புயல் 10
பழங்குடியினர் வாழும் இடத்திற்குச் சென்று, அம்மக்களோடு மக்களாக இணைந்து, அவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.
ஆர்யாவும் வித்யூவும்.
கணவன் மனைவியாக அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சாட்சியாக, வித்யூவின் இன்னுயிர் ஆர்யாவின் வயிற்றில் வளர ஆரம்பித்தது.
விடுமுறை முடிந்து திரும்பியவர்களை வழக்கமான வேலை வரவேற்க, அதனுள் தங்களை ஆழ்த்திக்கொண்டனர்.
காதலர்களாக இருந்தவர்கள் இப்போது கணவன் மனைவியாக, ஒருவருக்கொருவர் காட்டும் உரிமையோடும் கொஞ்சல்களோடும் நாட்களைக் கழித்தனர்.
இந்த விஷயம் மெல்ல மெல்ல மோகனின் காதுகளுக்குச் செல்ல, அவர் அதிர்ந்து போனார்.
சிறு வயதிலிருந்தே வித்யூவிற்கு பிரணவிதான் என்று முடிவாகியிருந்தது. வித்யூவிற்கு அதில் விருப்பம் இருக்கிறதோ இல்லையோ, பிரணவி வித்யூவை பைத்தியமாக காதலிப்பது அங்கிருக்கும் யாவருக்கும் தெரியும்.
தன் மகளுக்கு ஒன்று என்றால் துடித்துப் போகும் ராஜேஸ்வரி, அதற்குக் காரணமானவர்களை ஒருவழி பண்ணாமல் விடமாட்டார்.
வித்யூ இன்னொருத்தியைக் காதலிப்பது தெரிந்தால் நிலைமை என்னவாகும்? அவனுக்கு உதவி செய்வதாக நினைத்துத் தன்னையும் தண்டித்து விடுவார்களோ, இந்த ராஜவாழ்க்கை பறிபோய்விடுமோ என்று மோகன் பயந்தார்.
வித்யூவிடம் பேசி அவன் மனதை மாற்ற வேண்டும் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்க, அவர்களோ தங்கள் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு சென்றுவிட்டனர்.
ஒருநாள் இருவரும் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அதில் ஹீரோவின் பள்ளிக்கால காதல் காட்சியை ரசித்துப் பார்த்த ஆர்யா, "உங்களுக்கு ஸ்கூல் டேஸ் லவ் எதுவும் இருந்ததா வித்யூ?" என்று கேட்டாள்.
அதைக் கேட்டதுமே வித்யூவின் முகம் இறுகிப் போனது. அதைக் கண்ட ஆர்யாவின் முகம் கலவரமானது.
"நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா வித்யூ?" என்று பயத்துடன் அவள் கேட்க, தன் முகத்தை இலகுவாக்கிக் கொண்டான். இதழ்களில் மெல்லிய புன்னகையோடு அவளை நிமிர்ந்து பார்த்தவன், "எனக்கும் ஸ்கூல் டேஸ் லவ் இருந்தது. உயிருக்குயிரா அவளை நேசிச்சேன். கடைசி வரைக்கும் அவதான் என் உலகம்னு பைத்தியமா இருந்தேன்... ஆனா?" என்று பெருமூச்சோடு நிறுத்தினான்.
"ஆனா... என்னாச்சு?"
"என்னை விட்டுப் போயிட்டா."
"வேற ஒருத்தரை லவ் பண்ணிட்டுப் போயிட்டாங்களா?"
"ப்ச்! இல்லை... இந்த உலகத்தை விட்டே போயிட்டா," என்றதும் ஆர்யா அதிர்ச்சியில் உறைந்தாள்.
"சாரி வித்யூ!"
"பரவாயில்லை யங்கா."
"இப்பவும் அவ இருந்திருக்கலாம்னு ஃபீல் பண்றீங்களா?"
"உன்னைப் பார்க்குற வரைக்கும் ஃபீல் பண்ணினேன்... ஆனா இப்போ இல்லை," என்றான்.
"த்தோடா! இதை நாங்க நம்பணுமாக்கும்!" என்று அவள் கேலியாக வினவ,
"அடியே நிஜம்டி, நம்பு!" என்று அவன் சத்தியம் செய்யாத குறையாகக் கூறினான்.
"நம்பிட்டேன்! அவங்க பெயர் என்ன?"
"விகா! வேறெதுவும் கேட்காதடி ப்ளீஸ்," என்று அவள் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
அவன் தலையைத் தன் உள்ளங்கையால் தாங்கிக் கொண்ட ஆர்யா, அவன் முகத்தில் தெரிந்த பழைய காதலின் வலியை உணர்ந்து மேற்கொண்டு எதுவும் கேட்கவில்லை.
வேலை முடிந்து இரவு வீடு திரும்பிய வித்யூவை மோகன் பிடித்துக்கொண்டார். அவனிடம் பேசத் தனி அறைக்கு அழைத்துச் சென்றார்.
"என்ன மாமா, என்ன பேசணும்?"
"உன் வேலை எப்படிப் போகுது வித்யூ?"
"அதுக்கென்ன, நல்லாதானே போகுது! தினமும் வேலையைப் பத்திதானே பேசுறோம், இதுல புதுசா என்ன இருக்கு?" என்று சலிப்பாகக் கேட்டான். அவன் மனம் முழுவதும் மனைவியுடன் அலைபேசியில் செலவழிக்கப் போகும் நேரத்தைப் பற்றியே இருந்தது.
"சரிடா, அப்போ வேற விஷயம் பேசுவோம்... உன் காதலைப் பத்தி சொல்லு," என்றார் மோகன்.
முதலில் அதிர்ந்தவன், பின் சுதாரித்துக் கொண்டு,
"தெரிஞ்சிடுச்சா மாமா?" என்றான் சாதாரணமாக.
"ம்ம்," என்றார் உறுமலாக.
"உன் அக்காவுக்குத் தெரியுமா?"
"இன்னும் இல்லை..."
"அப்போ நீயே சொல்லி எங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வைச்சிடு மாமா! வேலை ஈஸியா முடிஞ்சிடும்," என்றான் வித்யூ.
"என்ன விளையாடுறியா? உனக்கும் பிரணவிக்கும் தான் கல்யாணம்னு சின்ன வயசுல இருந்தே முடிவு பண்ணியிருக்காங்க. அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா? நீ பாட்டுக்குக் காதல், கல்யாணம்னு வந்து நிக்கிற! அதுவும் நம்மகிட்ட வேலை பார்க்கிற ஒரு அனாதைக் கழுதையை! உங்க வீட்ல யாரு அவளை மருமகளா ஏத்துப்பா? இந்த விஷயம் தெரிஞ்சா வீடு ரெண்டாகிடும் தெரியுமா?"
"அதுக்காக நான் காதலிக்கக் கூடாதா? என் மனசுக்குப் பிடிச்ச பொண்ணோடதானே வாழ முடியும். நீங்க சொல்ற பொண்ணோட உங்க இஷ்டத்துக்கு என்னால வாழ முடியாது. எனக்கு பிரணவி மேல எந்த இன்ட்ரஸ்ட்டும் இல்லை. எனக்கு ஆர்யங்காவை பிடிச்சிருக்கு. அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன், யாரு தடுக்கிறாங்கன்னு பார்க்கலாம்," என்றான் ஆவேசமாக.
"யாரும் தடுக்க மாட்டாங்க வித்யூ! ஆனா சொத்துல ஒரு பைசா கூட உனக்குக் கிடைக்காது. அந்தப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, வேலைக்குப் போய் சம்பாதிச்சுதான் நீ வாழணும்!"
"ஏன் எனக்குச் சொத்து கிடைக்காது? அது தாத்தாவோட சொத்துதானே!"
"தாத்தாவோட சொத்து பெருசா எதுவுமில்லை வித்தாச்சி! இப்போ இருக்கிறது எல்லாம் உன் அப்பன் சுயமா சம்பாதிச்சது. நீ அவன் பேச்சைக் கேட்கலைன்னா எல்லாமே உன் தங்கை வினையாவுக்குப் போயிடும்," என்றதும் வித்யூ கலவரமடைந்தான். "என்ன சொல்றீங்க மாமா?"
"முட்டாள்! அந்தப் பிரணவியை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு ரெட்டைச் சொத்து கிடைக்கும், ராஜாவா இருக்கலாம். பிரணவிய வேணாம்னு சொன்னா, அவங்க அம்மா, அதான் உன் அத்தை உன்னை சும்மா விடுவாங்களா? உன் அப்பன் கிட்ட போய்க் கண்ணீர் வடிச்சாலே போதும், அவர் உன்னை என்ன பண்ணுவார்னு தெரியாது. ஒருவேளை வீட்டை விட்டுத் துரத்திட்டா, நீயும் அந்தப் பொண்ணைப் போல அனாதையாத்தான் வாழணும்."
"ஆனா மாமா, என் காதலுக்கு, என் உணர்வுகளுக்கு அங்க மதிப்பே இல்லையா? நீங்களா சின்ன வயசுல பேசி முடிச்சிட்டா நான் என்ன பண்றது? ஆர்யங்காவை உயிருக்குயிரா காதலிக்கிறேன். நாங்க கணவன் மனைவியாவே வாழ ஆரம்பிச்சிட்டோம்," என்றதும் மோகன் பதறினார்.
"அடேய் அவசர புத்தி காரனே! அப்படி என்னடா பெரிய காதல்? சரி, அந்தப் பொண்ணு கர்ப்பமா இருக்காளா என்ன?"
"இன்னும் இல்லை... மே பி வாய்ப்பிருக்கு," என்றதும் அவனை தீயாக முறைத்தார்.
"அப்படி எதுவும் நடக்குறதுக்குள்ள அந்தப் பொண்ணைச் சரி பண்ணி அனுப்பிடு!"
"மாமா! அவளை ஏமாத்தவா காதலிச்சேன்? அவளோட வாழணும் மாமா. அதுக்கு ஏதாவது வழி இருந்தா சொல்லுங்க."
"சொத்து எல்லாத்தையும் துறந்துட்டு நீ வீட்டை விட்டு வெளியே போறதைத் தவிர வேற வழியே இல்லை. என்னடா பெரிய காதல்! சொத்து இருந்தாதான் மதிப்பும் மரியாதையும். காதல் இது ரெண்டையும் தராது. அவளைக் கட்டிக்கிட்டா ஒரு இடத்துல வேலை பார்த்து, மாச சம்பளம் வாங்கி, சின்ன வீட்ல கஷ்டப்பட்டு வாழணும். அந்த வாழ்க்கை வேணும்னா காதலிச்சவளைக் கல்யாணம் பண்ணிக்கோ. இல்ல ஆடம்பரம் வேணும்னா அவளை விட்டு விலகிடு. சொல்ல வேண்டியதைச் சொல்லிட்டேன்," என்று அவர் நகர்ந்தார்.
தெளிவாக இருந்தவன் குழம்பிய குட்டையானான். இரவு முழுக்க மோகன் சொன்னதையே யோசித்துக் கொண்டிருந்தான். ஆர்யாவின் அழைப்பைக் கூட அவன் எடுக்கவில்லை. அவளும் அழைத்து அழைத்துச் சோர்ந்து ஒருகட்டத்தில் உறங்கிப் போனாள்.
மறுநாள் அவன் கண் விழித்தபோது கனவு கண்டிருந்தான் சிறிய பாய், மண் தரை, பக்கத்தில் குழந்தை, மனைவி. அது ஒரு சிறிய ஓட்டு வீடு. தினமும் வெக்கையிலும் வியர்வையிலும் குளித்துக் கொண்டே உறங்கும் அவலம்! நினைக்கவே அவனுக்குச் சகிக்கவில்லை. சட்டென்று எழுந்து அமர்ந்தான். தான் தன் ஆடம்பர அறையில் இருப்பதை உணர்ந்தான்.
கனவே அத்தனை கொடுமையாக இருக்க, மேற்கொண்டு அவனுக்குத் தூக்கம் வரவில்லை.
இங்கே ஆர்யா காலையில் எழும்போதே தலைசுற்றலோடு எழுந்தாள்.
நாட்காட்டியைப் பார்த்தபோது நாட்கள் தள்ளிப் போயிருந்தது. பயத்திற்குப் பதில் அவளுக்குச் சந்தோஷக் கண்ணீர் வந்தது. எழுந்து சமைத்து, இந்த நல்ல செய்தியை இனிப்போடு சொல்ல வேண்டும் என்று இனிப்பு தயாரித்து எடுத்துக் கொண்டு அவனைக் காண ஆர்வமாக வந்தாள்.
ஆனால் அவனது அறையில் அவன் இல்லை, மோகன்தான் இருந்தார். "உடம்பு சரியாகிடுச்சுமா. இனி நானே கம்பெனி பொறுப்புகளைப் பார்க்கப்போறேன்," என்று அவர் கூற, ஆர்யாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. முகம் வாடிப் போனாலும் தன் வேலைகளைச் செய்தாள். அடுத்த இரண்டு நாட்கள் வித்யூவைப் பார்க்கவும் முடியவில்லை, அலைபேசியில் பிடிக்கவும் முடியவில்லை.
வித்யூ வீட்டிலேயே முடங்கிக் கிடந்தான். அவனால் ஆர்யங்காவை இழக்கவும் முடியவில்லை, சொத்தை விடவும் மனமில்லை. காதல் வேண்டும் என்றால் கட்டாந்தரை, சொத்து வேண்டும் என்றால் சுகவாசி. இரண்டில் ஒன்றுதான் சாத்தியம். இரண்டு நாள் தீவிர யோசனைக்குப் பிறகு ஒரு முடிவோடு அவளைப் பார்க்கச் சென்றான்.
அந்த இரண்டு நாட்களில் ஆர்யா தன் கர்ப்பத்தை உறுதி செய்திருந்தாள். வித்யூ தேடி வரவும் கண்ணீரோடு அவனைக் கட்டிக்கொண்டாள். அவனுக்குள் குற்றவுணர்வு இருந்தாலும், அவளை வெளியே அழைத்துச் சென்றான். ஊர் முழுக்கச் சுற்றிவிட்டு, வீட்டிற்குச் செல்லாமல் தன் தனி காட்டேஜிற்கு அழைத்து வந்தாள்.
அவள் ஏதோ சொல்ல வர, அவன் அவள் இதழ்களைச் சிறை செய்து அவளை முழுதாக ஆட்கொண்டான். இரண்டு நாள் பிரிவின் தாபத்தில் இருவரும் ஒன்றிப் போயினர். கிளம்பும் நேரத்தில் அவன் அந்த அதிர்ச்சியான செய்தியைச் சொல்ல, ஆர்யா அங்கேயே நிலைகுலைந்து அழுதாள்.
கல்லாய் நின்றவனைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கியவள், ஒருகட்டத்தில் மயங்கிப் போனாள். கண் விழித்துப் பார்த்தபோது அங்கே அவனில்லை. தான் தனியாக மருத்துவமனையில் இருப்பதை உணர்ந்தாள்