மரகத மாமன் - அத்தியாயம் 2
கோவிலில் சாமி தரிசனம் முடிந்ததும் அர்ச்சகர் மாலையை கதிர்மாறனின் கழுத்தில் அணிவித்துக் கோவிலைச் சுற்றி வலம் வருமாறு உரைத்து விட்டுச் சென்றார்.
இதனை அருகே நின்று பார்த்திருந்த மணிவாசகமோ, 'அப்ப கல்யாணப் பரிகாரம் இந்தப் பொட்டப் பிள்ளைக்கு இல்லயா? தம்பிக்குத் தான் இன்னும் கல்யாணம் ஆவலையா? ஆனா இந்தப் பொண்ணு கழுத்துல தாலி எதுவும் காண்கலையே! கல்யாணமான அடையாளம் எதுவும் புலப்படலையே' எனச் சிந்தித்தவன்,
அண்ணனும் தங்கையும் கோவிலைச் சுற்றி வலம் வரச் செல்லவும், அவர்கள் பின்னேயே சென்றான்.
கோவிலின் பின்னே வலது புறமாகச் செல்லும் போதே சுகந்தமான மணம் மூக்கைத் துளைக்க, "மாறா செம்ம வாசனையா இருக்குலடா! எங்கிருந்து வருதுனு தெரியலையே" என்று சத்தமாய் உரைத்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள் மரகதம்.
"தாயி அந்த வாசனை இங்கன இருந்து தான் வருது" என்றவனாய் அக்கோவிலின் தல விருட்சத்தின் அருகே சென்று நின்றான் மணிவாசகம்.
அம்மரத்தினருகே சென்று கண்களை மூடி மூச்சை உள்ளிழுத்து ஆழ்ந்து வாசனையை நுகர்ந்து வியந்தவளாய், "ஆமா இந்த மரத்துலருந்து தான் வருது. என்ன மரம் இது?" என ஆச்சரியக் குரலில் கேட்டாள்.
"ஒத்த மரத்துக்கே இப்படிச் சொல்றியலே! ஒரு காலத்துல இந்த ஊரு முழுக்கக் காடு மாதிரி இந்த மரம் தான் நிறைஞ்சி கிடந்துச்சாம். இத்தோட வாசம் எட்டூருக்கு மணக்கும்னு எங்க ஆச்சி சொல்லிக் கேட்டிருக்கேன்" என்று அவன் பேசிக் கொண்டே போக,
அவனின் இடைவிடாத பேச்சில் இடுப்பில் கை வைத்தவாறு ஆயாசத்துடன் அவனைப் பார்த்தவளாய், "நீங்க இன்னும் மரத்தோட பேரைச் சொல்லலை" என்றாள்.
அவளது பார்வையின் பொருளை உணர்ந்து வாய்க்குள் சிரித்திருந்தான் கதிர்மாறன்.
"என்ன தாயி, இம்பிட்டுச் சொல்லிருக்கேன் இன்னுமா மரத்தோட பேரைக் கண்டுபிடிக்கலை!" என்றவன்,
"இந்த ஊரு பேரு என்ன தாயி?" எனக் கேட்டான்.
"நான் கேள்வி கேட்டா என்கிட்டயே திரும்பக் கேள்வி கேட்குறீங்களே? இந்த ஊருல எல்லாரும் இப்படித் தானா?" என்று கடுப்புடன் கேட்டாள்.
"ஊர்க்காரவியலுக்குப் பேசச் சொல்லித் தரனுமா தாயி? அம்பிட்டு பேரும் இப்படித் தான் பேசுவாவ! உங்க அம்மா அதான் எங்க அன்னிக்கிளியக்கா கூட இப்படித் தான் பேசும்" என்று பதிலிறுத்துச் சிரித்தான் மணிவாசகம்.
தாயின் நினைவில் கனிவுடன் அவனைப் பார்த்தான் கதிர்மாறன்.
சிரித்தவாறே கதிர்மாறனைப் பார்த்த மணிவாசகம், "ஏன் என்னிய அப்படிப் பார்க்கிறிய தம்பி?" எனக் கேட்டான்.
"எங்கம்மாவும் எங்களைத் தம்பி தாயினு தான் கூப்பிடுவாங்க. நீங்க பேசப் பேச அம்மா பேசுற மாதிரியே இருக்கேனு நினைச்சேன். நீங்களும் அப்படியே சொல்றீங்க" என்றான் கதிர்மாறன்.
"ஓஹோ இப்ப புரிஞ்சிப் போச்சு. இந்த மரத்துக்குக் கீழே நின்னாலே அதோட வாசத்துல மனசு கிறங்கிப் போய் அமைதியாகிடும். ஆனா நம்ம தாயி கடுப்பா பேசுறாவலேனு யோசிச்சேன். அவிய அம்மாவோட நெனைப்பு வந்தனால தான் இப்படி எங்கிட்ட எரிஞ்சி விழுறாவனு இப்ப தானே புரியுது" என்றான் மணிவாசகம்.
தாயின் நினைவில் சட்டெனக் கண்களில் நீர் துளிர்த்து விட்டது மரகதத்துக்கு. ஆயினும் அதனை மறைத்து அவனை முறைத்தவளாய், "மைண்ட் யுவர் பிசினஸ்! எங்களைப் பத்தி நீங்க ஒன்னும் ஆராய்ச்சி செய்யத் தேவையில்ல" என்று வெடுக்கென உரைத்தவளாய் அங்கிருந்து நகரப் போனாள்.
"தாயி இந்த மரத்தோட பேரைக் கேட்காமலே போறியலே" என்று அவளை நிறுத்தினான் மணிவாசகம்.
நீண்ட பெருமூச்சை இழுத்து அம்மரத்தின் வாசத்தை உள்ளிழுத்தவளின் மனம் சற்று சமன்பட்டு அமைதியாக, "சரி சொல்லுங்க. இந்த மரத்தோட பேருக்கும் ஊருப் பேருக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டாள்.
"நீங்க இந்த ஊரு பேரை இன்னும் சொல்லலையே" என்று அதிலேயே அவன் நிற்க,
'சரியான இம்சை அரசன்' என மனத்திற்குள் அவனைக் கடிந்தவளாய், பல்லைக் கடித்தவாறு,
"மகிழங்காடு" என்றாள்.
"ஹ்ம்ம் அதான் இந்த மரத்தோட பேரும் தாயி" என்றவன் முடிப்பதற்குள்,
மரத்தின் பெயரை மூளைக்குள் ஆராய்ந்து கொண்டிருந்த கதிர்மாறன், "மகிழமரம்" என்றான்.
"நான் இந்தப் பேரை முன்னாடி கேள்விப்பட்டதே இல்ல மாறா! உனக்கெப்படித் தெரியும்?" எனக் கேட்டவாறு அந்த மரத்தை தனது கைகளால் சுற்றி வளைத்து நிமிர்ந்து கிளைகளைப் பார்த்தாள்.
"படிச்சிருக்கேன் அப்பு" என்றான் கதிர்மாறன்.
"தாயிய நீங்க அப்புனு தான் கூப்பிடுவியலா?" என்று மணிவாசகம் கேட்க,
'என்னை என் அண்ணன் எப்டிக் கூப்பிட்டா இவருக்கு என்ன?' என்று எண்ணியவளாய் அவனை முறைத்தாள் மரகதம்.
தங்களுடைய பேச்சிற்குள் இடைபுகுந்து மணிவாசகம் இவ்வாறு பேசுவது எரிச்சலை அளித்தது அவளுக்கு.
ஆனால் கதிர்மாறனோ ஊர்க்காரர்களின் வெள்ளந்தி மனப்பான்மையாய் இதனை எடுத்துக் கொண்டு அவனுக்குப் பதிலிறுத்தான்.
"நான் மட்டும் இல்ல வீட்டுல எல்லாருமே அவளை அப்படித் தான் கூப்பிடுவோம்" என்றான் கதிர்மாறன்.
"மாறா ஒரு மரத்துலேயே இவ்ளோ வாசனை வருதே! காடு மாதிரி இந்த மரம் நிறைஞ்சி இருந்திருக்கும் போது ஊரே வாசனையா இருந்திருக்கும்ல" எனக் கேட்டாள் மரகதம்.
ஆமெனக் கதிர்மாறன் தலையசைக்க,
"ஆமா பாம்புக்கு இந்த வாசனை ரொம்பப் பிடிக்குமாம் அதனால இந்த மகிழங்காட்டுக்குள்ள நிறையப் பாம்புகளும் இருந்துச்சாம் தாயி" என்று மணிவாசகம் கூறவும்,
"என்னது பாம்பா?" என்று பயத்தில் விருட்டென மரத்தைப் பற்றியிருந்த தனது கரங்களை விலக்கி நகர்ந்து கதரிமாறனின் கரத்தைப் பற்றியவளாய், "வா மாறா போவோம்!" என்று படபடத்தாள்.
ஏதேனும் பாம்பு திடீரென வந்து விடுமோ என்று அச்சம் கொண்டாள்.
அவளின் செயலில் சிரித்தவனாய், "அப்ப தானே இருந்துச்சுனு சொல்றாரு! இப்ப ஏன் பயப்படுற" என்றான் கதிர்மாறன்.
"பாம்புனா படையே நடுக்கும் தம்பி. நம்ம தாயி எம்மாத்திரம்" என்ற மணிவாசகம்,
"அன்னக்கிளியக்கா எம்பிட்டு தைரியசாலி தெரியுமா? பாம்பு இருக்கிற திசைல துணிச்சலா நடந்து போவாவ! அவிய பெத்த மவ நீரு இப்பிடி பயந்தாங்கொளியா இருக்கியலே" என்று சிரித்தான்.
அவனின் கேலியில் கோபமுற்றவளாய் கதிர்மாறனின் கரத்தினை விட்டவள், "ஹலோ நான் ஒன்னும் பயந்தாங்கொளி இல்ல" என்று அவனை முறைத்தாள்.
"உங்க வாயி தான் பயப்படலைனு சொல்லுது ஆனா உங்க உடம்பு வெடவெடத்துப் போச்சே தாயி. இதுக்குத் தான் நல்லா திங்கனும்னு சொல்றது. இப்படி எலும்பு கூடா இருந்தியல்னா லேசா ஒன்னுனாலும் உடம்பு தாங்காது தாயி" அவளின் மீது அக்கறையில் தான் அவன் உரைத்தான் ஆனால் அவன் தன்னைக் கிண்டல் செய்வதாக அவளுக்குத் தோன்ற,
"வாட்? எலும்பு கூடா? யாரைப் பார்த்து எலும்பு கூடுனு சொன்னீங்க? மைண்ட் யுவர் வர்ட்ஸ்" என்று கத்தியவளாய்,
"வா மாறா போகலாம்" முகத்தைத் திருப்பிக் கொண்டு முன்னே சென்றாள்.
அவளின் கோபமான பேச்சில் முகம் சுருங்கிப் போக, கதிர்மாறனின் அருகே வந்த மணிவாசகம், "நான் அவிய நல்லதுக்குத் தானே சொன்னேன். ஏன் தாயி கோவிக்கிறாவ" எனத் தணிவான குரலில் கேட்டான்.
"இப்படி ஒல்லியா இருக்கிறதுக்காக அவ எவ்ளோ டயட் இருக்கா தெரியுமா? ஒரே வார்த்தைல எலும்பு கூடுனு அவளோட ஜீரோ சைஸ்ஸை சொல்லிட்டீங்களேனு கடுப்புல கத்திட்டுப் போறா" என்று சிரித்தான் கதிர்மாறன்.
இருவருமாகப் பேசியவாறே கோவிலைச் சுற்றி வலம் வந்தனர்.
"உங்களுக்கு எதுவும் கோவமில்லையே தம்பி. நான் கேலியா எதுவும் சொல்லலை" என்று மணிவாசகம் தயக்கத்துடன் சொல்ல,
"நீங்க தவறான அர்த்தத்துல சொல்லலைனு தெரியும் மணி" என்ற கதிர்மாறன்,
"நான் உங்களை மணினு கூப்பிடலாம் தானே! விசிடிங் கார்ட்ல மணிவாசகம்னு பேரு பார்த்தேன்" என்றான்.
"நான் உங்களுக்குச் சொக்காரன் தான் தம்பி. உங்களுக்கு நான் மாமன் முறை வருவேன். என்னிய நீங்க மாமானே கூப்பிடலாம்" என்றான் மணிவாசகம்.
"அப்படியா?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.
"ஆமா தம்பி. உங்களோட பாட்டியோட உடன்பிறந்தா வயிரா சொக்காரன் நாங்க" என்றவன் விளக்கம் கொடுக்கவும், புரியாது விழித்தான் கதிர்மாறன்.
"நீங்க சொல்றது எதுவும் எனக்குப் புரியலைங்க. எங்களுக்கு அப்பா அம்மாவையும் அவங்களோட பிறந்தவங்களை மட்டும் தான் தெரியும். நீங்க என்னென்னமோ சொந்தம்லாம் சொல்றீங்க. எதுவும் எனக்குப் புரியலை. ஆனாலும் தூரத்துச் சொந்தம்னாலும் மாமானு ஒரு சொந்தம் எங்களுக்கு இந்த ஊருல இருக்குனு தெரிஞ்சதுல சந்தோஷம் தான் மணி மாமா" என்றான் கதிர்மாறன்.
அவனின் மாமா என்ற விளிப்பில் மணிவாசகத்தின் முகத்தில் அத்தனை மகிழ்வு.
"என்னை மாமான்னு கூப்பிட்டியல்ல இனி உங்களுக்குத் தாய்மாமனா இருந்து என்ன உதவி வேணும்னாலும் செய்வான் இந்த மாமன்" என்று கதிர்மாறனின் கரம் பற்றியவனாய் வாக்களித்தான் மணிவாசகம்.
பேசியவாறே கோவிலை வலம் வந்தவர்கள் மீண்டுமாய் உள்ளே சென்ற போது அங்கே அமர்ந்திருந்தாள் மரகதம்.
தனது கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி அவளிடம் கொடுத்த கதிர்மாறன், "மாமா எனக்கு ஒரு உதவி வேணும்" என்று மணிவாசகத்திடம் உரைத்ததைக் கேட்டு, 'என்னது மாமாவா?' என்று அதிர்ந்து விழித்த மரகதம்,
"அடேய் சென்னைல தான் பழகுற பசங்களைலாம் மாமா மச்சினு கூப்பிடுறனா இங்கேயும் அதை விடலையா நீ? இந்தாளைப் போய் என்னத்துக்கு மாமானு கூப்பிட்டுட்டு இருக்க?" என்று முறைத்தாள்.
"அடியேய் அப்பு! இது நீ நினைக்கிற மாதிரி ஃப்ரண்ட்ஸ்ஸை கூப்பிடுற மாமா இல்லை. நிஜமாவே இவரு நமக்குச் சொந்தத்துல மாமா முறை வருவாராம்" என்று சிரித்தவாறு உரைத்தான் கதிர்மாறன்.
"அவர் சொன்னா நீ நம்பிடுவியா?" என்று இவள் எகிறிக் கொண்டு வர,
"தாயி உம்ம பாட்டியோட உடன்பிறந்தா வயிரா பிள்ளைய நாங்க உங்களுக்குச் சொக்காரவியலா தான் வருவோம்" என்று அவன் சொன்னது புரியாது விழித்தாள் மரகதம்.
அவளின் பாவனையில் சிரித்த கதிர்மாறன், "இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்குனு சொன்னியே! இவர் நம்ம அம்மாவை பெத்த அம்மா சாயல்ல இருக்காரு அப்பு" என்றவனாய் தன்னுடைய கைப்பேசியில் இருந்த அம்மாவின் அம்மா புகைப்படத்தை எடுத்துக் காண்பித்தான்.
"நீங்க உங்க ஆச்சியைப் பார்த்ததில்லனு சொன்னியலே" மணிவாசகம் கேட்க,
"ஆமா நேர்ல பார்த்ததில்ல ஆனா வீட்டுல பூஜையறைல படமா பார்த்திருக்கோம். தினமும் இவங்களைத் தான் கும்பிடுவோம்" என்றவனாய் அந்தப் படத்தை அவரிடம் காண்பித்தான்.
அந்நேரம் மணிவாசகத்தின் கைப்பேசி அலறவும், அதை எடுத்துப் பார்த்தவன், "பார்த்தியலா உங்ககிட்ட பேசுனதுல என் யாவாரத்தை மறந்தே போய்ட்டேன்" என்றவாறு கைப்பேசி அழைப்பையேற்று, "ஏலே பாண்டி செத்த நேரம் யாவாரத்தைப் பார்த்துக்கிடுடா. பராக்கு பார்த்துட்டு நிக்காதலே! இந்தா வந்துடுறேன்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தவாறு,
"என்னமோ உதவி வேணும்னு கேட்டியல்லே" என கதிர்மாறனிடம் கேட்டான்.
"இல்ல நீங்க பிசினா உங்க வேலையைப் பார்க்கப் போங்க. நாம அப்புறமா பேசலாம்" என்ற கதிர்மாறனிடம்,
"தம்பி உங்களுக்குத் தாய்மாமனா இருப்பேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன். உசுரு இருக்கிற வரைக்கும் கொடுத்த வாக்கைக் காப்பாத்துவேன்" என்றான்.
'இது வேறையா' என்பது போல் மரகதம் இருவரையும் பார்த்திருக்க,
'நாம உதவி செஞ்சவங்ககிட்ட போய் உதவினு கேட்டாலே செய்யாத காலத்துல இவரு என்ன வாக்கைக் காப்பாத்துவேன்னு சொல்றாரு. இந்தக் காலத்துல இப்படியும் அபூர்வ மனுசனா?' என்று நினைத்தவனாய்,
தனது கைப்பேசியில் ஒரு முகவரியை எடுத்து அவனிடம் காண்பித்து, "இந்தக் குடும்பம் எப்படி?" எனக் கேட்டான்.
அந்த முகவரியை வாசித்த மணிவாசகத்தின் நெற்றி யோசனையில் சுருங்க, "அந்த வீட்டுக்குப் பொண்ணு பார்க்க போறியலா இல்ல மாப்ளப் பார்க்கப் போறியலா?" என்று கேட்டான்.
அவனின் கேள்வியில் அதிர்ந்து விழித்த கதிர்மாறன், "உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டான்.
"தம்பி நான் பொறந்ததுலருந்து இந்த ஊருக்குள்ளாற தான் இருக்கேன். இப்ப இங்கன இருக்கிறதே மொத்தம் ஐம்பது அறுபது வீடுங்க தான். ஒவ்வொரு வீட்டைப் பத்தியும் எனக்குத் தெரியும் தம்பி" என்றான்.
கதிர்மாறனைப் புரியாத பாவனையில் பார்த்த மரகதம், "என்ன அண்ணா இது? இதைத் தான் மாமா போன்ல, வரும் போது பையனைப் பார்த்துட்டு வானு சொன்னாங்களா?" எனக் கேட்டாள்.
"ஆமாடா அப்பு. மாமாக்குத் தெரிஞ்ச குடும்பம்னு சொன்னாங்க" என்றவன் அந்த மாப்பிள்ளையின் படத்தை மணிவாசகத்திடம் காண்பித்து,
"இந்தப் பையனைத் தான் பார்க்கப் போறோம்" என்றான்.
அப்படத்தைப் பார்த்ததும் மணிவாசகத்தின் முகம் சுருங்கிப் போக, யோசனையுடன் அவன் நின்றிருந்த நேரம், அந்தப் படத்தைப் பார்த்த மரகதம்,
"ஆளு போட்டோல பார்க்க நல்லா தான் இருக்காரு. நானும் வரேன்ணா. ரெண்டு பேரும் போய்ப் மாப்ளையைப் பார்ப்போம்" என்றாள்.
"ஹே எந்த ஊருலயாவது பொண்ணு போய்ப் பையனைப் பார்க்குமா? உன்னை ரூம்ல விட்டுட்டு, நான் போய்ப் பார்த்துட்டு வரேன். எல்லாம் ஓகே ஆன பிறகு பையனை உன்னைப் பார்க்க வரச் சொல்றேன்" என்றான்.
"தாயி சொல்றது சரி தான் தம்பி. நீங்க கூடக் கூட்டிட்டுப் போங்க" என்று மணிவாசகம் கூறியதைக் கேட்டு வியந்தவனாய்,
"என்ன மாமா சொல்றீங்க? பையனைப் பார்க்க பொண்ணு வந்திருக்குனு ஊருக்குள்ள தெரிஞ்சா எக்குத்தப்பா பேச மாட்டாங்களா? கிராமத்துல இதெல்லாம் சாதாரண விஷயம் கிடையாதே!" என்றான்.
"நிச்சயமா ஊருக்குள்ளாற நம்ம தாயிய பத்தி எடக்கு முடக்கா பேசுவாவ! பொட்டப் புள்ள பையனைக் காண்க வந்திருக்காளேனு பேசுவாவ தான். ஆனா வாழப் போறது நம்ம தாயி தானே. அவிய நேர்ல பார்த்து முடிவு செய்யட்டும் தம்பி" மணிவாசகம் முகத்தில் தென்பட்ட தீவிரத் தன்மையில் குழம்பிய கதிர்மாறன்,
"நீங்க அந்தப் பையன் வீட்டைப் பத்தி எதுவுமே சொல்லலையே" எனக் கேட்டான்.
"நீங்க தான் நேர்லயே பார்க்கப் போறியலே தம்பி! அங்கனயே உங்களுக்குத் தேவையான அம்பிட்டு விஷயத்தையும் தெரிஞ்சிக்கிடுவீங்க" என்ற மணிவாசகம்,
"சரி எனக்கு யாவாரத்துக்கு நேரமாச்சு! நான் வாரேன். மாப்ள வூட்டுக்குப் போயிட்டு வந்துட்டு என்னைக் கூப்பிடுங்க தம்பி. வரேன் தாயி" என்றவனாய் அங்கிருந்து நகர்ந்தான் மணிவாசகம்.
மாப்பிள்ளையைப் பார்க்கப் போகும் ஆர்வத்தில் மரகதம் இருக்க, மணிவாசகத்தின் பேச்சு ஏற்படுத்திய குழப்பத்துடன் நின்றிருந்தான் கதிர்மாறன்.