அத்தியாயம் - 7
நாட்கள் அதன் போக்கில் சென்று மாதங்களாக மாற, இருவருக்கும் இடையே உடலளவில் நெருக்கம் இல்லை என்றாலும் அகத்தியனிடம் மனதளவில் நெருங்கத் தொடங்கி இருந்தாள் தமிழ்மொழி.
இப்போதெல்லாம் அவள் தன்னுணர்வு அற்ற நிலையில் கூட அவளது கரத்தைப் பிடிப்பது, தோளில் தட்டி அழைப்பது போன்ற அவனது சாதாரண தொடுகைகளை இயல்பாக ஏற்கத் துவங்கியிருந்தாள்.
அன்றைய தினத்தில் அவளது முரண்பாடான பரிணாமங்களை உணர்ந்த அகத்தியன் அவளிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும், அவனது மூளையில் அவளைப் பற்றிய அலாரம் ஒன்று அவ்வப்போது அடித்துக்கொண்டு தானிருந்தது.
அவளின் அன்றைய வித்தியாசமான நடத்தையின் காரணத்தை முதலில் அறிய வேண்டும், அதன்பிறகு தான் அதற்கான தீர்வைப் பற்றி யோசிக்க முடியும். ஆனால் அது எவ்வாறு? யார் மூலம் அறிந்து கொள்வது? என்ற வினாக்கள் அவன் மனதில் அடிக்கடி எழுந்தது.
அவளிடமே நேரடியாகக் கேட்டு விடலாம் தான். ஆனால் அன்றைய இரவு கண்கள் கலங்க 'என்னை வெறுத்துடுவீங்களா?' என்று வினவியவளின் தவிப்பான முகம் அவனது அகக்கண்ணில் வந்து வேண்டாமென்று தடுத்து விடுகிறது.
அவன் இயல்பாகக் கேட்கப் போய் அவள் அதை மனதில் உழப்பி என்னவெல்லாம் யோசித்து வைப்பாளோ என்று அவளது மனநலனை முன்னிறுத்தியே அந்த யோசனையைக் கைவிட்டான்.
இந்நிலையில் தமிழின் பள்ளியில் அரையாண்டு விடுமுறை வரவும், அகத்தியனுக்கு ஒரு யோசனை வந்தது. அதனால் "உனக்கு ஹாலிடே வரப்போகுது தானேடா? நாம வேணும்னா ஊருக்கு போயிட்டு வரலாமா?" எனக் கேட்க,
"ஆமாங்க. அம்மாவும் கூப்பிட்டுட்டு இருக்காங்க. நான்தான் லாங் லீவு வந்தால் வர்றேன்னு சொன்னேன். அதுக்கு 'மாப்ள இல்லாம நீ தனியா எல்லாம் வர வேணாம்'னுட்டாங்க" உதட்டைச் சுழித்து பழிப்பு காட்டியபடி சொன்னவளின் பாவனையில் சிரித்து விட்டான்.
அவளுக்கு அது மேலும் கடுப்பாக, "ஹலோ! எனக்கு தனியா போக பயமெல்லாமில்ல. கல்யாணத்துக்கு பிறகு பிறந்த வீட்டுக்கு வர்ற பொண்ணு, தனியா வந்தா ஊர்ல ஒருமாதிரி பேசுவாங்கனு அம்மா தான் அப்படிச் சொன்னாங்க" மிடுக்காக வேகமான பதிலளித்தாள்.
"ச்சே! ச்சே! நாந்தான் எதுவும் சொல்லலையேடா. நம்ம ஃபர்ஸ்ட் நைட்ல என்னை குத்தி கொல்ற அளவுக்கு ரெடியா இருந்த உனக்கு, பயம்னு நினைக்கறதுக்கு நானென்ன லூசா? எனக்கும் கொஞ்சூண்டு மூளை இருக்கும்மா." அவளுடன் பேச்சுக்கு பேச்சு வாயாடும் வேகத்தில் புன்சிரிப்புடன் பதிலடி கொடுத்து விட்டான்.
அதுவரை அவளது முகத்தில் இருந்த உற்சாகம் சட்டென வடிந்து முகம் சுருங்கிவிட, அகத்தியனுக்குத் தான் விளையாட்டாகச் சொன்னதை அவளை குத்திக் காட்டக் கூறியதாக எண்ணிக் கொண்டாளோ என்ற ஐயம் தோன்றியது.
"ஸாரி! உன்னை ஹர்ட் பண்ணச் சொல்லலை மொழி. ஏதோ ஒரு வேகத்துல.." அவளது திடீர் அமைதி அவனுக்கு ஒருமாதிரி சங்கடத்தைக் கொடுக்க, உடனே மன்னிப்பைக் கேட்டான்.
அவள் செய்த தவறிற்கு அவன் மன்னிப்பைக் கேட்டதில் சட்டென சுதாரித்தவள், " ஆக்ச்வலி நான்தான் ஸாரி சொல்லனும். அதுக்கு எதுக்கு நீங்க சொல்றீங்க? நாந்தான் எதுவும் சொல்லலையே." லேசான புன்னகையுடன் அவனைப்போலவே கூறியவள் அடுத்த விசயத்தைப் பற்றி பேசவும் அகத்தியனுக்கு நிம்மதியானது.
அகத்தியனின் அலுவலகத்தில் விடுமுறை எடுப்பது பற்றி கலந்து ஆலோசித்து, அதன்பிறகு சிறிது நேரம் ஊருக்கு செல்லும் தினங்களை திட்டமிட்டனர் இருவரும்.
முதலில் அவனது தாயைச் சென்று பார்த்தபிறகு அவளது வீட்டில் சில தினங்களுக்கு அங்கே தங்குவதாக இருவரும் விசாலத்திடம் கூறியதும் அவளது பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.
அவர்களது பயணத் திட்டப்படி அகத்தியனின் தாய் வீட்டிற்கு சென்றபோது துளசியைப் பார்த்ததும் "நல்லாருக்கீங்களா அத்த!" என்று ஏதோ நெடுநாள் பழக்கம் போல நன்றாக ஒட்டிக் கொண்ட தமிழைக் கண்டு அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
திருமணத்திற்கு பிறகு அவர்கள் தனிக்குடித்தனம் சென்றபின், வாரத்தில் மூன்று முறையாவது அவளுக்கு அழைத்து சிறிது நேரம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவரது வெள்ளந்தியான பேச்சிலும் அக்கறையான விசாரணையிலும் அவர்பால் அன்பு கொண்ட தமிழ் இயல்பாக உரையாட, இருவருக்கும் இடையே தாய் மகள் போன்ற ஒரு நெருக்கமான பிணைப்பு ஏற்பட்டது.
இது எதுவுமே அகத்தியனுக்கு தெரியாது. துளசி தன் மகனிடம் பேசும்போது அவளைப் பற்றி பெயருக்கு கேட்பாரே தவிர, பெரிதாக விசாரிக்க மாட்டார். 'அதானே இதெப்படி!?' என்ற ஆச்சர்யத்தில் இருந்தான் அவன்.
" இங்கேயே தனியா இருக்கறதுக்கு பதிலா, எங்ககூட வந்து இருக்கலாம்ல அத்தம்மா? அப்படி என்ன உங்கள இங்கேயே இழுத்து வைக்குது?" அங்கிருந்து கிளம்பும் வேளையில் வெகு உரிமையாக சிறு அதட்டலுடன் தமிழ் கேட்க,
"வர்றேன்டா தமிழு. நீ மட்டும் சீக்கிரமே என்னை பாட்டியாக்கிடு. அப்புறம் பாரு அங்கேயே வந்து உங்க கூடவே இருந்து நான் செய்ற மாமியார் கொடுமையில நீதான் முழிபிதுங்கப் போற, பாரேன்." எனக் கூறிச் சிரித்த தாயை 'ஆ'வென்று பார்த்திருந்தான் அகத்தியன்.
அகத்தியனின் வீட்டில் தங்கியிருந்த இருநாட்களில் இருவரும் சேர்ந்து உரிமையாக பழகிக் கொண்டதில் உண்மையில் அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி.
அதை"அம்மாவும் நீயும் எப்படி இவ்ளோ சகஜமா பேசுறீங்க? எங்கிட்ட பேசும்போது கூட உன்னைப்பற்றி நார்மலா தான் விசாரிப்பாங்க. ஆனா நீ அவங்களோட இவ்ளோ உரிமையா பழகறது மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு மொழி." அவளிடம் கேள்வியாகக் கேட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும் செய்தான்.
அவனது வினாவிற்கு சிரிப்பை மட்டும் விடையாகத் தந்த தமிழ் அதைப்பற்றி பெரிதாக பேசிக் கொள்ளாமல் அடுத்த விசயத்திற்கு தாவி விட்டாள். அவளுக்கு மாமியார் கூறிய குழந்தை விசயம் சற்று தடுமாறச் செய்திருந்தது.
துளசியுடன் மகிழ்ச்சியாக இருநாட்கள் கழித்த தம்பதியினர் தமிழின் வீட்டிற்கு கிளம்பிட, அவளது வீட்டிற்குச் சென்றபின் தான் வந்த வேலையை சரியாக முடிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்தான் அகத்தியன்.

Last edited by a moderator:
Author: நிதனிபிரபு
Article Title: மொழியின் இலக்கணம் நீயடா - 7
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.