• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தேத்தண்ணி வித் நிதா - 2026

நிதனிபிரபு

Administrator
Staff member
கதை எழுத வேணும் என்ற ஆர்வம் எப்போ எதனால வந்தது sis

அந்த ஆர்வம் சீரியஸா வந்தது இல்லை. சின்ன பிள்ளைத்தனமா வந்தது. நிறை குறைகளைச் சொல்லி முந்தி ரிவியூஸ் போடுவேன். அந்த நேரத்து ரைட்டர்ஸ் கதை எழுதிப் பாத்தத்தான் தெரியும், சும்மா போற போக்கில அது சரியில்ல, இது பிழை எண்டு சொல்லிட்டுப் போயிடுவினம் எண்டு சொல்லவும் ரோசம் வந்து நானும் எழுதி பாக்கிறானே எண்டு ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.


Can you please write another EMA story which defines how a woman can rebuild and move on her life with her husband after such betrayal. Already read few stories, but practically how it happens.. just wanted to understand that through your words..

காந்தன் சுபா கதை எழுதியபோது இனி EMA எடுத்து எழுதிறதே இல்லை எண்டு நினைச்சிருக்கிறன். அப்பிடியான கரு எழுத வேணும் எண்டு பிளான் பண்ணி எழுத முடியாது. ஏதாவது கதைக்குத் தானா வந்து அமைய வேணும். அப்படி அமைந்தால் பாக்கறேன். அந்த நேரமே பலர் இந்த விசயம் சொல்லி இருக்கினம். நிறையப்பேர் அதை மன்னிச்சு, இல்ல மறந்து, இல்ல கடந்து வாழுறதுதான் நடக்குது.


உங்களின் மைல் கல்லாக எதை நினைக்கிறீர்கள் ? அதில் நீங்க அடைந்த தூரம் எவ்வளவு ?

எனக்கு இந்தக் கேள்வி குறிப்பா எதைக் கேக்கிறீங்க எண்டு விளங்க இல்ல. எழுத்துலகில் மைல் கல் எண்டு கேக்குறீங்களா? அப்பிடி எல்லாம் ஒண்டும் இல்ல. இன்னும் எழுதவும், எழுதப் பழகவும் நிறைய இருக்கு எண்டுதான் நினைப்பேன்.

ஆனா சில கதைகள் எழுதியது மனதுக்கு நிறைவைத்த தரும். அப்பிடியான கதைகள் உண்டு.


பொதுவா கதைகள் குறிப்பு எடுத்து வைக்கும் குறிப்பேடு எங்க வைச்சு இருப்பிங்க இடத்தை மட்டும் சொல்லுங்க மத்ததெல்லாம் நான் ஆள் செட் பண்ணி வேலையை முடிச்சிக்கிறேன் நான் யார் னு சொல்லுங்க பார்ப்போம்

இது ஆரு? என்ர ஃபோனை சுட்டாலே போதும். எல்லாம் அதில இருக்கும். ஆர் எண்டு தெரிய இல்லையே. ஒரு ஊகம் இருக்கு. சொல்லி பிழைக்க வேண்டாம்.

சத்யவாணிக்கு தனிக்கதை வரும் என்று சொன்னீங்களே அது எப்ப வரும்

நிச்சயமாக வரும். எப்ப எண்டு தெரியாது. அந்தக் கதை தன்னை எழுத சொல்லி என்னை உந்தி தள்ள வேணும். அப்பதான் எழுதலாம்.

Hi
ஹாய்

O Radha part two yepo Sister
வரவே வராது சிஸ்டர்ர்ர்ர்ர்ர். தாடிக்காரன் அதுல தடி பிடிக்கிற தாத்தாவா வருவான் பரவாயில்லையா



காமெடி (சிரிப்பு) கதை எழுதும் ஐடியா இருக்கா ? சிரிப்பு என்ற பெயரில் பொய் சொல்லி கொலை பண்ணக் கூடாது

ஹாஹா சத்தியமா காமடி கதை எழுத அவ்வளவு விருப்பம். என்ன எனக்கு எழுத வராது. கிருபாவின் கமளியில் லேசா அந்த ஏரியாவை டச் பண்ணியிருப்பேன்.

Mam - Nenga writing ப்ரோபோசனல் vantha பிறகு eni எழுதவே mudiyathu or கூடாது athu pola சிட்டுவேஷன் vanthurukka - வந்துருந்த nenga eppdi atha சரி pannenga. அதாவது unga view la romba கஷ்டமான handling ku solution sollunga mam

அருமையான கேள்வி. கடவுளின் புண்ணியத்திலும் என் குடும்பத்தின் ஆதரவிலும் அப்படி ஒரு நிலை இதுவரை வர இல்லை. வராத மாதிரித்தான் என் எழுத்தை நானும் கொண்டுபோறேன் என்று நினைக்கிறேன்.

முதல் இப்படியான நிலை எப்ப வரும்?

  • உடல் நிலை சரியில்லாதபோது.
  • நாம் எழுதுவதால் வீட்டின் இயல்பான சுழற்சி மாறுகிறபோது.
  • இல்லையா நாம் எழுதுவதை நம் வீட்டில் விரும்பாதபோது.

உடல் நிலை சரியில்லாவிட்டால் சின்ன இடைவெளி எடுத்துக்கொண்டு திரும்ப வந்துவிடுவேன்.

வீட்டின் நாளாந்த சுழற்சி மாறுவது. அதாவது வீட்டு வேலைகளை பார்க்காமல் கதை எழுதுகிறபோது. நான் எப்பவுமே நினைப்பேன், நான் எப்படி என் கணவரில் தங்கி, அவரை நம்பி இருக்கிறேனோ அதேபோல் அவரும் என்னில் தங்கி, என்னை நம்பி இருக்கிறார். நம் இருவரையும் நம்பி, நம்மில் தங்கி நம் பிள்ளைகள். சோ அந்தக் கடமை எனக்கு முதன்மையானது. அதனால்தான் பெரும்பாலும் தினமும் இரவு 11க்கு மேல் கதை எழுத இருப்பேன்.

எனக்கும் வேலைகளை முடித்துவிட்டு இருந்தால் நிம்மதியாக இருக்கும். ஒன்று மண்டைக்குள் இருந்து நீ இன்னும் அந்த வேலைய முடிக்கேல்ல எண்டு ஏதோ ஒண்டு பிராண்டாது. ரெண்டாவது யாராவது என்னைக் குறை சொன்னா கோவம் வரும் எனக்கு. அதுக்கு குறை சொல்லுற இடத்தில என்னை நிறுத்த கூடாது எண்டு நினைப்பேன்.

அடுத்தது நாம் எழுதுவதை நம் வீட்டில் விரும்பாத போது. உண்மையில் இது பதில் சொல்ல சிரமமான ஒரு விசயம். அவரவர் வீடுகள், அது கொண்டிருக்கும் சரிபிழைகள் சார்ந்து இது முடிவாகும். என்னளவில என்னை எழுதாதே என்று சொல்ல கணவர் உட்பட யாருக்கும் அனுமதி இல்லை.

அதுவும் அவர்களுக்கான கடமைகளை கவனிப்புகளை நான் சரியாக முடிக்கிறபோது அப்படி ஒரு வார்த்தையே என்னை நோக்கி வரக்கூடாது. வந்தாலும் கேட்க மாட்டேன்.

கடவுளின் அருளால் என் பிள்ளைகள், கணவர், அம்மா, அக்காக்கள் எல்லோருமே நான் எழுதுவதை பெருமைக்குரிய ஒன்றாகப் பார்க்கிறார்கள். அதனால் எனக்கு இப்ப வரை அப்படி ஒரு நிலை வரேல்ல.


அடுத்த ஆடியோ நாவல் எப்போ வரும்
இந்தக் கேள்வியை நீங்க யாதவியைத்தான் கேக்கோணும்.

ஆட்டநாயகன தவிர வேற என்ன கேட்க😌😌வாசு காண்டீபன் எல்லாளன் இப்படித்தான் கனவு கூட வருது 🥹🥹 யோசித்து யோசித்து இருக்குற கொஞ்சுண்டு மூளையும் காணாம போயிரும் போல 😭 சஸ்பென்ஸ் எல்லாம் எப்ப ப்ரேக் பண்ணுவிங்க...எபி குட்டியா இருக்கு பெருசா தாங்க ப்ளீச் ...இந்த கதைக்கு லீவ் மட்டும் விட்டுடாதீங்க ஃபீல் குட் ஆத்தரே

விரைவில் சஸ்பென்ஸ் பிரேக் ஆகிடும். எனக்கும் அத்தியாயம் சின்னதா இருக்கிறது தெரியுது. எப்பவும் நான் அப்படித்தான். ஆனா இந்தக் கதைக்கு இதுக்கு மேல யோசிக்க வருதில்ல. இப்பிடி எழுதுகிறபோது எழுத எனக்கும் ஈஸியா இருக்கு. ஹாஹா லீவு வேணுமெண்டால்லாம் எடுக்க மாட்டேன். சில நேரங்களில் வீட்டு வேலைகள் கூடவா இருக்கும். அதனாலேயே களைச்சுப்போயிடுவேன். சில நேரங்களில் எழுதிக்கொண்டு போவது முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கும். சில நேரங்களில் எழுத வராது. ஒரு நாள் லீவு எடுத்துக்கொண்டு வருகிறபோது மைண்ட் பிரெஷ்ஷா இருக்கும். அப்ப ஈஸியா எழுதக்கூடிய மாதிரியும் இருக்கும். அதனால்தான் அப்பப்ப லீவு.

1. நீங்கள் தற்போது எங்கு இருக்கிறீர்கள்.

சில நேரம் இந்த சம்மர். பிள்ளைகள் இருவரும் கம்பஸ். மகனுக்கு ஒரு நேரம் லீவு. மகளுக்கு இன்னொரு நேரம் லீவு. அதேபோல் கணவரின் லீவு. இது மூன்றும் ஒன்றாகச் சந்தித்தால் அப்போது வருவோம். இந்த வருடம் வர விருப்பம். ஆனா இன்னும் பிள்ளைகள் அவர்களின் சம்மர் லீவு எப்ப எண்டு சொல்லேல்ல.

2. இலங்கைக்கு வர மாட்டீர்களா?

வருவேன்

இலங்கையில் உங்கள் சொந்த ஊர் எது?

யாழ்ப்பாணம் ஏழாலை சொந்த இடம். நாட்டுப் பிரச்சனையால் கிளிநொச்சியில் வந்து இருந்தோம். அங்கேதான் நான் பிறந்தேன். பிற்பாடு வவுனியா. இப்ப அம்மா இருக்கிறதும் வவுனியா.
 

Attachments

Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member



அடுத்த கதையில் வட மாகாணம் இல்லாமல் வட மேல் மாகாணத்தை கதைக் களமாக பயன் படுத்த முடியுமா? SL எழுத்தாளர்கள் அனைவரும் வடக்கு, கிழக்கு மாகாணத்தை மட்டுமே பயன் பயன்படுத்துகின்றனர். யாருமே NWP ஐ பயன் படுத்த முனைவது இல்லை... 😢 😢

அப்படி எடுக்கக் கூடாது என்று இல்லை. கதைக்களம் எனக்கு அமைய இல்லை. ஆனால் இனி முயற்சி செய்யப்பார்க்கிறேன். சரியா?


இப்போ நீ தந்த கனவு கதையின் தொடர்ச்சியாக ஆட்ட நாயகன் எழுதுற மாதிரி உங்களுக்கு நீங்க எழுதிய வேறேதும் கதைக்கு தொடர்ச்சியாக எழுதணும்ங்கற ஐடியா இருக்கா?

கதை எழுதுகிறபோது அப்படி நிறைய ஐடியாக்கள் வரும். பிறகு வந்த வேகத்திலேயே போயிடும்.

ஏன்னா எனக்கு அப்படி தோணும் உங்களின் நிறைய கதைகள் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் சீக்கிரம் முடிந்தது மாதிரி பீல் இருக்கும் so ஆட்டநாயகன் மாதிரி கதையின் தொடர்ச்சி கள் வருமா? அக்கா

நிறையப்பேர் கதை முடித்தபோது இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் என்று சொல்வார்கள்தான். எனக்கும் எழுத விருப்பம்தான். ஆனால், கதைக்குள் இருக்கிற பிரச்சனைகளை தீர்த்தபிறகு, நாயகன் நாயகியை சுமூகமான ஒரு இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியபிறகு வெறும் ஃபீல் குட்டாக மட்டும் யோசிக்க எனக்கு வராது. ஆனா, இப்ப எல்லாம் கொஞ்சம் திருந்திட்டேனே. பின்னால கொஞ்சம் எழுதுறேன்.

உங்களின் அழுத்தமான கதை களம் தவிர்த்து எழுத யோசித்தது உண்டா ? அப்படியென்றால் அது என்ன?

யோசிக்காமல் என்ன. இன்னும் சொல்லப்போனால் மென்மையான கதைகள், நகைச்சுவையான கதைகள் எழுத மிகவும் ஆசை. என்ன வராது. எனக்கு ஏதோ ஒரு ஆழமான விசயம் வேணும் சொல்லுறதுக்கு. இல்லாட்டி எழுத இருந்தா நித்திரைதான் வரும்.

உங்கள் மனசாட்சியை தொட்டு சொல்லவும் நீங்கள் எழுதிய எழுதும் கதைகள் 18+ தானா ?????ஃபீல் குட் என்பதன் மீனிங்கை ஒரு பத்து பக்கத்திற்கு விளக்கி சொல்லவும் ஐ யம் பாவம் இந்த இரண்டு டவுட் டையும் க்ளியர் பண்ணவும் சங்கத்தின் விளுது

ஹாஹா அதெல்லாம் சும்மா ஃபன்னுக்கு. உங்க எல்லாரையும் வம்பிழுக்க சொல்லுறது. ஆனா ஃபீல் குட் என்பதற்குள் எல்லா வகையான உணர்வுகளும் அடங்கி இருக்கோணும்தானே? அப்பிடி பாத்தா நான் எழுதுறது ஃபீல் குட்தான்:ROFLMAO:.
 

Attachments

Last edited:

நிதனிபிரபு

Administrator
Staff member
Ungaloda aval aarani novel ah na padichi mudicha Pirahu ninaitha muthal visayam.. title avan nikeathan nu iruthu irukalamo apdinu.. Neega ninaithathu iruku gala ?

அப்படி நினைக்கேல்ல. ஆனா ஆரணிய முடிச்ச நேரம் இதை யாரோ சொல்லி இருந்தாங்க. ஓம் என்ன, அவன் நிகேதனும் பொருந்தும் இந்தக் கதைக்கு எண்டு நினைச்சேன்.

இது வரை வந்த கதையின் கதாபாத்திரங்களில் உங்களைப் பிரதிபலிப்பவர் யார் ?

அப்பிடி எனக்குச் சொல்ல தெரிய இல்லையே. கொஞ்சம் ஜீவனிதா, கொஞ்சம் ஆரணி, நிறைய பிரேமி இப்பிடிக் கலக்கலாம் எண்டு நினைப்பேன்.


எனக்கு ஆட்ட நாயகனை தான் கேட்கனும் , பதில் கிடைக்காதா?

கிடைக்காது :ROFLMAO:

உங்கள் கதாநாயகிகளில் நான் இந்த மாதிரி இல்லை , ஆனால் இருக்க ஆசைப்படும் நபர் யார் ? அல்லது இந்த நாயகியாக என்னையே பிரதிபபத்தேன் எனும் நபர்

உண்மையாவே அப்பிடி நான் யாரையும் நினைச்சது இல்லை. நான் என்னைப் போல மட்டுமே இருக்க ஆசைப்படுறேன். எனக்கு என்னைப் பிடிக்கும்:love:.


Manippayaa kadhale epo poduvinga akka site la? Innum vegan cake receipe tharala enaku endru ninaivu paduthi kondu naan vidaiperugiren

அச்சோ சொறிமா. திரும்பவும் மறந்துட்டேன். ரெசிபி தாறன் சரியா. ஆட்டநாயகன் என்னையும் சேத்து ஆட வைக்கிறான். கொஞ்சம் வெயில் வேற வருதா, அதால தோட்டத்தில கொஞ்சம் வேலையும் போகுது. குட்டியா நான் பிஸி.

மன்னிப்பாயா காதலே இன்னும் கொஞ்ச நாளாகும் போலமா. புக் ரீபிரிண்ட் போய்க்கொண்டே இருக்கு. நேற்றும் பிரிண்ட் போட்டு அனுப்பினேன்.

சிசிராவுக்கு ஏன் நியாயம் செய்யலை? எவ்வளவு அழ வைச்சிட்டிங்க‌ நீங்க.. நீங்க நிறையவே விளக்கம் கொடுத்து இருக்கிங்க இதுக்கு இருந்தாலும் நான் கோவம் கோவம் தான் உங்க மேல 🫣

ஹாஹா இதுக்கு நான் என்ன சொல்லட்டும். நோ கோவம் ஓகே. வாங்க நானும் நீங்களும் சமாடானம் ஆகுவோம்.

கதைக்கு முன் , பின் நெருங்கிய நட்புடன் விவாதிப்பதுண்டா ? யார் அவர் ?

முதல் நபர் எப்பவுமே ரோசி அக்காதான். பெரும்பாலும் நடந்து நடந்து அந்தக் கதையையே வாயால சொல்லி அவாக்கு வொயிஸ் அனுப்புவேன். அவாவும் அதை கேட்டுட்டு ஏதாவது சொல்லுவா. அது ஒரு டிஸ்கஷன் மாதிரி நடக்கும். நானும் அவாவும் கதைச்சதுகளை சேவ் பண்ணி வச்சிருப்பேன். பிறகு அடுத்த நாள் நடக்கிறபோது நாங்க கதைச்சதுகளை கேட்டுக்கொண்டே நடப்பேன். அப்ப இன்னும் கதை பற்றின தெளிவு, இல்ல போக வேண்டிய பாதை, புது ஐடியா வரும்.

கதை எழுதிக்கொண்டு இருக்கிறபோது ஏதாவது கேள்வி அல்லது குழப்பம் வந்தால் சரஸ்வதி அக்கா, பிரியா ரெண்டு பேரோடயும் கதைப்பேன். நீ தந்த கனவு கதை எழுதினபோது சரஸ்வதி அக்கா பாவம். அவாவை போட்டு படுத்தி எடுத்துட்டேன்.

எனக்கு எப்பவும் என்னை விட வயதில் பெரியவர்களின் பக்குவமும் அனுபவமும் வேணுமா இருக்கும். அந்த அனுபவம், பக்குவத்தில் இருந்து அவங்க எதையாவது சொல்லும்போது அது இன்னுமே ஆழமா என்னை சிந்திக்க வைக்கும்.

சில நேரம் என் கணவரிடம் அதை பற்றி கதைப்பேன். பிள்ளைகளோடு கூட. சின்ன பிள்ளைகள் எண்டு நினைப்போம். சில நேரம் அவர்கள் சொல்லுகிற கருத்துகள் நம்ப முடியாத அளவுக்கு ஆழமா இருக்கும். இணை பிரியா நிலை பெறவே கதை எழுத காரணமே என்னுடைய மகன்.


கதை கருவை எப்படி உருவாக்குரீங்க ,

ஏதோ ஒரு சம்பவம் நம்மை பாதிக்கும். அதை நடுவில் வைத்து முன்னுக்கு பின்னுக்கு என்று கதையை பற்றி யோசிப்பேன். அது தொடர்ந்து என் மனதில் இருந்தாலோ, அது பற்றின யோசனை எனக்குள்ள விடாமல் ஓடினாலோ அதை நோட் பண்ண ஆரம்பிச்சிடுவேன். அடிக்கடி அந்த கதை பற்றி ஏதோ ஒண்டு மைண்ட் ல வந்துகொண்டே இருக்கும். எல்லாத்தையும் குறிச்சு வைப்பேன். எண்டைக்காவது ஒரு நாள் அது எல்லாத்தையும் எடுத்து வாசிக்கிறபோது அட இது நல்லாருக்கே எண்டு மனதில பட்டா கதையாகும். இல்லையா டிலீட் பண்ணிடுவேன்.

2 இப்போ வரை நீங்க எழுத நினைத்தை முழுயாக எழுத முடியாத கதாபாத்திரம் எது ,

ஆரணி
அன்பினி
சத்தியநாதன் - இவனை இன்னும் மோசமா காட்ட பிளான் போட்டேன். அந்தளவு மோசமா இறங்கி எழுத வரவில்லை.

அதே சமயம் எழுதியது எந்ந கதாபாத்திரம்
பெரும்பாலும் மிகுதி எல்லாமே. இன்னும் சொல்லப்போனா மிகுந்த திருப்தியா தந்தது அனந்தன். அவனை ஹீரோவா நிலை நிறுத்துவேனா எண்டு பயந்தேன். ஆனா, அந்த கதையை வாசிச்ச யாராலும் மறக்க முடியாத ஒரு ஹீரோவா அவன் ஆயிட்டான். அதே போல காண்டீபன். அவன் இறந்ததா காட்டினாலும் நான் நினைச்சதுபோல எழுதி முடிச்சேன்.

3 உங்கள் மனதிற்கு நெருக்கமான நாயகன், நாயகி யார்

உண்மையாவே சிரமமான கேள்வி. இருந்து யோசிச்சா எல்லாரையுமே பிடிக்கும். அவர்களிடம் இருக்கிற ஏதோ ஒரு நியாயம் எனக்கு பிடிக்கும்.

4பிடித்த வில்லன் யார்?
யோசிக்கிறேன். அப்பிடி பெருசா யாரும் இல்ல போல இருக்கு. தூயவனின் அப்பா ?

5. இவரை இந்த மாதிரி எழுதனும் நினைத்தது யார்?
எல்லாரையுமே. முடிஞ்சவரைக்கும் நினைச்ச மாதிரித்தான் எழுதுவேன்.


எழுதியாதை விட சிறப்பாக வந்தவார் யார்?
கௌசிகன், அனந்தன், மோகனன்

கௌசி - இவ்வளவு பேர் மனதில் இடம் பிடிப்பான் எண்டு நினைக்கவே இல்ல. அந்தக் கதைல என் முழு போகஸும் பிரேமிதான்

அனந்தன் - மேல சொன்ன மாதிரி ஹீரோவா வந்திடுவானா எண்டு பயந்தேன். ஆனா எல்லார் மனதையும் கவர்ந்த அருமையான ஹீரோ ஆய்ட்டான்.

தாடிக்காரனை யாருக்குமே பிடிக்க கூடாது எண்டு நினைச்சேன்(முதல் பார்ட் + செக்கண்ட் பார்ட் ஆரம்பிக்கும்போதும் இருந்த மனநிலை). பிறகு அந்த சோக கதையை எங்க போய் சொல்ல?

காண்டீபன் - இத்தனை பேர் மனதை கவர்வான் எண்டு நினைக்கவே இல்ல.



ஹாய் நிதா... (தில்லானா மோகனாம்பாள் மனோரமா மாதிரி படிக்கவும்) உங்க பேனாவுல எழுதினா தான் இவ்ளோ அருமையா எழுத முடியுமா? இல்ல எங்க பேனாவுல நாங்க எழுதுனாலும் கதை நல்லா எழுத வருமா?. உங்ளை போல எழுத வருமா? அதுலயும் உங்களை போல 18+ ரொமான்ஸ் ( 😜😜😜) எழுத வருமா?.. சொல்லுங்கஜி.

ஹாஹா… எனக்கு எல்லாம் உண்மையா அவ்வளவு வடிவா எழுத வராது. இன்னுமே பயிற்சி வேணும் எண்டுதான் நினைப்பேன். இன்னும் எவ்வளவோ அழகா எழுதலாம்.

நீங்க என்னை விட இன்னும் சிறப்பா எழுதுவீங்க. நான் இருந்து எழுதுறேன். நீங்க எழுத இல்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

18+ ரொமான்ஸ் - ஹாஹா வரும் வரும் ஏன் வராம


Crime novel எழுத முயற்சி எதுவும் உண்டா? 🫠🫠
விருப்பம் இருக்கு. எழுத வருமா எண்டுற ஒரு டவுட்தான். இன்வெஸ்டிகேஷன் கதையே எனக்கு வரும் எண்டு தெரியாது. நீ தந்த கனவு அவ்வளவு சிரமமா இருந்தது. ஆனா இப்ப ஆட்டநாயகன் ஈஸியா இருக்கு. இனி இன்வெஸ்டிகேஷன் கதை என்னால எழுத முடியும் எண்டு ஒரு நம்பிக்கை. அதே போல கிரைம் நாவல் முயற்சி எடுக்கோணும். ஏதாவது கரு கிடைக்கட்டும்.

சொல்ல நினைப்பது - நீங்க இன்னும் நிறைய கதைகள் எழுதி எங்களை எப்போதும் மகிழ்விக்கணும்❤️

மிக்க மிக்க நன்றியும் அன்பும்.

கேட்க நினைப்பது - 1.இவ்ளோ அழுத்தமான கதைகள் எழுத ஹோம் வொர்க் எதுவும் செய்வீங்களா நிதா டியர்?

இல்ல. எனக்கு அப்பிடி எழுதினா மட்டும்தான் எழுத வருது. இல்லாட்டி சொல்ல ஒண்டுமே இல்லை மாதிரி இருக்கும். எனக்கு வந்தான், சாப்பிட்டான், சமைச்சான் எண்டு எழுத முடியாது.

Favourite Tamil Actor?
உண்மையா எனக்கு அப்பிடி ஆரும் இல்லை. விஜய் படங்கள் வந்தால் தியேட்டர் போவோம். அதுக்கும் அந்த மனுசன் அரசியலுக்கு வந்து ஆப்பு வச்சிட்டார். கமல் நடிப்பில் ஒரு பிரமிப்பு உண்டு. அவ்வளவுதான். மற்றும்படி நான் படம், சீரியல் எதுவும் பாக்கறது இல்லை. அதுக்காக அதெல்லாம் கூடாது, அதனால பாக்கிறேல்ல எண்டு நினைச்சிடாதீங்க.

என்னால அவ்வளவு நேரம் இருக்க முடியிறேல்ல. அலுப்பா இருக்கிறது. நீயா நானா கூட வேலை செய்தபடி ஓடியோவா தான் கேப்பேன்.


3.திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ற கலாச்சாரத்தைப் பற்றிய உங்கள் கருத்து?

எனக்கு உடன்பாடு இல்லை.

உங்க கதைகள் தவிர்த்து நீங்க படிச்சு ரசிச்ச மற்ற எழுத்தாளர் கதைகள் எது.. அது ஏன் பிடிச்சது..

நிறைய கதைகள், எழுத்தாளர்கள்.

ரோசி அக்கா, நித்யா கார்த்திகன், ஹேமா ஜெய், உஷாந்தி, வேதா விஷால் அக்கா, தேவி மனோகரன், யுவ கார்த்திகா, ஹாசினி இன்னும் நிறையப்பேர். ராமயா ராஜன், ஈஸ்வரி(மதன மாளிகையில் ) , வீனா சக்தி , பிரியா பாண்டீஸ், மல்லிகா மணிவண்ணன் , இன்னும் நிறையப்பேர். பெயர் நினைவு வரேல்ல. விடுபட்ட ரைட்டர்ஸ் குறை நினைச்சிடாதீங்க. தமிழ் மதுரா.

நீங்கள் readers காக.. எப்போதாவது உங்கள் கதையின் போக்கை... சிறு வளைவு சுழிவிலேணும்...மாற்றி அமைத்து இருக்கிறீர்களாsis???

இல்லை. கேட்பார் இன்றி காதல் கதைல பிரிக்க ஆசை இருந்தாலும் எல்லா ஜோடியையும் பிரிக்க வேண்டாமே எண்டு நினைச்சேன். போல் வச்ச நேரம் ரீடர்ஸும் பிரிக்க வேண்டாம் எண்டு சொன்னாங்க . சோ அது ஒண்டு மட்டும் அப்படி நடந்தது .

ரொம்ப நாட்களாக.. கேட்க நினைத்த கேள்வி sis இது இன்னும் நிறைய இருக்கு... personal and professional both.. ஆனா நான் இன்று busy.. Innaiku ஏன் இந்த meet up??? நாளை மீண்டும் வைங்க.. ப்ளீச்...🤣😂..

ஓகே ஓகே ஆறுதலாவே வாங்க

Sagayan மாதிரி காதல் கதைகளையே எழுதலாமே , ஏன் அழுக வைக்கறீங்க

ஒரே மாதிரியே எழுதினா போர் அடிச்சிடாதா. அழ வைக்க எண்டு நினைக்க மாட்டேன். அது நீங்க எல்லாரும் சும்மா அழுறீங்க எண்டு நினைக்கிறேன்(அடிக்க வராதீங்க ப்ளீஸ் )

நீங்க எழுதிய கதைகளில் எந்த கதையாவது இதை வேற மாதிரி எழுதி இருக்கலாமோனோ இல்ல ஏதாவது கதாபாத்திரத்தை வேற மாதிரி காட்டி இருக்கலாமானோ தோணி இருக்கானு சொல்லுங்க சிஸ்

ஆரணி - பிளான் பண்ணினது வேற மாதிரி எழுதினது வேற மாதிரி.

அன்பினி மேல சொன்ன மாதிரி இப்ப வரைக்கும் அந்த ஜோடியா பிரிச்சிருக்கலாமோ எண்டுற எண்ணம் இருக்கு .

காதல் கதைகள் குடும்ப கதைகள் க்ரைம் மற்றும் த்ரில்லர் கதைகள் இதில் எதை எழுதுவது உங்களுக்கு ஈசியாக இருக்கும் என்று நினைக்கிறீங்க

எந்த ஜோனரும் முதல் முறை எழுதுகிறபோது சின்ன தடுமாற்றம் இருக்கும். அதுவே இரண்டாவது மூன்றாவது என்று போகிறபோது ஈஸி ஆகிடும். எனக்கு அழுத்தமா இருக்கோணும். இருந்தா ஈஸியா எழுதிடுவேன். பெரிய ஆழம் இல்லாத கதைகள் எழுத ஆசை. ஆனா எழுத இருந்தா வராது. சோ அதுதான் எனக்கு கஸ்டமா இருக்கும்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
யார் உங்களுக்கு முன் மாதிரி ? எழுத்துலகம் மற்றும் சொந்த வாழ்வு

ரெண்டுலயும் குறிப்பா சொல்ல யாரும் இல்ல. என்னை சுத்தி இருக்கிறவர்களை வச்சு படிக்கிற பாடங்களும், நாங்க விடுற பிழைகளில் இருந்து படிக்கிறதும்தான். அதே நேரம் ரமணி அம்மாவின் எழுத்து பிடிக்கும். அதாவது ஒரு விசயத்தை அவா சொல்லுற விதம், சொற்களை கையாளும் விதம் , காட்சியை நகர்த்தும் விதம் எல்லாம் அவ்வளவு ஆச்சரியமா இருக்கும்.

நீங்க வாசகியாவும் நான் நிதாவாகவும் இருந்திருந்தா எனட்ட என்ன கேள்வி கேட்டுருப்பிங்க?

இந்தக் கேள்விக்குப் பதில நிறையத்தரம் யோசிச்சேன். என்ன கேப்பேன் எண்டு தெரியவே இல்லை. எனக்கு அந்த நிதாவிடம் எல்லாவற்றையும் சிரிப்போடயே கடக்கிறீங்களே எப்பிடி முடியுது எண்டு கேட்பேனா இருக்கும்.

காரணம் இங்க சில நேரங்களில் பொங்கல் போஸ்ட்டுகளை பாக்கிறபோது இதெல்லாம் எனக்கும் நடந்ததே, அத நான் ஒரு விசயமாவே எடுக்கேல்லையே எண்டு எனக்குள்ள ஓடி இருக்கு. சோ அப்பிடி கேப்பேன் போல .

என் பெயரில் ஒரு கதை எழுதவும்…
எழுதிட்டா போச்சு. அதுக்குப் பெயரை சொல்லவும் :ROFLMAO:

Hiii ☺ உங்க எழுத்துக்களோட ஒரு தீவிர ரசிகை. உங்களோட கதைகள் ஒரு 27 வாசித்திருப்பேன் Kindle ல. உங்க எழுத்துகள் அதோட கதைக்கு தேவையான உணர்வுகள் எல்லாம் ரொம்ப அழகா சொல்றீங்க. எல்லா கதைகளையும் பலமுறை வாசிக்கலாம். ஆனால் நான் என்ன ரொம்ப அழ வைத்த கதைகளை மறுமுறை எட்டி கூட பார்க்கிறது இல்ல. சில கதைகளை 4 டைம்ஸ் கூட ரீட் பண்ணிருக்கேன். உங்களோட 30 ஸ்டோரி ரீட் பண்ண பிறகு .......... எண்ட first கமெண்ட். இலங்கை தமிழ் ரொம்ப வடிவா இருக்கு. Question: எது உங்கள கதையோட வில்லன் or negative character அவங்களோட point of view+அவங்களோட good side பத்தி எழுத thought வந்தது? எல்லாரும் negative person கிட்ட negativity mattum பாக்கும் போது நீங்க அவங்க கிட்ட கூட ஒரு பாசிட்டிவ் இருக்கும்னு...... சொல்றீங்க I like this very much

உங்கள் பாராட்டுக்கு மிக்க மிக்க நன்றியும் அன்பும். அவரவர் பக்கத்தை அவரவர் இடத்தில இருந்து சொல்லுறது எனக்கு பிளஸாவும் இருக்கிறது, மைனஸாவும் இருக்கிறது.

ஒண்டு எப்பிடி இப்பிடி அவரவர் மனநிலையை அவங்க இடத்தில இருந்து சொல்லுறீங்க எண்டு வியப்போடு கேக்கிறது நடக்கும். அதே நேரம் அந்த நெகட்டிவ் கரக்ட்டருக்கு நான் சப்போர்ட் பண்ணுறேன் எண்டுற கருத்தும் வரும்.

உண்மையாவே யாரையும் சப்போர்ட் பண்ண நான் நினைக்கிறதே இல்ல. நாம் செய்ற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும். அது சரியா பிழையா எண்டுறது அடுத்த கட்டம். ஆனா காரணம் இருக்கும் இல்லையா?

அந்தக் காரணத்தைத்தான் நான் சொல்லுவேன். அந்தக் காரணத்தோடு அவன் செய்த காரியத்தை இணைச்சுப் பாத்து அவனை ரீடர்ஸ் விளங்கிக்கொள்ள வேணும் எண்டுறதுதான் என் நோக்கம்.

காரணத்தை அறிஞ்ச பிறகும் ஒரு ரீடரால அவனை ஏற்க முடிஞ்சாலும் சரிதான், ஏற்க முடியாவிட்டாலும் சரிதான். யோசிச்சு பாருங்க நம்ம வீட்டுல கூட யாராவது எதையாவது செய்திட்டு வந்தா, ஏன்டா இப்பிடி செய்தாய் எண்டு கேப்போம். அதாவது காரணம் கேப்போம்.

அவங்க அதை சொன்ன பிறகு அவன் செய்ததை ஏற்க முடிஞ்சா சமாதானமா போவோம். ஏற்க முடியாட்டி அப்பவும் நீ செய்தது பிழை எண்டு சொல்லுவோம்.

அதைத்தான் நான் செய்றேன். ஒருவன் ஒரு காரியத்தை செய்தால் அதற்கான காரணத்தை அவன் இடத்தில இருந்து சொல்லுவேன். அது சரியா, அவனை ஏற்கலாமா இல்லையா எண்டுறதை ஒவ்வொரு ரீடரும் முடிவு செய்யட்டும். அது அவர்கள் அதை பார்க்கிற பார்வை, எடுக்கிற விதத்தில் அமையும். ஆனா காரணத்தை சொல்ல வேண்டியது என் கடமை எண்டு நினைப்பேன்.

இந்த எண்ணம் எப்படி வந்தது எண்டு தெரியேல்ல. எப்பவுமே ஒருவர் ஒண்டு செய்றார் எண்டா, அதை அவரை செய்ய வச்சது என்ன எண்டு யோசிப்பேன். அது காரணமா இருக்கலாம்.

ரீடர்ஸ்க்கு பதில் சொல்ல தவிர்க்க வேண்டிய சூழ்நிலையை எப்படி கையாளுகிறீர்?

வடிவேலு மாதிரி சிரிச்சு சமாளிக்கிறதுதான். அப்பிடி எல்லாம் இல்ல. கொஞ்ச நாள் போகட்டும். பிறகு சொல்லுறேன் எண்டு தன்மையா நேரா சொல்லிட்டா ஓகே.

ரீடர்கள் உங்கள் கதையில் கேட்கும் கேள்விக்கு அல்லது விமசர்சனத்திற்கு உங்களுக்கு முன் வேறு ரீடர் பதில் சொன்னால் , அதில் உங்களுக்கு மாற்று கருத்து இருக்கும் நிலையில் என்ன செய்வீர்கள் ?

அவர் மனம் நோகாதபடிக்கு என் கருத்தை சொல்லுவேன். ஆனா அதை நிரூபிக்கவோ நியாயப்படுத்தவோ போக மாட்டேன். அதாவது பதிலுக்கு பதில் என்று போக மாட்டேன்.

I love you Nitha Patti… 😜😜😜
நானும் உங்களைக் காதலிக்கிறேன்:ROFLMAO:

Hi Mam, I’m one of your silent readers. I’ve never shared a review before, but your stories have stayed with me deeply. I have two genuine doubts that I’ve always wanted to ask you. First — have readers’ reviews ever made you rethink a character or storyline in a way you hadn’t originally intended? I mean, when you wrote something with one emotion or perspective in mind, but readers understood it differently — did that ever make you reconsider or change your direction?

இல்லை அப்படி செய்தது இல்லை. திரும்ப அதை பற்றி யோசிச்சு கதையையோ கதையின் போக்கையே மாத்திற அளவுக்கு போனது இல்லை. அப்படி போக கூடாது எண்டு நினைப்பேன். அந்த ரீடர் அதுவரை வந்த எபிஸோட்ஸ வைத்து ஒரு கருத்து சொல்லுவார். ஆனா என்னட்ட முழு கதையும் இருக்கும் இல்லையா. அதுக்கு ஏற்ற மாதிரித்தானே நான் கதையை கொண்டுபோய்க்கொண்டு இருப்பேன் . சோ அவர் சொல்கிறதுபோல் நான் மாத்தினால் பின்னால நான் நினைச்சதுபோல் கதையை கொண்டுபோக முடியாமல் போக சான்சஸ் இருக்கு. அது பிறகு பெரிய தலைவலியாக இருக்கும்.

ஆனால் ஒன்று, நான் சொல்லாத ஒரு பாயிண்ட் அல்லது நான் யோசிக்காத கோணத்தில் ரீடர் ஒன்றை சொல்லி, அதை கதையில் சேர்ப்பதால் நான் யோசிச்சு வச்சிருக்கிற கதைக்கு எந்த பாதிப்பும் வராது என்று இருந்தால் நிச்சயம் அதை சேர்க்க யோசிக்கவே மாட்டேன்.

அப்பவும் அந்த கருத்தை அப்படியே கொப்பி பண்ணி அந்த எபிசோடிலேயே போட்டு வச்சிருப்பேன். கதை முடிந்து எடிட் பண்ணுகிறபோது அந்த பாயிண்டை சேர்த்தால் அது கதையை இன்னுமே வலுக்கூட்டுமா என்று பார்த்து சேர்ப்பேன். அவ்வளவுதான். கதையின் போக்கை எல்லாம் மாத்த மாட்டேன்.

Second — now that you’re writing chapter by chapter for your Facebook followers, posting daily… have you ever felt that if you had just one more day, you might have written an even better version? Not because you lack clarity, but simply because creativity sometimes needs breathing space — yet you don’t want to keep your readers waiting. I ask this only because, as a reader who deeply values your stories, I sometimes wonder about the balance between creative freedom and reader expectations. With respect and admiration. 💛

அப்படி எனக்கு ஒரு சின்ன இடைவெளி தேவைப்பட்டாலோ, ஒரு குழப்பமான, அல்லது தெளிவில்லாத மனநிலை இருந்தாலோ, அல்லது எழுதிக்கொண்டு போகிறபோது ‘இல்ல இதை இன்னும் நன்றாக சொல்ல வேணும்’ எண்டு பட்டாலோ யோசிக்கவே மாட்டேன். இண்டைக்கு எபி வராது எண்டு போட்டுட்டுப் போயிடுவேன்.

அது அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கும் ரீடர்ஸ பெரிதாக ஏமாற்றும் எண்டு தெரியாம இல்லை. ஆனா எபி போடோணும் எண்டுற கட்டாயத்தால் திருப்தி இல்லாம எழுதிப் போட்டு அவர்களின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கிறதுக்கு பதிலா ஒரு நாள் காக்க வச்சு திருப்தியான எபி குடுக்கிறதுதான் இந்த விசயத்துக்கு சரியான தீர்வு எண்டு நினைக்கிறேன். அதனாலதான் அடிக்கடி லீவு போட்டுடுவேன்:D.


உங்களின் அழுத்தமான கதை களம் தவிர்த்து எழுத யோசித்தது உண்டா ? அப்படியென்றால் அது என்ன ?

ஏற்கனவே சொன்னேன் எண்டு நினைக்கிறேன். நகைச்சுவையாக, பெரிய சோகம் இல்லாத கதைகளாக எழுத விருப்பம். எல்லா விருப்பமும் இருக்குத்தான். ஆனா என்ன எனக்கு அப்பிடி வராதே.

எப்போது இலங்கை வருகிறீர்கள்? திருகோணமலையில் உங்களை சந்திக்கலாமா?

இலங்கை வந்தால் சொல்லுவேன் கட்டாயம் சந்திக்கலாம்.

நிஜமாவே தேத்தண்ணி வித் நிதா எப்போ கிடைக்கும்?
நாம் நேரில் சந்திக்கிறபோது :love:

Hi nitha akkka, yen name jayavarthini.yenaku unga stories rmba pidikum akka..ilangai tamil pidikum..ungata oru request - mudinja narcissist familyta matitu mulikra ponnu pathi story eluthuveengala? Neenga niraya elutha enoda heart wishes akka..

வாழ்த்துக்கு மிக்க மிக்க நன்றிமா. நீங்க சொல்லுற மாதிரி கரு அமைஞ்சால் கட்டாயம் எழுதுறேன்.

கதை உங்களுக்கு அழுத்தம் தரும் போது அதிலிருந்து வெளிவர என்ன செய்வீர்கள் ?

அந்தளவுக்கெல்லாம் எதையாவது செய்து அந்த அழுத்தத்தை போக்கிற நிலைமை வர இல்லை. அந்த அழுத்தத்தை முழுமையா எழுத்தில கொண்டுவந்தால் போதும் நான் ரிலீப் ஆகிடுவேன். சொல்ல நினைக்கிறதை, இல்லை என்னை அழுத்துறதை சொல்ல முடியாம திணறுகிறபோதுதான் எனக்கு என்னிலேயே கோவம் வரும். சொல்லிட்டேன் எண்டால் நான் ஃபிரீ ஆகிடுவேன்.

இல்லையா இருக்கவே இருக்கிறார் எங்கட வடிவேலு. அவரின்ர ஒரு வீடியோ போதும். அதுவும் இல்லையா குரூப்பில் வந்து ஒரு போஸ்ட் போட்டு ரீடர்ஸை வம்பிழுத்து விட்டுடுவேன். பிறகு என்ன, நான் சிரிப்பு மோடுக்கு போயிடுவேன்:ROFLMAO:
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அது எப்படி sis வாசிக்கும்போதே அழுத்தமான இடங்களி்ல் வார்த்தைகளாலே அழ விடுறீங்க ?(சொல்ல கொஞ்சம் வெட்கமாக இருந்தாலூம் தேம்பி தேம்பி எல்லாம் அழுதிருக்கேன்)

அச்சோ நான் என்ன சொல்ல இதுக்கு? எனக்கு அப்பிடித்தான் சொல்லோணும். இல்லாட்டி என்ன நீ உப்பு சப்பில்லாம சாப்பிடுற மாதிரி எழுதுறாய் எண்டு என்னை நானே பேசுவேன்.

நந்து மகளுக்கும் தாடி மகனுக்கும் ஒரு கதை எழுதுங்களேன்... கிழவனா காட்டுவேன் என்று எல்லாம் சப்பை கட்டு கட்ட வேண்டாம். இப்போல்லாம் Uncles & Grandpas கூட Gym எல்லாம் போய் ஜம்முனு இருக்காங்க... பொய்னா நான் ib ல ஒரு video காட்றேன். 😏😏😏
நோ நோ நோ! என்னால என் ஹீரோக்களை ஒப்புக்குச் சப்பாணியா வந்து போகிற ஆட்களாக காட்ட முடியாது.

என்ர கதையை எப்போ படிப்பீங்க??? 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
நீங்க கதையை முடிங்க நான் படிக்கிறேன் சரியா.:love::love::love:

Crime novel எழுத முயற்சி எதுவும் உண்டா? 🫠🫠
ஆசை இருக்கு பார்ப்போம்.

Nan yarunu solave ela 🫣 antha கதை குறிப்பேடு matter 😉
அவ்வ்வ்

நீ தந்த கனவு மிதிலாக்கு ஒரு வேளை ஜோடி சேர்த்தா மறுவாழ்வுக்கு எந்த எழுத்தில் அந்த நபர் பெயர் ஆரம்பிக்கும் 🫣 அவங்க pair first letter ena start aagura Pola vaipinga avar name..ithu Aatanayagan related question ela writer ithu nee thantha kanavu story related 😁

ஓகே நானும் பதில் சொல்லுறேன். ஆனா முதல் லெட்டர் இல்லை. அவன் பெயர்ல லெட்டர் A இருக்கும். எப்புடி??? ஹாஹா

உங்க கதைகள் தவிர்த்து நீங்க படிச்சு ரசிச்ச மற்ற எழுத்தாளர் கதைகள் எது.. அது ஏன் பிடிச்சது..

எனக்கு அழுத்தமான கதைகள் பிடிக்கும். நாகரீகமான ரொமான்ஸ் பிடிக்கும். பிடிச்ச கதைகள் பற்றி ஒரு வரையாவது என் பேஜில் போட்டு விடுவேன். இப்ப சட்டென்று எதுவும் நினைவு வர இல்லையே.

எவ்வளவு கதை படித்தாலும், ஒரு சில எழுத்தாளர்களின் ரசிகையாவும், சில எழுத்தாளர்களின் எழுத்து நடையின் மேல் தீரா காதலும் வரும்.. அப்படி பட்ட உங்கள் எழுத்து நடை எனக்கு அவ்வளவு பிடிக்கும் ❤❤.. உங்களை போன்ற ஒரு சிறந்த எழுத்தாளரே ஒரு வாசகியையும் நமக்கும் எழுத வேண்டும் என்று ஒரு inspiration உருவாக்க முடிகிறது.. அப்படி எழுத வேண்டும் என்று ஆர்வம் உள்ள என்னை போன்றவர்களுக்கு உங்க அட்வைஸ் என்னவா இருக்கும். எப்படி எங்களை மெருகேற்றிக்கொள்வது.? எனக்கு எழுத பிடிக்கும். மனதில் இருப்பதை எழுதும் பழக்கம் உள்ளது, அதை கதையாய் எழுத என்னால் முடியுமா என்றும் தோணும்.. Just share tips mam❤❤ It will be useful.

முதலில் மனதில் என்ன வருதோ அதை எழுதுங்க. மற்ற எழுத்தாளர்களின் கதை வாசிக்கிறபோது ஏதோ ஒரு காட்சி உங்களை அளவுக்கு அதிகமாக கவரும். அந்த இடத்தை அந்த ஆசிரியர் எப்படி கையாண்டு இருக்கிறார் எண்டு பாருங்க. அது உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லி தரும். சொற்கள் நிறைய நிறைய சேருங்க. பொருத்தமான இடத்தில் பொருத்தமான சொற்களை போட்டாலே எழுத்து நடை அழகாகிடும்.(இந்த விஷயத்தில் எனக்கு இன்னுமே பயிற்சி போதாது. ஆனாலும் சொல்லுறேன்.) எதையும் மிகைப்படுத்த நினைக்க வேண்டாம். அவ்வளவுதான். கதையே அழகாகிடும்.

எல்லா கேள்விகளுக்கும் பதில் தந்து இருக்கீங்களா? அல்லது சங்கடமான கேள்வியை தவிர்த்து விட்டீர்களா ? அப்படி என்றால் அது என்ன கேள்வி ?

இல்ல, எல்லா கேள்விக்கும் பதில் தந்து இருக்கிறேன். அப்படி பதில் சொல்ல விரும்பாத சங்கடமான கேள்விகள் வந்தா நிச்சயம் தவிர்த்துவிடுவேன். கேட்பது அவர்கள் உரிமை என்றால் அதற்கு பதில் சொல்லுறதா இல்லையா எண்டுறதை முடிவு செய்ய வேண்டியவள் நான்தானே.

ரீடர்களுக்குள் கதையில் கருத்து வேறுபாடு இருக்கும் விவாதத்திற்கு உங்களின் நிலை , பதில்
அது அவரவர் கருத்து. அதை அவர் கருத்தா மட்டுமே பாப்பேன். யாராவது கதையின் போக்கை தவறாக புரிந்துகொண்டிருந்தால் மட்டும் இல்லை, அதுல இப்பிடித்தான் இருக்கும் எண்டு விளக்கம் மட்டும் கொடுப்பேன். அவர்கள் கருத்துக்கு கருத்து சொல்ல போக மாட்டேன். அது கூடாது எண்டு நினைப்பேன்.


"நீ தந்த கனவு" மிக கனமான கதை.ஆட்டநாயகனும் கனமான கதைதான்.படிக்கும் எங்களுக்கே அழுத்தமா இருக்கு.இந்த மாதிரி அழுத்தமான கதைகளை எழுதும்போது உங்களுக்கு மன அழுத்தம் வருமா?
மேல சொன்னதுதான். நினைக்கிறதை எழுதிட்டா ரிலீப் ஆகிடுவேன். எல்லா நேரமும் அது சாத்தியப்படாது. அப்ப அது மண்டையை குடைஞ்சுகொண்டே இருக்கும். ஆனா இதை தவிர்க்க முடியாது. அதுக்கு நாங்க பழகிறதுதான் இதுக்கு இருக்கிற ஒரே வழி.

கதை எழுதுவதை தவிர்த்து உங்களுக்கு பிடித்த விசயம் அல்லது விசயங்கள் என்ன
சமைக்கிறது பிடிக்கும். அதுக்காக 24 மணி நேரமும் சமையல் கட்டில் நிற்பதை சொல்ல இல்ல. சமைக்கிற மூட் இல்லாட்டி ஏதாவது சின்னதா கூட செய்துபோட்டு போயிடுவேன். இதை தவிர கதை எழுதவும் வாசிக்கவும் மட்டும்தான் பிடிக்கும். இல்லையா யூ டியூபில் நிறைய ஸ்பீச் கேப்பேன். அது என் சிந்தனையை வளக்கும். பேட்டிகள் நிறையப் பாப்பேன். ஏதோ ஒரு வகையில ரியல் நபர் பேசுகிற சொல்லுகிற விடயங்களை காது கொடுத்து கேக்க பிடிக்கும்.

நீங்க பின்பற்ற நினைக்கும் நபர் யாரேனும் இருக்கிறார்களா?
அப்பிடி பெருசா இல்ல. போகிற போக்கில் என் தவறுகளை திருத்திக்கொண்டு போய்க்கொண்டே இருக்க பிடிக்கும். அவ்வளவுதான்.

எனக்கு உங்கள் எழுத்து அவ்வளவு விருப்பம் அதை மற்றவர்கள் கிட்ட சொல்லவும் அதை பற்றி பேசவும் அவ்வளவு பிடிக்கும்....எழுதுவதை எந்த காரணமும் கொண்டு விட்டுடாதிங்க.. அதுபோல இதே மாதிரி விரசம் இல்லாத அழகான எழுத்து எங்களுக்கு எப்போதும் வேண்டும்.. நாளைக்கு என் குழந்தையும் வளர்ந்து உங்க எழுத்த வாசிக்கனும்... love you lots ❤

மிக்க மிக்க நன்றியும் அன்பும்மா. உண்மையாவே என்னில் இருந்து பிரிக்க முடியாத ஒண்டு என் எழுத்து. சோ கவலை வேண்டாம்.

இது வரை 10 கேள்விகள் கேட்டு பதில் பெற்றிருக்கிறேன் (இந்த கேள்வியில்லாமல் ) நான் யார் என்று கண்டுபிடிக்கவோ அல்லது இவர் கேட்ட கேள்விகள் இதுவாக இருக்கலாம் என்று கணிக்க முடியுதா ?
ஒரு ஊகம் இருக்கு. ஆனா பதில் சொல்ல மாட்டேன். அது சரியா இல்லாட்டி நீங்க காயப்பட்டு போவீங்க.

அவ்வளவுதான் . எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லிட்டேன் என்று நினைக்கிறேன் .
 
Top Bottom