• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மறுத்தாலும் உன்னை மறப்பேனா - 3

ரோசி கஜன்

Administrator
Staff member

ருத்ர வேலன் சென்ற மறு நொடியே அவசர அவசரமாய் ஃபோனை எடுத்து அவளின் டிரைவர் சண்முமூகத்திற்கு அழைத்தாள். பிரயுக்தாவோ தோழியின் பதட்டத்தை புரியாமல் கைகளை பிசைந்துக் கொண்டு நின்றாள். நீண்ட நேரம் அழைப்பு சென்ற பின் தான் அவர் அழைப்பை ஏற்றார்.

“அண்ணா பசங்களை ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு உடனே வீட்டுக்கு வாங்க.. நான் அவங்க கிளாஸ் டீச்சர்க்கு கால் பண்ணி சொல்றேன்” பதட்டமாக தீர்த்தி கூற, அந்த பதட்டம் சண்முகத்திற்கும் ஒட்டியது.

“என்னமா சொல்ற? இப்போவே கூப்பிட போனுமா? ஸ்கூல் முடிய இன்னும் ரெண்டுமணி நேரம் இருக்கே.. ஏதாவது பிரச்சனையா?” என்று தவிப்புடன் அவர் கேக்க,

“ஆமா அண்ணா நீங்க ரெண்டு பேரையும் பத்திரமா கூட்டிட்டு வாங்க” என பதட்டத்துடன் கூறியவள் அழைப்பை துண்டித்து உடனே பள்ளி ஆசிரியருக்கு அழைக்க முற்பட்டாள்.

நடப்பது புரியாமல் பார்த்த பிரயுக்தா, “ஏன் டி இப்போ பசங்களை கூட்டிட்டு வர சொல்ற? என்ன ஆச்சு? அவரு என்ன சொல்லிட்டு போனாரு?” என்று தீர்த்தி தோளில் கை பதித்து அவளின் பதட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்தாள்.

“எனக்கு என்னவோ பயமா இருக்கு.. இவன் வந்தது சரியே இல்ல.. காரணமே இல்லாம இவன் வர மாட்டான்.. திரும்பவும் எல்லாத்தையும் இழந்திடுவேனோ பயமா இருக்கு டி” என கூறியவளின் குரல் உடைந்து வர வெடித்து அழுக ஆரம்பித்தாள்.

அவளை அனைத்துக் கொண்ட பிரயுக்தா, “இங்க பாரு அழாத.. தையிரியமா இரு.. அந்த மாதிரி திரும்பவும் நடக்காது சரியா.. வேணும்னா நம்ம ஸ்கூல்க்கு உடனே போலாம்” என்க, “இல்ல.. சண்முக அண்ணா கிளம்பிட்டாரு.. சோ அவரே கூட்டிட்டு வந்திடுவாரு.. நான் வீட்டுக்கு முன்ன போறேன்.. முதல்ல அவங்க மேம்க்கு கால் பண்ணி பேசுறேன்” என கூறியவள் கைகள் நடுங்க அழைத்தாள்.

தீர்த்தியின் பயம் பிரயுக்தாவை வருத்தம்கொள்ள செய்ய, அவளின் முதுகை வருடியபடியே நின்றாள். நீண்ட அழைப்பிற்கு பின் வகுப்பாசிரியர் அழைப்பை ஏற்றார்.

“ஹலோ மேம் நான் தீர்த்தி பேசறேன், அருள், சூர்யா ஓட அம்மா.. டிரைவர் இப்போ வருவாரு ஒரு எமர்ஜென்சி சோ பசங்களை அனுப்பி வைக்குறீங்களா?” என்று எடுத்ததுமே அவள் மட மடவென கூற, “மேம் என்ன சொல்றீங்க? கொஞ்ச நேரம் முன்ன உங்களுக்கு ஆக்சிடென்ட் ஆச்சுன்னு உங்க அசிஸ்டன்ட் ஒருத்தர் பசங்களை கூட்டிட்டு போனார் இப்போ இப்படி சொல்றீங்க?” என குழப்பம் கலந்த பதட்டத்துடன் ஆசிரியர் கூற, மறு பக்கத்தில் இருந்த தீர்த்திக்கு வயிற்றில் புலியை கரைப்பது போன்று இருந்தது.

யாரோ ஒருவர் அவளின் செல்வ புத்திரர்கள் அழைத்து சென்று விட்டார் என கேட்டதுமே ருத்ரன் முகம் தான் மின்னல் போல் அவள் கண் முன்னே வந்து சென்றது. ஸ்தம்பித்து நின்றவள் கண்களில் கண்ணீர் புரண்டோட, வகுப்பாசிரியர் எதிர்பாக்கத்தில் கத்தினார்.

“மேம்… ஹலோ இருக்கீங்களா? பசங்களுக்கு எதுவும் இல்லல?” என அவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. பள்ளி மீது தவறு இல்லை என்பதனால் கண்ணீரை கட்டுப்படுத்திக் கொண்டவள், “ஆ.. ஒன்னும் இல்ல மேம்.. இப்போ தான் பசங்க வர்றாங்க.. நான் அப்பறம் எக்ஸ்பிளேன் பண்றேன்” என கூறி விட்டு அழைப்பை துண்டித்தவள் வெடித்து அழுக ஆரம்பித்தாள்.

அவள் அழுகவும் பதறிய பிரயுக்தா, “என்ன டி ஆச்சு மேம் என்ன சொன்னாங்க?” பதட்டத்துடன் கேக்க, தீர்த்தி பொத்தென்று தரையில் விழுந்து சத்தமாய் அழுதாள். மீண்டும் அவள் வாழ்க்கையில் அவனால் பிரச்சனை துவங்கியதை நினைத்து அழுதவளுக்கு அவளின் மகன்களை பற்றிய கவலை இன்னும் அதிகரித்தது. நொடி பொழுதில், அவளின் கடந்தகாலம் வந்து செல்ல, பாவையவள் துடிதுடித்து போனாள்.

அழுபவளை தேற்ற முடியாமல் தவித்த பிரயுக்தா கண்களும் பணித்தது.

“என்னன்னு சொல்லு டி.. என்ன ஆச்சு பசங்களுக்கு ஏன் இப்படி அழகுற? எனக்கு பயமா இருக்கு டி” என்று பொறுக்க முடியாமல் கத்த அவளை கட்டிக் கொண்டாள் தீர்த்தி. தோழியின் உடல் பாரத்தோடு மன பாரத்தையும் தாங்கிக் கொள்ள நினைக்க, அதுவோ அவள் மனதை விட்டு வருவேனா என்றிருந்தது.

தேம்பி தேம்பி அழுத தீர்த்தி, “பசங்க.. பசங்களை காணோம் டி..” என்றுரைக்க திகைத்தாள் பிரயுக்தா.

“என்ன டி சொல்ற? பசங்களை காணோமா? ஸ்கூல்ல தானே இருந்தாங்க எப்படி டி காணாம போவாங்க?” என அவள் படபடத்துக் கொண்டிருக்கும் பொழுதே மீண்டும் தீர்த்தியின் போன் அடித்தது. டிரைவர் சண்முகம் தான் அழைத்திருந்தார். அவர் எதற்காக அழைத்திருக்கிறார் என்று அறிந்தவள் அழைப்பை ஏற்று, “சொல்லுங்கண்ணா” என சுரத்தையே இல்லாமல் கூறினாள்.

“அம்மா.. பசங்களை கூட்டிட்டு போயிட்டதா சொல்றாங்க.. என்ன மா ஆச்சு?” என அவரும் படபடக்க, “பசங்களை கூட்டிட்டு வந்துட்டாங்க அண்ணா.. நான் பாத்துக்குறேன்” என சமாளிக்க, நிச்சயம் எதோ ஒன்று சரி இல்லை என்று அவருக்கு புரிந்தது.

ஆனால் காரணம் இல்லாமல் அவள் மறைக்க மாட்டாள் என்று அறிந்து இருந்தவர் சரி என்றதோடு அழைப்பை துண்டித்தார். போனை வைத்த உடன் கால்களை கட்டிக் கொண்டு முட்டியில் முகத்தை புதைத்து குலுங்கி குலுங்கி அழுதாள் தீர்த்தி.

பரிதவிப்புடன் அவள் முதுகை வருடிய பிரயுக்தா, “போலீஸ் கிட்ட வேணும்ன்னா கம்ப்ளைன்ட் பண்ணலாமா?” என்று கேக்க, மறுப்பாக தலையசைத்தாள்.

“என்ன பண்ணாலும் பிரோஜனம் இருக்காது.. அவன் பண்றதுக்கு முன்னவே நான் ஏதாவது பண்ணி இருக்கணும்.. தப்பு பண்ணிட்டேன் பிரயு.. என் குழந்தைங்களை நான் தவிக்க விட்டேன்.. பசங்க பொறந்ததும் நான் ஊற விட்டே போய் இருக்கணும்.. நான் தான் முட்டாள் தனமா இங்கயே இருந்துட்டேன்.. இப்போ எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்.. எனக்கு பயமா இருக்கு டி.. என் பசங்க எனக்கு கிடைக்க மாட்டாங்களோ? அவன் எதுவும் பண்ண மாட்டானே? பசங்களுக்கு அவன் யாரு என்னன்னு தெரியாது.. எப்படி அவன் கூட இருப்பாங்க? ரெண்டு பேரும் பயந்து இருப்பாங்களே..” என்று தேம்பி தேம்பி அழுதபடியே கேக்க, பிரயுக்தாவிற்கு மனம் கசந்தது.

அவளை அனைத்துக் கொண்டவள், “இங்க பாரு தீர்த்தி.. நீ எமோஷனல் ஆகாத.. இது கஷ்ட்டமான நேரம் தான்.. ஆனா அடுத்து என்ன பண்ணனும்னு யோசிக்கணும்ல.. நம்ம வேணும்ன்னா கமிசனர் கிட்ட சொல்லி அன்அபிசியலா தேட சொல்லலாமா? இல்ல பிரைவேட் செக்யூரிட்டி ஏஜென்சி கிட்ட சொல்லி தேட சொல்லலாமா? கண்டிப்பா சென்னையில தான் இருப்பாங்க.. ஒரே நாள்ல நம்ம கண்டு புடிச்சிரலாம்” என்று அவளின் கண்ணீரை துடைத்தபடியே கூற, அவளும் அப்பொழுது தான் யோசிக்க்கவே செய்தாள். எப்படியாவது மாலை நேரத்திற்குள் அவளின் புத்திரர்களை கண்டு பிடித்தே ஆக வேண்டும் என நினைத்தாள்.

“தீர்த்தி எனக்கு ஒரு யோசனை.. உன் அண்ணி கிட்ட சொல்லி பாரேன்.. கண்டிப்பா உதவி பண்ணுவாங்க” என சிறு தயக்கத்துடன் கூற மறுப்பாக தலையசைத்தாள் அவள். அவளுக்கு தெரியும் நிச்சயம் அவரிடமிருந்து உதவி கிடைக்கும் என்று. ஆனால் ஆறாத காயத்தில் மீண்டும் தீ பிழம்பை ஊற்ற அவளுக்கு மனமில்லை. “வேணாம்.. நான் பாஸ்கர் அண்ணாக்கு கால் பண்றேன்..” என்று கூறியவள் பாஸ்கருக்கு அழைத்தாள்.

பாஸ்கர் தான் அவளின் முதல் முதல் பாடிகார்ட். இருவருக்கும் நான்கு வயது தான் வித்தியாசம். தீர்த்திக்கு பதினைந்து வயதிருக்கும் பொழுதே அவளின் நிழலாய் இருப்பவன். அவளின் கடந்த காலத்தை பற்றி அறிந்தவன். அதனால் தான் அவனிடம் இந்த பொறுப்பை ஒப்படைக்க நினைத்தாள். ஒரே ரிங்கில் பாஸ்கர் அழைப்பை ஏற்றான். அவனுக்கு தெரியும், அவசர தேவை இல்லாமல் அவள் அழைக்க மாட்டாள் என்று.

“சொல்லுங்க மா என்ன ஆச்சு?” என எடுத்ததுமே கேட்க, “அண்ணா என் பசங்களை காணோம்.. அவனை கண்டு புடிச்சி கொடுங்க” என கமரிய குரலில் கூறினாள். அடுத்த நொடியே கார் சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.

“நீங்க கவலையே படாதிங்க.. இன்னும் ரெண்டு மணி நேரத்துல பசங்க வீட்டுல இருப்பாங்க” என உறுதியாக கூறினான்.

“அவன் என்ன பாக்க வந்தான்.” என்று அவள் கூற, கார் கதவை திறந்தவன் அப்படியே உறைந்தான். ‘அவன்’ என்றதிலே யார் அது என புரிந்துக் கொண்டான். கசந்த நினைவுகள் கண் முன்னே வந்து செல்ல, கண்களை மூடி திறந்தவன், “எப்படியாவது பசங்களை கண்டு புடிக்க பாக்குறேன்” என்றான். அதில் விசும்பியவள், “அண்ணிக்கு தெரிய வேணாம்” என்க பாஸ்கர் எதுவும் சொல்லாமல் அழைப்பை துண்டித்தான்.

தீர்த்தி அணைக்கப்பட்ட போனையே பார்த்தவள் கவலை எல்லாம் மகன்கள் மேலையே இருந்தது. திரையில் அவளின் அருளும் சூர்யாவும் சிரித்தபடியே இருக்க, கண்ணீரோடு அவர்கள் புகைப்படத்தை வருடிவிட்டாள்.

“அழாத டி.. பசங்க கிடைச்சிடுவாங்க.. கண்டிப்பா சாயந்தரம்குள்ள வீட்டுக்கு வந்திடுவாங்க.” என ஆறுதல் கூறினாள்.

மறு பக்கம் ருத்ரன் காரில் சூர்யாவும் அருளும் பயணித்துக் கொண்டிருந்தனர். இருவரும் பயந்த விழிகளுடன் அருகே இருக்கும் ருத்ரனை பார்க்க அவனோ இருவரையும் பாசமாய் பார்த்தான். சூர்யாவின் தலையை வருட வர அருள் அவன் கையை தட்டி விட்டான். “நீங்க யாரு? எதுக்கு மேம் எங்களை உங்க கூட அனுப்பி வச்சாங்க? அம்மா எங்க” என கேள்வியாய் கேக்க ருத்ரன் சிரித்தான்.

“எங்க அம்மா ஸ்ட்ரேன்ஜர்ஸ் கூட எங்கயும் போக கூடாதுன்னு சொல்லி இருக்காங்க..” என பாவமாய் சூர்யா சொல்ல, வண்டியை ஓடிக்கொண்டிருந்த இளங்கோ மெலிதாக புன்னகைத்தான்.

“ஆனா நான் ஒன்னும் ஸ்ட்ரேன்ஜர் இல்லையே” என ருந்த்ரன் கூற சூர்யா அவனை விழிவிரித்து பார்த்தான். ஆனால் அருளோ அவனை முறைத்தான். ஏனோ அருள் பயம் இல்லாமல் அவனை முறைத்து பார்த்தான்.

“நீங்க அப்போ யாரு?” சூர்யா ஆர்வமாய் கேக்க, ருத்ரன் அவன் போனில் அவனும் தீர்த்தியும் அருகருகே நிற்கும் புகைபடத்தை காட்டி, “உங்க அம்மாவோட பிரெண்ட் போதுமா?” என்றான். அருள் அதனை ஓரக்கண்ணால் பார்த்து விட்டு அமைதியானான்.

சூர்யா ருத்ரனையே ஆர்வமாக பார்த்தான். “அப்போ அங்கிள் எங்களை எங்க கூட்டிட்டு போறீங்க?” என்று கேக்க, அவன் அங்கிள் என்ற வார்த்தையில் ருத்ரன் மனம் கசந்தது.

சூர்யா கேட்ட கேள்விக்கு அவனுக்கு எப்படி பதில் சொல்வதென்று தெரியவில்லை. இருவரையும் அழைத்து செல்ல நினைத்து அழைத்து வந்து விட்டான். இப்பொழுது என்ன சொல்லி சமாளிப்பது என்று தெரியாமல் இளங்கோவை பார்த்தான்.

அவன் பார்வையை உணர்ந்துக் கொண்ட இளங்கோ, “அது உங்களுக்கு சர்ப்ரைஸ்.. உங்க அம்மா சீக்ரட்டா வச்சிக்க சொன்னாங்க” என்க, சூர்யா மகிழ்ந்தான். அம்மாவிற்கு தெரிந்தவர் என்றதனால் அவனுக்கு எந்த பயமும் இல்லை. சூர்யா துள்ளி குதிக்க, அவனின் கையை பிடித்து தடுத்தான் அருள்.

“இல்ல அங்கிள் நாங்க அம்மாவை பாக்கணும்.. அம்மா கிட்ட கூட்டிட்டு போங்க” என்றான். அதில் அருள் தலையை ருத்ரன் பரிவாய் வருட, அவன் கையை தட்டி விட்டான்.

அதில் ருத்ரன் மனம் கனத்தாலும், “உங்க அம்மா கொஞ்சம் பிஸியா இருக்காங்க.. உங்களை பாத்துக்க சொல்லி இருக்காங்க.. சோ நம்ம அப்பறமா உங்க அம்மாவை பார்க்கலாம் சரியா?” என மென்மையாக கூற அருள் முகத்தை திருப்பினான்.

உடனே சூர்யா அருள் கன்னத்தை பற்றி, “ப்ளீஸ் டா நம்ம அங்கிள் கூட விளையாடலாம்.. அம்மா தான் பிஸியா இருக்காங்கல..” என்று கொஞ்சலாக கூற ருத்ரன் வாஞ்சனையோடு அவனை பார்த்தான். “இவன் அம்மா மாதிரி அவன் அவங்க அப்பா மாதிரி போல” என இளங்கோ கேலியுடன் கண்ணாடி வழியே ருத்ரனை பார்த்தபடி கூற அவனோ அவனை முறைத்தான்.

பசங்களை சமாளிக்க நினைத்தவன், “பசங்களா அங்கிள் உங்களை வானத்துல பறக்க வச்சி காட்டவா?” என்று கேக்க, அடுத்த நொடியே இளங்கோ காரை சடன் பிரேக் போட்டு நிறுத்தினான். என்ன தான் அருள் முறைப்புடன் இருந்தாலும் அவனும் சிறுவன் தானே.. சூர்யா கெஞ்சலாக அருளை பார்க்க அவன் எதோ அவனுக்காக ஒப்புக்கொள்வது போல் ஒப்புக் கொள்ள, ருத்ரன் கள்ள சிரிப்பு சிரித்தான்.

“இல்ல வேணாம்.. அவங்க ரொம்ப வருத்தபடுவாங்க” என இளங்கோ எச்சரிக்க, “நீ நான் சொன்னதை செய் டா.. இனி பசங்க என் பொறுப்பு” என்று கூறியவன் இருவரையும் மடியில் கிடத்திக் கொண்டான்.

நேரம் ஓடிக் கொண்டே இருக்க தீர்த்தி பதட்டத்துடனும் அழுகையுடனும் அவளின் போனையே பார்த்துக் கொண்டிருந்தாள். நேரம் இரண்டு ஆகி இருந்தது. காலையில் பதினோரு மணிக்கே பாஸ்கருக்கு அழைத்திருந்தாள். அதன் பின்பு அவனிடமிருந்து எந்த ஒரு அழைப்பும் வரவில்லை. பாஸ்கரிடம் ஒரு வேலையை ஒப்படித்தால் நிச்சயம் முடித்து விட்டு தான் திரும்புவான். அதனால் தான் அவனை மலை போல் நம்பி இருந்தாள். ஆனால் அவன் இன்னும் அழைக்காமல் இருக்க அவளுக்கு பதட்டம் அதிகரித்தது. அழுது கொண்டே குறுக்கும் நெடுக்கும் அவள் நடந்துக் கொண்டிருக்க, பிரயுக்தா கையில் ஜூசுடன் நின்றிருந்தாள். ஒரு மணி நேரமாய் அவளை ஜூஸ் குடிக்க சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறாள். ஆனால் அவளோ கேட்கவே இல்லை.

“தீர்த்தி தயவு செஞ்சி இதை குடி.. அழுது அழுது ரொம்ப டிஹைட்ரேட் ஆகி இருக்க.. நீ இப்படி இருந்தா மட்டும் பசங்க வந்திருவாங்களா? அதான் பாஸ்கர் சார் தேடுறாருல” என பொறுமையிழந்து கூற, சிவந்த விழிகளுடன் அவளை ஏறிட்டு பார்த்தாள்.

“என்னால முடியல டி.. என்ன ஆச்சோ ஏதாச்சோன்னு பதட்டமா இருக்கு.. அண்ணா நிச்சயம் சொன்னா செய்வாரு.. ஆனா அவரு இன்னும் கால் பண்ணாம இருக்காரு.. எனக்கு பயமா இருக்கு டி.. எதலாம் நடக்கவே கூடாதுன்னு நினைச்சேனோ அதெல்லாம் நடக்குது.. இவ்வளவு நேரத்துல பசங்க என்ன கண்டிப்பா தேடி இருப்பாங்க.. அவங்க சாப்டாங்களா இல்லையான்னு தெரியல” என கண்ணீரோட புலம்பியவள் நடந்து வந்து அவளின் சேரில் அமர்ந்துக் கொண்டாள். அவளுக்கு எங்கே தெரிய போகும் அங்கு அவன் அவளின் செல்லங்களுக்கு பீசாவும் பர்கரும் வாங்கி கொடுத்து நிரப்பிக் கொண்டிருப்பதை.

சேரில் கண் மூடி சாய்ந்திருந்தவள் போன் அடிக்க உடனே அவசர அவசரமாய் போனை எடுத்தாள்.

பாஸ்கர் அழைத்திருக்க உடனே அழைப்பபை ஏற்றவள், “அண்ணா பசங்க எங்க? அவங்க நல்லா இருக்காங்களா? அழுகலையே?” என பரிதவிப்புடன் அவள் கேக்க,

ஆழமாய் பெரு மூச்சு விட்டவன், “இல்லம்மா பசங்களை எங்க தேடியும் கண்டு புடிக்க முடியலை.. அப்பறம் ஒரு விஷயம்.. பசங்க ஊருக்குள்ள இல்ல.. இதுக்கு மேல என்னால உங்களுக்கு உதவி பண்ண முடியாது.. திரும்பவும் நான் அதே தான் சொல்றேன்.. நீங்க தான் இந்த தப்பான வழிய தேர்ந்தேடுத்திங்க.. முழுசா அதை ஏத்துகிட்டு உங்களோட எல்லாத்தையும் முடிச்சிடுங்க.. இல்ல அது உங்களை சுத்தி இருக்குறவங்களை பாதிக்கும்.. ஏற்கனவே இழந்தது எல்லாம் போதும். உங்களை பாதுகாத்த காலம் போய் இப்போ ருபிக்காவ நான் பாத்துக்கணும்.. அவனுக்கு என்ன வேணும்ன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும்.. அதை அடையாம அவன் விட மாட்டான்.” என்று கூறினான்.

அவனை பாதியிலே இடை வெட்டிய தீர்த்தி, “அப்போ என் மேல இருந்த அக்கறை எல்ல்லாம் அவ்வளவு தானா? நான் எப்படியோ போனா பரவாலையா?” என கண்ணீரோட கேட்டவளின் குரல் உடைந்திருக்க,

கொஞ்சமும் யோசிக்க்காதவன், “பரவாயில்ல.. உங்களுக்கே தெரியும் அவன் கேட்டது கிடைக்க யார வேணாலும் கொல்லுவான்னு..” என்க, தீர்த்தி வெடித்து அழுதாள்.

“தப்பு தான்.. தப்பு பண்ணிட்டேன்.. ஆனா இத்தனை வருஷம் என்ன தண்டிக்குறது நியாயமா? எனக்காக இல்லனாலும் என் பசங்களுக்காக உதவி பண்ணுங்களேன்” காலில் விழாத குறையாக கெஞ்சினாள்.

“வாழ்க்கை முழுக்க ரெண்டு பேரு தவிச்சிட்டு இருக்காங்க.. அவங்களை நினைச்சா நீ இப்படி கேக்க மாட்ட” என்று கூறி விட்டு இதற்கு மேல் அவளிடம் பேச எதுவுமில்லை என்பதுபோல் அழைப்பை துண்டித்தான் பாஸ்கர்.

அவளை ஒன்றும் அவன் வேண்டும் என்றே காயப்படுத்தவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் அவனிருக்கிறான். அழைப்பு துண்டிக்க பட்டதுடன், அவனுடனான உறவும் துண்டிக்கப்பட்டது என புரிந்துக் கொண்டாள் தீர்த்தி. கஷ்ட்ட காலத்திலும் உதவிக்கென்று வர ஒரு உறவும் இல்லாமல் அனாதையாய் இருக்கும் அவல நிலையை எண்ணி அழுவதா இல்லை ஈன்ற மகன்கள் அவள் வாழ்க்கையை நாசம் செய்தவனின் கையில் இருப்பதை நினைத்து அழுவதா என்று தெரியாமல் விம்மி அழுது கொண்டிருந்தாள்.
 
Top Bottom