• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 2

ரோசி கஜன்

Administrator
Staff member
வானத்தில் சிகப்பு நிற ஹெலிகாப்டர் ஒன்று சென்னையை நோக்கி வந்துக் கொண்டு இருந்தது. அதன் காக்பிட் உள்ளே இரண்டு பேர் அதனை கட்டுப்படுத்திக் கொண்டு இருக்க பின்னால் இருவர் அதில் அமர்ந்து இருந்தார்கள். வானில் இருந்து சென்னையை பார்க்க கொள்ளை அழகாய் இருந்தது. கடலும், மரங்களும், கட்டிடங்களும் என அனைத்தும் சிறிதாய் தெரிய அவற்றை முறைப்புடன் பார்த்தபடியே வந்துக் கொண்டு இருந்தான் ருத்ர வேலன்.

பெயருக்கு ஏற்றார் போல் கோவம் வந்தால் ருத்ர மூர்த்தி ஆகி விடுவான். கோவத்திற்கு உருவம் என்று இருந்தாள் அது ருத்ரனாக தான் இருக்க முடியும். அப்படி ஒரு கோவம் அவனுக்கு வரும். அந்த கோவத்தில் தான் அவன் அந்தமானில் இருந்து புறப்பட்டு வந்து விட்டான். பைலட் தரையிறங்க போவதாக தகவல் கூறிட பின்னால் அமர்ந்து இருந்த ருத்ரனும், அவனுடன் வந்த இளங்கோவும் தயாராகினார்கள். அடுத்த பத்து நிமிடத்தில் அரண்மனை போன்று இருக்கும் வீட்டின் பின் பக்கத்தில் இருக்கும் ஹெலிபாடில் ஹெலிகாப்ட்டர் தரை இறங்க இரண்டு ஆடவர்களும் கீழே இறங்கி வந்தார்கள். வெள்ளை சட்டையும், காக்கி நிற பேண்ட் அணிந்திருந்தவன், சட்டை கையை மடித்து விட்டபடியே அங்கு அவனுக்காய் நிப்பாட்டப்பட்டு இருக்கும் காரை நோக்கி நடந்தான். அவனின் வேகமே அவன் எவ்வளவு கோவத்தில் இருக்கிறான் என்று சொல்லாமல் கூறியது. பின்னால் வந்த இளங்கோ அவனின் வேகத்திற்கு ஈடு கொடுத்தபடியே வேகமாய் நடந்தான்.

ருத்ரனுக்கு ஒருவன் கார் கதவை திறந்து விட்டு சலாம் அடிக்க அதனை கண்டுக் கொள்ளாமல் காரில் ஏறி அமர இளங்கோவிற்கு மறு பக்கத்தில் இன்னொருவர் கதவை திறக்க அவனும் வேகமாய் ஏறி அமர்ந்துக் கொண்டான்.

இருவரும் ஏறிய மறு நொடி மின்னல் வேகத்தில் கார் அங்கு இருந்து கிளம்பியது. இன்று இங்கு இருந்து திரும்ப செல்வதற்கு முன்பு ஒரு முடிவோடு தான் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டான் ருத்ரன்.

எதோ ஒன்றை யோசித்தவன் இளங்கோ பக்கம் திரும்பாமலே, “லாயர் கிட்ட சொல்லி டாகுமென்ட் ஏற்பாடு பண்ண சொல்லு. ரெஜிஸ்டர் பண்ற ஆளு என்னோட வீட்டில நைட் ஒன்பது மணிக்கு இருக்கணும்.” என்று கூறியவனின் குரலில் கட்டளையே நிரம்பி இருந்தது.

எதையுமே அவனுக்கு கேட்டு பழக்கமே இல்லை என்பது போல் பேசினான் ருத்ரன். பதினேழு வயதில் இருந்து இப்படி தான் இருக்கிறான். அவன் சொன்னது மட்டுமே நடக்க வேண்டும் என்ற கர்வத்துடனும் தலைகனத்துடனும் இருக்கிறான். அந்த தலைகனம் தான் இப்பொழுது அவனுக்கென்று ஒரு கூட்டம் உருவாக்கியது.

ருத்ரன் எள் என்றால் இளங்கோ எண்ணெயாக இருப்பான். அவனிட்ட கட்டளைக்கு பதில் கூறாமல் போனை எடுத்து காரியத்தை செய்ய ஆரம்பித்தான். அவர்களின் ஆட்களுக்கு, ‘ரெஜிஸ்டரை தூக்கிடுங்க’ என குறுஞ்செய்தி அனுப்பினான். அடுத்ததாய் ருத்ரனின் நண்பனான வக்கீல் வர்மனுக்கு அடுத்த செய்தியை அனுப்பினான். ‘டாகுமென்ட்ஸ்’ என்று மட்டுமே ஒற்றை வார்த்தையில் அனுப்பினான் இளங்கோ. முன்னவே இதனை பற்றி பேசி இருந்ததனால் அவர்களுக்கு அதுவும் புரிந்தது. இளங்கோ மும்மரமாய் அவன் வேலையை செய்துக் கொண்டு இருக்கையிலே, “தூக்கிருங்க” என அடுத்த கட்டளை ருத்ரன் வாயில் இருந்து வெளிவந்தது. அதில் அதிர்ச்சியாக இளங்கோ அவனை பார்த்தான்.

அவர்களின் திட்டத்தில் கடத்தல் இரண்டாவது திட்டமாக தான் இருந்தது. ஆனால் இப்பொழுது திடீரென்று இரண்டாவது திட்டத்தை செயல்படுத்த கூற இளங்கோ அவனை கேள்வியாக பார்த்தான். கண்ணாடி வழியே ருத்ரன் இளங்கோவை அழுத்தமாய் பார்க்க அவன் பார்வையே ‘என்னிடம் கேள்வி கேக்காதே’ என்பது போல் இருக்க அமைதியாய் இளங்கோ அவனின் போனை எடுத்து ‘தூக்கிருங்க’ என சுல்தான் என்ற ஆளுக்கு அனுப்பிட அவர்கள் உடனே காரியத்தை செய்ய கிளம்பினார்கள்.

இந்த விஷயம் தான் இளங்கோவை உறுத்திக் கொண்டே இருந்தது. ருத்ரன் அவனின் இரண்டாவது திட்டத்தை கூறிய பொழுதே இளங்கோவிற்கு அதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லாமல் அவனுக்காய் ஒப்புக் கொண்டான். ருத்ரன் தவறு செய்தாலும் நல்லது செய்தாலும் என்ன சூழ்நிலையாக இருந்தாலும் இளங்கோ அவன் பக்கம் தான் இருப்பான். ருத்ரன் கோவத்தில் எடுக்கும் முடிவை மட்டும் எப்பொழுதும் மாற்றிக் கொள்ளவே மாட்டான் என்று உணர்ந்த இளங்கோ அமைதியானான். அவன் கோவத்திலும் நியாயம் இருந்தாலும் இந்த அளவிற்கு இறங்கி செய்வது தான் அவனுக்கு வருத்தமாய் இருந்தது.

இடம் தியா பேஷன் பேரடைஸ்

பதினைந்து மாடி அடுக்கு கட்டிடத்தின் எட்டாவது தளத்தில் இருக்கும் chief executive ஆபீஸ் என்ற அறையில் தீர்த்தி அமர்ந்து வேலை பார்த்துக் கொண்டு இருந்தாள். நான்கு வருடத்தில் அபாரமாய் அவளின் க்ளோத் பிராண்ட் மார்கெட்டில் தனி இடத்தை பிடித்து இருக்கிறது. அதற்கு முக்கிய காரணம் அவளின் தனித்துவமான ஆடை வடிவமைப்பு தான். இப்பொழுது அடுத்த மாதம் நடக்க இருக்கும் பேஷன் ஷோவிற்கு அவர்கள் கம்பெனி சார்பாக எம்மாதிரியான ஆடையை வடிவமைக்க வேண்டும் என்று யோசித்து யோசித்து வரைந்துக் கொண்டு இருந்தாள். சுற்றி நடப்பதை மறந்து அவளின் உலகில் அவளிருக்க அவளின் அறை கதவை வேகமாய் திறந்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தாள் பிரயுக்தா. அதில் நிமிர்ந்து பார்த்த தீர்த்தி கேள்வியாக புருவங்களை உயர்த்த மூச்சு வாங்க அவள் முன்பு வந்து நின்றவள், “பேஷன் ஷோக்கு நமக்கு குடுத்த இன்விடேசனை கேன்சல் பண்ணிட்டாங்க.”

“வாட்.. என்ன சொல்ற? இன்வைட் பண்ணதுக்கு அப்பறம் எப்படி கேன்சல் பண்ண முடியும்? என்ன விளையாடுறாங்களா அவங்க..” கோவமாக கத்திய தீர்த்தி சேரில் இருந்து எழுந்தாள். இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே இல்லை. தியா பேஷன் பேரடைஸ்யை ஷோவிழும் கலந்துக் கொள்ள கூடாது என்று யாருமே கூறியது இல்லை. எதனால் இப்படி நடந்தது என்று புரியாமல் குழம்பினாள் தீர்த்தி.

“பிரயு, என்ன காரணம்ன்னு சொன்னாங்களா? எதுக்காக கடைசி நேரத்துல கேன்சல் பண்றாங்க?” என எரிச்சல் கலந்த குரலில் கேட்டாள். பிரயு பதில் சொல்ல முடியாமல் தடுமாற, அவளின் தடுமாற்றத்திலே ஏதோ சரி இல்லை என்று உணர்ந்தாள் தீர்த்தி.

“அது வந்து.. நம்ம அனுப்புன டிசைன் ஷோ நடத்துற ஆளுங்களுக்கு புடிக்கலையாம்.. அதே போல இந்த வருஷம் லிமிடடான கம்பெனிய தான் அல்லோ பண்ண போறாங்களாம்.. அதனால நம்மளை கலந்துக்க வேணாம்ன்னு சொல்லிட்டாங்க” வருத்தம் நிறைந்த குரலில் கூறிட, தீர்த்திக்கு கோவம் இன்னும் அதிகரித்தது. கோவத்தில் மேஜையில் ஓங்கி தட்டினாள் தீர்த்தி. ஆறு மாதங்களுக்கு மேலாக கடினப்பட்டு அவளும் அவளுடைய குழுவும் வேலை பார்த்து புதிய டிசைன்களை செய்து இருக்கிறார்கள். இதில் முதலில் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு பின் திடீரென்று வேண்டாம் என்று சொல்லுவது அவளுக்கு அதீத கோவத்தை கொடுத்தது. பிடிக்கவில்லை என்றால் முன்பே சொல்லி இருக்க வேண்டுமே என்ற எண்ணம் அவளுள் ஓடியது.

“கண்டிப்பா இதுல வேற ஒரு விஷயம் இருக்கு.. அதனால தான் திடீர்ன்னு நம்மளை வேணாம்ன்னு சொல்லி இருக்காங்க” என யோசனை உடனே கூறினாள் தீர்த்தி. பிரயுவும் ஆமோதிப்பது போல் தலை அசைக்க, அந்த நேரம் அவர்கள் அறை கதவை தட்டிக் கொண்டு காவலாளி ஒருவர் உள்ளே ஓடிவந்தார்.

“மேடம், கீழ ஒரு ஆளு உங்களை பாத்தே ஆகணும்ன்னு பிரச்சனை பண்றாரு.. அவரு கையில துப்பாக்கி வச்சி இருக்காரு. நீங்க பிஸியா இருக்கிங்கன்னு சொன்னாலும் அவரு கேக்க மாட்டிங்குராறு.” என பதட்டத்துடன் கூறிட தோழிகள் இருவரும் கேள்வியாக புருவத்தை சுருக்கினார்கள்.

யார் என்று தீர்த்தி கேட்பதற்கு முன்பே கதவை திறந்துக் கொண்டு நான்கு பேர் வந்தார்கள். திடீரென்று ஆட்கள் வரவும் இருவரும் திகைக்க, வந்தவனை கண்டதும் தீர்த்தியின் விழிகள் அதிர்ச்சியில் அகல விரிந்தது. ஸ்தம்பித்து நிற்பவளை ஊடுருவம் பாறை பார்த்தான் ருத்ரன். உடன் வந்திருந்த இளங்கோ தீர்த்தி பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தவிர்தான். ருத்ரனை கண்ட அதிர்ச்சி சில நொடிகளே இருந்தது. நடப்பிற்கு வந்தவள் முகம் பாறை போல் இறுக, கையை இறுக மூடிக் கொண்டாள். பிரயுவும் தீர்த்தியும் அங்கு வந்திருக்கும் ருத்ரனையே துளைக்கும் பார்வை பார்த்தார்கள்.

“உன் கிட்ட தனியா பேசணும்.. நீயே போக சொல்றியா இல்ல நான் போக வைக்கவா” திமிராக கேட்டபடியே தீர்த்திக்கு எதிரே இருக்கும் சேரில் அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான் ருத்ரன். தன்னிடத்தில் வந்தே அராஜகம் செய்பவன் மீது அவளுக்கு கோவம் பீறிட்டாலும் தீர்த்தி கண்ணை காட்ட காவலாளி அங்கிருந்து அகன்றார்.

ஆனால் பிரயு அதே இடத்தில் இருக்க, ருத்ரன் இளங்கோ பக்கம் திரும்பி, “அந்த கொடுக்க தள்ளிட்டு போ” என்றுரைக்க இளங்கோ உடனே பிரயு கையை பிடித்து வெளியே இழுத்து சென்றான். அந்த அறையில் ருத்ரன் சவுடாலாக அமர்ந்து இருக்க தீர்த்தி அழுத்தமாய் நின்றுக் கொண்டு இருந்தாள்.

“எதுக்கு இப்படி என் ஆபிஸ் வந்து அராஜாகம் பண்ற?” என சூடாக வார்த்தைகள் தீர்த்தி வாயில் இருந்து வெளிவந்தது. அதில் அவளை அளவிடும் பார்வை பார்த்த ருத்ரன், லேசாய் புனகைத்தான்.

“மிசஸ். தீர்த்தி..” என்று அவளின் முழு பெயரை கூற வந்த ருத்ரன் அவள் பார்த்த தீ பார்வையில் அப்படியே நிறுத்தினான்.

“வந்த நோக்கத்த மட்டும் சொல்லிட்டு கிளம்பு.. தேவை இல்லாத விஷயத்தை பத்தி பேசணும் நினைச்ச நான் சும்மா இருக்க மாட்டேன்” என்று அழுத்தமாய் அவனை பார்த்துக் கொண்டே கூறினாள்.

அதில் எழுந்த ருத்ரன் அவளை நோக்கி வந்தபடியே, “ரொம்பவும் அழகான, திறமையான பிசினஸ் வுமன் நீங்கன்னு கேள்விபட்டேன், அதான் அழகையும் திறமையையும் பார்த்துட்டு போலாம்ன்னு வந்தேன்.” என்று அவளை இன்னும் நெருங்கி வந்து கூற அவனின் நெருக்கும் தீர்த்திக்கு எரிச்சலை கொடுத்தது.

“உன்ன வார்ன் பண்றேன் ருத்ரன், தள்ளியே இரு” என்று கூற சிரித்தான் வில்லன்.

“எனக்கானத என்னைக்கும் என்ன விட்டு போக விட மாட்டேன்… என்ன பண்ணனுமோ அதை பண்ணி என் கிட்ட தக்க வச்சிப்பேன். என் கிட்ட இருந்து எதையும் உன்னால எடுத்துக்க முடியாது.” என்று அவளுக்கு மட்டுமே புரியும் அர்த்தத்துடன் கூற தீர்த்தி அவனை இமைக்காமல் பார்த்தாள்.

ருத்ரன் அவளை மேலும் நெருங்க அவன் வயிற்றில் ஏதோ ஒன்று லேசாய் அழுத்தம் கொடுத்தது. குனிந்து பார்க்க, அவள் தான் கத்திரிக்கோலை அவன் அடிவயிற்றில் வைத்து அழுத்தி இருந்தாள். அவள் செயலில் அவன் உதடுகள் விரிந்தது.

“அதே போல என்னோடதை மத்தவங்க உரிமை கொண்டாட விட மாட்டேன்..” என தீர்த்தியும் கூறி கத்திர்க்கோலை அழுத்த லேசாய் சிரித்தபடியே பின் வாங்கினான் ருத்ரன்.

அவள் கையில் இருந்த கத்திரிகோலை வெடுக்கென்று பிடுங்கி தூர போட்டவன், “அவ்வளவு தான்.. மிசஸ் தீர்த்தி, அந்த கத்திரிக்கோலை திருப்பி உங்க கழுத்துல வைக்க எனக்கு ரொம்ப நேரம் ஆகாது. ஏன்னா நான் ஆர்.வி.. பாத்து இருந்துக்கோங்க.. என்னோடாத எடுத்துக்க ரொம்ப நேரம் ஆகாது.. வீட்டுல எல்லாரும் பத்திரம்” என்று புன்னகை உடன் கூறி அங்கு இருந்து வெளியே வர, இளங்கோ கையில் இருந்து பிரயு விடுபட முயற்சி செய்துக் கொண்டு இருந்தாள்.

ஆனால் அவனோ சிலைபோல் அவளின் கையை அழுத்தமாய் பற்றியபடியே நின்று இருந்தான். ருத்ரன் வருவதை பார்த்ததும் அவளை விட்டு விட்டு அவனுடன் அங்கு இருந்து கிளம்பினான். பிரயு பதட்டமாய் உள்ளே ஓடி வர தீர்த்திக்கு இவ்வளவு நேரம் இல்லாத பயம் அவள் நெஞ்சை கவ்வியது. மேஜையை அழுத்தமாய் பிடித்துக் கொண்டு நின்றாள்.

வெளியே வந்த ருத்ரன் அவன் காரில் ஏறும் முன்பு, “சுல்தான் கிட்ட உடனே பண்ண சொல்லு.. நான் யாருன்னு காட்டுனா தான் இவ வழிக்கு வருவா” என்று குரலில் அப்பட்டமாய் கோவம் தெரிந்தது.

“எதுக்கும் ஒரு தடவை பேசி பாக்கலாம்ல.. நீங்க இப்படி அவசரப்பட்டு பண்ணா பின்னால ரொம்ப பெரிய பிரச்சனை ஆகும்” தயக்கம் நிறைந்த குரலில் கூறினான் இளங்கோ. ருத்ரன் அவன் செய்ய போவதை கூறிய நொடியில் இருந்தே அவனை தடுக்க பார்க்கிறான். ஆனால் ருத்ரன் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

“நீயும் தானே பாத்த.. சொல்றதை கேக்குற நிலமையிலயா இருக்கா? இதுக்கு மேலயும் என்னால பொறுமையா இருக்க முடியாது.. சொன்னதை செய்” என கட்டளையாக கூற, இளங்கோ வேறு வழி இல்லாமல் சரி என்று தலை அசைத்தான்.
 
Top Bottom