அத்தியாயம் 4
முகத்தைப் பதட்டம் தெரியாமல் சாதாரணமாக வைத்தவாறே உள்ளே சென்ற வினோதினி, "ஏன் லஷ்மி போகலன்னுட்டு வந்துட்ட? நாதான் பேசுறேன்ல? அவர் சொல்றதுக்காக நாம நம்ம வேலைய பாக்காம இருக்க முடியுமா?" என கேட்க,
"அம்மா எப்டி போட்டு வாங்குது பாத்தியா? ஆனா நீ ஜகஜால கில்லாடி, ரெண்டு வருஷமா சைலன்ட்டா மெயின்டெயின் பண்றல்ல?" என தீக்ஷி சந்திராவிடம் மெதுவாக சொல்ல,
"வாய மூடு குரங்கு" என முழங்கையில் கிள்ளி வைத்தாள் சந்திரா.
"போகக் கூடாதுன்னு வாசல் மறிச்சு நிக்றவங்கள மீறி எப்படிமா போ முடியும்?" என்றாள் நிலாயினி.
"அதுக்கில்லடி?" என வினோதினி பேச வர,
"விடும்மா காலைல சீக்கிரம் போய் கேட்டுக்குறேன். சுந்தரிட்டையும் மார்னிங் சேர்ந்து போலாம்னு சொல்லிட்டேன் சரின்னுட்டா" என்றவள், ஒரு டீஷர்டையும், ஸ்கர்ட்டையும் மாற்றிக்கொண்டு வந்து டிவி முன் அமர்ந்துவிட்டாள்.
"இந்த வீட்டுக்கு வரிசையா போலீஸ் மருமகனுங்களா வர்றத பத்தி நீ என்ன நினைக்கிற சந்திரா? இப்ப அவசரமா நா வேற ஒரு போலீஸ தேடி லவ் பண்ணியாகனுமே" என தீக்ஷி மறுபடியும் முனங்க, முதுகில் சப்பென்று வைத்துவிட்டாள் சந்திரா.
சமையலறை செல்லப் போன வினோதினி நின்று, "உங்களுக்கு என்னடி? அங்க என்னத்த குசுகுசுன்னு பேசி சண்டை வளக்கீங்க?" என கேட்டு முறைக்க,
"இவ தான்மா. வாய் கொழுப்புக் கூடிப் போச்சு. கண்டிச்சு வை இவள, பேச்சு ஒன்னும் சரியாவே இல்ல" என சந்திரா சொல்ல,
"எனக்கு வாய்ல மட்டும் தான் கொழுப்பு, உனக்கு உடம்பு பூராம் கொழுப்பு, உன்ன எதால கண்டிக்கிறது?" என தீக்ஷி பேச,
"கொன்றுவேன்டி! நீ தான் ஸ்டார்ட் பண்ண" என சந்திரா திட்ட,
"என்னத்த ஸ்டார்ட் பண்ணேன்னு சேர்த்து சொல்லேன் பாப்போம்? தைரியம் இருக்கா? இருந்தா சொல்லுடி" என்றாள் தீக்ஷி.
"என்னத்துக்குடி இப்ப அடிச்சுக்குறீங்க?" என்றாள் நிலா நிதானமாக திரும்பி. அவளுக்கு அவளுக்குள் இருந்து குடைச்சல கொடுக்கும் ஆரன் விஷ்வேஷ்வரனே, பெரிய இம்சையாக இருக்க, இளையவர்கள் சண்டையை வெகு நிதானமாக தான் கவனித்தாள்.
நிலா கேட்கவுமே, வினோதினி உள்ளே சென்றுவிட்டார், இனி அவள் பார்த்துக்கொள்வாள் என்ற எண்ணத்தில்.
"இவ உன்ட்ட ஒரு விஷயம் மறைக்கிறாக்கா" என போட்டுக்கொடுத்தாள் தீக்ஷி.
"என்ன சந்திரா?"
தீக்ஷியை திரும்பி முறைத்தவள், "மறைக்கல லஷ்மிக்கா. டைம் வரும்போது சொல்லலாம்னு இருக்கேன். கண்டிப்பா பாஸ் பண்ணிட்டு சொல்றேன்"
அவளையே பார்த்த லஷ்மி, "பாஸ் பண்ணனும் கண்டிப்பா. உனக்கு அதுதான் செல்ஃப் கான்ஃபிடென்ஸ் தரும். இதோ அப்பான்ற ஒருத்தர் திடீர்னு அவர் பாதைய பாத்துட்டு போனாரே அதுமாதிரி யார் வேணா எப்ப வேணா நம்மள அப்ரப்டா ஒரு இடத்துல தனியா விட்டுட்டுப் போகலாம். அப்டி போறப்ப, அடுத்து என்ன செய்யன்னு தெரியாம முழிச்சு நிக்கவே கூடாது, ஏன்னா நமக்காக உலகம் சுத்தாம அந்த இடத்துலயே நின்னு வெயிட் பண்ணாது, நம்மளும் அப்படியே நிக்க முடியாது. அடுத்த வேலையே பசிக்கும், சாப்பிட்டே ஆகணுங்குற நிலைமை வரும். புரியும்னு நினைக்கிறேன். ரெண்டு பேருக்கும் சேர்த்து தான் இத சொல்றேன்" என்றதும் இருவருமே தலையை வேகமாக அசைத்தனர்.
"நீ மேரேஜ்கு ஓகே சொல்லு லஷ்மி. எங்கள வச்சே நீ யோசிச்சுட்டு இருக்காத" என்றாள் சந்திரா.
"நா மாட்டேன்னு சொல்லலையே? நம்ம மூணு பேரும் தான் அம்மாவையும் பாத்துக்கணும், நம்மளையும் ஒருத்தர ஒருத்தர் பாத்துக்கணும். உங்க ரெண்டு பேருக்கும் மேரேஜ் பண்ற பொறுப்பு, அதுக்கப்புறம் ஒரு வருஷ சீர், குழந்தை பிறந்தா அதுக்கான பொறுப்பு எல்லாம் அம்மா செஞ்சே ஆகணும். அதுக்கு நா என் சைட்ல இருந்தும், நாளைக்கு நீ வேலைக்குப் போனப்றம் உன் சைட்ல இருந்தும் குடுக்கணும், தீக்ஷி வேலைக்குப் போனப்றம் நம்மளுக்கு தேவைபடுறப்போ அவ செய்யட்டும். நாமதான் நம்மகுள்ள இத ஷேர் பண்ணிக்கணும். இதுக்கு அக்ஷப்ட் பண்ணிக்கோங்கன்னு வர்றவங்கட்ட கேட்கிறேன் அவ்ளோதான். கேட்காம செய்யணும்னு நினைக்கல தானே? அத வர்றவங்களும் புரிஞ்சுக்கணும்ல?"
"எப்டிக்கா ஒத்துப்பாங்க? ரெண்டு பேர் பொறுப்ப எடுக்க யாரும் யோசிக்கறது தான?" என்றாள் தீக்ஷி,
"ஒத்துக்குற மாதிரி வரட்டும். வெயிட் பண்ணுவோம்"
"அப்ப நம்ம ஏசிபி?" என தீக்ஷி மறுபடியும் வர,
"ஏய்!" என்றாள் விரலை நீட்டி நிலாயினி.
"அதிகபிரசங்கி" என்றாள் சந்திரா.
"அவர் உன்ட்ட ரொம்ப க்ராண்டட்டா தான்க்கா பேசினாரு. நிலா நிலான்னு அத்தன நிலா சொன்னாரே? அவரோட ஓர் வார்த்தை கவிதையே, நிலா தான் இப்ப" என்க,
"நீ அடி வாங்க போற பாரு" என நிலாயினி அதட்ட,
"சாப்ட வாங்க பிள்ளைகளா" என ஹாட்பாக்ஸுடன் வந்துவிட்டார் வினோதினி, நால்வருமாக அமர்ந்து உண்ணத்துவங்கினர்.
"நா மறுபடியும் நம்ம குழுவுல சொல்லி வைக்கிறேன். இன்னுமு நாள கடத்த முடியாது லஷ்மி. உனக்கே இருபத்தேழு முடிய போகுது. உன் வாழ்க்கைய நீ பாரு. உனக்கே தேவையானத நீதான் செஞ்சுக்கப் போற, அப்ப அதுதான இவங்க ரெண்டு பேருக்கும் கூட? நீதான் பாக்கணும்னுற எண்ணத்த விடு, நம்ம வீட்டு சூழ்நிலை தெரிஞ்சு தான் வருவாங்க அதனால நீ உனக்கு தேவையானத பாத்துப்பேன்னு சொன்னாலே போதும்மா. உன் கல்யாணம் உனக்கான சீரே நீதான் செஞ்சுக்கப் போற, அதே பெரிய விஷயம் தான்மா" என சொல்ல,
அமைதியாக இருந்தாள் நிலாயினி, மற்ற மூவரும் சாப்பிட்டபடி அவள் முகத்தைத் தான் பார்த்திருந்தனர். வேலைக்கென்று போனப்பிறகு தான் திருமணம் என மற்ற இருவரும் கூட முடிவாக இருக்கையில், அவர்களிதையும் அவர்களே தான் பார்த்துக்கொள்ளவேண்டும் என்ற தெளிவு அவர்களிடமும் இருந்தது, அதனால் வினோதினி கூறியதில் மாற்றுக்கருத்தில்லை அவ்விருவருக்கும்.
பெருமூச்சோடு மூவரையும் பார்த்தவள், "இவ இன்னும் பாஸ் பண்ணல, அவ இன்னும் படிப்ப முடிக்கல, எப்படி நம்ப சொல்றம்மா?" என்றாள் நிலா.
"கண்டிப்பா பாஸ் பண்ணிடுவேன்கா" என்றாள் சந்திரா. பலநேரம் லஷ்மி என்பாள், சிலநேரம் அக்காவும் வரும்.
"நீ உன்ன பாத்துப்பேன் கிளம்ப பாரு. அப்ப அவளுக்கும் இன்னும் கொஞ்சம் சூழ்நிலை புரியும். உள்ளயே இருந்துட்டு சொல்ல சொல்ல, அக்கா தான் இருக்காளேன்ற தைரியம் அவளுக்கும் உள்ள இருந்துட்டேதான் இருக்கும்" என்றார் வினோதினி.
"நீ நம்பாமலே பேச பேச தான் அவ கல்யாணத்த தள்ளித் தள்ளிக் கொண்டுப் போறா" என சந்திரா சொல்ல,
"நீ பாஸ் பண்ணிருந்தா, அக்கா ரெண்டு வருஷம் முன்னவே கல்யாணம் பண்ணிருப்பாள்ல? இல்லம்மா?" என்றாள் தீக்ஷி.
"அத சொல்லு. சொன்னா மட்டும் கோவம் வந்துரும் இவளுக்கு, காலேஜ் படிக்குறவளாட்டம் வருஷ கணக்கா படிச்சுட்டே இருக்கா" என வினோதினி பேச,
"நீ இப்படியே சொல்லிட்டே இரும்மா. நா படிக்காமலா இருக்கேன்?" என சந்திரா கடுப்பாக, வினோ பேச, தீக்ஷி ஏற்றிவிட என அவர்களுக்குள் வாக்குவாதம் நடக்க,
"நா.. நா ஒன்னு சொல்றேன் மூணு பேரும் அமைதியா இருங்க" என்றாள் நிலாயினி மெதுவாக,
மூணு பேரும் அவளிடம் திரும்ப, "எதிர்வீட்ல இருக்குற போலீஸ்காரர்" என்றவளுக்கு அடுத்து எப்படி சொல்ல என இளையவர்கள் இருவரையும் கொண்டு யோசிக்க,
"அவர்தான்க்கா அவரே தான். சூப்பர் செலக்ஷன்கா" என தீக்ஷி சொல்ல, பட்டென்று அவள் தொடையில் ஒரு அடி வைத்தார் வினோதினி.
"அவர் ஏதோ ஐடியால இருக்க மாதிரி தான் எனக்கும் தோணுது. பட் நாமளா எதுவும் டிசைட் பண்ணிக்க வேணாம். வரட்டும் பாக்கலாம்" என சொல்லிவிட்டு மூவரின் முகத்தையும் பார்க்க,
"உனக்கு?" என்றார் வினோதினி.
"அக்காக்கு ஓகே இல்லனா எதுக்கு வரட்டும்னு சொல்லுறா, நீ என்னம்மா இன்னும் பூமராவே இருக்க"
"உன் வாய தைக்குறேனா இல்லையான்னு பாரு" என வினோதினி கடுப்பாக கேட்கவும்,
"ம்க்கும்" என வாயை மூடிக்கொண்டாள்.
சந்திராவிற்கு தான் பயமாக இருந்தது. அவளுக்காக தான் மதுரன் ஆரனை அங்கு குடி வைத்தது, இப்போது அவரால் நிலாவிற்கு தொந்தரவோ, என்று நினைக்கையிலேயே, மதுரனை வாய்க்குள் வறுத்தெடுத்துவிட்டாள்.
"உன்ன அவர் டிஸ்டர்ப் பண்றாரா லஷ்மி?" என்றாள் மெதுவாக சந்திரா.
"இல்ல, கொஞ்சம் வாய் தான் ஜாஸ்தி, மத்தபடி பிரச்சனைன்னு எதுவும் இல்ல. டைரக்டா தான் ஆனா இன்ட்ரைக்டா கேட்டுட்டுப் போயிருக்காரு" என லஷ்மி நிலாயினியும் குழப்பமாக சொல்ல,
"அப்ப உனக்கு ஓகே தான்?" என்றாள் தீக்ஷி.
"லஷ்மிமா? இதெப்டி சரியா வரும்?" என வினோதினி தான் பதட்டமானார்.
"ஏன்மா?"
"ஏற்கனவே உங்கப்பா அப்படி பண்ணிட்டுபா போய்ட்டாருன்னு, நம்மள எதுலயும் சேர்த்துக்குறதில்ல. இப்ப லவ் மேரேஜ்னு தெரிஞ்சா ரொம்ப பேசுவாங்களே. என்னன்னு அவங்களலாம் சமாளிக்க?" என்றார் பயத்துடன்.
"எல்லாரும் ஒதுக்கி வச்சுட்டாங்க தானே? அப்றம் எதுக்கு இதுக்கு மட்டும் பேசப் போறாங்க? நாமளும் பேசிக்க வேணாம்" என சந்திரா சொல்லவும், இன்னும் திருதிருத்தார் வினோதினி.
அவரை பார்த்ததுமே பிள்ளைகள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர், "என்னம்மா? என்ன மறைக்கிற?" என்றாள் நிலாயினி.
"அதுவந்து. போன வாரம் தான் உன் நாகர்கோயில் அத்தை ஃபோன் பண்ணாங்க"
"என்ன சொன்னாங்க?" என நேராக விஷயத்திற்கு வந்துவிட்டனர் மூன்று பிள்ளைகளும்.
மூன்று பெண்களுக்கும் தெரியும், செல்வகுமார் அப்படி செய்துவிட்டு போனதற்கு, அவர்களையும் வைத்துக்கொண்டு தான் அனைவரும் ஒன்றுகூடி வினோதினியை அந்த பேச்சு பேசினர். பொண்டாட்டியாக அவர்தான் சரியில்லை என்றும், அவரால் தான் செல்வகுமார் அவ்வாறு சென்றுவிட்டார் என்றும், வயதுக்கு வந்த மூன்று பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு இப்படி நடந்துகொள்ள பெற்றோர்களாக அவர்கள் வெக்கப்பட வேண்டும் என்றும், இனி அவர்களுக்கும் இவர்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் சொல்லிவிட்டு தான் சென்றிருந்தனர்.
"இப்ப என்ன இவ்ளோ வருஷம் கழிச்சு அக்கறை?"
"அவங்க பையனோட ஃப்ரெண்ட்டுக்கு உன்ன கேட்டாங்க"
"நீங்க என்ன சொன்னீங்க?" என்றாள் லஷ்மி நிலாயினி.
"லஷ்மிட்ட தான் கேட்கணும்னு சொன்னேன், என்னைய வேற என்ன சொல்ல சொல்ற. முகத்துல அடிச்சாக்குல உங்க வேலைய பாருங்கன்னு சொல்ல வரமாட்டேங்குதுல" என்றார் பாவமாக.
"எங்கட்ட மட்டும் ஏறு ஏறுன்னு ஏறுற அங்க பேச வரமாட்டேங்குதோ உனக்கு? என் பொண்ணுக்கு நா மாப்ள பாத்துக்குறேன் இத்தன நாள் இருந்த மாதிரி கம்முன்னு இருங்கன்னு சொல்லிட்டு வச்சுருக்கணும்மா நீ" என்றாள் சந்திரா.
"எல்லாரையும் பகைச்சிட்டு உங்க மூணு பேத்த எப்படி கரையேத்த நானு?"
"எந்த காலத்துல இருக்க நீ? யார் தயவும் தேவை இல்ல, மாப்ள வீட்டாளுங்கள ரிஜிஸ்டர் ஆபிஸ் வர சொல்லி சிம்பிளா மேரேஜ் முடிச்சுட்டு வந்துட்ருக்கலாம்"
"கல்யாணத்தோட அருமை பெருமை தெரியாம பேசக் கூடாது. அக்னி சாட்சியா வச்சு கட்டுற கல்யாணமே பிச்சுகிட்டு போயிடுது, இவ ரிஜிஸ்டர் ஆபீஸ்ல பண்ணுவாளாம். அப்படி வேற எண்ணமோ உனக்கு?"
"அவ எல்லாம் ப்ளானோட தான் பேசுறா, நா சொன்னா இங்க யார் நம்புறீங்க" என்றாள் நடுவில் தீக்ஷி.
"லஷ்மி என்ன அமைதியா இருக்க நீ?" என்றார் வினோதினி.
"அடுத்து ஃபோன் போட்டா, என்ட்ட குடும்மா அவங்கட்ட நா பேசிக்கிறேன்"
"அப்ப அந்த போலீஸ்கார தம்பியத்தான் கட்டிக்கப் போறியா?" என்ற வினோதினியை பார்க்கவே பாவமாக இருந்தது.
'இதே இடத்தில் அவள் சம்பாதிக்கவில்லை எனில், அவரால் உரிமையாக அதட்டி கேட்டிருக்க முடியுமோ? சம்பாதித்து வீட்டைப் பார்க்கும் பெண்ணை எப்படி கேள்வி கேட்க முடியும் என்ற எண்ணமோ?'
"நா அத இன்னும் முடிவு பண்ணலம்மா. ஆனா அவங்க சொன்னப்ப நா மறுக்கல. அத தான் யோசிச்சுட்டு இருக்கேன். ஏன் மறுக்க தோணலன்னு. இப்பவும் சரியாவருமான்னு தான் யோசிக்கிறேனே தவிர அப்ஜக்ட் பண்ணனும்னோ அதுக்கான வேலிட் ரீசனோ யோசிக்க தோணல"
"அப்ப உனக்கு அவர பிடிச்சுருக்குல்லக்கா?" என்றாள் சந்திரா,
"ம்ம் ம்ம்மா" என அவள் கூறிய விதத்தில் இளையவர்கள் இருவரும் சிரிக்க, வினோதினி விழித்தார்.
"சூப்பர்! அப்ப போய் மாப்ள கேளும்மா நீ" என்றாள் தீக்ஷி,
"சும்மா இரு தீக்ஷி. ம்மா நீயும் யோசி, எனக்கு சரியா வருமான்னு சொல்லு. மறுபடியும் அவங்க பேச வருவாங்க. அப்ப என்ன பதில் சொல்றதுன்னு சொல்லு" என்றவள், சாப்பிட்டு முடித்திருக்க, எழுந்து கொண்டாள்.
அங்கு ஆரன் விஷ்வேஷ்வரன், கீழே ஒரு குடும்பத்தையே குழப்பத்தில் விட்டுவிட்டு வந்து அடுத்ததாக அவன் அம்மாவையும் குழப்பி விட்டிருந்தான்.
"உன்ன ஐஓபி பேங்க்ல வேலை பாக்குற பொண்ணா பாருன்னு சொன்னேனா இல்லையா? நீயா பாக்றியா இல்ல நானே பாத்து சொல்லவா?" என்று கேட்டு வைக்க,
"ஐஓபி பேங்க்ல அப்படி என்னடா இருக்கு?"
"பொண்ணு தான்"
"விஷ்வா இங்க பொண்ணே அமையல நீ ஐஓபி பொண்ணு தான் வேணும்னா எப்புடுறா அமையும்?"
"தேடும்மா. கிடைக்கலனா சொல்லு" என்றுவிட்டான்.
அவர் அதை கணவரிடமும், புனிதாவிடமும் சொல்லிப் புலம்ப, அவர்கள் இருவரும் ஒருசேர சொன்ன பதில, "அவன் உன்ன புதுசா பாக்க சொல்லல, அவன் பாத்து வச்சுருக்கான் அந்த பிள்ளைய வந்து பாருன்னு சொல்றான்" என்பது தான்.
"எப்ப இருந்து இப்படி வேலைலாம் பாக்க ஆரம்பிச்சான் இவேன்? இவனுக்கு நா ஊர் பூராம் பொண்ணு தேடுவேனாம், இவன் லவ்வு பண்ணுதானாமா லவ்வு. போய் பேசிக்கிறேன் அவன்ட்ட. இங்க பாருங்க ஞாயித்துகிழம திருநெல்வேலி போய் அவன நேர்ல கேக்கணும் சொல்லிட்டேன்" என கணவரை கிளப்ப ஆரம்பித்திருந்தார் தங்க மாடத்தி.
மறுநாள் காலையில், முந்தைய நாள் சபாபதி என்பவர் கொடுத்த கம்ப்ளைண்டை விசாரிக்க, 'லெனின் ரோஸ் கல்லூரி நகர்' வந்திறங்கினார்கள் ஆரன், மதுரன் இருவரும்.
மதுரன் காலையில் கொண்டு வந்திருந்த விபரங்களை சேர்த்து வைத்து பார்த்ததில், கடந்த பத்து வருடங்களில், ஆறு வருடங்களாக தான் தொடர் தற்கொலைகள் நடந்திருக்கிறது என பிடிபட்டது. அதுவும் திருமணமான பெண்கள், இருபத்தைந்திலிருந்து முப்பதைந்திற்குள் இருக்கும் பெண்கள் தான் அனைவரும். பதிவு செய்யப்பட்டிருக்கும் காரணமும் ஒன்று தான் குழந்தை இன்மை. ரத்னாவில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது இந்த தொடர் தற்கொலை.
இப்போது வந்திருக்கும் சபாபதியின் வீடிருக்கும் தெரு, நிலாயினியின் வங்கி இருக்கும் தெருவிற்கு முந்தைய தெரு. ஆனால் இவர்கள் சென்று இறங்குகையில் அவள் வண்டி அங்கு தான் சபாபதி வீட்டில் தான் நின்றது.
"இவ எங்க இங்க?" என ஆரன் யோசித்தவாறே இறங்க,
"அந்த சைகோ கொலைகாரன் இங்க எங்கையோ தான் சார் இருக்கான்" என அந்த தெருவை சுற்றிப் பார்த்துக் கூறினான் மதுரன்.
அதில் அவனைத் திரும்பிப் பார்த்த ஆரன், "சைகோவா? நடந்தது எல்லாம் தற்கொலை தான?" என கேட்க,
"நீங்க தான சார் எவனோ புகுந்து விளையாண்டுருக்கான்னு சொன்னீங்க?"
"நா சொல்லுவேன் ஆயிரத்தெட்டு. நீ நீயா யோசி மேன். தற்கொலை எப்படி சைகோ கொலையாகும்?"
"என்னவோ மர்மமா தான் சார் இருக்கு" என ஒத்துக்கொண்டு நிற்க,
"இருக்குல்ல. எனக்கும் இவ வண்டியே இங்க பாத்ததுல இருந்து அப்படித்தான் இருக்கு" என ஆரன் நிலா ஸ்கூட்டியில் தட்ட,
"லஷ்மி ஸ்கூட்டியா சார் இது?" என்றான் மதுரன்.
"ஏன் உனக்கு தெரியல?"
"இல்ல சார், இது லஷ்மி ஸ்கூட்டியான்னு தெரியாது. ஆனா உங்க கண்ணுல படுற ஒரே ஸ்கூட்டி லஷ்மியோடது தான்னு மட்டும் நல்லா தெரியும்" என்க,
"கோர்த்து விட்டுட்டு நக்கல் வேற பண்ற நீ ராஸ்கல்?" என முறைத்தான் ஆரன்.
"நானா?" என அவன் நெஞ்சில் கை வைக்க,
"வீடு பாத்துக் குடி வச்சவன் நீ தான?" என பேசியபடி இருக்க, சபாபதி வேகமாக வெளியே வந்தார். வெளியே இருந்தவர்கள் சென்று சொல்லியிருக்க வேண்டும், அங்கிருந்த யாரும் இவர்களிடம் பேச முனையவில்லை. பார்த்தபடி தள்ளியே நின்றனர். இப்போது சபாபதி வரவும் தான் உடன் வந்து கூட்டமாக நின்றனர்.
"உள்ள வாங்க சார்" என சபாபதி அழைக்க,
"வீட்ல நிறைய ஆளுங்க இருக்காங்களே. இங்க இருந்தே பேசலாம்" என்ற ஆரன், "உங்க பொண்ணுக்கு எப்ப கல்யாணம் ஆச்சு?" என ஆரம்பித்தான்.
"ரெண்டரை வருஷம் ஆச்சு சார்"
"லவ்?"
"கூட படிச்ச பையன் தான் சார்"
"எங்க படிச்சாங்க?"
"இங்க தான் லெனின் ரோஸ் காலேஜ்ல, எம்.காம். நல்லா படிக்கிற பொண்ணு தான் சார்" என்றார் அவரே,
"வேலைக்கு எங்கையும் போகலையா?"
"இல்ல சார், பி.காம் முடிச்சா, எம்.காம் படிக்கப் போறேன்னு அங்கேயே தான் படிச்சா. அப்புறம் தான் காதல்னு வந்து நின்னா. கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்"
"அந்த பையன் எப்படி?"
"பாக்க பழக ரொம்ப நல்லமாதிரி தான் சார் தெரியும். ஆனா பொண்ண கொன்னுட்டானே சார். இனிக்க இனிக்க பேசுவான் சார். என் பொண்ணு மேல அவ்வளவு பாசம் மாதிரி தான் எங்க முன்னாடி காமிச்சுப்பான் சார்"
"இப்ப மட்டும் எப்படி சந்தேக படுறீங்க?"
"கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகாத பொண்ணு சார். இவன மட்டும் தான் சுத்தி சுத்தி வரவச்சான். இங்கையும் கூட்டிட்டு வந்துட்டு தங்க கூட விடாம கூட்டிட்டுப் போயிருவான். அவன விட்டா வேற ஒன்னுங்கிடையாதுன்னு தான் வச்சுருந்தான் சார். அப்படிப்பட்டவ எதுக்கு சார் தற்கொலை பண்ணிக்கணும்? அப்ப அதுக்கும் அவன் மட்டுந்தான காரணமா இருக்கணும்?" என்க, தலையை ஆட்டி கேட்டுக்கொண்டான் ஆரன்.
அப்போது தான் வெளியே வந்தாள் லஷ்மி நிலாயினி, அவளுடன் தோழி சுந்தரியும். இருவரும் வந்து சபாபதியிடம், தலையை அசைத்துக் கிளம்ப, திரும்புகையில் தான் ஆரன் விஷ்வேஷ்வரனயும், மதுரனயும் கண்டாள் நிலா.
ஒருநொடி கண்ணை உருட்டி விழிக்க, "போ!" என்றுவிட்டான் ஆரன், கண்ணசைவிலேயே, அவளுக்கும் அது புரிந்தது, அமைதியாகவே அங்கிருந்தவர்களையும் அப்படியே பார்த்தவாறு கடந்துவிட்டாள்.
"இந்த பொண்ணுங்க யாரு?" என்றான் அடுத்ததாக.
"என் பொண்ணு கூட படிச்சவங்க சார். எல்லாம் இங்க லெனின் ரோஸ் காலேஜ்ல ஒன்னா படிச்சவங்க தான் சார்"
"அவங்கட்ட விசாரிக்கணுமே?" என்றான் அவனே,
"பிள்ளைக படிப்ப முடிச்சு ஏழெட்டு வருஷமாச்சு சார். இப்ப எப்பவாது ஃபோன்ல பேசுறது மட்டுந்தான், யாருக்காவது கல்யாணம்னா ஒன்னா மீட் பண்ணிக்குவாங்க. மத்தபடி முந்தி மாதிரி ரொம்ப பழக முடியிறதில்ல சார். லஷ்மி பொண்ணு பேங்க்ல வேலை செய்யிது, சுந்தரி பொண்ணு ஆடிட்டர் ஆகிடுச்சு. எல்லாம் பிசியான வேலைல இருக்காங்க சார்" என்றார்.
"சரி உங்க சம்மந்தி வீட்டு அட்ரஸ் குடுங்க" என்றவன், "லொகேஷன வாங்கிட்டு வா மதுரா" என கூட்டத்தைக் கடந்து வெளியே வந்தான்.
அங்கிருந்தவர்களை ஒவ்வொருவராக பார்த்தான். சம்மந்தபட்டவன் கூட்டத்திலும் நிற்கலாமே, என்ற சந்தேகப் பார்வை அது. அனைவருமே அவன் பார்வையை உணர்ந்தனர். சிலர் பதில் பார்வைப் பார்த்தனர், சிலர் பார்க்காததுபோல் திரும்பினர். நான்கு வீடு தள்ளி இருக்கும் கடையில் நிற்பவர்கள் வரை ஒவ்வொரின் முக பாவனைகளையும் அவதானித்தான். எல்லோரையும் ஒரே பார்வையில் கடந்து வந்தவன், சபாபதி வீட்டின் எதிர் திசையில் மூன்று வீடு தள்ளியிருந்த வீட்டின் வாயிலில் நின்றபடி செல்லில் பேசிக்கொண்டிருந்தான் ஒருவன். அந்த ஒருவனின் பார்வை அவனை மீண்டும் ஒருமுறைப் பார்க்க வைத்தது. அவனைக் குறித்துக்கொண்டான் ஆரன் விஷ்வேஷ்வரன்.
மதுரன் வரவும், வண்டியை எடுத்து, மெதுவாகவே நகர்த்தி அவன் முன் சென்று நிறுத்த, வெடவெடத்துவிட்டது எதிரில் நின்றவனுக்கு.
"ஏன் மதுரன். போலீஸ பாத்து பயப்படுறது கூட ஓகே, பதட்டப்படுறது தப்பில்ல?" என்க,
"தப்பாதான் சார் இருக்கு. கூட்டிட்டுப் போய் விசாரிச்சா பதட்டத்துக்கான காரணத்த தெரிஞ்சுக்கலாம் சார்" என்றான் மதுரனும் அவனையே பார்த்து.
"சார் நா சும்மா ஃபோன் பேசத்தான் சார் நின்னேன். இதோ கிளம்பிட்டேன் சார்" என அவன் படபடக்க,
"ஃபோன கொண்டா" என கேட்டான் ஆரன். அவன் கைகள் நடுங்கவே அவன் ஃபோனை நீட்ட, அதில் யாரும் இணைப்பில் இல்லை, ஒருமணி நேரத்திற்கு முன்புதான் அம்மா என்று சேமித்துவைத்த பெயரிலிருந்து அழைப்பு வந்து பதினைந்து நொடிகள் பேசி வைக்கப்பட்டிருந்தது.
"ஃபோன்ல யாருமே இல்லாம எதுக்கு காதுல வச்சுட்டு நின்ன?"
"அது அது கால் வந்தமாதிரி இருந்துச்சு சார்"
"டேய்! செவுல திருப்பிருவேன்" என ஆரன் உறுமவும்,
"சார் சாரி சார். என் ஃப்ரெண்ட்ட பாக்க தான் சார் நின்னேன்"
"எந்த ஃப்ரெண்டு? எங்க அவன? இவன தூக்கி நடுவுல உட்கார வை மதுரா. நிறைய பொய் சொல்றான், கொலை எதுவும் பண்ணிட்டு வந்துருப்பானாட்டம் இருக்கு"
"கொலையா? சார்? அதெல்லாம் இல்ல சார். ஒரு பொண்ண லவ் பண்ணுறேன் சார். அவள இங்க பாத்தேன் அதுக்காக நின்னேன் சார். அவ போயிட்டா இனி நானும் போயிடுவேன் சார். இனி இந்த பக்கமே வரமாட்டேன் சார். ப்ளீஸ் சார்" என அவன் கெஞ்ச,
"எங்கிட்டு திரும்பினாலும் லவ் லவ்வுனுட்டு. ச்சை எரிச்சலா இருக்குடா மதுரா" என்றவன், "கிளம்பு முதல்ல" என்க,
"சார் ஒரு நிமிஷம்" என்ற மதுரன், "நீ லவ் பண்ணுத பொண்ணு பேங்க்ல வேலை செய்யுதா? இல்ல ஆடிட்டரா?" என்க,
"பேங்க்ல சார். எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?" என்ற எதிலிருந்தவனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை.
"உன் முகர, இதென்ன கோவிலா கலர் கலரா பொண்ணுங்க வர, சாவு வீடு இங்க வந்துட்டு போனதே அந்த ரெண்டு பொண்ணுங்க தான். நீ அத பாக்க வந்து நின்னுட்டு, எங்களையும் டைவர்ட் பண்ற. எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ்காரர் பொண்டாட்டிய பாப்ப நீ?" எனவும் சேர்த்து திட்ட,
"சார்!" என அவன் அதிர்ந்ததை விட, ஆரன் திரும்பி மதுரனை புருவம் உயர்த்திப் பார்த்தான்.
"பின்ன இல்லையா சார்? தப்புத்தான?" என மதுரன் ஆரனைப் பார்த்துக் கேட்க,
"சார் இல்ல சார் எனக்கு தெரியாது சார். நிலா இங்க வேலைக்கு வந்ததுல இருந்து எனக்கு தெரியும் சார், ஒரு வருஷமா ஃபாலோ பண்றேன் இன்னும் கல்யாணம் ஆகல சார் அவளுக்கு"
"நிலான்ற, அவ இவன்ற?" என ஆரன் நிதானமாக முறைக்கவும்,
"இல்ல இல்ல சார்" என பதறினான் அவன்.
"அதான? அது ரெண்டும் எங்க சாருக்கு மட்டும் தான் சொந்தம். நீ லஷ்மினு கூப்பிடு" என மதுரன் சொல்ல,
"முதல்ல உன்னைய வெளுக்கபோறேன்டா நானு" என்றான் ஆரன். மதுரன் அமைதியாகிவிட, "எந்தப் பொண்ணு பின்னையும் சுத்தக் கூடாது. போய் ட்ரைக்டா பேசிடணும். ஓகேனா மூவ் பண்ணணும் இல்லனா அடுத்த வேலையப் பாக்கப் போயிடணும். சும்மா அங்க இங்க நின்னு சீன் போட்டன்னா தேவையில்லாததுல மாட்டிக்குவ, கிளம்பு" என்கவும், வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டான் அவன்.
"அப்ப நிலா இல்லையா சார்?"
"நிலா தான வா இருக்கா இல்லையான்னு காட்றேன்" என்றவன், நேராக ஐஓபி வங்கிக்கு தான் அடுத்துச் சென்றான். ஆனால் அவள் வண்டி அங்கில்லை,
"சுந்தரி கூட போனா தான சார், வெளில எங்கையும் போயிருப்பாங்க"
"நீயும் அவங்க கூட தான படிச்ச? அந்த பிள்ளைங்க ஏன்டா உன்னைய தெரிஞ்ச மாதிரி காமிச்சுக்கல?"
"லஷ்மி எங்க பாத்தாலும் பேச மாட்டா சார். ஆனா சுந்தரி பேசுவா, என்னைய கவனிக்கலன்னு நினைக்கிறேன்" என பேசியபடி இருவரும் பிங்க் ஸ்கூட்டியை தேடியபடி வர, லெனின் ரோஸ் கல்லூரியே அவர்கள் கண்ணில் பட்டது, அந்த கல்லூரியை வெளியிலிருந்தே முழுமையாக பார்த்தான் ஆரன் விஷ்வேஷ்வரன். அதற்கு எதிரிலிருந்த ஐஸ்கிரீம் கடை வாயிலில் நின்றது பிங்க் ஸ்கூட்டி.
அதனருகில் சென்று வண்டியை நிறுத்தியவன், திரும்பி மதுரனைப் பார்க்க, "எனக்கு வேறந்த வேலையும் இல்ல சார். உள்ள கூப்பிட்டா வருவேன் சார். இல்லனா இங்கேயே நிப்பேன் சார்" என அவன் படபடவென்று சொல்ல, பார்த்தபடியே உள்ளே சென்றுவிட்டான் ஆரன்.
நான்கு பேர் அமரும் டேபிளில், சுந்தரியும், நிலாயினியும் கையில் ஆளுக்கொரு ஜுஸூடன் அமர்ந்திருக்க, வேகமாக சென்றவன், நிலாயினி அருகில் இருந்த சேரில் அமர, இரண்டு பெண்களும் திடுக்கிட்டுத் திரும்பினர்.
"ஹாய்!" என்றான் இருவருக்கும் பொதுவாக, மதுரன் வந்தவன், மற்றொரு சேரில் அமர, சுந்தரி அவனைக் கண்டு விழித்துவிட்டு, "ஹே மதுரா எப்படி இருக்க?" என்றாள் சந்தோசமாக.
"நல்லாருக்கேன்" என இருவரும் பேச ஆரம்பிக்க, ஆரன், நிலாயினியிடம் புருவம் உயர்த்தினான். முறைத்துவிட்டு திரும்பிக் கொண்டாள் அவள்.
"எங்கள பாத்துட்டு தான் வந்தியா நீ? சார இன்ட்ரோ பண்ணல? சாரி சார் திடீர்னு வந்து உட்காரவும் பயந்துட்டோம். நீங்க மதுரனோட வந்தீங்கன்னு கவனிக்கல" என்றாள் சுந்தரி ஆரனிடம் திரும்பி.
"இட்ஸ் ஓகே. இப்ப ஒரு ஃப்யூனரல்கு போய்ட்டு வந்தீங்க தானே? அந்தப் பொண்ணு கூட எவ்ளோ க்ளோஸ் நீங்க?" என்றான்.
"விசாரணையா?" என்றாள் சுந்தரி இருவரையும் பார்த்துவிட்டு.