STN-116
Member
MTN 14
மயிலிறகே மயிலிறகே மனம் வருட வந்தாயா...
மணிகிளியே மணிகிளியே மனம் திருட வந்தாயா...
பாடலின் அதிரடி இசை ஒலிபெருக்கியில் முழங்க, அந்தப் பிரம்மாண்ட அரங்கமே அதிர்ந்தது.
மேடையில் மேகலாவும் சிவாவும் ஒருவருக்கொருவர் சளைக்காத வேகத்துடன் துள்ளலாக நடனமாடிக் கொண்டிருந்தனர். பாடலின் தாளத்திற்கேற்ப அவர்களது கைகளும் கால்களும் சுழன்று ஆடின.
அவர்களது ஆட்டத்தில் இருந்த அந்த ஒருங்கிணைப்பும், அவர்களது முகத்தில் தென்பட்ட அந்த உற்சாகமான பாவங்களும், துடிப்பான அசைவுகளும் பார்ப்போரின் வேகத்தைக் கிளப்பி, அவர்களையும் அறியாமல் தாளம் போட வைத்தன.
சிவா தன் அசைவுகளில் ஒருவிதமான வேகத்தைக் காட்ட, மேகலாவோ அந்த வேகத்திலும் ஒரு மென்மையான நளினத்தைக் கலந்து ஆடினாள். பாடலும் ஆடலும் முடிய, கரகோஷம் வானைப் பிளந்தது.
சித்திரை நிலவின் குளிர்ச்சியும், இளவேனிற்காலத்தின் இதமான காற்றுமாக சித்திரை புத்தாண்டு மங்களகரமாக ஆரம்பித்தது.
அதிகாலையிலேயே எழுந்து, குளித்துப் புத்தாடை அணிந்து அனைவரும் கேட்போர் கூடத்தில் ஒன்றிணைந்தனர்.
ஒவ்வொருவரும் தத்தமது பாரம்பரிய உடைகளில், ஒரு புதுவிதமான பொலிவுடன் ஜொலித்துக் கொண்டிருந்தனர்.
மேகலா, அரக்கு நிறப் பட்டுப்பாவாடைக்கு தங்க நிறத் தாவணில், தலையில் மல்லிகைச் சரம் சூடி, தேவதையாய் மின்னினாள்.
சிங்கள மற்றும் தமிழ் கலாச்சாரங்கள் சங்கமிக்கும் அந்தப் பயிற்சி மையத்தில், கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன. எங்கும் மங்களகரமான மஞ்சள் நிறமும், பசுமை நிறைந்த பச்சையும், ஆவேசம் மிகுந்த சிவப்பும் தோரணமாகக் காட்சியளிக்க, விழாவிற்கே உரிய பிரத்தியேக வாசனை அந்த அறையெங்கும் நிறைந்திருந்தது.
மேசைகளில் இரு இனத்தவருக்கும் உரிய பாரம்பரியப் பலகாரங்கள் அணிவகுத்து நின்றன. கொக்கிஸ், கொண்டைப்பணியாரம், பால்சோறு ஆகியவற்றுடன் முறுக்கு, அதிரசம், லட்டு, பயற்றம் பலகாரம் மற்றும் வடபகுதிக்கே உரித்தான காரசாரமான பருத்தித்துறை வடை என அங்கே அடுக்கப்பட்டிருந்தவை பார்ப்பவர்களின் நாவூறச் செய்தன.
கேட்போர் கூடத்தில் கலை நிகழ்ச்சிகள் களைகட்டத் தொடங்கின. மேடையில் ஒவ்வொருவராகத் தோன்றி, தத்தமது தனித்துவமான திறமைகளை மிக உற்சாகத்துடன் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மேகலா, சுபா மற்றும் சிவா ஆகிய மூவரும் இணைந்து நடனமாடத் தயாராகியிருந்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக மேடையேற வேண்டிய கடைசி நிமிடத்தில் சுபாவுக்குத் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, சிவாவும் மேகலாவும் மட்டும் மேடையேறினர்.
ஆடி முடிந்து அவர்கள் மேடையை விட்டு இறங்கியபோது, மேகலாவின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைச் சரம் மெல்லச் சரிந்து அவளது தோளில் விழுந்தது. அதைச் சட்டென்று கவனித்த சிவா, ஒரு தமையனுக்கே உரிய உரிமையுடன் மிக இயல்பாக அதை எடுத்துச் சரிசெய்து கூந்தலில் செருகினான்.
அதேவேளையில், நடனத்தின் வேகத்தில் அவளது ஆடையின் ஒரு மடிப்புச் சற்று விலகியிருப்பதையும் கவனித்தவன், மற்றவர்களின் கண்களுக்குத் தெரியாதவாறு அதை லாவகமாகச் சீர்செய்தான்.
சிவாவின் இந்தச் செய்கையில் எந்தவிதத் தப்பான எண்ணமும் இல்லை. மாறாக, ஒரு தோழியைத் தர்மசங்கடமான நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற அக்கறை மட்டுமே இருந்தது. மேகலாவுக்கும் அவன் மீது இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையால், அவன் தொட்டது கூடத் தெரியாமல் தன் உடையை ஒழுங்குபடுத்திக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
தூரத்திலிருந்து இந்தக் காட்சியைக் கவனித்துக் கொண்டிருந்த தரிந்துவின் முகத்தில் அனல் தெறித்தது. அவனது விழிகளில் பொறாமை ஒரு காட்டுத்தீயைப் போலப் பரவி, உள்ளத்தை எரித்தது. ஒரு சாதாரணத் தோழனாகச் சிவா செய்யும் அந்த உதவி, தரிந்துவின் பார்வையில் ஒரு காதலனின் உரிமையாகத் தெரிந்து அவனைத் துடிக்க வைத்தது.
இன்று அவளைப் பார்க்கவென்றே நேரத்தோடு கிளம்பி வந்திருந்தான். எப்போதும் பயிற்சியுடையில் பார்த்துப் பழகியவளை, இன்று பாவாடைத் தாவணியில் கண்ட நொடி, அவன் கண்கள் அவளை விட்டு அகல மறுத்தன. அவளது அந்த எளிமையான அலங்காரமும், அவளது முகத்தில் படிந்திருந்த அந்தத் தூய்மையான புன்னகையும் தரிந்துவை என்னவோ செய்தது. சுற்றிலும் இத்தனை பேர் இருந்தும், அவனது உலகம் அந்த ஒரு நொடியில் மேகலாவைச் சுற்றி மட்டுமே சுழலத் தொடங்கியது.
அவளது ஒரு சிறு பார்வைக்காகவும், புன்னகைக்காகவும் அவன் தவம் கிடக்க, அவளானால் அவன் அங்கே இருப்பதைக்கூடச் சற்றும் சட்டை செய்யாமல், வேறொருவனுடன் நெருக்கமாக மேடையில் நடனம் ஆடிவிட்டு வருகிறாள்.
தன்னால் தீண்ட முடியாத அந்தத் தேவதை, இன்று அவனது கண்முன்னே வேறொருவனின் அருகாமையைச் சாதாரணமாக ஏற்றுக்கொள்கிறாளே என்ற ஏக்கம் அவனைத் தவிக்க வைத்தது. ஒருபுறம் ஆராத காதல், மறுபுறம் கட்டுப்படுத்த முடியாத பொறாமை என தரிந்துவின் மனம் ஒரு போர்க்களமாக மாறியிருந்தது.
தன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முயன்றவன், அமர்ந்திருந்த கதிரையின் விளிம்பை இறுகப் பற்றினான். கைகளில் நரம்புகள் புடைக்க, கோபத்தை அடக்கிக் கொண்டு பற்களைக் கடித்தபடி அமர்ந்திருந்த அந்தத் தோற்றம், எரிமலை ஒன்று வெடிக்கக் காத்திருப்பதைப் போலவே இருந்தது.
எரிந்து கொண்டிருக்கும் நெருப்பில் எண்ணெயை ஊற்றிப் பெருக்க வைக்கும் நோக்குடன், மிக நிதானமாகத் தரிந்துவின் அருகில் வந்து அமர்ந்தாள் காஞ்சனா. அவனது கண்கள் சிவந்து போயிருப்பதைக் கவனித்தவள், அதை இன்னும் தூண்டிவிடத் தொடங்கினாள்.
"தெக்கத தரிந்து...?? (பார்த்தீர்களா?) சிவாவும் மேகலாவும் எவ்வளவு நெருக்கமா இருக்கிறாங்க எண்டு... க்யூட் ஜோடி னே... அவங்க கெமிஸ்ட்ரி நல்லா இருக்கு... அவங்க ரெண்டுபேரும் லவ் பண்ணுறாங்க எண்டு நினைக்கிறன்... அவங்கட பார்வைய பார்த்தாலே விளங்குது..."
அவள் தரிந்துவின் முகபாவங்களை உன்னிப்பாகக் கவனித்தபடி, அடுத்த கட்ட விஷத்தைக் கக்கினாள்.
"இப்ப கூடப் பார்த்தீங்க தானே... அவன் எவ்வளவு உரிமையோட அவளைத் தொட்டு எந்தும், கெஸ் (உடை, கூந்தல்) எல்லாம் சரி பண்ணிவிடுறான்... அனித் பிரிமித்தெக்க (அடுத்த ஆண்களுடன்) டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ணுறவ, இவனோட மட்டும் எப்படி நெருக்கமா பழகுறாள்... நான் கூட அவ உங்கள லவ் பண்ணுறாளோ எண்டு நினைச்சு அவட்டயே கேட்டன்... கேவலம் ஒரு சிங்களவன நான் லவ் பண்ணுறதா எண்டு கோபப்பட்டாள்... அவங்க ரெண்டுபேரும் தமிழாக்கள்... ஒரே இனம்... ஏ ஹிந்தா, எயாலாகே ஆதரேட்ட விருத்தத்த்வயக் வென்னெ நே ... (அதனால், அவர்களது காதலுக்கு எதிர்ப்பு ஒன்றும் இருக்காது)" என்று விஷத்தை விசிறினாள் காஞ்சனா.
தரிந்துவை மனரீதியாகக் காயப்படுத்தி, அவனைப் பலவீனமாக்கித் தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதே காஞ்சனாவின் திட்டமாக இருந்தது.
யாரும் எதிர்பாராத அந்தத் தருணத்தில், தரிந்து கம்பீரமாக மேடை நோக்கிச் சென்று மைக்கைக் கையில் எடுத்தான். அதுவரை நிலவிய சிரிப்பொலிகளும் பேச்சுக் குரல்களும் சட்டென்று அடங்கின.
அனைவருடைய விழிகளும் ஆச்சரியத்துடன் அவன் மேல் நிலைத்திருக்க, ஒரு கணம் மேகலாவை ஊடுருவிப் பார்த்தான்.
"காதல் மட்டுமல்ல... இசையும் இனம், மதம், மொழிக்கு அப்பாற்பட்டது தான்..."
என்று பெருமூச்சுடன் கூறிவிட்டு, விழிகளை மூடி தன் ஆழ்மனதின் உணர்வுகளை எல்லாம் ஒன்றுதிரட்டி, தன் காந்தக் குரலில் இசைக்கத் தொடங்கினான்.
ஒரு பொய்யாவது சொல் கண்ணே...
உன் காதல் நான் தான் என்று...
அந்த சொல்லில் உயிர் வாழ்வேன்...
பூக்களில் உன்னால் சத்தம்...
அடி மௌனத்தில் உன்னால் யுத்தம்...
இதைத் தாங்குமா என் நெஞ்சம்...
வாடைக் காற்று பட்டு
வயதுக்கு வந்த பூக்கள்
கொண்டுத் தங்கம் தங்கம்
பூசித் தோள் செய்தானோ...
ஆனால் பெண்ணே... உள்ளம் கல்லில் செய்து வைத்தானோ...
நிலவினை எனக்கு அருகில் காட்டியது நீதானே...
மலரின் முகவரிகள் சொன்னதும் நீதானே...
காதல் கண்ணே... நெஞ்சை மட்டும் மூடி வைத்தாயே...
அவன் தமிழ் பாடலைப் பாடியதும், அவனுக்கு தமிழ் தெரியுமா என்ற அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றனர் அனைவரும். அவனது உச்சரிப்பில் இருந்த சிறு தட்டுப்பாடுகளைத் தாண்டி, அதில் வழிந்த அந்த உணர்ச்சிப் பெருக்கு அங்கிருந்தவர்களின் இதயங்களைக் கட்டிப்போட்டது. அந்தப் பாடல் அவனது ஆழமான காதலையும், ஏக்கத்தையும் அப்படியே பிரதிபலித்தது.
பாடி முடித்ததும், கைதட்டல்களுக்காகக் கூடக் காத்திருக்காமல், ஒரு புயலைப் போல அரங்கத்தை விட்டு வெளியேறினான்.
இங்கே மேகலாவின் நிலையோ சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்திருந்தது. அந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் அவளது இதயத்தை வேரோடு பிடுங்கி எறிவது போன்ற ஒரு பாரத்தை நெஞ்சில் ஏற்றியது.
அங்கிருந்த மற்றவர்களுக்கு அது வெறும் பாடலாகவோ அல்லது ஒரு கலையாகவோ இருக்கலாம். ஆனால், மேகலாவிற்கோ அது அவளது உயிர் மூச்சையே தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தது. அவனது காதலையும், அதிலுள்ள தீராத வலியையும் இதைவிட உருக்கமாக எந்த வார்த்தைகளாலும் வடித்திட முடியாது என்பதை அவள் உணர்ந்தாள்.
கண்களில் நீர் திரையிட, அங்கே அவன் சென்ற திசையைப் பார்த்தவாறு சிலையெனச் சமைந்து நின்றாள்.
அதன் பிறகு நடந்த எந்தவொரு நிகழ்ச்சியிலும் அவளால் ஒன்றிப்போக முடியவில்லை. ஒரு கனத்த மனதுடன், உணவையும் மற்றைய நிகழ்வுகளையும் முழுமையாகத் தவிர்த்துவிட்டு, அங்கிருந்து ஒரு நடைப்பிணமாகத் தன் விடுதி அறையை நோக்கிச் சென்றாள்.
அடுத்த வாரத் தொடக்கத்திலேயே, விமானப்படைத் தளத்தில், வான்பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த தரிந்துவின் பயிற்சி வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. வகுப்பிற்குச் செல்ல வேண்டிய நேரம் நெருங்க நெருங்க, மேகலாவிற்குள் ஒருவிதமான தவிப்பும் தயக்கமும் மெல்லக் குடிபுகுந்தன.
அவனை மீண்டும் நேருக்கு நேர் சந்தித்தால், இவ்வளவு நாட்களாகத் தான் கல்லாய்ச் சமைத்து வைத்திருக்கும் உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல் உடைந்து சிதறிவிடுமோ என்று அவள் உள்ளூற அஞ்சினாள். அவனது காந்தப் பார்வைக்கும், ஆழமான குரலுக்கும் முன்னால் தன் வைராக்கியம் மண்டியிட்டு விடுமோ என்ற பயம் அவளை நிலைகுலைய செய்தது.
அதற்கு மாறாக, அங்கு தரிந்துவோ அவளைச் சற்றும் கண்டுகொள்ளவில்லை. அவளைக் காணாதது போலவே, மிக இயல்பாக அவளைக் கடந்து சென்றான். அவனது அந்த அந்நியப்பட்ட பார்வை, மேகலாவிற்கு ஒரு கூர்மையான முள் தைப்பது போன்ற வலியைத் தந்தது. ஒரு காலத்தில் அவளது நிழலையே தொடர்ந்தவன், இன்று அவள் அங்கே இருப்பதையே அறியாதவன் போல ஒருவிதக் கற்கால மௌனத்துடன் விலகிச் சென்றது, அவளது உள்ளத்தை இன்னும் அதிகமாய் ரணப்படுத்தியது. அவன் வேண்டுமென்றே செய்கிறானா அல்லது உண்மையில் அவளைத் தன் நினைவிலிருந்து அழித்துவிட்டானா என்ற கேள்வி, அவளைக் குடைந்தது.
தரிந்து மிகவும் நிதானமாக, விமானப்படை பாதுகாப்பு உத்திகள் குறித்து அனைவருக்கும் விளக்கினான். பயிற்சியாளர்களின் சந்தேகங்களுக்குத் தெளிவான பதில்களை அளித்து, மிகத் துல்லியமாக வழிகாட்டினான்.
அறை முழுவதும் அவனது குரல் கம்பீரமாக ஒலித்துக்கொண்டிருந்தாலும், அங்கே மேகலா இருப்பதைச் சற்றும் உணராதவன் போலவே அவன் நடந்துகொண்டான். மறந்தும் ஒருமுறை கூட அவன் பார்வை அவள் பக்கம் திரும்பவில்லை.
இதைச் சரியாகக் கவனித்த காஞ்சனா, தகுந்த தருணம் பார்த்துத் தரிந்துவின் அருகில் சென்றாள். அவனிடம் மிகவும் நயமாகப் பேசத் தொடங்கியவள், தன் பேச்சினூடே அவனது ஆளுமையைப் புகழ்ந்து தள்ளினாள்.
மேகலாவின் இதயத்தில் பொறாமைத் தீயை மூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், தரிந்துவிடம் மிக நெருக்கமாக நின்று உரையாடினாள். அவனுக்காகத் தான் உருகிக் கொண்டிருப்பதைச் சொல்லாமல் சொல்லி, தன் காதலை மறைமுகமாக வெளிப்படுத்தினாள்.
தரிந்து அவளது நோக்கத்தைச் சட்டென்று புரிந்துகொண்டான். அவள் காட்டிய நெருக்கத்தை மிக நாகரிகமாகவும் அதே சமயம் உறுதியாகவும் தடுத்தான்.
"இங்க பாருங்க மிஸ் காஞ்சனா... நீங்க என்ன ட்ரை பண்ணுறீங்க எண்டு எனக்கு விளங்குது... பட், ஐ யம் சொறி… உங்கட மேல எனக்கு இண்ட்ரெஸ்ட் இல்ல... உங்கள நான் அந்த கண்ணோட்டத்துல பார்க்கவும் இல்ல... எண்ட மனசில எனக்கான ஒருத்தி ஏற்கனவே சிம்மாசனம் போட்டு உக்கார்ந்திருக்கிறா.... அங்க வேற யாருக்கும் இடமில்ல..."
என்பதை மிக நாசூக்காகத் தன் வார்த்தைகளில் உணர்த்தினான்.
தரிந்துவின் இந்த நேரடி நிராகரிப்பைச் சற்றும் எதிர்பார்க்காத காஞ்சனா அதிர்ந்து போனாள். தன் காதல் புறக்கணிக்கப்பட்டதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவளது உள்ளத்தில் அதுவரை இருந்த போலித் தவிப்பு மறைந்து, அந்த இடத்தைத் தீராத வன்மம் ஆட்கொண்டது.
தரிந்துவின் அந்த நிராகரிப்பு, மேகலாவைப் பழிவாங்கும் வெறியாக அவளுக்குள் உருவெடுத்தது.
தரிந்துவும் காஞ்சனாவும் நீண்ட நேரமாக பேசிக்கொண்டிருப்பதை மேகலா தூரத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்தாள். அவர்கள் இருவருக்கும் இடையே நிலவிய அந்த நெருக்கம் மேகலாவிற்குள் ஒருவித அச்சத்தையும் வேதனையையும் விதைத்தது.
அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்ற நிஜம் தெரியாத மேகலாவிற்கு, அவர்கள் ஏதோ ரகசியங்களைப் பகிர்ந்து கொள்வது போலவே தோன்றியது.
தங்கள் உரையாடலை மேகலா கவனிப்பதைக் கண்டுகொண்ட காஞ்சனா, அவளது பொறாமையைத் தூண்டிப் பார்க்கத் துணிந்தாள்.
மேகலாவை இன்னும் சீண்டும் நோக்கத்தில், சந்தேகங்கள் கேட்கும் பாவத்துடன், தரிந்துவிடம் நயமாகக் குழைந்து பேசி, ஒருவிதப் போலி நெருக்கத்தைக் காட்டினாள்.
ஆனால், காஞ்சனாவின் இந்தத் தந்திரத்தை அறியாத தரிந்து, ஒரு பயிற்சியாளராக அவளுக்குத் தேவையான பாதுகாப்பு அறிவுரைகளை மிகத் தீவிரமாக வழங்கிக் கொண்டிருந்தான்.
இதைக் கண்ட மேகலாவின் நெஞ்சம் பதறியது. இதுவரை பார்த்திராத தரிந்துவின் இந்த விலகலும், காஞ்சனாவின் பார்வையில் தெரிந்த அந்த அதிகப்படியான நெருக்கமும் அவளை வேரோடு சாய்த்தன. தன் கண்முன்னாலேயே தன் உலகம் பறிபோவது போன்ற ஒரு தவிப்பு அவளை முழுவதுமாக ஆட்கொண்டது.
மறுநாள் மாலைப் பொழுது... உடல் முழுவதும் ஆங்காங்கே தீக்காயங்களுடன், மருத்துவ ஊர்தியில், சுயநினைவின்றிப் படுத்திருந்த தரிந்துவின் மார்பில் முகம் புதைத்து, அடக்க முடியாமல் கதறி அழுதுகொண்டிருந்தாள் மேகலா.
அவர்கள் இருவரையும் தீராத வன்மத்தோடு பார்த்தபடியே, காவல்துறை வாகனத்தில் ஏறினாள் காஞ்சனா.