்கலை ல? நீ சொன்ன பக்குவ பிரகாரம் செஞ்சா, முழுசும் கூட வேண்டாம், எவ்வளவு பொற்காசு கிடைக்குதோ கிடைக்கட்டும். அதாவது என்னென்ன நல்லது எனக்கு கிடைக்குமோ கிடைக்கட்டும். உன் மகனா வெட்டியா இருக்கறதுக்கு இது தேவலை தானே?” அலட்டிக் கொள்ளாமல் பேசினான் செல்வா.
“இதுலாம் பெரிய விஷயம் மணி. உன்னால முடியாது “ இதுவரை பேசியது போல் இப்போதும் திக்கி தடுமாறிதான் பேசினார் ஜம்பு.
“எது பெரிய விஷயம்? என் வீர சாகசம் தெரியாம பேசுறியே? உன் தோஸ்த்துங்க உருளை பாறை எல்லாம் போட்டு தள்ளுன நான் இதுவரை உன்னை விட்டு வச்சதே உன்னால கிடைக்கிற நல்லது பொல்லாததுக்கு தான். இனி நீ தேவை இல்லை. எல்லாம் நான் பார்த்துக்குவேன்” என்றவன் அவரிடம் சொன்னபடி அல்லாது அப்படியே அவர் வாயில் அந்த மாத்திரைகளை போட்டு தண்ணீரை ஊற்றி விட்டான். கட்டுக்களையும் அவிழ்த்து விடவில்லை.
கிடந்த கிடையிலேயே எல்லாம் போய் மூச்சு திணறி அன்றிலிருந்து இரண்டாம் நாள் அவர் இறந்திருந்தார். இதய நோயில் ஜம்பு இறந்ததாக சொல்லி அவர் பாடையை கட்டி விட்டான் செல்வா.
அந்த சமயத்தில் தான் தமிழ் வந்து இறங்கினார். அவர் ஏதாவது விசாரிப்பார் என்றுதான் கண்டு கொள்ளாமல் இருந்தான். அவர் தனது அதிகப்படி வாயால் இவனை திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அத்தோடு போகலாம் என்றால் மதிவதனி புகைப்படத்தை இவன் கண்ணீலும் காட்டி விட்டார்.
தந்தையின் காரியங்களை முடித்துவிட்டு அடுத்து பெண் வேட்டையில் ஈடுபடலாம் என்று நினைத்திருந்தவன் காலில் சிக்கிய மூலிகை போல் வந்து சிக்கினார் தமிழ். நல்லது என்று அவரை ஒரே அமுக்காக அமுக்கிக் கொண்டான் செல்வா.
இனி அவரை வைத்து அவன் நினைத்ததை சாதித்து விட மாட்டான்?
ஊடே இவன் தொடுப்பு வேறு, மச்சான் மச்சான் என்று நை நை பண்ணிக் கொண்டு இருக்கிறாள். அவளுக்கு தாலி கட்ட வேண்டுமாம்! முத புருஷன் வேண்டாம் என்றதும் ‘எப்போ எப்போ’ என்று இருந்து இவனை பிடித்துக் கொண்டவள் அவள்! அவ்வளவு மரியாதை போதும் அவளுக்கு!
அந்த பெண் குழந்தை தான் இவன் சாடையில் கண்ணை சிமிட்டுகிறது. அதற்கு வேண்டுமானால் ஊரறிய அவன் பிள்ளை என்ற பெயரை கொடுத்து விடலாம்!
ஏதேதோ திட்டங்கள் போட்டவன் மனிதன் நினைப்பதை எல்லாம் இயற்கை நடத்திக் கொள்ள விடுவதில்லை என்பதை உணரவே இல்லாமல் போனதை என்ன சொல்வது?
**************************************************
மலருக்கு மனமெல்லாம் குடைந்தது. தமிழ் இப்படி வெளியூருக்கு வேலைக்கு போவது நடப்பது தான். ஆனால் இந்த முறை அவர் இல்லாதது மலரின் மனதை குடைந்தத. ஏதோ தவறாக நடக்கப் போகிறது, அல்லது நடந்து கொண்டு இருக்கிறது என்பதாக அவர் உள்ளம் சொன்னது. அது சரியா தவறா என்று நடப்பது நடந்த பின் தான் தெரியும்.
மலர் மகளிடம் தன் குழப்பத்தை சொல்ல நினைத்தார். அப்புறம் வேண்டாம் என்று விட்டு விட்டார். பாவம் பிள்ளையும் குழம்பி விடுவாள்.
இது தேவையற்ற பயமாக இருந்தாலும் இருக்கலாம். எதற்கும் ஒரு போன் அவர் கணவர் செய்தால்தான் என்ன? இங்கே இவர் அமைதியாக இருக்கலாம் அல்லவா? தமிழ் போய் இருப்பதோ டவர் கிடைக்காத குக்கிராமம் என்கிறார்! அப்படி இப்போதெல்லாம் எந்த குக்கிராமத்தில் செல்போன் டவர் கிடைக்காமல் இருக்கிறதாம்? கேட்கின்றவன் கேனையென்றால் கேப்பையில் நெய் வடிகிறது என்று சொல்லக்கூடியவர் தான் மலரின் பாதி.
இப்படி நினைத்த மலர் கணவன் நினைவில் புன்னகைத்தார்.
தமிழைப் பொறுத்தவரை குடும்பத்தினர் மீது மிகுந்த அன்பு உடையவர். ஆரம்பத்தில் மலர் மீது பெரிய பிடித்தம் இல்லாமல் தான் தமிழ் அவரை மணந்து கொண்டார். இது மலருக்கும் தெரியும். நெருங்கிய சொந்தம் என்று யாரும் இல்லாத தமிழ் மனைவியுடன் தனிகுடித்தனம் இருக்க வேறு வழி இல்லாமல் பேச ஆரம்பித்தார்.
காலப்போக்கில் மனைவியிடம் கேட்காமல் எதைச் செய்யவும் தமிழுக்கு மனம் வர மறுக்க, அப்படியே எப்போது நடந்தது என்று தெரியாமல் தமிழ் மலர் வசம் ஆனார்
கணவனின் மன மாற்றத்தை உணர்ந்தாலும் மலர் அதை காட்டிக்கொள்ளவில்லை. அப்புறம் தமிழ் முறுக்கி கொண்டால் என்ன செய்வது? என்று அப்படியே தன் வாழ்க்கையை இனிதே தொடர்ந்தார்
இப்படியாக அவர்கள் வாழ்வு சலசலப்பின்றி சென்று கொண்டிருந்தபோது அவர்களின் முதல் மகன் மதிவாணன் தலையில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தான். பெற்றோரின் பொக்கிஷம் அல்லவா பிள்ளைகள்?
எந்த பெண்ணும் பெற்ற குழந்தையை கணவனை விட உயர்வாகவே நினைப்பாள் அவர்கள் குழந்தையாக இருக்கும்போது. ஏனெனில் குழந்தைகள் தாயை நம்பி இருப்பவர்கள் அல்லவா? தங்களை நம்புபவர்கள் மீது அக்கறை செலுத்துவது இயல்பு என்றாலும் பெற்ற தாய் அதில் ஒரு படி உயர்ந்தவள் அல்லவா? எல்லாவற்றையும் விட ரத்த சொந்தம் அதன் வேலையை செய்யுமே?
மகனை இந்த நிலையில் பார்க்க முடியாமல் மலர் உயிர்வாதையை அனுபவித்துக் கொண்டு இருந்தபோது அப்படியே இறந்து விடலாம் என்று பலமுறை நினைத்து இருக்கிறார். மகனுக்கு ஏதோ ஒன்று என்று காதால் கேட்பதற்கு முன்னால் தன் உயிர் இல்லாமல் இருப்பதே உத்தமம் என்று நினைத்து இருந்தவர் கணவருக்கு பிடிக்காது என்றாலும் உண்ணாமலே இருந்தார்.
அவரை பார்த்துக்கொண்டே இருந்த தமிழ் நெஞ்சம் கலங்கி போனார். இந்த உலகில் அவர் தனக்கிருப்பது அவள் மட்டும் தான் என்று இருக்க, அவள் தன் உயிர் அவர்கள் பெற்ற மகனிடம் இருக்கிறது என்பதை காட்டிவிட்டாள்.
மகன் அவருக்கும் முக்கியமானவன் தான். அதே நேரத்தில் மனைவியை இந்த நிலையில் காணவும் முடியவில்லை. எதையாவது செய்து இருவரையும் மீட்க வேண்டும் என்று அவர் துடித்த போது ஜம்புவை முதன் முதலில் அறிந்து கொண்டார். அதன்படி பிறந்தவள் மதிவதனி. அதன் பிறகு அவர் வாழ்க்கை ஆனந்தக் கடலாக இருந்தது.
அடுத்த பத்தாம் வருடம் மதிவதனிக்கு உடம்பு முடியாமல் போக, இக்கட்டு காலங்களில் நினைவு வரும் இறைவன் போல என்ன செய்வது என்று தெரியாத நிலையில் அவருக்காக இல்லாவிட்டாலும் அவர் ஒன்றுவிட்ட அக்கா மூலம் நினைவு படுத்தப்பட்டது ஜம்புவின் நினைவு.
அப்பொழுது தான் வில்லங்கம் அவர் வாழ்வில் விளையாடியது. மகளுக்கு குழந்தை மனம் முடித்து வைக்க வேண்டும் என்று சொன்னதை நம்பி ஜம்பு சொன்ன வரைமுறைகளுக்கு ஏற்ற மணமகனாக மணிமொழியை தேர்ந்தெடுத்து அவனை இங்கே கொண்டு வருவதற்காக நிலாக்காலம் ஆசிரமத்திற்கு நல்லது பொல்லாதது எல்லாம் செய்து ஜம்பு சொன்னதை நிறைவேற்றி வைத்தார் தமிழ்.
கொக்கு உட்கார பனம் பழம் விழுந்தது போலவோ என்னவோ மதிவதனி தானே பிழைத்து விட்டாள். இதுவரை மலருக்கு தமிழ் செய்தது நன்கு தெரியும். அந்த பால்ய விவாகம் இப்போது தான் சொன்னார் என்றாலும் சொல்லிவிட்டார்.
அதை தவிர தமிழ் தனது தினசரி நிகழ்வுகளை மலரிடமும் ஒப்பிக்காமல் இருந்தது இல்லை. ஆனால் ஊருக்கு கிளம்பி செல்வதற்கு முன்னால் மீண்டும் தமிழ் இவரிடம் ஏதோ மறைத்தது போலவே இருக்கிறது. அது என்ன? மீண்டும் ஏதாவது பிரச்சனையில் சிக்கிக் கொண்டு இருக்கிறாரா?அல்லது தத்துப்பித்தன்று ஏதாவது பிரச்சனைகள் இழுத்து வைத்து இருப்பாரா?
ஒருவேளை ஒருவருக்கும் தெரியாமல் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரோ? இருக்கும்! மதிவதனி கல்யாணத்திற்கு முடியாது என்றுதான் சொல்லுவாள். வேறு ஒன்றும் காரணம் அல்ல. வீட்டில் சமைப்பது, கூட்டுவது, பெருக்குவது என்றெல்லாம் அவளுக்கு அலர்ஜி.
சமைத்து போட்டால் சாப்பிடுவாள். படுக்கையை தட்டிக் கொடுத்தால் படுத்து தூங்குவாள். வேலை என்று வந்துவிட்டால் வரிந்து கட்டிக் கொண்டு செய்வாள். மற்றபடி செல்லம் கொடுப்பவர்களிடம் செல்லம் கொஞ்சுவதில் சிறந்தவள்.
ஒருவேளை மாப்பிள்ளை பார்க்கும் விஷயம் மதிவாணனுக்கு தெரியுமோ?
மதிவாணன் ஏன் சொல்லவில்லை? ஒருவேளை அவனுக்கும் பிடிக்காத மாப்பிள்ளையாக இருக்குமோ? இல்லையென்றால் அவனுக்கு பிடித்த மாப்பிள்ளையாக இருக்குமோ?நம்மிடம் தான் சொல்லாமல் வைத்துக் கொண்டு இருக்கிறானோ? தன்னிடம் சொன்னால் மதிவதனியிடம் சொல்லி விடுவோம் என்று அமைதியாக இருக்கிறானோ? எதுவாக இருந்தாலும் இங்கு ஒரு அப்பாவி ஜீவன் துடிப்பது அவர் கணவருக்கு தெரியவில்லையா?
மலருக்கு தன் குடும்பத்தை விட்டால் வேறு எதுவுமே தெரியாது. அப்படி இருக்கக் கூடாது என்று தமிழ் எவ்வளவு சொல்லியும் மலர் அதை கேட்கவில்லை.
ஆரம்பத்தில் கணவன் தன் மீது அன்பைக் காட்ட வேண்டும் என்று அவரை சுற்றி சுற்றி வந்தார். மகன் பிறந்ததும் மகனை பராமரிப்பதில் அவர் காலங்கள் ஓடின.
ஓரளவு அவன் வளர்ந்ததும் தனது பிடித்தமான பொழுதுபோக்குகளில் மனதை செலுத்த அவர் முயன்ற போது மதிவாணன் அடிபட்டான்.
தான் சரியாக கவனிக்கவில்லையோ என்ற குற்ற உணர்ச்சியும் சேர மலர் தனக்குள் உடைந்து போனார்.பின்பு மதிவதனி பிறந்தாள். அப்போதும் குழந்தைகள் மீது தனது கண்ணை ஒரு வினாடியும் அகற்றாமல் மலர் பார்த்துக் கொண்டார்.
அப்படியும் மதிவதனி அவரை சோதித்தாள். அதிலிருந்து மீண்ட பின் குடும்பமே எல்லாம் என்று மலர் மாறி போனார். வாழ்நாளில் பாதிக்கும் மேல் தனது குடும்பத்திற்காக வாழ்ந்தவர் அதற்கு மேலும் வேறு எதையும் செய்ய விடாமல் மூட்டு வலி அவரை பிடித்துக் கொண்டது.
எத்தனையோ பிரச்சனைகளுக்கு நடுவே, உடல் உபாதைகளுக்கு நடுவே சாதிக்கும் மனிதர்கள் கோடி உள்ளனர். அப்படி இல்லாமல் மலருக்கு அவர் குடும்பமே எல்லாம், இவர் கணவருக்கு தன் மனைவி தான் எல்லாம். இதுவும் காதல் தான்.
நல்ல பொதுமக்களை நாட்டில் உருவாக்குவதும் நாட்டுக்கு செய்யும் சேவைதான். அதன்படி ஒரு மருத்துவரையும், வரி கட்டும் ஒரு வணிகரையும் சிறப்பாக வளர்த்ததும் குடும்பத்தின் மீது கொண்ட காதல் தான்.