மழை - 10
தன் தாயின் வார்த்தைகள் காதில் விழுந்தாலும் எதுவும் கேளாதது போல் அமைதியாக வீட்டிற்குள் நுழைந்தார் தேவராஜ்.
"வாங்கய்யா வாங்க.. திக்கு தெரியாம நிக்கவங்களுக்கு அவங்க வாழ்க்கையில விளக்கேத்தி வெக்க வந்த வள்ளல். இதுபோல எம்மகளுக்கு நீங்க ஒரு நல்லது செய்யக்கூடாதோ.. சோத்துக்கே வழி இல்லாதவளுங்களுக்கு சீராட்டும் பாராட்டும் கேக்குதோ.. எப்படி.. எப்படி.. நம்ம வீட்டு ஆளுங்க முன்னிருந்து அவ பேத்தி கல்யாணம் நடக்கணுமோ. நான் ஒரு கூறுகெட்டவ, காலம் தெரியாத கோழி கத்துனா விடியுமா.. உம்மட பெரிய மனச பத்தி தெரியாம புத்தி கெட்டு போய் உங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிகிட்டு இருக்கேன் பாருங்க. நீங்க எவ்வளவு பெரிய ஆளு" என்று வன்மமாக புகழ்ந்தார்.
தன் தாயின் வார்த்தைகளில் தன் கண்களை மூடி தன் பொறுமையை இழுத்துப் பிடித்த தேவராஜ், "மா போதும். எதுக்கு இப்போ தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்கீங்க".
"அய்யாசாமி மன்னிச்சுக்கிடுங்க. நான் பேசுறது கூட இப்ப தேவையில்லாம போயிடுச்சோ.. அப்படி என்னத்த செஞ்சு அந்த பசப்புகாரிங்க மயக்கி வச்சிருக்காளுங்கன்னு தெரியலையே. நான் பேசுறது கூட என் வீட்டுல எடுபட மாட்டேங்குது. அவளுங்கள பத்தி உனக்கு தெரியாதா தேவா, வாயில வெல்லம், மனசுல விஷம்னு வச்சு பேசுற ஆளுங்க. உம்மட அப்பா அவகிட்ட போயி சிக்கி சீரழிஞ்சது போதாதா.. இப்போ உன் பங்குக்கு தாய் மாமன் உரிமைய நிலை நாட்ட கிளம்பிட்டீயளோ.. இந்தாரு, அந்த மூதேவி பெரிய மனுசி ஆனாப்பவே நான் சொன்னேன். மொற செய்யறது எல்லாம் வேணாம்னுட்டு, அப்பவும் இந்த கிழவி என்னத்த செஞ்சிடப் போறான்னு உம்மடமவ கையாலேயே மொற செய்ய வச்ச. இப்போ கல்யாணம் பண்ணி வெக்க சொல்லி வந்து நிக்கிறாளுவ. இப்பவும் உம்மட மவனுக்கே அவள கட்டியாந்து இந்த வீட்டுக்கே மருமகளாக்கலாம்ன்ற எண்ணத்தோட இருக்கியோ" என்னும் பொழுதே ஆத்திரம் மேல் எழுந்திருந்தது.
"அம்மா என்ன பேசுறீங்க நீங்க, அந்த லலிதா குடும்பத்தோட வந்து அவங்க வீட்ல பிரச்சனை பண்றா. வயசு பொண்ணுடைய வாழ்க்கையாச்சேனு தான் நான் இதுல தலையிட்டேன். இத்தன வருஷத்துல அவங்களோட ஒரு நாளாவது ஒட்டி உறவாடி இருப்போமா. இல்ல, ஒரு வார்த்தையாவது பேசி இருந்திருப்போமா. எல்லாம் உங்களுக்காக தானேமா. அந்த குடும்பத்தையே ஒன்னு சேர்க்காம ஒதுக்கி வச்சிருக்கோம். இப்பவும் ஒன்னும் ஒட்டி உறவாட போகல. இந்த குடும்பத்தோட அவங்கள ஒன்னு சேர்த்துக்கவும் போகல. அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சுக் கொடுத்துட்டா, அவ வாழ்க்கைய பார்த்துக்கிட்டு அவ போயிடுவா. அவங்க அதுக்கப்புறம் என்ன பண்றாங்களோ அது அவங்க பாடு. அது புரியாம வார்த்தைய விடாதீங்க".
தேவராஜிற்குமே தன் தாயின் புலம்பலில் கோபம் எட்டிப் பார்த்திருந்தது. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் விஷம் தடவிய அம்பாய் அல்லவா பாய்கிறது.
தன் அப்பத்தாவின் வார்த்தைகளில் கடுப்பாகிய பொற்செல்வன் வீட்டிற்குள் நுழையாமல் வாசலிலேயே திண்ணையின் மேல் அமர்ந்து விட்டான்.
அவனின் அருகில் அமர்ந்த ரகு, "என்னண்ணா அப்பத்தா சரவெடி மாதிரி வெடிச்சு தள்ளுது. என்ன விஷயம்?" என்கவும்.
தன் மாமியாரின் வார்த்தைகள் தன் செவிப் பறையை தீண்டும் அளவிற்கு செவிகளை கூர் தீட்டிக் கொண்டு வேண்டுமென்றே அவர்களின் வீட்டு வாசலில் வந்தமர்ந்தார் கீதா.
காமராஜின் மனைவி கீதா வள்ளியைப் போல் கிடையாது. தன் மாமியாரின் அனைத்து பேச்சுகளையும் சகித்துக் கொண்டு அமைதியாக செல்லும் குணமும் அவருக்கு இருந்தது கிடையாது.
ஒன்று, ஏட்டிக்குப் போட்டியாக பேசி பெரிய பஞ்சாயத்தே நடந்துவிடும். அப்படி இல்லை என்றால், இவரிடம் பேசுவதே வீண் என்ற எண்ணத்தோடு தன் கணவரிடம் சண்டையிட துவங்கி விடுவார்.
அதனாலேயே ஒரே வீட்டில் இருப்பது சரி வராது என்று பக்கத்திலேயே வீடு வாங்கி குடிப்பெயர்ந்து விட்டார் காமராஜ்.
இதைப்பற்றி குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்தாலும் பெரிதாக கேட்டுக் கொள்ளவில்லை.
ரகுவிடம் பொற்செல்வன் மெல்ல நடந்த விஷயத்தை அப்படியே கூறவும். கீதாவும் உள்வாங்கிக் கொண்டார்.
"ஓ! அதான் இப்ப அப்பத்தாவோட இந்த அவதாரத்துக்கு காரணமா".
"ஆமா, இப்ப உள்ள போனா என்னைப் பார்த்து வேற திட்ட ஆரம்பிச்சிடுவாங்க. அதான் இப்படியே உக்காந்துட்டேன்".
"பாத்தீங்களா, சொந்த வீட்டுக்கே போக பயந்து வாசல்ல உட்கார்ர மாதிரி இருக்கு" என்று கூறி நகைத்தவன்.
"ஆனா, அப்பத்தா சொல்றதும் சரிதானேண்ணா. அவங்க கோபமும் நியாயம் தானே. அவங்க புருஷனுடைய ரெண்டாவது சம்சாரத்து மேல யாருக்கா இருந்தாலும் கோபம் வர தான செய்யும்".
"அதெல்லாம் நியாயம் தான். இங்க யாரும் நியாயம் இல்லைன்னு சொல்லல. அப்பத்தாவுடைய உணர்வுக்கு மரியாதைக் கொடுத்து தானே நாமளும் அந்த குடும்பத்தோட ஒட்டும் உறவும் இல்லாம ஒதுங்கி இருக்கோம். இப்பவும் ஒன்னும் அவங்களோட உறவு வச்சுக்க போறதில்லயே. ஆம்பள புள்ளயா இருந்தா தெரியாது. பொம்பள புள்ளயா இருக்கா.. அவளுடைய வாழ்க்கைக்காக அப்பா யோசிக்கிறாரு, எனக்கு அப்பா யோசிக்கிறது சரின்னு தான் தோணுது".
"பெரியப்பா எது செஞ்சாலும் அதுக்கு ஒரு காரணம் இருக்கும். ஆனா, இந்த விஷயத்துல அப்பத்தாவ மீறி எப்படி பெரியப்பா இந்த கல்யாணத்த நடத்த போறாங்கன்னு நினைச்சாலே ரொம்ப எக்சைட்டடா இருக்கு" என்று ஒரு வித குதுகலத்தோடு அவன் கூறவும்.
அவனை விளையாட்டாக முறைத்துப் பார்த்தான் பொற்செல்வன்.
"இங்க உன் தங்கச்சி வீட்ல விளக்கு எரியல. ஆனா, நீ ஊர் முழுக்க வெளிச்சம் காட்ட நினைக்கிற".
"அம்மா அதுக்கு நாம ஒன்னும் பண்ண முடியாது. அது அவளோட தலையெழுத்து. நான் ஒன்னும் அந்த குடிகாரன சகிச்சுக்கிட்டு அவனோட வாழுன்னு சொல்லலையே. விட்டுட்டு வரதான சொல்றேன்".
"அது எப்படி கட்டுனவன விட்டுட்டு வர முடியும்?".
"அவன் ஒன்னும் இவளுக்கு நல்ல புருஷனா நடந்துக்கலையே".
"சரி, இப்ப முடிவா என்ன தான் சொல்ற?".
"நான் ஒன்னும் அவங்களுடைய பேத்திக்கு செய்றதா நினைச்சு இதை செய்ய நினைக்கல. ஒரு வயசு பொண்ணுடைய வாழ்க்கை யாராயிருந்தாலும் நான் இந்த முடிவதான் எடுப்பேன். அந்த பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கைய அமைச்சு கொடுக்கணும்னு தோணுது. பெரியவங்க பண்ண தப்பு அந்த பொண்ணு தலையில விடிஞ்சிட கூடாதுன்னு நினைக்கிறேன்".
"அப்போ என் இத்தன பேச்சையும் மீறி நீங்க அந்த பொண்ணுக்கு கல்யாணம் கட்டி தான் வெக்க போறீங்க அப்படிதேன.. எல்லாரும் ஒன்னு சேர்ந்து என்கிட்ட இந்த விஷயத்த மறைக்க பாத்துட்டீங்க இல்ல. ரோட்ல வரன் பாக்குறவன் பார்த்து சொன்னான். அவன் மட்டும் சொல்லலனா இந்த விஷயம் கூட என் காதுக்கு எட்டி இருக்காது. அது சரி, மாப்பிள்ளை எப்படி வெளியில பார்க்கிறதா இல்ல, உம்மட மகன் தான் மாப்பிள்ளையா?" என்று குத்தலாக அவர் கேட்கவும்.
தன் பொறுமையை இழுத்துப் பிடித்த தேவராஜ் உஷ்ண மூச்சை இழுத்து விட்டவாறு, "வெளியில் பார்க்க சொல்லி இருக்கேன்".
"ஓஹோ! கதை அப்படி போகுதோ! அதுக்குள்ள மாப்பிள்ளை பார்க்க இறங்கியாச்சு" என்று மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபமாக கத்தியவர்.
"சரி, நான் என்ன பேசினாலும் அது இந்த வீட்ல சபை ஏறாதுன்னு தெரிஞ்சு போச்சு. இப்போ எனக்கு ஒரு பதில் சொல்லு" என்றார் ஆங்காரமாக.
அவரை 'என்ன' என்பது போல் தேவராஜ் பார்க்கவும்.
"எம்பேத்தி இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்".
"அண்ணா உங்கள பத்தி தான் அப்பத்தா என்னவோ சொல்லுது. வாங்க போய் பார்ப்போம்" என்று ரகு கூறவும்.
பொற்செல்வனுக்கும் அவர் என்ன கூறப் போகிறாரோ என்று தோன்ற. அவனுடன் சேர்ந்து வீட்டிற்குள் நுழைந்தான்.
கீதா நன்கு அவர் பேசுவது தன் காதல் விழும் அளவிற்கு தங்கள் வீட்டின் வாயிலுக்கே வந்து நின்று விட்டார்.
"எம்பேத்தி இந்திராவ உம்மக பொற்செல்வனுக்கு கட்டி அவள இந்த வீட்டு மருமகளாக்கணும்".
இது ஒன்றும் பொருட்செல்வனுக்கு அத்தனை அதிர்ச்சியாக எல்லாம் இல்லை. அவ்வப்பொழுது ஜாடை மாடையாக அவரின் வாய் வழியாக கேட்ட விஷயம் தானே.
"சரிமா, அப்புறமா பார்க்கலாம்".
"அதெல்லாம் முடியாது. எனக்கு இப்பவே இன்னைக்கே இந்த விஷயத்துக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்".
"என்னமா பேசுற நீ, இந்திரா இன்னும் படிப்பே முடிக்கல. இப்போதான் கடைசி வருஷம் படிச்சுக்கிட்டு இருக்கா. படிப்பு முடியட்டுமே என்ன அவசரம்".
"முடியாது தேவா, அவளோட பேத்திக்கு கல்யாணம் நடக்கிறதுக்கு மொத எம்மட பேத்தி இந்த வீட்டு மருமகளாகி இருக்கணும். எம்பேத்திக்கு மொத கல்யாணம் முடிஞ்சிருக்கணும்".
அவரின் வார்த்தையில் அவரை ஆயாசமாகப் பார்த்த தேவராஜ், "என்னமா இது சின்ன பிள்ளைத்தனமா, எந்த விஷயத்துல சண்டை போடுறதுன்னு உங்களுக்கு தெரியாதா".
"நீ என்ன வேணும்னாலும் நெனச்சிட்டு போ. அவ பேத்திக்கு மொத எம்பேத்தி கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு மருமகளா வந்தாகணும். அம்புட்டுதேன்" என்று கோபமூச்சுகளை வெளியிட்டுக் கொண்டு நின்றிருந்தார்.
"பொண்ண பெத்தவங்க வந்து பேசட்டும் அப்புறமா பார்க்கலாம்" என்று விட்டு தங்கள் அறைக்கு சென்று விட்டார்.
கொஞ்சமும் பொறுக்க மாட்டாமல் உடனே தன் மகள் உமாவின் வீட்டை நோக்கிப் புறப்பட்டு விட்டார் காமாட்சி பாட்டி.
"அண்ணா இங்க என்ன நடக்குது? அப்போ இந்திரா தான் இந்த வீட்டுக்கு மருமகளா.. அவ எனக்கு அண்ணியா வேண்டாம்ணா. அவ ஆளே சரி இல்ல, போன மாசம் கூட ஒரு பையனோட பார்த்தேன்".
"இத அப்பத்தாகிட்ட சொல்றியா?" என்று குறும்புப் புன்னகையோடு கேட்ட பொற்செல்வனை முறைத்துப் பார்த்தவன்.
"சொன்னதும் நம்பிட்டு தான் மறுவேலை".
"தெரியுதுல விடு".
"ஆனா, அதுக்காக அந்த பொண்ண கட்டிக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டீங்களா?".
"இல்லடா, அப்பா எல்லாம் விசாரிச்சு தான் செய்வாங்க. அப்படியே ஓகே சொல்லிட மாட்டாங்க".
"ஆனா, அப்பத்தா இந்த கல்யாணத்தை நடத்தி காட்டாமவிடாது. உன் தலையெழுத்து உனக்கு இந்திரா தான்னு இருந்தா, அதை யாரால மாத்த முடியும்" என்றவனைப் பார்த்துவிட்டு தன் அறைக்கு சென்றுவிட்டான் பொற்செல்வன்.
அறையின் மௌனம் அவனை வரவேற்றது. சட்டையை கூட கழட்ட தோன்றாமல், அவன் மெதுவாக கட்டிலில் சாய்ந்தான்.
இரு கைகளையும் கோர்த்து தலைக்கு அடியில் வைத்து விட்டத்தின் வெறுமையை நோக்கியபடி கண்களை மூடிக்கொண்டான். கண்கள் மூடிய நொடியில் கருமணிகள் ஓரமாய் அசைந்தன.
மனக்கண் முன் ஏதோ மறக்க முயன்ற முகம் மீண்டும் உயிர் பெற்றது.
குழந்தை சிரிப்போடு இன்னும் கரையாத மஞ்சள் குங்குமம் சுமந்த செந்நிலாவின் மதிமுகம்…
அன்று பார்த்த அதே பார்வை, அவளுக்கு முறை சொய்யும் பொழுது அவன் கண்களில் பதிந்த அதே முகம்.
அந்த நினைவு மார்பை அழுத்திய தருணத்தில் அவன் சட்டென்று விழிகளை விரித்தான்.
மறப்பதற்காக மூடிய கண்கள், நினைவுகளால் தான் திறக்கப்பட்டன என்பதுபோல்.