கதை எழுத வேணும் என்ற ஆர்வம் எப்போ எதனால வந்தது sis
அந்த ஆர்வம் சீரியஸா வந்தது இல்லை. சின்ன பிள்ளைத்தனமா வந்தது. நிறை குறைகளைச் சொல்லி முந்தி ரிவியூஸ் போடுவேன். அந்த நேரத்து ரைட்டர்ஸ் கதை எழுதிப் பாத்தத்தான் தெரியும், சும்மா போற போக்கில அது சரியில்ல, இது பிழை எண்டு சொல்லிட்டுப் போயிடுவினம் எண்டு சொல்லவும் ரோசம் வந்து நானும் எழுதி பாக்கிறானே எண்டு ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.
Can you please write another EMA story which defines how a woman can rebuild and move on her life with her husband after such betrayal. Already read few stories, but practically how it happens.. just wanted to understand that through your words..
காந்தன் சுபா கதை எழுதியபோது இனி EMA எடுத்து எழுதிறதே இல்லை எண்டு நினைச்சிருக்கிறன். அப்பிடியான கரு எழுத வேணும் எண்டு பிளான் பண்ணி எழுத முடியாது. ஏதாவது கதைக்குத் தானா வந்து அமைய வேணும். அப்படி அமைந்தால் பாக்கறேன். அந்த நேரமே பலர் இந்த விசயம் சொல்லி இருக்கினம். நிறையப்பேர் அதை மன்னிச்சு, இல்ல மறந்து, இல்ல கடந்து வாழுறதுதான் நடக்குது.
உங்களின் மைல் கல்லாக எதை நினைக்கிறீர்கள் ? அதில் நீங்க அடைந்த தூரம் எவ்வளவு ?
எனக்கு இந்தக் கேள்வி குறிப்பா எதைக் கேக்கிறீங்க எண்டு விளங்க இல்ல. எழுத்துலகில் மைல் கல் எண்டு கேக்குறீங்களா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. இன்னும் எழுதவும், எழுதப் பழகவும் நிறைய இருக்கு எண்டுதான் நினைப்பேன்.
ஆனா சில கதைகள் எழுதியது மனதுக்கு நிறைவைத்த தரும். அப்பிடியான கதைகள் உண்டு.
பொதுவா கதைகள் குறிப்பு எடுத்து வைக்கும் குறிப்பேடு எங்க வைச்சு இருப்பிங்க இடத்தை மட்டும் சொல்லுங்க மத்ததெல்லாம் நான் ஆள் செட் பண்ணி வேலையை முடிச்சிக்கிறேன் நான் யார் னு சொல்லுங்க பார்ப்போம்
இது ஆரு? என்ர ஃபோனை சுட்டாலே போதும். எல்லாம் அதில இருக்கும். ஆர் எண்டு தெரிய இல்லையே. ஒரு ஊகம் இருக்கு. சொல்லி பிழைக்க வேண்டாம்.
சத்யவாணிக்கு தனிக்கதை வரும் என்று சொன்னீங்களே அது எப்ப வரும்
நிச்சயமாக வரும். எப்ப எண்டு தெரியாது. அந்தக் கதை தன்னை எழுத சொல்லி என்னை உந்தி தள்ள வேணும். அப்பதான் எழுதலாம்.
Hi
ஹாய்
O Radha part two yepo Sister
வரவே வராது சிஸ்டர்ர்ர்ர்ர்ர். தாடிக்காரன் அதுல தடி பிடிக்கிற தாத்தாவா வருவான் பரவாயில்லையா
காமெடி (சிரிப்பு) கதை எழுதும் ஐடியா இருக்கா ? சிரிப்பு என்ற பெயரில் பொய் சொல்லி கொலை பண்ணக் கூடாது
ஹாஹா சத்தியமா காமடி கதை எழுத அவ்வளவு விருப்பம். என்ன எனக்கு எழுத வராது. கிருபாவின் கமளியில் லேசா அந்த ஏரியாவை டச் பண்ணியிருப்பேன்.
Mam - Nenga writing ப்ரோபோசனல் vantha பிறகு eni எழுதவே mudiyathu or கூடாது athu pola சிட்டுவேஷன் vanthurukka - வந்துருந்த nenga eppdi atha சரி pannenga. அதாவது unga view la romba கஷ்டமான handling ku solution sollunga mam
அருமையான கேள்வி. கடவுளின் புண்ணியத்திலும் என் குடும்பத்தின் ஆதரவிலும் அப்படி ஒரு நிலை இதுவரை வர இல்லை. வராத மாதிரித்தான் என் எழுத்தை நானும் கொண்டுபோறேன் என்று நினைக்கிறேன்.
முதல் இப்படியான நிலை எப்ப வரும்?
உடல் நிலை சரியில்லாவிட்டால் சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்ப வந்துவிடுவேன்.
வீட்டின் நாளாந்த சுழற்சி மாறுவது. அதாவது வீட்டு வேலைகளை பார்க்காமல் கதை எழுதுகிறபோது. நான் எப்பவுமே நினைப்பேன், நான் எப்படி என் கணவரில் தங்கி, அவரை நம்பி இருக்கிறேனோ அதேபோல் அவரும் என்னில் தங்கி, என்னை நம்பி இருக்கிறார். நம் இருவரையும் நம்பி, நம்மில் தங்கி நம் பிள்ளைகள். சோ அந்தக் கடமை எனக்கு முதன்மையானது. அதனால்தான் பெரும்பாலும் தினமும் இரவு 11க்கு மேல் கதை எழுத இருப்பேன்.
எனக்கும் வேலைகளை முடித்துவிட்டு இருந்தால் நிம்மதியாக இருக்கும். ஒன்று மண்டைக்குள் இருந்து நீ இன்னும் அந்த வேலைய முடிக்கேல்ல எண்டு ஏதோ ஒண்டு பிராண்டாது. ரெண்டாவது யாராவது என்னைக் குறை சொன்னா கோவம் வரும் எனக்கு. அதுக்கு குறை சொல்லுற இடத்தில என்னை நிறுத்த கூடாது எண்டு நினைப்பேன்.
அடுத்தது நாம் எழுதுவதை நம் வீட்டில் விரும்பாத போது. உண்மையில் இது பதில் சொல்ல சிரமமான ஒரு விசயம். அவரவர் வீடுகள், அது கொண்டிருக்கும் சரிபிழைகள் சார்ந்து இது முடிவாகும். என்னளவில என்னை எழுதாதே என்று சொல்ல கணவர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.
அதுவும் அவர்களுக்கான கடமைகளை கவனிப்புகளை நான் சரியாக முடிக்கிறபோது அப்படி ஒரு வார்த்தையே என்னை நோக்கி வரக்கூடாது. வந்தாலும் கேட்க மாட்டேன்.
கடவுளின் அருளால் என் பிள்ளைகள், கணவர், அம்மா, அக்காக்கள் எல்லோருமே நான் எழுதுவதை பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கிறார்கள். அதனால் எனக்கு இப்ப வரை அப்படி ஒரு நிலை வரேல்ல.
அடுத்த ஆடியோ நாவல் எப்போ வரும்
இந்தக் கேள்வியை நீங்க யாதவியைத்தான் கேக்கோணும்.
ஆட்டநாயகன தவிர வேற என்ன கேட்க
வாசு காண்டீபன் எல்லாளன் இப்படித்தான் கனவு கூட வருது 
யோசித்து யோசித்து இருக்குற கொஞ்சுண்டு மூளையும் காணாம போயிரும் போல
சஸ்பென்ஸ் எல்லாம் எப்ப ப்ரேக் பண்ணுவிங்க...எபி குட்டியா இருக்கு பெருசா தாங்க ப்ளீச் ...இந்த கதைக்கு லீவ் மட்டும் விட்டுடாதீங்க ஃபீல் குட் ஆத்தரே
விரைவில் சஸ்பென்ஸ் பிரேக் ஆகிடும். எனக்கும் அத்தியாயம் சின்னதா இருக்கிறது தெரியுது. எப்பவும் நான் அப்படித்தான். ஆனா இந்தக் கதைக்கு இதுக்கு மேல யோசிக்க வருதில்ல. இப்பிடி எழுதுகிறபோது எழுத எனக்கும் ஈஸியா இருக்கு. ஹாஹா லீவு வேணுமெண்டால்லாம் எடுக்க மாட்டேன். சில நேரங்களில் வீட்டு வேலைகள் கூடவா இருக்கும். அதனாலேயே களைச்சுப்போயிடுவேன். சில நேரங்களில் எழுதிக்கொண்டு போவது முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் எழுத வராது. ஒரு நாள் லீவு எடுத்துக்கொண்டு வருகிறபோது மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும். அப்ப ஈஸியா எழுதக்கூடிய மாதிரியும் இருக்கும். அதனால்தான் அப்பப்ப லீவு.
1. நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்கள்.
சில நேரம் இந்த சம்மர். பிள்ளைகள் இருவரும் கம்பஸ். மகனுக்கு ஒரு நேரம் லீவு. மகளுக்கு இன்னொரு நேரம் லீவு. அதேபோல் கணவரின் லீவு. இது மூன்றும் ஒன்றாகச் சந்தித்தால் அப்போது வருவோம். இந்த வருடம் வர விருப்பம். ஆனா இன்னும் பிள்ளைகள் அவர்களின் சம்மர் லீவு எப்ப எண்டு சொல்லேல்ல.
2. இலங்கைக்கு வர மாட்டீர்களா?
வருவேன்
இலங்கையில் உங்கள் சொந்த ஊர் எது?
யாழ்ப்பாணம் ஏழாலை சொந்த இடம். நாட்டுப் பிரச்சனையால் கிளிநொச்சியில் வந்து இருந்தோம். அங்கேதான் நான் பிறந்தேன். பிற்பாடு வவுனியா. இப்ப அம்மா இருக்கிறதும் வவுனியா.
அந்த ஆர்வம் சீரியஸா வந்தது இல்லை. சின்ன பிள்ளைத்தனமா வந்தது. நிறை குறைகளைச் சொல்லி முந்தி ரிவியூஸ் போடுவேன். அந்த நேரத்து ரைட்டர்ஸ் கதை எழுதிப் பாத்தத்தான் தெரியும், சும்மா போற போக்கில அது சரியில்ல, இது பிழை எண்டு சொல்லிட்டுப் போயிடுவினம் எண்டு சொல்லவும் ரோசம் வந்து நானும் எழுதி பாக்கிறானே எண்டு ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.
Can you please write another EMA story which defines how a woman can rebuild and move on her life with her husband after such betrayal. Already read few stories, but practically how it happens.. just wanted to understand that through your words..
காந்தன் சுபா கதை எழுதியபோது இனி EMA எடுத்து எழுதிறதே இல்லை எண்டு நினைச்சிருக்கிறன். அப்பிடியான கரு எழுத வேணும் எண்டு பிளான் பண்ணி எழுத முடியாது. ஏதாவது கதைக்குத் தானா வந்து அமைய வேணும். அப்படி அமைந்தால் பாக்கறேன். அந்த நேரமே பலர் இந்த விசயம் சொல்லி இருக்கினம். நிறையப்பேர் அதை மன்னிச்சு, இல்ல மறந்து, இல்ல கடந்து வாழுறதுதான் நடக்குது.
உங்களின் மைல் கல்லாக எதை நினைக்கிறீர்கள் ? அதில் நீங்க அடைந்த தூரம் எவ்வளவு ?
எனக்கு இந்தக் கேள்வி குறிப்பா எதைக் கேக்கிறீங்க எண்டு விளங்க இல்ல. எழுத்துலகில் மைல் கல் எண்டு கேக்குறீங்களா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. இன்னும் எழுதவும், எழுதப் பழகவும் நிறைய இருக்கு எண்டுதான் நினைப்பேன்.
ஆனா சில கதைகள் எழுதியது மனதுக்கு நிறைவைத்த தரும். அப்பிடியான கதைகள் உண்டு.
பொதுவா கதைகள் குறிப்பு எடுத்து வைக்கும் குறிப்பேடு எங்க வைச்சு இருப்பிங்க இடத்தை மட்டும் சொல்லுங்க மத்ததெல்லாம் நான் ஆள் செட் பண்ணி வேலையை முடிச்சிக்கிறேன் நான் யார் னு சொல்லுங்க பார்ப்போம்
இது ஆரு? என்ர ஃபோனை சுட்டாலே போதும். எல்லாம் அதில இருக்கும். ஆர் எண்டு தெரிய இல்லையே. ஒரு ஊகம் இருக்கு. சொல்லி பிழைக்க வேண்டாம்.
சத்யவாணிக்கு தனிக்கதை வரும் என்று சொன்னீங்களே அது எப்ப வரும்
நிச்சயமாக வரும். எப்ப எண்டு தெரியாது. அந்தக் கதை தன்னை எழுத சொல்லி என்னை உந்தி தள்ள வேணும். அப்பதான் எழுதலாம்.
Hi
ஹாய்
O Radha part two yepo Sister
வரவே வராது சிஸ்டர்ர்ர்ர்ர்ர். தாடிக்காரன் அதுல தடி பிடிக்கிற தாத்தாவா வருவான் பரவாயில்லையா
காமெடி (சிரிப்பு) கதை எழுதும் ஐடியா இருக்கா ? சிரிப்பு என்ற பெயரில் பொய் சொல்லி கொலை பண்ணக் கூடாது
ஹாஹா சத்தியமா காமடி கதை எழுத அவ்வளவு விருப்பம். என்ன எனக்கு எழுத வராது. கிருபாவின் கமளியில் லேசா அந்த ஏரியாவை டச் பண்ணியிருப்பேன்.
Mam - Nenga writing ப்ரோபோசனல் vantha பிறகு eni எழுதவே mudiyathu or கூடாது athu pola சிட்டுவேஷன் vanthurukka - வந்துருந்த nenga eppdi atha சரி pannenga. அதாவது unga view la romba கஷ்டமான handling ku solution sollunga mam
அருமையான கேள்வி. கடவுளின் புண்ணியத்திலும் என் குடும்பத்தின் ஆதரவிலும் அப்படி ஒரு நிலை இதுவரை வர இல்லை. வராத மாதிரித்தான் என் எழுத்தை நானும் கொண்டுபோறேன் என்று நினைக்கிறேன்.
முதல் இப்படியான நிலை எப்ப வரும்?
- உடல் நிலை சரியில்லாதபோது.
- நாம் எழுதுவதால் வீட்டின் இயல்பான சுழற்சி மாறுகிறபோது.
- இல்லையா நாம் எழுதுவதை நம் வீட்டில் விரும்பாதபோது.
உடல் நிலை சரியில்லாவிட்டால் சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்ப வந்துவிடுவேன்.
வீட்டின் நாளாந்த சுழற்சி மாறுவது. அதாவது வீட்டு வேலைகளை பார்க்காமல் கதை எழுதுகிறபோது. நான் எப்பவுமே நினைப்பேன், நான் எப்படி என் கணவரில் தங்கி, அவரை நம்பி இருக்கிறேனோ அதேபோல் அவரும் என்னில் தங்கி, என்னை நம்பி இருக்கிறார். நம் இருவரையும் நம்பி, நம்மில் தங்கி நம் பிள்ளைகள். சோ அந்தக் கடமை எனக்கு முதன்மையானது. அதனால்தான் பெரும்பாலும் தினமும் இரவு 11க்கு மேல் கதை எழுத இருப்பேன்.
எனக்கும் வேலைகளை முடித்துவிட்டு இருந்தால் நிம்மதியாக இருக்கும். ஒன்று மண்டைக்குள் இருந்து நீ இன்னும் அந்த வேலைய முடிக்கேல்ல எண்டு ஏதோ ஒண்டு பிராண்டாது. ரெண்டாவது யாராவது என்னைக் குறை சொன்னா கோவம் வரும் எனக்கு. அதுக்கு குறை சொல்லுற இடத்தில என்னை நிறுத்த கூடாது எண்டு நினைப்பேன்.
அடுத்தது நாம் எழுதுவதை நம் வீட்டில் விரும்பாத போது. உண்மையில் இது பதில் சொல்ல சிரமமான ஒரு விசயம். அவரவர் வீடுகள், அது கொண்டிருக்கும் சரிபிழைகள் சார்ந்து இது முடிவாகும். என்னளவில என்னை எழுதாதே என்று சொல்ல கணவர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.
அதுவும் அவர்களுக்கான கடமைகளை கவனிப்புகளை நான் சரியாக முடிக்கிறபோது அப்படி ஒரு வார்த்தையே என்னை நோக்கி வரக்கூடாது. வந்தாலும் கேட்க மாட்டேன்.
கடவுளின் அருளால் என் பிள்ளைகள், கணவர், அம்மா, அக்காக்கள் எல்லோருமே நான் எழுதுவதை பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கிறார்கள். அதனால் எனக்கு இப்ப வரை அப்படி ஒரு நிலை வரேல்ல.
அடுத்த ஆடியோ நாவல் எப்போ வரும்
இந்தக் கேள்வியை நீங்க யாதவியைத்தான் கேக்கோணும்.
ஆட்டநாயகன தவிர வேற என்ன கேட்க

வாசு காண்டீபன் எல்லாளன் இப்படித்தான் கனவு கூட வருது 
யோசித்து யோசித்து இருக்குற கொஞ்சுண்டு மூளையும் காணாம போயிரும் போல
சஸ்பென்ஸ் எல்லாம் எப்ப ப்ரேக் பண்ணுவிங்க...எபி குட்டியா இருக்கு பெருசா தாங்க ப்ளீச் ...இந்த கதைக்கு லீவ் மட்டும் விட்டுடாதீங்க ஃபீல் குட் ஆத்தரேவிரைவில் சஸ்பென்ஸ் பிரேக் ஆகிடும். எனக்கும் அத்தியாயம் சின்னதா இருக்கிறது தெரியுது. எப்பவும் நான் அப்படித்தான். ஆனா இந்தக் கதைக்கு இதுக்கு மேல யோசிக்க வருதில்ல. இப்பிடி எழுதுகிறபோது எழுத எனக்கும் ஈஸியா இருக்கு. ஹாஹா லீவு வேணுமெண்டால்லாம் எடுக்க மாட்டேன். சில நேரங்களில் வீட்டு வேலைகள் கூடவா இருக்கும். அதனாலேயே களைச்சுப்போயிடுவேன். சில நேரங்களில் எழுதிக்கொண்டு போவது முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் எழுத வராது. ஒரு நாள் லீவு எடுத்துக்கொண்டு வருகிறபோது மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும். அப்ப ஈஸியா எழுதக்கூடிய மாதிரியும் இருக்கும். அதனால்தான் அப்பப்ப லீவு.
1. நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்கள்.
சில நேரம் இந்த சம்மர். பிள்ளைகள் இருவரும் கம்பஸ். மகனுக்கு ஒரு நேரம் லீவு. மகளுக்கு இன்னொரு நேரம் லீவு. அதேபோல் கணவரின் லீவு. இது மூன்றும் ஒன்றாகச் சந்தித்தால் அப்போது வருவோம். இந்த வருடம் வர விருப்பம். ஆனா இன்னும் பிள்ளைகள் அவர்களின் சம்மர் லீவு எப்ப எண்டு சொல்லேல்ல.
2. இலங்கைக்கு வர மாட்டீர்களா?
வருவேன்
இலங்கையில் உங்கள் சொந்த ஊர் எது?
யாழ்ப்பாணம் ஏழாலை சொந்த இடம். நாட்டுப் பிரச்சனையால் கிளிநொச்சியில் வந்து இருந்தோம். அங்கேதான் நான் பிறந்தேன். பிற்பாடு வவுனியா. இப்ப அம்மா இருக்கிறதும் வவுனியா.
Attachments
-
678 bytes Views: 1
-
678 bytes Views: 0
-
678 bytes Views: 0
-
680 bytes Views: 0
-
680 bytes Views: 0
Last edited: