• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும்
செந்தூரம் போட்டிக்கதைகள்.
"தேன் நாட்டு பைங்கிளி"
#STN_48
வானதி.. பார்த்திபன் இலங்கையில் தாய் தந்தையுடன் வாழும் இவர்களுக்கு நாட்டை பிரிந்து இந்தியாவிற்கு வரும் நிலைமை தாய், தந்தையரின் அகால மரணத்திற்கு பிறகு.
இவர்களை அழைத்துச் செல்ல வானதியின் பெரியம்மா மகன் கரிகாலன் வருகிறான் அவனோடு விருப்பம் இல்லாமல் இந்தியாவிற்கு கிளம்புகிறாள் வானதி கடும் கோபத்துடன். ஆரம்பத்தில் எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் இவள் போகப் போக அவர்கள் இவள் மேல் கொண்டுள்ள பாசத்தை புரிந்து இவளும் அதை அவர்களுக்கு திருப்பி கொடுக்கிறாள்.
கரிகாலன் அருமையான கதாபாத்திரம் இவனுக்கு ஒரு ஜோடி சேர்த்திருக்கலாம்.. 🥰
அருள்மொழி வருமன்.. முதல் காதலின் தோற்று வாழ்வை வெறுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.. அதிலிருந்து மீண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெறுகிறான்..
அலுவலகத்தில் வானதிக்கு இவன் ஹெட் ஆக இருக்கிறான்.. அவள் வேலையில் தவறு செய்ய கடுமை காட்டுகிறான் அவளிடம். பெண் அவளுக்கு அவனிடம் அளவிட முடியாத கோபம். கோபம் மட்டுமல்ல காதலும் தான்.. அதை தெரிந்து கொள்கிறான் வர்மன். ஆனால் தன் காதலை ஒப்புக்கொள்ள மறுக்கிறாள் வானதி ஒரு காலத்தில் காதல் இருந்தது தற்போது இருப்பது வெறுப்பு மட்டுமே என சாதிக்கிறாள். அவள் மனதில் தான் இருந்ததை நினைத்து பூரிப்படைகிறான் வர்மன். தன் மேல் அவளுக்கு இருந்த காதலை வெளிக் கொண்டு வர அனைத்து வகையிலும் முயற்சி செய்கிறான் அதில் வெற்றி பெற்றானா என்பது கதையில்.
ஒரே நாளில் தன் பைக்கை மாற்றுவதெல்லாம் வேற லெவல் 🥰
வானதியின் கோபம் நியாயம் தான்.
தகுதி இல்லாத இடத்தில் காதலை கொடுத்து அதற்கான வலியைப் பெற்றுக் கொண்டான் வர்மன்.
வெண்மதி.. அருமையான அம்மா 👏
விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகும் நகர்ந்தது கதை நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰
Good luck 👏
 
#காதல்_எங்கள்_சொந்தம்….
#கௌரிஸ்ரிவ்யூ….

காதல் கதை தான்…..கொஞ்சம் வித்யாசமா இருக்கு…..

சந்திரன் ஆபீஸ் விஷயமா கொடைக்கானல் வந்து இருக்கப்பா…அவன் தங்கை ஹேமாவும் தானும் வருவேன்னு வந்து காலை உடைச்சுகிட்டா…..

சந்திரனுக்கு ஆபீஸ் வேலை இருக்க…தங்கையை பார்த்து கொள்ள இடமும், ஆளும் வேணும் என மலர் ஹோட்டல் நடத்தும் காவ்யா கிட்ட கேட்ட…..

ரூம் தரேன், ஆள் எல்லாம் வெச்சி பார்த்துக்க முடியாதுனு கோவமா சொல்லிவிட….

சந்திரனுக்கு ஆத்திரம்….ஆன காவியாவின் முன் அனுபவம் அப்படி….

அது தெரியாது இல்ல சந்திரனுக்கு…..

அப்ப வள்ளி ஓட பெண் அமலாவை ஹாஸ்பிடல் கூட்டி போக சந்திரன் உதவ….

வள்ளி வீட்டு பெண் மீனா ஹேமாவை அவள் வீட்டில் வைத்து பார்த்துக்கரா…..

ஆன அமலாவை காப்பாத்த முடியாமல் போக…..

காவ்யா வந்து எல்லாம் வள்ளி ஃபேமிலிக்கு ஹெல்ப் பண்றா….

அப்ப காவ்யா ஓட பண்பை புரிஞ்சிக்கும் சந்திரனுக்கு அவள் மேல் சலனம்…..

இப்ப தான் வள்ளி ஓட பெண் அமலா இறந்து இருக்க….

காவ்யா ஹோட்டலில் தங்கி இருந்த சசி அம்மாவும் இறக்க …..

தனித்து இருக்கும் சசியை வள்ளி தானே வந்து ஏற்று கொள்ள…..

எல்லாம் நல்ல நிலையில் போகுது….

சந்திரனுக்கு காவ்யா மேல் இருந்த சலனம் காதலா மலர…

காவ்யா மனதிலோ நிரஞ்சன்…..

நிரஞ்சன், ஏதும் சொல்லாமல் எங்கோ சென்று விட….

பிரிவில் காவ்யா….

சந்திரன்…இங்கேயே செடில் ஆக வீடு பார்க்கும் பொறுப்பு ஹேமாவிடம் வர….

வீட்டை விக்க மறுக்கும் நிர்மல்….

இப்படி ஒருவொருத்தரும் ஒருவொரு நிலையில் இருக்க….

யாராருக்கு காதல் சொந்தமானது என்பது தான் கதை…..

சந்திரன்….அமைதியா இருந்தே காவியாவின் மனதில் இடம் பிடிச்சிக்கிறான்…..

காவ்யா….பிரிந்த காதலனை எண்ணி தவித்தாலும்….சரியான நேரத்தில் நல்ல முடிவு எடுத்து இருக்க…..

ஹேமா….இவளும் காவ்யா போல தான்….ஆன நிரஞ்சன் காவியாக்கு துரோகம் செய்யல….இங்க ஹேமாக்கு நடந்தது துரோகம்….அதும்🤬🤬🤬 🤬 🤬

நிர்மல்….முதலில் வீட்டை தர மறுத்து கோவமா நடந்த அவன்….அவன் மாற்றம் எப்படின்னு சொல்லவே இல்லையே…..

நிரஞ்சன்…..சரியான லூசு….காவ்யா கிட்ட சொல்லிட்டு போய் இருந்தா இப்படி வாழ்க்கையை தொலைச்சிட்டு நின்னு இருக்க வேணாம் இல்ல….

ஊரான் காதலை ஊட்டி வளர்த்தா தன் காதல் தானே வளரும்னு நினைச்சிட்டான் போல….

கலா….இது என்ன கேரக்டர்னு எனக்கு புரியவே இல்ல…..

அருண் துரோகம் செய்யல அப்படினா….ஆன துரோகம் confirm ஆனதும்….

நீங்க வேணாம்…ஆனா நீங்க கொடுத்த காரும், வீடும் நா வெச்சிக்கறேன்னு சொல்றது என்ன 🤦🤦🤦🤦🤦🤦…..

நிறைய கேரக்டர்ஸ்…..கதையை இன்னும் நல்லா கொண்டு போய் இருக்கலாம்னு தோணுது….சில இடங்கள் சலிப்பா இருக்கு…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

F%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.462/
 
#செதுக்கிய_சிற்ப_பாவையே….
#கௌரிஸ்ரிவ்யூ…..

காத்தவராயன் - வெண்பாவுக்கு மூணு பெண்கள்….

நகை, சுடர் & கவி….இதில் நகை ரொம்ப அமைதி & பயந்த சுபாவம் கொண்ட பெண்…..

காத்தவராயன்…. தன் நான்கு தங்கைக்கும் கல்யாணம், சீர் என அனைத்தும் தன் சக்திக்கு மீறி செய்து அவர் மகள்களுக்கு படிப்பை தவிர எந்த சொத்துக்கும் சேர்த்து வைக்கல…..

அதும் எல்லாம் இப்ப தான் படிக்கும் பெண்கள் …..

அந்த தங்கைகளும் பெரிசா அண்ணன் என ஏதும் செய்வது இல்லை….அவரிடம் இருந்து இன்னும் எடுத்து கொண்டு தான் போக இருக்காங்க….

நகைக்கு, ஆனந்தி அத்தை மகனான பிரனேஷ் மேல காதல்….அவனுக்கும் தான்….

காத்து ஓட தங்கைகளிலே பேராசை பிடித்தவர் இந்த ஆனந்தி தான்😏😏😏😏😏…..

இவங்க காதல் ஆனந்திக்கு தெரிஞ்சி போக….காத்து - வெண்பாவை அவமான படுத்திறாங்க …..

தன் நிலையால் தான்…. தன் பெண்ணுக்கு அவள் விரும்பும் வாழ்வை அமையலா…தங்கைகளின் சுயரூபம் என காத்துவை அலைக்கழிக்க….

ஆக்சிடென்ட் ஆகிருது….வெண்பாவும் பெண்களும் நிலையில்லாமல் தவிக்க….

அந்த ஏரியாவில் இருக்கும் மெக்கானிக் பரமு தான் அவங்களுக்கு பக்க பலமா இருக்கான்….

காத்து மேல நல்ல மதிப்பு & வேற ஒரு காரணமும் இருக்கு…..

காத்து இனி நடக்க முடியாதுனு போக…..

அமைதியான, பயந்த சுபாவம் கொண்ட நகை…. ஆர்மியில் சேரார…

தன் அப்பாவையும், குடும்பத்தையும் சுமக்க பயணிக்கிறாள்…..

இனி அவங்க வாழ்க்கை, நகையின் ஆர்மி பணி, பரமனின் ரகசியம்….

இது எல்லாம் மீதி கதை…..

நகை…..தென்றல் புயலாகி வருதே…அது போல தான் நகையும்…..

இவளோட ஒரு ஒரு பரிமாணமும் ரொம்ப நல்லா இருக்கு 🔥🔥🔥🔥🔥

சுடர்….நகை போல அமைதியான பெண் இல்லைனாலும்….வீட்டின் சூழ்நிலை உணர்ந்து நடப்பது எல்லாம் 👏👏👏👏👏

காத்து…இவர் மேல கோபம் தான்..
அப்படி என்ன தங்கைகள் பாசம்?????

தனக்கும் பெண்கள் இருக்கு என நினைக்காமல்….இது என்ன இப்படி ஒரு நிலை…

கொஞ்சமாவது சுயநலமா இருந்து இருக்கலாம் இவர்…..

ஆனந்தி…கடைசி வரை திருந்தவே இல்ல🤦🤦🤦🤦🤦இவங்க பேராசைக்கு பலி இவங்க பையன் வாழ்க்கை தான்🤷🤷🤷🤷….

பரமன்….என்னடா இவன் இப்படி இருக்கான்னு பார்த்தா…இவனின் ரகசியம்🤩🤩🤩🤩🤩…..

லாஸ்டா வந்தாலும் இவன் கேரக்டர் 👏👏👏👏👏….அதிலும் பரமனின் நகையாமே….சோ ஸ்வீட் 🥰🥰🥰🥰…..

கதை ரொம்ப நல்ல இருந்தது ரைட்டர்…..

எனக்கு ஒரே ஒரு டவுட்…..காத்து eb la தானே இருந்தார்…..அப்பறம் ஏன் அவர் வேலை அவர் பெண்களுக்கு ஏன் கிடைக்கல????

அப்படி இருந்து இருந்தா….இவளோ கஷ்டம் இல்லை தானே…இவங்களுக்கு….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇👇

-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87.460/page-4
 
Top Bottom