அத்தியாயம் 13
நிராளினி மூச்சு பிடித்து கூறிய வசனங்களில் வாகீஷனுக்கு புரிந்தது இதுதான்: சரியான வயதில், அவள் பெற்றோர் மறுக்காத தகுதியுடன் சென்று, அவளை பெண் கேட்க வேண்டும். அதுவரை காதல் என்று அவளை தொந்தரவு செய்யக்கூடாது.
அதற்கு இடையில் தன் கடமையை சிறப்பாக சரிவர முடிக்க வேண்டும் என்பதுதான்.
சாதாரண கூலி வேலை செய்பவனுக்கு நிராளியின் தந்தை அளவுக்கு செல்வம் தேடுவது இமயமலையில் கொடியேற்றுவதற்கு சமம்தான்.
ஆனாலும் தன் உயிரை உருக்கி என்றாலும் தன்னவளுக்காக அவள் சொன்ன விடயங்களை செய்தாக வேண்டும் என்ற வைராக்கியம் நெஞ்சில் எழ,
தயக்கமாக மடங்கி நின்றவன், கண்களில் பொலிவுடன் நெஞ்சை நிமிர்த்தி நின்று, அவள் அழகு வதனத்தை பார்த்தபடி "சரி நிரா.. நீ சொன்ன மாதிரி உன்ன இனி தொந்தரவு பண்ண மாட்டேன்.. நல்லா படிச்சு உனக்கு பிடிச்ச வேலைக்கு போ.. நானும் என்ட வீட்டு கடமைகள முடிச்சிட்டு நீ எதிர்பாத்த மாதிரி உன் முன்ன வந்து நிற்பேன்.. ஆனா நீ அதுக்கு ஒன்னே ஒன்னு தான் செய்யணும்.. நம்பிக்கை.. அது வேணும்.. உனக்காக எது வேணாலும் செய்றேன் நீ ஒரு வார்த்த சொல்லு போதும்..." என்று அழுத்தமாக அவன் கேட்க
நிராளினி பெரிதாக எதையும் யோசிக்காமல் "சரி உங்க தகுதிய வளர்த்துட்டு, உங்கட எல்லா கடமைகளையும் முடிச்சிட்டு, இதே காதலோட திரும்பி வாங்க.. உங்களுக்காக நான் காத்திருக்கேன்..." என்று அவனுக்கு உறுதி அளித்திருந்தாள்.
வாகீஷனைப் பொறுத்தவரை அது காதலின் உறுதிமொழி. நிராளினியைப் பொறுத்தவரை அவன் மனதை மடை மாற்றி விடும் வார்த்தைகள்.
வாலிப கோளாறு எத்தனை நாட்கள் தாங்கும் என்ற எண்ணம். தன்னைவிட அழகான பெண்ணை பார்க்கும்போது வேறு காதல் முளைக்கலாம், இல்லை கடமைக்காக ஓடி வாழ்க்கை மாறும்போது தன்னை மறந்து போகலாம் என்று தான் நினைத்தாள்.
தன் வார்த்தையை வேதவாக்காக எடுத்து, ஒருவன் தனக்காக எட்டு வருடங்கள் கடந்து வந்து நிற்பான் என்று அவள் கனவில் கூட நினைக்க வாய்ப்பு இல்லையே.
கடந்த எட்டு வருடங்களில் அவள் நினைத்த மாதிரி தானே நடந்தது. காதல் என்று அவள் பின் சுற்றியவர்கள் எல்லாம் காலப்போக்கில் குடும்பம், வேலை வேறு வாழ்க்கை என்று விலகி சென்று விட்டனரே.
நிலையாக ஒருவன் அவளை நெஞ்சில் சுமந்து இருந்தது அவளுக்கு தெரியவில்லை. இனக் கவர்ச்சி என்றால் காலப்போக்கில் கரைந்து போகலாம், உண்மை காதலை கரைக்க காலம் என்ன கடவுளால் கூட முடியாதே.
நிராளினி கூறிய நம்பிக்கை வார்த்தைகளே போதும் என்று புன்னகை பூத்தவன் "இது போதும் நிரா.. கண்டிப்பா ஒரு நாள் நீ சொன்ன மாதிரி வந்து நிப்பேன்.. எனக்காக காத்திரு..." என்று சொல்ல அவளையும் அறியாமல் அவள் தலை சரியென அசைந்தது.
"ஆனா உங்க காதலால எனக்கு எந்த தொந்தரவும் வரக்கூடாது..." என்று சொல்ல
"இனி என்ட நிழல் கூட உன்ன தொந்தரவு பண்ணாது..." என்று வாகீஷன் சொல்ல
"ம்ம்..." என்றவள் அவ்விடம் விட்டு நகர போக
"நிரா! இது கிஃப்ட்..." என்று அவன் கையில் இருந்த மோதிரத்தை காட்ட
"இது பிறந்தநாள் பரிசா மட்டும் இல்லையே.. இப்போ எனக்கு எதுவும் உங்கட்ட இருந்து வேணாம்..." என்றவள் வீதியை நோக்கி நடக்க
நிராளினியை கண்ட கீர்த்தனாவும் "நிராளி போறாள்.. பிறகு கதைப்போம்..." என்று விட்டு ஓடி சென்று அவளுடன் இணைந்து கொண்டாள்.
நிராளினியை பார்த்தபடி நின்ற நண்பனை நெருங்கிய சுதாகரன் தோளில் கையை வைத்தான். வாகீஷன் கையில் இருந்த மோதிரத்தை வைத்து அவள் இவன் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை என்று எண்ணியவன்
"வாகீ!..." என்று நண்பனுக்கு ஆறுதல் சொல்ல எடுக்க, அவன் முகத்தில் அந்த அளவுக்கு சோகம் இல்லை. சற்று வாட்டமாக இருந்தான். இருந்தும் "விடுடா எல்லாம் விதிப்படிதான் நடக்கும்..." என்று சொல்ல
"அந்த விதிய கூட என்ட நிரா சொன்ன ஒத்த வார்த்தைக்காக மாத்தி அமைப்பேன்டா..." என்று புன்னகையுடன் சொல்ல
"இல்ல புரியல.. நீ கவலையா இருப்பனு பாத்தா சந்தோஷமா இருக்க..." என்று சுதாகரன் கேட்க
"நான் ஏன்டா கவலையா இருக்கணும்.. எனக்காக என்ட நிரா இருக்கும் போது..." என்று வாகீஷன் காதலாக சொல்ல .
"டேய் தெளிவா சொல்லுடா.. நிராளி ஓகே சொல்லிட்டாளா.. பிறகு ஏன் கிஃப்ட்ட குடுக்கல?..." என்று சுதாகரன் பொறுமை இழந்து கேட்க
வாகீஷனோ நிராளினி இறுதியாக சொன்ன வார்த்தைகளை சொல்லி, மேலோட்டமாக தன் தகுதியை உயர்த்தி கடமைகளையும் முடித்து அவளை தேடி வருமாறு கூறியதாக சொன்னான்.
ஆனால் அதன் பின்பும் அதே காதல் இருந்தால் என்ற வார்த்தையை விட்டு விட்டான். அப்போதே கூறி இருந்தால் அவள் இவன் மனது மாறும் என்று காலத்தை கடத்த நினைத்தது புரிந்து இருக்குமோ என்னவோ.
"ஆனா நான் அவளுக்காக வாங்கின முதல் பரிசு டா.. இத வாங்கி இருக்கலாம்..." என்று கவலையாக சொல்ல
"டேய் உனக்கு என்ன கவல பாரு.. நிராளி சொன்ன மாதிரி எல்லாம் உன்னால செய்ய ஏலுமா?..." என்று சுதாகரன் கேட்க
"என்ட நிரா சொல்லிட்டாள் டா நான் செஞ்சே ஆகணும்..."
"சரிதான் எப்போ பஸ் வாங்க போற?..." என்று கேட்க
"ஹா! எதுக்கு பாஸ்?..."
"ம்ம் ஒரே பாட்டுல பணக்காரனாகணும்னா சூரியவம்சம் படத்துல வார மாதிரி பஸ் வாங்கி விடனும் இல்ல..." என்ற சுதாகரன் முன் நடக்க
"என்ன கிண்டலா..."
"இல்ல நக்கல்.. நடக்கிற காரியமடா இதெல்லாம்..."
"நடக்கும் நான் நம்புறேன்..." என்று உறுதியாக கூறியபடி சுதாகரனுடன் சென்றான் வாகீஷன்.
வாகீஷனின் நம்பிக்கை வீண் போகாமல், குவைத் நாட்டில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் வேண்டும் என்ற ஒரு ஏஜென்சியின் விவரங்கள் தெரிந்தவர் மூலம் கிடைக்க, வீட்டு உறுதியை அடகு வைத்து, பணம் கட்டி அவன் பயணமாகும் நாளும் வந்தது.
கொழும்பிற்கு செல்லும் முன் தன்னவளை பார்க்க வேண்டும். வெளிநாடு செல்லும் தகவலை சொல்லிவிட்டு, அவளை கண்களில் பதித்துக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக வெள்ளிக்கிழமை கோயிலில் காத்திருந்தான்.
அவளும் கீர்த்தனாவுடன் வந்தாள். நிராளினி வரும் முன் திலகம் சொன்னதின்படி அவன் பெயருக்கு அர்ச்சனை செய்து, பூஜை முடிய சிகப்பு நிற கயிறு ஒன்றை ஐயரிடமிருந்து வாங்கியவன் அதை கையிலே வைத்திருந்தான்.
அந்த கயிற்றை நிராளினியின் கையினால் கட்டிக் கொண்டால் போதும், உலகின் எந்த மூலைக்கு வேண்டும் என்றாலும் அவளுக்காக அவளை பிரிந்து செல்ல முடியும் என்ற எண்ணம் அவனுக்கு.
எப்போதும் போல் கீர்த்தனா சுதாகரனை பார்த்து பேச சென்றுவிட, நீல நிற நீண்ட பாவாடையும் வெள்ளை நிற பிளவுஸும் அணிந்து இருந்த நிராளினியை ரசனையாக பார்த்தபடி நெருங்கி "நிரா!..." என்று மென்மையாக அழைக்க
என்ன என்பது போல் அவனை நங்கையவள் பார்க்க "நான் வெளி..." என்று அவன் சொல்ல ஆரம்பிக்கும் போதே நிராளினியின் பையில் இருந்த ஃபோன் சத்தமிட்டது.
கோயில் என்பதால் உடனே எடுத்து காதில் வைத்தாள். நிரஞ்சன் தான் வெளியே இருப்பதாக கூறி வர சொல்ல "ஹா.. வாரேண்ணா..." என்று அவசரமாக பேச
அவள் பேசியது நிரஞ்சனக்கு சரியாக கேட்கவில்லை போலும், நிராளினியும் கீர்த்தனாவை அழைத்து "அண்ணா வந்துட்டான் நான் போறேன்..." என்று சொல்ல
எங்கே போய்விடுவாளோ என்று பரிதவித்த வாகீஷன் அந்த கயிற்றையாவது அவள் கையினால் கட்டி விடச் சொல்லலாம் என்று அதை அவள் முன் நீட்டி "நிரா!..." என்று அழைக்க
ஃபோனை காதில் வைத்துக் கொண்டே அவன் பக்கம் கையை நீட்டி "சொரி நான் போகணும்..." என்றவள் பார்வை கோயில் வாசலை பார்த்தபடி இருக்க, கால்களும் வெளியேற நடந்தன.
ஆனால் அவள் நீட்டிய கைவிரல்கள் பட்ட அந்த கயிற்றை அவளே வாழ்த்து கூறி கொடுத்ததைப் போன்று, வீதியை நோக்கி செல்லும் தன் காதல் கிளியை பார்த்துக் கொண்டே, ஒற்றை கையால் பற்களின் உதவியையும் கொண்டு தனக்கு தானே கட்டிக் கொண்டான்.
இன்று வரை அவன் கைவிட்டு அது இறங்கவில்லை. இப்போது வரை அது அவனுக்கு அவள் தேவதை கைதொட்டு கொடுத்தது தான்.
அதன் பிறகு குவைத் வந்தவன் முதல் வேலையாக தன்னைவளுக்காக வாங்கி வைத்திருந்த மோதிரத்தை கருப்பு கயிற்றில் கோர்த்து கழுத்தில் போட்டுக் கொண்டான்.
அப்போதிலிருந்து வேலையில்லாமல் பட்டினி கிடந்து, நாய் போன்று தெருத்தெருவாக வேலை தேடி அலைந்து, கார் கழுவும் வேலை கிடைத்து, படிப்படியாக கார் டிரைவராக முன்னேறி, அதுவும் போதாது என்று துறைமுகத்தில் வந்து இறங்கும் கொள்கலன்களை நகரங்களுக்கு ஏற்றி செல்லும் கனரக வாகனத்திற்கு டிரைவராக வேலைக்கு சேர்ந்தான்.
கடைசி நான்கு வருடங்கள் அந்த வேலைதான். சம்பளம் 10 லட்சத்தை தாண்டியது இலங்கை மதிப்பில். அதற்கு முன் சம்பாதித்த நான்கு வருடங்களில் வீட்டு உறுதியை மீட்டு, பழைய வீட்டை புதிதாக தங்கைக்காக மாற்றி அமைத்து, படித்து முடித்த பின் அவள் திருமணத்திற்கு என்று நகைகள் சேர்த்து வைத்திருந்தான்.
திருமண செலவுக்காக பணத்தை திலகத்திடம் வேறாக கொடுத்து வைத்திருந்தான். இரண்டு வருடங்கள் முன் அதே ஊரைச் சேர்ந்த அவன் சொந்த மாமா மகன் நிலவனுக்கு திருமணமும் செய்து கொடுத்தான்.
என்னவொன்று நேரில் அவன் வரவில்லை. அவனது ஒவ்வொரு மணித்துளியும் தன்னவளை அடைய பணம் சேர்க்கும் காலம் என்பதால் ஒற்றை தங்கையின் திருமணத்தை கூட நேரில் பார்க்க வரவில்லை.
தொழில் இருந்ததால் தான் வருமானம் வரும் என்பதால் கடைசி நான்கு வருடங்களில் முதலில் தொழிலுக்காக மரமில்லை வாங்கி அங்கேயே கல், சீமெந்து, மணல் என்று ஒரு கட்டிடம் உருவாக்க தேவையான அனைத்து பொருட்களும் விற்கும் இடமாக சுதாகரனையும் வைத்து பார்த்துக் கொண்டான்.
அவளுக்காக கார் வாங்கி வைத்தான். வீட்டை கட்டி முடித்த பின்னர் நகை வாங்கிவிட்டு அடுத்த வருடம் ஊருக்கு வரும் நினைப்பில் இருந்தான்.
இதற்கு இடையில் வசதி வாய்ப்பு இருந்தால் போதுமா அவள் ஒரு ஆசிரியை, நானும் அவளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்று ஆங்கில டிப்ளோமா பகுதி நேரமாக படித்து இங்கிலீஷ் லாங்குவேஜ் லிட்டரேச்சர் டிகிரி முடித்து இருக்கின்றான்.
அதற்கு இடையில் தான் சுதாகரன் கீர்த்தனா காதல் விடயம் கீர்த்தனா வீட்டில் தெரிந்து, வீட்டை விட்டு வரமாட்டேன் என்ற கீர்த்தனாவை வம்படியாக இழுத்து வந்து கோமதியின் உதவியுடன் திருமணம் நடந்தது.
அதன் பின்னும் நண்பனை சாதாரணமாக விட முடியாது என்று வாகீஷன் தான் முழு செலவு செய்து சுதாகரனை குவைத்திற்கு வேலைக்கு எடுத்து இருந்தான்.
மூன்று வருடங்கள் சுதாகரனும் அங்கு வேலை பார்த்து கையில் பணத்துடன் நாடு திரும்பியவன், பஸ் ஒன்றை வாங்கிவிட்டு அதன் மூலம் வரும் வருமானமும்,
கோமதியின் கணவர் செல்வகுமார் மூலம் ஒரு சில கான்ட்ராக்ட் செய்பவர்களை வாகீஷனின் மில்லில் பொருட்கள் வாங்க வைத்து அதில் வரும் அவன் பங்கும் என்று நிம்மதியாக வாழ்கிறான்.
சொல்லப்போனால் கீர்த்தனாவை அழைத்து வந்துவிட்டு அடுத்து என்ன என்று கலங்கி நின்ற வேலையில், கைகொடுத்து தூக்கி விட்டது வாகீஷன் தான்.
நட்புடன் அந்த நன்றி கடனும் சேர்ந்து தான் அவனுக்காக என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று சுதாகரனை எண்ண வைத்தது.
கோமதி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, கேட்டுக் கொண்டிருந்த நிராளினி என்ன உணர்கிறாள் என்று அவளால் விவரிக்க முடியவில்லை.
அவள் அலட்சியமாய் உதிர்த்த வார்த்தைகள் ஒருவனின் உயிரின் வேர் வரை பாய்ந்து இருக்கின்றது. அவளையும் அறியாமல் அவளால் வழங்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் அவன் உடலில் ஓர் அங்கமாக மாறி இருக்கின்றது.
அவளுக்காகவே ஒருத்தன் உயிர் வாழ்கிறான் என்றால் அவன் மனதில் அவள் தேவதையாக பூஜிக்க படுகின்றாள் என்று தானே அர்த்தம்.
காதல் அரசன் அவன் சேர்த்த செல்வங்கள், தேடிய கல்வி அனைத்துமே காரிகையின் காலடியில் போட்டு அவள் காதலை யாசகம் கேட்க தானே.
உள்ளம் முழுக்க பனி மழை பொழிந்தது. அதே நேரம் கண்கள் கண்ணீரை சொரிந்தது. சந்தோஷமா பூரிப்பா, பெருமிதமா இல்லை அனைத்தும் கலந்த உணர்வா தெரியவில்லை.
ஆனால் இதயத்தினுள் புயல் அடித்துக் கொண்டிருந்தது. புயல் தான் ஆனால் அதிலும் பூக்களின் வாசனை. இல்லை... இல்லை... காதலின் வாசனை...
காதலா! ஆம் அது அவன் காதல்... அந்த காதலே அவள் கண் முன் தோன்றி அவன் காதலுக்கு நீ தகுதி இல்லாதவள் என்று சொல்வது போல் இருந்தது.
எங்கோ வெறித்து இருந்த நிராளினியை உலுக்கிய கோமதி "இது எல்லாத்துக்கும் மேல ஒரு விஷயம் பண்ணுனான்.. அன்டைக்கு தான் ஏன்டா இந்த பைத்தியக்காரத்தனமான காதல்னு கேட்டேன்.. அப்போதான் எல்லாமே சொன்னான்..." என்று சொல்ல
இதுவரை அவர் முகம் பார்க்காதவள் அப்படி என்ன என்பது போல் திரும்பி அவர் முகம் பார்க்க,
"வெறும் மேல அவன பாத்திருக்கியா?..." என்று கேட்டவர் பின் அவரே "அப்டி எல்லாம் சங்கட படுத்த மாட்டேன்.. சந்தர்ப்பம் கிடைச்சா பாரு.. அவன்ட இடது நெஞ்சில நெருப்பால சுட்ட ஒரு பெரிய காயம் இருக்கு.. எப்டி வந்துச்சு தெரியுமா?..
...அவன்ட அப்பானா அவனுக்கு அவ்ளவு விருப்பம்.. அவன்ட அப்பா பேரு சிவலிங்கம்.. உன்ன பாக்க முன்னாடி சிவலிங்கம் படத்த பச்சை குத்திகிட்டான்.. சுதா வாகீயோட இருந்தப்போ கீத்துவோட பேர பச்ச குத்தினத கீத்து உன்னுட்ட சொல்லி.. நீ பச்ச குத்துறது பிடிக்காது, பச்சை குத்தினவங்கள பாக்கவே ஒரு மாதிரி இருக்கும்னு சொன்னயாமே..
...அத கீத்துவும் பேச்சு வாக்குல சொல்ல.. உனக்கு பிடிக்காத பச்சைய.. எப்டி.. அவன்ட முதல் ஹீரோ அவன் அப்பா நினைவா குத்தினத நெருப்பு வச்சு அழிச்சிட்டான்..." என்று சொல்ல
இதற்கு மேல் தாங்காது என்று "அய்யோ போதும்..." என்றவள் நெற்றிசுருக்கி இமைகளை மூடி, முகத்தை கையால் பொத்திக் கொண்டாள்.
கீர்த்தனாவோ "என்ன மச்சாள் சொல்றீங்க.. நெருப்பு பட்டு காயமாகி காய்ச்சலா கிடந்தது பச்சைய அழிச்சதாலயா?..." என்று கேட்க
"ஓம், சுதா சொல்லவும் ஒரு பெட்டைக்காக இவ்ளவு பண்ணனுமான்னு கோபம்.. ஃபோன போட்டு ஏசுனப்போ எல்லாமே சொன்னான்.. பேர் மட்டும் சொல்லல.. இப்போ இந்த புள்ளதான்னு தெரிஞ்சதும் நிரளிக்கு பச்ச குத்தி இருந்தா பிடிக்காதுன்னு எப்டி தெரியும்னு கேட்டேன்.. அப்பதான் சொன்னான்..." என்று கோமதி சொல்ல
"ச்சே அப்பவே தெரிஞ்சு இருந்தா இவள்ட்ட சொல்லி இருப்பேன்.. இந்த கஷ்டம் எல்லாம் வந்திருக்காது..." என்று கீர்த்தனா சொல்ல
"என்னத்த சொல்ல.. அவன் எட்டு வருஷம் அஞ்ஞாதவாசம் போயியும் அவன் கஷ்ட காலம் முடியல போல..." என்று பெருமூச்சை இழுத்து விட்டார்.
கோமதியின் என்னபடி நிராளினி மனம் மாறி அவனை ஏற்றுக் கொண்டால் வாகீஷனின் கஷ்ட காலம் முடிந்துவிடும் என்பதுதான்.
ஆனால் அவன் காதலின் விதி என்னவோ அந்த காதலுக்கும் கடவுளுக்குமே வெளிச்சம்.
நிராளினியால் வாகீஷனின் காதலின் கணத்தை தாங்க முடியவில்லை தான். அதற்காக இந்த நொடியே அவன் மட்டும் தான் வாழ்க்கை என்று முடிவெடுக்க முடியவில்லை. காரணம் என்னவோ கன்னியவள் உள்ள மட்டுமே அறியும்.