அத்தியாயம் 18
மெல்லிய மழை தூறலுடன் மகோன்னதமாக மறுவிடியல் புலர்ந்தது. வழக்கம்போல் கட்டழகன் காலை தேநீருடன் பெண்ணவளை எழுப்ப, கண்விழித்த காரிகையும் காதலன் தந்த தேநீரை அருந்திவிட்டு தன் பங்கிற்கு காலை உணவை சமைக்க,
வாகீஷனும் உதவி செய்கின்றேன் என்று ஒட்டி உரசி நிராளினியை ஒரு வழியாக்கிவிட, அவளோ டீச்சராக கையில் பிரம்பிற்கு பதிலாக கரண்டியை வைத்து விரட்டி விட, நல்ல பிள்ளையாக குளிக்க ஓடிவிட்டான்.
தன்னவளின் கை பக்குவத்தில், பார்வையால் அவளை கபளீகரம் செய்து கொண்டே சாப்பிட்டு முடித்தான். அதே சமயம் சுதாகரன் வந்துவிட தலையில் உள்ள காயத்திற்கு மீண்டும் மருந்து போட மருத்துவமனை சென்றான்.
வாகீஷன் வரும்வரை நிராளினியுடன் கோமதி இருந்தார். மருந்து கட்டி வந்த பின்னர் காயத்தை நிராளினி மெதுவாக வருடி பார்க்க, அவளை இழுத்து மடியில் அமர்த்தி கொண்டான்.
எத்தனை நேரம் கழிந்ததோ முத்தம் வைத்த கன்னம் மீசை குத்தி வலிக்கவும் "ஹூம்.. விடுங்க..." என்று அவள் சொன்ன பின்னர் தான் விட்டான்.
மதிய உணவை இருவரும் சேர்ந்து சமைத்து உண்டனர். மணி இரண்டு என்னும் போது வகீஷன் உடைமாற்றி தயாரானான் தாயைச் சென்று பார்க்க.
தினமும் திலகத்திடம் ஃபோனில் பேசுவான். கொழும்பில் இருப்பதாகவும் வீட்டிற்கு தேவையான சில பொருட்கள் வாங்கிக் கொண்டு வருவதாகவும் கூறி சமாளித்து வைத்திருந்தான்.
இன்று சென்று முழு விவரமும் சொல்லி தாயை சரி கட்ட வேண்டும் என்று நினைக்கும் போது தலை சுற்றியது. காதலுக்கு ஒன்றும் சொல்ல மாட்டார் ஏற்கனவே தெரியுமே,
ஆனால் ஒரு பெண்ணை கடத்தியதற்கு கண்டிப்பாக வகை வகையாக திட்டுவார் என்று தெரியும், எதற்கும் அடி விழுந்தாலும் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று தயாராகத்தான் இருந்தான்.
நிராளினி தனியாக இருப்பாள் என்பதால் கீர்த்தனாவை வரச் சொல்ல சுதாகரனுக்கு அழைப்பை எடுத்தான். சுதாகரன் அழைப்பை ஏற்கவில்லை என்றதும் கீர்த்தனாவின் எண்ணிற்கு அழைப்பு எடுத்தான்.
கீர்த்தனாவும் தனது தொலைபேசியில் வந்த அழைப்பை ஏற்று காதில் வைத்துக் கொண்டே, வீதியில் நின்று சுதாகரன் என்று அழைத்தது யார் என்று பார்க்கப் போகும் கணவனை பார்த்தபடி "அண்ணா சொல்லுங்க..." என்று கேட்க
"சுதா எங்கம்மா.. அவன் ஃபோன தூக்கல.. அதான் உனக்கு எடுத்தேன்..." என்று வாகீஷன் சொல்ல
கீர்த்தனாவின் கண்கள் தெறித்து விழும் அளவிற்கு விரிந்து, இதயம் தொண்டைக் குழியில் வந்து துடித்தது.
வீதியில் நின்று கொண்டு யாரோ சுதாகரன் என்று அழைக்க, அவனும் யார் என்று சென்று வாயில் கதவை திறந்து பார்க்க, நிரஞ்சன் இரண்டு போலீஸ் அதிகாரிகளுடன் வந்திருந்தான்.
அவர்களைப் பார்த்து பயந்து தான் கீர்த்தனா அப்படியே நின்றாள். "கீர்த்தனா!.. கீர்த்தனா!..கேக்குதாம்மா..." என்று வாகீஷன் திரும்பத் திரும்ப கேட்டவன் ஃபோனை ஸ்பீக்கரில் போட,
நிராளினியும் ஏன் கீர்த்தனா பேசவில்லை என்ற யோசனையுடன் ஃபோனை பார்க்க, வாகீஷன் தொடர்ந்து கூப்பிட்டதில் "ஹா! அண்ணா நிராளிட அண்ணா போஸீசோடா வந்திருக்காரு..." என்று பதட்டமாக கீர்த்தனா சொல்ல
கேட்டுக் கொண்டிருந்த இருவரும் அதிர்ச்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
வாகீஷனுக்கு புரிந்து போனது சுதாகரனை தேடி வந்திருக்கின்றனர் என்றால் நிராளினி கடத்தப்பட்டதில் அவன் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்தது விட்டது என்று,
உடனே சுதாரித்தவன் "கீர்த்தனா சுதாவ போலீச கூட்டிட்டு இங்க வர சொல்லு.. இல்லன்னு சாதிச்சா கை வைப்பானுங்க..." என்று சொல்லும் போதே போலீஸ் ஒருவன் சுதாகரனை ஓங்கி அறைய,
கணவன் மீது பார்வையை பதித்து இருந்த கீர்த்தனா "ஐயோ!..." என்று கத்திக் கொண்டே சுதாகரன் அருகில் ஓடி வந்தவள் "அடிக்காதீங்க.. நிராளினி எங்க இருக்காள்னு நான் காட்டுறேன்..." என்று சொல்ல
"கீத்து ஏன்டி!..." என்றான் சுதாகரன் இயலாமையுடன்
"அண்ணா தான்..." என்றாள் அவனுக்கு மட்டும் புரியும் படி
அதுவரை அழைப்பு துண்டிக்கப்படவில்லை. நண்பனை அடித்ததில் வாகீஷன் விழி மூடி திறந்தான். கஷ்டமாக இருந்தது.
கீர்த்தனாவின் வலி நிறைந்த அலறல் நிராளினிக்கும் கவலையாக இருந்தது.
அனைவரும் இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள். என்ன தான் விருப்பப்பட்டு வந்தேன் என்று நிராளினி சொன்னாலும் நிரஞ்சன் இந்த விடயத்தை அவ்வளவு சாதாரணமாக விடமாட்டான் என்று நன்கு தெரியும்.
எனவே "ஏங்க! கொஞ்சம் வாங்க...!" என்று வாகீஷனின் கையைப் பிடித்து எழுப்பியவள், தன்னுடன் சுவாமி அறைக்கு அழைத்து வந்தாள்.
அங்குள்ள ட்ராக்கில் தான் அவன் அவளுக்காக வாங்கி வைத்த தாலி இருந்தது. அதை எடுத்தவள் அவனிடம் நீட்டி "இத போட்டு விடுங்க..." என்று சொல்ல
திகைப்பு மாறாமல் பெண்ணவளை ஊன்றி பார்த்தவன் "நிரா இப்போ எதுக்கு ...?" என்று கேட்க
"இப்போதான்.. இப்போ உடனே கல்யாணம் பண்ணிக்கணும்.. சும்மா வாயால என்ட விருப்பத்தோடதான் உங்க கூட இருக்கேன்னு சொன்னா சரின்னு போயிட மாட்டாங்க.. கல்யாணம் பண்ணிக்கிட்டோம்னாதான் பிரச்சனைய ஓரளவு கட்டுக்குள்ள கொண்டு வர ஏலும்..." என்று நிராளினி சொல்ல
"அதுக்குன்னு இப்போ நம்ம இருக்கிற மனநிலையில உன்னால முழு மனசா நம்ம கல்யாணத்த ஏத்துக்க ஏலுமா...?"
"அதெல்லாம் இப்போ பாக்க ஏலாது.. அண்ணா வந்துடுவாங்க.. எப்படி எந்த மனநிலையில நடந்தா என்ன.. நம்ம கல்யாணம் நமக்கு காதல் போதாதா..." என்று அவள் சொல்ல
சரி என்று தலையை ஆட்டியவன் தங்கத் தாலியை கையில் ஏந்தி கொண்டான்.
பெண்ணவளோ எப்போதும் போல் அவன் வாங்கி கொடுத்த குட்டி பஃப் கை வைத்த ப்ளவுஸ், லேஸ் வேலைப்பாடுகள் கொண்ட சிவப்பு குட்டி சட்டையும், வெள்ளை நிறத்தில் குடை வெட்டு பாவாடையும் அணிந்து, தனது சுருள் கேசத்தை ஒற்றை பின்னலிட்டு அடியில் கொஞ்சம் முடியை விட்டு வூல் போட்டு இருந்தாள்.
என்றும் இல்லாமல் இன்று சிகப்பு நிற கோபுர வடிவ பொட்டு வைத்து இருந்தாள். காலை எழுந்து தயாராகும் போது அவளவன் நினைப்பில் அவன் வாங்கிக் கொடுத்த பொட்டை ஆசையாக வைத்துக் கொண்டாள்.
கழுத்திலும் காதிலும் அவள் போட்டு இருந்த அணிகலன்கள் தான், மூக்குத்தி மட்டும் தனியாக மின்னியது. அதற்கு போட்டியாக பதற்றத்தில் முத்து முத்தாக பூவையவளின் மூக்கு, நெற்றி, கழுத்து என்று வியர்வை பூக்கள் வேறு.
அந்த கயல்விழிகளில் என்ன இருந்தது ஆசையா, எதிர்பார்ப்பா, காதலா, பயமா, பதற்றமா எதையும் கண்டறிய முடியவில்லை காளையவனால், அஞ்சனம் தீட்டிய விழிகளால் ஆளைக் கொல்ல சித்தம் கொண்டாள் போலும், அதிலேயே செத்துப் போக தயாராக இருந்தவன்
வெள்ளை ஷர்டின் முழு கையை முட்டிவரை மடித்து விட்டு, நீல நிற ஜீன்ஸ் அணிந்து இருந்தான்.
சுவாமி அறையில் ஒரு சுவாமி படம் தான் இருந்தது. ஆதிசிவனான நீலகண்டனின் அருகில் அன்பின் அன்னையான பார்வதி பாந்தமாய் அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் குழந்தை கணேசனும் பாலகன் முருகனும் அமர்ந்திருக்கும் படம் தான்.
தன்னவளின் மதிமுகத்தை பார்த்துக் கொண்டே ஒரு நிமிடம் விழி மூடினான். கடவுளை பிரார்த்தித்தானோ இல்லையோ தான் காதல் கொண்டு கடந்து வந்த நாட்களை மனக்கண்ணில் கொண்டு வந்தவன்
அதே காதலை கண்களில் தேக்கி நிராளினியின் முகம் பார்த்தபடி, பொன் தாலியின் திருகாணியை கழட்டி, பெண்ணவள் இரு தோள்கள் தடவி, கழுத்தின் பின் கொண்டு சென்று மங்கள நாணை பூட்டினான்.
மங்கையவளின் மார்பின் மையத்தில் தழுவி இருந்தது மன்னவன் பூட்டிய தங்கத் தாலி.
நிராளினிக்கோ தன் திருமணத்தைப் பற்றி வேறு கனவுகள் இருந்தது. வாகீஷனுக்கோ கனவும் கற்பனையும் அவளுடன் தான். என்ன கற்பனையில் என்ன என்னவோ நினைத்து இருக்க, இதுவரை மாறிப்போன கற்பனைகள் போன்று இதுவும் திடீர் திருமணமாகி போனது.
சுவாமி படத்தின் முன்னிருந்த குங்குமத்தை எடுத்து நிராளினியின் நெற்றி வகுட்டில் வைத்து விட்டான். இருவருக்குமே ஒருங்கே உடலும் உள்ளமும் சிலிர்த்து பேரானந்தத்தில்.
பெண்ணவளோ கணவன் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க குனிய, புரிந்து கொண்டவன் சட்டென அவள் புஜத்தில் கையை வைத்து இழுத்து, காலில் விழவிடாமல் தன் மார்போடு அணைத்துக் கொண்டான்.
ஆத்மார்த்தமான இதமான அணைப்பு. வாகீஷனின் மனநிலையை வார்த்தையால் விவரிக்க முடியாது. அவன் உணர்வுகள் கூட குழம்பித் தவித்தன, எதை முதலில் வெளிப்படுத்துவது என்று.
அவன் சிநேகமானவள்....
அவன் பிரியமானவள்....
அவன் சொந்தமானவள்.... இன்று அவன் மனைவியாக.
வானத்து நிலவை தன் வீட்டு ஜன்னல் கம்பியில் கட்டி வைத்த உணர்வு அவனுள். கஷ்டப்பட்டு, காலத்தை கடத்தி, தவமிருந்து கிடைத்த வரம் அல்லவா அவன் தேவதை.
எதனால் என்று அறியாமல் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிய, அவனின் இடதுப்புறம் சற்று சாய்வாக நெஞ்சில் சாய்ந்து இருந்த நிராளினியின் நெற்றி குங்குமத்தில் ஒரு பக்க கண்ணீர் துளியும், மறுபக்க கண்ணீர் துளி மாங்கல்யத்திலும் அர்ச்சனையாக விழுந்தது.
கீர்த்தனா நிராளினி எங்கே இருக்கின்றாள் என்று காட்டுவதாக சொன்னதும், நிரஞ்சன் தந்தைக்கு தொலைபேசியில் அழைத்து தாயுடன் தான் இருக்கும் இடத்திற்கு வரச் சொல்லிவிட்டான்.
காலையில் நான்காவதாக ஒருவனை சென்று விசாரிக்க, அவனோ தனக்கு எதுவும் தெரியாது என்பதோடு வாகீஷன் ஒருநாள் இரவு நிராளினியின் பின் வீடுவரை வந்ததை பார்த்துவிட்டு கூறியது மட்டுமில்லாமல், அவன் கீர்த்தனாவின் கணவன் சுதாகரனின் நண்பன் என்று கூடிய தகவல் வேறு கொடுத்திருக்க
நிராளினி காணாமல் போன அன்று சுதாகரன் எங்கே இருந்தான் என்று விசாரிக்க, அவன் பாடசாலை சென்று நிராளினியை சந்தித்த தகவல் கிடைக்க, சந்தேகம் வலுப்பெற்று இருக்க தனக்கு உதவியாக இருந்த போலீஸ் அதிகாரியுடன் இன்னும் இருவரை அழைத்துக் கொண்டு சுதாகரனை தேடி வந்து விட்டான்.
இதோ தேவராசாவும், ஜெயந்தியும் வந்துவிட, சுதாகரன் கீர்த்தனா மற்றவர்களை அழைத்துக் கொண்டு, மத்தளம் கொட்டும் மனதோடு வாகீஷனின் வீட்டை அடைந்தனர்.
சுதாகரனின் "வாகீ!..." என்ற அழைப்பில் புதுமண தம்பதிகள் இருவரும் விலகி, வெளியே வந்தனர்.
எங்கே எப்படி இருக்கின்றாள் என்று தேடிக் கிடைத்த மகள் சுமங்கலி கோலத்தில் வந்து நிற்க, பெற்றவர்கள் இருவரும் அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தனர்.
நிரஞ்சனுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம், பாய்ந்து தங்கையை ஓங்கி அறைந்து இருந்தான்.
தன்னவளின் மேல் தூசு பட்டால் துடித்து போகும் வாகீஷன் "ஏய்!..." என நிரஞ்சனின் சட்டையை பிடித்து இழுத்து அடிக்க போக,
நிரஞ்சனும் குறையாத சீற்றத்துடன் வாகீஷனின் சட்டையை பிடித்து ஓங்கி முகத்தில் குத்த போக,
நிராளினி "அண்ணா!..." என்று அழைத்ததில் நிரஞ்சன் கை இறங்கவில்லை, வாகீஷனின் முகத்தை பதம் பார்த்திருந்தது அவன் முஷ்டி.
ஆனால் மனைவியின் சத்தத்தில் வாகீஷன் கை அப்படியே நிற்க, நிரஞ்சனுக்கு பாதிப்பில்லை.
கணவன் அடிவாங்கவும் "ஐயோ!..." என்று பதறியவள் தமையனை இழுத்து பிடிக்க,
அதற்கு இடையில் அதிர்ச்சியில் இருந்த தேவராசா தெளிந்து அவரும் மகனை இழுத்து தள்ளி நிறுத்தினார்.
"விடுங்கப்பா!.. ரெண்டு பேரையும் கொன்னு போட்டா தான் ஆத்திரம் அடங்கும்..." என்று நிரஞ்சன் துள்ள
கண நேரத்தில் நடந்த அசம்பாவித நிகழ்வை தடுக்க முடியாமல், இனியும் எதுவும் நடக்க விடமாட்டேன் என்பது போல் சுதாகரன் நண்பனின் அரணாக வந்து நின்றான்.
நிராளினி கண்ணீருடன் தாயை நெருங்கப் போக, "அங்கேயே நில்லுடி ஒழுக்கம் கெட்டவளே.. ஓடுகாலியா தறிகெட்டு போறதுக்கா டி உன்ன வளத்தேன்..இப்டி குடும்ப மானத்தையே வாங்கிட்டயே.. கண்டவனோடயும் பழகி திரிஞ்சு இருக்க, எனக்கு தான் தெரியாம போச்சு.. நீ என்ட மகளே இல்ல, என்னுட்ட வராத..." என்று ஆத்திரத்தில் வார்த்தையை தீக்கங்குகளாக கொட்ட,
அது நிராளினியை சுட்டதோ இல்லையோ வாகீஷனின் நெஞ்சை சுட்டு பொசுக்கியது.
"அம்மா நான் சொல்றத கொஞ்சம் கேளுங்க.. இவர் எனக்காக..." என்று வாகீஷனின் காதலை விளக்கி, தனக்கும் அவனைப் பிடித்து இருக்கின்றது என்பதையும் கூறி, வேறு வழியில்லாமல் நடந்த திருமணம் தான் இது என்று சொல்ல எடுக்க,
"உனக்காக என்னடி.. நாலு காசு சம்பாதிச்சா தரங்கெட்ட நாய் கூடலாம் ஓடி வந்துடுவியா?..." என்று தேவராசா இடைப் புககுந்தார்.
வாகீஷனைப் பற்றிய தகவல்கள் அவருக்கு தெரிந்தே இருந்தது போலும். ஊரில் தொழிலில் புதிதாக முளைப்பவர்கள் யார், எந்த ஆட்கள் என்று எல்லாம் தெரிந்து வைத்திருப்பவர் என்பதால் வகீஷனின் தகவலும் அவரிடம் இருந்திருக்கலாம்.
"இல்லப்பா நான்..." அவள் பேச முன்
"நிராளி எந்த காரணமும் வேணாம்.. கண்ட நாயொடல்லாம் உன்ன வாழ விட ஏலாது.. போய் கார்ல ஏறு..." என்று எஃகு குரலில் நிரஞ்சன் சொல்ல
வாகீஷன் தவிப்பாக அன்னை மடி தேடும் குழந்தையாக அவள் முகம் பார்க்க,
"இல்லண்ணா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. நான் எங்கேயும் வரல..."
"பாவி மகளே! எப்பிடி டி இந்த கேவலமான வேலைய செய்ய துணிஞ்ச.. என் புள்ளைய பெத்த வயித்துல தானே உன்னையும் பெத்தேன்.. தனக்கு பிடிச்ச பெட்டைய கல்யாணத்துக்கு பேசியும் தங்கச்சிக்கு கல்யாணம் முடிய தான் நான் கல்யாணம் பண்ணிபேன்னு இருக்கானே அவன பத்தி கூடவா நீ கொஞ்சமும் யோசிக்கல..
...என்ன ஜென்மம் டி நீ.. சாதாரண குடும்பமாடி நம்ம குடும்பம்.. இப்பிடி அழியாத அவமானத்த தேடி தந்துட்டியேடி.. ஒழுங்கு மரியாதையா எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு வாடி..." என்று ஜெயந்தி நிராளினியை அடிக்க
வாகீஷன் தடுத்து தன் கைவளைவில் வைத்துக் கொள்ள,
ஆத்திரத்தின் உச்சத்தில் "நாசமா போனவளே! இப்பிடி கழுத்தறுத்ததுக்கு நீ பொறக்காமலே இருந்திருக்கலாம் டி..." என்று சற்று அதிகப்படியாகவே வார்த்தைகள் வந்து விழுந்தது ஜெயந்தியின் வாயில் .
"சேர் ஏதாவது பண்ணுங்க.. இந்த கல்யாணத்த ஒத்துக்க ஏலாது..." என்று தேவராசா போலீஸ் அதிகாரியிடம் சொல்ல
"இல்லைங்க.. இது காதல் பிரச்சின, கல்யாணம் வேற பண்ணிட்டாங்க.. உங்க மகள் மேஜர்.. அவங்க முடிவு தான் கடைசி..." என்று அந்த போலீஸ் அதிகாரியும் கூறிவிட்டு
நிராளினியிடம் "உங்கள காணலெண்டு தான் கேஸ் இருக்கு.. நீங்க விரும்பி தான் வீட்ட விட்டு வந்து கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?..." என்று கேட்க
"ஓம், என்ட முழு சம்மதத்தோட தான் எங்க கல்யாணம் நடந்துச்சு.. நானா விரும்பி தான் இவர் கூட இருக்கேன்..." என்று அவள் இப்போதைய மனநிலையை, உண்மையை சொன்னாள்.
வாகீஷன் தன்னை கடத்தி வந்தான் என்று காட்டிக் கொடுக்கவும் இல்லை, அதேநேரம் தான் வீட்டை விட்டு ஓடி வந்ததாகவும் கூறவில்லை.
யாருக்கு அது புரிந்ததோ, நிரஞ்சனுக்கு தங்கையின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் புரிந்தது. ஆனால் அவள் மனது என்ன என்பது புரியவில்லை.
"நிரஞ்சன் இதுக்கு மேல நாங்க எதுவும் பண்றதுக்கு இல்ல..." என்று போலீஸ் அதிகாரி கூறி விட
நிரஞ்சனோ "கடைசியா கூப்பிடுறேன் நிராளி நீயா வந்திரு.. இல்ல வர வெப்பேன்..." என்று கணீர் குரலில் சொல்ல
இல்லை என்று தலையை ஆட்டியவள் வாகீஷனின் புஜத்தை பற்றி கொண்டு தலையை குனிந்து நின்றாள்.
அவளை உறுத்துப் பார்த்தவன் "போகலாம் ப்பா..." என்று சொல்லி பெற்றோரை அழைத்துக் கொண்டு சென்றான்.
வாயில் கேட்டை தாண்டும் வரை நிரஞ்சனின் பார்வை வாகீஷனில் தான் இருந்தது.
புயல் அடித்து ஓய்ந்து இருந்தது. நிராளினி அழுது கரைய, தன்னவள் நிலைக்கு தான் தான் காரணம் என்று தன் மீதே கோபத்தில் இருந்தான் வாகீஷன்.
சுவாமி அறையில் இருந்து வெளியே வரும்முன் வாகீஷனிடம் எதுவும் பேசக்கூடாது நானே பேசிக் கொள்கின்றேன் என்று சத்தியம் வாங்கிக் கொண்டாள் நிராளினி.
இல்லை என்றால் தன் உயிரானவள் மீது விழுந்த பலிச் சொல்லை கேட்டுக் கொண்டு அமைதி காத்திருக்க மாட்டான்.
எது வந்தாலும் சரி என அவள் மீது தவறு இல்லை, நான் தான் கடத்தி வந்தேன் என்று கூறியிருப்பான். அவள் வாங்கிய சத்தியம் தடுத்து விட்டது.
என்னால் தான் எல்லாம்...
என்னால் தான்... உள்ளுக்குள் நொந்து செத்தான்.
சுதாகரனும் கீர்த்தனாவும் கூறிய ஆறுதல் எதுவும் புது தம்பதியினரை சமாதானப்படுத்தவில்லை.
மாலை வரை அங்கு இருந்து விட்டு அவர்களும் சென்றுவிட, இருவரும் ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்து இருந்தனர்.
காதல் என்றால் காயங்களும் வலிகளும் பரிசாக கிடைக்குமே பெற்றுக்கொள்ள தான் வேண்டும்.