தேடல் 10
மூச்சு விட சிரமபடுபவளை சில நொடிகள் துடிக்க விட்டவனுக்கு இதுவரை அவள் பேசிய பேச்சுக்கள் கடும் சீற்றத்தை கிளப்பினாலும், அவளின் அழகிய வதனம் சுருங்கி கண்கள் கலங்க போராடுபவளை கண்டு சட்டென கையை எடுத்தான். சில நொடிகள் கடந்தும் இருமிக்கொண்டேயிருந்தவளை கண்டுக்கொள்ள கூடாது என நினைத்தவன் மாறாக அவள் முதுகை நீவி விட, அதிர்வுடன் பின்னால் நகர்ந்தாள் செந்தா. இடுங்கிய விழிகளுடன் அவளை பார்த்தவன்..
“உனக்கென்ன உலக அழகி னு நினைப்பா..? வந்ததிலிருந்து ரொம்ப தான் அலட்டுற..? இதுல இவள கைய புடுச்சி இழுத்து தான் போடிங்..” என கூசாமல் பொய்யுரைத்தான். உண்மையில் தன்னவளின் அருகாமையும் அவள் வாசமும் அவனுள் உறங்கி கொண்டிருந்த ஆண்மையை தட்டி எழுப்பியதை அடக்கவியலாமல் எங்கே மீண்டும் தன் அவசர புத்தியால் அவளுக்கு தீங்கு செய்துவிடுவோமோ என பயத்தில் அவளை சீண்டியிருந்தான்.
அவன் கூற்றில் வெகுவாக காயப்பட்டு போனவள் தலை குனிந்து தன்னை சமாளிக்க முயன்றாள். கை எட்டும் தூரத்தில் அவனின் ராட்சசி தடுமாறுவதை காண சகிக்காது அவளை விட்டு விலகி சோபாவில் அமர்ந்தான்.
சில நொடிகள் கடந்து..
“என்ன முடிவு பண்ணிருக்க..? எனக்கு டைமாகுது..
எனக்கு மட்டுமே என் பொண்ணு வேணும்..
எப்பவுமே அவ, நம்ம பொண்ணு தான்..
அப்படியென்ன வெங்காய பாசம் அவ மேல..?
அவளை மட்டுமில்ல உன்னையும் கன்னா பின்னா னு லவ் பண்றேன்..” என்றான் தீரன். எள்ளல் நகையுடன் செந்தா..
“என்னை பத்தி தெரிஞ்சிக்ட்டா உன் லவ் சின்னா பின்னமாகி என்னை விட்டு தெறிச்சு ஓடுவ..உன் வளர்ப்பு அப்படி..சோ..” என கையை வாயில் வைத்து மூடி..
“வேற வேலைய பாரு போ..” என பின் நகர்ந்து சுவற்றில் நன்றாக சாய்ந்து நின்றாள் செந்தா. அவள் செயலில் வெகுண்டவன், மீண்டும் அவளருகில் வர கைகளால் முகத்தை மறைத்தபடி மடங்கி அமர்ந்தாள் செந்தா. சட்டென அவளை தூக்கி கைகளை விலக்கி ஒரு கையால் அவள் கைகளை பிடித்து மறு கையால் கன்னத்தை திருப்பி அவள் காதருகில் ஏதோ சொல்ல இவள் முகம் மாறியது. சம்பா களியின்(பெங்காலி ஸ்வீட்) நடுவே வைத்த செர்ரி போல அவள் கன்னத்தின் ஒற்றை பரு வேறு வெகு நேரமாய் அவனை இம்சிக்க, மறுநொடி அழுந்த முத்தமிட்டு அவளை தள்ளி விட்டான்.
இதை சற்றும் எதிர்ப்பார்க்காத செந்தாவின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. தன்னை மறந்து நின்றவளை பார்த்தவன் வாஞ்சையுடன் அவள் கன்னத்தை வருட, சுயம் பெற்று சுற்றும் முற்றும் அவனை வெளுக்க ஏதாவது பொருள் கிடைக்குமா என தேடினாள். அவனோ..
“கூல் கூல் ஹனி..
நம்பி வந்த பொண்ணுக்கிட்ட இவ்ளோ சீப்பா நடந்துக்கிறியே..வெக்கமாயில்லை உனக்கு..?” என அறுவெறுப்புடன் கூறியவளிடம் தீரன்..
“இதை விட டீப்பா நடக்க தோணுதே..நடக்கட்டுமா..?” என கண்ணடித்து கூறியவனை..
“சீ..”என உதட்டை சுழித்தவளிடம் விரைந்து வந்தவன் அவள் முகத்தை அழுந்த பற்றி..
“மத்தவங்க முன்னாடி என்னை மரியாதையில்லாம பேசறது, சான்ஸ் கிடைச்சா நான் அப்படியே உன் மேல விழுந்துடுவேன் னு மட்டமா பாக்குறதெல்லாம் இனி அடியோட விட்ரு..நான் தனியா இருக்கும் போது உன் இஷ்டம் தான்..என்னிக்கிருந்தாலும் நீ எனக்கானவ னு லைட்டா அட்வான்டேஜ் எடுத்துட்டேன்..மத்தபடி. “ என தன் உள்ளங்கையிலிருந்ததை காட்டியவன்..
“இத காரணம் காட்டி பப்ளிக்கா நானும் உன்னை பிளாக்மெயில் பண்ண மாட்டேன்..நீயே என்னை, என் காதலை முழுசா உணர்ந்து உன்னையே என்க்கிட்ட கொடுக்குற வரைக்கும் தள்ளி நிப்பேன் னு..” என இடைவெளி விட விலுக்கென தலை நிமிர்ந்து அவனை முறைத்தவளை வாயை குவித்து ஓர் முத்தத்தை பறக்கவிட்டவன்..
“நினைக்கவே நினைக்காத..என் செல்ல சீண்டல்கள் தொடரும்..மாமனும் பாவமில்ல கண்ணு..ஓகே..மேட்டருக்கு வருவோம்..உனக்காக மட்டுமில்ல யாழி.. நம்ம ருஷிக்காகவும் தான் என் வேலையெல்லாம் விட்டு அவளை பழைய ருஷியா மாத்தனும் னு உன்னை கெஞ்சி கேட்கிறேன்..ஒத்துக்கோ..ப்ளீஸ்..” என இது வரை அவளிடம் விளையாடிய காதலனா இவன்..இது தான் ‘சட்டென்று மாறுது வானிலை’ யின் அர்த்தமோ என வியக்குமளவு பெறா மகளுக்காய் அவள் தாயிடம் வேண்டி நின்றான்.
தீரனையே அசராமல் பார்த்தவள்..
“ருஷி திருநெல்வேலி ல படிக்கிறா..நீ..ம்ப்ச்..” என உதடு கடித்தவளை இடையிட்டு..
“நம்மை தாண்டி மூணாவது மனுஷங்க அது நம்ம ருஷியாவே இருந்தாலும் பாத்து பேசு..இப்ப நீ என்ன சொன்னாலும் ஐ வில் நெவர் மைண்ட்..ஆனா இப்படி லிப்ஸ் கடிச்சு வைக்காதே..” என கள்ளச்சிரிப்புடன் கூறியவனை பார்த்து முறைத்தவள்..
“போடா சமோசா மூக்கா..என்னவோ பண்ணி தொலை..நான் கிளம்புறேன்..” என கதவை நோக்கி சென்றவளை..
“நீ வைக்கிற பட்ட பேர்க்கெல்லாம் ஒரு நாள் என்க்கிட்ட வகையா சிக்க போற..அப்ப தெரியும் டி நான் காரமா ஸ்வீட்டா னு..பாத்து போ..” என்றவன் செந்தா சென்ற சில நிமிடங்கள் கழித்து தீரனும் மருத்துவமனைக்கு கிளம்பினான்.
மருந்து வீரியத்தில் இன்னுமே உறங்கி கொண்டிருந்த ருஷியை பார்த்தவன் மாணிக்கத்திடம்..
“நீங்களும் ஆன்ட்டியும் சாப்பிட்டு வாங்க..” என அனுப்பி விட்டு தன் பால்ய சிநேகிதனுக்கு அழைப்பு விடுத்தான் தீரன்.
தீரன் மட்டுமே இங்கு தங்குவது என முடிவானதும் ஆரல்வாய் மொழியில் நண்பனுக்கு சொந்தமான பண்ணை வீட்டை சில மாதங்கள் வாடகைக்கென கேட்டு உறுதிபடுத்திக்கொண்டான்.
எங்க இவள இன்னும் காணோம் என நினைக்கவும் உள்ளே வந்தாள் செந்தா. முகம் சற்று வீங்கியிருக்க ருஷியை பார்த்தவன் அவளிடம்..
“யாழி..ஆர் யூ ஓகே..?..” என சிறு குரலில் கேட்க..
“உன் வேலையை மட்டும் பாரு..காண்டாமிருகம்..யாழி..கோழி ன்னு..”என ருஷியின் அருகே அமர்ந்து கொண்டாள் செந்தா.
தன் வயது, பதவிக்கேற்ற கம்பீரம், பக்குவத்துடன் அனைவரிடமும் தன்மையாக பழகுபவள் தன்னிடம் மட்டும் ருஷியை விட சிறு பெண்ணாய் மல்லுக்கு நிற்பவளிடம் அடியோடு சரணடைந்தான் தீரன். மாணிக்கம் வேதா வந்து விட..செந்தா அவரிடம்..
“ப்பா..அவர் சொல்ற மாதிரி ஸ்கூல் விட்டு பிக்கப் பண்ணிக்கட்டும்..நான் ஆபிஸ் முடிஞ்சு வந்ததும் இங்க கொண்டு வந்து விடட்டும்..ஸ்ட்ரிக்டா வாசல் வரைக்கும் தான்..டெய்லி ஆரல்வாய்மொழி டு திருநெல்வேலி னு தேவையில்லாத அலைச்சல் தான்..அவருக்கே ஓகே னும் போது எனக்கென்ன..?ஆனா இதெல்லாம் ஆறு மாசம் வரைக்கும் தான்..அப்புறமா என் பொண்ணு விஷயத்துல மொத்தமா ஒதுங்கிடனும்..ஓகே வா னு கேளுங்க..?” என்றவளை தெனாவட்டாக பார்த்து..
“எனக்கு ஓகே அங்கிள்..அடுத்த வருஷம் ருஷி ஆரல்வாய்மொழி ல இருக்குற ஸ்கூல் ல சேர்த்துடலாம்..மேடம்க்கும் இங்கேயே டிரான்ஸ்பர் வாங்கி கொடுக்க என் பிரன்ட்க்கிட்ட கேட்டிருக்கேன்..அவன் மாமா ஆளுங்கட்சி ல முக்கியமான நபர்..கண்டிப்பா இங்க வேலை கிடைச்சுடும்..சோ இனி ருஷி தனியா இருக்க வேண்டியதில்ல..அப்புறம்
மாசத்துல ரெண்டு நாள் என் வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுவேன்..புது மனுஷங்க, புது இடம் னு ருஷிக்கு நல்ல சேஞ்ஜ் கிடைக்கும்..ருஷி விஷயத்துல என்னையும் என் குடும்பத்தையும் நீங்க தாராளமா நம்பலாம்..” என ஏதோ வீட்டு தலைவன் போல எதிர்காலத்தை திட்டமிட்டு அவர்களுக்கும் சேர்த்து முடிவெடுத்து பேசியவனை கடுப்புடன் பார்த்த செந்தா..
“இப்ப எனக்கு இருமல் வருது..நான் தும்மலாமா இல்ல சாரை கேட்டு தான் இருமனுமா..? ஸ்கூல் மாத்தறது, என் வேலை விஷயம் எல்லாம் ப்யூர்லி மை டெசிஷன்..அவர் லிமிட் ல இருக்க சொல்லுங்க..ஆமா..” என்றவளை கண்டும் காணாதவன் போல மாணிக்கத்திடம்..
“நான் கிளம்புறேன். ஏதாவது எமர்ஜென்சி னா உடனே கூப்பிடுங்க. “ என கிளம்பினான் தீரன். தாம் கேட்டு மறுத்தவள் தானாக தீரனுக்காக ஒப்புக்கொண்டதை கவனித்த வேதாவிற்கு மகிழ்ச்சி ஏற்பட்டாலும் தன் மகனை எண்ணி சிறு சலனம் உண்டானது.
வேலை நிமித்தமாக ஒரு மாத காலம் பிரணவ்வுடன் லண்டன் சென்றிருந்த வினுயுகன் இன்னும் இரு தினங்களில் இங்கு வருவதையொட்டி அவனுக்கு ருஷி பற்றி அனைத்தும் கூறிவிட்டு வேதா..
“தீரன் இன்னும் 6 மாசத்துக்கு இங்க தான் இருப்பான் வினு..”சில நொடிகள் ஆழ்ந்த மௌனம் நிலவ பின் வினு..
“செந்தா பக்கத்துல இருந்தா கொடுங்க மா..பேசனும்..” என்றான். அவளிடம் சில நிமிடங்கள் பேசி விட்டு தன் அன்னையிடம்..
“சனிக்கிழமை மார்னிங் திருநெல்வேலி வந்துடுவேன்..நானே கேப் புக் பண்ணி வீட்டுக்கு வந்துடறேன். அப்பாவை அலைய வைக்காதீங்க ம்மா..உடம்பை பார்த்துகங்க..பை..” என மொபைலை அணைத்தவனுக்கு ருஷியை நினைத்து வருந்தினாலும் இனி தீரனை, அவனை சேர்ந்தவர்களை இயல்பாக எதிர்கொள்ள வேண்டுமே, தன்னால் முடியுமா என உள்ளுக்குள் மறுகினான் வினு. இனி வரும் காலம் எப்படியோ அதன் போக்கில் பயணிக்க தயாரானான்.
ஒரு வாரம் கடந்த நிலையில் கிருஷிகா பூரணமாக குணமடைந்து மாணிக்கம் வேதாவுடன் அவர்கள் வீட்டிற்கு செல்ல தீரன் தோவாளை கிளம்பினான். மேலும் ஒரு வாரம் ஓய்வெடுத்து பின் பள்ளிக்கு செல்வதாய் முடிவெடுத்தமையால் செந்தா மட்டும் திருநெல்வேலி கிளம்பினாள். நாளை வினுயுகன் வந்துவிடுவான் என்பதால் தீரனும் நாசுக்காய் ஒதுங்கி கொண்டான்.
அன்றிரவு செந்தாவிற்கு ‘பத்திரமா வீட்டுக்கு வந்துட்டியா..?’ என செய்தி அனுப்ப பதிலுக்கு அவள் அரக்கனை மிதிக்கும் பத்ரகாளி ஸ்டிக்கரை அனுப்பி வைத்தாள்..அதை பார்த்ததும் நகைத்தவன், ‘க்யூட் காளி தான் டி நீ’ என அனுப்ப மறுபுறம் எந்த பதிலும் இல்லை. சில நிமிடங்கள் பொறுத்திருந்தவன் தன் அன்னையின் அறைக்கு சென்றான்.
தீரனின் துணிகளை மடித்து கொண்டிருந்த கமலாவிடம்..
“அம்மா நான் யா..செந்தாழினியை திரும்பவும் பார்த்தேன்..” என கிருஷிகாவை குறிப்பிட்டு அவளுக்கும் இவனுக்கும் நிலவும் ஆத்மார்த்தமான பந்தத்தை கூறி சுருக்கமாக நடந்ததை விவரித்தான். செந்தாவிற்கு மகள் இருப்பதையே எதிர்ப்பார்க்காதவர் அவள் இளம்விதவை என்றதும் தன் மகனுக்காய் உள்ளுக்குள் கட்டி வைத்திருந்த மனக்கோட்டை தூள் தூளாக சிதறியது. தன் மகனுக்கு ஏற்கனவே மணமுடித்து மகளுடன் வாழும் கைம்பெண் மனைவியாக வருவதா என அன்றைய காலகட்டத்தின் அக்மார்க் அன்னையாக செந்தாவை ஏற்க மறுத்தார். மெல்ல மகனிடம் எடுத்து சொல்லி புரிய வைத்து அவனுக்கு விரைவாக வேறு பெண் பார்த்து மணமுடிக்க வேண்டும் என முடிவெடுத்தார். அன்னையின் மனதிலிருப்பதை அறியாது அவரிடம்..
“இங்க நம்ம தோப்பு, தோட்டமெல்லாம் பாத்துக்க ஆளுங்கள செட் பண்ணிட்டேன் ம்மா..இன்னும் ஆறு மாசத்துக்கு ஆரல்வாய்மொழி ல நம்ம ரங்கா பண்ணை வீட்டில தான் தங்க போறேன்..அப்பப்ப உங்களை வந்து பாத்துப்பேன்..ருஷியையும் இங்க கூட்டிட்டு வர்றேன்..
ஏம்பா..டெய்லி ஆரல்வாய்மொழி திருநெல்வேலி போக ஒன்னேகால் மணி நேரம் திரும்பி ரிடர்ன் அதே னு மூணு மணி நேரமா வண்டில கூட்டி போய் விட்டு வந்தா என் பையன் நிலைமை என்னாகறது..?
என்னம்மா நீ..?இந்த வயசுல என் சோட்டு பசங்க அப் & டவுன் ஆறு மணி நேரமெல்லாம் வேலைக்கு போயிட்டு வராங்க..என்னை மாதிரி மோட்டார் சாம்பியனுக்கு இதெல்லாம் ஜூஜூபி மா..என்னையும் பாத்துப்பேன்..
என்னவோ போ..சிறு பொம்பள புள்ள உன்னை உயிரா நம்புது..அது ஆயுசுக்கும் சௌக்கியமா இருக்கனும்..ஆறு மாசம் தான் தீரா உனக்கு டைம்..அப்புறம் நீ இங்க வந்துடனும்..
கண்டிப்பா ம்மா..அத்தை இன்னும் வரலியா..?
நிலாக்கு காச்சல் னு அங்க போயிருக்கு..
ஓ..நாளைக்கு போய் பாக்குறேன்..” என வெளியேறிய மகன் நிலா வை விட இன்று ருஷிக்கு முன்னுரிமை வழங்கியதை சிறு அதிர்வுடன் கண்டுக்கொண்டார் கமலா.
தொடரும்.

Last edited:
Author: STN - 90
Article Title: NTYU - 10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.