அத்தியாயம் - 6
'உண்மையைச் சொல்லி அவனை போலீஸில் பிடிச்சு கொடுத்து இருக்கலாமே மொழி?' என்று கேட்ட அகத்தியனுக்கு மர்மப் புன்னகை பூத்தாள் தமிழ்.
"போலீஸ்ல பிடிச்சு கொடுத்தா மட்டும் பெருசா என்ன செய்துட போறாங்க. அந்த குழந்தையை அவன் சீரழிச்சு கொன்னு வீசி இருந்தாலும் கூட அவனுக்கு உடனே தண்டனை கொடுக்கப் போறதில்ல."
"அப்படி இருக்கும்போது இதுக்கெல்லாம் விசாரணை வைச்சு அந்த குழந்தையை பற்றி ஸ்கூல்ல, வெளியில னுட்டு எல்லாருக்கும் தெரிய வரும். எந்த தப்புமே செய்யாத அந்த பிஞ்சை எல்லாரும் பரிதாபமா பார்ப்பாங்க. அவளை பேசுபொருளாக்கி விமர்ச்சிப்பாங்க. அதனால தான் உண்மைய சொல்லலை." என்றவளிடம்,
"ஆனா இப்ப மட்டும் இங்கிருந்து வெளியே போனவன் வேற பக்கம் இந்த மாதிரி செய்ய மாட்டான்னு எப்படிடா நம்ப முடியும்? அவனுக்கு சரியான தண்டனை வேண்டாமா? " அகத்தியன் நியாயமாகவே கேட்டான்.
அந்தக் கேள்வியில் அவளது கண்கள் வெறியுடன் பளபளக்க," அவனால எதிர்காலத்துல அவன் பொண்டாட்டிகிட்ட கூட இதுமாதிரி எப்பவுமே செய்ய முடியாது." தீவிரத்துடன் கூறியதில் அவளது முகத்தைக் கண்டு அகத்தியனுக்கே உள்ளுக்குள் சிறு நடுக்கம்.
"அ..அப்படி என்ன செய்த மொழி? " அப்படி என்ன செய்திருப்பாள் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் பிறந்தாலும், எதாவது ஏடாகூடமாக செய்து அவள் மாட்டிக் கொள்ளக் கூடாதே என்ற தவிப்போடு நடுக்கமும் ஒருசேரக் கேட்டான்.
அவளது கண்களில் இன்னமும் அந்த வெறி மின்ன, " குழந்தைய காமத்தோட பார்த்த அவன் கண்ணுல மண்ணைப் போட்டு நல்லா தேய்ச்சு விட்டுட்டேன். குழந்தையை தொடக்கூடாத இடத்துல தொட்ட அவன்கை விரலை எல்லாம் நச்சுவிட்டுட்டேன். "
" ரெண்டு காலுக்கு இடையில கொடுத்த அடியில அவன் போட்ட சத்தத்துல தான் ஆளுங்க வந்துட்டாங்க. ம்ப்ச்!" கண்கள் பளபளக்க பரவசத்துடன் சொல்லிக் கொண்டிருந்தவள், இன்னமும் அடிக்க முடியவில்லையே என்ற சலிப்போடு முடிக்க, அகத்தியன் வாயில் கைவைத்து மூடியவாறு திகைத்து நின்றான்.
' இவளிடம் இத்தனை மூர்க்கமா!!' என்று மலைத்து நின்றவனுக்கு தங்களது முதலிரவு நினைவிலாட, என்னமோ சரியில்லை கூடிய விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உறுதி மட்டும் அவன் மனதில் அழுத்தமாக பதிந்தது.
அவள் இன்னமும் அந்த காட்சியில் மூழ்கி நிற்க, அவளது தன்னுணர்வற்ற நிலையில் அவளை தொட்டு உசுப்பக்கூட தயங்கி, "மொழி! ரொம்ப நேரம் ஆகிடுச்சு. எனக்கு பசிக்குது." சத்தமாக குரல் கொடுத்தான்.
அவன் பசியென்றதும் சட்டென இயல்புக்கு திரும்பியவள் வேகமாக சமையலறைக்கு சென்று உணவு பாத்திரங்களை டேபிளில் அடுக்கிவிட்டு அவனது தட்டில் உணவைப் பரிமாறி " பசிக்குதுனீங்களே. சாப்பிட வாங்க." என்று அழைத்திருந்தாள்.
முன்னுக்குபின் முரணான அவளது செயல்பாடுகள் அவனை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தினாலும் தற்போதைய மனநிலையில் எதையும் யோசிக்கும் நிலையில் அவன் இல்லை என்பதால் அமைதியாக சென்று அமர்ந்தான்.
வழக்கம் போல அவன் அவளையும் அமரச் சொல்ல, மனதிலிருந்ததை அவனிடம் கொட்டியதாலோ என்னவோ சற்று இலகுவாக உணர்ந்தவள் என்றும் இல்லாத திருநாளாக இன்று சட்டென அமர்ந்ததோடு, "எனக்கும் பசிக்குது தான்" என்றபடி தனது தட்டிலும் உணவை வைத்து உண்ணத் துவங்கினாள்.
இப்படியொரு மனநிலையில் தானா இருவரும் சேர்ந்து ஒன்றாக உணவருந்த வேண்டும்!? என்ற வினா அவனுள் எழுந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு கிடைத்த வாய்ப்பான தனது நெடுநாள் விருப்பத்தை நிறைவேற்ற எண்ணி,
அவளது வீட்டைப் பற்றியும், அவனது அலுவலக நிகழ்வுகளைப் பற்றியும் பேசி பேச்சை திசைதிருப்பி உணவை உண்ண, அதிசயமாக அவளும் பதிலளித்ததோடு அவனது பேச்சை கவனிக்கவும் செய்ய அகத்தியனும் அந்த சம்பவத்தைப் பற்றிய சிந்தனையிலிருந்து தற்காலிகமாக வெளியே வந்தான்.
அவன்மீதான நம்பிக்கையில் சட்டென நடந்த அனைத்தையும் கூறிவிட்டாள், ஆனால் அதன்பிறகு படுக்கும்வரை அகத்தியனின் நடவடிக்கையில் ஏதோ ஒருவித விலகல் தெரிவது போலிருக்க அதே சிந்தனையில் இருந்தவள் அவளுக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனிடம் " நான் செய்தது தப்பாங்க?" வாய்விட்டு கேட்டு விட்டாள்.
வழக்கமாக படுத்தபின்பு திரும்பிக்கூட பார்க்காதவள் இன்று திடுமென கேட்டதில் அவளைப் பார்த்தபடி திரும்பிப் படுத்தவன் "எதையும் மனசுல போட்டு குழப்பமாக தூங்குடா." கனிவாக சொல்ல அரைமனதுடன் தலையசைத்து கண்களை மூடிக் கொண்டாள்.
ஏனோ அவனிடம் எடுத்தெறிந்து பேசும்போதெல்லாம் தோன்றாத ஒருவித வருத்தமும் தவிப்பும் இப்போது அவனது விலகலால் அவளை ஆட்கொள்ள, அவளது கேள்விக்கு மழுப்பலான அவனது இந்த பதில் அவளுக்கு அதிருப்தியாக இருந்தது.
'என்னை ஏதோ பைத்தியம் நினைச்சு இருப்பாரு. இல்லனா சைக்கோனு எதுவும் யோசிக்கறாரோ!? அதான் ஒழுங்கா பேச மாட்டீன்றாரு.' அவளைப் பற்றிய அவனது எண்ணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அவள் மனம் வருத்தம் கொண்டது.
திருமணமான புதிதில் இருந்த தமிழ் என்றால் என்னைப் பற்றி அவன் என்ன நினைச்சா எனக்கென்ன!? என்ற நிலைப்பாட்டில் கண்டு கொள்ளாது இருந்திருப்பாள். ஆனால் அவனுடனிருந்த இத்தனை நாட்களில் அவளே உணராமல் அவனை உள்மனம் உரிமை கொண்டாட தொடங்கி இருந்தது.
அவருக்கு தன்மீது தவறான எண்ணம் தோன்றி இருக்குமோ என்று அவள்மனதில் தோன்றிய அந்த வருத்தம் மனதை அழுத்த அதன் கனம் தாளாமல் மூடிய விழிகளைத் தாண்டி கரையுடைத்து கண்ணீர் வெளியேறியது.
விழிகளை மூடியிருந்தாலும் அவள்மனம் அலைப்புற்று இருப்பதை உணர்ந்தவன், "மொழி!" என்றழைக்கவும், வேகமாக கண்ணீரை துடைத்தபடி பட்டென விழிகளை திறந்தவள் அவனை கேள்வியாகப் பார்த்தாள்.
"உனக்கு ஆட்சேபணை இல்லனா.." என்ற அகத்தியன் தன் கரங்களை விரித்து நீட்டி, அருகே வரும்படி தலையசைத்து அவளை அழைக்க, சிறுபிள்ளை போல் வேகமாக நகர்ந்து வந்து அவனது கரங்களுக்குள் சரண் புகுந்தாள் தமிழ்மொழி.
சில நொடிகள் அந்த அரவணைப்பில் இதமாக உணர்ந்து அமைதியாக இருந்தவள் அவனது மார்பிலிருந்து தலையை உயர்த்தி தன் மனதின் தவிப்பை கண்களில் தேக்கி, "எ..என்னை வெ..றுத்.துடுவீங்களா?" இல்லையென்று சொல் என்ற தொனியில் கலங்கிய குரலில் கேட்டாள்.
அவளது மனநிலையைப் படித்தவன் தனது யோசனையை ஓரம் வைத்துவிட்டு மென்னகையோடு அவளது நெற்றி முடிக்கற்றையை ஒதுக்கி, " என்னை நானே எப்படி வெறுப்பேன்டா? நீ என்னை கொன்னாக்கூட என்னால உன்னை வெறுக்க முடியாது." என்று அவளது நீர் நிறைந்த விழிகளில் தன் முதல் முத்திரையை பதித்தவன்
"ஐ லவ் யூ டு த கோர் தமிழ்மொழி. எதையுமே தேவையில்லாம மனசுல போட்டுக் குழப்பி வருந்தாமல் தூங்குடா செல்லம்." தாயின் பரிவுடன் கூறிய அவனது சொற்கள் அவளை வெகுவாக அமைதிப்படுத்தின என்றுதான் சொல்ல வேண்டும்.