மழை - 18
வீட்டிற்கு வந்த பிறகும் தேவராஜிற்கு மனம் ஆறவில்லை. தன் மகனும் தன் தாய்க்கு பேரன் தானே.. அவன் மேல் ஏன் அந்த பாசம் இல்லாமல் போனது. பேத்தியின் வாழ்க்கைக்காக எந்த அளவிற்கு கீழ் இறங்கிவிட்டார் என்று எண்ண எண்ண அவருக்குள் கோபம் மூண்டு கொண்டே இருந்தது.
காபி கப்புடன் அறைக்குள் நுழைந்த வள்ளி, "அத்த இப்படி செய்வாங்கன்னு நான் நினைச்சு கூட பாக்கலங்க. மனசே ஆறமாட்டேங்குது. ஒத்த புள்ள என்ன தான் சொந்த பேத்தியா இருந்தாலும், என் புள்ள வாழ்க்கைய இப்படியா கெடுக்க பாப்பாங்க" என்று பொறுக்க மாட்டாமல் ஆதங்கத்தோடு கூறிவிட்டார்.
"விடு வள்ளி, அவங்க புத்தி இதான்னு இப்போ தானே தெரியுது. வேற என்ன சொல்ல, பேரன விட பேத்தி பெருசா போயிடுச்சு. நல்லவேளை, இப்பவாவது உண்மை தெரிஞ்சதேனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான். இப்ப மட்டும் அந்த பொண்ணு மயக்கம் போட்டு விழாம இருந்திருந்தா நம்ம பையன் தலையிலேயே கட்டி வச்சிருப்பாங்க".
"பெரிய குடும்பம், பெரிய குடும்பம்னு பெருமை பேசி இப்படி ஒழுக்கம் இல்லாத பொண்ண வளர்த்து வச்சிருக்காங்க. இதுக்கு அவங்களோட பேத்தி எவ்வளவோ பரவாயில்ல. நானே பல தடவ அந்த பொண்ண நேர்ல பார்த்திருக்கேன். எவ்வளவு திறமையா இருக்குன்னு தெரியுமா வள்ளி. அவ்வளவு அறிவா பேசுது, மரியாதையா நடந்துக்குது. ஆம்பளைங்ககிட்ட நெருப்பு மாதிரி கண்ணியம் காக்குது. அந்த பொண்ணு ஓரத்துல கூட இவ நிக்க முடியாது" என்று முகத்தை எள்ளும் கொள்ளும் வெடிக்க சுழித்தார்.
பெற்றவர்களின் மனம் இங்கே வெதும்பிக் கொண்டிருக்க.
பொற்செல்வனின் மனதிலோ எதிலிருந்தோ தப்பித்த உணர்வு. இத்தனை நாட்கள் ஏதோ மூச்சு முட்டுவதைப் போல் உணர்ந்தவனுக்கு இப்பொழுது தான் ஆசுவாசமாய் இருப்பதைப் போல் தோன்றியது.
திண்ணையில் அமர்ந்திருந்தவனின் அருகில் அமர்ந்த ரகு, அவனின் தோளில் கையைப் போட்டவாறு, "என்னண்ணா எல்லாம் ஓகே தானே?".
"ம்ம்".
"இந்திரா இப்படி பண்ணிட்டாளேன்னு வருத்தப்படுறியா?".
"இல்லடா".
"அவ இவ்வளவு தூரம் போவான்னு நான் நினைச்சு கூட பாக்கல. இவ்வளவு பெரிய தப்ப பண்ணிட்டு ஏதோ ஜஸ்ட் லைக் தட் மாதிரி அவ பேசினத என்னால இன்னுமே ஏத்துக்க முடியல".
"ம்ம்".
"சரி, அப்பா என்னை மண்டபத்துக்கு போக சொல்லி இருக்காங்க. நீயும் வரியா கல்யாண வேலை இருக்குல்ல".
தன் அண்ணனின் மனநிலையை மாற்ற வேண்டி அவனையும் தன்னுடன் அழைத்துச் செல்ல முடிவு செய்தான். அவனும் அவனுக்கு சம்மதமாக தலையசைத்துவிட்டு அவனுடன் கிளம்பி மண்டபத்திற்கு சென்று விட்டான்.
"இப்படி ஒரு பொண்ண நான் எங்கேயும் பார்த்ததில்ல. வயித்துல புள்ளய வச்சுக்கிட்டு கல்யாணம் கட்டிக்க ஆசப்பட்டதோட மட்டுமில்லாம, இப்போ நான் உங்கள தான் மாமா மனசுல நினைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்றா.. சீ.. வெக்கங்கெட்டவ" என்று வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டிக் கொண்டிருந்தார் கீதா.
"விடு கீதா, அதான் நிச்சயம் நின்னு போச்சுல்ல. எதுக்கு திரும்பத் திரும்ப அதை பத்தியே பேசிட்டு இருக்க".
"பின்ன, பேசாம வள்ளி அக்கா மாதிரி அமைதியா இருப்பேன்னு நினைச்சீங்களா. உங்க அம்மா எங்கள எப்படி எல்லாம் பேசியிருப்பாங்க. நான் அங்க போனாலே ஜாட மாட பேசுறது. என்னைய குத்தி காட்டி பேசுறது. எங்கள எப்படி எல்லாம் நோகடிக்கிறாங்க. இப்ப பார்த்தீங்களா அவங்க பேத்தியுடைய நடத்தைய. அதுவும் உங்க அம்மாவும் கூட சேர்ந்து பேசுறாங்க பாருங்க, குழந்தைய கலைச்சிட்டு செல்வாக்கு கட்டிக் கொடுக்கப் போறாங்களாம் ச்சீ.. குடும்பமா அது".
என்ன பேசினாலும் கீதா ஓயமாட்டார் என்பதை உணர்ந்த காமராஜ் தான் இறுதியில் அமைதியாகும் படி ஆகிப்போனது.
"ஆனா ஒன்னுங்க, இப்படி ஒரு குடும்பத்த நான் எங்கேயுமே பார்த்தது கிடையாது. இங்க பாருங்க, நாளபின்ன அந்த ரதிக்கு எம்மகன கல்யாணம் பண்ணி கொடுக்கலாம்னு ஏதாவது பேச்சு வந்துச்சு நான் காளி அவதாரம் எடுத்திடுவேன் பாத்துக்கோங்க".
உமாவின் வீட்டிலோ உமா அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்.
"இனி அழுது புலம்பி மட்டும் என்ன செய்ய?" என்ற காமாட்சி பாட்டியும் தன் பங்கிற்கு இந்திராவை நன்கு திட்டி விட்டு வீடு வந்து சேர்ந்தார்.
இத்தனை நடந்த பிறகு இனி வீட்டில் அவரின் கை ஓங்குமா என்பதே அவருக்கு சந்தேகமாக தான் இருந்தது. அனைவரும் தன்னை எப்படிப் பார்ப்பார்கள் என்று வேறு உறுத்தலாக இருந்தது.
இந்திரா காதலித்தது செந்நிலாவின் அத்தை லலிதாவின் மகன் அசோக்கை தான்.
செந்நிலாவிற்கு வேறு இடத்தில் திருமணம் பேசவும், லலிதாவும், அசோக்கும் விஷயத்தை கேள்விப்பட்டு ஆரம்பத்தில் மிகவும் கொந்தளித்தார்கள்.
ஆனால், இந்த திருமண விஷயத்திற்கு பின்னால் தேவராஜ் குடும்பம் இருப்பது தெரியவும், அவர்களுக்கு புஸ்ஸென்று ஆகிவிட்டது.
அவர்களை மீறி செந்நிலாவை திருமணம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை அசோக்கிற்கு கிடையாது.
அந்த நிலையில் தான் அவனுக்கு இந்திராவுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்திராவும் வசதியான குடும்பத்து பெண் தானே, இவளை திருமணம் செய்தாலும் சொத்துபத்துகள் நிறைய கிடைக்கும் என்ற எண்ணத்தோடு தான் அவளுடன் பழகினான்.
மேலும், செந்நிலாவிற்கு இவளின் குடும்பத்து ஆட்கள் தானே மாப்பிள்ளை பார்க்கின்றனர். அவர்களின் வீட்டுப் பெண்ணைக் காதலித்து தான் மணந்து கொண்டால், அவர்களை பழிவாங்கியது போலவும் இருக்கும் என்று எண்ணியவன், இந்திராவுடன் நன்கு நெருங்கிப் பழகி அவளைக் காதலில் விழ வைத்தான்.
ஆனால், இந்திராவோ பொற்செல்வனுடன் தனக்கு திருமணம் முடிவானதும் அசோக்கிற்கும், தனக்கும் சரி வராது என்று பேசி அவனைக் கழட்டி விட முயன்றாள்.
அப்படி தான் அன்று கோவிலிலும் அசோக்குடன் பேசிக்கொண்டு இருந்தால், இனி உனக்கும் எனக்கும் சரி வராது என்று அவர்களின் விவாதம் காரசாரமாக சென்று கொண்டிருக்கும் பொழுது தான் அவளின் குடும்பத்தார் அவளைக் கண்டு கொண்டனர்.
பொற்செல்வனுக்கும், தனக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக அவனிடம் கூறியவள். இனி பார்க்க வேண்டாம், பழக வேண்டாம் என்று கூறிவிடவும், மீண்டும் அசோக் செந்நிலாவின் புறம் திரும்பி விட்டான்.
இந்திராவும் அசோக்கும் நன்கு நெருங்கி பழகினர் தான். ஆனால், இந்திரா கர்ப்பமாகி இருப்பாள் என்பதை இருவருமே எதிர்பார்த்திருக்கவில்லை.
முந்தைய நாளும் வீட்டில் மயங்கி விழுவும் தான் மருத்துவமனை அழைத்துச் சென்றனர் காமாட்சியும், உமாவும்.
அப்பொழுதுதான் அனைவருக்கும் தெரியவந்தது அவள் கர்ப்பமாக இருக்கும் விஷயம். இருப்பினும், எப்படியாவது சமாளித்து விடலாம் என்று நினைத்து விட்டார் காமாட்சி. அதன் விளைவு நிச்சயமே நின்று போகும்படியாகிவிட்டது.
மண்டபத்தை அடைந்ததும் அனைத்து வேலையிலும் தன்னை நுழைத்துக் கொண்டுச் செய்தான் பொற்செல்வன்.
அன்று மாலைக்கு மேல் மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டாள் செந்நிலா.
இன்னும் அவர்களுக்கு பொற்செல்வனுக்கு நிச்சயம் நின்ற விஷயம் பற்றி எதுவும் தெரியாது.
மண்டபத்திற்குள் நுழைய முற்பட்ட செந்நிலாவின் விழிகள் அங்கே திருமண வேலையில் ஈடுபட்டிருக்கும் பொற்செல்வனின் மேல் ஓரிரு நொடி பதிந்தது. வழக்கம்போல் அவளின் விழிகளில் நன்றி கலந்த உணர்வு.
நலங்குகள் இனிதே நிறைவடைய, அதனைத் தொடர்ந்து மறுநாள் திருமணமும் நல்லபடியாக நிறைவடைந்திருந்தது.
ஆனால், நடந்ததோ செந்நிலாவிற்கும், பொற்செல்வனுக்கும்...
ஆம், முதல் நாள் இருந்த மனநிலை மறுநாள் அப்படியே அனைவருக்கும் வேறாய் மாறி இருந்தது. மணக்கோலத்தில் நின்றிருந்தனர் பொற்செல்வனும், செந்நிலாவும்.
விடிந்ததும் திருமண சடங்குகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் அரங்கேற. மணமக்களும் மணவறையில் அமர வைக்கப்பட்டனர்.
திடீரென மண்டபத்திற்குள் சலசலப்பு. கும்பலாக மண்டபத்திற்குள் ஆட்கள் நுழையவும், அனைவரின் பார்வையும் அவர்களில் பதிந்தது.
அவர்களோடு போலீஸ் அதிகாரியும் உள்நுழைய. அனைவரும் என்னமோ, ஏதோ என்பது போல் பார்க்க. அந்த இடமே சற்றுப் பதட்டமாக தான் காட்சியளித்தது.
தேவராஜ் மற்றும் காமராஜ் குடும்பத்தினர் அனைவரும் அங்கே தான் இருந்தனர். அவர்களின் தலைமையில் தானே இந்த திருமணமே நடைபெறுகிறது.
தேவராஜ் போலீஸ் அதிகாரியை நெருங்கியவர், "என்ன சார் என்ன விஷயம்?".
"சார் இவர் உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு. இவரோட அத்த பொண்ண மிரட்டி நீங்க வேற யாருக்கோ கல்யாணம் செஞ்சு கொடுக்கப்பாக்குறதாவும், அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்துல கொஞ்சமும் விருப்பம் இல்லன்னும் உங்க மேல கம்ப்ளைன்ட் வந்திருக்கு" என்றவாறு அவர் தன் அருகில் நின்றிருந்த அசோக்கை கை காண்பித்தார்.
இந்திராவின் கர்ப்பத்திற்கும் இந்த அசோக் தான் காரணம் என்பது அவர்களுக்கு அப்பொழுது தெரியவில்லை.
"அப்படி எல்லாம் எதுவும் இல்ல சார். அந்த பொண்ணுடைய முழு விருப்பத்தோட தான் இன்னைக்கு இந்த கல்யாணம் நடக்குது".
அதற்குள் மணமகனின் தாயார், "என்னங்க இதெல்லாம், போலீஸெல்லாம் வராங்க. இதெல்லாம் கொஞ்சம் கூட எனக்கு சரியாபடலங்க" என்றார் முகத்தை சிடுசிடுப்பாக வைத்துக்கொண்டு.
ஏற்கனவே, அவருக்கு செந்நிலாவை தன் மகனுக்கு மணம் முடிப்பதில் முழு ஈடுபாடு எல்லாம் கிடையாது.
அவரின் கணவர், தேவராஜ்காக ஒப்புக்கொண்டார் என்றால், அவரின் மகனுக்கு செந்நிலாவின் புகைப்படத்தைப் பார்த்ததுமே மிகவும் பிடித்து விட்டது. அவனின் விருப்பத்திற்காக மட்டும்தான் இன்று இந்த வரன் திருமணம் வரை வந்திருக்கிறது.
"இல்லங்கம்மா, ஏதோ தப்பா புரிஞ்சுகிட்டு பேசுறாங்க. கொஞ்ச நேரம் இருங்க" என்று அவருக்கு பதிலுரைத்த செங்கேணி தேவராஜைப் பார்க்கவும்.
"நீங்க வேணும்னா அந்த பொண்ணுகிட்டயே கேட்டுப்பாருங்க சார். அவங்க விருப்பத்தோட தான் இந்த கல்யாணம் நடக்குது" என்ற தேவராஜன் வார்த்தையைத் தொடர்ந்து போலீஸ் அதிகாரி செந்நிலாவைப் பார்க்கவும்.
மணவறையில் இருந்து எழுந்து நின்றவள், "யாரும் என்னை வற்புறுத்தி இந்த கல்யாணத்த செய்ய வைக்கல. என்னுடைய முழு சம்மதத்தோட தான் இந்த கல்யாணம் நடக்குது. இந்த கல்யாணத்த தடுக்குறதுக்காக வேணும்னே அவங்க பொய்யா கம்பளைண்ட் கொடுத்திருக்காங்க".
அசோக்கை முறைத்துப் பார்த்த அதிகாரி, "என்னய்யா என்ன நெனச்சிட்டு இருக்க? பொய் கம்ப்ளைன்ட் கொடுத்து எங்கள வர வச்சிருக்கியா. எங்கள பார்த்தா உனக்கு என்ன வேலை வெட்டி இல்லாம சும்மா இருக்கோம்ன்னு தோணுதா. திரும்ப இந்த மாதிரி ஏதாவது பொய் கம்ப்ளைன்ட் குடுத்த உன் மேல ஆக்ஷ்ன் எடுக்க வேண்டியது வரும் சொல்லிட்டேன்".
"இல்ல சார், அந்த பொண்ண மிரட்டி" என்று அவன் கூறும் பொழுதே அவனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர்.
"அதான் அந்த பொண்ணே பொய் கம்ப்ளைன்ட்னு சொல்லுதே. பொண்ண மிரட்டிடாங்கன்னு சொல்ற.. கொன்னுடுவேன் ராஸ்கல். வாங்கய்யா போவோம்" என்று அதிகாரிகள் கிளம்பிவிட்டனர்.