• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பதிலுரை சொல்லடி பகல் நிலவே - 16

Vishakini

Moderator
Staff member
“மித்ரா நீங்க நினைக்கிற மாதிரி இல்ல அதுக்கு எல்லாம் இன்னும் நேரம் இருக்கு! நான் கோயிலுக்கு போறதுக்கு பட்டு வேஷ்டி சட்டை கட்டிட்டு வந்து இருப்பேன்னு சொன்னேன்!” என்று சமாளிக்க மாயமித்ரா சந்தேகமாக பிரகாசை பார்த்தாள்.ரஞ்சனாவிற்கோ சிரிப்பு அடக்க முடியவில்லை!

திடீரென்று பிரகாஷ் கண்ணாவின் செல்போன் அடிக்க யாரென்று பார்க்க புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருந்தது.

‘யாரா இருக்கும்’ என நினைத்துக் கொண்டு அலைபேசியின் அழைப்பை ஏற்க, எதிர்ப்புறம் சொல்லப்பட்ட செய்தியை கேட்டு அப்படியே அதிர்ந்து போனான்.

அவன் பேசிய பேச்சிலேயே ஏதோ பிரச்சனை என்று அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.

“ஏதாவது பிரச்சனையா?” என்று ரஞ்சனா கேட்க,

“ பிரச்சனையினு சொல்ற அளவுக்கு பெருசு இல்ல, ஆனா இப்போதைக்கு நம்ம சைட்ட போறது தேவை இல்லை!” என்று பிரகாஷ் சொல்ல,


“புரியலையே சார்” என்று கூறினாள் கீர்த்தி.

மாயமித்ரா பிரகாஷ் கண்ணாவின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வாய் திறந்து என்ன பிரச்சனை என்று கேட்கவில்லை என்றாலும், அவளின் விழி மூலம் அவள் கேள்வியை உணர்ந்தவன்,

“லேண்டுக்கு அப்ரூவல் வந்துருச்சு. ஆனா கான்ஸ்ட்ரக்ஷன் ஸ்டார்ட் பண்ணுறதுக்கான ஒர்க் கமென்ஸ்மென்ட் லெட்டர் இன்னும் சிஸ்டம்ல அப்டேட் ஆகலையாம். அதனால இப்போதைக்கு எந்த ஒர்க்கும் பண்ண வேண்டாம்னு சொல்றாங்க!”என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.

“ஓ.... இப்ப என்ன பண்றது?”என்று ரஞ்சனா கேட்க,


“ஆபீஸ்ல இருக்குற லீகல் டீம்கிட்ட பேசணும். அப்ரூவல் காப்பி அவங்ககிட்ட இருக்கு. அதை ஷேர் பண்ணினா பிரச்சனை முடிஞ்சிடும்.” என்று பிரகாஷ் கண்ணாவை பார்த்தபடியே கூறினாள் மாயமித்ரா.


“அப்போ பிரச்சனை பெருசு இல்லையே.” என்று ரஞ்சனா கேட்க,

“நம்ம வேலை தொடங்க ஆரம்பிச்ச உடனே பிரச்சனை வந்தால் நம்ம வேலை டிலே ஆகும், அதனால நமக்கு லாஸ் ஆகுறதுக்கு வாய்ப்பு இருக்கு!” என்று மாயமித்ரா சொல்ல, பிரகாஷ் கண்ணா அவளை வியந்து பார்த்தான்.


“ம்! புரியுது நம்ம வேலைய தொடங்க ஆரம்பிச்சுட்டா எந்த பிரச்சனையும் வரக்கூடாதுல!” என ரஞ்சனா கேட்க

“ம்! இப்போதைக்கு இந்த பிரச்சனை மட்டும் சரியான போதும். மத்தபடி வேற பிரச்சனை எதுவும் வரதுக்கு வாய்ப்பு இல்லை!” என்று பிரகாஷ் சொல்ல, சரி என்று தலையசைத்தாள் ரஞ்சனா.

“அப்போ இப்ப நம்ம சைட்டுக்கு போக வேண்டிய அவசியம் இல்லையா?”என்று ரஞ்சனா தன் சந்தேகத்தை கேட்க,

ம்! என பதிலளித்தான் பிரகாஷ் கண்ணா.

“அப்போ சரி டிராவல் பண்ணிட்டு வந்தது எனக்கு டயர்டா இருக்கு நான் போய் தூங்குறேன்!” என்று ரஞ்சனா சொல்ல


“வா ரஞ்சனா கோயிலுக்கு போயிட்டு வந்துருவோம்! என்று கூறினாள்
மாய மித்ரா.


“மன்னிச்சிரு மித்ரா, என்னால வர முடியாது எனக்கு டயர்டா இருக்கு, நீ வேணா பிரகாஷ் சாரோட போ!’ என்று ரஞ்சனா சொல்ல, அதிர்ச்சியில் விழியை அகல விரித்தாள் மாயமித்ரா.

“என்னடி முழிக்கிற! உனக்கு துணைக்கு தானே ஆளு வேணும்! சாரோட போயிட்டு வா” என்று ரஞ்சனா சொல்ல பிரகாஷின் முகத்தில் குருநகை பூத்தது.


இங்கு நடப்பதை பார்த்த கீர்த்தியோ, இவ்விருவரும் தனியாக போய்விடுவார்களோ என்ற பயத்தில், “நானும் உங்க கூட வரவா மித்ரா மேடம்?” என சொல்ல ரஞ்சனாவிற்கு கோபம் வந்தது. ஏற்கனவே கீர்த்தியின் செயலில் ரஞ்சனாவிற்கு கீர்த்தியின் மேல் சந்தேகம் இருக்க இப்போது கீர்த்தி எல்லாவற்றையும் திட்டமிட்டு தான் செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டாள்.


“இது என்ன கேள்வி!வா கீர்த்தி, நம்ம மூணு பேரும் போகலாம்!” என்று மாயமித்ரா சொல்ல பிரகாஷ் கண்ணாவின் முகம் வாடியது.


இவ்வளவு நேரம் இங்கு நடந்ததை பார்த்துக் கொண்டிருந்த காயு, கீர்த்தியின் தீய எண்ணத்தை அறிந்து,

“கீர்த்தி இன்னைக்கு உனக்கு மென்சுரல் சைக்கிள் தானே! எப்படி உன்னால கோயிலுக்கு போக முடியும்!” என்று கேட்க, அதிர்ந்து போனால் கீர்த்தி.


“ம்! ஆமால அதை எப்படி மறந்து போனேன்னு எனக்கே தெரியல” என்று கீர்த்தி சமாளித்துக் கொண்டே காயத்ரியை பார்த்த முறைத்தாள்.

“அப்போ நீயும் என் கூட வர முடியாதா?” என்று மாயமித்ரா கேட்க,


“ஏன் மித்ரா என்னை நம்பி வர மாட்டீங்களா? “ என்று பிரகாஷ் கண்ணா கேட்டான்.

அவனுடைய கேள்விக்கு என்ன பதில் சொல்லுவது என்று புரியாமல் தடுமாறிய மித்ரா, “அப்படியெல்லாம் எதுவும் இல்ல சார்!” என்று சொல்ல,

“அப்போ! கார்ல ஏறுங்க, நான் உங்களை கூட்டிட்டு போறேன்!” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல மாயமித்ரா அங்கு நின்று கொண்டிருந்த ரஞ்சனாவை பார்க்க,

“போயிட்டு வா” என்று சொல்ல வேறு வழியில்லாமல் காரில் ஏறினாள் மாயமித்ரா.


“ரொம்ப தேங்க்ஸ் ரஞ்சு உன்னைய மறக்கவே மாட்டேன் “ என்று அவளின் தாடையை பிடித்து கொஞ்ச,


“இதே மாதிரி சந்தர்ப்பம் உனக்கு இனிமேல் கிடைக்காது. இப்பவே உன் மனசுல உள்ள காதல அவ கிட்ட சொல்லிரு!” என்று ரஞ்சனா கூற,

“கண்டிப்பா ரஞ்சனா! அந்த கோயில்ல வச்சு கண்டிப்பா என்னோட காதல மித்ரா கிட்ட சொல்லியே தீருவேன்!” என்று சொல்லிவிட்டு காரில் ஏறி காரை ஸ்டார்ட் செய்தான் பிரகாஷ் கண்ணா.


மாயமித்ராவும் பிரகாஷ் கண்ணாவும் ஒன்றாக கோயிலுக்கு செல்வதை தடுக்க முடியாமல் கீர்த்தி கோபத்தோடு தனக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அறைக்கு செல்ல அவள் பின்னால் காயத்ரியும் அவளை சமாதானம் செய்வதற்காக சென்றாள்.

“ ஏண்டி! இவ்வளவு கோபம் உனக்கு? “ என்று காயத்ரி கேட்க,

“அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா கோயிலுக்கு போறத பாத்துகிட்டு என்னைய சும்மா நிக்க சொல்றியா? உன்னையாரு தேவையில்லாத அந்த இடத்துல வச்சு சொல்ல சொன்னது” என்று கீர்த்தி கேட்க


“லூசாடி நீ! இந்த மாதிரி டயத்துல கோயிலுக்குள்ள போக கூடாதுன்னு உனக்கு தெரியாது” என கேட்டாள் காயு.

“அதெல்லாம் தெரியும், ஆனா அவங்க ரெண்டு பேரும் ஒண்ணா போறத தடுக்குறதுக்கு எனக்கு வேற வழி இல்லையே!” என கீர்த்தி சொல்ல,

“அவங்களை எதுக்கு நீ தடுக்கணும்” என்று கேட்டாள் காயத்ரி.

“ஏன்னா நான் பிரகாஷ் கண்ணாவை காதலிக்கிறேன்! அவர் கூட அந்த மாயமித்ராவை சேர்த்து வச்சு என்னால பாக்க முடியல!” என்று கீர்த்தி கோபத்தில் கத்த வேகமாக ஓடி வந்து அவளின் வாயை பொத்தினாள் காயத்ரி.


“ஏய் மெதுவா பேசுடி, ரஞ்சனா மேம்” காதுல விழுந்தர போது, என சொல்லிக்கொண்டு மெதுவாக கீர்த்தியின் வாயிலிருந்து தன் கையை எடுத்தாள்.


“தெரிஞ்சா தெரிஞ்சிட்டு போகுது, என்னைக்காவது ஒரு நாள் தெரிய போறது தானே!” என்று கீர்த்தி அலட்சியமாய் கேட்க,

“உனக்கு புத்தி மழுங்கி போச்சா! பிரகாஷ் கண்ணா சார் ரெண்டு வருஷமா மாயமித்ராவை காதலிச்சுட்டு இருக்காருன்னு நம்ம ஆபீஸ்ல உள்ள எல்லாருக்கும் தெரியும். மாயமித்ரா மேம் இன்னும் சம்மதம் சொல்லாததால தான் கொஞ்சம் இழுபடியா இருக்கு. ஆனா எனக்கு தெரிஞ்சு சீக்கிரத்துல மித்ரா மேம் பிரகாஷ் கண்ணா சாரோட காதல ஏத்துக்கிருவாங்கன்னு நான் நினைக்கிறேன்!” என்று காயத்ரி சொல்ல அதிர்ந்து போனாள் கீர்த்தி.


“என்னடி சொல்ற இவ்வளவு பெரிய குண்டை தூக்கி போடுற? “ என்று கீர்த்தி கேட்க,

“உண்மைய தாண்டி சொல்றேன்! நானும் ரெண்டு வருஷமா இந்த கம்பெனில தான் வேலை பார்க்கிறேன்னு நீ மறந்துறாத!

பிரகாஷ் கண்ணா சார் தன்னை காதலிக்கிறார்னு மாயமித்ராவுக்கு நல்லா தெரியும். அவங்க நினைச்சிருந்தால் பிரகாஷ் சார் கிட்ட போயி உங்களை நான் காதலிக்கல, நீங்க இப்படி என் பின்னாடி சுத்துறத நிறுத்துங்கனு சொல்லி
அப்பவே அவரோட காதலுக்கு முற்றுப்புள்ளி வச்சிருக்கலாம்.ஆனால் இன்னும் வரைக்கும் ஏன் அவங்க அப்படி சொல்லல, அப்போ அவங்க மனசுக்குள்ளயும் சார் மேல காதல் இருக்கணும் தானே அர்த்தம்!” என்று காயத்ரி கூற அதிர்ச்சியாக இருந்தது கீர்த்திக்கு...!

கீர்த்தியின் அதிர்ச்சியை உள்வாங்கி கொண்டே, “உன் மனசுல உள்ள தேவையில்லாத எண்ணத்தை அழிச்சிட்டு வந்த இடத்துல வேலையை மட்டும் பார்க்க ஆரம்பி, அதுதான் உனக்கும் நல்லது எல்லாருக்கும் நல்லது!” என்று கூறினாள் காயத்ரி.

இங்கு,


காரில் திறந்திருந்த ஜன்னலின் வழியே இயற்கையை ரசித்தபடி வந்து கொண்டிருந்தாள் மாயமித்ரா.

காரை ஓட்டியபடி பின் சீட்டில் அமர்ந்திருந்த மித்ராவை பார்த்து ரசித்துக் கொண்டே காரில் உள்ள பிளேயரை ஆன் செய்தான்.

“எந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அடி எத்தனை பேரழகா?

இந்த தேசத்தில் தேசத்தில் நீ பிறந்தாய் அடி இத்தனை பேரழகா?

எந்தன் சுவாசத்தில் சுவாசத்தில் நீ கலந்தாய் இனி நீ இன்றி நான் அழகா? என்ற பாடல் ஒலிக்க அதிர்ந்து விட்டாள் ஒரு கணம் மாய மித்ரா.

அதிர்ந்தவள் கண்ணாடியை பார்க்க அவளின் முகத்தை தான் காரை ஓட்டிக்கொண்டே பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ் கண்ணா,


அதை உணர்ந்தவள் தன்னுடைய அதிர்ச்சியை உள்வாங்கிக் கொண்டு எவ்வித சலனமும் இல்லாமல் அமைதியாக மீண்டும் இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள்.

‘உனக்காக தான் இந்த பாட்ட போட்டு இருக்கேன்னு உனக்கு நல்லா தெரியும் ஆனாலும், எதுவும் தெரியாத மாதிரி நார்மலா இருக்க முயற்சி பண்றியா? இனிமேலு உன்னோட இந்த நடிப்பு எல்லாம் என்கிட்ட செல்லாது! இப்பவே என் மனசுல உள்ள காதல உன் கிட்ட வெளிப்படையா சொல்லப் போறேன், எப்படியும் என்னோட கேள்விக்கு நீ பதில் சொல்லி தான் ஆகணும் மித்ரா!’என்று தன் மனதில் நினைத்துக் கொண்டு,

“மித்ரா!” என பிரகாஷ் கண்ணா அழைக்க, மித்ராவின் இதயம் இயல்பை விட வேகமாக துடிக்க தொடங்கியது.

“சொல்லுங்க சார்” என்று தன்னுடைய படபடப்பை ஒதுக்கி வைத்து விட்டு மித்ரா கேட்க,

“உன்கிட்ட ஒன்னு கேட்பேன். நீ உண்மைய மட்டும் தான் சொல்லணும் “ என்று பிரகாஷ் கண்ணா சொல்ல,

டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த பிரகாஷ் கண்ணாவின் முகத்தை தன் இருக்கைக்கு எதிரே இருந்த கண்ணாடியில் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயமித்ரா.

பிரகாஷ் கண்ணா நினைத்தபடி தன் மனதில் உள்ள காதலை வெளிப்படையாக உரைப்பானா? அப்படியே உரைத்தாலும் மாயமித்ரா என்ன பதில் சொல்லுவாள்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் பதிலுரை சொல்லடி பகல் நிலவே!






























 
Top Bottom