மரகத மாமன் 9
கையிலிருந்து கைப்பேசி நழுவியதும், 'ஓ காட்! மை ஃபோன்' எனப் பதறியவளாய் அதனைக் குனிந்து எடுத்தாள் மரகதம்.
கைப்பேசியில் ஏதேனும் கீறலோ பழுதோ ஏற்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தவள் எதுவும் இல்லை என்றதும் ஆசுவாசமாகி நாற்காலியில் அமர்ந்தவாறு புலனத்தைத் திறந்தாள்.
புலனத்தில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தி காணாமல் போயிருக்க, புலனம் முழுவதும் அலசி ஆராய்ந்தும் அச்செய்தியை அவளால் கண்டடைய முடியவில்லை.
'ஓ மை கடவுளே! இதென்ன சோதனை? இந்தாளு என்னத்தைப் பேசினாருனு தெரியலையே' என்று யோசனையுடன் அமர்ந்தவள், 'ஒரு வேளை நமக்கு லவ் பிரபோசல் செஞ்சிருப்பாரோ? ஆனா அந்த மெசேஜ் எப்டி காணாம போச்சு? போன் கீழே விழும் போது கைப்பட்டு டெலீட் ஆகியிருக்குமோ' என்று சிந்தித்தாள்.
அவன் என்ன தான் அப்படிப் பேசி அனுப்பியிருந்தான் என்று அறிந்து கொள்ளும் ஆவல் அதிகரிக்க, கதிர்மாறனுக்கு அழைப்பு விடுத்தாள்.
அவன் அழைப்பை ஏற்றதும், நடந்ததை உரைத்தவள், "எனக்கு இப்ப உன்னோட மணி மாமா என்ன பேசி அனுப்பினாருனு தெரிஞ்சே ஆகனும் ப்ரோ" என்றாள்.
தங்கைக் கூறியதைக் கேட்டு கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது அவனுக்கு. அவளிடம் நேரடியாக கல்யாணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துப் பேசி அனுப்பியிருப்பாரோ என்று எண்ணியவனாய், "சரி நான் அவர் நம்பர் தரேன். நேரடியாவே நீ அவர்கிட்ட பேசிடு! என்ன தான் சொல்றாருனு பார்ப்போம்" என்றவன்,
"ஆமா உனக்கு மணி மாமாவைக் கட்டிக்க விருப்பமா?" எனக் கேட்டான்.
"வாட்? என்னது? அந்தாளைக் கட்டிக்கிறதா? நோ வே!" என்றாள் மரகதம்.
"ஓகே ஆல்ரைட்! நான் நம்பர் அனுப்பி வைக்கிறேன்" என்றதோடு அழைப்பைத் துண்டித்தவன் உடனே அனுப்பியும் வைத்தான்.
ஆனால் அவளுக்குத் தான் உடனே மணிவாசகத்துக்கு அழைப்பு விடுக்க தயக்கமாக இருந்தது.
"அந்தாளு ஏற்கனவே சரியான வழிஞ்சான். நேர்ல பார்த்த போதே ஓவரா பேசினாரு. இப்ப நானே போன் செஞ்சி வேற பேசினா அவருக்கு ஹோப் கொடுத்தா மாதிரி ஆகிடுமோ" என்று யோசித்தாள்.
மீண்டுமாய் கதிர்மாறனுக்கு அழைத்து தனது தயக்கத்தைக் கூறியவள், "நீயே பேசிடேன்டா" என்றாள்.
"அடியேய் அவரு என்கிட்ட பேசனும்னா எனக்கு மெசேஜ் செஞ்சிருப்பாருல. என்கிட்ட சொல்லக் கூடாதுனு தானே உன்னுடைய நம்பரை தேடிப் பிடிச்சி உனக்கு வாய்ஸ் மெசேஜ் செஞ்சிருக்காரு" என்றான்.
"அப்ப என் போன் நம்பரை நீ அவருக்குக் கொடுக்கலையா?" எனக் கேட்டாள்.
"நான் ஏன்டி உன் நம்பரை அவருக்குக் கொடுக்கப் போறேன்" என்றவன், "எனக்கு ஆபிஸ்ல நிறைய வேலை இருக்கு அப்பு. வீட்டுக்கு வந்த பிறகு பொறுமையா பேசலாம். இப்ப என்னை என் வேலையைக் கவனிக்க விடு" என்றவனாய் அழைப்பைத் துண்டித்தான்.
பெருமூச்சுடன் அமர்ந்திருந்தவளுக்கு வேலையே ஓடவில்லை.
மணிவாசகத்தின் எண்ணிற்கு புலனத்திலிருந்து அழைப்பு விடுத்தாள்.
சில நொடிகளில் அழைப்பை ஏற்றவன், "தாயி? நீயே கூப்பிடுவியனு எதிர்பார்க்கலைத் தாயி" என்று உற்சாகக் குரலில் உரைத்தான்.
"ம்ப்ச் எனக்கு நீங்க என்ன வாய்ஸ் மெசேஜ் அனுப்புனீங்கனு கேட்கத் தான் போன் செஞ்சேன். நீங்க அனுப்பினது டெலீட் ஆகிடுச்சு" கடுப்பான குரலில் உரைத்தாள்.
"ஓ" என்றவனின் குரலில் உற்சாகம் குறைந்து சுருதியும் குறைந்து போனது.
"நான் அனுப்புச்ச சேதியைக் கேட்டுட்டுத் தான் கூப்பிட்டியலோனு நினைச்சேன்" என்றான்.
"சரி டைம் வேஸ்ட் பண்ணாம என்ன மெசேஜ் அனுப்புனீங்கனு சொல்லுங்க?" சற்று எரிச்சலுடன் கேட்டாள்.
"மரகதத்தை உம்ம அண்ணனுக்கு கட்டி வைக்கிற எண்ணம் உமக்கு இருக்கா தாயி?" எனக் கேட்டான்.
"ஹான் கண்டிப்பா! அதனால தானே எங்க மாமாவை அனுப்பி மரகதம் வீட்டுல பேச வச்சோம். ஆனா அதுக்கும் தான் அந்தக் குடும்பம் ஒத்துக்கலையே! என்னமோ பெரிய லார்ட் லபக்கு தாஸூ குடும்பம்னு நினைப்பு அந்தக் குடும்பத்து ஆளுங்களுக்கு" என்று கடுப்புடன் அவள் கூறியதைக் கேட்டு சிரிப்பு வந்தது மணிவாசகத்திற்கு.
"என்னால மரகதத்தை மலேசியாக்கு கூட்டியாந்து உம்ம அண்ணனுக்குக் கட்டி வைக்க முடியும் தாயி" என்றவன் கூறியதும் இன்பமாய் அதிர்ந்தவளாய், "அப்படியா? நிஜமாவா? மரகதம் வீட்டுல சண்டைக்கு வர மாட்டாங்களா?" எனக் கேட்டாள்.
"அவிங்க கண்ணுலலாம் மண்ணைத் தூவிட்டுத் தானே கூட்டியாறேன்னு சொல்லுதேன். அவிங்கக்கிட்ட சொன்னா வேலை நடக்குமா என்ன?" என்றான்.
"அய்யோ அப்படிக் கூட்டிட்டு வந்துட்டீங்கனா பிரச்சனை ஆகிடாதா?" எனக் கேட்டாள்.
"ஆமா ஆவும் தான்! நானும் மரகதமும் ஓடிப் போய்ட்டதா ஊரே பேசும். திரும்ப நாங்க ஊருக்குள்ளாற போகவே முடியாது" என்றான்.
"என்னது இப்படி எல்லாம சொல்லுவாங்க? அப்புறம் எப்படி நீங்க மரகதத்தைக் கூட்டிட்டு வர முடியும்னு சொல்றீங்க? மொதல்ல மரகதம் சம்மதிக்கனுமே. இப்படிப் பேச்சு வந்தாலும் பரவாயில்லனு மரகதம் ஒத்துக்கனுமே! இதுலாம் நடக்குற காரியமா?" என்றவள் யோசனையுடன் அமைதியாக,
"நடக்கும்! இந்த மரகதமணீஸ்வரர் சாமி சத்தியமா என்னால இதை நடத்திக் காட்ட முடியும்" ஆங்காரமாய் உரைத்தவன், சற்று அமைதியான குரலில்,
"இம்பிட்டு பிரச்சனையும் தாண்டி நான் மரகதத்தை மலேசியாவுக்குக் கூட்டியாந்து உங்க அண்ணனுக்குக் கட்டி வைக்கனும்னா நீ என்னைக் கட்டிக்கிடனும் தாயி" என்றான்.
"வாட்?" எழுந்தே நின்று விட்டாள் மரகதம்.
"ஹௌ டேர்? நான் உங்களைக் கட்டிக்கிறதா? இம்பாசிபிள்" என்றாள்.
"அப்ப உம்ம உடன்பிறந்தானுக்கு கண்ணாலம் ஆவுறதும் இம்பாசிபிள் தாயி" என்றவனாய் இணைப்பைத் துடைத்து விட்டான் மணிவாசகம்.
ரத்தம் கொதித்தது அவளுக்கு.
'என்ன தைரியம் அந்தாளுக்கு? என்னமோ கடைல ஆஃபர் பிரைஸ்ல பொருள் வாங்குற மாதிரில என்னைக் கேட்குறாரு' என்று புலம்பித் தள்ளினாள்.
சில நிமிடங்களில் மணிவாசகத்திடம் இருந்து குறுஞ்செய்தி வந்தது.
"நான் உன்னிய பிளாக்மெயில் பண்றதா நினைக்காதிய தாயி! என் நெலமைய யோசிச்சுப் பாரும். பொட்டப் புள்ளைய நாடு விட்டு நாடு கூட்டியாந்த பொறவு நான் ஊருக்குள்ளாற போக முடியுமா? அப்படியே போனாலும் யாரு என்னைக் கட்டிப்பா? ஊரை விட்டு ஓடிப் போனவன்ற பழியையும் நான் ஏத்துக்கிடனும். இதுல என் வாழ்க்கையும் அடங்கி இருக்கு தாயி" என்றவன் குரல் வழியாக அனுப்பியிருந்த குறுஞ்செய்தியைக் கேட்டு பெருமூச்சு விட்டவளாய் அப்படியே அமர்ந்து விட்டாள்.
மீண்டுமாய் அவனிடம் இருந்து குரல் வழியாக குறுஞ்செய்தி வந்தது.
"இது ஒன்னும் சின்ன காரியம் இல்ல தாயி. பொட்ட புள்ளைய நாடு விட்டு நாடு கூட்டியாறனும். என் கூட வாறனாலேயே நான் கூட்டிட்டு ஓடிட்டேன்னு தான் ஊரே பேசும். அந்தப் புள்ள அதுக்கு பொறவு உம்ம அண்ணன் கூட சந்தோஷமா வாழும். ஆனா என் வாழ்க்கை? அதுக்குப் பொறவு என்னை யாரு கட்டிக்கிடுவா?" எனக் கேட்டு அனுப்பியிருந்தான்.
அவளுக்குள் கோபம் பொங்கிக் கொண்டு வர, 'யூ ப்ளடி! பிளாக்மெயில் பண்ணலைனு சொல்லிட்டு நல்லா பிளாக்மெயில் பண்ற மேன் நீ. உன்னோட பேச்சுக்கு அசுறுற ஆளு நான் இல்ல' என மனத்தோடு கூறிக் கொண்டவள்,
"நீங்க நினைக்கிறது நடக்காது மணி சார்! நானும் என் அண்ணனும் கல்யாணம் செஞ்சிக்காமலே இருந்துகிறோம்" என்று குறுஞ்செய்தி அனுப்பியவள் மணிவாசகத்தின் எண்ணைக் கருப்பிட்டாள்.
மாலை ஆறு மணியளவில் கதிர்மாறனுடன் மகிழுந்தில் பயணித்த மரகதம் வழக்கத்திற்கு மாறாக வெகு அமைதியாக இருக்கவும், "என்னடா ஆச்சு? ஏன் இவ்வளோ சைலண்ட்டா இருக்க? மணி மாமாகிட்ட பேசுனியா? என்ன சொன்னாரு?" எனக் கேட்டவாறு வண்டியை ஓட்டினான்.
"மரகதத்தை மலேசியாவுக்கு கடத்திட்டு வந்து உனக்கு கட்டி வைக்கிறதா சொன்னாரு" என்றவள் சொன்னதும், அவன் முகம் மகிழ்வில் நிறைய, கண்கள் மின்ன, "ஹே நிஜமாவா அப்பு. காலைல தானே நீ சொன்ன! மலேசியாவுக்கு கடத்திட்டு வந்திடுறேன்னு. சொன்ன மாதிரியே ஈவ்னிங்குள்ள ஆளே ரெடியா இருக்காங்க பாரேன்" என்றவன், "அவரால முடிஞ்சா செய்ய சொல்லு அப்பு. அந்தக் குடும்பம் என்ன தான் செய்யுதுனு பார்ப்போம்" என்றான்.
அவனின் மகிழ்வையே கண் சிமிட்டாது பார்த்திருந்தவள், "உனக்கு ஒத்த ரோசாவை அந்த அளவுக்குப் பிடிக்குமாடா?" சற்று ஆச்சரியத்துடன் கேட்டாள்.
"ஒத்த ரோசானு சொல்லாதடி! மை ஏஞ்சல் அவ! அவ என் வாழ்க்கைக்குள்ள வந்துட்டா நம்ம அம்மாவே வந்துட்ட மாதிரினு அடிக்கடித் தோணும் அப்பு" என்றான்.
"அதுக்கு அந்தப் பொண்ணுக்கு உன்னைப் பிடிக்கனும்லடா" எனக் கேட்டாள்.
"பிடிக்காமலே கல்யாணம் செஞ்சாலும் நான் அவளைக் கவனிச்சிக்கிறதைப் பார்த்து அவளுக்கு என்னைப் பிடிக்காமலா போய்டும்" எனக் கேட்டான்.
"சரி தான். கூட பொறந்த பாவத்துக்கு என்னையே அப்படிக் கவனிச்சிக்கிறியே அந்தப் பொண்ணுலாம் ப்ளாட் ஆகிடும் தான்" என்று கேலிப் புன்னகையுடன் அவள் சொன்னாலும் அவளின் கண்களோ அண்ணனின் முகத்தையே ஆராய்ந்திருந்தது.
'இவனுக்காக அந்தாளை கல்யாணம் செஞ்சிக்கலாமோ' என்று அவளின் மனம் சற்றாய் இறங்கி வந்து சிந்திக்கத் தொடங்கியது.
அன்றிரவு அவளுக்கு உறக்கம் பிடிபடவில்லை.
பல்வேறு சிந்தனையில் உழன்றவளாய் நள்ளிரவு வரை உறங்காது இருந்தவள் தனது அறையிலிருந்து வெளியே வந்து அண்ணனின் அறைக்குள் சென்று பார்த்தாள்.
அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். அவனின் தலையை மென்மையாய் கோதியவள், அந்த அறையின் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தைப் பார்த்தாள்.
கல்லூரி முடித்ததும் இவள் முதல் முறையாக வேலை நிமித்தமாக இந்த நாட்டிற்கு வந்த போது இவனுடன் எடுத்த புகைப்படம் அது.
அதில் அவள் இப்போது இருப்பது போன்று ஒல்லியாக இல்லை. பழங்கால நாயகிகள் போன்று தேகம், வட்ட முகம் என அவளது அம்மாவின் அச்சாய் அப்படியே இருந்தாள்.
தன்னையே விழியகலாமல் அப்படத்தில் பார்த்திருந்தவள், 'ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி மாறிப் போய்ட்டேன்ல' தனக்குத் தானே பேசிக் கொண்டாள்.
வாழ்வின் நிகழ்வுகள் எல்லாம் மனத்தில் ஊர்வலம் போக, பாரமாகிப் போனது அவளுக்கு.
மூச்சடைப்பது போன்ற உணர்வு எழ, அந்தப் படுக்கையறையின் கதவைத் திறந்து வெளியே வந்தவள், வெளிக் காற்றைச் சுவாசித்தவாறு சில தூரம் நடக்கலாம் என எண்ணி வாசற்கதவைத் திறந்தாள்.
அச்சமயம் எதிர் வீட்டு வாசற்கதவும் திறக்கப்பட, அங்கு நின்றிருந்தவரைப் பார்த்து இன்பமாய் அதிர்ந்து போனாள்.
"பழனி அண்ணா" என்று அவள் அழைத்ததும் தான் அவளைப் பார்த்தான் அவன்.
அவளைப் பார்த்ததும் யாரென்று தெரியாமல் அவன் விழிக்க,
"என்னண்ணா யாருனு தெரியலையா? நான் தான் மரகதம் அலைஸ் மேகி" என்று சிரித்தவாறு உரைத்தாள்.
"ஹே மேகி! வாட் எ பிளசண்ட் சர்ப்ரைஸ். இந்த வீட்டுல இருக்கிறது நீ தானா?" எனக் கேட்டான்.
"ஆமாண்ணா. நீங்க தான் இந்த வீட்டுல இருக்கீங்கனு தெரியாம யாரோ பெரியவரு ஏதோ நோய் போல, அதான் மூஞ்சைலாம் மறைச்சிட்டு வெளியே வர்றாரு போலனு நானும் மாறனும் பேசிக்கிட்டோம்" என்று சொல்லிச் சிரித்தவளாய் கதவைப் பூட்டியவள் எதிர் வீட்டின் வாசலருகே வந்து நின்றாள்.
"ஓ கதிரும் இங்கே தான் இருக்கானா? நாம மீட் பண்ணி பத்து வருஷத்துக்கு மேல இருக்கும்ல!" என்றான்.
"ஹ்ம்ம் ஆமா! நீங்க இங்க தனியாவா இருக்கீங்க? உங்க வொய்ப் பொண்ணுலாம் எங்கே?" எனக் கேட்டாள்.
"அவங்கலாம் இந்தியால இருக்காங்க. நான் ஒரு டெம்பரரி பிராஜக்ட்காக இங்கே வந்திருக்கேன்" என்றவன்,
"கீழே பார்க்ல நடந்துட்டே பேசலாமா? நான் காத்தோட்டமா வாக் போகலாம்னு தான் வந்தேன்" என்றான்.
"நானும் அதுக்குத் தான் வெளில வந்தேன். ப்ரோ தூங்குறான். அவனை டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேனு பூட்டிட்டு வந்துட்டேன்" என்றவளாய் அவனுடன் இணைந்து நடந்தாள்.
இருவருமாய் இணைந்து பூங்காவில் நடந்தனர்.
"அப்புறம் ரெண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சா? உங்க பார்ட்னர்ஸ்லாம் எங்கே இருக்காங்க?" எனக் கேட்டான்.
"இல்லண்ணா இன்னுமே சிங்கிளா தான் சுத்திட்டு இருக்கோம்" என்றாள்.
"என்னது இன்னும் கல்யாணமாகலையா? உங்க அண்ணனுக்கு அப்பவே அவ்ளோ லவ் பிரபோசல் வந்துச்சே!" ஆச்சரியத்துடன் கேட்டான்.
"ஆமா ஆனா அவன் செட்டில் ஆன பிறகு தான் கல்யாணம் செஞ்சிப்பேன்னு இருந்துட்டான். நானும் அவனுக்கு மொதல்ல கல்யாணம் பண்ணுங்கனு இருந்துட்டேன். இப்ப ரெண்டு பேரும் செட்டில் ஆகிட்டோம். கல்யாணம் தான் நடக்கலை" விரக்தியான குரலில் உரைத்தாள்.
"ஆமா உங்க அப்பா அம்மா எப்படி உங்களை அப்படி விட்டாங்க? அம்மா பார்க்கிற பொண்ணைத் தான் கட்டிப்பேன்னு தானே கதிரு வந்த லவ் பிரபோசலை எல்லாம் ரிஜக்ட் பண்ணான்" எனக் கேட்டான்.
"அப்பா அம்மா பரலோகத்துக்கு போய் பல வருஷம் ஆகுதுண்ணா" அமைதியான குரலில் உரைத்தாள்.
"ஓ" என்றவன்,
"அந்தக் கவலைல தான் இப்பிடி மெலிஞ்சி தேய்ஞ்சி போய் இருக்கியா?" எனக் கேட்டான்.
"ஹலோ இப்படி ஜீரோ சைஸ் வர்றதுக்கு நான் எவ்ளோ டயட் இருந்தேன் தெரியுமா. நீங்க பாட்டுக்கு தேய்ஞ்சி போய்ட்டேன்னு சொல்றீங்க" என்று முறைத்தாள்.
"எவன் அது ஜீரோ சைஸ் தான் அழகுனு உங்களை நம்ப வச்சது. நான் உண்மையா சொல்லவா, ஒல்லிலாம் அழகே கிடையாது. அவங்கவங்க உடலோட இயல்போட ஆரோக்கியமா இருக்கிறது தான் அழகு. இது ஃபேமிலி ஜீன்ல இருந்து வர்றது தானே. அன்லஸ் அன்ஹெல்தியா இல்லாத வரைக்கும் கொஞ்சம் பூசினாப்ல இருக்கிறது தப்பில்லை. அப்ப நீள முடியோட பப்ளியா இருந்த மேகி தான் அழகா இருந்தா. இப்ப இருக்க மேகி நல்லாவே இல்ல" என்று முகத்தை அஷ்டகோணலாக்கி அவன் கூறியதைக் கேட்டு கடுப்பானவளாய்,
"இந்த ஆம்பிளைங்களே இப்படித் தான். உங்க இஷ்டத்துக்குத் தானே பொண்ணுங்களை வளைக்கப் பார்ப்பீங்க. அவங்க இஷ்டத்துக்கு விட மாட்டீங்களே" என்றாள்.
ஹா ஹா ஹா என வாய்விட்டுச் சிரித்தவன், "நீ மாறாவே இல்ல. இப்படிப் பேசித் தானே உன் பாய் ஃபிரண்ட் கூட பிரேக் அப் ஆச்சு உனக்கு" என்றான்.
"பாய் ஃபிரண்ட்டா? எனக்கா?" என்று முகத்தைச் சுருக்கியவள், "எனக்குலாம் என்னிக்கும் பாய் ஃபிரண்ட்டே இருந்ததில்லைண்ணா. நீங்க யாரையோ நினைச்சு சொல்றீங்க" என்றாள்.
"என் அண்ணனுக்கு ப்ரபோசல் வந்தப்ப கூட அவன் அளவுக்கு நான் அழகில்லைனு தானே எனக்கு யாரும் ப்ரபோஸ் செய்யலைனு சொல்லி உங்ககிட்ட வருத்தப்பட்டிருக்கேனே மறந்துட்டீங்களா?" எனக் கேட்டாள்.
"ஆமா தான். ஆனா அதுக்குப் பிறகு உன்னை யாரோ லவ் பண்ணதா கேள்விப்பட்டேனே! உண்மை இல்லயா?" எனக் கேட்டான்.
"அப்படி ஒருத்தன் கிடைச்சிருந்தா நான் ஏன்ணா இப்படி சிங்கிளா இருக்கப் போறேன்" பெருமூச்சுடன் உரைத்தவள் தன்னை சமன் செய்தவளாய்,
"எங்களைப் பத்தி விசாரிச்சது போதும். உங்களைப் பத்தி சொல்லுங்க. உங்க பொண்ணு மீரா என்ன செய்றா? குட்டிச் பொண்ணா பார்த்தது! நல்லா வளர்ந்திருப்பால இப்ப" எனக் கேட்டாள்.
"ஆமா இப்ப டுவல்த் படிக்கிறா" என்றவன் தனது கைப்பேசியில் சமீபத்தில் எடுத்த குடும்பப் புகைப்படத்தையும் மகளின் படத்தையும் காண்பித்தான்.
"எவ்ளோ பெரிய பொண்ணா வளர்ந்துட்டா! நைஸ்" என்றவள்,
"உங்க வொய்ப்பைக் கேட்டதா சொல்லுங்கண்ணா. அக்கா கையால சாப்பிட்டதை மறக்கவே முடியாது. அவங்க சமைச்சி கொடுத்து தான் உங்களை இப்படிக் குண்டாக்கிட்டாங்களா?" எனக் கேலிச் செய்தாள்.
"நாற்பது ஆகிடுச்சே! ஒல்லியாவா இருப்பாங்க" என்றவன்,
"கொஞ்ச உட்காரலாமா?" என்றவனாய் அங்கிருந்த நீள இருக்கையில் அமர்ந்தான்.
அவனருகில் அமர்ந்தவளாய், "பார்க்க ஒன்னும் நீங்க அவ்ளோ குண்டா இல்ல. ஃபிட்டா தான் தெரியுறீங்க. தலைலயும் மூஞ்சுலயும் இருக்க வெள்ளை முடி தான் வயசைக் காட்டிக் கொடுக்குது. அதை மறைக்க தான் மூஞ்சை மூடிட்டுப் போறீங்களா?" எனச் சிரிப்புடன் கேட்டாள்.
"இல்ல மேகி. கொஞ்சம் வீசிங் பிராப்ளம் இருக்கு. டஸ்ட்லாம் ஒத்துக்கிறது இல்ல. அதனால எப்பவுமே ஃபுல் கவர்ட்டா தான் வண்டி ஓட்டுறது" என்றவன்,
"சரி ஏன் இன்னும் கல்யாணம் செஞ்சிக்கலை. உன் அண்ணனுக்கு முப்பத்தைஞ்சு வயசுக்கிட்ட இருக்கும் தானே. உனக்கும் முப்பத்திரண்டு இருக்கும்ல. அப்பா அம்மா இல்லனா என்ன? நீங்களா உங்களுக்கு வரன் பார்த்துக்க வேண்டியது தானே" என்றான்.
"எதுவும் பொருந்தி வரலைண்ணா. நாங்க விரும்பிக் கேட்குறவங்க நோ சொல்லிடுறாங்க. எங்களை விரும்பிக் கேட்குறவங்களை எங்களுக்குப் பிடிக்கலை" என்றாள்.
"நான் அட்வைஸ் சொல்றேன்னு நினைக்காம நான் சொல்றதைக் கேளு. உங்களை விரும்பி வர்றவங்களை கல்யாணம் செஞ்சிக்கோ. இதுக்கு மேலயும் லேட் செஞ்சி ஃலைப்பை காம்ப்ளிகேட் செஞ்சிக்காத! இதுக்கு மேல குழந்தையைப் பெத்து அதை படிக்க வச்சி கல்யாணம் செஞ்சி, எவ்ளோ வேலை இருக்கு. அதுக்குலாம் தெம்பு வேண்டாமா? தள்ளிப் போட்டுட்டே போகாத மேகி! வருஷம் போனா திரும்பக் கிடைக்காது" என்றான்.
அவள் ஏதும் பதிலிறுக்கவில்லை ஆனால் அவன் கூறியதைப் பற்றிச் சிந்தித்தாள்.
அவள் எந்தக் குழப்பத்துடன் வெளியே வந்தாளோ அதற்கான தீர்வை அவன் கூறியதாய் தோன்றியது அவளுக்கு.
அவள் யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான் அவன். அதன் பிறகு எதுவும் அவன் பேசவில்லை.
சில நிமிட அமைதிக்குப் பிறகு, "நீங்க இந்த அட்வைஸ்ஸை வேற எப்ப சொல்லிருந்தாலும் நான் கேட்டிருக்க மாட்டேன்ணா. ஆனா இப்ப கேட்டுக்கனும்னு தோணுது" என்று கூறிப் புன்னகைத்தாள்.
"நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும் மேகி. மனசைத் தளர விடாத! நான் நாளைக்கு இந்தியா போறேன். இதான் என் நம்பர்! உங்க வயசுக்கேத்த பொண்ணு பையன் யாரையாவது எனக்குத் தெரிஞ்சாலும் நான் சொல்றேன். அடுத்த தடவை நான் உன்னை உன் கணவரோட தான் பார்ப்பேன்னு நம்புறேன்" என்றான்.
"ஹ்ம்ம் நானும் நம்புறேன்" என்றாள்.
மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்று விட்டனர்.
தனது அறைக்குச் சென்ற மரகதம் பல மணி நேர சிந்தனைக்குப் பிறகு, 'எனக்காக இல்லனாலும் ப்ரோக்காக இதை நான் செஞ்சித் தான் ஆகனும்' என்று முடிவெடுத்தவளாய் கைப்பேசியை எடுத்தவள் மணிவாசகத்தின் எண்ணைத் தடை நீக்கம் (அன்பிளாக்) செய்தாள்.
"மரகதத்தை மலேசியாவுக்குக் கூட்டிட்டு வர ஏற்பாடு பண்ணுங்க மணி சார்" என்று அவனுக்குக் குறுஞ்செய்தி அனுப்பி விட்டு உறங்காது விடியலுக்காகக் காத்திருந்தாள்.