பரிதியின் பவித்ரமே -02
"ஏ பவித்ரா இப்ப வர முடியுமா முடியாதா"என்று கத்தினார் அவளின் அன்னை மாதவி.
"ஏன் மா கத்துறீங்க...?"என்று சலிப்புடன் வந்தவள், அவசரமாக தட்டில் இட்லியை வைத்து சாம்பாரை ஊற்றிக் கொண்டு அமர்ந்தாள்.
"ஏய் ஏய் கொஞ்சமா ஊத்துடி. இன்னும் வீட்டில் யாரும் சாப்பிடலை"என்று கத்த
"ம்மா சும்மா போங்க ஆமா. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் சாம்பார் வச்சா நிறையா வைங்கன்னு. நான் சாப்பிடுறதே காலையில் மட்டும் தான் அதுக்கும் ஏதாவது சொல்லிட்டு"என்று எரிந்து விழுந்தவள் ஊற்றிய சாம்பாரை வைத்து இரண்டு இட்லியை மட்டும் சாப்பிட்டு விட்டு எழுந்தாள்.
"திங்க தான் முடியலையே அப்புறம் எதுக்கு நாலு இட்லி வச்ச நீ "என்று தட்டை பிடுங்கி அதில் இன்னும் கொஞ்சம் சாம்பாரை ஊற்றி தான் உண்டார்.
"நாலும் சாப்பிட தான் தோணுது எங்கே அதான் சாம்பாரை ஊத்தினா கத்துறீங்களே"என்றவள் கையை கழுவி விட்டு "நைட் வர லேட் ஆகும். அந்த தடியனை வந்து பிக்கப் பண்ணிக்க சொல்லுங்க"என்றபடி பேக்கை எடுத்தாள்.
"ஏய் என்னடி அப்படியே கிளம்புற"
"வேற என்ன செய்ய வேலைக்கு நேரம் ஆச்சு மா"என்றாள் கடிகாரத்தை பார்த்தபடி.
"காசு தந்துட்டு போ பவி வீட்டில் அரிசி சுத்தமா இல்லை"என்றார் மாதவி.
"போன வாரம் வாங்கலையா"என்று புருவம் நெரிபட கேட்க
"பத்து கிலோ வாங்கினேன் தீர்ந்து போச்சு"என்றவர் "உன் தம்பியை வாங்கிட்டு வர சொல்றேன்"என்றார்
"சரி சரி இந்தாங்க"என்றவள் "ஒரு சிப்பமா எடுத்து போடுங்க மா. சும்மா அஞ்சு பத்துனு வாங்கிக்கிட்டு"என பணத்தை நீட்டினாள்.
மாதவி பணத்தை வாங்கிக் கொண்டவர் "பத்திரமா போயிட்டு வா பவி. க வர சொல்றேன்"என்று சொல்லி விட்டு வேலையை கவனிக்க பவித்ரா கிளம்பி விட்டாள்.
பவித்ரா காரின் இதர பாகங்கள் விற்கும் கடையில் வேலை செய்கிறாள். திறமையான பெண். பிஏ ஆங்கிலம் எடுத்து படித்தவள் ஆசிரியை ஆக வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை நிறைவேற்ற முடியாமல் கிடைத்த வேலை செய்து குடும்பத்தை கவனித்துக் கொள்கிறாள். தந்தை இருந்த போதிலும் அவர் பணத்தையோ அவர் தரும் எதையுமோ ஏற்பதில்லை அவள்.
காரணம் மாதவி அவருடைய இரண்டாவது இல்லை இல்லை அவரது ஆசைநாயகி. அவருக்கு பிறந்தவர்கள் தான் பவித்ராவும் கணேஷும். தந்தை உலகநாதன் திருநெல்வேலி மாவட்டம் அருகில் உள்ள ஊரில் பெரும்புள்ளி. ஊரில் பெரிய ஆள் என்ற மரியாதை இருந்தாலும் வெளியே குணம் இப்படி. திருமணம் செய்து கொள்வார் என்ற எண்ணத்தில் மாதவி தன்னை தாரை வார்த்து நம்பிக் கொண்டு இருக்க அவரோ இரு பிள்ளையை கொடுத்து விட்டு மாதாந்திர செலவுக்கு பணம் கொடுத்து அவ்வப்போது வந்து தங்கி விட்டுச் செல்கிறார்.
விபரம் தெரியாத வரையில் பவித்ரா தன் தந்தை ஏதோ வெளியூரில் வேலை செய்கிறார் அதனால் இப்படி வந்து போகிறார் என்று எண்ணி இருந்தாள். ஆனால் நிலைமை அதுவல்ல என்று பதின் பருவத்தில் புரிந்தபோது வெறுத்து போனது அவளுக்கு. அக்கம் பக்கம் சிலர் பேசும் கேலி எல்லாம் சிறுவயதில் புரியாதது தற்போது புரிய தந்தை வீட்டிற்கு வரக் கூடாது என்று அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாள் ஆனால் பலன் தான் இல்லை. அவர் வருவது நிற்கவும் இல்லை, இவளின் ஆர்பாட்டம் குறையவும் இல்லை. ஆனால் ஒன்றிற்கு மட்டும் பலன் கிடைத்தது அது இவள் வேலைக்குச் செல்ல துவங்கியதும் தந்தை தரும் பணத்தை மறுத்து நின்றது தான்.
"வளர்த்து விட்டது நானு என் கிட்டவே முறுக்கிட்டு நிற்கறியா?"உலகநாதன் உக்கிரமாக கத்திய போது "என் அம்மா கழுத்தில் தாலி கட்டிட்டு அந்த பணத்தை குடுங்க.நான் அதில் சாப்பிடறேன்"என்றிருந்தாள் நிதானமாக.
மாதவிக்குமே அந்த எதிர்பார்ப்பு அபரிமிதமாக இருந்தது. ஆவலோடு கணவனைப் பார்க்க
அவரோ "எத்தனை நாளைக்கு இந்த வறட்டு பிடிவாதம் னு பார்க்கிறேன்"என்று மனைவியின் ஆவல் பொதிந்த பார்வையையும், மகளின் அலட்சிய பாவத்தையும் எரிச்சலாக பார்த்து விட்டு கிளம்பினார்.
அதன் பிறகு அவர் பணம் கொடுத்தாலும் மாதவி மகளை கைகாட்டி நாசூக்காக மறுத்து தன் மகளின் சம்பாத்தியத்தில் தான் பிழைப்பு நடத்துகிறார். உலகநாதனின் வரவும் அதன் பிறகு கணிசமாகக் குறைந்து போகவே இவர்கள் மூவரும் தான் வசிக்கின்றனர்.
அதற்குமே"மக தலையெடுக்கவும் மாதவி தன் பொழப்பை பார்க்குது போல பரவாயில்லை இந்த அளவுக்காவது மாறுனாளே"என்றும் ஊருக்குள் பேசிக் கொண்டனர்.
எதையும் பொருட்படுத்தாமல் பவித்ரா தன் குடும்பத்தை கவனித்தாள். தம்பியை படிக்க வைத்தாள். அவனுமே தமக்கையின் முயற்சி உணர்ந்து நன்றாகவே படித்தான். ஆனால் இவளைப் போல அல்லாது தந்தையிடம் ஒரு ஒட்டுதலை காட்டினான். தனக்கு அவரும் வேண்டும் என்ற ரீதியில் தான் அவனது வாழ்க்கை போனது.
பவித்ரா அமரிக்கையான அழகி. நீள்விழிகளில் தீட்டப்பட்ட அஞ்சனம் வெளியே தெரியாது அத்தனை பாந்தமாய் தன்னை அழகுபடுத்திக் கொள்பவள். அடுத்தவர் கருத்தை கவர்ந்தாலும் கண்களை மேய விடும் அளவிற்கு தன்னை அலங்கரித்துக் கொள்ள மாட்டாள். தன் வேலைக்கு தகுந்த மிதமான ஒப்பனை தான் என்றுமே. ஒப்பனையை விட அவளை மிளிர வைப்பது அவளின் சுறுசுறுப்பு. வேலையில் அத்தனை தெளிவும் வேகமும்.
"குட் மார்னிங் சார்"பளிச்சென்ற புன்னகையுடன் உள்ளே வந்து அட்டென்டன்ஸ் நோட்டில் கையொப்பம் இட்டாள்.
"குட் மார்னிங் பவித்ரா மேடம். என்ன லேட் இன்னைக்கு"என்று கிண்டல் செய்தபடி லெட்ஜரை மூடி வைத்தார் கடையின் மேனேஜர் அன்பழகன்.
"வர்ற வழியில் சாப்பிட்டு வந்தேன் சார் அதான் லேட். அம்மா டென்ஷன் ஆக்கி விட்டுட்டாங்க ரெண்டு இட்லி தான் சாப்டேன்"என்றாள் சலிப்பாக.
"அதுசரி சாம்பாரை கொட்டி கவுத்து இருப்ப, அதான் அம்மா டென்ஷன் பண்ணி இருப்பாங்க"என்றபடி வந்தார் சக ஊழியை சீதாலட்சுமி.
"போங்கக்கா இட்லியை சாம்பார் ல தொட்டு சாப்பிடறதா? அதை பார்த்தா இட்லி கோவிச்சுக்காது... சரவணபவன் ல ரெண்டு இட்லிக்கு ஒரு வாளி சாம்பார் தர்ற மாதிரி வீட்டிலும் இருந்தா எப்படி இருக்கும்?"என்று நாவை சுழற்ற அன்பழகன் சத்தமாய் சிரித்தார்.
"உன்னை கட்டிக்க போறவன் பாவம்"என்று சீதாலட்சுமி சிரிக்க
"ம்ம்க்கும்"என்று அலுத்தவள் அந்த பேச்சை பேச்சிற்காக கூட தொடரவில்லை.
"ஹ்ம்ம் கல்யாணம் மாப்பிள்ளை னு பேச்சை எடுத்தாலே சைலண்ட் ஆகிடுவியே?!"என்று புன்னகைத்த சீதாலட்சுமி தன் வேலையில் கவனம் வைத்தார்.
அப்போதும் அவளிடம் அளவான புன்னகை தான்.
உண்மையில் பேசப் பிடிக்காமல் இல்லை. ஒரு வித தவிர்ப்பு. இருபத்தி மூன்று முடியப் போகிறது. ஆனால் இதுவரைக்கும் பெயருக்காக கூட இவளை பெண் கேட்டு யாரும் வரவில்லை. முதல் காரணம் மாதவியின் நிலை அவருக்கு மகளாக பிறந்த ஒரே காரணம் வரன் வராமல் இருப்பது. குறைந்த பட்சம் காதல் கூட வரவில்லை. ஒரு பையன் கூட அவள் பின்னால் வரவில்லை அதற்கு காரணம் உலகநாதன். என்ன தான் மாதவியை அவர் மனைவியாக ஏற்கா விட்டாலும் மகள் என்று வருகையில் யாரேனும் சாதாரணமாக பார்த்தால் கூட அனல் பறக்கும் அவர் செய்கையில்.அதனாலேயே அது போன்ற விஷயமும் நடக்கவில்லை. மாதவிக்கு மகள் வயது ஏறிக் கொண்டே செல்வதில் பெருங்கவலை இருக்க தான் செய்தது. இதைப் பற்றி உலகநாதனிடம் கூட பேச்சுவாக்கில் கூறியிருக்கிறார் தான்.
"இப்போ என்ன வயசு ஆகுது அவளுக்கு. பார்க்கலாம் பார்க்கலாம் பொறுமையா இரு"என்றவர் "உன் சொந்தத்துல எவனாவது இருந்தா சொல்லு பேசி முடிக்கலாம் என் பக்கம் இருந்து யாரையும் எதிர்பார்க்காதே"என்றிருந்தார்.
"அவ உங்க பொண்ணு ங்க"என்று தொண்டை அடைக்க சொல்லியவரை நிதானமாக பார்த்து விட்டு "அதுக்கு இங்கே இருந்து மாப்ளை தேடவா நானு. ஏற்கனவே என் மகள்களுக்கு மாப்பிள்ளை இதனால அமைய மாட்டேங்குது னு வீட்டில் கத்துறாங்க நீ வேற. அங்கே தான் இம்சைனா நீயும் உன் பங்குக்கு ஆரம்பிக்காத"என்று திட்டி விட்டு சென்றவர் தான் அதன் பிறகு வருகையை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்தார்.
"ம்மா அவர் மாப்பிள்ளை பார்த்தா மட்டும் நான் கட்டிக்குவேனா..? ரொம்ப ஃபீல் பண்ணாம போய் வேலையை பாரும்மா"என்று மாதவியை தான் அடக்கி வைத்தாள் பவித்ரா.
"மனசுக்குள்ள ஒரு நப்பாசை பவி. என் மகளுக்கும் எல்லா சொந்தமும் சேர்ந்து நின்னு கல்யாணம் பண்ணி தரணும்னு. ஆனா நானா வந்து விழுந்த வாழ்க்கையில் இதெல்லாம் நினைக்கவே கூடாதுல்ல. எனக்கு கிடைக்காட்டியும் என் பிள்ளைக உங்களுக்காவது கிடைக்கணும் னு மனசு தவிக்குதுடி"என்றார் ஒரு முறை பரிதாபமாக.
"ப்ம்ச் நம்மை முன்ன விட்டு பின்ன பேசுற சொந்தம் எல்லாம் நமக்கு தேவையா மா. அவங்க முன்னாடி கல்யாணம் நடந்தா கூட அது எனக்கு சங்கடம் தான் அதுக்கு நான் இப்படியே இருந்துட்டு போவேன் ஏதோ நான் பாவப்பட்ட ஜீவன் மாதிரியும் இதெல்லாம் எனக்கு கிடைக்கிறதே கொடுப்பினை ன்ற மாதிரியும் பேசி உச்சு கொட்டுவாங்க இதுக்கு அவங்க முன்னாடி எனக்கு எந்த நல்லதும் நடக்கவே வேண்டாம்"என்று சொல்லி விட்டாள் அம்மாவின் வருத்த முகம் காண சகியாமல்.
மாதவிக்கு மகளை நினைத்து வேதனை தலை தூக்கி நின்றாலும் அவள் கூறுவதில் தவறும் இல்லையே என்று தான் தோன்றும்.
காலம் போற போக்குல நாமளும் போயிக்க வேண்டியது தான் என்று எண்ணி அமைதியாகி விடுவார்.
"அண்ணே!, கியா புது கார் என்னென்ன அக்சஸரீஸ் போடணும் சொல்லுங்க?"என்று ஒருவர் வர
"ம்மா பவித்ரா கஷ்டமருக்கு எக்ஸ்ப்ளைன் பண்ணுங்க. காரை போய் ஒரு டைம் செக் பண்ணுங்க"என்று அன்பழகன் அழைக்க வேலையில் மூழ்கிப் போனாள் பவித்ரா.
"நான் முதல்ல என்னென்ன எல்லாம் போடணும் அதுக்கு எவ்வளவு ஆகும் எந்த மாடல் பெஸ்ட் னு காட்டுறேன் சார். நீங்க பார்த்து விட்டு சொல்லுங்க"என்று பேசத் துவங்க வந்தவர் "எல்லாம் பண்ணிடலாம் மா எப்போ வாங்கிக்கலாம்"என்று கேட்டார்.
"மணி இப்போ பத்து. ஹான் ஈவ்னிங் நாலு மணிக்கு எல்லாம் எடுத்துக்கலாம் சார்"என்றாள் நேரத்தை கணக்கிட்டபடி.
"அவ்வளவு நேரம் ஆகுமா?!"என்று அவர் சற்று வியப்பாக கேட்க
"சீட் கவர் தைக்கவே மூணு மணி நேரம் ஆகும் சார். மத்தது கொஞ்சம் வேலை கம்மி தான் ஆனா இது செட் பண்ணனும்ல"என்றவள் இன்னும் என்னென்ன பாகங்கள் தேவை என்று விளக்கி அதற்கான பணத்தையும் கணக்கிட்டு கூற அவரும் ஆமோதிப்பாய் சம்மதித்தார்.
அன்பழகன் முகத்தில் சன்னமான புன்னகை. வந்தவரை கேட்டது மட்டும் வாங்க வைக்காமல் மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்ய வைக்கிறாள் என்று ஒரு பெருமிதம்.
திறமையான பெண் என்று வழக்கம் போல மெச்சிக் கொண்டார்.
.... தொடரும்.