மரகத மாமன் 3
கோவிலில் இருந்து கிளம்பிய அவர்களின் மகிழுந்து அந்த மாப்பிள்ளை வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
ஏதோ ஆழ்ந்த சிந்தனையுடன் கதிர்மாறன் மகிழுந்தை இயக்கிக் கொண்டிருக்க, மரகதம் குதூகலமான மனத்துடன் பயணித்திருந்தாள்.
"ப்ரோ மொத முறையா மாப்ளை பார்க்க போறோம்னு எக்ஸைட்டடா இருக்கு ப்ரோ. உனக்கு அப்படி எதுவும் இல்லையா? ஏன் இப்படி இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிருக்க?" எனக் கேட்டாள் மரகதம்.
அவளைத் திரும்பிப் பார்த்து முறைத்த கதிர்மாறன், "குரங்கோட தங்கச்சியும் குரங்கா தானே இருக்கனும் குரங்கே" என்றவனாய் அவளின் தலையில் தட்டியவன்,
"ஏற்கனவே அந்த வீட்டுல ஏதோ பிரச்சனை இருக்குதோனு டவுட்ல தான் நானே இருக்கேன். மணி மாமா ரியாக்ஷனே சரியில்ல. இதுல உனக்கு எக்ஸ்ஸைட்டா வேற இருக்கா!" என்று அலுத்துக் கொண்டான்.
"டேய் இது வரைக்கும் என்னை யாராவது பொண்ணு பார்க்க வந்திருக்காங்களா? இல்ல நீ தான் மாப்ளையைப் பார்க்கிறேன்னு போய்ருக்கியா? அப்புறம் கல்யாணத்தைப் பார்த்துக்கலாம்னு சொல்லிச் சொல்லி, வாழ வேண்டிய வயசை எல்லாம் தொலைச்சிட்டோமோனு இப்ப ஃபீல் ஆகுது" என்று பெருமூச்சு விட்டாள் மரகதம்.
ஒரு கையால் மகிழுந்தை ஓட்டியவாறு மறுகையால் அவளின் தலையைக் கோதியவனாய், "அதுக்காகக் கண்டவனுக்கும் உன்னைக் கட்டி வச்சிட்டு நீ கஷ்டப்படுறதை பார்த்துட்டு இருக்க முடியாதுடா அப்பு! பையனையும் அவனோட ஃபேமிலியையும் எனக்குப் பிடிச்சா மட்டும் தான் உனக்குக் கட்டி வைப்பேன்" என்று திடமான குரலில் உரைத்தான்.
"அடப்பாவி அப்ப எனக்கு நூத்துக் கிழவி வயசு ஆகிடும்டா. உனக்காவது தாவணி போட்ட தீபாவளினு ஒரு பொண்ணு போட்டோ கைல இருக்கு. எனக்கு அது கூட இல்லையே!" என்று உதட்டைச் சுழித்தாள்.
"நீ யாரையாவது லவ் பண்ண வேண்டியது தானே! உன்னை யாரு சிங்கிள்லா சுத்தச் சொன்னது" என்று கேட்டான்.
"அடப்போ ப்ரோ! லவ்லாம் சுத்த போரு" என்றவள் கூறிக் கொண்டிருந்த சமயம் அவனின் கைப்பேசி அலறியது.
அவனுடைய மாமா வித்யாதரன் தான் அழைத்திருந்தார்.
அவன் அழைப்பை ஏற்றதும், "கதிரு அந்தப் பையன் வீட்டுல போன் செஞ்சாங்க. நீ எத்தனை மணிக்கு அங்க வருவனு கேட்டாங்க" என்றார்.
"நான் அங்கே தான் போய்ட்டு இருக்கேன் மாமா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல ரீச் ஆகிடுவேன்" என்றவன்,
"மாமா எனக்கொரு சந்தேகம், இந்த ஃபேமிலி சம்பந்தம் உங்களுக்கு எப்டி தெரிய வந்துச்சு?" எனக் கேட்டான்.
"நம்ம ஊரு புரோக்கர் மூலமா தான் தெரிய வந்துச்சு கதிரு" என்றார்.
"அப்ப அந்தக் குடும்பத்தை உங்களுக்கு முன்னாடியே தெரியாதா? உங்களுக்குத் தெரிஞ்ச குடும்பம்னு நினைச்சேன் மாமா" என்றான் கதிர்மாறன்.
"நாங்க தான் ஊரை விட்டு வந்து பல வருஷமாச்சே! இப்ப அந்த ஊருக்குள்ள இருக்க யாரையும் எனக்குத் தெரியாது கதிரு" என்றார்.
"ஓ சரி மாமா நான் நேர்ல பார்த்துட்டு சொல்றேன்" என்றவனாய் இணைப்பைத் துண்டித்தான்.
அந்த வீட்டைக் கண்டடைந்து மகிழுந்தை அங்கே நிறுத்தவும் முதியவர் ஒருவர் அவர்களின் அருகே வந்து, "வாங்க வாங்க! காரை கொஞ்சம் தள்ளி அங்கன நிறுத்துங்க" என்றார்.
"சரிங்க சார்" என்றவனாய் மகிழுந்தை தள்ளி நிறுத்த,
மகிழுந்தில் இருந்து இறங்கினாள் மரகதம்.
அந்த முதியவர் மரகதத்தைச் சுழித்த புருவத்துடன் பார்த்தார்.
இருவரும் வீட்டின் வாசலை நோக்கி வரவும், அந்த முதியவர் இருவரையும் வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.
மரச்சட்டங்களால் ஆன கூரையுடன் பூக்களாலான டைல்ஸ் தரையில் மின்ன பாரம்பரிய முறையில் கட்டப்பட்டிருந்த அந்த வீட்டைச் சுற்றிலும் கண்களைச் சுழற்றியவாறே அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் மரகதம்.
அவளருகில் கதிர்மாறன் அமர்ந்ததும், "ப்ரோ வீடு செம்மயா இருக்கு ப்ரோ" தணிவான குரலில் கண்கள் மின்ன உரைத்தாள்.
"வீடு நல்லா இருக்குனுலாம் உன்னைக் கட்டிக் கொடுக்க முடியாது" என்று சிரிப்புடன் உரைத்தான் கதிர்மாறன்.
"இந்தாங்க தண்ணீ" என்று மலர்ந்த முகத்துடன் முதிய பெண்மணி ஒருவர் அவர்களுக்கு நீரை வழங்கினார்.
இருவரும் தண்ணீரைக் குடித்து விட்டு அவரிடம் வழங்கவும்,
"எங்க மவனுக்குத் தான் பொண்ணு பார்க்குதோம்" என்று தொடங்கினார் அந்த முதியவரான செல்லையா.
"இவ எம் பொஞ்சாதி சுசிலா" என்று தண்ணீர் அளித்த முதிய பெண்மணியை அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
"நீங்க பொண்ணோட அண்ணன் தானே " என்று கதிர்மாறனைப் பார்த்துக் கேட்டார்.
ஆமென அவன் தலையசைக்கவும், "இந்தப் பொண்ணு யாரு? உம்ம பொஞ்சாதியா?" என்றார்.
"அய்யோ இல்ல! இவ என் தங்கச்சி! இவளுக்குத் தான் உங்க பையனைப் பார்க்க வந்திருக்கோம்" என்று பதறியவாறு உரைத்தான் கதிர்மாறன்.
சட்டெனச் செல்லையாவின் முகம் மாறிவிட, அவரின் பார்வை தனது மனைவி சுசிலாவிடம் சென்று விட்டு மரகதத்திடம் வந்து நின்றது.
சுசிலாம்மாவும் அவளைப் பார்த்தவராய் ஒட்ட வைத்த சிரிப்புடன், "புரோக்கர் காமிச்ச போட்டோல பொண்ணு தலைல நீளமா முடி இருந்துச்சே! ஆனா இப்ப கிராப்பு வெட்டி வச்சிருக்கேனு குழம்பிட்டோம்" என்றார்.
"மாப்ள வீட்டுக்காரவிய பொண்ணை அவிய வீட்டுக்குப் போய்க் காண்குறது தானே மொறையாவும். என் வாழ்நாள்ல இப்படிப் பொட்டப்புள்ள பையனை பார்க்க வந்து நான் காண்கலியே" என்ற செல்லையாவின் முகத்தில் அதிருப்தி ஆனாலும் புன்னகை முகமாய் இருந்தார்.
"சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் காபி கொண்டாரேன்" என்று பெருமூச்சுடன் சமையலறைக்குள் நுழைந்தார் சுசீலாம்மா.
சுசீலாம்மாவின் கிராப்பு என்ற வார்த்தையிலேயே கொதித்துப் போயிருந்த மரகதம், 'பையனை பார்க்க பொண்ணு வரலாமா?' என்று செல்லையா கேட்டதில் நெஞ்சம் கோபத்தில் தகிக்க,
"ஏன் சார், நான் கட்டிக்கப் போறவனை நான் வந்து பார்க்கிறதுல என்ன தப்பு? ஏன் பொண்ணுங்க தான் டீ காபிலாம் கொடுத்து ஷோகேஸ் பொம்மை மாதிரி வந்து நிக்கனுமா?" என்று சட்டென்று கேட்டு விட்டாள்.
'என்ன பேச்சு இது?' என்று கதிர்மாறன் அவளை முறைக்க,
'ஆத்தி என்னா பேச்சு பேசுது இந்தப் பொண்ணு' என்று அதிர்ந்து போய் வாயை மூடிக் கொண்டார் செல்லையா.
சமையலறையில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்த அவரின் மகள் செல்வியிடம், "ஏட்டி வீட்டுக்காவுமா இந்தப் பொண்ணு! இதைக் கட்டிக்கிடுறவன் என்ன பாடு படுவானோ! ஆளும் மண்டையும். எனக்கு இந்தப் பொண்ணையே பிடிக்கலை" என்றார்.
"யம்மோ நம்ம தம்பிக்கு என்ன வயசாவுதுனு இப்படிப் பேசிட்டு கெடக்க நீ! அவன் வயசுக்குப் பொண்ணு கிடைக்கிறதே குதிரக் கொம்பா இருக்கு. இதுல வந்திருக்கப் பொண்ண வேணாம்னு விரட்டி விடப் போறியாக்கும்! நீயும் அப்பாவும் வாயைத் தொறக்காம கெடங்க. நான் இந்தச் சம்பந்தத்தைப் பேசி முடிக்கிறேன்" என்ற செல்வி தேநீர் கோப்பைகளைத் தட்டில் வைத்து அடுக்கி எடுத்துக் கொண்டு வெளியே போனாள்.
மூவருமே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தனர் வரவேற்பறையில்.
செல்வி சிரித்த முகமாய் இருவருக்கும் தேநீரை வழங்க, "இல்ல நாங்க டீ குடிக்கிறது இல்ல" என்று மறுத்து விட்டனர் இருவரும்.
அங்கேயே தட்டை மேஜை மீது வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தவளாய் சிரித்த முகத்துடன், "உங்க ஹேர் ஸ்டைல் நல்லா இருக்கு" என்றாள் மரகதத்திடம்.
மரகதம் ஏதும் கூறாது மென்மையாய் புன்னகைக்க, "அம்மா அப்பா சொன்னதைத் தப்பா எடுத்துக்காதீய. அவிய கிராமத்துல பொறந்து வளர்ந்துவிய. அதான் அப்படிச் செல்லுதாவ. நானும் கல்யாணத்துக்குப் பொறவு தான் சென்னைக்குப் போனேன். அதுக்கு முன்னாடி வரை ஊருக்காரவிய மாதிரி தான் யோசிப்பேன். இப்ப அப்படியில்ல. என் தம்பியும் சென்னைல தான் வேலை செய்யுதான். அதனால அவன் இப்படிலாம் யோசிக்க மாட்டான். கல்யாணமான பொறவும் உங்க விருப்பம் போல நீங்க இருக்கலாம். ஆம்பிளையும் பொம்பிளையும் சரிசமம்னு தான் பேசுவான் என் தம்பி" என்றாள்.
கதிர்மாறனுக்கும் மரகதத்துக்கும் சற்று மனம் தணிந்தது.
"ஆமா நீங்க சென்னைல எங்கே இருக்கீங்க?" எனக் கேட்டாள் செல்வி.
"சென்னைல நாங்க இப்ப குடியிருக்கலை. நான் சிங்கப்பூர்ல வேலை பார்க்கிறேன். இவ மலேசியால வேலை பார்க்கிறா! இந்தியாக்கு வரும் போது சென்னைல இருக்க எங்க வீட்டுல தான் தங்குவோம். இப்ப அங்க ஒரு போர்ஷன் வாடகைக்கு விட்டிருக்கோம்" என்றான் கதிர்மாறன்.
"ஓ ரெண்டு பேரும் ஐடில தான் வேலைப் பார்க்கிறியலா?" எனக் கேட்டாள்.
"ஆமா" என்றவன், "உங்க தம்பி என்ன வேலை பார்க்கிறாங்க?" என விசாரித்தான்.
"என் தம்பி சென்னைல கட்டுமான கம்பெனி வச்சிருக்கான். எங்கக்கூடத் தான் தங்கி இருக்கான். என் புருஷனும் ஐடில தான் வேலைப் பார்க்கிறாவ! இன்னிக்கு நீங்க வரதா சொன்னதால தான் நானும் தம்பியும் இங்கன புறப்பட்டு வந்தோம்" என்றாள்.
"ஓ" என்றவாறு சிந்தித்தான் கதிர்மாறன்.
'பரவாயில்ல பையன் படிச்சிருக்கான். சென்னைல வேலைப் பார்க்கிறான். இவங்களை மாதிரி கிராமத்தானா யோசிக்க மாட்டான்' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டான்.
'நல்ல வேளை பையனாவது இந்த ஊருக்குள்ளேயே இல்லாம வெளில வேலை செய்றாங்களே. பட்டிக்காட்டுத்தனமா இருக்க மாட்டாங்க' என்று மனத்திற்குள் நினைத்துக் கொண்டாள் மரகதம்.
"கல்யாணமான பொறவு எங்க தம்பி உங்க கூட மலேசியாவுக்கு வரனும்னாலும் வந்துடுவான். அவன் எங்கன இருந்துனாலும் ஆளுங்களை வச்சி அவன் சோலியைப் பார்த்துப்பான். அதைப் பத்திலாம் நீங்க கவலைப்பட்டுக்கிடாதீய" என்றாள் செல்வி.
கதிர்மாறனும் மரகதமும் திருப்தியான பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
அச்சமயம் வீட்டினுள் நுழைந்தான் அந்த மாப்பிள்ளை பையனான முத்துராமன்.
"வா தம்பி. பொண்ணு வீட்டுல வார நேரம் வெளில எங்கனயும் போகாம கெடனு சொன்னா கேட்குதியா? உன்னைக் காண்க பொண்ணே வந்து காத்துக் கிடக்கு! இங்கன வந்து உட்காரு தம்பி" என்றாள் செல்வி.
'என்னது இது தான் பையனா?' என்று முத்துராமனைப் பார்த்து அதிர்ந்து விழித்தனர் கதிர்மாறனும் மரகதமும்.
"மாறா மாப்ள போட்டோவை மாத்தி கொடுத்துட்டாரா புரோக்கர்" என்று மெல்லிய குரலில் கதிர்மாறனின் காதைக் கடித்தாள் மரகதம்.
தன்னைக் கண்டதும் மரகதத்தின் முகத்தில் வந்து போன அதிர்ச்சியையும், அதன் பிறகு அண்ணனிடம் அவள் பேசுவதையும் பார்த்தவாறே நாற்காலியில் வந்தமர்ந்தான் முத்துராமன்.
"ஹாய் ஐம் முத்துராமன்" என்று இயல்பாய் தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.
"ஹாய் ஹலோ" என்றனர் இருவரும்.
"ஏன் என்னைப் பார்த்ததும் ஷாக் ஆகிட்டீங்க ரெண்டு பேரும்" என நேரடியாகவே கேட்டான் முத்துராமன்.
"இல்ல புரோக்கர் போட்டோவை மாத்தி அனுப்பிட்டாரு போல" என்று தயக்கத்துடன் இழுத்தான் கதிர்மாறன்.
"அப்படியா?" குழம்பிய பாவத்தில் கேட்ட முத்துராமன், "அந்தப் போட்டோவை காட்டுங்க" என்று கேட்டான்
கதிர்மாறன் தனது கைப்பேசியில் இருந்த முத்துராமனின் படத்தை எடுத்துக் காண்பித்தான்.
அந்தப் படத்தைப் பார்த்துச் சிரித்தவனாய், "இது நான் தான்ங்க. பத்து வருஷம் முன்னாடி எடுத்தது" என்று அத்தனை இயல்பாய் உரைத்தான்.
மரகதத்திற்கும் கதிர்மாறனுக்கும் அவன் கூறியதைக் கேட்டு தலையே சுற்றியது.
"வாட்" என்று தன்னை மீறி கூறியே விட்டாள் மரகதம்.
மரகதத்திற்கு உள்ளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டு வந்தது.
ஒளிப்படத்தில் ஒல்லியான தேகத்துடன் இளமை குறையாத வனப்புடன் அழகாய் இருக்கும் முத்துராமன், நேரில் அவன் வயதிற்குரிய தோற்றத்துடன் சொட்டை தலையும் தொந்தியுமாய்க் குண்டாக இருந்தான்.
"இதுக்குப் பேரு பித்தலாட்டம் சார். நீங்க இப்படியொரு பித்தலாட்ட ஃபேமிலியா இருப்பீங்கனு நினைக்கலை" என்று கடுமையான குரலில் உரைத்தவளாய் எழுந்து நின்று விட்டாள் மரகதம்.
சட்டென அனைவரும் இருக்கையில் இருந்து எழுந்து விட்டனர்.
"வாயை அடக்குமா. வாய் இருக்குனு உன் இஷ்டத்துக்குப் பழிப்போட்டு பேசுவியா?" என்று கத்தினார் செல்லையா.
"நாங்க என்ன அப்படிப் பண்ணிட்டோம்னு பித்தலாட்டம் அது இதுனு பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க மரகதம்" என்று பொறுமையாகவே கேட்டான் முத்துராமன்.
தனது அண்ணன் கரத்தினில் இருந்த கைப்பேசியைப் புடுங்கி அதிலிருந்த படத்தை அவனிடம் காண்பித்து, "இதுக்குப் பேர் பித்தலாட்டம் இல்லையா?" எனக் கேட்டாள்.
"காம் டவுன் அப்பு" என்றவனாய் அவளின் கையைப் பற்றினான் கதிர்மாறன்.
"நாங்க பழைய போட்டோ புதுப் போட்டோ எல்லாத்தையும் சேர்த்துத் தான் அனுப்பினோம். இதை மட்டும் நீங்க பார்த்திருந்தீங்கனா அதுக்கு நாங்கப் பொறுப்பாக முடியாது. புரோக்கரைப் போய்க் கேளுங்க" என்றான் முத்துராமன்.
"வா அப்புப் போகலாம்" அதற்கு மேல் அங்கே நிற்க விருப்பமில்லாமல் அங்கிருந்து அவளை நகர்த்தினான் கதிர்மாறன்.
இருவரும் அந்த வீட்டில் இருந்து வெளியே வரவும், அந்த வீட்டை முறைத்துப் பார்த்தவனாய் தனது புல்லட் வண்டியில் கடந்து சென்றான் மணிவாசகம்.
'எதுக்கு இவரு இப்படி மொறச்சிட்டு போறாரு' என்று நினைத்தவாறே இருவரும் மகிழுந்தினருகே சென்றனர்.
இருவரும் மகிழுந்தில் ஏற முற்பட்ட போது அந்த வீட்டிற்குள் நுழைந்தாள் அவள். அப்படியே ஸ்தம்பித்து நின்று விட்டனர் கதிர்மாறனும் மரகதமும்.
"ப்ரோ தாவணி போட்ட தீபாவளி இங்கே எப்படி ப்ரோ?" வியப்பில் விரிந்த விழிகளுடன் கதிர்மாறனைப் பார்த்துக் கேட்டாள் மரகதம்.
கதிர்மாறன் அதிர்வுடன் பேச்சற்று அந்தப் பெண்ணையே பார்த்திருந்தான்.
எத்தனை நாள்கள் கனவினில் வந்து தொல்லைச் செய்திருப்பாள் இப்பெண். இன்று கண் முன்னே அவளைப் பார்த்ததில் ஸ்தம்பித்த நிலை தான் அவனுக்கு.
சேலை அணிந்திருந்த அப்பெண், தனது நீளமான கூந்தலின் காதோரத்தில் ஒற்றை ரோஜா வைத்திருந்தாள். அன்றைய காலத்து கதாநாயகிகளின் உடல்வாகு அவளுக்கு.
"அப்படியே அந்தக் காலத்து ஹீரோயின் மாதிரி இருக்குல இந்தப் பொண்ணு. நானும் இந்தப் பொண்ணு மாதிரி தான் சைட் ரோஸ்லாம் அப்ப வச்சிப்பேன். முகம் எவ்ளோ களையா லட்சணமா இருக்குப் பாரேன்" கதிர்மாறனின் தாய் சந்தியா அவனிடம் இந்தப் பெண்ணின் படத்தைக் காண்பித்துக் கூறியதெல்லாம் அவனின் நினைவினில் வந்து போனது.
"டேய் மாறா" என்று அவனை உலுக்கினாள் மரகதம்.
'நான் எங்கே இருக்கேன்' என்பது போல் அதிர்ந்து விழித்தவன் நிகழுலகுக்கு வந்தவனாய் மரகதத்தைப் பார்த்து,
"அப்பு இந்தப் பொண்ணு இங்கே என்ன பண்ணுது?" ஆச்சரியம் நீங்காத குரலில் கேட்டான்.
"அதான்டா எனக்கும் தெரியலை" என்றவள்,
"ஹே மாறா, அந்தப் பொண்ணு கழுத்துல தாலி எதுவும் பார்த்தியா?" எனக் கேட்டாள்.
"அந்தளவுக்கு நான் கவனிக்கலையேடி" என்றவன் கூறவும்,
"இரு நான் பார்த்துட்டு வரேன்" என்றவளாய் விறுவிறுவென அந்த வீட்டின் வாசலின் அருகே சென்று உள்ளே எட்டிப் பார்த்தாள் மரகதம்.
அங்கே வரவேற்பறையில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.
வீட்டினுள்ளே சென்ற அந்தப் பெண்ணிடம் நடந்தவற்றைக் கூறிக் கொண்டிருந்தாள் செல்வி.
"வேணும்னே நீங்களே பழைய போட்டோவைக் கொடுத்துட்டு இப்ப புரோக்கர் மேல பழியைப் போட்டு வச்சிருக்கீங்களே உங்களுக்கே இது நியாயமா இருக்கா?" என்று அந்தப் பெண் தனது தாயைப் பார்த்துத் திட்டினாள்.
"பின்னே உன் தம்பியோட உண்மையான போட்டோ கொடுத்தா தான் எந்தப் பொண்ணும் கட்டிக்கிட வர மாட்டேங்குதே! நேர்ல வரவச்சி பேசி மடக்கிடலாம்னு நினைச்சோம். ஆனா எங்களுக்கே அந்தப் பொண்ணைப் பிடிக்கலை. அதான் விட்டுட்டோம். இல்ல பூ வச்சி விட்டு தான் அனுப்பியிருப்போம்" என்றார் சுசீலாம்மா.
"அட ப்ராடுக்கார பையலுவளா" என்று எண்ணிய மரகதம் கதிர்மாறனிடம் சென்று, "சரியான ப்ராடு குடும்பம் மாறா இது! நம்மளை வர வச்சி பேசி மடக்கிடலாம்னு பார்த்திருக்காங்க" என்று கோபத்துடன் உரைத்தவள்,
"இரு நான் போய் நாக்குப் புடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரேன். அப்ப தான் என் மனசு ஆறும்" வாசலை நோக்கி அவள் செல்லவும் அவளின் கையைப் பிடித்திழுந்து மகிழுந்தில் அமர வைத்தான் கதிர்மாறன்.
"நீ ஒன்னும் பேச வேணாம் அப்பு" என்றவனாய் உடனே வண்டியை கிளப்பினான் கதிர்மாறன்.
அவர்கள் தங்கியிருக்கும் அறையை அடையும் வரையில் இருவருமே ஏதும் பேசிக் கொள்ளவில்லை.
மகிழுந்தை அவன் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள் நுழைந்த போது, கோபமான முகத்துடன் சோபாவில் அமர்ந்திருந்தாள் மரகதம்.
அவளருகில் அவன் சென்ற போது அவன் கைப்பேசி அலறியது.
எடுத்துப் பார்த்தவன், மரகதத்தின் பார்வையை எதிர்நோக்கியவனாய், "மாமா தான் கூப்பிடுறாங்க" என்று பெருமூச்சுடன் அழைப்பை ஏற்றவாறு சோஃபாவில் அமர்ந்தான்.
ஒலிப்பரப்பியில் இணைப்பைப் போடுமாறு சைகைச் செய்தாள் மரகதம்.
"என்ன கதிரு! மாப்ளையைப் பார்த்துட்டியா? இப்ப எங்கே இருக்க நீ?" எனக் கேட்டார் வித்யாதரன்.
"என்ன மாமா இப்படி மாப்ளையப் பார்த்து வச்சிருக்கீங்க?" எனக் கேட்டான் கதிர்மாறன்.
"ஏன் என்னாச்சு?" எனக் கேட்டார் வித்யாதரன்
"மாமா அவங்க நமக்கு அனுப்பின போட்டோல இருக்கப் பையன் மாதிரி அவன் நேர்ல இல்ல. அவங்க பழைய போட்டோ கொடுத்திருக்காங்க. இப்ப சொட்டை மண்டையோட குண்டா இருக்கான் மாமா" என்றான் கதிர்மாறன்.
"உன் தங்கச்சிக்கு இருபது வயசுனு நினைப்பா உனக்கு. அவ வயசுக்கு மாப்ளை கிடைக்கிறதே கஷ்டம், இதுல சொட்டை தொப்பைனு பேச வந்துட்டான்" என்று பொங்கினார் வித்யாதரன்.
மரகதம் கோபத்துடன் ஏதோ பேச வாயைத் திறக்கவும், கண்ணசைத்து அமைதியாக இருக்கச் சொன்ன கதிர்மாறன்,
"அப்ப உங்களுக்குத் தெரிஞ்சி தான் எங்களை அனுப்பி வச்சீங்களா?" என்று கோபக்குரலில் கேட்டான்.
"எனக்குத் தெரியாது கதிரு. ஆனா தெரிஞ்சிருந்தாலும் உங்களை அனுப்பி வச்சிருப்பேன்னு தான் சொல்ல வரேன். முப்பத்து மூனு வயசுள்ள பையன் காலேஜ் ஸ்டூடன்ட் மாதிரியா இருப்பான். கொஞ்சம் வயசானவனா தான் தெரிவான். நம்ம அப்புக்கும் அவ்ளோ வயசு தானே ஆகுது" என்று அவர் பேசிக் கொண்டே போக,
"மாமா திஸ் இஸ் த லிமிட்" என்று கத்தியிருந்தாள் மரகதம்.
"மாமா இப்ப பிரச்சனை பையன் குண்டா இருக்கிறதோ சொட்டையா இருக்கிறதோ இல்ல. அவங்க பொய் சொல்லி நம்ப வச்சி நம்மளை வர வச்சிருக்காங்க. அதோட எப்படியாவது ஏமாத்தி எங்கேஜ்மெண்ட் மாதிரியாவது இன்னிக்கே செய்ய வச்சிடனும்னு பிளான் போட்டு வர வச்சிருக்காங்க. இது ஏமாத்துறது இல்லையா. இப்படிப் பொய்ல ஆரம்பிக்கிற வாழ்க்கை நல்லாவா இருக்கும்" என்றாள் மரகதம்.
"அப்பு அந்தப் பையனோட உண்மையான போட்டோ காண்பிச்சிருந்தா நீ நேர்ல போயிருப்பியா? இல்ல தானே! அவங்க பையனுக்கு எப்படியாவது கட்டி வச்சிடனுங்கிற ஆதங்கத்துல அப்படிச் செஞ்சிருக்காங்க. நீ பையனோட அழகு உடம்புனுலாம் பார்க்காம அவனோட குணத்தை மட்டும் பார்த்து முடிவெடு. இந்தக் குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம். இவனை விட்டா உன்னை இந்த வயசுல கட்டிக்கப் பையன் கிடைக்க மாட்டான் அப்பு" என்றவர் கூறியதில் அவளின் கோபம் மேலும் அதிகமாக,
"நாங்க கேட்டோமா எங்களுக்குக் கல்யாணம் செஞ்சி வையுங்கனு நாங்க கேட்டோமா மாமா! உங்களுக்குச் சொத்து வரதுக்காக எங்களை எங்கேனாலும் கொண்டு போய்த் தள்ளி விட்டுடலாம்னு பார்க்கிறீங்களா? நீங்க என்ன பேசினாலும் எனக்குப் பிடிச்ச மாதிரி பையன் கிடைச்சா மட்டும் தான் நான் கல்யாணம் செஞ்சிப்பேன் மாமா" என்று ஆங்காரமாய் உரைத்தாள்.
"என்ன அப்பு ஓவரா பேசுற! அப்பா அம்மா இல்லாத பசங்களுக்கு நல்லது செய்யலாம்னு பார்த்தா, என் மேலேயே பழியைத் தூக்கிப் போடுறியா? உங்களைத் தேடி வந்து பேசினேன்ல அதான் என் தப்பு" என்று வித்யாதரனும் கோபமான பேசினார்.
"இப்பவும் அதான் சொல்றேன் மாமா, உங்க தயவு எங்களுக்குத் தேவை இல்ல! இஷ்டம் இருந்தா எங்ககிட்ட பேசுங்க இல்லயா பேசாம போங்க. அதனால எங்களுக்கு ஒன்னும் நஷ்டமில்லை" என்றவளாய் கோபத்துடன் இணைப்பைத் துண்டித்தாள் மரகதம்.
தனது நெற்றியிலேயே அடித்துக் கொண்ட கதிர்மாறன், "ஏன்டி எப்பப் பார்த்தாலும் இப்படியே பண்ற?" என்று கத்தினான்.
"நான் என்ன பண்ணேன்?" என்றாள் இவள்.
"சொந்தக்காரங்கனு பேருக்காவது நாலு பேரு வேணாமா அப்பு? நீ பாட்டுக்குச் சண்டை போட்டு எல்லாரையும் வெட்டி விட்டுட்டு இருக்க" என்று கத்தினான்.
"எனக்கு யாரும் வேணாம். நீ போதும்" என்றவளாய் அவன் மடியில் போய்த் தலை சாய்த்துப் படுத்துக் கொண்டு அழுதாள் மரகதம்.
பெருமூச்சுடன் அவளின் தலையைக் கோதியவனாய் அப்படியே சாய்ந்து அமர்ந்தான் கதிர்மாறன்.
இருவரும் சில நிமிடங்கள் ஏதும் பேசிக் கொள்ளவே இல்லை.
மரகதம் அப்படியே உறங்கிப் போயிருக்க, வாசலில் கேட்ட கதவுத் தட்டும் சத்தத்தில் அவளை மெத்தையில் சாய்த்துப் படுக்க வைத்து விட்டு வாசலை நோக்கிச் சென்றான் கதிர்மாறன்.
அங்கு வாசலில் நின்றிருந்த மணிவாசகத்தைப் பார்த்துப் புருவம் நெறித்தவனாய், "சொல்லுங்க மணி மாமா! நாங்க இங்கே இருக்கோம்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?" எனக் கேட்டான்.
"உங்க காரு இங்கன நின்னதைப் பார்த்துத் தான் வந்தேன்" என்றவன், "போன காரியம் என்னாச்சு?" எனக் கேட்டான்.
அங்கே வராண்டா போன்று இருந்த இடத்தில் அமர்ந்தனர் இருவரும்.
அங்கே நடந்ததை உரைத்த கதிர்மாறன், "அம்மா போன பிறகு இவளைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைக்கிறதே பெரும் பாடாகிப் போச்சு எனக்கு. அப்புவுக்கு இவ்ளோ வயசுக்குப் பிறகு கல்யாணம் ஆகுறது கஷ்டம்னு என் தாய் மாமா சொன்னதைக் கேட்டு வேற ரொம்பப் பயமா இருக்கு" என்று கவலையுடன் கூறிய நொடி,
சற்றுத் தயங்கியவனாய், "உம்ம தங்கச்சியை எனக்குக் கட்டிக் கொடுப்பியலா?" எனக் கேட்டான் மணிவாசகம்.