நான் அறிய நீ முதல் அத்தியாயம்!
டப் டப் டப் என தட்டச்சு பலகையில் தட்டிக் கொண்டிருந்தார் லோகேஷ்ரமணி.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள பிரதம எழுதுவினைஞராக கடமையாற்றும் ரமணிக்கு நிர்வாகப் பிரிவில் நடு நாயகமாக மேசை போடப்பட்டிருக்கும்.
நிர்வாக பிரிவின் அலுவலர்களை கவனிப்பது போல் அவர் உட்கார்ந்து இருக்க, நிர்வாக கிளை தலைவரான நிர்வாக உத்தியோகத்தர் (administrative officer) மொத்த யூனிட்டையும் கண்காணிப்பது போல் கண்ணாடி தடுப்பு அறையுள் அமர்ந்திருப்பார்.
துரித கடிதம் ஒன்றை ரமணி டைப் செய்து கொண்டிருக்க, "இந்த ஃபைல செக் பண்ணிட்டு தன்ர மேசைக்கு அனுப்பவாம் மிஸ், ஏ.ஓ" என்றார் சிற்றூழியர் குணசிங்கம்.
நிமிர்ந்து மூக்குக் கண்ணாடியால் அவரைப் பார்த்தவர் "பத்து கையும் முப்பது கண்ணுமா இருக்கு எனக்கு? இந்த கடிதம் அடிச்சி மினிஸ்ரிக்கு இப்ப அனுப்பணும் எண்டவர்.. அது முடிக்க முன்னுக்கு அடுத்த வேலைய அனுப்பினா?"
யார் மீதான எரிச்சல் இதுவென்று அறிந்த குணசிங்கம் பேசாமல் கடந்து போய் விட, ரமணி அவர் வைத்து போன கோப்பைத் திறந்தார்.
தினப்படி கிளரிகல் வேலைகள் தாம். சரி பார்த்து ஏ.ஓ மேசைக்கு அனுப்பினால், நம்பிக்கையாக கையொப்பம் வைத்து, மாகாண பணிப்பாளர் சைனுக்கு செல்லும் ஃபைல்.
கடிதம் முடிவுறும் தறுவாயில் இருக்க அதை நிறுத்தி விட்டு வேகமாக ஃபைலை தட்டியவர் முதல் கடித்ததில் மூக்கு கண்ணாடியை கழட்டி, தனக்கு எதிரில் உள்ள வரிசையின் இரண்டாவது மேசையை பார்த்தார்.
கணினித் திரை பார்த்து மவுசை தடவிய பெண் தீவிரமாக வேலை செய்வது போல் தெரிந்தது.
"பிரார்த்தனா!"
கலைந்து அவரைப் பார்த்த பிரார்த்தனா எழுந்து வந்தாள்.
"காலையில சாப்பிடிங்களா தனா?"
"ஓம் அக்கா.."
"வீட்ட என்ன பிரச்சின?"
சட்டெனக் கேட்டதும் அவளை மௌனம் பீடிக்க,
"திகதி டிசம்பர் 31 க்கு பதில் 30 அடி பட்டிருக்கு.. தலையங்கம் போல்ட் பண்ண இல்ல. இதெல்லாம் கூட பரவாயில்ல, இணைந்த சேவைகள் அமைச்சு, இணைந்த சேலைகள் அமைச்சாகி இருக்கு. கல்வி அமைச்சு கலவி அமைச்சு ஆகி இருக்கு. ம்ம்?"
"பி.டி (provincial Director) இந்த கடிதத்த பார்த்தா என்ன நடக்கும்? எண்ணம் சிந்தனை எல்லாம் எங்க இருக்கு பிள்ளைக்கு?" அவளுடைய கடிதத்தை கையில் வைத்துக் கேட்டார்.
பக் எனச் சிரித்து விட்ட பிரார்த்தனா நீங்கள் அறியாததா என முகம் சுணங்க,
"இந்தாங்க, திருத்திக் கொண்டு ஓடி வாங்க.. லஞ்ச் டைம் கதைப்பம் நாம" என்றார்.
பிரார்த்தனா உயர்தரம் வரை படித்த பெண். போட்டிப் பரீட்சை எழுதி சொந்த முயற்சியில் க்ளார்க் வேலை எடுத்து அசர சேவையுள் நுழைந்தவள்.
இதே கல்வித் திணைக்களத்தில் முதல் நியமனம் கிடைத்து பெயர் கூட சொல்லத் தயங்கிய பெண்ணை "சத்தமா கதைக்கலாம். குரல் வடிவா இருக்கு எண்டு பாட்டுப் பாடக் கேட்க மாட்டம் நாங்க" எனக் கலகலப்பாக பேசி வாய் திறக்க வைத்த முதல் ஆள் இந்த முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் லோகேஷ்ரமணி.
இரண்டு வருடங்களில் ரமணி சீப் கிளார்க் ஆசனத்திற்கு தரம் உயர்த்திருக்க, இருவர் நட்பும் கூட மூன்று வருடங்களில் உயர்ந்து வளர்ந்து இருக்கிறது.
தவறுகளை திருத்தி கடிதங்களை ஏ.ஓ மேசைக்கு அனுப்பிய பிரார்த்தனாவை, மதிய உணவு இடைவேளையில் பிடித்துக் கொண்டார் ரமணி.
"என்ன, ஏன் மறைக்கிறிங்க, என்ன லஞ்ச்?" விலகி அமர்ந்த பிரார்த்தனாவை நெருங்கி டிபன் பாக்ஸை பிடுங்கினார் ரமணி.
ராகி (குரக்கன்) ரொட்டியும் சம்பலும் இருந்தது.
"குரக்கன் மால ரொட்டி செய்திங்களா தனா? நல்லது தானே அது உடம்புக்கு. இதெல்லாம் வீட்டுல செய்ய ஆசை இருந்தும் நேரம் இல்ல எனக்கு. மெனெக்கெட்டு செஞ்சாலும் பாலு சாப்பிட மாட்டார். ஷாலு தொடவே தொடாது"
பாலு என்பது ரமணியின் கணவர் பாலசுப்பிரமணியம். காதல் திருமணம் செய்தவர்கள் அவர்கள். அன்பாக பாலு என அழைப்பார். ஷாலு என்பது அவர்களின் ஒரே மகள் ஷாலினி.
"ஒரு வேலை செய்வம் தனா, என்ர லஞ்ச்ச நீங்க சாப்பிடுங்க, நான் ரொட்டிய எடுக்கிறன்"
தன் விரும்பம் இன்றி உணவுகள் இடம் மாறியதும் பிராத்தனாவை சங்கடம் இறுக்கியது.
ரமணியின் பார்சல் சோறு, மீன், காய், அப்பளம் வைத்துக் கட்டிய முழுமையான மதிய உணவு .
"அக்கா, ஷேர் பண்ணுவம். பாதி ரைஸ என்னோட சாப்பிடுங்க நீங்க.."
"இல்ல தனா, வெயிட் போட்டு படி ஏற ஏலாம மூச்சு வாங்குது எனக்கு. டயர்ட்ல இருக்க நினைச்சாலும் எங்கட வீட்டுல அது சாத்தியம் இல்ல. நீங்க ஒண்டும் என்ன பெரிய தியாகி அன்னை தெரேசா இடத்தில வச்சி பார்க்காம சாப்பிடுங்க. உடம்ப குறைக்கிற என்ர சுய நலமும் இருக்கு இதுல"
ரமணி அந்த காய்ந்த ரொட்டியில் இரண்டை முடித்து விட்டார்.
இவளுக்கு சுவையான சோறு கறி தொண்டையில் சிக்குகிறது.
"அம்மா எப்டி இருக்குறாங்க தனா?"
பிரார்த்தனாவுக்கு அதற்கு மேல் உணவு செல்லவில்லை.
"அதே நிலம தான் அக்கா. சுகர் ஒரு கன்ட்ரோல்ல நிக்குதில்ல. காலையிலயும் சண்ட தான். நிம்மதி இல்ல. ஆண்டவன் தன்ர உயிர எடுத்தா நல்லமாம்.." மளுக் என கண் கலங்கியது.
தண்ணீர் போத்தலைக் அவளிடம் கொடுத்த ரமணி "ரொட்டிக்கு குரக்கன் மாவ, சுடு தண்ணி விட்டு பிசஞ்சதா இல்லாட்டி பச்ச தண்ணில குளைச்சிங்களா?" எனச் சந்தேகம் கேட்டார்.
"சுடு தண்ணில தான் அக்கா குளைச்சன்.. காஞ்ச மாதிரி இருக்குமே.."
"இல்ல இல்ல, தேசிப் புளி (எலுமிச்சை புளி) விட்டு காஞ்ச கொஞ்சிக்காய் (மிளகாய்) சேர்த்து அரைச்ச தேங்கா சம்பல் சுள் எண்டு இருக்கு நாக்குக்கு.. நல்லா இருக்கு"
அவளுக்கே அது சுவைதான் என்று நம்பிக்கை வரும் வகையில் சப்புக் கொட்டி உண்டார் ரமணி.
மனம் ஒருமைப்பட்ட உணவு மேசை இதம், அன்று மாலை வீடு சென்று சேரும் வரை இருந்தது.
திருகோணமலை நகர் உப்புவெளி பிரதேசத்தில் அமைந்துள்ளது பிரார்த்தனாவின் வீடு.
ஸ்டாப் பஸ்ஸிலேயே அவள் போக்கும் வரத்தும். பேருந்தில் இருந்து இறங்கி சில மீற்றர் நடையில் வீட்டை அடைந்தாள்.
பூட்டி இருந்த கேட்டை தன் வசம் உள்ள சாவி கொண்டு திறந்தாள்.
"வந்திட்டியா பிராத்தனா?" அரவம் உணர்ந்து வினா வந்தது.
அம்மா ராஜேஸ்வரி விழித்து இருந்தார். சேலை மாற்றி முகம் கழுவி தேநீர் ஊற்றி எடுத்துப் போனாள்.
சூரியன் மறையும் பொழுதில் படுத்தால் சீதேவி வெளியேறி மூதேவி குடிபுகுமாம் வீட்டில். சிறு பராயத்தில் பெண் மக்களை அதட்டும் ராஜேஷ்வரி தான் நோயாளி வேஷம் பூண்டு இன்று அந்திப் பொழுதிலும் படுத்திருப்பது.
நீரிழிவு தொந்தரவும் உயர் குருதி அழுத்த உபாதையும், மனவழுத்தமும் சேர்ந்து அவரை நோயாளியாக்கி படுக்க வைத்து வருடங்கள் சில ஆகிறது.
எழுந்து சாய்ந்தவர் தேநீர் உறுஞ்ச, பிரார்த்தனா வீட்டைப் பெருக்கி சாமி அறை விளக்கை ஏற்றி சமையல் கட்டில் ஆராய்ந்தாள்.
"நிலானி சமைக்கல்லயாம்மா?"
"அவ சமைப்பாவா.. நான் அந்த காஞ்சி போன ரொட்டிய தான் பகலும் திண்டன். காலையில போனவ இன்னும் வீடு வர இல்ல. நாய் மாதிரி காவலுக்கு கிடக்கிறன் நான். அவ மட்டுமா, அப்பன் மகன் ஒருவருக்கும் ஒருத்தி தனிய கிடக்கிறாள் என்ற எண்ணம் இல்ல"
"இப்ப என்ன சமைக்க?" இடைவெட்டிக் கேட்டதும், "என்னத்தயாவது செய். என்ர விருப்பம் கேட்டு தான் நீ நடக்கிறியா?" என்று குதர்க்கமாக கேட்டார்.
குளிர்சாதன பெட்டியில் உள்ள காய் எடுத்து நறுக்கி குழம்பும் பொரியலும் வைத்து உணவு எடுத்தாள்.
"காலையில சண்டை இல்லாம இருந்து இருந்தா, மதியத்துக்கும் சமைச்சி வச்சிட்டுப் போய் இருப்பன்"
"யாருட்ட சொல்றாய்? நான் தான் இந்த வீட்டுல சண்ட இழுக்கனா?"
"சரி சாப்பிடுங்க.."
தட்டை வைத்து
அவருக்கான இரவு கோட்டா மாத்திரைகளை உடைத்தாள்.
செருப்பு கழற்றும் சத்தமும் தோள் பையை தூக்கி போடும் வேகமும் தங்கை நிலானியின் வருகையை உணர்த்தியது.
அடுத்து அப்பா வருணன் வந்து சேர்ந்தார். தம்பி விமலன் வருவதற்கு நேரம் உண்டு. ஊர் அடங்க வேண்டும்.
"தனா!" ஹாலில் டீவி வைத்து அமர்ந்த அப்பா அழைத்தார். சாராய வாடை வந்தது.
"சாப்பாடு எடுக்கவா?"
"அது இருக்கட்டும். காலையில சொன்னனே.. சந்தியில கடை வாடகைக்கு வருது எண்டு.. ஒரு இருபது இருபத்தஞ்சி இருந்தா போகும். ஆரம்பத்தில மரக்கறி போட்டு வியாபாரம் செஞ்சா லாபம் பாத்துட்டு அடுத்தத யோசிக்கலாம். நாளைக்கு முதலாந் திகதி.. புறக்கிற வருஷம் அப்பாக்கு நல்லா இருக்கும்.. வியாபாரம் தொடங்கினா லாபமாம்.." எதிர்கால வியாபார திட்டத்தை அவர் விளக்க,
"அப்படியே லட்ச லட்சமா உழைச்சி வந்து கொட்டிருவார்.." ராஜேஸ்வரியின் கரகரத்த குரல் காட்டமாக குறுக்கறுத்தது.
கூடத்தோடு ஒட்டிய தடுப்பு அறையில் கட்டில் போட்டு வாசம் செய்யும் ராஜேஷ்வரி எல்லோருக்கும் அங்கிருந்தே பதில் தருவார்.
"உன்னோட கதைக்க இல்ல நான். நீ வாய மூடு.."
"கொஞ்சம் பேசாம இருங்கம்மா"
"ரெண்டு பொம்பிள பிள்ளைகள பெத்த எண்ணம் இல்லாமல் குடியில விழுந்து கண்டவன நம்பி கடைய விட்டு, பொன் பொருள் எல்லாம் மண்ணாக்கினது காணாம, பொம்பிள பிள்ளையிட்ட காசு கேக்குறாய். நீ எல்லாம் ஒரு தகப்பன்"
கணவன் மனைவி இருவரும் தங்கள் பந்தத்தை நஞ்சாக்கி கொண்டு நாள் ஆகி விட்டது. ஒரு கூரையின் கீழ் பல வருடங்களாகவே பகையாளிகளாக வசிக்கின்றனர்.
"வெட்கம் இல்லயே உனக்கு.. நீ எல்லாம் என்ன ஆம்பிள?"
ராஜேஷ்வரி வன்மத்தை கொட்ட, சாராய போதையடன் எழுந்து போனவர் கட்டிலோடு சேர்த்து உதைத்தார் மனைவியை.
அவரை விலக்கி இழுத்து வந்தவள் கதவை பூட்டினாள்.
சினம் அடங்காமல் மனைவியை திட்டிய வருணன் சட்டையை மாட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.
"என்ன உதச்ச கால் விளங்காம போகும் உனக்கு. என்ன வேசை எண்ட உன்ர நாக்கு அழுகிப் போகும். போற வாற வாகனத்தில அடிபட்டு சிதறுவாய் நீ. என்ர குமர் வாழாம போன பாவம் உன்ர குடும்பத்த அழிக்கும்.." மூச்சுப் பிடித்து சாபம் இறைத்தார் ராஜேஷ்வரி.
விறிதாக ஓடும் தொலைக்காட்சி பெட்டியை அணைத்த பிரார்த்தனாவுக்கு பதட்டம் குறையாது தலை வலித்தது.
குளியலறையில் இருந்து வெளிப்பட்ட தங்கை நிலானி "தொடங்கிட்டாங்களா? இவங்க ரெண்டு பேருக்கும் இளம திரும்புதா? எந்த நேரமும் சண்டை சண்டை. வீடா இது? நிம்மதி இல்ல. எங்கயாவது போய் துலைய காலம் வருதில்ல நமக்கு" தலையில் அடித்துக் கொண்டாள்.
காலை முதல் மாலை வரை உழைத்த தேகம் ஓய்வுக்கு கெஞ்ச, வீட்டு வேலை முடித்து உறங்க நினைத்த பிரார்த்தனா தலைவலி தைலம் தேய்த்து அமர்ந்தாள்.
*
காலை வானம் அங்கங்கே மேகத் துண்டுகளை உலரப் போட்டிருந்தது.
அதிகாலைப் பனியில் நனைந்த காகங்கள் மின்சார கம்பியில் உட்கார்ந்து சிறகுலரத்தின.
சேலை தலைப்பை பிடித்து ஸ்டாப் பஸ்ஸை எதிர்நோக்கிக் காத்திருந்த பிரார்த்தனா மிதமான வேகத்தில் வந்து பவ்யமாக தரித்த பேருந்தில் ஏறினாள்.
சினிமா பாடல் ஒலிக்க, வழக்கமாக அவள் அமரும் ஆசனத்தில் ஆள் இருந்தது.
"ஹேப்பி நியூ இயர் ஹேப்பி நியூ இயர் வந்ததே.. அன்பை சொல்லி ஆசை உள்ளம் துள்ளுதே.."
2026ஐ வரவேற்று புத்தாண்டு கீதங்கள் வைத்து இருந்தார் ஓட்டுனர்.
வழக்கத்திற்கு விரோதமான நெரிசல் பஸ்ஸில்.
புதிதாக நியமனம் கிடைத்த பட்டதாரிகளில் ஒரு தொகையினர் அரச சேவையில் இன்று இணைந்து கொள்வது தெரியும்.
கைப் பை, லஞ்ச் பாக்ஸ் இரண்டையும் ஒரு கைக்கு மாற்றி மேலே கைப்பிடி பற்றி நின்றாள் பிரார்த்தனா.
அடுத்தடுத்த நிறுத்தங்களில் ஃபோர்மல் ஆடை ஆண் பெண் இருபாலரையும் தன்னுள் திணித்துக் கொண்டது பேருந்து.
கல்வித் திணைக்களம் சில கிலோ மீட்டர் தூரம் என்றாலும் ஊரைச் சுற்றி வலம் வருவதற்கு பதினைந்து நிமிடங்களாவது குறைந்தது பிடிக்கும்.
பக்கத்தில் நின்ற பெண் ப்ரேக் போடும் போது இவளுடன் இடித்துக் கொண்டது. "இண்டைக்கு முதல் நாள் என்றதால கூட்டமா இருக்கு! ரெண்டு மூணு நாள் போனா சனம் குறஞ்சிரும்.." என்றது.
இவள் ஏதேனும் கருத்து சொல்வாள் என எதிர்பார்த்து ஏமாந்த பெண் இறுக்கமான முகம் பார்த்து தன் முகத்தை திருப்பிக் கொண்டு எதையோ கண்டு வாயில் கை வைத்து சிரித்து அமர்ந்திருந்த தோழியிடம் குனிந்து எதையோ கிசுகிசுத்தது.
அந்தப் பெண்ணுக்கும் கன்னம் விரிந்து களுக் என்றது.
தன் நிறுத்தம் அடையும் வரை ஜன்னலுக்கு வெளியே கண்ணை வீசும் பிரார்த்தனாவின் தவம் கலைய, அவர்கள் நகைப்புக்கு காரணம் தேடினாள்.
தோள் பை கொழுவி நிற்கும் அந்த இளைஞனில் தான் பிசகா!
தன் இயல்புக்கு மீறி அவனை உற்று நோக்கினாள்.
புதிய நியமனம் அவன். நேரத்தியான உடை. தொப்பை இல்லாத வயிறு. நெற்றியில் சின்னதாக விபூதிக் கோடு.
இதில் சிரிக்க என்ன இருக்கிறது?
தலை முடி ஏறுகிறது நெற்றியில். பிற்கால வழுக்கைக்கு கட்டியம் கூறுகிறது.
அதற்காவா சிரிக்கிறார்கள்?
இள நரை போலவே, இள வயதில் முடி உதிர்வதும் பரம்பரை கோளாறே.
மொட்டை என்று கூட சொல்ல முடியாது!
பக்கவாட்டில் இருந்து திரும்பிய அவன் பிஷ்டத்தில் பேண்ட் விரிசல் கண்டு உள்ளாடை நீலம் எனத் தெரிந்தது.
லஞ்சை இன்றி அதை கேலி செய்யும் அந்தப் பெண்களை பார்த்த பிரார்த்தனாவிற்கு முன் பின் தெரியாத அந்த இளைஞன் மீது பரிதாபம் பிறந்தது.
கையில் கடிகாரம், இஸ்திரி போட்ட விறைப்பான சட்டை, தரமான பேண்ட் என எடுப்பாக வந்திருக்கும் அவனில் அந்த இடத்தில் மாத்திரம் ஏன் கிழிந்திருக்கிறது.
கல்வித் திணைக்கள நிறுத்தம் வந்தது.
அவளை இறக்கிய பேருந்து சில மீட்டர்கள் நகர்ந்து நின்று அந்த நீல பாக்சர் காரன் இறங்கினான்.
பிரார்த்தனா தேங்கிய சில நொடிகளில் அவளிடம் வந்துவிட்டவன் "இது தானே மிஸ் எடுகேஷன் டிபார்ட்மெண்ட்?" எனக் கேட்டான்.
பிரார்த்தனா தன்னிச்சையாக பெயர் பலகையை காட்டினாள்.
சங்கடமாக சிரித்தவன் "நான் அந்தப் பக்கம் பாத்து வந்தன். கவனிக்க இல்ல.." என்றான்.
அவளுடன் இணைந்து இடைவெளி விட்டு நடந்தான்.
நீல பாக்சர் கண்ணுக்குள் இருந்தது.
"நியூ அப்பார்ட்மெண்டா?"
"ஓம் மிஸ்"
"எந்த இடம்?"
"மூதுர்"
"அங்க இருந்தே பஸ்ஸா?"
"இல்ல, சித்தப்பா ஒராளோட மோட்ட பைக்ல வந்து இங்க அநுராதபுர ஜங்கஷன்ல வச்சி ஸ்டாப் பஸ் ஏறினன்.. நீங்களும் எடுகேஷன் டிபார்ட்மெண்ட் தானா மிஸ்?"
பிரார்த்தனா தலை அசைத்தாள்.
காலை ஒன்பதுக்குள் அத்தனை அலுவலரும் கை விரல் அடையாளம் வைத்து வரவுப் பதிவேட்டில் ஒப்பமிட வேண்டும். ஆண்டு முதல் நாள் வேறு இன்று. சாரை சாரையாக உத்தியோகத்தர்கள் அவசர
அவசரமாக வந்து இறங்கினர்.
தன்னுடன் வரும் அவனை ஓரப் பார்வையில் தீண்டியவள் "நீங்க.." என சொல்ல எடுத்தாள்.
"உங்கட ட்ரெஸ் பின்னால…"
ஏன் நாம் இதைச் சொல்கிறோம்? வேறு யாரும் கூட கண்டு அணுகிஅறிவுறுத்துவார்களே..
கேள்வி மேல் எழுந்தது!