புயல் 11
மருத்துவமனையில் மெல்ல விழிகளைத் திறந்தாள் ஆர்யாங்கா! விழிகளைச் சுழற்றித் தான் இருக்கும் இடத்தைத் அறிய முயன்றாள். 'எங்கே இருக்கிறோம்?!' என்று அவளுக்குப் பிடிபடவில்லை.
'எப்படி இங்கே வந்தோம்?' என்பதும் நினைவில்லை. மயங்கி விழுந்தது மட்டுமே நினைவில் இருந்தது.
விழிகளை இறுக்க மூடித் திறந்து, மெல்ல உடலை நிமிர்த்திப் பின்பக்கம் சாய்ந்து அமர்ந்தாள். அப்போது செவிலியர் உள்ளே வந்தார். ஆர்யா கண் விழித்திருப்பதை கண்டு அவள் அருகே சென்றார்.
"இப்போ எப்படி இருக்கு மா?" என வாஞ்சையாகக் கேட்டார்.
"பரவாயில்லைங்க! கொஞ்சம் தலை மட்டும் சுத்துது!" என்றவள், மேற்கொண்டு அவரிடம், "நான் எப்படி இங்கே வந்தேன்? யார் கொண்டு வந்து என்னைச் சேர்த்தது?" என்று கேட்டாள்.
"ஆபீஸில் வேலை செய்யும்போது நீ மயங்கி விழுந்துட்டன்னு உன் முதலாளிதான் உன்னை இங்கே சேர்த்துவிட்டுப் போனார்."
'முதலாளி' என்று சொல்லித் தன்னை மருத்துவமனையில் சேர்த்துவிட்டுப் போனவனை நினைத்து அழுதாள். அவள் அழுவதைக் கண்டவருக்குப் பரிதாபம் உண்டானது.
அவளது கையை அழுத்திய செவிலியர், "உன் நிலைமை எனக்குப் புரியுது மா! ஆனாலும் என்ன பண்ண முடியும் சொல்லு? உனக்காக இல்லை என்றாலும் உன் குழந்தைக்காக வாழ்ந்துதான் ஆகணும் மா. கணவன் இல்லாம ஒத்தையில குழந்தையை வளர்க்கிறது எவ்வளவு கஷ்டம்னு அனுபவிக்கிற எனக்கும் தெரியும்! அதுவும் இந்தச் சின்ன வயசுல உன் கணவர் உன்னை விட்டு அல்பாயுசுல போய் சேரணும்னு விதி இருந்திருக்கு போல!" எனப் புலம்பினார்.
அவரைப் புரியாமல் பார்த்தாள் ஆர்யாங்கா!
"உன் முதலாளிதான் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்தார். கழுத்தில் தாலி இல்லாமல் கர்ப்பமாக இருப்பதைப் பார்த்து டாக்டரம்மா உங்க முதலாளியைச் சந்தேகமாகப் பார்த்தாங்க. உடனே அவரும், 'உங்க கணவர் கார் ஆக்சிடென்ட்டில் இறந்துட்டாரும், உனக்கு யாருமில்லை'னும் சொல்லிட்டுப் போனார் மா."
வித்யூ மருத்துவரிடம் இவ்வாறு சொன்ன பிறகுதான் சிகிச்சையைத் தொடங்கினார் மருத்துவர்.
அவளோ விரக்தியாகப் புன்னகைத்தாள்; மாறாகக் கண்களில் நீர் வழிந்தது. "என்னை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணுவீங்க?"
"இந்த பாட்டில் முடிந்ததும் வீட்டுக்குப் போயிடலாம். டாக்டர் கொடுக்கிற டேப்லெட்டைச் சரியாப் போடு! இனி உன் பிள்ளைக்காக நீ வாழணும்," என்ற அறிவுரை வழங்கிவிட்டுச் சென்றார்.
கண்களை மூடி அப்படியே சாய்ந்தாள்; கண்களில் நீர் வழிவது மட்டும் நின்றபாடில்லை.அவனிடம் பேசியதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக நினைவுக்கு வந்தது.
மோகன் பேசிவிட்டுச் சென்ற பின், இரண்டு நாட்கள் அவளைப் பாராமல், அறைக்குள் அடைந்து கிடந்தான் வித்யூ.
அவனால் ஆர்யாங்காவை விட்டுப் பிரியவும் முடியாது அவளுக்காக வீட்டை எதிர்த்து நிற்கவும் முடியாது.
இரண்டும் வேண்டும் என்று மனம் பேராசை கொள்ள... ஒன்றைத் தான் அடைய முடியும் என்று மூளை தீர்க்கமாகச் சொல்லிவிட்டது. காரணம் அவனது வீட்டுச் சூழ்நிலை.
வித்யூவின் தந்தைக்கு அவரது தங்கைகளுக்கு தான் முதலிடம் தருவார், பிறகுதான் அவரது குடும்பம். இதை அவன் கண்கூடாகப் பார்த்து வளர்ந்தவன். அத்தை சிறு கண்ணீர் விட்டாலே, நண்பன் என்று பாராமல் சேவலைப் போல மௌலியிடம் சிலிர்த்து நிற்பார் மேகன்.
மகளென்றால் உயிரையே வைத்திருக்கும் அத்தை; அவள் கண்ணீர் விட்டாலே அதற்குக் காரணமானவரின் உடலில் நீர்ப்பசை இல்லாமல் செய்துவிடுவார் ராஜேஸ்வரி.
பிரணவியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை; தனக்கு வேண்டியதை எப்படியாவது அடைந்தே தீர்வாள். அது கிடைக்கவில்லை என்றால் அழித்தே விடுவாள். இப்படியானவர்களிடம் தன் காதலைச் சொல்லி ஏற்றுக்கொள்ளச் சொல்வதெல்லாம் முதலையிடம் சமாதானம் பேசுவது போன்றதுதான்.
இதையும் தாண்டி வீட்டை எதிர்த்து அவளைத் திருமணம் செய்துகொண்டால், நிச்சயம் சொத்து பறிபோகும் என்பது உறுதி.
ராஜா வீட்டுக்கன்று போல வளர்ந்தவன், வெறும் தரையில் தூங்குவதா? அஞ்சுக்கும் பத்துக்கும் வேலைக்குச் செல்வதா என்று நினைக்கும்போதே...
ஆர்யாவுடன் வாழப்போகும் அந்த வாழ்க்கையில் காதல் தொலைந்து நரகமாக மாறிவிடும் என்பதில் உறுதியாக இருந்தவன், அவளை விட்டுப் பிரிய முடிவெடுத்தான்.
அடுத்த நொடியே அவளோடு இணைந்து ஊனும் உணர்வுமாக வாழ்ந்த நாட்கள் நினைவிற்கு வர, அந்த முடிவையும் கைவிட்டு இப்போது சரியான முடிவெடிவை முடியாதவனாக நொந்து போனான்.
காதலா? சொத்தா? என மூளையும் மனதும் பட்டிமன்றம் நடத்தியது. ஆனால் கடைசி வரை பதிலெதுவும் கிடைக்காமல் பாதி இரவில் உறங்கிப் போனான் வித்யூ.
மறுநாளும் முழுவதுமாக யோசித்தவன், ஒரு முடிவெடுத்தவனாக அவளைப் பார்க்கச் சென்றான்.
வாந்தி, மயக்கம், சோர்வு என இருந்தாலும், 'இன்றாவது அலுவலகம் வந்திருக்க மாட்டானா? அவனிடம் இந்த விஷயத்தைச் சொல்லிவிட மாட்டோமா?' என்று ஆவலாக அலுவலகம் செல்ல கிளம்பினாள்.
ஆனால் அதெல்லாம் வீணாகப் போகிறது என்று அறியாமல் அலுவலகம் செல்ல மெல்ல நடந்தாள்.
அவளை வழிமறித்து நின்றது அந்த உருவம். யாரென நிமிர்ந்து பார்த்தவளுக்குக் கண்கள் உடைப்பெடுத்தாற்போல கண்ணீர் சிந்தியது. அவளது கண்ணீரைக் கண்டு அவனுக்கும் ஒரு மாதிரி ஆகிப்போனது.
அவனை கண்டதும் அணைக்கத் துடித்த கைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கோபமாக அவனைத் தாண்டிச் சென்றாள்.
"யங்கா?!! என்னைத்தாண்டி எங்கேடி போற?"
"வேலைக்குப் போறேன்," என அவனைப் பாராமல் வேகமாக நடந்தாள்.
"முதலாளி நான் இங்கே இருக்கும்போது, நீ யாருக்குடி வேலை பார்க்கப் போற?" என நக்கலாக வினவினான்.
"முதலாளி எங்கிருந்தாலும் எனக்கு வேலை அங்கேதான்..." என்று முன்னேறி நடக்க, அவள் கைகளைப் பற்றியவன், "ப்ச்!!! சும்மா வாடி," என இழுத்துக்கொண்டு காரில் அமர வைத்து அங்கிருந்து கிளம்பினான்.
அவளோ எதுவும் பேசாமல் ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்தபடி வந்தாள். நொடிக்கு ஒருமுறை அவளைத் திரும்பிப் பார்த்துக்கொண்டே காரை ஓட்டினான். அவளோ கோபமாக அவன் பக்கம் திரும்பாமல் வெளியே வெறித்தபடி இருந்தாள்.
அவள் முகத்தை மறைத்த கூந்தல் முன்னே வந்து விழ, அதைக் காதோரம் ஒதுக்கி விட்டவனின் கையைத் தட்டி விட்டாள்.
"ப்ச்! இப்போ எதுக்கு என் மேல கோபமா இருக்க?"
"சொன்னால் மட்டும் அந்த கோபத்துக்கு நியாயம் கிடைச்சிருமா?"
"அப்படி என்ன என் மேல கோபம்? சொல்லு, உனக்கு நியாயம் கிடைக்க நான் அட்வகேட் ரெடி பண்றேன்," என்றதும் அவன் புஜத்தில் நறுக்கெனக் கிள்ளி வைத்தாள்.
"ஆ... ஏண்டி?" எனப் புஜத்தைத் தேய்த்தபடி கேட்டான்.
"ரெண்டு நாள் எங்கே போயிருந்த? என்னைச் பார்க்காம, என்கிட்ட பேசாம எப்படி இருக்க முடிஞ்சது உன்னால? உன்னைப் பார்க்காம பேசாம தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? எங்கேடா போன?" எனப் பல அடிகளைக் கொடுத்தாள். அவனுக்கோ ஒரு மாதிரி ஆகிவிட்டது. பதில் பேசாது அவள் கொடுத்த அடிகளை வாங்கிக்கொண்டான்.
"எங்கே போன? ஏன் என்கிட்ட பேசலை?"
"மாமா தான் குமளிக்கு அனுப்பி வைச்சார். இது கொஞ்சம் சீக்ரெட் டீலிங் போல, யார்கிட்டயும் எங்கே போறேன்னு சொல்லக் கூடாதுன்னு சொல்லிட்டார். இரண்டு நாள் உன் கூடப் பேச முடியாம, உன்னைப் பார்க்க முடியாம எவ்வளோ தவிச்சேன் தெரியுமா? எனக்குப் போகப் பிடிக்கலைதான், ஆனாலும் அவர் பேச்சை மீற முடியாம போயிட்டேன். சாரி," என்றான்.
அவன் சொல்வது உண்மை என்று அவளும் நம்பிவிட்டாள். அவன் தோளில் வாகாய்ச் சாய்ந்து கொண்டவள், "உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் வித்யூ! நீ இல்லாமல் இந்த ரெண்டு நாள் நரகம் போல இருந்தது. எனக்கு உன் கூடவே இருக்கணும்... கணவன் மனைவியா ஒரே வீட்டில் வாழணும். எப்போ நம்ம காதலை வீட்டில் சொல்லுவ?" என அவனது சட்டையைத் திருகியபடி கேட்டாள்.
அவனோ பதில் சொல்லத் தடுமாறினான். எச்சில் கூட்டி விழுங்கியபடி ஏதோ சொல்ல வருவதற்குள் அவர்கள் தங்க வேண்டிய காட்டேஜ் (Cottage) வந்தது.
இருவரும் இறங்கிக் கொண்டனர்.
அவளை அறைக்குள் அழைத்துச் சென்ற நொடியே அவளைப் பேசவிடாமல் முகத்தை ஏந்தி முத்தச் சிறை செய்தவன், அவளைக் கட்டிலில் கிடத்தி மேலே படர்ந்தான். அன்று முழுதும் அவளுடன் ஒன்றி இருந்தான். இரவில் தான் இருவரும் கண் விழித்தனர். வெளியே ஊர் சுற்றி விட்டு, மீண்டும் வந்து உறக்கத்தைத் தழுவினர்.
மறுநாள் ஊர் சுற்றிவிட்டு இல்லம் வந்தவளை முத்தாடினான். அவனைத் தள்ளி நிறுத்தினாள்.
"வித்யூ! என்னைச் பேசவிடாமல் வாயோடு சேர்த்து எல்லாத்தையும் அடைச்சிடுற... எப்போதான் நான் சொல்ல வர்றதைக் கேட்கப் போற நீ?"
"சரி சொல்லு! என்ன சொல்லணும் உனக்கு?" என்றான் கைகளைக் கட்டிக்கொண்டு.
சட்டென முகம் சிவந்து வெட்கம் கொண்டு தலைகுனிந்தாள். "என்னடி வெட்கமெல்லாம் படுற! நீ சொல்றதைக் கேட்கச் சொல்லிட்டு இப்படிக் வெட்கப்பட்டால் ஆச்சா? எப்படி என்னால கேட்க முடியும்? எனக்கு வேற மூட் மாறுது," எனச் சொல்லிக் கொண்டே விரல்களை அவள் மேனியில் படர விட்டான்.
"ப்ச் வித்யூ! ப்ளீஸ்," அவன் விரலைப் பிடித்துச் சிணுங்கியவள், "நீங்க அப்பாவாகப் போறீங்க! நான் உங்க குழந்தையைச் சுமக்கிறேன்," என வெட்கச் சிரிப்புடன் சொன்னாள்.
அதிர்ந்து போனவன், இவ்வளவு தூரம் அவளோடு இணைந்து விட்டதை நினைத்து இப்போது தன்னை மனதிற்குள் திட்டிக்கொண்டான்.
பின் அவள் கர்ப்பத்தைக் காரணம் காட்டித் தன் வழிக்கு அவளை வரவழைத்துவிடலாம் எனத் தப்புக் கணக்கு போட்டுவிட்டான்.
"ஹே யங்கா! நிஜமாவா?!!" என அவள் முகத்தை ஏந்தி முத்தங்களை வாரி இரைக்க, இவளோ பூரித்துப் போனாள். அவளைப் பொறுத்தவரை வித்யூ அவளது கணவன். கணவன் மனைவியாக அவர்களது ஆத்மார்த்த காதலுக்குப் பிறக்கப் போகும் குழந்தை என எண்ணிக் கொண்டிருக்கிறாள்.
திருமணத்திற்கு முன் குழந்தையைச் சுமக்கிறோம் என்ற எண்ணம் அவளுக்கு இல்லை. காரணம், அந்தப் பழங்குடியினரைப் போல அவர்கள் வழக்கப்படித் தாலி கட்டி, இருவரும் ஒருவரை ஒருவர் கணவன் மனைவியாக நினைத்து ஒன்றோடு ஒன்றாகக் கலந்தனர். அதனால் அவளுக்குக் கலக்கம் இல்லை. வித்யூ தன்னைத் திருமணம் செய்துகொள்வான் என்று கண்மூடித்தனமாக அவனை நம்புகிறாள். இன்னும் சில நொடிகளில் அவளது நம்பிக்கை உடையப் போகிறது என்று அறியாமல்...
"டாக்டர்கிட்ட போனியா?"
"நீ இல்லாம எப்படிப் போறது?"
"முன்னாடியே சொல்லி இருக்கலாமே! போயிருக்கலாம் தானே!" என்றவனை இடையில் கை வைத்து முறைத்தாள்.
"ஓகே ஓகே என்னோட தவறுதான் சாரி," என ஒரு கண்ணை மட்டும் மூடி உதட்டை கடித்து மன்னிப்பு கேட்ட அழகில் மயங்கித்தான் போனாள் பெண்ணவள்.
"சரி சரி இப்படி வந்து உட்கார், உன்கிட்ட கொஞ்சம் பேசணும்," என்று அவளை மெத்தையில் அமர்த்தித் தானும் அமர்ந்தான். அவளது இரு கைகளையும் தன் கைகளுக்குள் பொத்தி வைத்துக் கொண்டான்.
"என்னங்க?"
"யங்கா! அது வந்து..." எனத் தயங்கியவன் பின், "எங்க மாமாவுக்கு நம்ம லவ் பண்றது தெரிஞ்சிடுச்சு," என்றான். முதலில் அதிர்ந்தவள் பின், "நல்லதுதானே! அவரை வைச்சு வீட்டில் பேசச் சொல்லலாமே!" என்றாள் ஆவலாக.
"அங்கே தான் ஒரு சிக்கல்!"
"என்ன சிக்கல்?" என்றாள். அவனும் வீட்டின் நிலவரத்தைச் சொன்னான்.
"இப்போ உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவாங்க! சொத்தில் எனக்குப் பங்கே கிடைக்காது. அவங்க சொல்ற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா எனக்கு ரெண்டு சொத்து கிடைக்கும்," என்றான்.
"அதனால..." என்றவள் அவன் கைகளிலிருந்து தன் கைகளை உருவிக்கொண்டாள்.
இவனும் வேகமாக அவளது கைகளைப் பற்றிக்கொண்டு, "ஹே! நிச்சயமா உன்னை கைவிட மாட்டேன் யங்கா!" என்று அவளது கைகளை அழுத்தினான்.
"அப்போ என்ன பண்ணப் போறீங்க?" எனச் சந்தேகமாகக் கேட்டாள். அவனோ எச்சில் விழுங்கிச் சொல்ல வருபவற்றைச் சொல்லத் தயங்கினான். அவளும் புரிந்துகொண்டு, "பிரிஞ்சிடலாம்னு சொல்லப் போறீங்களா?"
"நிச்சயமா இல்லை! நான் என்ன சொல்ல வர்றேன்னா..." என்றவனால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
அவன் சொல்லத் தயங்கும் விஷயத்தை ஊகித்துக் கொண்டவள் அவனிடம்,
"என்ன, உங்களுக்கு வப்பாட்டியாக இருக்கணுமா?" என முகத்தில் அடித்தாற்போல கேட்டாள்.
"யங்கா!" என்று அவளை அணைக்க வர, அவன் கைகளைத் தட்டிவிட்டு எழுந்து நின்றுகொண்டாள்.
"சொல்லுங்க வித்யூ! என்னை வப்பாட்டியா வைச்சுக்கிறேன் தானே சொல்ல வந்தீங்க! உங்க பக்கத்தில் இருந்தால் பணம் கிடைக்கும், சுகம் கிடைக்கும்; ஆனா பொண்டாட்டிங்கற அங்கீகாரம் மட்டும் எனக்குக் கிடைக்காது. நானும் என் பிள்ளையும் ஊர் பேச அசிங்கப்பட்டு வாழணும்! அப்பன் பேர் வெளியே சொல்ல முடியாம நானும் என் குழந்தையும் தவிக்கணும்! அவனை அப்பன் பெயர் தெரியாதவன்னு ஊர் சொல்லணும்... ஆனாலும் அதைப் பற்றிக் கவலைப்படாம எங்களுக்குத் தேவையானதைச் செஞ்சுட்டு, என்னோட குடும்பம் நடத்திட்டு போவீங்க... அதானே!" என்றதும் அவன் தலைகுனிந்தான்.
"இதுக்கு நீங்க காதல்ன்ற பெயர்ல என்னைத் தொட்டு விபச்சாரியாக்கிட்டீங்கல்ல வித்யூ!"
"யங்கா! வார்த்தையை அளந்து பேசு! என் காதலைக் கொச்சப்படுத்தாதே!" என்றான் அவளைப் பாராமல்.
"ஓ...! ஆனா அப்படிப் புனிதமான காதல்னா எதுக்கு உன் வீட்டில் சொல்லாமல் மறைக்கணும்? வீட்டில் சொல்லி என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதுதானே!"
"உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா சொத்து இல்லாம நடுரோட்டில் தான் நிக்கணும்..."
"எனக்கு உங்களோட சொத்து வேண்டாம்; உங்க கூடக் குடிசையில் வாழ்ந்தால் கூட எனக்குச் சந்தோஷம்தான்ங்க..."
"நீ குடிசையில் வாழ்ந்து பழகினவடி! என்னையும் உன்னோட சேர்த்துச் குடிசையில் வாழச் சொல்றியா? கனவில் கூட நினைச்சுப் பார்க்க முடியாது! எனக்கு வர வேண்டிய இரட்டைச் சொத்தை இழந்து குடிசையில் வாழச் சொல்றியா? போடி!" என்றான்.
அவனை வெறித்தவள், "குடிசையில் இருக்கேன்னு தெரிஞ்சு தானே என்னைக் காதலிச்சீங்க! நமக்குள்ள இருக்கிற ஏற்றத்தாழ்வைச் சொல்லிக் காட்டும்போது, காதல் தான் பெருசு, நீ மட்டும் போதும்னு தானே சொன்னீங்க! அப்போ தெரியலையா உங்களுக்கு இரட்டைச் சொத்து வரப் போகுதுன்னு! ஆக மொத்தம் என்னை அடையக் காதல்ன்ற பெயரில் ஒரு டிராமா? உங்க மேல எந்தத் தப்பும் இல்லை; என்னைச் சொல்லணும். உங்களைப் போலப் பணக்காரனை நம்பினேன்ல, என்னைச் சொல்லணும்..." என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
"என்னடி ரொம்பப் பேசுற? என் காதல் உனக்குப் போலியா தெரியுதா?"
நக்கலாகச் சிரித்தவள்,
"பின்ன இன்னமும் புனிதமா பார்க்க நான் என்ன முட்டாளா?"
"என்னடி பிரச்சனை உனக்கு? மத்தவங்க போல உன்னை அனுபவிச்சுட்டு உன்னை விட்டுப் போறவன்னு நினைச்சியா? சுகவாசியா இருக்க உனக்கு எல்லாம் செய்றேன், உன்னை பார்த்துக்கிறேன்னு தானே சொல்றேன்! மேடம் வேற என்ன எதிர்பார்க்கிறீங்க?"
"இன்னும் புரியலையா? எனக்கு உங்க சொத்தை விடப் பொண்டாட்டிங்கற அங்கீகாரம் வேணும்; கிடைக்குமா?" என்றதும் அவன் வாயை மூடிக்கொண்டான்.
கேலியாக இதழை வளைத்தவள், வெளியே செல்ல எத்தனிக்க, கைகளைப் பிடித்துக்கொண்டு, "எங்கே போற?" என்றான்.
"அதைப் பற்றி உங்களுக்கு என்ன கவலை? நான் எங்கே வேணும்னாலும் போவேன்!" என்று திமிறிக்கொண்டே செல்ல, மீண்டும் கைகளைப் பிடித்துக்கொண்டு,.
"என்னடி ரொம்பப் பண்ற? கழுத்தில் தாலி இல்லை, வயிற்றில் பிள்ளை இருக்கு; ஊர் என்ன பேசும் தெரியுமா? உன்னால் நான் தான் காரணம்னு ஊர்கிட்ட சொல்ல முடியாது! என்னை வளைச்சுப் போடத் திட்டம் போடுறேன்னு சொல்லுவேன். குழந்தை என்னோடதுன்னு நிரூபிக்க நினைச்சாலும் முடியாது. நீதான் அவமானப்படுவ! அதுக்கு நான் சொல்றதை நீ செஞ்சா கொஞ்சம் வசதியா வாழலாம்," என்றான்.
"ச்சீ த்தூ... உன்னைப் போலக் காதலைக் கொன்னுட்டுச் சுகவாசியா வாழணும்னு அவசியம் எனக்கு இல்லை. எப்படி வாழ்ந்தாலும் எனக்குத் தான் அவமானம். என்னால் தனியா நின்னு கூடச் சமாளிக்க முடியும். ஆனா வப்பாட்டியா ஒருநாளும் வாழ முடியாது," என வேகமாக முன்னேறி நடந்தவளிடம்,
"போடி போ... நீ எப்படித் தனியா வாழறன்னு நானும் பார்க்கிறேன். எப்படி இருந்தாலும் நீ என்கிட்ட வருவடி, நீ சொல்றபடியே இருக்கேன்னு என் கால்ல வந்து விழுவடி," எனத் திமிராகப் பேச, அவள் நடை நின்றது.
திரும்பியவள் வேகமாக அவன் அருகே வந்து நின்றாள். அவனோ நக்கலாகச் சிரித்தான். பளாரென்று கன்னத்தில் அடித்தாள். அதிர்ச்சியில் கன்னத்தில் கை வைத்தபடி பார்த்தான். மறு கன்னத்திலும் அடித்தவள், சரமாரியாக அவன் நெஞ்சில் அடித்தவள் அப்படியே மயங்கிச் சரிந்தாள்.
மருத்துவமனைக்கு அவளைத் தூக்கிச் சென்றான். சிறிய கிளினிக் அது. ஆர்யாங்காவைப் பரிசோதித்த மருத்துவர், அவள் கழுத்தில் தாலி இல்லை என்றதும் சந்தேகமாக வித்யூவைப் பார்க்க, அவனோ சமீபத்தில் அவளது கணவன் இறந்துவிட்டதாகவும், தனியாக இருக்கும் பெண் வேலை செய்யும் இடத்தில் மயங்கிவிட்டதாகவும், இங்கு அழைத்து வந்ததாகவும் பொய் சொன்னான். அவரும் நம்பிச் சிகிச்சை செய்து, அவளது உடல் நலத்தையும் குழந்தையின் ஆரோக்கியத்தையும் சொன்னார். அவனோ அவளை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான்.
மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தவள் முழு மூச்சாக அழுது தீர்த்தாள். இவ்வூரை விட்டுப் போக முடிவு செய்தவள், மறுநாளே மோகன் முன் நின்று ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தாள்.
சந்தோஷமாக வாங்கிக்கொண்டவர், "நல்ல முடிவு மா," என்றார் பக்கத்தில் நின்றிருந்த வித்யூவைப் பார்த்து.
அவளோ விரக்தியாகச் சிரித்துவிட்டு வெளியேற, அவளைப் பின்தொடர்ந்தவன், மறைவாக அழைத்துச் சென்று, "அப்போ அவ்வளவுதான் உன் காதலா! என்னை விட்டு மேடம் போய் என்ன பண்ணப் போறீங்க? குழந்தையை வைச்சுட்டுப் பிச்சை எடுக்கப் போறீங்க, அப்படித் தானே!" என்றான்.
"நான் ஏன் பிச்சை எடுக்கணும்? நான் படிச்சிருக்கேன். குழந்தையைப் பார்த்துக்கிட்டு என்னால் வாழ முடியும்... உன் தயவில் கேவலமான வாழ்க்கையை வாழ்றதை விட, தனியா வாழ்வது எவ்வளவோ மேல்," என்று தன்னம்பிக்கையோடும் திமிரோடும் பேசிச் செல்பவளை இளக்காரமாகப் பார்த்துவிட்டு நகர்ந்தான்.
நடந்த அனைத்தையும் அழுதுகொண்டே சொல்லி முடிக்க, அதிர்ச்சியின் பிடியில் இருந்தான் பிருத்வி.

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 11
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.