அத்தியாயம் 6
தொடர் தற்கொலைகளின் பின்னணியை எல்லா வகையிலும் தேடி எடுத்தனர். அது ஆரனுக்கும் மதுரனுக்கும் மட்டுமே ரகசியமாக இருந்தது. கமிஷ்னரிடம் கொண்டு செல்லுமுன் ஆரன் தெளிவாகிவிட முனைந்தான்.
ரத்னா மற்றும் ஆண்டாள் இருவரின் தகவல்கள் மட்டுமே அவர்களுக்கு தன்னால் கிடைத்தது. மற்ற பத்து வழக்குகளையும் மற்றவர்கள் பார்வைக்கு செல்லாமல் கைப்பற்ற வேண்டியிருந்தது. அதற்கே அவர்களுக்கு நாட்கள் நீடித்தது. கடந்த ஆறு வருடங்களில் ஆண்டாளோடு சேர்த்து பனிரெண்டு தற்கொலைகள் என எளிதாக கண்டுபிடிக்க முடிந்தது, ஆனால் சம்பந்தபட்டவர்களின் மொத்த தகவல்களையும் சேகரிப்பது தான் பெரிய விஷயமாக இருந்தது.
இறந்தவர்களின் ஏரியா லெனின் ரோஸ் கல்லூரி நகர் என்பதால் அங்குள்ள ஸ்டேஷனில் தான் அதிக தகவல்கள் சேகரிக்க முடியும் என்பதால். முதலில் அங்கு ஒருவரைப் பிடித்தனர். அவரை வைத்து, கடந்த ஆறுவருட சூசைட் கேஸ் எஃப்ஐஆர் காப்பி, விட்னஸ் ஸ்டேட்மெண்ட், கேஸ் டைரி, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எல்லாம் சேகரித்து தர சொல்லியிருக்க. அதை மதுரன் வாங்கி வந்திருக்க தற்போது அதில் தான் ஒற்றுமைகளைத் தேடி பிரித்தெடுத்துக்கொண்டிருந்தான் ஆரன்.
அப்போது தான், மதுரன் உள்ளே அவனிடம் ஏதோ கேட்க வருகையில் நிலாயினி அழைத்ததும் அவன் எடுத்து பேசியதும் ஆரன் கவனத்திற்கு வந்தது.
மதுரன் நிலாயினி அப்பா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கும் பேசியவன், அதை கேஸாக எடுத்த இன்ஸ்பெக்டரையும் லைனில் பிடித்துப் பேசினான்.
"மாமியார், நம்ம மாமனார் மேல சாஃப்ட்கானர்ல அங்க இருக்காங்க போல சார்" என ஆரனிடம் சொல்ல,
"குடு, நிலாட்ட நா பேசுறேன், நீ போய் க்ரைம் டேட்டா பேஸ்ல இந்த பனிரெண்டு கேஸ் டீடெயில்ஸையும் ஃபில்டர் பண்ணி எடுத்துட்டு வா" என மதுரனை அனுப்பிவிட்டு அவனே அவளுக்கு அழைத்தான்.
அங்கு நிலாயினி கையில் ஃபோனுடன், மதுரனின் அழைப்பை எதிர்பார்த்து நின்றவள், 'குருதேவ்!' என்ற பெயரை அவள் ஞாபக அடுக்குகளில் தேடிப்பார்த்தாள். எங்கும் அவள் கேள்விப்பட்ட பெயராக கூட நினைவில் இல்லை. பள்ளி, கல்லூரி துவங்கி, வேலைக்கென்று சென்று வந்த இடங்களை எல்லாம் நினைவில் நிறுத்தி, அந்த பெயரை தேடிப்பார்த்து, கிடைக்கவில்லை என்றதும் ஓய்ந்தமர,
"சின்னத்தான் என்னக்கா சொன்னாரு?" என்றாள் தீக்ஷி சந்திராவின் தோளில் கையிட்டு, பட்டென்று தட்டிவிட்டாள் சந்திரா.
"மதுரன் பேசல. வேற யாரோ" என்ற நிலாயினியின் முகத்தைப் பார்த்து மற்ற இருவரும் கூட, புருவத்தை சுருக்கினர்.
"என்னாச்சு? பேங்க்ல இருந்தா?" என சந்திரா கேட்க,
"இல்ல இது யாருன்னு தெரியல. லவ், கல்யாணம்னு உளறிட்டு வச்சுட்டான். ஆனா அம்மா, அப்பாவ சொல்லி மிரட்டுறான். குருதேவ்னு யாரையும் தெரியுமா உங்களுக்கு?"
"குருதேவ்?" என இருவரும் வாய்விட்டு சொல்லியே யோசித்தனர்,
"இல்லையே லஷ்மி?" சந்திரா சொல்ல,
"ட்ரூ காலர்ல அப்படிதான் வந்தது"
"ம்ச் அது உண்மையான நேம்மா இருக்கணும்னு இல்லக்கா" என தீக்ஷி சொல்ல,
"மே பி. ஆனா அவனுக்கு என் நேம் நிலான்னு தெரிஞ்சுருக்கு. அவன் என்ன ரொம்ப வருஷமா லவ் பண்றானாம். வர்ற திங்கள் அவன நான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கணுமாம். இல்லனா அம்மாவையும், அவரையும் எதாவது பண்ணுவானாம்"
"ஒருவேள, நம்ம ஏசிபி விளையாடுறாரோக்கா. அவருக்கு மட்டுந்தானே நீ நிலா?"
"அவரயும் அவனுக்கு தெரிஞ்சுருக்கு" என்ற நிலா யோசனையில் இருக்க, மதுரன் எண்ணிலிருந்து அழைப்பு வந்துவிட்டது.
"சொல்லு மதுரா?" என்றாள் வேகமாக எடுத்து,
"மதுரா தான் சொல்லணுமா? ஏன் நா சொன்னா கேட்க மாட்டியோ?" என்றான் ஆரன்.
ஒருநொடி திடுக்கிட்டு, கண்ணை மூடி நிதானமாகி, "சொல்லுங்க" என்றாள் அவனை எதிர்பார்க்காததால் சற்று அமைதியான குரலில்.
"என்ன பிரச்சனை?"
"அம்மாவ உங்க போலீஸ்காரங்க புடிச்சு வச்சுட்டு விட மாட்டேங்குறாங்க"
"அப்படிலாம் அரெஸ்ட் ஆகாதவங்கள பிடிச்சு வைக்க முடியாது. உங்கம்மா அவங்களா விருப்பப்பட்டு தான் அங்க உட்கார்ந்துருக்காங்க" என்றான் உடனே.
"இல்ல அவர் தான் விட மாட்டேங்குறாரு" என்றாள் உள்ளே சென்றுவிட்ட குரலில்.
"அதுக்கு போலீஸ்காரங்க எதுவும் பண்ண முடியாது நிலாம்மா. அங்க அவங்க கூட யாராவது இருக்கணும். போலீஸ் கேஸ்ன்றதால ஒரு கான்ஸ்டபிள் எப்பவும் இருப்பாரு. உங்கப்பாக்கு அவரோட அந்த இல்லீகல் அஃபைர் மேல தான் சந்தேகமே, அவங்க தான் ஆக்ஸிடென்ட் பண்ணிருக்கணும்னு சொல்றாராம். விசாரிச்சுட்ருக்காங்க. சம்மந்தபட்டவர் ஒருத்தங்க மேல சந்தேகம்னு சொன்னப்றம் அவங்கள கூட இருக்க வைக்க முடியாது. அதான் உங்க அம்மாக்கு கால் பண்ணிருக்காங்க. உங்கம்மா ஸ்டராங்கா எனக்கு அவருக்கும் சம்மந்தம் இல்லன்னு சொல்லிருந்தா, போலீஸே அடுத்தென்னன்னு பாத்துட்டுப்ஈஈ போயிருப்பாங்க. உங்கம்மாவே பாத்துக்குறேன்னு சொல்லி உட்கார்ந்துருக்கும்போது போலீஸ் யார்னாலயும் எதுவும் செய்ய முடியாது"
"ஓ! ஓகே அப்ப நா அம்மாட்டயே பேசி பாக்றேன். போலீஸும் சொல்லி தான் அங்க இருக்காங்கன்னு நினைச்சேன். அவங்க அங்கிருந்து வந்துட்டா அவர நீங்களே பாத்துப்பீங்க தானே? நா அம்மாவ வர சொல்லிடுறேன்"
"ஓகே, வேறெதுவும்னாலும் கால் பண்ணணும். உங்கப்பாவ ஏன் ஆக்ஸிடெண்ட் பண்ணாங்கன்னு தெரியல, உண்மையாவே அவர் சந்தேகப்படுற மாதிரி அது அவரோட அஃபெர்னால வந்த விபத்துதானான்னு தெரியணும். அதுவரை நீங்க மூணு பேரும் கொஞ்சம் கவனமாதான் இருக்கணும்"
"ஓகே சார்" என்றாள்.
"சல்யூட்டும் அடி. அத மட்டும் ஏன் விடுற?" என்றான் ஏறிவிட்ட குரலில்.
"நா சல்யூட் அடிச்சா ஃபோன்ல எப்படி தெரியும்?"
"ஆமா தெரியாதுல்ல? அப்ப சரி சல்யூட் அடிச்ச மாதிரி வெளில வந்து நில்லு நா நேர்ல வரேன்"
"வரேன்னா பயந்துருவோமா? என்ன சும்மா மிரட்டிட்டே இருக்கீங்க?"
"நீ எங்கிட்ட சிரிச்சுச் சிரிச்சுப் பேசுறப் பேச்சுக்கு, நா உர்றுன்னு மிரட்டினா கோவம் வரும் தான்"
"என்ன சிரிக்கல சிரிக்கலன்னே சொல்றீங்க?"
"எங்க கலகலன்னு சிரிச்சு காண்பி பாப்போம்?"
"கலகலகல!" என்றாள் வேண்டுமென்றே.
"சரியா கேட்கலையே? இன்னும் கொஞ்சம் சத்தமா சிரியேன் நிலா!"
"எனக்கு அவ்வளவு தான் வரும்"
"இல்லையே வாய் கொஞ்சம் நீளம் தானே? இன்னும் கொஞ்சம் சத்தம் வரலாமே?" என்றான் நக்கலாக.
"உங்களத விடவா எனக்கு நீளம்?"
"ரெண்டு பேருக்கும் நீளமா இருந்தா நல்லது தானே? நல்லா தாராளமா டேஸ்ட் பண்ணலாம்" என்றான் சாதாரணமாக.
"ஆ!" என்றவள் ஃபோனை காதிலிருந்து எடுத்துவிட்டு, "அவ்வா எவ்வளவு பேச்சு?" என தலையில் அடித்துக்கொண்டு நிற்க,
"என்னக்கா?" என்றாள் தீக்ஷி.
"ஒன்னுமில்லடி!" என அவளிடம் நிலா பல்லைக் கடிக்க,
"நிலா நிலா ஓடிவா நில்லாமல் ஓடிவா" என அவன் அங்கு கத்தி அழைக்க,
"ஏன் கத்துறீங்க?" என தங்கைகளிடமிருந்து நகர்ந்து வந்தாள்.
"இங்க ஒரு மனுஷன் பேசிட்ருக்கேன்ல?"
"பேசுறீங்களா நீங்க?"
"ச்ச! நா பேசலன்னு ஃபீல் பண்றியே நீ? என்ன பண்றதுமா, நா அமைதியாவே வளர்ந்துட்டேனா, நிறைய பேச வர்றதில்ல. பட் உன்ட்ட எப்படியும் பேசித்தானே ஆகணும். இனி பேச கத்துக்கிறேன் நிலா. நாம நிறைய நிறைய பேசலாம்" என்க,
"இன்னுமா?"
"ம்ம் நிறைய நிறைய பேசிட்டே இருக்கலாம்"
"நம்ம ஃப்ரொஃபெஸ்ஸனுக்கு இந்த ஆசைலாம் தேவையாங்க?" என்றாள் அவனை வாயடைக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்.
"நீ ஏன் கவலைப் படுற? ஆரன் விஷ்வேஷ்வரன மட்டும் நம்பு. நா பாத்துகிடுறேன். பேசி பேசியே முப்பது பிள்ள பெத்துக்குறோம் நாம"
"முப்பதா?" என அவள் வாய் பிளக்க,
"எஸ்! நீதானம்மா நேத்து பேசும்போது கேட்ட?"
"ஏது? நானா?"
"பின்ன நானா? நிலாமா நா ஹெல்ப் மட்டுந்தானே பண்ண முடியும்? மேக்கிங் ப்ராசஸ் என் சமத்து ப்ராடெக்ட் டெலிவரி உன் சமத்து" என்றான் சமத்தாக.
"அச்சோ உங்களோட! நா வைக்கிறேன் பை"
"ஹே நிலா!" என சிரித்தவன், "எதுனாலும் கால் பண்ணு, நா என் நம்பர் டெக்ஸ்ட் பண்றேன்" என்றான். அப்போது தான் அவளுக்கு மறுபடியும் குருதேவ் ஞாபகம் வந்தது.
"உங்களுக்கு குருதேவ்னு யாரையும் தெரியுமா?" என்றாள், கொஞ்ச நேரம் என்றாலும் மண்டைக்குள் குடைந்து கொண்டிருந்தானே, அவர்கள் திருமணம் பற்றி அவளே அன்றுதான் அவனிடம் பேசியிருக்க, மாலை புதியவன் கூறுகிறான் என்றால் நிச்சயம் இங்கு சுற்றியுள்ள யாரோ தானே? என்ற யோசனையில் சட்டென்று அவனிடம் கேட்டிருந்தாள்.
"ஏன்? என்னாச்சுன்னு சொல்லு?" என்றான் பிடிகொடுக்காமல்.
"உங்களுக்கு தெரியுமா?" அவன் கேட்ட கேள்வியில் அவனுக்குத் தெரியும் என்றே முடிவுக்கு வந்துவிட்டவளுக்கு சட்டென்று ஒரு ஆசுவாசம், அவனுக்கு தெரியும் என்றால் அவன் பார்த்துகொள்வானே என்ற நிம்மதி.
அவள் குரலில் அதை அவனும் உணர்ந்துவிட, மறுக்க தோன்றவில்லை, "ம்ம்! நீ விஷயத்த சொல்லு நிலா?" என்றான்.
"நினைச்சேன். கல்யாணம்னுலாம் பேசுறானே அப்ப நிச்சயம் உங்களுக்கு தெரிஞ்சவனாதான் இருக்கும்னு. அவன்ட்ட எப்ப எப்படி வம்பிழுத்தீங்க?"
"மேட்டர சொல்லு நீ"
"அவன் என்னைய பலவருஷமா லவ் பண்றானாம். இன்னைக்கு வந்த உங்களுக்கு ஓகே சொல்லக் கூடாதாம். மன்டே அவனுக்கும் எனக்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் நடக்கணுமாம் இல்லனா அம்மாவையும் அப்பாவையும் ஹாஸ்பிடல் விட்டே வெளில வரவிடாம பண்ணிடுவானாம்"
"குருதேவ் தான சொன்ன? ஆள் பாக்க எப்டி இருந்தான்?"
"ஃபோன் தானே பண்ணான் நா பாக்கலையே?"
"அப்ப நம்பர ஃபார்வேர்ட் பண்ணு, அவனுக்கு கல்யாணம் நானே பண்ணி வைக்கிறேன் "
"தெரியும்னு சொன்னீங்க?"
"எனக்கு குருதேவ்னு மூணு பேர தெரியும். நீ யார சொல்றன்னு தெரிஞ்சுக்கணும்ல?"
"உங்கள்ட்ட போய் சொன்னேன்ல எனக்கு நல்லா வேணும், சரியான வில்லங்கம் புடிச்சவரா இருக்கீங்க"
"உன்ட்ட தானடி? வில்லங்கமாவே இருந்துட்டு போறேன் விடு" என்றதும், இந்தமுறை சொல்லாமலே வைத்துவிட்டிருந்தாள். உடம்பு மொத்தமும் வேறெதோ நிலைக்கு மாறிவிட்டது போன்ற, பரபரப்பிலிருந்தது. அவள் அம்மா மீதிருந்த கோவம், குருதேவ் என்றவன் செய்த குழப்பம் எல்லாம் பின்னுக்கு எங்கோ போய் மறைந்துவிட, ஆரனும் அவன் பேச்சும் மட்டுமே மூளையையும் மனதையும் கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருந்தது.
"க்கா?" என தீக்ஷி கையை உலுக்கியதில், வலியெடுக்கவே, நிதானத்திற்கு வந்து, "என்ன தீக்ஷி?" என்றாள் அவளிடம்.
"கூப்பிடுறேன் நீ பாட்டுக்கு நிக்ற? என்ன சொல்றாங்க மதுரன் அத்தான்?"
"பேசினது ஏசிபி. நம்ம அம்மாவா வந்தா தான் உண்டாம். அங்க யாரும் அவங்கள பிடிச்சு வைக்கலயாம்"
"அப்ப சரி விடு. எப்ப தான் வர்றாங்கன்னு பாப்போமே" என சந்திரா சொல்லவும், மற்ற இருவரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டனர்.
மறுநாளும், பிள்ளைகள் அவரவர் வேலைக்குக் கிளம்ப, மாலை போல தீக்ஷியை அழைத்து வினோதினி அவருக்கான மாற்றுடை மட்டும் வாங்கிக்கொண்டார்.
தீக்ஷி அங்கு சென்று குடுத்துவிட்டுத் திரும்பி வந்தவள், "அவருக்கு தலைல நல்ல அடி போல, தையல் போட்ருந்தாலும் ஸ்கேன் பண்ணி எல்லாம் நார்மல் ஆகணுமாம். மானிட்டர் பண்ணிட்ருக்காங்களாம். டிஸ்ஜார்ஜ் ஆக ஒரு வாரம் ஆகுமாம்"
"அம்மா அது வர அங்கதான் இருக்கப் போறாங்களாமா?" சந்திரா கேட்க,
"அதுக்கு மட்டும் பதிலே இல்ல அம்மாட்ட. பாவமா மூஞ்ச வச்சுட்டு முழிக்கிறாங்க. லஷ்மிட்ட சொல்லுடி, நா என்ன பண்ணட்டும்? அந்த மனுஷன அநாதையா விட்டுட்டு வர மனசு வரமாட்டேங்குது அதான் அம்மா இருக்கான்னு சொல்லுடின்னு சொல்லிவிட்டாங்க" என்றாள் தீக்ஷி.
"நம்மள தவிர மத்த எல்லாருக்கும் பாவம் பாத்துடுவாங்க" என முனங்கவே முடிந்தது நிலாவால்.
வினோதினி நிலாயினி முன் வரவே இல்லை, அடுத்த நான்கு நாட்களும், மூன்று பெண்களும் சேர்ந்து சமைத்து உண்டு அவரவர் வேலைக்குச் சென்று, உறங்கி எழுவதை வழக்கமாக்கினர். ஞாயிறும் அப்படித்தான் கழிந்தது. சந்திராவும், நிலாயினியும் வினோதினியிடம் பேசவே இல்லை, அவரும் அடுத்து அத்தனை முறை அழைத்துப் பார்த்தும் எடுக்கவில்லை. தீக்ஷி மட்டுமே தொடர்பில் இருந்தாள்.
ஆரனும், மதுரனும், அந்த தற்கொலை வழக்கு சம்பந்தமாக அலைந்து கொண்டிருந்தனர், காவல்துறை பதிவேற்றி வைத்திருந்த தகவல்களை மொத்தமாக ஆன்லைனில் தரவிறக்கம் செய்தனர், பின் அரசாங்க மருத்துவமனை சென்று போஸ்ட்மார்டம் செய்த மருத்துவர்களிடமும் சம்பந்தப்பட்ட பெண்களின் தகவல்களைச் சரிபார்த்து விசாரித்தனர், கார்ப்பரேஷன் அலுவலகத்தில் அந்த பெண்களின் இறப்பு சான்றிதழில் கொடுக்கப்பட்ட காரணங்களையும் ஒப்பிட்டு விசாரித்து வாங்கிவந்தனர்.
இவை எல்லாவற்றையும் கமிஷனர் முன் கொண்டு வைத்தான் ஆரன்.
"தொடர் தற்கொலை வழக்கா இத மாத்தணும். இனி நா இந்த பனிரெண்டு பேர் வீட்லயும் நேரா போய் விசாரிக்கணும். பெர்மிஷன் வேணும்" என வந்தமர்ந்தவனைக் கண்டு அவருக்கு திக்கென்று இருந்தது.
"தொடர் தற்கொலையா? எப்படி இவ்ளோ கேஸ் மிஸ்ஸாச்சு?"
"யாருக்கும் சந்தேகம் வராம இருந்திருக்கலாம். இப்ப ரத்னாவோட அண்ணாக்கு டவுட் வரலைனா இப்பவும் இது வெளில வந்துருக்க போறதில்ல. இதை விசாரிச்சுட்டு இருக்கும்போது சேம் ஏரியால சேம் காரணத்தோட ஆண்டாள்ன்ற பொண்ணு தற்கொலை பண்ணிக்கலனாலும் இது வெளில வந்துருக்குமான்னு தெரியல. அவன் என் கைல மாட்டணும்னு விதி போல" என ஆரன் நிறுத்த,
"அவன்னா?"
"அவன்னு தனியாளாவும் இருக்கலாம் இல்ல ஒரு க்ரூப்பாவும் இருக்கலாம். அதுக்கு தான் நேர்ல விசாரிக்கப் போகணும், பெர்மிஷன் வேணும்"
"சீக்கிரம் விசாரிங்க ஆரன். இதுவே லேட் தான்" என்றார் டென்ஷனாக. ஆறு வருடங்களாக இதை ஏன் மறைத்து, விட்டு வைத்திருந்தீர்கள் என நீதிமன்றம், ப்ரஸ், மாதர் சங்கம், இவர்கள் தலைமை வரை அடுத்து வரிசையில் வருவார்களே என்ற தலையிடி அவருக்கு.
"என்ன மோட்டிவ்வா இருக்கும்னு எதாவது கெஸ் பண்ணிருக்கீங்களா ஆரன்?"
"இறந்த கேர்ள்ஸ் எல்லாருமே கல்யாணம் ஆனவங்க. மேக்ஸிமம் ஸ்டரெஸ் தான் ரீசனா இருக்கணும். அந்த ஸ்டெரஸ் எங்கிருந்து கொடுக்கபட்ருக்குன்னு தான் தெரிய வேண்டிய இருக்கு"
"பேசாம சூசைட்னே கேஸ் முடிஞ்சது முடிஞ்சதாவே இருந்துட்டா?"
"இன்னமு தொடரும். தப்பு செய்றவன் துணிஞ்சு புதுசா வேறெதுவும் கூட செய்வான்" என முறைத்தான் ஆரன்.
"அத தடுக்கணும் ஆரன்"
"உங்களுக்கும் சேதாரம் இல்லாம பிரச்சனைக்கு சேதாரம் இல்லாம கேஸ் முடியணும்ல?" என ஆரன் கேட்கவும்,
"தேவையில்லாத தலைவலில கொண்டு விட்ருமேன்னு தான். சரி நீங்கப் பாருங்க. நா அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் என்னத்த ஆஞ்சுட்ருக்கான்னு கூப்பிட்டுப் பேசிக்கிறேன்" என கொந்தளிக்க,
"உங்க கோவத்த இறக்கிவைக்க ஆள் வேணும் இப்ப? அந்த ஏரியால இந்த ஆறு வருஷத்துல மூணு இன்ஸ்பெக்டர் மாத்திட்டீங்க. அப்ப நீங்க மூணு பேரையும் கூப்பிடணும். கூப்பிட்டா சொல்லுங்க, அவங்கட்டயும் நா பேசி சில ரீடெய்ல்ஸ் கலெக்ட் பண்ணிக்குவேன்" என்றவன் எழுந்துகொண்டான், "மதுரா பெர்மிஷன் லெட்டர் வாங்கிட்டு வந்திடு" என சொல்லியவன். ஃபோனை எடுத்துப் பார்த்தவாறு வெளியேறிவிட்டான்.
"என்னன்னுடா இந்தாள சமாளிக்க? கொஞ்சமாது மதிக்கிறானா பாரு, எகத்தாளம் பிடிச்சவனா இருக்கான். போட்டும்னு விட முடியல, இந்த கேஸ்ல சிக்றவனயாச்சும் உசுரோட கொண்டு விடுங்கப்பா ராசாக்களா" என கமிஷ்னர், லெட்டரில் கையெழுத்திட்டு நீட்டி அயர்ந்து சொல்ல, தலையை அசைத்து அதை வாங்கிய மதுரன் சல்யூட் வைத்து வெளியேறினான்.
ஞாயிறன்று, ஆரனின் பெற்றோர், தங்கமாடத்தி, இளங்கோவன் இருவரும் அவன் வீடு வந்திறங்கினர். அவனைப் பிடித்து நான்கு கேள்வி கேட்கலாம் என வர, 'சொல்லிட்டு வர வேணாம்? நா அவசர வேலையா வந்துட்டேன். வீட்ட சுத்திப் பார்த்துட்டுக் கிளம்புங்க" என்று வைத்துவிட்டான் அவன்.
"இவன பெத்ததுக்கு ஒரு ஆட்டாங்கல்ல பெத்துருக்கலாம் மாவறைக்கவாது உதவிருக்கும்" என்றார் மாடத்தி.
"உன் இஷ்டத்துக்கு ஆட்ட முடிஞ்சுருக்கும்" என்றார் இளங்கோவன்.
"உங்களுக்கு எரிச்சலா வரலையாங்க? அவன பாக்க வந்தா இப்படி பண்றான்"
"சொல்லிட்டு, அவன் ஃப்ரீயான்னு கேட்டுட்டுப் போவோம்னு சொன்னேன் நீ தான் கேட்கல. அவன் வேலை தெரிஞ்சும் வளைச்சுப் பிடிக்க வந்தேம்னு வந்தா இப்படி தான் தனியா நிக்கணும். சரி அவனுக்கு வீட்ட ஒதுக்கி, எதாவது தேவைனா செஞ்சு வை, சாயந்தரம் ஊருக்குக் கிளம்பணும். இங்க ஒரு டிவி கூட கிடையாது நா என்னனு பொழுத போக்கவோ?" என்றவர், சட்டையை கழற்றிவிட்டு கிடந்த ஒற்றை மெத்தையில் நீட்டி நிமிர்ந்து விட்டார். மாற்றலாகி கொண்டே இருப்பதால் அத்தியாவசிய தேவைக்கான பொருட்கள் மட்டுமே அவனிடம்.
"எனக்கு வாச்சது எல்லாம் இப்படித்தான இருக்கு என்ன செய்ய" என்ற முனங்கலோடு வெளியே வந்து எதிர்வீட்டைப் பார்த்தார் மாடத்தி.
முன் வாசலில் கோலம், கேட்டை ஒட்டிய சுவற்றில், பூந்தொட்டிகள் நன்கு பராமரிக்கப்பட்டு பூக்கள் பூத்திருந்தது. வீட்டிற்கே அது அழகைத் தர, கொஞ்சம் மனதிற்கு குளுமை தான் மாடத்திக்கு. கிரில் கேட் பூட்டிருக்க முன் அறையில் ஒரு கூடை ஊஞ்சல் மட்டுமிருந்தது, அடுத்த வீட்டினுள் கதவு திறந்திருந்தது, ஸ்க்ரின் தெரிந்தது, ஆனால் ஆட்கள் தலை எதுவும் தெரியவில்லை.
உள்ளே சென்று வேலைகளைப் பார்ப்பவர் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை வந்து அந்த வீட்டைப் பார்ப்பதை வழக்கமாக்கினார்.
நான்கு நடைக்குப் பிறகு முதலில் பார்த்தது தீக்ஷியை தான். கடைக்கு செல்ல வேண்டி வெளியே வந்தவள் ஸ்கூட்டியை எடுத்துக் கிளம்ப, அவளை மேலிருந்து கீழ் ஆராய்ந்தார் மாடத்தி.
அவள் சென்றதும் உள்ளே சென்று, இளங்கோவனை எழுப்பி, "ரொம்ப சின்னப் பொண்ணா இருக்குங்க. பேங்க்ல வேலை செய்ற பொண்ணு மாதிரி தெரியல. வண்டிய எடுத்துட்டு எங்கையோ போயிருக்குத் திரும்ப வரும் பாருங்க. வாங்க" எனத் தூங்கிக் கொண்டிருந்தவரை எழுப்பிக் கூட்டிச் சென்றார், "இங்க நில்லுங்க. எப்படியும் வரும், அந்நேரம் ஒரு குரல் குடுங்க. இட்லிப் பொடிக்கு வறுத்து வச்சுட்டு வந்துடுறேன்" என அவர் உள்ளே ஓடிவிட,
"ஏறு வெயில்ல நின்னு பாத்துட்ருக்கவாம்" என வானத்தை நிமிர்ந்து பார்த்தவர் கண்கள் கூச, வீட்டின் வாசலில் சென்று நின்றுகொண்டார்.
சற்று நேரத்தில் தீக்ஷி வர, எதிர்வீட்டு வாசலில் நின்று ஹாரனை அடிக்கவுமே, இளங்கோவன் சத்தம் கொடுக்காமலே ஓடி வந்திருந்தார் மாடத்தி.
"இறங்கிக் கேட்ட திறன்னு எத்தனை தடவ சொன்னாலும் திருந்திடாத" என திட்டியபடியே வந்த சந்திரா கதவை திறந்துவிட்டு, அவளிடமிருந்த பைகளில் ஒன்றை எடுத்துச் செல்ல,
"இதுக்குத்தான் கூப்பிட்டேன். சும்மா தான உட்கார்ந்துருக்க வந்து கேட்ட திறந்தா என்ன?" என தீக்ஷியும் பேசியபடி உள்ளே வண்டியை விட, பதிலுக்கு சந்திரா ஏதோ அதட்டுவதும் தெரிந்தது.
"ரெண்டு பொண்ணுங்களா? இந்த ரெண்டு பேர்ல யாரா இருக்குமுங்க?" என்றார் மாடத்தி.
"சோலிப் போட்டு தான் பாக்கணும். அவன் இந்த வீட்டுப் பொண்ணுங்கனே சொல்லல. பேங்க்ல வேலைப் பாக்குறப் பொண்ணுன்னு தான் சொன்னான். நீயா எதிர்வீட்ட பாத்து பொண்ணுத் தேடிட்ருக்க"
"இல்ல அவன் எதிர்வீட்ல பொண்ணுன்னு சொல்லிட்டு தான் பேங்க்ல வேலை பாக்ற பொண்ணுன்னே சொன்னான். அதனால பொண்ணு வீடு இதுதான்" என்றார் அவர் அடித்து சர்வநிச்சயமாக.
"வெளில நின்னு என்ன சண்டை. உள்ள போங்க ரெண்டு பேரும்" என்றவாறு உள்ளிருந்து வந்து நின்றாள் லஷ்மி நிலாயினி. வெள்ளை சட்டையும், ஆரஞ்சு நிறத்தில் நீளபாவடையும் அவளையும் சிறுபிள்ளையாக தான் காட்டியது.
"ஏங்க இது லேடீஸ் ஹாஸ்டலா இருக்குமோ? நிறைய பொம்பள பிள்ளைங்க இருக்குங்க" என தங்கமாடத்தி கேட்க,
"யாருக்கு தெரியும். உன் மகன்ட்டயே ஃபோன போட்டு எந்தப் பிள்ளைன்னு கேளு. வெயில்ல நிக்க முடியல எனக்கு" என்றார் இளங்கோவன்.
"ம்ச் உடனே சொல்லிருவான் உங்க மகன்" என அவரிடம் சாடிவிட்டு சற்று முன்னால் வந்து, கீழே எட்டிப் பார்த்து, "பிள்ளைகளா?" என அழைத்தே விட்டார்.
"ஏய் என்ன பண்ற?" என இளங்கோவன் அதட்டியபடி வந்து தடுப்பதைக் கண்டுகொள்ளவே இல்லை அவர்.
"இங்க பக்கத்துல எதும் பலசரக்கு கடை இருக்கா? தயிறு வாங்கணும். இது என் மகன் வீடு, இன்னைக்கு தான் நாங்க வந்துருக்கோம்" என சொல்ல, மாடத்தி அழைத்ததில் மூன்று பெண்களும் நிமிர்ந்து தான் பார்த்து நின்றனர்.
"அக்கா உன் மாமியார்" என்றாள் தீக்ஷி சிரிப்புடன்.
"ஹாய் ஆன்ட்டி. தயிர் மட்டுந்தான்னா, எங்கள்ட்டயே இருக்கு தரட்டுமா?" என்றாள் சந்திரா.
"சரிம்மா இரு கீழ வாரேன்" என அவர் இறங்கப் போக,
"இருங்க ஆன்ட்டி, நானே கொண்டு வரேன்" என்ற தீக்ஷி, தற்போது வாங்கி வந்த பையிலிருந்தே ஒரு தயிர் பாக்கெட்டை எடுத்துக்கொண்டு அவரை நோக்கிச் சென்றுவிட, மாடத்தி அங்கேயே நின்றுவிட்டார்.
"என்னடி பண்றீங்க ரெண்டு பேரும்?" என்றாள் நிலா அதட்டலாக.
"உன் மாமியார்னா எங்களுக்கும் மாமியார் தானேக்கா? பேசிப் பழக வேண்டாமா?"
"அவங்க என்னமாச்சு நினைச்சுக்கப் போறாங்க" நிலாயினி சொல்ல, சந்திராவும் பேசியபடி இருக்க, தீக்ஷி அங்கு சென்றுவிட்டாள்.
"இது உங்க வீடாம்மா?" என்றார் தங்கமாடத்தி.
"ஆமா ஏன்?"
"இல்ல பூஞ்செடி நல்லா பாக்கவே வீட்ட நிறைச்சுருக்கு, எனக்கு இப்படி இருந்தா பிடிக்கும் அதான் கேட்டேன்"
'போட்டு வாங்குதாங்களோ?' என யோசித்த தீக்ஷி, "எங்க அக்காக்கும் ரொம்பப் பிடிக்கும் ஆன்ட்டி" என சொல்லி வைத்தாள். உண்மையில் அதை பராமரிப்பது அவள் தான், எப்போதாவது சந்திரா தண்ணீர் ஊற்றுவாள், நிலாயினி அதுகூட இல்லை, அவளுக்கு கணினியும் கணக்கும் மட்டும் தான் முழுநேரமும். ஆனாலும் அவருக்காக சொல்லி வைத்தாள்.
"உங்க வீட்ல எத்தன பேரு?" என்றார் அடுத்ததாக.
"அம்மா, நாங்க பொண்ணுங்க மூணு பேரு"
"ஓ! பேங்க்ல யார் வேலை செய்றீங்க?" என்றுவிட்டார் அவசரத்தில்.
கப்பென்று காரணத்தைப் பிடித்துவிட்டாள் தீக்ஷி, 'ஏசிபி சார் வீட்ல பேசிட்டார்' என தெரிந்தவள், இங்கிருந்தே சத்தமாக, "லஷ்மிக்கா, உன்ன தான் கேட்குறாங்க" என அங்கு அவளுக்கு சொல்லி, இங்கு இவரிடம், "பேங்க்ல அக்கௌன்ட் எதுவும் ஓபன் பண்ணப் போறீங்களா?" என அதையும் கீழே உள்ளவர்களுக்கு கேட்குமாறு கேட்க,
"ஆமா ஆமா" என்றார் அவர் திருதிருத்து, இளங்கோவனைப் பாவமாக பார்க்க, அவர் முறைத்தார்.
"அக்கா, நியூ அக்கௌன்ட் வேணுமாம்" எனவும் கீழே பார்த்துச் சொல்ல,
"நீ கீழ வாடி. அங்க நின்னு கத்தாத" என அதட்டிய நிலாயினி, "நாளைக்குப் பேங்க் வாங்க ஆன்ட்டி ஓபன் பண்ணிடலாம்" என சொல்ல,
"ஆமா ஐஓபி பேங்க் தானே?" என்றார் தங்கமாடத்தி.
"ஏன் உங்களுக்கு அங்க மட்டுந்தான் அக்கௌன்ட் வேணுமா?" என்றாள் சந்திரா சிரிப்புடன்.
"ஆமா கண்டிப்பா"
"ஐஓபியே தான். சேஞ்சே இல்ல" என்றாள் தீக்ஷி.
"தீக்ஷி!" என நிலாயினி அழைக்க,
"நாளைக்கு மறக்காம அக்கௌன்ட் ஓபன் பண்ணிடுங்க ஆன்ட்டி. ஏசிபி சாருக்கு அக்கா ப்ரான்ச் தெரியும் சார்ட்ட கூட கேட்டுக்கோங்க. நா வரேன்" என சொல்லியபடியே கீழே படபடவென இறங்கிவிட்டாள்.
மாடத்தியும், இளங்கோவனும் நிலாயினியை குறுகுறுவெனப் பார்க்க, சந்திரா, தீக்ஷி இருவரும் நிலாவையும் அவர்களையும் மாற்றி மாற்றிப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்தனர். பெரியவர்கள் அவளையே பார்த்தபடி இருப்பதால், நிமிர்ந்து மெல்ல தலையசைத்து வீட்டிற்குள் சென்றாள், இளையவர்களும், "எதுவும் தேவைனா கேளுங்க ஆன்ட்டி!" என சொல்லியே உள்ளே சென்றனர்.