“மித்ரா என்னைய வேண்டாம்னு நினைக்கிறானு உனக்கு யார்
சொன்னது!” என்று பிரகாஷ் கண்ணா கேட்க திகைத்தாள் ரஞ்சனா.
அவளின் திகைப்பை உள்வாங்கிக் கொண்டு சிரித்தான் பிரகாஷ் கண்ணா.
“கண்ணா, நீ நல்லா தானே இருக்க? நீ பேசுற பேச்ச பார்த்தாலே எனக்கு என்னமோ
சந்தேகமா இருக்கு?”என்று கேட்டாள் ரஞ்சனா.
“ஹேய், எனக்கென்ன நான் நல்லா தான் இருக்கேன்?” என்று பிரகாஷ் சொல்ல,
“உன்னை பார்த்தாலே ஒரு அடி தள்ளி நிக்கிறா, நீ எது கேட்டாலும் பதிலே
சொல்றதில்லை, இப்படி உன்கிட்ட ஒட்டாமல் விலகி போறவள உன்னைய
காதலிக்கிறானு எப்படி சொல்ற? “ என்று தன் சந்தேகத்தை கேட்டாள் ரஞ்சனா.
“ஆமால என்னைய விட்டு ஒரு அடி தள்ளியே நிற்கிறாளே! நாள பின்ன கல்யாண
பொண்ணா என் பக்கத்துல நிக்கும் போதும் இப்படி தள்ளிதான் நிப்பாளோ?”என்று
சொல்லிக்கொண்டே சிரித்தான் பிரகாஷ் கண்ணா.
“பிரகாஷ் விளையாடாத! நான் என்ன சொல்லிக்கிட்டு இருக்கேன். நீ என்ன
சொல்லிக்கிட்டு இருக்க, அவ உன்னைய கண்டுக்கவே இல்லைன்னு சொல்றேன், நீ
காதல், கல்யாணம் வர போயிட்ட!” என்று கேட்டாள் ரஞ்சனா.
“இங்க பாரு, ரஞ்சு குட்டி, உனக்கு சொன்னால் புரியாது. என்னைய விட்டு அவ எப்பவும்
ஒரு அடி விலகி நிற்கிறதுக்கு காரணம், எங்க அவ மனசுல உள்ள காதல் எனக்கு
தெரிஞ்சிரும்னு பயத்துல தான்!” என்று சொல்லி சிரித்தான் பிரகாஷ் கண்ணா.
“பயமா, புரியலையே?” என்று ரஞ்சனா கேட்க, “ நம்ம ரெண்டு பேரும் பேசும் போது அவ
இங்கிருந்து போயிட்டா, ஆனா அவ போனதுல இருந்து கிட்டத்தட்ட அறுபது தடவை
அவளோட கேபின்ல இருந்து என்னைய பார்த்துக்கிட்டே தான் இருக்கா” என்று
சிலாகித்து பிரகாஷ் கண்ணா கூற “வாட்?” என்று அதிர்ந்தாள் ரஞ்சனா.
“நீ நம்பலலைல, கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு! நீ இப்ப அவளை பார்க்காத மாதிரி
பாரு, எத்தனை நேரம் என்னோட கேபினையே அவ பாக்குறானு” என்று பிரகாஷ்
சொல்லி இருக்க, பார்த்தாள் ரஞ்சனா.
அவன் சொல்லியது போல், நொடிக்கு ஒரு முறை அவளின் கண்கள் பிரகாஷ்
கண்ணாவின் கேபினை தொட்டு மீண்டது. “இதுல இருந்து என்ன தெரியுது அவ
என்னைய பார்த்துக்கிட்டே தான் இருக்கா” என்று பிரகாஷ் கண்ணா சொல்ல சிரித்தாள்
ரஞ்சனா.
“மித்ரா மட்டும் கிடையாது ஆஃபீஸ்ல உள்ள எல்லாரும் நீ என்ன பண்றனு நொடிக்கு ஒரு
தடவை உன்னை பார்த்துக்கிட்டே தான் இருக்காங்க. பாக்குறதுக்காக அவங்க எல்லாரும்
உன்னைய காதலிக்கிறார்கள்னு அர்த்தமா? இது முதலாளி மேல அவங்களுக்கு
இருக்கிற பயம் மரியாதை! அத முதல்ல தெரிஞ்சுக்க அதை காதல்னு தப்பா புரிஞ்சுகிட்டு
கடைசில ஏமாந்து நிக்காத?” என்று கூறினாள் ரஞ்சனா.
“உனக்கு புரியாது அவ பார்வையில இருக்குற காதல், ஏக்கம் அது எனக்கு மட்டும்தான்
புரியும். அவளோட அந்த பட்டாம்பூச்சி இமை அப்படியே என்ன பார்த்து படபடன்னு
அடிக்கும் போது, என்னோட இதயம் லப் டப்னு வேகமா துடிக்கும் பாரு, அந்த
உணர்வை வார்த்தையால சொல்ல முடியாது!”என்று அவனின் நெஞ்சுப் பகுதியை நீவி
விட்டபடி கூறினான் பிரகாஷ் கண்ணா.
“சரி நீ சொல்ற மாதிரியே வச்சுக்கிருவோம். அந்த பார்வையை வச்சு எதையும் கணிக்க
முடியாதே! அவ வாய தொறந்து உன்னைய காதலிக்கிறேனு சொல்ற வார்த்தை
கொடுக்கிற நம்பிக்கைய நீ சொல்ற அந்த பார்வை கொடுக்காது!” என்று ரஞ்சனா
சொல்ல,
“நீ சொல்றதும் சரிதான், எத்தனையோ முறை அவ கிட்ட என்னோட காதல மறைமுகமா
உணர்த்திட்டேன். ஆனால் அத அவ தெரிஞ்சும் தெரியாத மாதிரி என்னை கடந்து
போய்கிட்டு இருக்கா,
கூடிய சீக்கிரத்துல என் மனசுல உள்ளதை வெளிப்படையா அவகிட்ட சொல்ல போறேன்.
அப்போ எப்படி அவ மனசுல உள்ளதை என்கிட்ட இருந்து மறைக்கிறான்னு பார்க்க தான்
போறேன்!” என்று கூறினான் பிரகாஷ் கண்ணா.
“ நல்ல முடிவு, சீக்கிரம் சொல்லி அவ முடிவ தெரிஞ்சுக்க, அப்பதான் தேவையில்லாத
எதிர்பார்ப்புகளை உன்னோட மனசுல நீ வளர்க்க மாட்ட, நீயும் அவளும் என்னோட
பெஸ்ட் பிரண்ட்ஸ், நீங்க ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்தால் அத பார்த்து சந்தோசப்படுற
முதல் ஆளும் நான்தான், உன்னால் அவளோ அவளால நீயோ வருத்தப்பட்டா, உங்க
ரெண்டு பேரையும் நினைச்சு கவலைப்பட போறதும் நானாதான் இருப்பேன்!” என்று
ரஞ்சனா வருத்தமாக சொல்ல,
“கவலப்படாத ரஞ்சு, நானும், மாயாவும் ஒன்னு சேர தான் போறோம். எங்க
கல்யாணத்துல மணமகனுக்கும் தோழியாவும் மணமகளுக்கும் தோழியாவும் நீ ஒருத்தி
தான் நிப்ப!” என்று கண்ணடித்தான் பிரகாஷ் கண்ணா.
“என்னென்னமோ சொல்ற நீ சொல்றதெல்லாம் நடந்தா நல்லா தான் இருக்கும், சீக்கிரம்
நீ நெனச்சதெல்லாம் நடக்கிறதுக்கு என்னோட வாழ்த்துக்கள்!” என்று சொல்லிவிட்டு
ரஞ்சனாவும் பிரகாஷ் கண்ணாவின் அறையை விட்டு வெளியே வந்தாள்.
ரஞ்சனா சென்ற பிறகு, தன்னுடைய கேபினில் வேலை செய்து கொண்டிருக்கும்
மித்ராவை தன் அறையில் இருந்து பார்த்தபடி பிரகாஷ் கண்ணா ஆழ்ந்த யோசனையில்
மூழ்கிப் போனான்.
இங்கு போலீஸ் ஸ்டேஷனில்,
நந்தனை பெயரை கூறிய காவலர்கள் அனைவரும் நந்தன் கூறியதை கேட்டு அவனை
விசித்திரமாக பார்த்துக் கொண்டே நின்றனர்.
“இந்த ஜெயில்ல ஆயிரக்கணக்கான பேர் இருக்காங்க, அப்படி இருந்தும் நன்னடத்த
காரணமா நாங்க எல்லாரும் உன் பேர மட்டும் தான் சொல்றோம், காரணம் இந்த ஆறு
வருஷ காலத்துல நீ இங்க நடந்துக்கிட்ட விதம் தான். எல்லாரும் இந்த சிறைச்சாலையில்
இருந்து எப்படா வெளியில போவோம் சுதந்திர காற்ற சுவாசிப்போம்னு எவ்வளவு
ஆசையோடு இருக்காங்கன்னு தெரியுமா?
ஆனால் அந்த வாய்ப்ப உனக்கு உன்னோட தண்டனை காலம் முடிகிறதுக்கு
முன்னாடியே நாங்க குடுத்தால் வேண்டான்னு சொல்ற உனக்கு புத்தி எதுவும் கெட்டு
போச்சா?” என்ற கேள்வியை கேட்டார் அசிஸ்டன் கமிஷனர் அசோக்.
“சாரி சார், என்னோட கேஸ் என்னதுன்னு உங்களுக்கு தெரியும். உலகத்திலேயே பெரிய
பாவம் பண்ணினது நான்தான்னு நினைக்கிறேன், நான் பண்ணுன தப்புக்கு எத்தனை
வருஷம் தண்டனை அனுபவிச்சாலும் அது பத்தாது, அப்படி இருக்கும்போது சட்டப்படி
கோர்ட் எனக்கு கொடுத்த தண்டனை காலம் முடிஞ்சு தான் இந்த இடத்தை விட்டு
போகணும்னு ஆசைப்படுறேன். ப்ளீஸ் சார் என் பெயருக்கு அப்புறம் யாருடைய
பெயரையாவது நீங்க யோசிச்சு வச்சிருப்பீங்க, எனக்கு கொடுக்க நினைச்ச வாய்ப்ப
அவங்களுக்கு கொடுங்க, ஒருவேளை நீங்க எனக்கு கொடுத்த இந்த வாய்ப்பை நான்
பயன்படுத்தி வெளியில் போனால் கூட என் மனசாட்சியே என்னைய கொன்றுவிடும்!”
என்று நந்தன் சொல்ல, அவனைப் பார்த்தார் கமிஷனர் அசோக்.
கமிஷனரோடு இருந்த நால்வரையும் பார்த்து, “ நீங்க எல்லாரும் மத்த வேலைகளை
பாருங்க, நான் வாரேன்” என்று சொல்லிவிட அவர்கள் அனைவரும் அந்த இடத்தை
விட்டு சென்றனர். அவர்கள் செல்லவும் மெதுவாக நந்தனின் அருகில் வந்தார் அசோக்.
“இங்க பாரு நந்தன் உன்னுடைய உணர்வுகளை என்னால உள்வாங்கிக் கொள்ள
முடியுது, ஆனால் இன்னும் எத்தனை நாளைக்கு நான் தப்பு பண்ணிட்டேன் தப்பு
பண்ணிட்டேன்னு சொல்லிக்கிட்டே இருக்க போற! நம்ம பண்ணின தப்புக்கு ஏதாவது
ஒரு பிராயச்சித்தம் பண்றதுக்கு இருக்கும், அதனால நீ பண்ணுன தப்ப மறந்து இனி
என்ன செய்யலாம்னு மட்டும் யோசி, அத விட்டுட்டு நீயே உன்ன அண்டர்ஸ்டிமேட்
பண்ணாத “என்று அசோக் சொல்ல, மெலிதாய் புன்னகை செய்தான் நந்தன்.
“சரி நீ சொன்ன மாதிரி, வேற யாரையாவது ரெகமெண்ட் பண்றேன். உன்னோட
தண்டனை காலம் முடியறதுக்கு இன்னும் ஒரு மாசம் தான் இருக்கு அதை ஞாபகம்
வச்சுக்க, அதுக்கப்புறம் இங்கேயே நீ இருக்கிறன்னு சொன்ன கூட உன்னைய அனுப்பி
விடுவோம். அதுக்குள்ள உன்னோட குற்ற உணர்ச்சியை மறந்துட்டு புதுசா ஒரு
வாழ்க்கையை அமைச்சுக்க பாரு! உனக்காக இல்லைனாலும் உன் குடும்பத்துக்காக!”
என்று கமிஷனர் சொல்ல
“ பார்க்கலாம் சார் “ என்று விரக்தியாக பதிலளித்தான் நந்தன்.
“ சரி நந்தா, இன்னும் அரை மணி நேரத்துல எல்லாரும் வந்துருவாங்க. பங்க்ஷன
ஸ்டார்ட் பண்ண வேண்டியது இருக்கும், நான் கிளம்புறேன் நீயும் உன்னோட வேலைய
பாரு!” என்று சொல்ல நந்தன் அங்கிருந்து நகர்ந்தான். போகும் அவனின்
முதுகுப்பகுதியவே சில வினாடிகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தார் அசோக்.
முதல் முறையாக சிறைக்கு வந்த போது, அவனைப் பார்த்தது நன்றாக ஞாபகம்
இருக்கிறது கமிஷ்னருக்கு..!
“நான் தப்பு பண்ணிட்டேன், நான் பெரிய தப்பு பண்ணிட்டேன், என்னைய கொலை
பண்ணிருங்க, நான் வாழ்றதுக்கே தகுதியானவன் கிடையாது!” என்று கதறி அழுது
ஆர்ப்பாட்டம் செய்திருந்தான். ஒருமுறை தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருந்தான்.
நல்லவேளையாக அங்கிருந்த காவலர்கள் அவனை காப்பாற்றி மருத்துவ
பரிசோதனையை அளித்து அவன் உயிரே காப்பாற்றி இருந்தனர். அதற்குப் பிறகு
அவனுக்கு கவுன்சிலிங் கொடுத்து ஓரளவு அவன் உடல் நலத்தையும் மனநலத்தையும்
தேற்றி இருந்தனர்.
அவனால் பாதிக்கப்பட்டவர்கள் அவன் மேல் எந்த கம்ப்ளைன்டும் செய்யாமல் இரு
தரப்பும் சமரசமாய் போய்விட்டனர். ஆனால் நந்தன் தான் செய்த தவறை சுட்டிக்காட்டி
அவனை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்திருந்தான்.
எத்தனையோ முறை அவனுடைய அப்பாவும் அம்மாவும் அவர்கள் ஊர் பெரியவர்களும்
கூட அவனிடம் பேசி பார்த்தனர்.
நான் பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிக்காமல் வெளியில வந்தால் என்
மனசாட்சியே என்னை கொன்றுவிடும், அதனால என்னை இப்படியே விட்டுருங்க,
இனிமேல் யாரும் என்னைய பார்க்க வராதீங்க! மீது யாராவது என்னை பார்க்கணும்னு
நினைச்சு வந்தாலோ, என்னைய வெளியில எடுக்க முயற்சி செஞ்சாளோ, என்னைய
உயிரோட பார்க்க முடியாது என்று மிரட்டி இருந்தான். ஏற்கனவே அவன் தற்கொலை
முயற்சி செய்ததால், அவர்கள் பயந்து அவன் சொன்னபடி நடந்து கொண்டனர்.
இப்போது கிட்டத்தட்ட தண்டனை காலமான ஆறு வருடம் நிறைவுற ஒரு மாதமே பாக்கி
இருந்தது.
சிறையிலேயே இருந்து யூ ஜி படித்து முடித்தான். Criminology and criminal justice என்ற
துறைகளிலும் முனைவர் பட்டம் பெற்று விட்டான். அந்த அளவுக்கு படிப்பு ஒழுக்கம்
தைரியம் தன்னம்பிக்கை அனைத்திலும் சிறந்தவன் தான் நந்தன்,
ஆனால் முன்கோபம் கொண்ட அவன் சூழ்நிலையால் குற்றவாளியாக்கப்பட்டு இதோ
இந்த சிறையில் ஆறு வருடங்களாக தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறான்.
சிறையில் எத்தனையோ குற்றங்களை செய்த குற்றவாளிகளை அசோக்
பார்த்ததுண்டு.ஆனால் நந்தனை போன்ற ஒருவனை பார்த்தது இதே முதல் முறை என்று
தன்னுடன் வேலை செய்யும் காவலர்களிடம் அடிக்கடி சொல்லுவார், அவனுடைய
குணத்தையும், அவன் வழக்கையும் விசாரித்து தெரிந்து கொண்டதால், அவன்
சிறையிலிருந்து படிப்பதற்கு தேவையான உதவிகளையும் செய்திருந்தார். நந்தன்
வெளியில் சென்று நல்லபடியாக வாழ வேண்டும் எண்ணம் கொண்ட அசோக்,
‘நந்தனோட மனசுல தேவையில்லாத எண்ணத்தை வளர்த்துக்கிட்டு இருக்கான். இந்த
எண்ணம் அவன வெளி உலகத்துல கூட நல்லபடியா வாழ விடாது, அதனால நந்தன
வெளியில அனுப்புறதுக்கு முன்னாடி, கவுன்சிலிங் கொடுத்து அனுப்பனும், அப்பதான்
அவனுடைய மீதி வாழ்க்கை நல்லபடியா இருக்கும்’ என நினைத்துக் கொண்டே
போகின்ற நந்தனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே நின்றார் அசிஸ்டன்ட்
கமிஷனர் அசோக்.