மழை - 12
"பில்டப் எல்லாம் ரொம்ப தான் ஓவரா இருக்கு" என்ற முணுமுணுப்போடு அவளின் கைகள் தானாக செல்பேசியை நோண்டி பொற்செல்வனின் புகைப்படத்தை ஒளிரவிட்டது.
ஆம், அழகன் தான்..
பேரழகன் தான்..
அத்தனை கம்பீரமாக அந்த நீல நிற கரை வைத்த வேட்டியிலும் வெள்ளை நிற சட்டையிலும் நின்றிருந்தான். போன வருட திருவிழாவின் போது எடுத்த புகைப்படம் அது.
இதுவரை பொற்செல்வன் இந்திராவிடமோ, ரதியிடமோ தேவையைத் தாண்டி பேசியது கிடையாது.
அதனாலேயே இந்திராவை பொருத்தமட்டும் அவன் ஒரு சிடுமூஞ்சி. இந்திராவின் மனம் அவளின் வயதிற்கேற்ப அலைபாயும் மனம் தான்.
அவளைப் பற்றி ஆஹா ஓஹோ அழகு என்று புகழ்ந்து பேசினால் போதும், உடனே விழுந்து விடுவாள். அதன் விளைவு தான் இரண்டு, மூன்று முறை காதலில் விழுந்ததும்.
அப்படியெல்லாம் பேசும் குணம் கொண்டவன் கிடையாது பொற்செல்வன். அதனாலேயே அவனிடமிருந்து இவளுக்கு ஒரு விலகல்.
அவனைப் பெரிதாக உற்றுப் பார்த்தது கிடையாது. தன் அழகை ரசிக்காதவனை இவளுக்கும் ரசிக்க தோன்றவில்லை என்று கூட வைத்துக் கொள்ளலாம்.
ஆனால், இன்று உற்றுப் பார்த்தாள். ஆண்மைக்கு முழு இலக்கணமாய் கம்பீரமாய் நிற்பவனைப் பார்த்தவளின் கண்கள் பளிச்சிட்டது என்னவோ உண்மைதான்.
அவளின் செல்பேசி குறுஞ்செய்தி வந்ததற்கான ஒளியை எழுப்பிக் கொண்டே இருந்தது. அதைக்கூட சட்டை செய்யாதவள் எத்தனை நிமிடங்கள் பொற்செல்வனின் முகத்தையே அசைவற்று ரசித்துக் கொண்டிருந்தாளோ, அது அவள் மட்டுமே அறிந்த உண்மை.
ஏனோ, இதுவரை தோன்றாத உணர்வு இப்பொழுது அவன் மேல் தோன்றியது. புருவம் இடுங்க சிந்தித்துப் பார்த்தாள்.
ஆம், பேரழகனாக இருக்கிறான், கம்பீரமாக இருக்கிறான், பணக்காரனாகவும் இருக்கிறான். இவனிடம் அனைத்துமே இருக்கிறது. ஆனால், என்ன சற்று அழுத்தக்காரனாகவும் இருக்கிறான். அதுதான் அவளை இடித்தது.
மற்ற ஆண்களைப் போல் இவளிடம் வழிந்து பேச தெரியாதே.. இவளைப் புகழ்ந்து பேசவும் தெரியாது. அது மட்டும் தான் இவளுக்குப் பிரச்சனையாக இருந்தது. சரி, திருமணத்திற்குப் பின்பு பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துவிட்டாள்.
ஆம், பொற்செல்வனை மணக்க முடிவு செய்துவிட்டாள்.
உடனே, தன் செல்பேசியை திறந்தவள் இத்தனை நேரம் தன்னுடன் கதைத்துக் கொண்டிருந்த எண்ணிலிருந்து வந்த பல குறுஞ்செய்திகளை ஒரு நொடி வெறித்துப் பார்த்துவிட்டு பிளாக் செய்து விட்டாள்.
பொற்செல்வனின் கைகள் கோர்க்கும் நாட்களை எண்ணி கல்யாண கனவுகளில் மிதந்துக் கொண்டிருந்தாள் இந்திரா.
அவளின் மனநிலையே இப்படித்தான். எதிலுமே நிலையான முடிவு எடுக்கத் தெரியாது. அந்தந்த நேரத்திற்கும், சந்தர்ப்பத்திற்கும் தகுந்தாற்போல் தன் மனதை மாற்றிக் கொண்டே இருப்பாள்.
எதிலுமே நிலைத்து நிற்க மாட்டாள். இப்பொழுதும் அப்படித்தான், பொற்செல்வனை திருமணம் செய்து கொள்ளும் ஆசை திடீரென முளைத்துவிட்டது.
****
மறுநாள் தன் தங்கை அனிதாவை கல்லூரிக்கு அழைத்துச் சென்றிருந்தான் ரகு. அனிதாவை கல்லூரிக்குள் அனுப்பி வைத்துவிட்டு அவன் திரும்பவும்.
எதிர்பாராத விதமாக செந்நிலாவை எதிர்நோக்கியவன், "வணக்கம் டீச்சர் எப்படி இருக்கீங்க?" என்றான் குறும்பாக.
செந்நிலா, அனிதாவும், ரதியும் பயிலும் கல்லூரியில் தான் பேராசிரியையாக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.
ரகுவிற்கும், செந்நிலாவிற்கும் ஒத்த வயதுதான். குடும்பங்களுக்கிடையே சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள் ஓடிக் கொண்டிருந்தாலும், ரகு சிறுவயதில் செந்நிலாவுடன் விளையாடி இருக்கிறான்.
பாடத்தில் சந்தேகம் என்றால் கூட அவளிடம் கேட்டு தெரிந்து கொண்டிருக்கிறான். இது அனைத்தும் அவர்கள் இருவருக்கும் இடையே மட்டும் நடக்கும் விஷயம்.
வீட்டில் யாருக்குமே இதைப்பற்றி தெரியாது. பொற்செல்வனுக்கு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் இவர்களின் பழக்கம் பற்றி தெரியும். ஆனால், அவனும் அதைப்பற்றி யாரிடமும் பேசிக் கொண்டது கிடையாது.
அவனை விளையாட்டாக முறைத்துப் பார்த்தவள்.
"டிரைவர் வேலைப் பார்க்க வந்தா அதை மட்டும் பண்ணனும். டீச்சரையே கிண்டல் அடிச்சா பிரின்ஸிபால்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிடுவேன்.
அவள் கூறியதைக் கேட்டு சத்தமாக நகைத்தவன்.
"இன்னும் நீ ஸ்கூல் பொண்ணு மாதிரியே தான் இருக்க. ஆள்தான் வளர்ந்திருக்கியே தவிர உன் கேரக்டர் மாறல".
"ரகு உன் அப்பத்தா வந்திருக்காங்க" என்று அவள் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு கூறவும்.
சட்டென்று பதறியவன், "எங்க?" என்று திரும்பிப் பார்த்தான்.
அவனின் செயலில் கலகலவென நகைத்தவள்.
"இப்போ யாரு சின்ன புள்ளத்தனமா நடந்துக்குறது. ஏழு கழுத வயசாகுது அப்பத்தானு சொன்னா இப்பவும் இப்படி நடுங்குறியே".
அவளை முறைத்துப் பார்த்தவன், "என்னையே ஏமாத்துறியா, ஏதோ தெரிஞ்ச பொண்ணாச்சே போனா போகுதுன்னு பேசலாம்னு வந்தா ஓவரா பண்ற. ஓ! மேடம்க்கு கல்யாணம் நடக்க போகுதே அதான் பெரிய பொண்ணு மாதிரி நடந்துக்குறீங்களா".
அவனின் வார்த்தையில் அவனைப் புருவம் சுருக்கி பார்த்தவள், "என்ன சொல்ற?".
"ஆமா, உன் பாட்டி வந்து பெரியப்பாகிட்ட உனக்கு மாப்பிள்ளைப் பார்க்க சொல்லி இருக்காங்க. பெரியப்பா தான் இப்போ வரன் பாத்துகிட்டு இருக்காங்க".
இவன் கூறிய செய்தி செந்நிலாவிற்கு மிகவும் புதியது. அவளின் பாட்டி இதைப் பற்றி அவளிடம் எதுவும் கூறவில்லை.
"என்ன சொல்ற?" என்று அதிர்ச்சி மாறாத முகத்தோடு கேட்டவளைப் புரியாமல் பார்த்த ரகு, "ஏன் உன் பாட்டி எதுவும் உன்கிட்ட சொல்லலையா?".
அவனுக்கு மறுப்பாக தலையசைத்தவள், "இப்போ இதெல்லாம் தேவையா? இந்த விஷயம் தெரிஞ்சதும் உன் அப்பத்தா வீட்டையே ரெண்டாக்கி இருப்பாங்களே".
"ம்ம்.. ஆக்குனாங்க.. ஆக்குனாங்க.. அது மட்டும் இல்லாம என் அண்ணாவுக்கும், உமா அத்த பொண்ணுக்கும் இந்த சாக்க வச்சு கல்யாணம் பேசி முடிச்சிட்டாங்க" என்றவன் வீட்டில் நடந்த விஷயத்தை அப்படியே அவளிடம் கூறினான்.
"ஓ" என்றவளுக்கு இந்த விஷயத்தில் தான் மூக்கை நுழைத்து பேசுவது அதிக பிரசிங்கித்தனமாக தோன்ற, எதுவும் அவள் தன் கருத்தைக் கூறவில்லை.
இது அவர்களின் குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயம். இதில் தான் கூற என்ன இருக்கிறது என்று நினைத்துவிட்டாள் போலும்.
"என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு" என்று அவன் தன் கண்ணைச் சிமிட்டி குறும்பாக கூறவும்.
இவளும் 'என்ன' என்பது போல் அவனைப் பார்த்தாள்.
"இந்திரா என் அண்ணாவை கட்டிக்கிறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்ல. என் அண்ணா எப்படியாவது அவகிட்ட இருந்து எஸ்கேப் ஆகணும். அதேசமயம், உனக்கும் கல்யாணம் ஆகணும். பேசாம நீங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன?" என்றதும் ஒரே ஒரு நொடி அவளின் மனதிற்குள் அவனின் முகம் தோன்றி மறைந்தது.
முகத்தில் அப்பொழுது தான் அரும்ப துவங்கிய அரும்பு மீசையுடன், அவனின் விழிகள் அழுத்தமாய் அவளின் விழிகளைத் தீண்டிய அந்தக் கணம்…
காலம் கடந்து போனாலும், நினைவின் ஓரத்தில் அது மட்டும் இன்றும் மெல்ல தோன்றி மறைந்துகொண்டே இருக்கிறது.
"என்ன என் அண்ணனோட கல்யாண கனவுல இருக்கியா?" என்று அவன் தன் பற்களைக் கடித்து சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு கேட்கவும்.
அவனின் முதுகில் இரண்டு அடி போட்டவள், "எப்பயுமே என்னுடைய தகுதிக்கு மீறி நான் ஆசைப்பட மாட்டேன் வரேன்" என்று விட்டு சென்று விட்டாள்.
அவளுடன் பேசிவிட்டு மெல்லிய புன்னகையோடு அவன் திரும்பவும். அவனின் விழிகளில் வந்து விழுந்தாள் ரதி.
கல்லூரிக்கு சற்று தாமதம் ஆகிவிட்டது என அவசர அவசரமாக நடந்து வந்துக்கொண்டிருந்தாள்.
இவனைக் கடந்து செல்கையில் சினேகமாக அவள் ஒரு புன்னகையை உதிர்க்கவும்.
"எதுக்கு இவ்வளவு வேகமா நடந்து வர?".
"லேட் ஆயிடுச்சு மாமா அதான்" என்று அவள் தன் தலையைத் தாழ்த்திக் கொண்டு மெல்லிய குரலில் கூறவும்.
அவளையே விழியகலாது பார்த்தவன், "சீக்கிரம் கிளம்பி வந்திருக்க வேண்டியதுதானே?.
"சீக்கிரம் தான் கிளம்புனேன். வர வழியில செருப்பு அருந்துடுச்சு. அதான் கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு" என்று அவள் தன் கையைப் பிசைந்து கொண்டு கூறிக் கொண்டிருக்கும் பொழுதே கல்லூரியில் மணி அடிக்கும் ஓசை கேட்டது.
"நேரமாகிடுச்சு வரேன் மாமா" என்று அவசர குரலில் கூறியவள். அவனின் பதிலையும் எதிர்பாராமல் ஓடிவிட்டாள்.
அவள் செல்லும் திசையைப் பார்த்தவன் தன் மீசையை கரம் கொண்டு நீவிவிட்டபடி மெல்லிய புன்னகையோடு அங்கிருந்து கிளம்பி விட்டான்.
****
மதிய உணவிற்காக வீட்டிற்கு வந்திருந்த காமராஜை துளைத்தெடுத்துவிட்டார் கீதா.
"இப்போ என்ன நடந்துடுச்சு?" என்று எரிச்சலாக கேட்டவரிடம், "இன்னும் வேற என்ன நடக்கணும். அக்கா வாய திறக்காம இருக்காங்கன்றதுக்காக உங்க அம்மா என்ன வேணும்னாலும் ஆட்டம் போடலாம்ன்னு நினைச்சுட்டாங்களா.. பொற்செல்வனுக்கு இந்திராவை கல்யாணம் பேசி இருக்காங்க. அது உங்களுக்கும் தெரியும்தானே".
"எல்லாம் அண்ணாவுக்கு தெரிஞ்சு தானே நடக்குது. நீ எதுக்காக இப்ப கத்திக்கிட்டு இருக்க?".
"ஆனா, அக்காவுக்கு இதுல விருப்பமில்ல".
"அத அண்ணி தான் அண்ணா கிட்ட சொல்லணும்".
"அவங்கள பத்தி தான் உங்களுக்கு தெரியும்ல. சட்டுனு அப்படி வாயத் திறந்து பேசுற ஆள் தான் அவங்க கிடையாதே. அப்படி பேசி இருந்தா எப்பவோ என்னைப் போல பொழச்சிருந்திருப்பாங்க. ஆனா, ஒரு விஷயம் மட்டும் நான் இப்பவே சொல்லிடுறேன் நல்லா கேட்டுக்கோங்க. நாளை பின்ன உங்க அம்மா சொன்னாங்க ஆட்டுக்குட்டி சொன்னாங்கன்னு என் மகனுக்கு அவங்க பேத்திய கல்யாணம் பேச வந்தாங்கன்னா நிச்சயமா நான் ஒத்துக்க மாட்டேன். நீங்களும் ஒத்துக்க கூடாது" என்று இப்பொழுதே கராராக கூறி வைத்து விட்டார்.
"அப்படியெல்லாம் எதுவும் நடக்காது நடந்தா பாத்துக்கலாம்".
"உங்க அம்மாவ பத்தி எனக்கு தான் தெரியும். அவங்க மனசுல என்ன கணக்கு ஓடுதுன்னு அவங்க கண்ண பார்த்தே நான் கண்டுபிடிச்சிடுவேன். முதல் பேத்திக்கு உங்க அண்ணன் வீட்ல பேச வச்ச மாதிரி, ரெண்டாவது பேத்திக்கு நம்ம கிட்ட பேசலாம்னு கணக்கு போடுவாங்க. நிச்சயமா அவங்க எண்ணம் ஒரு நாளும் நிறைவேறாது. அப்படி அவங்க கேட்டு வரும்போது நீங்க மட்டும் சரின்னு ஏதாவது வாயை விட்டீங்க அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன் பார்த்துக்கோங்க" என்று கோபமாக கூறிவிட்டு சமையல் அறைக்குள் சென்று விட்டார்.
அவர் செல்லும் திசையைப் பார்த்த காமராஜிற்கு பெருமூச்சு தான் ஆயாசத்தோடு வெளியேறியது.
வலிகளையே சுமந்து பழகிவிட்டாள் பெண்ணவள்…
அவளின் வலியையும் தனக்கே உரிமையாய் எடுத்துக்கொண்டு, கரம் கோர்த்து அவளோடு சேர்ந்து சுமந்து நடக்க வருவானா அவன்?
அவளுக்கான மரியாதையை மீட்டுத் தரும் மாயவனாய், பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுக்க உறுதுணையாய் நிற்கும் கணவனாய்,
அவளின் வலிகளைத் தன் தோளில் தாங்கும்
சுமைதாங்கியாய்,
வருத்தங்களை வார்த்தையின்றி துடைத்தெறியும் வெற்றுத்தாளாய்,
உலகம் முழுவதும் இருந்தும் அவளுக்கே மட்டும் உரிய கண்ணாலனாய்…
காலம் பதில் சொல்ல வருவானா அவன்…?

Last edited: