• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மகேந்திரனின் மதிவதனியிவள் - 8

நிதனிபிரபு

Administrator
Staff member
MMI 8


மகேனுக்கும் மதிவதனிக்கும் இடையே குழப்பம் விளைவிக்கும் நோக்கில் அங்கு வந்திருந்த தீரன் வேண்டுமென்றே நண்பன் தேர்ந்தெடுக்கும் புடவைகளை குறைசொல்லிக் கொண்டிருந்தான்...

அவனைக் கண்டு பல்லைக்கடித்த மகேன், "டேய் உனக்கு இங்க என்னடா வேல? எதுக்கு இப்போ தேவையில்லாம எங்க ரெண்டு பேரையும் டிஸ்டர்ப் பண்ற?" என்று அவனுக்கு மட்டும் கேட்கும்படி தாழ்ந்த குரலில் வினவ,

"ஹாஹா..! நீ தான் எனக்கும் என் வதுக்கும் நடுவுல உட்கார்ந்து டார்ச்சர் பண்ற... எந்திருச்சு போடா வெளிய..! எப்படியும் உங்களோட எங்கேஜ்மெண்ட்ட நான் நடக்க விடப்போறதில்ல... ஒழுங்கா சொல்றதக் கேட்டு அத நீயே நிறுத்திடு... இல்லைனா நீ தான் அவமானப்பட்டு நிக்கப்போற..!" என்றான் தீரனும் அதே குரலில்...

தனக்கு அவள் வேண்டுமென்று முடிவெடுத்தப் பிறகு இங்கிதம் பார்க்கும் நிலையைக் கடந்திருந்தான் அவன்..!

முன்தினம் மனநல மருத்துவரை சந்திக்க நினைத்தது, சிங்கப்பூர் செல்வதற்காக விமானப் பயணச்சீட்டு முன்பதிவு செய்தது என்று அனைத்தையும் தூக்கிக் குப்பையில் போட்டிருந்தான்...

நண்பனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, "ஓ..! இது தான் காதலன் அவதாரமா? உன்னோட முயற்சிக்கு என்னோட வாழ்த்துகள் தீரா..! ஆனா அதுக்கு முன்னாடி உன்கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு... நாளைக்கு ஈவ்னிங் பேசலாம்... இப்போ எனக்கு ஷாப்பிங் பண்றதையும் சேர்த்து நிறைய வேலை இருக்கு.." என்றதோடு கையில் ஒரு அரக்கு வண்ண புடவையை எடுத்தவன் அதை மதியிடம் கொடுத்து,

"இத டிரை பண்ணிட்டு வா மதி..! நான் ஒரு இம்பார்ட்டண்ட் கால் பேசிட்டு வந்துடுறேன்..." என்றுவிட்டு பேன்ட் பாக்கெட்டில் இருந்து அலைபேசியை எடுத்தபடி விலகி நடந்தான்...

தீரனுக்கே அவனின் இந்த காதலன் அவதாரம் புதுமையாக தான் இருந்தது..! தனக்குள் நீக்கமற நிறைந்திருக்கும் அகந்தையைத் தாண்டி இப்படியான மென்மையான உணர்வுகள் எதிர்பாராத விதமாக விழித்துக் கொள்ளுமென அவன் என்ன கனவாக் கண்டான்?

இது முன்பே தெரிந்திருந்தால் மதிவதனியை முதன்முதலில் பார்த்தபோதே நன்றாகப் பேசிப் பழகி தன்னுடையவள் ஆக்கியிருப்பானே..!

காரணமின்றி அவளில் வன்மத்தை வளர்த்துக் கொண்டதை எண்ணி மனம் நொந்தவன் அவளை எவ்வாறு தன் வசப்படுத்துவது என்ற யோசனையில் ஆழ்ந்தான்...

மகேனிடமிருந்து தயக்கமாக அதை வாங்கிய மதிக்கு தீரனின் கையில் வைத்திருந்த புடவையின் நிறமும் வேலைப்பாடும் விழிகளை நிறைத்தது..!

ஆரஞ்சு வண்ணத்தில் சுத்தமான தங்க இலைகளால் அத்தனை அழகாக வடிவமைத்திருந்தனர்..!

ஆனால் அவன் கையில் இருப்பதை ரசிப்பது அவளுக்கே ஒரு மாதிரியாக இருக்க, அதைப் பார்த்தபடியே எழுந்தவள் உடைமாற்றும் அறையை நோக்கி நடந்தாள்...

அதுவரையில் அவளை ஓரக்கண்ணால் ரசித்துக் கொண்டிருந்தவன், "ஓ..! உனக்கு இது பிடிச்சிருக்கா டி? நீ ஆசப்பட்டது உனக்கு மட்டும் தான் வது..!" என்ற முணுமுணுப்புடன் வேகமாக எழுந்து பில்லிங் கெக்சனில் இருந்த பெண்ணிடம் ஏதோ பேசிவிட்டு, மகேன் எங்கே நிற்கிறான் என்பதை அறிய அந்த இடத்தை சுற்றிப் பார்ப்பதைப் போல் கவனித்தான்...

அவனை அங்கு காணாமல் போகவே நிம்மதி பெருமூச்சுடன் அவளுக்குப் பின்னால் விரைந்தவனுக்கும் தங்களின் முன்ஜென்ம நினைவுகள் முழுமையாக வந்திருக்கவில்லை தான்...

ஆனால் இதுவரை கனவில் கண்ட காட்சிகளை வைத்து மதிவதனி தன்னுடையவள் என்பதை அவனால் உணர முடிந்தது..!

ஒருவேளை அப்போது இவளை சேர முடியாமல் போனதோ? அல்லது சேர்ந்தும் வாழ முடியாமல் போனதோ? எதுவாக இருந்தாலும் இப்போது அவளை இழக்க அவன் தயாராக இல்லை..!

தீரன் வதனியைத் தேடி அங்கு வருவதற்கு முன்பே உடைமாற்றும் அறைக்குள் நுழைந்தவள், தான் கட்டியிருந்த புடவையை அவிழ்த்துவிட்டு கையிலிருந்த புடவையைக் கட்டத் தொடங்கியிருந்தாள்..!

அப்போது அவள் சற்றும் எதிர்பாராத விதமாய் பட்டென்று கதவைத் திறந்து உள்ளே வந்தவனைக் கண்டு அதிர்ந்து சத்தம் போடுவதற்குள் அவள் இதழில் கைவைத்து மூடியவன்,

"உஷ்..! இப்போ நீ சத்தம் போட்டீனா லிப் கிஸ் பண்ணிடுவேன் டி..! அப்புறம் உன் இஷ்டம்..!" என்று அதிரடியாக உரைத்துவிட்டு அவள் விழிகளில் வந்துபோன உணர்வுகளைப் படிக்க முயன்றான்...

அங்கிருந்த பணிப்பெண்ணிடம் என்ன சொல்லி அழைத்து வந்தானோ? அந்த பெண் கதவைத் தட்டி அவளுக்கு எதுவும் உதவி தேவையா எனக் கேட்டது மட்டும் தான் அவளின் ஞாபகத்தில் இருந்தது..! அதன் பின்னர் நடந்தது எல்லாம் தீரனின் காதல் இம்சையே..!

கடவுளை நேரில் கண்டால் கூட இத்தனை அதிர்ச்சி அடைந்திருக்க மாட்டாள் போல..!

அந்தளவில் அவளது முனீஸ்வரனின் அதிரடியும் அத்துமீறலும் அவளை பனிச்சிற்பமாய் உறைய வைத்தது..!

முத்தம் தருவானாமே..! அதுவும் இதழ் முத்தம்..! என்ன ஒரு திண்ணக்கம் இருக்க வேண்டும்..!

மூக்கின் நுனியில் கோபம் வந்தாலும் எங்கே அவன் சொன்னதை செய்துவிடுவானோ என்ற‌ பயத்தில் வாயடைத்துப் போனவள் தன்னை ஒருவாறாக திடப்படுத்தி, "சார்..! நீ..நீங்க இப்..இப்படி?" என்று திக்கியவளுக்கு வார்த்தை வருவேனா என்று அடம்பிடித்தது...

தனக்கு முன்னால் ஒழுங்காக மடிப்பெடுத்துக் கட்டியிராத புடவையில் உடல்நடுங்க நின்றிருந்தவளின் மதிமுகத்தை அங்குலம் அங்குலமாக அளந்தது தீரனின் விழிகள்..!

அதில் அதிர்ச்சி, கோபம், இயலாமை என்று பலவகையான உணர்வுகளின் குவியல்..!

அவளிடம் அடாவடியாக நடந்து கொள்கிறோம் என்பது அவனுக்கே புரிந்து தான் இருந்தது...

ஆனால் அவனிடம் வேறு வழியும் இல்லையே...! அவர்கள் நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்திவிட்டால் பின்பு தன் தந்தையிடம் பேசி மதியை மணப்பது எளிதாக இருக்குமென நினைத்தான் அவன்...

தன் வார்த்தை ஜாலத்தால் அவரை ஒப்புக்கொள்ள வைப்பதெல்லாம் அவனுக்கு கைவந்த கலை..!

அவளில் நிலைத்து விட்ட பார்வையுடன் தனக்குள் ஏதோ யோசனையில் ஆழ்ந்தவனை, "சா..சார்..!" என்ற அவளின் தீனமான குரல் தட்டி எழுப்பியதில் நிகழ்காலத்திற்கு வந்தவன்,

"ஓ..! அ..அது உன் அழகப் பார்த்த சந்தோஷத்துல நான் எதுக்கு உள்ள வந்தேன்றதயே மறந்துட்டேன் பாரேன்..! உனக்கும் மகேனுக்கும் என்கேஜ்மென்ட் நடக்காது டி... நடக்கவும் நான் விடமாட்டேன்..! நீ இந்த தீரனுக்கு சொந்தமானவ வது..!" என்றான் மென்மையும் காதலும் பொங்கும் குரலில்...

வழக்கமாக பெண்களைக் கண்டால் தகுதி தராதரம் என்று இறுமாப்புடன் சிந்திக்கும் அவனின் அறிவு வேலைநிறுத்தம் செய்திருந்தது போலும்..!

அதிலும் அவள் சரியாகக் கட்டாமல் விட்டிருந்த புடவையின் ஊடாக அவளின் கொடியிடையில் தெரிந்த ஒரு மச்சம் அவனை எங்கெங்கோ அழைத்து செல்ல முயன்றதில் தலையை உலுக்கிக் கொண்டான்...

அதுவரையில் அவன் எதற்காக உள்ளே நுழைந்தான் என்பது புரியாமல் நின்றிருந்த மதிவதனியை அவனின் இந்த காதல்பேச்சு மொழி மறந்தவளாக மாற்றியிருந்தது..!

அவனிடம் எதனை எதிர்பார்த்து இருந்தாலும் இந்த மாதிரியான மென்மையான பேச்சை எதிர்பார்க்கவே இல்லை..!

பின்னே கடுவன்பூனையிடம் காதலை எதிர்ப்பார்க்க முடியுமா?

நம்ப இயலாத அதிர்ச்சியில் இதயம் துடித்தாலும் அவனுக்கு மறுப்பாகத் தலையைசைத்து, "இல்ல சார்..! என்னால உங்கள நம்ப முடியல..! அதோட இது என் அப்பாவோட முடிவு... நீங்க வேற ஏதோ குழப்பத்துல இந்த மாதிரி பேசுறீங்கனு நினைக்கிறேன்.. நீங்க இப்படி உள்ள வந்தது ரொம்ப தப்பு... தயவுசெஞ்சு வெளிய போங்க.." என்றபடி கதவை நோக்கி கைக்காட்டினாள்...

என்ன தான் தைரியமாக காட்டிக் கொண்டாலும் அவன் அத்துமீறி உள்ளே நுழைந்ததோடு அவனது விழிகளின் பளபளப்பில் அவளுக்கு கைகால் உதறல் எடுத்தன..!

ஆனால் மதியின் மறுப்பைக் கணக்கில் கொள்ளாமல் நீட்டியிருந்த அவளின் கரம் பற்றி தன்னருகே இழுத்தவன், "நான் நல்லா தெளிவா தான் இருக்கேன் வது... உனக்கு இந்த ஜென்மத்தில கல்யாணம்னு ஒன்னு நடந்தா அது என்னோட மட்டும் தான் டி நடக்கணும்..! நடக்கும்..!" என்றுச் செல்லமாக மிரட்டியதில் மேலும் வட்டமாக விரிந்த விழிகளுடன் அப்படியே நின்றுவிட்டாள் அவள்...

அதிலும் வது என்ற அவனின் அழைப்பு, வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவிடாமல் தடைபோட்டது..!

அவன் இழுத்த வேகத்தில் முந்தானை சரிந்து அவனுக்கு முன்னால் அரைகுறையாக நிற்பதைக் கூட உணராமல் நின்றவளின் தாடையைப் பற்றி இழுத்து கன்னத்தில் மீசைமுடி உரச அழுத்தமாக முத்தம் வைத்தவன், "இப்போதைக்கு இது போதும் வதும்மா..! மிச்சத்த நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் பார்த்துக்குறேன்.." என்றதோடு அவளின் பேரழகை கூர்விழிகளால் அளந்தபடியே வெளியேறியிருந்தான்...

அவன் சென்று சில நிமிடங்களில் தன் சுயம் அடைந்தவளுக்கு அவனின் பேச்சும் முத்தமும் நம்ப முடியாத அதிர்ச்சியோடு ஆத்திரத்தையும் தந்ததில் வீட்டிற்கு சென்றதும் தந்தையிடம் இங்கு நடந்ததைப்பற்றி சொல்லி ராமச்சந்திரன் மாமாவிடம் பேச சொல்ல வேண்டுமென உறுதியாக எண்ணிக்கொண்டாள்...

அவள் நினைத்திருந்தால் அவன் உள்ளே நுழைந்தபோதே கத்தி அவனைக் காட்டிக்கொடுத்திருக்கலாம்..! அதை செய்யவிடாமல் எது அவளைத் தடுத்ததோ?

அதன் பின்னர் அங்கு நடந்தததைப் பற்றி கேட்டால் அவளால் சரியாக சொல்லியிருக்க முடியாது..! அந்த அளவில் தீரன் அவளின் மதியை ஆக்கிரமித்து வண்டாக குடைந்தான்..!

இவள் தான் இப்படியென்றால் அழைப்பைப் பேசிவிட்டு உள்ளே நுழைந்த மகேனின் முகமும் அவ்வளாக சரியில்லை...

இருவரையும் கவனித்த தீரனின் உள்ளம் மகிழ்ச்சியில் துள்ளியது..!

மதிக்காக மகேன் தேர்ந்தெடுத்த புடவையோடு அவன் தேர்ந்தெடுத்த ஆரஞ்சுநிற பட்டுப்புடவைக்கும் அவனே பணம் கட்டினான்... அதுவும் அவன் செய்த தில்லுமுல்லு வேலை தான்..!

அதை உணரும் நிலையில் அவர்கள் இல்லாமல் போகவே அவனின் வேலை எளிதாகிப்போனது...

பட்டு மாளிகையில் இருந்து வெளியே வந்ததும் அவனை நெருங்கிய மகேன், "தீரா..! ஐ நீட் எ ஹெல்ப்டா... இப்போ எனக்கு அவசரமா அம்மாவப் பார்க்கப் போகணும்... நீ போற வழியில மதியோட வீட்ல அவள விட முடியுமா?" என்றான்...

அவனே எப்போதடா வாய்ப்புக் கிடைக்கும் என்று அலைந்தவன்‌‌... இப்படி ஒரு நல்வாய்ப்பை தவற விடுவானா?

மனதின் பூரிப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "ஓ..! வித் ப்ளஷர்டா மச்சான்.." என்றபடி தன் பிஎம்டபிள்யூவின் முன்கதவைத் திறந்ததோடு ஏறும்படி அவளுக்கு கண்ஜாடைக் காட்டினான்...

ஏற்கனவே கடையினுள் அவன் நடந்துகொண்ட முறையில் கடும் கோபத்தில் இருந்தவளுக்கு அவனோடு காரில் செல்வதில் விருப்பமில்லை...

மகேனிடம் மறுப்பு சொல்வதற்குள் அவன் அவ்விடத்தை விட்டுச் சென்றிருக்க, அலைபேசியில் டேக்சி புக் செய்யும் செயலியை ஆராய்ந்தாள்...

தீரனுக்கும் நண்பனின் நடவடிக்கையில் குழப்பமே மிஞ்சியது..!

ஆனால் அதைவிட தன்னவளுடன் தனிமையில் பேசுவதற்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துவதே முதன்மையாகத் தெரிய அவள் அமர்வதற்காகக் காத்திருந்தான்...

"ப..பரவால சார்... நான் கேப் புக் பண்ணிப் போயிக்குவேன்.." என்றவளின் மறுப்பில் சினம் எழ தன் கரத்தில் இருந்த கடைப்பையை பின்னிருக்கையில் வைத்துவிட்டு காரில் சாய்ந்து நின்றவன்,

"என்னைய நல்லவனாவே இருக்க விடக்கூடாதுனு முடிவுல இருக்கியா டி? நீயா ஏறி உட்கார்ந்தா உனக்கு நல்லது..! இல்ல என் கையால உன்னத் தொட்டு உட்கார வைக்கிறதா இருந்தாலும் எனக்கு ரொம்ப சந்தோஷம்... என்ன செய்யட்டுமா வதும்மா..!" என்றதில் சற்று மிரண்டு,

"இ..இல்ல நானே வர்றேன்.." என்று ஏறி அமர்ந்திருந்தாள்...

அவளுக்கும் இதை இத்துடன் பேசி முடித்தால் நல்லதென்று தோன்றியது..!

அவனும் ஏறியமர்ந்து காரை இயக்கியவுடன் பேசலாம் என்று திரும்பியவள் அவன் முகம் காட்டிய இறுக்கத்தில் தயங்கினாள்...

போக்குவரத்து நெரிசலைக் கடந்து ஆள் அரவமற்ற ஒரு சாலையில் காரை நிறுத்திவிட்டு அவள் புறமாகத் திரும்பியவன், "வெல்..! ரொம்ப நேரமா எதையோ சொல்லணும்னு யோசிச்சுட்டு வந்தீல, அத இப்போ சொல்லு வதும்மா..! ஆனா நான் சொன்னது மட்டும் மாறாது அத மனசுல வச்சுக்கிட்டு என்ன வேணும்னாலும் சொல்லு.." இப்படி பேசியவனை வித்தியாசமாகப் பார்த்து,

"சார்.. அதுக்கு முன்னாடி இந்த வ..வது, டி சொல்ற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காதீங்க... என்னமோ நீங்களா ஏதோதோ பேசிட்டு இருந்தா என்ன அர்த்தம்?" படபடவென பொரிந்தவள் சற்று நிதானித்து,

"திடீர்னு உங்களுக்கு என்னாச்சுனு எனக்கு புரியல... இந்த கல்யாணம் எங்கப்பா பேசுனது சார்... அத என்னால மாத்த முடியாது... அதே மாதிரி அங்க கடைல நட..நடந்தத அத்த மாமாக்காக நான் மறந்துடுறேன்... நீங்களும் அத மறந்துடுங்க ப்ளீஸ்.." என்றாள் அவன் பார்வையில் குறுகுறுத்த கன்னத்தைத் தேய்க்க முயன்ற கரத்தை அடக்கியபடி...

'க்ஹூம் எனக்கும் தான் டி புரியல..! உன்னப் பார்த்தாலே இப்படி உருகி வழிவேன்னு கொஞ்ச நாளுக்கு முன்னாடி யாராவது சொல்லியிருந்தா செருப்பால அடிச்சு விரட்டி விட்ருப்பேன்... என்ன பண்றது? என்னைக்கு உன் கையப் புடிச்சேனோ அன்னைல இருந்து நான் நானாவே இல்லையே..!' மனதின் புலம்பை வெளிக்காட்டாமல்,

"இங்கப்பாரு டி..! என்னால உனக்கு இப்போ எந்த விளக்கமும் தர முடியாது.. ஏன்னா எனக்கும் ஒன்னும் சரியா புரியல.. ஆனா உன்னோட முகத்த ஜென்ம ஜென்மமா பார்த்துருக்கேன் வதும்மா..! அப்புறம் என் பொண்டாட்டியாகப் போற உன்ன டி சொல்லாம வேற எப்படி சொல்ல முடியும்?" என்றான் தன் புருவங்களை உயர்த்தி...

அதிலும் அந்த 'டி' என்ற வார்த்தையை அனுபவித்து சொன்னவனின் முகத்தில் தான் எத்தனை பரவசம்..!

இத்தனை நாட்களாக தன்னைக் கண்டாலே இளக்காரமாகப் பார்க்கும் ஒருவன் இப்படி பேசுவதை அவளால் நம்பவே முடியவில்லை...

"ஏன் சார்..! எதுவும் ஆன்ட்டி ஹீரோ கதைப் படிச்சீங்களா? அதுல தான் பிடிக்காதப் பொண்ண கல்யாணம் பண்ணி பழிவாங்குவாங்க... நீங்களும் அது மாதிரி ஐடியால இருக்கீங்களா?.." என்று அவன் நிலைமை புரியாமல் நக்கலடிக்க,

"ஏய்..!" என்று சீறியவன், "உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா டி? என்னையப் பார்த்தா பழிவாங்குறவன் மாதிரியா இருக்கு? இப்போ என்னால முழுசா எதையும் சொல்ல முடியாது தான்... அதுக்காக நீ சொல்ற மாதிரி ஒரு மண்ணும் கிடையாது வது... நான் சொல்றத நம்புனாலும் சரி, இல்லைனாலும் சரி‌‌... நம்ம ரெண்டு பேருக்கும் தான் கல்யாணம் நடக்கும்..." என்றான் உறுதியாக‌..

அதற்கு மேல் அவன் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று பிடிவாதம் பிடிப்பவனோடு பேசுவது வீண் நேர விரயம் என்பதைப் புரிந்துகொண்ட மதிவதனி அமைதியை தத்தெடுத்துக் கொண்டாள்..!

அவளின் வீட்டிற்கு முன்பாக கார் நின்றதும் வேகமாக இறங்க முயன்றவளின் கரம் பற்றித் தடுத்து, "நான் முன்னாடி பேசுன எல்லாத்தையும் மன்னிச்சு மறந்துடு வதும்மா..! இப்போ இருக்க இந்த தீரன் உனக்காக என்ன வேணும்னாலும் செய்வான்..! அத மட்டும் மனசுல வச்சுக்க... சீக்கிரமே நம்ம கல்யாணத்துல சந்திப்போம்.. அப்புறம் இந்த சார் மோர்னு சொல்றத விட்டுட்டு ஒழுங்கா பேர் சொல்லிக் கூப்பிடு..." என்று கண்ணடித்து சிரிக்க,

"ஹாஹா..! நம்ம கல்யாணமா? அது உங்க கனவுல தான் நடக்கும்..." என்று பதிலுக்கு சிரித்துவிட்டு இறங்கியவள் பின்னிருக்கையில் இருந்த பையை எடுத்துக்கொண்டு அவனை முறைத்தபடி விலகி நடந்தாள்...


ஆனால் நிறைந்த சபையில் அவள் கூனிக்குறுகி நிற்கும்போது அவனின் கைத்தாலியே அவளை வேலியாகக் காக்கும் என்பதை அறியாது போனாள் பேதை அவள்..!


தொடரும்......
 
Last edited by a moderator:
💃💃💃💃💃ஹே அப்ப தீரன் தான் மதி ஓட மகேந்திரன்🤩🤩🤩🤩🤩

அப்பாடா இப்ப தான் நிம்மதியா இருக்கு.....

ஆன ஏன் மதிக்கு என்ன ஆகும்
எல்லாம் மகேன் போடுற ப்ளான் தான் சிஸ்😍😍😍
 
Top Bottom