• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 11

STN - 90

New member
தேடல் 11

file_000000009c30720987f365bfe08ec5eb.png



அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் செந்தாழினி தன் காரை எடுத்துக்கொண்டு திருநெல்வேலி ஜங்சனில் வினு மற்றும் ப்ரணவ்விற்காக காத்திருந்தாள். சரியான நேரத்தில் வந்திறங்கிய இரு இளைஞர்களையும் பார்த்து இவள் கையசைக்க, அவளை கண்டு வியந்த வினு தன் ட்ராலியை தள்ளியபடியே ப்ரணவ்வுடன் அருகில் விரைந்தான்.

இருவரையும் கண்டு செந்தா..

“வெல்கம் ஹோம்..எப்படி இருக்கீங்க..?ஹவ் வாஸ் யுவர் ஜர்னி..?

சூப்பர்ப்..நாம நினைச்ச மாதிரி இந்த வருஷ மோட்டார் சாம்பியன்ஷிப்க்கு நிறைய பேரை அனுப்ப போறோம்..” என்றான் வினு. ப்ரணவ் தயக்கத்துடன்..

“கிரு எப்படி இருக்கா..?

நல்லாருக்கா..வாங்க..உங்கள பாக்க ஆவலா காத்துட்டுருக்கா..” என அவர்கள் கையிலிருந்த பேக்பேக்கை வாங்கிக்கொண்டு முன்னே நடந்தாள். அவளிடம் வினு..

“எதுக்கு சிரமம் உனக்கு..நாங்களே வர்றோம் னு அம்மாட்ட சொல்லிருந்தேனே..?

ஒரு மாசம் கழிச்சு வந்த என் உடன் பிறவா அண்ணன்களை நான் வரவேற்காம தனியா விட்ருவனா..? நேத்தே கிளம்ப வேண்டியது உங்களுக்காக இப்ப கிளம்புறேன்..போகும் போது என் லக்கேஜ் எடுத்துட்டு போயிடலாம்..நானும் 2 நாள் லீவ் போட்ருக்கேன்..காபி குடிக்கிறீங்களா இல்ல வீட்டுக்கு போயிடலாமா..?

வீட்டுக்கு போ சேன்டி..” என்றான் வினு. வலிய கேட்டால் ஓரிரு வார்த்தைகள் பதில் வருமேயன்றி சதா தனிமையை இரசிக்கும் பெண்ணவள் இன்று தங்களை பிக்கப் செய்து என்றுமில்லாத பழக்கமாக உபசரிப்பது செந்தாவே அறியாமல் அவள் இயல்பு குணம் வெளிப்படத்தொடங்கியது
யாரால் என சட்டென கண்டு கொண்ட வினு செந்தாவுக்காகவேனும் தான் இன்னும் பொறுப்பாக நடக்க வேண்டும் என தீர்மானித்தான்.

அவள் ப்ளாட்டை நெருங்குகையில் வாசலில் நின்றிருந்தாள் மான்யா. காரிலிருந்து இறங்கிய செந்தா வியப்புடன் தன் தோழியை பார்க்க, இரு இளைஞர்களும் சிறு புன்னகையுடன் நெருங்கினர். மான்யா வழக்கம் போல தோவாளை அலுவலகத்தில் பணிபுரிகிறாள். செந்தாழினி அலுவலகத்தில் மட்டுமே உயரதிகாரி யன்று மற்றபடி நெருக்கமான தோழிகள். கிருஷிகா விஷயம் கேள்விபட்டு தகவல் தெரிவிக்காமல் சட்டென வந்ததில் இவர்களுக்காக காத்து நின்றாள். செந்தா..

“ஹே மான்யா..என்ன இங்க..?

உன்ன, கிரு பேபிய பாக்க தான்..” என செந்தாவிடம் சாவியை வாங்கி திறந்து அனைவருக்கும் வழிவிட்டாள். உள்ளே நுழையும்முன் பக்கத்து சியாமளா வீட்டை கண்களால் சைகை காட்டி சென்ற வினுவை சரியாய் கண்டுக்கொண்டு சில நொடிகள் மொபைல் பார்க்கும் சாக்கில் அவர் வீட்டை படம் எடுத்தான் பிரணவ்.

செந்தா மான்யாவிடம்..

“நான் இப்ப ஆரல்வாய்மொழி கிளம்புறேன்..வர்ற புதன்கிழமை ரிடர்ன்..கிரு அங்க தான் இருக்கா..

ஓ..மெயினா அவள பாக்க தான் வந்தேன்..சரி வீக்டேய்ஸ் ல வந்து பாத்துக்கிறேன்..நான் கிளம்புறேன்..” என எழவும் செந்தா..

“இன்னிக்கு லீவ் தான..? ப்ரீயா இருந்தா எங்க கூட வந்து பாத்துட்டு அப்படியே தோவாளை கிளம்பலாமே..?

இல்ல..இப்ப தான் இவங்க வந்திருக்காங்க..நீங்க என்ஜாய் பண்ணுங்க..நெக்ஸ்ட் வீக் போன் பண்ணிட்டு வர்றேன்..” என வம்படியாய் கிளம்பியவளை வினு..

“நீங்க வர்றது எங்களுக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல..எப்படியும் இங்கிருந்து பஸ் ல தான போகனும்..கார் ல தான் நாங்க கிளம்புறோம்..நீங்களும் வாங்க மான்யா..” என கேட்க சில நொடிகள் யோசித்து சரி என தலையசைத்தாள்.

வந்ததிலிருந்து காபி பருகியபடி தன் மொபைலை மட்டுமே பார்த்து கொண்டிருந்த ப்ரணவ் செந்தாவிடம்..

“கிளம்பலாமா சேன்டி..எனக்கு இன்னும் ஜெட் லாக் போகல..தூக்கம் வருது..” என எழவும் அனைவரும் கிளம்பினார்கள். செந்தா காரை ஓட்ட பக்கத்தில் மான்யா பின்னே இரு ஆண்களும் என ஆரல்வாய்மொழிக்கு கிளம்பினார்கள்.

கலவையான உணர்வுகளுடன் வினு வெளியே வேடிக்கை பார்த்தபடி வர, அவன் தோளில் வாகாக சாய்ந்தபடி உறங்கினான் பிரணவ். பாதி தூரம் கடந்த வேளையில் செந்தா அடிக்கடி தன் முதுகை, இடுப்பை நீவிக்கொண்டே நேராக அமர்ந்து காரை செலுத்துவதை கண்ட வினு..

“சேன்டி, உனக்கு பேக் பெயின் இருக்கா..?

லைட்டா..பட் ஓகே..

காரை ஓரமா நிறுத்து..நான் ட்ரைவ் பண்றேன்..

நோ வினு…ஐ கேன் மேனேஜ்..

ஷ்ஷ்…ஸ்டாப் தி கார்..” என அதட்டியவனை மீற முடியாமல் காரை சாலையோரமாக நிறுத்தினாள். ப்ரணவ் முழித்து விட, பின்னிருந்து இறங்கிய வினு ஓட்டுநர் சீட்டில் அமர்ந்து பெல்ட்டை மாட்டிக்கொண்டே மான்யாவிடம்..

“இஃப் யூ டோன்ட் மைண்ட் பேக் ல உட்கார முடியுமா..? இங்க தான் லெக் ஸ்பேஸ் அதிகமா இருக்கும்..சேன்டிக்கும் வசதி..” என கேட்க, வினுவை முறைத்த ப்ரணவ்..

“ஏன் டா எ…” என நிறுத்தி பின்.

“இங்கயும் தாராளமா தா இருக்கு..நீ இங்க வா சான்டி..” என தன்னருகே கை காட்ட பதிலளிக்கும் தேவையின்றி மான்யா முகம் கறுத்தது. வினு அழுத்தமாக..

“அவன் கிடக்குறான்..நீங்க போங்க மான்யா..” எனக்கூற வேறு வழியின்றி பின் இருக்கையில் அமர்ந்தாள் மான்யா. அவள் ஏறியதும் தேகம் இறுகி இன்னும் ஓரமாய் ஒதுங்கி வெளியே வேடிக்கை பார்த்தவனின் செயலில் காயம் பட்ட மனதுடன் முடிந்தவரை கதவையொட்டி நகர்ந்து கொண்டாள்.

எதற்காக இந்த ஓரங்க நாடகம் என புரியாமல் பார்த்த செந்தாவிடம் கண் சிமிட்டியபடி காரை எடுத்தான் அழகிய அசுரன். வழிநெடுக பரந்து கிடந்த பசுமையான வயல்கள் கண்களுக்கு விருந்தாக, சாலையினூடே கடந்து செல்லும் பேருந்தில் ஒலித்த இசையும் தவிக்கும் மனதை சற்றே சாந்தபடுத்த நீண்ட பெருமூச்சுடன் ஓரக்கண்ணால் மான்யாவை பார்க்க, கன்னத்தில் வழிந்த கண்ணீர் கோடுடன் சட்டென தன் துப்பட்டாவை கொண்டு முகத்தை மறைத்துக்கொண்டாள்.

தன் செயலால் பெரிதும் காயப்பட்டிருக்கிறாள் என தெரிந்தும் இறங்கி வர முடியாததாய் அவனின் கடந்த கால காதல் நிகழ்வுகள் அத்தனை கொடியது.

சில நிமிடங்கள் கழித்து தளர்வாய் இருக்கையில் அமர்ந்தவனுக்கு உறக்கம் தழுவ அப்படியே உறங்கி போனான். வெகு நேரமாய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த ப்ரணவ் வினு வீட்டை அடைந்ததும் கண் விழித்தான்.

வாசலிலேயே இவர்களுக்காக காத்திருந்த கிருஷிகா “ஹேய் மாமா, ப்ரான்..” என ஆரவாரமிட்டபடி ஓடி வந்தாள். உள்ளுக்குள் வேதனையிருந்தும் கண்களில் சிரிப்பை கொணர்ந்து கிருவை தூக்கி கொண்டான் ப்ரணவ். பிறகு வினுவிடம் தாவியவள் அவன் தலைமுடியை கலைத்துவிட்டு இறுதியாக தன் அன்னையின் மீது ஒரு கண்ணை வைத்தவாறு மான்யாவிடம் ஓடி வந்தாள்.

அதுவரை சோர்வுடன் இருந்த மான்யா கிருவை கண்டதும் அவளை தூக்கி ஒரு சுற்று சுற்றியபடி அவள் கன்னத்தில் முத்தமிட்டு என குழந்தையாகவே மாறி போனாள். வினு மற்றும் செந்தா இருவரையும் ஆதுரமாக பார்க்க, ப்ரணவின் விழிகள் மான்யாவையே தொக்கி நின்றது.

மாணிக்கம் மற்றும் வேதா..

“வாடா ராஜா, ப்ரணவ்..மான்யா உள்ள வாம்மா..” என வரவேற்க தன் அன்னையின் தோளில் கை போட்டபடி வீட்டினுள் நுழைந்தான் வினு.

அனைவருக்கும் லண்டனிலிருந்து வாங்கி வந்திருந்த பரிசு பொருட்களை கொடுத்தான் வினு. கை கட்டியபடி சிறு புன்னகையுடன் ஓரமாக அமர்ந்து இவர்களை பார்த்திருந்தாள் மான்யா.

அவளிடம் திரும்பி..

“சாரி மான்யா..நீங்க வருவீங்க னு தெரியல..நிறைய டாய்ஸ் & இவங்க விரும்பி கேட்டது வாங்கிட்டு வந்தேன்..நெக்ஸ்ட் டைம் அப்ராட் போகும் போது..”என்றவனை இடையிட்டு மான்யா..

“நோ மோர் பார்மாலிட்டிஸ் வினுயுகன்..நான் கிருவை பாக்க தான் வந்தேன்..இப்ப கிளம்பினா தான் டைமுக்கு வீட்டுக்கு போக முடியும்.. செந்தா நான் கிளம்புறேன்..” என எழுந்தாள் மான்யா. வேதா..

“மதியம் சாப்பிட்டு கிளம்பலாமே மா..?

இருக்கட்டும் ஆன்டி..இன்னொரு நாள் கண்டிப்பா வர்றேன்..பை அங்கிள், வினு, செந்தா..”என கிளம்ப, வினு..

“ஒன் மினிட் மான்யா, பஸ் ஸ்டாண்ட் ல ட்ராப் பண்றேன்..வர்றேன் இருங்க..

ஹலோ..நீங்களே இன்னிக்கு மார்னிங் தான் இங்க லான்ட் ஆனீங்க..பத்தாததுக்கு அங்கிருந்து ட்ரைவ் வேற..இங்க தெருமுனைல ஆட்டோ பிடிச்சு போயிடுவேன்..பை கிரு..” என விறுவிறுவென வெளியேறியவளை..

“நான் ட்ராப் பண்றேன் அவங்களை..கீ கொடு டா..” என வினுவிடம் சாவியை வாங்கி கொண்டு அவளை கடந்து முன்னே செல்ல தலைக்கு ஏறிய ஆத்திரத்தை காட்டவியலாமல் செந்தா, வினுவை முறைத்தாள் மான்யா. பக்குவமாய் மகளின் பின் பதுங்கி கொண்டவளிடம்..’உங்கள அப்புறமா கவனிச்சுக்குறேன்..’ என கண்களால் மிரட்டி வெளியே பைக்கில் அமர்ந்திருந்த காத்தவராயனிடம் விரைந்தாள். ஒரு கணம் ஏறவேண்டுமா என யோசித்து பின் அமைதியாய் ஏறிக்கொள்ளவும் ஒரு நொடி பொழுது அவள் சிந்தனையை தவறாய் புரிந்துக்கொண்டவன் வண்டியை காற்றில் பறக்க விட்டான். பின்னிருந்த கம்பியை கெட்டியாக பிடித்தபடி எங்கும் அவன் மேனியை உரசாதவாறு பயத்துடன் அமர்ந்திருந்தாள் மான்யா.

பேருந்து நிலையத்தை அடையவேண்டிய கால் மணி நேர தூரத்தை வெறும் ஐந்து நிமிடத்தில் இறக்கி விட்டவனின் விழிகளை ஏறிட்டு பார்க்காமல் தரையை பார்த்தவாறு..

“தாங்க் யூ..” என கூறி வேகமாக நகர்ந்தவளை..

“ஒரு நிமிஷம்..” என தடுத்தது கா.ரா குரல். முகத்தை சாதாரணமாக வைத்தபடி திரும்பி பார்த்தாள் மான்யா. அவனும் அவளையே விடாமல் பார்க்க..ஓர் கட்டத்தில் மான்யா..

“என்ன ட்ரை பண்ற நீ..?” என நேரடியாக கேட்க..ப்ரணவ் சிறு தயக்கத்துடன்..

“நீ என்னை வேற விதமா ட்ரை பண்ண கூடாது னு ஒரு முன்னெச்சரிக்கை..தட்ஸ் இட்..4 வருஷங்களுக்கு முன்ன ஆஷன் ல என்னையவே கொத்தி தின்ற மாதிரி பாத்தியே..நினைவிருக்கா..? அந்த பயம்..” என தோளை குலுக்கினான்.

எதை பற்றி சொல்கிறான் இவன் என சில நொடிகள் யோசித்தவளுக்கு புரிந்து போக..

“ஓகே..அதுக்கு..?

இங்க பாரு..எனக்கு காதல் மேல இருக்குற நம்பிக்கை உன்னை மாதிரி பொண்ணுங்க மேல இல்ல..அதுல அப்படி நடந்துக்கிட்டேன்..நான் உன் டைப் கிடையாதுன்னு சொல்ல தான் ட்ராப் பண்ண வந்தேன்..பை..” என திரும்பி நடந்தவனை மான்யா சொடக்கிட்டு அழைத்தாள். இவளை என பல்லை கடித்தபடி திரும்பியவனை பார்த்து..

“இந்த செகண்ட் வரைக்கும் உன்னை மனுஷனா கூட நான் மதிக்கல..ஆனா இப்ப உன்னை காதோல் பண்றது னு முடிவு பண்ணிட்டேன்..இந்த பம்பரகட்டை மண்டையனுக்கு இப்பிறவியில நான் தான் டி ஜாட்டை..சரி உன் நம்பர் சொல்லு..” என தன் மொபைலை எடுக்கவும் நக்கல் சிரிப்புடன் அவளை நெருங்கிய ப்ரணவ்..

“உன்னை மாதிரி எத்தனை துரோகிகள பாத்திருப்பேன்..நீயெல்லாம்.. “என தன் செருப்பை காட்டி..

“இதுக்கு கூட சமமில்ல..போடிங்..” என திரும்பியவன் அவள் வெளிறிய முகத்தை கண்டு திருப்தியுற்றவனாய் தன் பாக்கெட்டிலிருந்த லைட்டரை அவள் காலடியில் வீசி..

“லண்டன் கிஃப்ட்..ப்ராண்ட் நியூ..புண்பட்ட மனசுக்கு தேவைப்படும் ல..?..பை” என கையாட்டியபடி தன் பைக்கில் ஏறி பறந்தான் ப்ரணவ்.

அவன் வார்த்தைகளில் கண்கள் கலங்கினாலும், செல்லும் முன் அவளுக்கென லைட்டரை வீசி சென்றதில் அவனின் துளி அக்கறை அவள் மனதில் இதம் பரவ ‘உன்னை விட மாட்டேன் டா..கா.ரா’(காத்தவராயன் short form) என தோவாளை பேருந்தில் ஏறினாள் மான்யா.

தொடரும்.
 
Top Bottom