புயல் 8
கேரள மாநிலம் இடுக்கியில்தான் ஆர்யாவை முதல்முறையாகப் பார்த்தான் பிருத்வி. அதுவும் அவள் தற்கொலைக்கு முயன்றபோது, அவளைக் காப்பாற்றியது அவன்தான்.
இடுக்கியின் சுற்றுலாத் தலமான தொம்மன்குத்து நீர்வீழ்ச்சியில், காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்வது போலப் பயணித்து நீர்வீழ்ச்சியில் குளிக்கலாம். தனியாளாகச் சுற்றுலா வந்த பிருத்வி, தொம்மன்குத்து நீர்வீழ்ச்சிக்கு வந்திருந்தான்.
அங்குதான் ஆர்யாவைக் கண்டான். அவளும் அங்கே நீரோடு நீராகக் கலந்திட வேண்டும் என்ற நோக்கில் பயணித்துக் கொண்டிருந்தாள்.
எல்லாரும் குடும்பமாக வந்திருக்க, இவள் மட்டும் தனியாளாக நடந்து வந்தாள். அவனது பார்வையில் ஏனோ அவள் வித்தியாசமாகத் தெரிந்தாள். அடிக்கடி அவளைக் கவனித்தபடியே வந்தான்.
அனைவரும் நீர்வீழ்ச்சியில் குளித்துக் கொண்டிருக்க, இவள் மட்டும் ஒரு பாறையில் அமர்ந்து எங்கோ வெறித்துப் பார்த்திருந்தாள். அவளது கண்கள் அவ்வப்போது கண்ணீரைச் சிந்தின. பின் அழுத்தமாகத் தன் கண்களைத் துடைத்தவள், சட்டென முடிவெடுத்தவளாக ஆபத்தான பகுதியை நோக்கிப் பாறைகளைத் தாண்டிச் சென்றாள்.
அவள் நோக்கம் புரிந்தவனாக வேகமாக அவள் பின்னே சென்றான் பிருத்வி. அவன் கணித்தது போலவே அவள் தற்கொலை செய்யத்தான் சென்றாள். அதற்குள் அவளைப் பிடித்து இழுத்தவன், ஓங்கி ஓர் அறை விட்டு அங்கிருந்து தரதரவென இழுத்து வந்தான்.
ஆட்கள் இல்லாத இடத்திற்கு அவளை அழைத்து வந்தான். பிருத்வி ஈரம் சொட்டச் சொட்ட உள் பனியனும் ஷார்ட்ஸும் மட்டும் அணிந்திருந்தான். அவனது முகத்தைப் பார்க்கத் துணிவின்றித் தலைகுனிந்தபடி அமர்ந்து உடல் குலுங்க அழுதாள் ஆர்யா.
"உனக்கு அறிவுன்னு ஒண்ணு இருக்கா? எதுக்காகச் சாகப்போன? அப்படி என்ன வாழ்க்கையை வெறுத்துட்ட? என்ன பிரச்சனை உனக்கு?" என்று அதட்டினான்.
நிமிர்ந்து பார்த்தவள், "என்னைக் காப்பாற்றியதற்கு நன்றி சார். நான் கிளம்புறேன்," என்று கூறி எழ முயன்றவளை, கைப்பிடித்துத் தன் பக்கம் இழுத்தான். அவள் அவன் மீது மோதி நின்றாள்.
"பேசிட்டு இருக்கும்போது எங்க போற? எதுக்காக இப்படி செஞ்சன்னு உண்மையைச் சொல்லு! இல்லன்னா நீ தற்கொலை முயற்சி செஞ்சதை போலீஸ்கிட்ட சொல்லி, அவங்க மூலமா உண்மையை வாங்க வைப்பேன். எது உனக்கு வசதி?" என்றவனை அரண்டு போய் பார்த்தவள், அழுதுகொண்டே உண்மையைச் சொல்ல ஆரம்பித்தாள்.
ஆர்யாவின் கடந்த காலம்:
இடுக்கியில் தன் பாட்டி வள்ளியுடன், மற்ற தமிழ் குடும்பங்களுடன் இணைந்து வாழ்ந்து வந்தாள் ஆர்யா. அங்கே 'எம்.எம். கம்பெனி', "எம்.எம். ஸ்பைஸ் கார்டன்" என்ற பெயரில் பெரிய தோட்டங்கள் அமைத்து மிளகு, ஏலக்காய், சுக்கு, இலவங்கப்பட்டை போன்றவற்றை அறுவடை செய்து ஏற்றுமதி செய்து வந்தது.
அந்தத் தோட்டத்தில்தான் ஆர்யாவின் பாட்டியும் வேலை செய்தார். அவர் மூலமாக ஆர்யாவின் படிப்புச் செலவுகளைக் கம்பெனியே ஏற்றுக்கொண்டது. அவள் படித்து முடிக்கும் தருவாயில் பாட்டி இறந்துவிட, அவர் பல வருடங்களாக வேலை செய்த காரணத்தினால் ஆர்யாவுக்கே அங்கே வேலை கிடைத்தது.
பார்வதியின் தம்பியான மோகன் தான் அந்தத் தோட்டங்களைப் பராமரித்து வந்தார். அவர் ஆர்யாவைத் தன் பி.ஏ-வாக (P.A.) நியமித்திருந்தார். அவர் இருக்கும் வரை அவளது வாழ்க்கை சீராகச் சென்றது. ஆனால், புயலென வித்யூ வந்த பிறகுதான் எல்லாம் தடுமாறியது.
மோகனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவரது பொறுப்பை ஏற்க வித்யூ வந்தான். மேலாளர் ஆர்யாவை அவனிடம் அறிமுகம் செய்து வைத்தார். பார்த்த நொடியிலேயே அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு உண்டானது. ஆர்யாவின் அடக்கமான சிரிப்பு வித்யூவிற்குப் பிடித்திருந்தது.
வேலை விஷயமாக எங்கு சென்றாலும் அவளை அழைத்துச் சென்றான். ஆர்யா வேலையில் காட்டிய நேர்த்தியை அவன் பலமுறை பாராட்டியிருக்கிறான். அவள் மீது இருந்த ஈர்ப்பு காதலாக மாறியது. ஆனால் ஆர்யாவோ, அவன் தனது முதலாளி என்ற எல்லையைத் தாண்டாமல் விலகியே நின்றாள். அவளது அந்தத் தன்மையும் அவனுக்குப் பிடித்திருந்தது.
இதற்கிடையில், ஆர்யாவை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய அவளது தூரத்துச் சொந்தம் ஒன்று பெண் கேட்டு வந்தது. செய்வதறியாது திகைத்தவளுக்கு, பக்கத்து வீட்டு அரசி அக்கா ஆதரவாக நின்றார்.
"உனக்கு இன்னும் வாழ்க்கை இருக்கிறது, ஏன் இரண்டாம் தாரமாகச் செல்ல வேண்டும்?" என்று அவர்களை அனுப்பி வைத்துவிட்டு, தானே நல்ல மாப்பிள்ளை பார்ப்பதாகப் பொறுப்பேற்றார்.
இந்தச் சம்பவத்தால் மனமுடைந்து சோகமாக இருந்த ஆர்யாவிடம் வித்யூ காரணம் கேட்க, அவளும் நடந்ததைக் கூறினாள். அதைக் கேட்டதும் வித்யூவிற்கு ஆத்திரம் பொங்கியது.
"ஷீட்! கேட்க ஆள் இல்லைன்னா உன்னை இரண்டாம் தாரமாக் கேட்டு வருவாங்களா? நீ ஏன் என்னைக் கூப்பிடல? நான் வந்து அவங்களை நார்நாராக் கிழிச்சிருப்பேன்!" என்று பற்களைக் கடித்தான்.
அவளோ விரக்தியாகச் சிரித்தாள். "எதுக்குச் சிரிக்கிற?" என்று அவன் கேட்க,
"என்கிட்ட நகையோ, சொத்தோன்னு சொல்லிக்க எதுவும் இல்லை சார். என் படிப்பைத் தவிர வேற என்ன இருக்கு? வரதட்சணை இல்லாம யாரு சார் என்னைக் கல்யாணம் பண்ணிப்பாங்க? அப்படி யாராவது வந்தா இப்படித்தான் இரண்டாம் தாரமாகக் கூப்பிடுவாங்க. பேசாம வந்தவரை கல்யாணம் பண்ணிட்டு, அந்தப் பிள்ளைகளைப் பார்த்துக்கிட்டு ஒரு குடும்பமா வாழ்ந்திடலாமோன்னு தோணுது சார்," என விரக்தியின் விளிம்பில் பேசினாள்.
"ஷட் அப் யங்கா!" என்று கத்தினான் வித்யூ. அவள் திடுக்கிட்டுப் பார்த்தாள்.
"வரதட்சணை இல்லாம நீ மட்டும் போதும்னு சொல்றவன் உன்னைத் தேடி வருவான். உன் வாழ்க்கை உன் கண் முன்னாடியே இருக்கு, நீதான் அதைக் கண்டுபிடிக்கணும்," என்றான்.
அவளுக்குப் புரியவில்லை. "காமெடி பண்ணாதீங்க சார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம என்னை யாரு கல்யாணம் பண்ணிப்பா?" என்று அவள் கேட்க,
கோபத்துடன் அவள் விழி பார்த்துச் சொன்னான், "வருவேன்டி! உன்னைக் கல்யாணம் பண்ணிக்க நான் வருவேன்! எனக்கு நீ மட்டும் போதும் யங்கா. எனக்கான காதலை நீதான் தரணும். ஐ லவ் யூ ஆர்யங்கா!"
ஆர்யா திகைத்துப் போனாள். "உடனே பதில் சொல்ல வேண்டாம், யோசிச்சுச் சொல்லு," என்று அவள் கன்னத்தைத் தட்டிவிட்டுச் சென்றான் வித்யூ.
அன்று மாலை வீடு திரும்பியவள், தன் வீட்டிற்கு முன் நின்றபடி அங்கிருந்த உயரமான அலுவலகத்தையும், வித்யூவின் பிரம்மாண்டமான இல்லத்தையும் பார்த்தாள். அந்த உயரமே அவர்களுக்கிடையே இருந்த இடைவெளியைச் சொல்லியது. ஏணி வைத்தால் கூட எட்டாத உயரத்தில் இருக்கும் அவனுக்குக் காதல் என்பது ஒரு விஷயமாகத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவளுக்கோ அதுதான் வாழ்வாதாரம்.
தகுதிக்கு ஏற்ற ஒருவன், அளவான சம்பாத்தியம், சின்னதாக ஒரு வீடு, கணவன், குழந்தை என வாழ நினைப்பவளுக்கு, இந்தப் பணக்கார காதல் தகுதிக்கு மீறியதாகத் தோன்றியது. மூளை எச்சரிக்க, மனமோ சஞ்சலப்பட்டது. இறுதியில் மூளையின் பேச்சைக் கேட்டு அவனிடமிருந்து ஒதுங்கத் தீர்மானித்தாள்.
அடுத்த நாள் முதல் மிக இறுக்கமாகப் பழகினாள். ஒரு வாரம் அவளைக் கவனித்த வித்யூ, அவள் ஒதுங்குவதை உணர்ந்து நேராகவே கேட்டுவிட்டான்.
"யங்கா, என் காதலைச் சொல்லி ஒரு வாரமாச்சு, இன்னும் பதில் இல்லையே ஏன்?"
"பதில் வராதப்பவே உங்களுக்குப் புரியலையா சார்? எனக்கு உங்க காதல் வேண்டாம்," என்றாள் கறாராக.
"ஏன்? நான் ஏமாத்திடுவேன்னு பயமா?"
"இல்லை சார். காதலைத் தாண்டி நமக்குள்ள இருக்குற வித்தியாசத்தைப் பாருங்க," என்றவள்,
ஜன்னல் அருகே அவனை அழைத்துச் சென்றாள். உயரத்தில் இருந்த அவன் வீட்டையும், பள்ளத்தில் இருந்த தன் வீட்டையும் காட்டினாள். "ரெண்டுமே சமமான தளம் இல்லை சார். உங்க தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிக்கோங்க," என்று தெளிவாகச் சொல்லிவிட்டுச் சென்றாள்.
ஆனால், நிராகரிப்பு வித்யூவின் அகங்காரத்தைத் தூண்டியது. அவளை எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டான். ஆர்யாவோ பிடிவாதமாக மறுத்து வந்தாள். ஆனால், ஒரு குறிப்பிட்ட நாளில் அவன் செய்த காரியத்தைக் கண்டு அதிர்ந்தவள், அனைத்தையும் மறந்து அவனிடம் தன் காதலைப் பகிர்ந்தாள்.
தன் சதித்திட்டம் பலித்த மகிழ்ச்சியில், வெற்றிக் களிப்பில் மிதந்தான் வித்யூ.

Author: ரோசி கஜன்
Article Title: குழல் யாசிக்கும் புயலே - 8
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.