அத்தியாயம் -02
"என்னது? பாஞ்சாலியா?" என லட்சுமி ஆச்சரியத்துடன் கேட்க... "பாஞ்சாலியா?" என அதிர்ச்சியுடன் கேட்டார் நரசிம்மன்.
அவர்கள் இருவரின் முகத்தை புரியாத பாவனையுடன் பார்த்தாள் நிலனின் மனைவி பாஞ்சாலி. சில நொடிகளில் தன்னை சமன்படுத்திக் கொண்ட நரசிம்மன், "அப்பிடியே உறைஞ்சு போய் நிக்காம போய் உன்னோட அந்த ஸ்பெஷல் பச்சத்தண்ணி அதான் உன் பாஷையில சொல்லனும்னா ஜூஸ்... அத போட்டு எடுத்துட்டு வா லட்சூ..." என்றார்.
"இந்த பொண்ணு இருக்குதே னு பாக்குறேன். இல்லன்னா உன் வாய அடைச்சு இருப்பேன்..." எனத் தீயாய் முறைத்தார் லட்சுமி.
"ச்சீ போ லட்சூ... மருமக முன்னாடி என்ன பேச்சு இதெல்லாம்?" எனத் தன் கை நகங்களை ஒன்றுடன் தேய்த்தவாறு கீழே குனிந்து கால் கட்டை விரலை தரையில் தேய்த்தார் நரசிம்மன்.
"அப்பிடித்தான் கீழ எந்த குப்பையும் இல்லாம சுத்தமா தொடை... எல்லாம் என் தலையெழுத்து. என் அப்பன் தெரியாத்தனமா இந்த மனுஷனுக்கு என்னய கட்டிட்டு அவன் நிம்மதியா போய் சேந்துட்டான். தினம் தினம் நான்லாம் இந்த ஆளோட மொக்க ஜோக்க கேட்டு மண்டைய பிச்சுட்டு நிக்கிறேன்..." எனத் தலையில் அடித்துக் கொண்டு நொந்து கொண்டவாறு மதிமலருக்கு ஜூஸ் போட சென்றார் லட்சுமி.
"இல்ல... வேண்டாம்." என அவர்கள் இருவரையும் தன் விழிகளை விரித்து மாறி மாறிப் பார்த்தாள் மதிமலர்.
அவள் பயத்துடன் தன்னையும் உள்ளே சென்ற தன் மனைவியையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட நரசிம்மன், "நெஜமாலுமே உன் பேரு பாஞ்சாலியா?" என்றார்.
"அவக்கூட பேசிட்டே இருக்காம மொதல்ல அந்த பொண்ண உக்கார சொல்லுங்க..." என உள்ளிருந்து தன் கட்டைக் குரலில் கத்தினார் லட்சுமி.
"ஏன் மா நின்னுட்டு இருக்க? வா... வந்து உக்காரு." நரசிம்மன்.
அவரது கூற்றில் மிரண்டவள் பட்டென்று கீழே அமர்ந்தாள் பாஞ்சாலி. அவள் கீழே தரையில் அமர்ந்ததைப் பார்த்த நரசிம்மன் தானும் அவள் கூடவே கீழே அமர்ந்தவர், "சொல்லு... உன் பேரு நிஜமாலுமே பாஞ்சாலியா?" என்றார்.
அதற்கு அவள் வாயைத் திறந்து பதில் கூறாமல், "ஆமாம்..." என்னும் அர்த்தத்தில் தலை அசைத்தாள் பாஞ்சாலி.
"ஓஓ..." என சில நொடிகளுக்கு அமைதியாக இருந்தார் நரசிம்மன்.
அவரது யோசனைபடிந்த முகத்தையே விழி அசைக்காமல் பார்த்திருந்தாள் பாஞ்சாலி. அவள் அவ்வாறு தன் கணவனை விழியசைக்காமல் பார்த்துக் கொண்டு இருப்பதை கவனித்தவாறே ஜூஸூடன் வந்த லட்சுமி, "ஏம்மா பொண்ணே... நீ எதுக்கு என் புருஷன இப்பிடி வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருக்குற?" எனக் கேட்டவாறு அவளின் முன்னே ஜூஸை நீட்டினாள்.
சற்று கட்டை குரலில் லட்சுமி வினவியதைக் கேட்டு பயத்தில் உடல் அதிர்ந்து மிரண்டாள் பாஞ்சாலி.
அதுவரை ஏதோ யோசனையில் இருந்தவர் லட்சுமியின் கேள்வியைக் கேட்டு, யோசனையில் இருந்து மீண்டவர், "நா ரொம்ப அழகா இருக்குறேன் னு புள்ள என்னய பாத்து என் அழக ரசிச்சுட்டு இருக்குறா. அதுல உனக்கு ஏன் பொறாமை வருது லட்சூ? நாந்தான் உன் கண்ணுக்கு எப்போதுமே அழகா தெரிய மாட்டேனே..." என குதூகலமாக ஆரம்பித்து சோகத்தில் முடித்தார் நரசிம்மன்.
"இந்த புள்ள இருக்குதே னு பாக்குறேன். இல்ல... எனக்கு வர்ற கோவத்துக்கு உங்கள அப்பிடியே பிச்சு வீசிருவேன்." என நரசிம்மனிடம் கத்தியவர், "எவ்ளோ நேரமா நீட்டிட்டு இருக்கேன். அத வாங்கனும் னு கூட உனக்குத் தெரியாதா?" எனத் தன் கட்டைக் குரலில் அதட்டினார் லட்சுமி.
அவரது அந்த கட்டைக் குரலில் வெகுவாக பயந்த பாஞ்சாலி நடுங்கிய கைகளுடன் அதை வாங்கியவள் லட்சுமியை மிரள மிரள பார்த்தவாறு அதை அருகில் இருந்த சிறிய மேசையில் வைக்க முயன்றாள். அவளது செய்கையைக் கவனித்த லட்சுமி, "ஏய்... என்ன பண்ற? நீ குடிக்குறதுக்காக கஷ்ட்டப்பட்டு ஜூஸ் போட்டு எடுத்துட்டு வந்தா நீ அத குடிக்காம கீழ வைக்கிற. எவ்ளோ திமிரு உனக்கு? இப்ப அதுல ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காம பூரா ஜூஸையும் குடிக்கிற. இல்ல... இங்க நடக்குறதே வேற..." என பாஞ்சாலியை உறுத்து விழித்தபடி பயங்கரமாக மிரட்டினாள்.
அவளது மிரட்டலில் பயந்து நடுங்கிய பாஞ்சாலி, லட்சுமி கூறியது போலவே ஒரு சொட்டு கூட மிச்சம் வைக்காமல் மூச்சு விடாமல் கடகடவென குடித்து முடித்தவள் லட்சுமியை பாவமாக பார்த்தாள்.
"எல்லாத்தையும் குடிச்சுட்டியா? இது தான் நல்ல புள்ளைக்கு அழகு. இப்ப சொல்லு... உன் கழுத்துல தொங்குறத என் புள்ள தான் கட்டுனான்னா?" என சந்தேகத்துடன் பாஞ்சாலியைப் பார்த்தாள் லட்சுமி.
"இது... இப்போ என்னய இங்க கொண்டு வந்து விட்டுட்டுப் போனவரு கட்டுனது தான்." என தன் கழுத்தில் இருந்த மஞ்சள் கயிற்றை எடுத்துக் காட்டி ஒரு வித வேகத்துடன் கூறினாள் பாஞ்சாலி.
"அதத்தான் என் மவனே அவனோட பொண்டாட்டி னு சொல்லி தான இங்க விட்டுட்டுப் போனான். உன் மாமியார் கொஞ்சம் அதி புத்திசாலி. அவ அப்பிடித்தான் கேள்வி கேப்பா. நீ கோவப்படாத..." என பாஞ்சாலிக்கு ஆறுதல் கூறினார் நரசிம்மன்.
"இப்ப நீங்க வாய மூடிட்டு கம்மு னு இருக்கல னா, உங்க மண்டையில அடிச்சு கோமா ல உக்கார வச்சுருவேன்." என நரசிம்மனை முறைத்தார் லட்சுமி.
"ஆத்தாடி..." என தன் வாய் மீது கையை வைத்து மூடிக் கொண்டார் நரசிம்மன்.
"நீ சொல்லு. நீ எந்த ஊரு? உன் அப்பா அம்மா என்ன பண்றாங்க? உனக்கும் என் புள்ளைக்கும் எப்பிடி பழக்கமாச்சு?" என அடுத்து அடுத்து பாஞ்சாலியைப் பார்த்து கேள்வி கேட்டாள் லட்சுமி.
"ஏன் லட்சூ...நியாயமா இதெல்லாம் நீ உன் மகன் கிட்ட தான கேக்கனும்? இந்த பொண்ணுக்கிட்ட ஏன் கேக்குற? இந்த பொண்ணுக்கிட்ட உன்னோட மாமியார் கெத்த காமிக்கனும். அதான?" என வாயை மூடியவாறே தன் மனைவியின் காதருகில் சாய்ந்து மெதுவாக வினவினார் நரசிம்மன்.
அவரை திரும்பி ஒரு முறை முறைத்தவள், "கேள்வி கேட்டா உடனே எனக்கு பதில் வரனும்." என பாஞ்சாலியை மீண்டும் அதட்டினாள் லட்சுமி.
"நா... என் ஊரு அயனிகாநல்லூர். எனக்கு அப்பா அம்மா லாம் இல்ல. என் அத்தை தான் என்னய வளத்தாங்க. அவங்களும் போன வாரம் இறந்துட்டாங்க." எனத் தயங்கி தயங்கி கூறினாள் பாஞ்சாலி.
"எதுக்கு இப்ப நீ திக்கி திக்கி பேசுற? ஒழுங்கா கட கட னு பேசு. உனக்கும் என் புள்ளைக்கும் எப்பிடி பழக்கமாச்சு?" எனத் தன் கட்டைக் குரலில் சற்று சத்தமாக வினவினாள் லட்சுமி.
"எனக்கு அவரு யாருன்னே தெரியாது." என மெல்லியக் குரலில் கூறினாள் பாஞ்சாலி.
"அட்ரா சக்க. பாத்தியா? பாத்தியா? இதுவும் அந்த படத்துல மாதிரியே இருக்கு." என ஆர்வ மிகுதியில் தன் மனைவியிடம் உற்சாகமாக கூறியவர், "உங்க ஊருல உனக்கு ஏதாவது பெரிய பிரச்சனை இருந்து அதுல இருந்து உன்னய காப்பாத்த தான என் மவன் உனக்கு தாலி கட்டுனான்?" என ஆர்வம் குறையாமல் பாஞ்சாலியிடம் வினவினார் நரசிம்மன்.
"இல்ல... அப்பிடியெல்லாம் இல்ல." என வேகமாக மறுத்தாள் பாஞ்சாலி.
"அப்புறம் எப்பிடி? உன்னய தைரியமா கூட்டிட்டு வந்தான்? இல்ல... ஏன் இவ்ளோ துருவி துருவி கேக்குறோம்னா எங்க மகன் ஒரு உம்மனாமூஞ்சி. பெத்தவங்க நாங்களே இப்பிடி சொல்லக் கூடாது தான். இருந்தாலும் இதான் உண்மை. என் மகன் ஒரு பொண்ணுக்கிட்ட கூட பேச மாட்டான். ஏதாவது ஒரு பொண்ணு வந்து எதார்த்தமா அவன் கிட்ட வழி கேட்டாலும் அவன் நேரா சுடுகாட்டுக்குத் தான் வழி சொல்லுவான். அப்பிடிபட்ட அவன் எப்பிடி ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்டி இவ தான் என் பொண்டாட்டி னு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து இருக்கான்னே எங்களுக்கு புரியல." எனக் கூறியவாறு நரசிம்மன் தன் மனைவியை திரும்பிப் பார்க்க, லட்சுமி தன்னை பார்த்த பார்வையில் அமைதியாக அங்கிருந்து எழுந்தவர், "நா போய் இந்த குவளைய கழுவி வச்சுட்டு வர்றேன்." என பாஞ்சாலி அருந்தி விட்டு வைத்த குவளையை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றார் நரசிம்மன்.
அவர் எழுந்து சென்றதும் லட்சுமி திரும்பி பாஞ்சாலியைப் பார்க்க, அவளோ அவரையே பயந்த பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள். "என்னயவே பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? இதுக்கு முன்னாடி என் பையன நீ பாத்ததே இல்ல னு சொல்ற. அப்புறம் எப்பிடி என் பையன் மூலமா என் வீட்ல வந்து உக்காந்துட்டு இருக்க?" லட்சுமி.
"அது... என் அத்தை இறந்ததுக்கு அப்புறம் எனக்குனு அந்த ஊருல யாரும் இல்ல. அநாதையான என்னய அந்த ஊரு பஞ்சாயத்து கோயிலுக்கு குடுத்துருச்சு. கோயிலுக்கு சொந்தமான என்னய கோயில் சார்பா ஏலம் விட்டப்போ ஒருத்தர் என்னய இருபத்தஞ்சாயிரத்துக்கு வாங்கிட்டாரு. அப்போ தான் அவரு வந்து ஏலம் எடுத்தவர விட அதிகமா பணம் குடுத்து என்னய வாங்கிட்டு வந்துட்டாரு. அதே கோவில்ல வச்சு என் கழுத்துல இதையும் கட்டி இங்க கூட்டிட்டு வந்துட்டாரு. உங்க... உங்களுக்கு நா இங்க இருக்குறது புடிக்கலனா நா... நா வேணுனா வெளில போயிர்றேன். என்... என்னய மன்னிச்சுருங்க." எனக் கண்ணீருடன் கை கூப்பியவாறு எழுந்தாள் பாஞ்சாலி.
அவள் கூறிய செய்தியைக் கேட்டு சமையலறையில் அப்படியே உறைந்து நின்றிருந்தார் நரசிம்மன். மெல்ல நடந்து பாஞ்சாலி வாசலை நெருங்குகையில், "நில்லுடி..." என தன் கட்டைக் குரலில் உரக்க கத்தினாள் லட்சுமி.
அவளது அந்த கட்டைக் குரலில் பயத்தில் துள்ளி ஒரு அடி பின்னே நகர்ந்தாள் பாஞ்சாலி. "என்னய கேக்காம வேணுனா இந்த வீட்டுக்குள்ள நீ வந்து இருக்கலாம். ஆனா இந்த வீட்ட விட்டு வெளிய போகனும்னா அத நாந்தான் முடிவு பண்ணனும். உள்ள போ..." என உள் நோக்கி கை காட்டினாள் லட்சுமி.
"இல்ல... நா போயிர்றேன். உங்களுக்கு எதுக்கு சிரமம்?" எனக் கண்ணீர் வழிய நின்றாள் பாஞ்சாலி.
"உள்ள போ னு சொன்னேன்." லட்சுமி.
அவளது குரலிலும் முகப்பாவனையிலும் பயம் கொண்ட பாஞ்சாலி அவளது கட்டளைக்கு கீழ் படிந்து உள் நோக்கி நடந்தாள். "உள்ள போறதுக்கு முன்னாடி நா சொல்றத நல்லா மண்டையில ஏத்திக்கும் உள்ள போ. இனி அநாதை ங்கிற வார்த்தை உன் வாயில இருந்து வரவே கூடாது. அப்பிடி வந்துச்சு உன் வாயிலயே சூடு வைப்பேன். இனிமே இது உன் வீடு. இது தான் உன்னோட வீடு. உனக்கு மாமியாரா இருக்கலாம் னு நா முடிவு பண்ணிட்டேன். உன்னோட முடிவ சொல்லு..." என விரைப்பாக நின்றாள் லட்சுமி.
அதைக் கேட்ட பாஞ்சாலியின் கண்களுக்கு லட்சுமியின் உருவில் இறந்து போன தனது அத்தை கண்களுக்கு தெரிய, "நா உங்கள அத்தை னு கூப்பிடலாமா?" என அழுகையுடன் விசும்பினாள் பாஞ்சாலி.
"அத என் பையன் வந்து சொல்லட்டும். உன்னய தான் பொண்டாட்டி னு எங்களுக்கு அறிமுகப்படுத்துனான். எங்கள அத்த மாமா னு உனக்கு சொல்லாம போய்ட்டான். அவன் வந்து சொல்லட்டும்." என முறைப்பாகவே கூறினாள் லட்சுமி.
"ஹலோ எச்சூஸ்மீ லேடீஸ்... உங்க மாமியார் மருமக பேச்சுக்கிடையில நா உள்ள வர்றேன் னு தப்பா நெனச்சுக்காதீங்க... லட்சூ உன் கிட்ட இத நா எப்பிடி கேக்குறது னு தெரியல. என்னால கேக்காமலும் இருக்க முடியல. ப்ளீஸ் என்னய தப்பா நெனச்சுக்காத. நீயும் என்னய தப்பா நெனச்சுக்காத மா." நரசிம்மன்.
"என்ன? சொல்லுங்க?" லட்சுமி.
"ரொம்ப நேரமாவே உன் கிட்ட கேக்கனும் னு நெனைச்சுட்டு இருந்தேன். தொண்டை ரொம்ப ஒரு மாதிரி இருக்கு. என்னன்னு தெரியல. உன் கையால உன்னோட அந்த ஸ்பெஷல் சுடு தண்ணி கொஞ்சம் போட்டுத் தாயேன். ப்ளீஸ்..." நரசிம்மன்.
அதைக் கேட்ட லட்சுமி கோவம் தாங்காமல் அவரை அடிக்க ஏதுவாக ஏதாவது கிடைக்குமா என தேட... பாஞ்சாலியின் இதழில் லேசான வளைவு எட்டிப் பார்த்தது.
(மடக்கொடி வருவாள்...)