வேலை செய்ய ஆரம்பித்தவுடன் இருவரது கவனமும் முழுமையாக வேலையிலேயே பதிந்தது. மற்ற எதையும் கருத்தில் கொள்ளும் அளவிற்கு நேரமில்லாமல், வேலைப்பளு அவர்களை இழுத்துக் கொண்டது.
மேலும் இரண்டு நாட்கள் சென்றன. வேலை அதிகமாக இருந்ததால் ட்ரெயினைத் தவிர்த்து வந்தான் பரத். ஆரம்பத்தில் டிராஃபிக் அதிகமாக இருந்ததால்தான் ட்ரெயினில் வர ஆரம்பித்திருந்தார்கள். அதுமட்டுமில்லாமல், தங்களுக்குக் கொஞ்சம் ரிலீஃப் வேண்டும் என்பதற்காகவும் அவ்வப்போது ட்ரெயினில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.
இப்போது பரத் வரும் ட்ரெயினுக்கு முன்பாக வரும் ட்ரெயினில்தான் தினமும் வருவார்கள்.
ஒருநாள் பரத் எப்போதும் வரும் ட்ரெயினை மிஸ் செய்திருக்க, அன்றுதான் பிரியாவை முதன்முதலாகப் பார்த்தான்.
பிரியா தினமும் வரும் ட்ரெயினில்தான் அன்று பரத் ஏறியிருந்தான். அவளது வழக்கமே அவசர அவசரமாக ஓடி வந்து ட்ரெயினில் ஏறுவதுதான்.
அன்றும் அவள் ஓடி வந்துதான் ஏறியிருந்தாள்.
இது நடந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்துவிட்டது.
அன்று அவள் கடிகாரத்தைப் பார்த்தபடியே ட்ரெயினை நோக்கி ஓடி வந்தாள். "நிறுத்துங்க!" என்று குரல் கொடுத்தபடியே ஓடி வர, வாசல் ஓரமாக நின்றிருந்தவன் அவளுக்கு கை கொடுத்து உள்ளே ஏற வைத்தான்.
எப்போதும் போல கை கொடுத்து உதவியவனுக்கு சிநேகமாக ஒரு புன்னகையை வீசியவள், உள்ளே சென்று இடம் இருந்த பகுதியில் நின்று கொண்டாள்.
அவளுக்கு கை கொடுத்து உதவியது எல்லாம் அவனைப் பொறுத்தவரை சாதாரண உதவிதான். அன்று அவள் சிநேகமாகப் புன்னகைத்து சென்றபோதும், அவளைப் பார்த்து இவனும் சின்னச் சிரிப்பு ஒன்றை உதிர்த்திருந்தான்.
சிறிது நேரத்தில் அவளுக்கு எதிரில் இடம் கிடைக்கவும், அங்கு சென்று நின்று கொண்டான்.
அப்போதுதான் அவளது அருகில் பள்ளிக்குச் செல்லும் பதின்மூன்று வயது சிறுமி ஒருத்தி நின்று கொண்டிருப்பதைக் கவனித்தான்.
அப்போது பின்னால் நின்று கொண்டிருந்த ஒருவன், அந்தச் சிறுமியிடம் தவறாக நடந்து கொள்ள முயலவும், அந்தச் சிறுமி உடலைக் குறுக்கிக் கொண்டு இவளின் அருகில் ஒட்டி நின்றாள்.
"என்னம்மா? என்னாச்சு?" என்று கேட்டாள் பிரியா.
"ஆன்ட்டி... அந்த அங்கிள் பேட் டச் பண்ற மாதிரி இருக்கு. நானும் ரொம்ப நேரமா நகர்ந்து நகர்ந்து வரேன். ஆனா என் பின்னாடியே வந்துட்டு இருக்காரு..." என்று சிறிது அச்சத்துடன் கூறினாள்.
"சரிம்மா... பயப்படாத," என்று அவள் கன்னத்தைத் தட்டி, கையை அழுத்தமாகப் பிடித்து, தன் மறுபக்கம் அழைத்து வந்து நிறுத்தினாள்.
பிறகு அந்த ஆணின் அருகில் அவளே சென்று நின்றாள்.
இதுதான் சாக்கு என்று நினைத்த வக்கிரம் பிடித்த காமப் பிசாசு, அவளிடமும் தன் சில்மிஷங்களை காட்டத் தொடங்கினான்.
அவன் அவளது இடுப்பில் கை வைக்க முயல, மின்னல் வேகத்தில் அவனது கையைப் பிடித்தவள், முதுகுப் பக்கமாக வளைத்துத் திருப்பியிருந்தாள்.
அவன் வலியில், "அய்யோ! அம்மா!" என்று கதற,
மீண்டும் அவனது கையை வேகமாகத் திருப்பி முறுக்கியவள்,
"தொலைச்சிடுவேன்! இனி எந்தப் பொண்ணு மேலயாவது கைய வைக்கணும்னு நினைச்சேன்னு வை... அந்த கை இருக்காது. கை மட்டும் கிடையாது, எதுக்காக இவ்வளவு ஆட்டம் போடுறியோ அதுவும் இருக்காது!" என்று பற்களைக் கடித்தபடி அவனுக்கு மட்டும் கேட்குமாறு கூறினாள்.
"உன் சத்தம் வெளிய வந்துச்சுன்னா உனக்குத்தான் அசிங்கமா போகும். ஞாபகத்துல வச்சுக்கோ. இன்னொரு முறை அந்தப் பொண்ணு இல்ல, எந்தப் பொண்ணுகிட்டயாவது வம்பு பண்ணனும்னு நினைச்சா, அன்னிக்குதான் நீ இருக்கிற கடைசி நாள்.
போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கவும் தயங்க மாட்டேன். உன்னை இனி இந்த ட்ரெயின்ல பார்க்கவும் கூடாது. இந்த ட்ரெயின்னு இல்ல, எந்த ட்ரெயின்ல ஏறினாலும் கையும் காலையும் அடக்கமா வச்சுக்கிட்டு இருக்கணும். சரியா?" என்று சிரித்துக் கொண்டே பற்களை நறநறவென கடித்தாள்.
அதை யார் கவனித்தார்களோ இல்லையோ, அந்தச் சிறுமி இந்தப் பக்கம் வந்து நிற்கும்போது பரத்தின் அருகில்தான் நின்றிருந்தாள். பயத்தில் அவன் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள்.
ஒரு பள்ளி மாணவி தன் கையை இவ்வளவு இறுக்கமாகப் பிடித்ததில் ஏதோ பிரச்சனை என்று உணர்ந்தவன், அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டான்.
அந்தச் சிறுமியும் மேலோட்டமாக விஷயத்தைக் கூற, அவன் அந்த அயோக்கியனைப் பார்த்தான்.
அவனை அடித்துத் துவைக்க இவன் நகர முயல, வேகமாக அவன் கையை இன்னும் இறுக்கமாகப் பிடித்த சிறுமி,
"அந்த அக்கா அவர்கிட்டதான் பேசிட்டு இருக்காங்க. நீங்க இங்கவே நில்லுங்க. எனக்குப் பயமா இருக்கு," என்று சின்னக் குரலில் கூறினாள்.
அதன் பிறகு அருகில் நின்ற பிரியாவை உற்றுப் பார்த்தான்.
அவனுக்குப் பதிலடி துணிச்சலாகக் கொடுத்த அந்தப் பெண்ணைப் பார்த்தவனுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி.
"இந்த மாதிரி இருக்கணும் பொண்ணுங்கன்னா. எதுக்கெடுத்தாலும் பயந்து நிற்கக் கூடாது. தப்பு செய்யலைன்னா துணிச்சலா செயல்படணும். அந்த அக்கா மாதிரி," என்று சிறுமியிடம் கூறியவன், பிரியாவை மெச்சுதலான ஒரு பார்வை பார்த்துவிட்டு கடந்து சென்றான்.
அவளை அன்றோடு மறந்தும் இருந்தான்.
ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று காலை எப்போதும் வரும் ட்ரெயினுக்கு வந்திருந்தான்.
அன்று அவளும் அவன் போகும் ட்ரெயினுக்கே வந்திருந்தாள்.
ஆபீஸில் முக்கியமான வேலை இருக்க, சீக்கிரமே வரச் சொல்லியிருந்ததால், வழக்கமாக வரும் நேரத்தைவிட முன்னதாக வந்திருந்தாள்.
அன்றும் வழக்கம்போல ஓடி வந்துதான் ஏறினாள்.
ட்ரெயின் கிளம்பும் வரை வாசலில் நிற்பவன் பரத். அதன் பிறகுதான் உள்ளே வந்து விடுவான்.
அன்றும் அவள் ஓடி வந்து ஏற, இவனைப் போன்றே வேறு ஒருவர் கை கொடுத்து உதவியிருந்தார்.
அவருக்குச் சிநேகப் புன்னகை ஒன்றை உதிர்த்தவள், உள்ளே சென்று இடம் இருந்த பகுதியில் நின்று கொண்டாள்.
இன்று ஏனோ அவனது பார்வை அவளது அந்த ஒற்றைப் புன்னகையில் நின்றது.
அவள் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழ, அதை சில நொடிகள் ரசித்தவன், தலையை உலுக்கிக் கொண்டு வேறு பக்கம் திரும்பினான்.
அவ்வப்போது அவளை ஓரக்கண்ணால் பார்த்தவனின் பார்வையில் பட்டது, அவளது கழுத்தில் இருந்த ஓம் டாலர்.
அதை எடுத்து பற்களுக்கு இடையில் வைத்தபடி, ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
ஆபீஸில் முக்கியமான மீட்டிங் இருக்க, அதை சரியாக முடிக்க வேண்டும் என்ற பதட்டத்தில் இருந்தவள், அவ்வப்போது ஓம் டாலரைப் பற்களுக்கு இடையில் வைத்து யோசித்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அந்த ஓம் டாலரை கவனித்தான் பரத்.
'ஓ... முருகர் இஷ்ட தெய்வமோ?' என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டான்.
அதன் பிறகு அவனது பார்வை அவளது நெற்றியில் இருந்து ஆரம்பித்து மெதுவாக முகம் முழுவதும் பயணித்தது.
பெரிதாக எந்த அலங்காரமும் இல்லாத முகம்.
ஆனால் ஏனோ பார்வையை விலக்க முடியவில்லை.
மறுநாள் அவளை எதிர்பார்த்து காத்திருந்தான்.
அவனது மனம் அவளைத் தேடியது.
ஆனால் அவள் தினமும் வரும் ட்ரெயின் அதற்கு அடுத்ததாக இருப்பதை ஒரு வாரம் கவனித்தவன்,
'அப்போ அதுதான் அவள் தினமும் வரும் ட்ரெயின் போல. அன்னைக்கு மட்டும் இதுல வந்திருப்பா போல,' என்று யோசித்தான்.
எதற்கும் ஒரு நாள் வெயிட் பண்ணிப் பார்ப்போம் என்று சாதாரண ஆர்வத்தோடு காத்திருந்தான்.
அவன் நினைத்தது போலவே அடுத்த ட்ரெயினில்தான் வந்தாள்.
அதுவும் வழக்கம்போல ஓடி வந்துதான் ஏறினாள்.
'இதே ஒரு பொழப்பா வச்சிட்டு இருக்கா போல இவ!' என்று மனதிற்குள் முணுமுணுத்தவன் சிரித்துக் கொண்டான்.
அதன்பிறகு தினமும் அவன் பார்வை அவளைத் தேடத் தொடங்கியது.
இறுதியில், அவளுக்காகவே அடுத்த ட்ரெயினில் வர ஆரம்பித்திருந்தான்.
உண்மையில், அவன் ட்ரெயின் பயணத்தைத் தொடர்ந்து பழக்கமாக்கியதற்குக் காரணம் அவளும் அந்த ஓம் டாலரும்தான்.
அதை உணர்ந்த சசி,
"என்னடா மச்சான், லவ்வாங்கியா?" என்று கேட்டபோது,
"ப்ச்... அப்படி இல்ல. அவளப் பார்த்துட்டே இருக்கணும் போல தோணுது. அவ்வளவுதான்.
நீ ரொம்ப யோசிச்சு உன்னையும் குழப்பி, என்னையும் குழப்பி, வீட்லயும் போட்டுக் கொடுக்காத.
அப்படி ஏதாவது இருந்தா நானே சொல்லுவேன்," என்று கூறிவிட்டான்.
அதன்பிறகு மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.
'சரி, நண்பனாகக் கூறட்டும். என்ன அவசரம்?' என்று யோசித்தவனும் அமைதியாகிவிட்டான்.
ஏனென்றால், தங்கைக்குத் திருமணம் செய்து வைத்த பிறகுதான் தான் திருமணம் செய்து கொள்வேன் என்ற முடிவில் இருந்தான் பரத். ஆனால் அவனது தங்கை வினிதாவோ, "அண்ணனுக்குத் திருமணம் ஆகி அண்ணி வீட்டிற்கு வந்த பிறகுதான், அதுவும் என் படிப்பு முடிந்த பிறகுதான் எனக்குத் திருமணம்" என்று கூறிக் கொண்டிருந்தாள்.
அவனுக்கு அந்தப் பெண்ணின் மீது உண்மையாக விருப்பம் இருந்தால், நேரடியாக அவனே வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தனது விருப்பத்தைக் கூறிவிடுவான். அதனால் சசியும் அமைதியாக இருந்தான். இப்படித்தான் இப்போது வரை அவனது பார்வை மட்டும் அவளைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
எப்போதாவது, "மச்சான், அந்தப் பொண்ணு வீட்டில் போய் பேசலாமா?" என்று கேட்டாலும், "நீயா கற்பனைக் கோட்டை கட்டிட்டு திரியாதடா!" என்று அவன் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுவான்.
'சரி, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்' என்று இவனும் காத்துக் கொண்டிருந்தான்.
இருவரும் வேலையில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தனர். கடகடவென்று ஒரு வாரம் கடந்திருந்தது. இந்த ஒரு வாரமும் பரத் ரயிலில் செல்லவில்லை. நண்பனுடனே வண்டியில் வேலைக்குச் சென்று கொண்டிருந்தான்.
ஏற்கனவே வயிறு இறங்கி இருந்தது. "எப்போது வேண்டுமானாலும் பிரசவம் ஆகலாம்" என்று வீட்டில் கூறியிருந்தனர். அதனால் நண்பனைத் தனியாக அனுப்பவும் முடியவில்லை. வீட்டில் இருக்கச் சொன்னாலும் அவன் கேட்க மாட்டான் என்பதை உணர்ந்ததால், நண்பனுடனேயே பைக்கில் சென்று கொண்டிருந்தான் பரத்.
அதை உணர்ந்த சசியும் நண்பனை நினைத்து சிரித்துக் கொண்டு அமைதியாகிவிட்டான்.
ஒரு வாரம் கடந்திருந்தது. மதிய நேரத்தில் இருவரும் வேலையில் மூழ்கியிருந்தபோது, பரத்தின் போன் சிணுங்கியது. வேலையில் இருந்தபடியே யார் என்று பார்த்தவன், அருகில் இருந்த நண்பனையும் ஒரு முறை பார்த்துவிட்டு, போனை எடுத்து,
"சொல்லுடா தங்கச்சி மா..." என்றான்.
அவளோ மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்க,"அண்ணா... அண்ணா..." என்று பதட்டமாக அழைத்தாள்.
அதைக் கேட்டவன் நண்பனின் தோளில் வேகமாகத் தட்டிவிட்டு,
"எருமை மாட்டு பயலே! தங்கச்சி போன் பண்ணியிருக்கா... எடுக்கலையா நீ?" என்று கடிந்துகொண்டான்.
நண்பனை முறைத்தபடியே வண்டிச் சாவியை எடுத்தவன், அவனையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். அவனைப் பின்னால் உட்கார வைத்துவிட்டு, ப்ளூடூத்தை இணைத்துக் கொண்டு,
"என்னடா மா? என்ன பண்ணுது?" என்று கேட்டான்.
"அண்ணா... நீங்க வீட்டுக்கு வரீங்களா? இல்ல நேரா ஹாஸ்பிடல் வந்துடுறீங்களா?" என்று அவள் கேட்டதிலேயே, இன்னும் வீட்டில் யாரிடமும் வலி வந்திருப்பதை கூறவில்லை என்பதை உணர்ந்தான்.
பின்னால் இருந்த நண்பனின் முகத்தை மிரர் வழியாகப் பார்த்தான். பதட்டத்தையும் தாண்டி, வலியில் அவன் முகம் சுருங்கியிருப்பதை அப்போதுதான் கவனித்தான்.
"சரிடா... நீ அத்தை, மாமா கிட்ட சொல்லிட்டு ஹாஸ்பிடலுக்கு வாங்க. நாங்க ரெண்டு பேரும் அங்க வந்துடுறோம்," என்று கூறிவிட்டு போனை வைத்தான்.
பிறகு நண்பனைப் பார்த்தான்.
அவன் முகம் வாடியிருப்பதை உணர்ந்தவன் வண்டியை ஓரமாக நிறுத்த,"இல்லடா... நீ ஹாஸ்பிடலுக்கு வண்டியை விடு. அப்புறமா பேசிக்கலாம்..." என்று விட்டான்.
அவனுக்குள் சிறு பதட்டமும் பயமும் கலந்திருந்தது. அதனால் வேகமாக மருத்துவமனைக்குச் சென்றனர்.
இவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு வரவும், அதே நேரத்தில் காரில் வீட்டினரும் வந்து இறங்கவும் சரியாக இருந்தது.
ஏற்கனவே சசி கூறியபடியே, பானுமதி, வினிதா, தெய்வா, சுந்தரம் ஆகியோருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தாள் ரேகா.
"எப்போது வேண்டுமானாலும் வலி வரலாம். போன் செய்தவுடன் உடனே வர வேண்டும். நல்ல டிரைவரைப் பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்," என்று முன்பே கூறியிருந்தான் பரத்.
அதனால் இப்போது வலி எடுத்ததும், சுந்தரம் டிரைவருக்கு போன் செய்திருக்க, வீட்டு வாசலில் கார் வந்து நின்றுவிட்டது.
அதேபோல் கடையில் வேலை செய்யும் பையனிடமும், "நாங்கள் எப்போது வேண்டுமானாலும் அவசரமாக கிளம்ப வேண்டியிருக்கும். அப்போது கடையை நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்று முன்கூட்டியே கூறியிருந்தான்.
ஆகையால், இப்போது வேலை செய்யும் பசங்களிடமும் பெரிதாக எதுவும் கூறாமல், ஒரு தலையசைப்புடன் கிளம்பியிருந்தான்.
மருத்துவமனை வரும் வரை அமைதியின் உருவமாகவே வந்து இறங்கினான் சசி.
அவனை அப்படி பார்க்க, பரத்துக்குத்தான் கஷ்டமாக இருந்தது.
'இருவருக்கும் ஏதாவது மனக்கசப்பா? அப்படி இருக்க வாய்ப்பில்லையே! அப்படியே இருந்தாலும்...' என்று எதையோ யோசித்தான்.
இருந்தாலும், இப்போது அவனே வருத்தத்திலும் பதட்டத்திலும் இருக்கும் நேரத்தில், தேவையில்லாமல் அவனை மேலும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று அமைதியாக இருந்தான்.