அத்தியாயம் - 5
'அவன் அப்படியென்ன தப்பு செய்தான்' எனக் கேட்ட அகத்தியனுக்கு பல்லவியின் வாய்மொழி மூலமாக ஏற்கனவே அது என்னவென்று தெரியும். இருப்பினும் தமிழ்மொழியை ஆராயவே அவ்வாறு கேட்டான்.
அதைப்பற்றிய பேச்சில் திடீரென மாறிய அவளது முகமும் கை முஷ்டியை நரம்புகள் தெறிக்குமளவு இறுக்கி விரைப்புடன் நின்ற அவள் உடல்மொழியும் அவனுக்கு ஏதோ ஒன்றை உணர்த்தியது.
அதனால், " ஹே ரிலாக்ஸ்! என்ன நடந்ததுனு தானே கேட்கறேன்டா. எங்கிட்ட சொல்றதுக்கு என்ன? இன்னமும் எம்மேல நம்பிக்கை இல்லையா?" கனிவாகப் பேசினான்.
அதுவரை இறுக்கமான முகத்துடன் கண்களில் கனல் பறக்க எங்கோ தன் பார்வையை நிலைக்க விட்டிருந்தவள், அவனை திரும்பிப் பார்த்தாள்.
அவளை அதிகம் யோசிக்க விடாமல் "இத்தனை நாட்களும் என்னோட தனியா தான் இருக்க. அப்படி இருந்தும் இன்னமும் எம்மேல உனக்கு நம்பிக்கை வரலைன்னு நினைக்கும் போது எம்மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு." வருத்தமாகச் சொன்னவனின் சொற்கள் அவள் மனதை அசைத்தன.
திருமணம் முடிந்து இங்கு வந்த இத்தனை நாட்களில் அவனது ஆர்வமான பார்வையை மட்டுமே கண்டிருக்கிறாள். அதில் அவளுடன் இணக்கமாக முனையும் எதிர்பார்ப்பு இருக்குமே தவிர ஒருநாளும் வேறு மாதிரி இருந்ததில்லை.
அவனது ஆண்மையின் கண்ணியத்தில் அவள் மனம் அவளறியாமலே அவனிடம் சரிந்துவிட்டது. அவள்தான் இன்னமும் உணரவில்லை. அவனிடம் பிறந்த நம்பிக்கையில் அன்று நடந்ததை கூறத் தொடங்கினாள்.
அன்று மதிய உணவிற்கு பிறகான வகுப்பு இல்லாமல் ஆசிரியர்கள் ஓய்வறையில் தமிழ் அமர்ந்திருக்க, அவளது அன்னை, மகளிடம் பேசுவதற்காக அழைத்திருந்தார்.
அந்த இடத்தில் பொதுவாக சிக்னல் ப்ராப்ளம் இருப்பதால் அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே இடையில் எதுவும் கேட்காமல் போக அவள் ஹலோவை மீண்டும் மீண்டும் சொல்வதைக் கண்டு,
அவளுக்கு அருகிலிருந்த சக ஆசிரியை ஒருவர், " இங்க சிக்னல் கிடைக்காது டமில். அந்தப் பக்கம் தள்ளிப் போய் பேசிப்பாரு." என்று இந்தியில் கூறியபடி ஒரு திசையை காட்டினார்.
சரியென தலையசைத்த தமிழ் அலைபேசியில் தாயின் எண்ணை தேடியவாறே வந்து நின்ற இடம் அந்த பள்ளியின் பேருந்துகள் நிறுக்குமிடம்.
அங்கு வந்தவள் அலைபேசியில் அழைப்பதற்காக அவரது எண்ணை அழுத்தும் முன்னர் குழந்தை ஒன்றின் மெல்லிய தேம்பல் கேட்டது. மதிய உணவு முடித்த குழந்தைகள் எல்லாம் வகுப்பிற்குள் சென்றிருக்க, இந்த தேம்பல் எங்கிருந்து வருகிறதென்று பேருந்தை சுற்றிவந்தாள் தமிழ்.
அங்கு அவள் கண்ட காட்சியில் அவளுக்கு மூச்சே நின்று போகும் உணர்வு. அவளது நுரையீரல் சுவாசத்திற்காக சில நொடிகள் தவிக்க நன்கு மூச்சை இழுத்து விட்டு சட்டென தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள் அங்கு விரைந்து சென்றாள்.
அவள் அங்கே வந்த வேகத்தில் அந்த சின்னஞ்சிறு குழந்தையின் அந்தரங்க இடங்களில் பாலியல் தீண்டல் செய்துக் கொண்டிருந்த பள்ளிப்பேருந்தின் க்ளீனர் பையன் தபல் திகைத்துப் போனான்.
தமிழ் வந்த வேகத்தில் அவனை ஓங்கி எட்டி உதைத்தவளின் கண்கள் பரபரவென சுற்றிலும் அலைப்புற, அங்கிருந்த ஒரு கட்டையை எடுத்து சரமாரியாக அவனைத் தாக்கினாள். அவனிடம் சீரழிய இருந்த குழந்தை அவளது செய்கையில் மிரண்டு நன்றாகவே அழத் தொடங்கியது.
அவனை அடித்து வீழ்த்தியவள் குழந்தை அழுவதைக் கண்டு ஓடிவந்து அவளை தூக்கிக் கொண்டவள், " அழாத செல்லம்! நான் உன்னை காப்பாத்தறதுக்கு தான் வந்திருக்கேன்." என்று சமாதானம் செய்தாள்.
தனக்கு நடந்தது என்னவென்றே தெரியாத குழந்தை தமிழின் அன்பான சொற்களில் தனது அழுகையை நிறுத்தினாலும் அவனது செயலால் உண்டான நடுக்கம் அவளது உடலில் தென்பட்டது.
"உங்கிட்ட இனிமே யார் இதுமாதிரி செய்தாலும் அழாதே. சத்தம் போடனும். " அறிவுரைத்துக் கொண்டிருந்த நேரம் ஆட்கள் வரும் அரவம் கேட்கவும் குழந்தையை இறக்கிவிட்டு வகுப்பிற்கு செல்லுமாறு அனுப்பி விட்டாள்.
அதற்குள் சத்தம் கேட்ட சிலர் அங்கு கூடிவிட, என்னவென்று விசாரித்தற்கு அவளிடம் மிகவும் அசிங்கமான தகாத சொற்களால் அருவருப்பாக பேசியதால் அடித்து விட்டதாகக் கூறினாள்.
அங்கிருந்த ஆசிரியர்களும் மற்ற சிலரும் ரத்தம் தோய்ந்து வீங்கிப் போய் மெதுவாக எழ முயன்றவனைப் பார்த்தவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. பின்பு அவனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று வார்னிங் கொடுத்து உடனே வேலையை விட்டு அனுப்பி விட்டனர்.
இதைப்போல தவறுகள் நேர்ந்தால் இப்படி அடிக்கக்கூடாது ஒருவேளை அவன் இறந்திருந்தால் பிரச்சனை ஆகிவிடும் என்று தமிழிடமும் எச்சரித்து அனுப்பினர்.
"அவன் பேசுனது தப்புதான்னாலும் அவனை அவ்ளோ வெறியோட அடிச்சிருக்கா அகத்தியன். அவளுக்கு எதுவும் ஏங்க்ரி இஸ்யூஸ் இருக்கானு தெரியல. கொஞ்சம் என்னனு கவனி." என்று பல்லவி சொன்னதை வைத்து தான் அகத்தியனால் அவளது செயலை ஏற்க முடியவில்லை.
ஆனால் நடந்த உண்மையை தன்னிடம் மட்டும் அவள் மறைக்காமல் சொன்னதில் மனதினோரம் சிறு நிம்மதி பிறந்தாலும், அத்தகைய செயலை செய்தவனை இப்படி தப்பிக்க விட்டு விட்டாளே என்று அவனுக்கு ஆதங்கம் ஏற்பட்டது.
" நீ உண்மைய சொல்லியே அவனை போலீஸில் பிடிச்சு கொடுத்து இருக்கலாமே மொழி? இப்ப அவன் சுதந்திரமா வெளியே போயிட்டானே இனிமே இதுமாதிரி செய்ய மாட்டான்னு எப்படிடா நம்ப முடியும்?" சற்று வருத்தமாக அகத்தியன் கேட்க மர்மமாகச் சிரித்தாள் தமிழ்மொழி.