• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 1

நிதனிபிரபு

Administrator
Staff member
பி.கே கன்ஸ்ட்ரக்ஷன் என்ற கம்பெனிக்குள் ப்ளூ பிரிண்ட் மற்றும் கட்டிட
வடிவமைப்பாளர் வேலைக்காக புதிதாக வந்திருந்தாள் கீர்த்தி.

அந்த கம்பெனியின் பிரம்மாண்டங்களில் மெய்மறந்து அதை ஆர்வமாக பார்த்துக்
கொண்டிருக்க கீர்த்தியின் அருகில் வந்த
ரிசெப்ஷனிஸ்ட் “உள்ள வாங்க மேடம்!” என்று கையை கூப்பி மரியாதையாக அழைத்து
சென்று அங்கு போடப்பட்டிருந்த விலை உயர்ந்த சோபாவில் அமர வைத்தாள்.

“மேடம் என்ன சாப்பிடுறீங்க? ஜூஸ் காபி?” என்று கேட்க, ஒன்றும் புரியாமல் விழித்துக்
கொண்டிருந்தாள் கீர்த்தி.

“ஒரு நிமிஷம், நீங்க நான் வேற யாரோன்னு நினைச்சு என்கிட்ட பேசிகிட்டு இருக்கீங்க
நானும் இந்த கம்பெனிக்கு....” என்று சொல்ல வர,

“மேடம் நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் எங்களுக்கு எல்லாம் தெரியும்! குடிக்கிறதுக்கு
என்ன வேணும்னு மட்டும் சொல்லுங்க!”என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்த
ஆபீஸ்பாயை அழைத்தாள் அந்த ரிசப்ஷனிஸ்ட்.

“மேம் சொல்லுங்க என்ன வேணும், இந்த வெயிலுக்கு லெமன் ஜூஸ் குடிச்சா நல்லா
இருக்கும் அதையே சொல்லவா?” என்று அவள் கேட்க, என்ன சொல்வது என்று
தெரியாமல் சரி என்பதை போல் தலையசைத்தாள் கீர்த்தி.

ரிசப்ஷனிஸ்ட் கண்ணசைக்க ஆபீஸ் பாய் உள்ளே சென்று லெமன் ஜூஸ் ஒன்றை
பெரிய கண்ணாடி டம்ளர் ஒன்றில் எடுத்துக் கொண்டு வந்து கீர்த்தியின் கையில்
கொடுத்தான்.

“மேடம் நீங்க குடிங்க, எல்லாரும் இன்னும் கொஞ்ச நேரத்துல ஆபீஸ்க்கு வந்துடுவாங்க,
அதுக்கப்புறம் சார பாருங்க!”என்ற சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள்.

கீர்த்திக்கு ஒன்றும் புரியவில்லை. வேலைக்கு வந்த இடத்தில் தன்னை விருந்தினர் போல
நடத்துவதை பார்த்துவிட்டு நம்ம கெஸ்ட்னு நெனச்சு இப்படி பண்றாங்க போல!’ என்று
நினைத்துக் கொண்டு தன்னுடைய அலைபேசியை எடுத்து டயல் செய்து காதில் வைக்க,

“என்னடி எங்க இருக்க?” என்று குரல் எதிர்பக்கம் இருந்து கேட்டது.

“அடியேய் நீ சொன்ன இடத்துக்கு நான் வந்துட்டேன்! ஆனால் இங்க நடக்குற
எல்லாத்தையும் பார்க்க எனக்கு பயமா இருக்கு, நான் யாரோனு நினைச்சுட்டு இவங்க
விழுந்து விழுந்து என்னை கவனிக்கிறாங்க!” என்று கீர்த்தி சொல்ல சிரித்தாள் காயத்ரி.

“ என்னடி சிரிக்கிற? “ என்று கீர்த்தி கேட்க அது வந்து.... “ என்று ஏதோ சொல்ல வந்தவள்
அதை நிறுத்திவிட்டு சரி கொஞ்ச நேரம் புள்ள குழம்பி தவிக்கட்டும். நம்ம
பொறுமையாவே எல்லாத்தையும் சொல்லுவோம்’ என்று நினைத்துக் கொண்டு,

“அப்படியா என்னன்னு எனக்கும் தெரியலையே! இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க
வந்துருவேன். அதுக்கப்புறம் பேசிக்கிருவோம்!” என்று கூறினாள் காயத்ரி.

“சீக்கிரம் வாடி, இங்கே நடக்கிறது எல்லாம் பார்த்தா எனக்கு பயமா இருக்கு! என்ற கீர்த்தி
சொல்ல,

“ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ண போறேன் இன்னும் பதினைந்து நிமிஷத்துல அங்க
இருப்பேன்! அவங்க கொடுத்த ஜூசை குடிச்சிட்டு ரெஸ்ட் எடு நான் வந்துடறேன்!” என்று
சொல்லிவிட்டு அழைப்பை

அணைத்தாள் காயு.

‘ரிசப்ஷனிஸ்ட் என்னடானா உட்கார வைத்து ஜூஸ் கொடுத்துட்டு போறா, இவ
என்னடான்னா ஜூசை குடிச்சுட்டு ரெஸ்ட் எடுன்னு கேசுவலா சொல்ற? என்ன
நடக்குது இங்க?’ என்று குழம்பி யோசித்துக் கொண்டிருக்க,

ஆபீஸில் வேலை செய்பவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக ஆபீசிற்குள் வர
ஆரம்பித்தனர். அவர்கள் ஒவ்வொருவரும் உள்ளே நுழையும் போது அங்கே நின்று
கொண்டிருந்த மூன்று ரிசப்ஷனிஷ்டும் மரியாதையாக அவர்களுக்கு வணக்கம் வைத்து
வரவேற்றனர்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கீர்த்திக்கு வித்தியாசமாக தெரிந்தது. ஆபீஸில்
வேலை செய்யும் அனைவரும் தங்களுடைய கார்டை ஆக்சஸ் செய்து கொண்டிருக்க, “குட்
மார்னிங் கியூட்டிஸ்!” என்று சொல்லிக்கொண்டே கேஷுவல் உடையில் உற்சாகமாக
நுழைந்தான் ஒரு இளைஞன்.

அடர் கருப்பான அவன் கேசமும், அடர் கருவிழிகளும் அவனை காண்பவரை மயக்கும்
வண்ணம் மிளிர்ந்து கொண்டிருந்தது.

அவன் முகத்தைப் பார்த்தாலே பாலும் பழமும் சாப்பிட்டு வளர்ந்தவன் போல மிருதுவாக
காட்சியளித்தான். அவனைப் பார்த்ததும் இந்த ஆபீஸில் வேலை செய்யும் ஒருவனை
போல கீர்த்தியின் கண்களுக்கு தெரிந்தது. அவளை அறியாமலேயே சில வினாடிகள்
அவனை சைட் அடித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தி.

அவனைப் பார்த்து அனைவரும் “குட் மார்னிங் சார்!”என்று சொல்ல, அவனும்
சளைக்காமல் அனைவருக்கும் “குட் மார்னிங்” என சொல்லிக்கொண்டே வந்தான்
பிரகாஷ் கண்ணா.

அவன் முகத்தில் தோன்றும் புன்னகை பார்த்த அனைவரின் முகத்திலும் புன்னகை
தாண்டவம் ஆடியது.

“கண்ணா எனும் பெயருக்கு ஏற்றார் போல அவனும் கண்ணன் தான். இளமையும்
வலிமையும், கேலியும் கிண்டலும் குசும்பு, விளையாட்டு என அத்தனை குணங்களும்
அவனிடம் இருந்தது.

அனைவரும் அவனுக்கு வணக்கம் செலுத்தவும் அங்கு சோபாவில் அமர்ந்திருந்த
கீர்த்தியின் கால்களும் தானாக எழுந்தது. தன்னை பார்த்ததும் எழுந்தவளை பார்க்கவும்
பிரகாஷ் கண்ணாவின் கால்களும் அந்த இடத்தில் அப்படியே நின்றது.

“குட் மார்னிங்” என்று கீர்த்தி சொல்ல அவள் முகத்தில் தோன்றிய வியர்வை படபடப்பு
அனைத்தையும் பார்த்துவிட்டு “ஹாய் கியூட்டி நீங்க புதுசா ஆபீஸ்ல ஜாயின் பண்ணி
இருக்கிற ஸ்டாப் தானே! ஏன் இப்படி வேர்க்குது, நம்ம ஆபீஸ்ல நீங்க கம்பர்ட்டா தான
இருக்கீங்க!”என்று பிரகாஷ் கண்ணா கேட்க, ஆமாம் என்பதைப் போல் தலையசைத்தாள்
கீர்த்தி.

“ஹேய் கியூட்டி ஏன் பயப்படுற? முதல்ல முகத்தை துடை, எப்படி வேர்த்து
கொட்டுதுன்னு பாரு!” என்று பிரகாஷ் கண்ணா கூற

“சாரி சார் அவ கொஞ்சம் பயந்த சுபாவம் போக போக எல்லாத்தையும் பழகிக்கு வா!”
என்று குரல் கேட்டது. இருவரும் குரல் வந்த திசையை பார்க்க அங்கு காயத்ரி நின்று
கொண்டிருந்தாள்.

“அது சரி டார்லிங், உன்னைய மாதிரியே உன் பிரண்டு வாயாடியா இருப்பாங்கன்னு
நினைச்சால் இப்படி இருக்காங்க, உன் பிரண்டு கிட்ட பயப்பட வேண்டாம்னு சொல்லி
வை!” என்று சொல்லிவிட்டு தன்னுடைய கேபினுக்குள் நுழைந்தான் பிரகாஷ் கண்ணா.

“யாருடி இது, உன்னை டார்லிங்னு சொல்றாரு, எனக்கு தெரியாம கரெக்ட் பண்ணி
வச்சிருக்கியா?” என்று கீர்த்தி கேட்க, “அடி போடி இவளே! சார் எல்லாரையும்
அப்படித்தான் சொல்லுவாரு!” என்று கூறினாள் காயத்ரி.

“அது சரி, சார் என்ன டிபார்ட்மெண்ட்ல வேலை செய்றாரு!” என்று கீர்த்தி ஆர்வமாக
கேட்க, “எல்லா டிபார்ட்மெண்ட்லயும் வேலை செய்வாரு” என்று சிரித்தாள் காயு.

“என்னடி சொல்ற, அப்போ ஆல் இன் ஆல் அழகு ராஜானு சொல்லு!” என்று கீர்த்தி
நக்கலாக சொல்ல , “அவர்தான் இந்த கன்ஸ்டிரக்சன் கம்பெனியோட ஓனர்!” என்று
காயத்ரி சொல்ல அதிர்ச்சியில் உறைந்தாள் கீர்த்தி

“இந்த கம்பெனியோட ஓனரா? இவர பார்த்தால் ஓனர் மாதிரி இல்லையே?” என்று தன்
சந்தேகத்தை கீர்த்தி கேட்க,

“அதுதான் அவரோட ஸ்பெஷாலிட்டி, ஓனர் மாதிரி யார் கூடயும் பேச மாட்டார்.
ஃப்ரெண்ட்லியா மூவ் பண்ணியே வேலை வாங்குவாரு, இதே மாதிரி அவருக்கு பத்து
கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி இருக்கு!” என்று கூறினாள் காயத்ரி.

“என்னடி சொல்ற இவர்தான் எம்டியா? இங்கே இருக்கிற எல்லாரும் ஏதோ பீச்ல
இருக்குற மாதிரி இருக்காங்க, இது ஆபீஸ் மாதிரியே இல்லை! ஓனர் லேபர் கிட்ட
இப்படி நடந்தா எப்படி வேலை நடக்கும்?

ஆபீஸ்க்குள்ள நுழைஞ்ச உடனேயே, வாங்கன்னு மரியாதையா ஒரு பொண்ணு
கூப்பிடுறா! இன்னொரு பொண்ணு ஜூஸ் வேணுமா காபி வேணுமான்னு கேக்குற,
இன்னும் ஒருத்திய டயர்டா இருந்தா கெஸ்ட் ரூம்ல போயி ரெஸ்ட் எடுங்கன்னு சொல்றா
எனக்கு ஒண்ணுமே புரியல! தலையே வலிக்குது!” என்று கீர்த்தி புலம்ப,

சிரித்துக் கொண்டே, “கீர்த்தி பொறுமையாய் இரு. எல்லாத்தையும் சொல்றேன்.
வேலைக்கு வர்றவங்களுக்கு இந்த ஆபீஸ்ல இந்த மரியாதை தான். இதுக்கெல்லாம்
காரணம் மாயமித்ரா!” என்று காயத்ரி சொல்ல அதிர்ச்சியாக காயத்ரியை பார்த்தாள்
கீர்த்தி.

“யாரு அந்த மாய மித்ரா இந்த கம்பெனியோட ஓனரா? இல்ல பார்ட்னரா? என்று கீர்த்தி
கேட்க, பிரகாஷ் “சாரோட காதலி “ என்று கூறினாள் காயத்ரி.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க, மெல்லிய காட்டன் புடவையை அழகாக
கட்டிக்கொண்டு தலையை பின்னலிட்டு நெற்றியில் அழகான பொட்டு ஒன்றை வைத்து
கழுத்திலும் காதிலும் மெல்லிய ஆபரணங்களை அணிந்து அழகு தேவதையாக உள்ளே
நுழைந்தாள் ஒரு பெண்.

ஆபீஸில் உள்ள அனைவரும் உள்ளே நுழைந்தவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்
கொண்டிருக்க கீர்த்தியும் காயத்ரியும் தன்னுடைய பேச்சை நிறுத்திவிட்டு அவர்களையும்
மறந்து அவளை பார்த்துக் கொண்ட நின்றனர்.

அவள் உள்ளே நுழைந்து எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக நடந்து வர, “
வாடி , இன்னைக்காவது லேட்டா வந்துருவேன்னு நினைச்சேன்! ஆனாலும்
இன்னைக்கும் நீதான் ஜெயிச்சுட்ட. ஒரு நிமிஷத்துக்கு முன்னாடி உள்ள நுழைஞ்சிட்ட!”
என்று ரஞ்சனா சொல்ல உதடுகளுக்கே வலிக்காமல் புன்னகையை புரிந்தாள் அவள்.

உள்ளே நுழைந்தவள் அங்கு நின்று கொண்டிருந்த காயத்ரியையும் கீர்த்தியையும் பார்க்க,
காயத்ரி “குட் மார்னிங் மேம்” என்று சொல்ல “குட் மார்னிங் காயத்ரி” என சொல்லிவிட்டு
அவர்கள் இருவரையும் கடந்து சென்றாள்.

“இந்த காலத்துலையும் தல வாரி பின்னி வட்ட பொட்டு வச்சு இருக்காங்க, இவங்கள
பாக்கும்போது அழகாய் இருந்தாலும், இந்த காலத்துல போய் இப்படி இருக்காங்களே,
இன்னும் கொஞ்சம் ட்ரெண்டிங்கா வரலாம்னு தோணுது!” என்று அந்தப் பெண்ணை
பார்த்து கொண்டே கூறினாள் கீர்த்தி.

“கரெக்ட் இந்த காலத்திலும், இப்படி ட்ரடிஷனலா டிரஸ் பண்ணி அழகா இருக்கிறதால
தான் என்னவோ சார் இவங்க பின்னாடி சுத்துறாரு போல!” என்று காயத்ரி சொல்ல,
ஒன்றும் புரியாமல் காயத்ரியை பார்த்தாள் கீர்த்தி.

“என்னடி பாக்குற இவங்க தான் நான் சொன்ன மாயமித்ரா! பிரகாஷ் சாரோட காதலி!”
என்று சொல்ல, “ இவங்களையா காதலிக்கிறாரு” என்று நக்கலாக கேட்டாள் கீர்த்தி.

“ஆமாம், இவங்களத்தான் ரெண்டு வருஷமா காதலிச்சுக்கிட்டு இருக்காரு!” என்று
காயத்ரி சொல்ல,

“உங்க சாருக்கு டேஸ்டே இல்ல, அழகான பொண்ணுங்களை எல்லாம் அவரோட
வாழ்நாள்ல பார்த்ததில்லை போல! அப்புறம் இவங்கள பார்த்து அவரும் மயங்கி
இருக்காருனா, இவங்க எதையாவது காட்டி அவரை மயக்கி இருக்கலாம்!” என்று
அசிங்கமாக கீர்த்தி சொல்ல,

“வாய மூடு, சார் தான் அவங்கள காதலிக்கிறாரு! மித்ரா இல்ல” என்று காயத்ரி கோபமாக
பேச அதிர்ந்து போனாள் கீர்த்தி.
 
Top Bottom