தேடல் 15

காலம் என்ன செய்ய காத்திருக்கிறது என தெரியாமல் தங்கள் வாழ்க்கையில் அடுத்தடுத்து என ஓடிக்கொண்டிருந்த வேளையில் ஓர் மாலை சோர்வான முகத்துடன் தனியாக வீட்டிற்கு வந்தாள் நிலன்யா. எப்பொழுதும் ராஜீவனுடன் வருபவள் களைப்பு மிகுந்து காணப்பட மரகதம் வயிற்றில் புளியை கரைத்தது. கமலா அவளிடம்..
“வாடா நிலா..மாப்பிள்ள வரலியா..?
பொங்கல் வருதுல்ல அத்தை அதுக்காக ஆர்டர் எடுக்க சூரத் போயிருக்காரு..
ஓ..காபி குடிக்கிறியா..?
வேணாம் த்தை, மாமா எங்க..?
வர்ற நேரம் தான்..
கொஞ்சம் தலைவலியா இருக்கு..நான் படுக்குறேன்..மாமா வந்ததும் எழுப்புங்க ம்மா..” என தன் அன்னையிடம் கூறிவிட்டு தனதறைக்கு சென்றாள் நிலா. நிலா விருந்தகம் மற்றும் அவளது கேலக்ஸி ரெஸ்டாரண்டை அவளே நிர்வகிப்பதால் வழி விட்டு வீட்டில் இருக்கிறார் மரகதம். கால் மணி நேரம் கழித்து ராஜீவனிடமிருந்து அழைப்பு வர, ஏற்று..
“சொல்லுங்க தம்பி..
நிலா அவ்விட வன்னோ அத்தை..?
ஆமா ப்பா..
ஓ..நான் அவள விலிச்சு.. சாரி கூப்பிட்டேன் பஷே, எடுக்கல அதான் உங்களுக்கு கூப்பிட்டேன்..
தலைவலி னு படுத்திருக்கா..நீங்க எப்ப வருவீங்க..?
இன்னும் ரெண்டு நாள் ல வந்துடுவேன்..நிலா வ பாத்துக்கங்க..” என போனை வைத்துவிட ராஜீவின் அழைப்பு மரகதத்திற்கு ஆறுதலாக இருந்தது. சற்று நேரத்தில் தீரன் வந்துவிட அவனுக்கு காபி பலகாரத்தை கொடுத்து நிலா வந்திருப்பதாக சொன்னார் கமலா.
தீரனும் அவளறைக்கு சென்று பார்க்க, அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள் நிலா. சத்தமில்லால் வெளியே வந்த தீரன் ராஜீவனுக்கு அழைத்தான். சில நிமிடங்கள் நண்பனிடம் உரையாடிவிட்டு தன்னறைக்குள் நுழைந்தான்.
இரவு உணவுக்காக நிலாவை மரகதம் எழுப்ப, அவள்..
“நீங்கல்லாம் சாப்பிட்டு மஞ்சள், மிளகு பால் மட்டும் கொண்டு வந்து கொடு ம்மா..தொண்டை வலியா இருக்கு..” என கழுத்தில் விக்ஸ் தேய்த்தபடி கூறினாள் நிலா. தன் மகளை சில கணம் பார்த்தவர் அமைதியாக வெளியேறினார்.
சில நிமிடங்களில் ஒரு கிண்ணத்தில் கூழாக கரைத்த சூடான மிளகு ரசசாதத்தை ஸ்பூனுடன் எடுத்து வந்த தீரன் நிலாவை நெருங்கி..
“நிலா..எழுந்திரு..இத மட்டும் சாபபிட்டு மாத்திரை போட்டு படு..
ப்ளீஸ் மாமா..பால் மட்டும் குடு..
முன்ன மாதிரி நீ தனியாள் இல்ல நிலா..உன்னை நம்பி ஆயிரம் பேர் இருக்காங்க..முதல்ல எழுந்து உட்காரு..
ரொம்ப குளிருது..” என கம்பளிக்குள் ஒளிந்து கொண்டவளை தோள் பற்றி அமர வைத்தான் தீரன். மீண்டும் மீண்டும் தலையனை நோக்கி சரிந்தவளை தன் தோளில் சாய்த்து கொண்டான் தீரன். இவர்களை பார்த்திருந்த கமலா அருகில் வந்து மருமகளுக்கு ஊட்டிவிட கண் மூடியபடியே கிண்ணத்தை காலி செய்து மாத்திரையும் போட்டுக்கொண்டது நிலாப்பாவை. அவளை வாகாக படுக்க வைத்து நன்றாக போர்த்திவிட்டு தன் அறைக்கு சென்றான் தீரன்.
இரு தினங்கள் கழித்து தன் வேலையை முடித்து கொண்டு நேரே தன் மனைவியை காண ஓடி வந்தான் ராஜீவன். கணவனை கண்டதும் சுற்றம் பார்க்காது அவனிடம் விரைந்து அவன் தோளை பற்று முன் ராஜீவன்..
“ஓ ஓ மூன்..இது நம்மொட வீடில்லா..” கன்னத்தில் குழி விழ சிரித்தபடி கூறவும் சட்டென தள்ளி நின்றாள் நிலா. அவளிடம்..
“தலைவேதனைனு சொன்னியே..இப்போ எங்கனயுண்டு.?
அதெல்லாம் சரியா போச்சு..இருங்க சாயா கொண்டு வர்றேன்..” என அவன் டிராலி பேக்கை தன்னறைக்கு எடுத்து சென்றாள். குளித்து முடித்து காலை உணவிற்காக வந்தனர் நிலா மற்றும் ராஜீவன். அவனுக்கு மிகவும் பிடித்த கோதுமை பரோட்டா மற்றும் நாட்டு கோழி குழம்பை பார்த்து பார்த்து பரிமாறினாள் நிலா. தன் மாமனையும் கவனிக்க தவறவில்லை.
இந்த தருணத்திற்காகவே காத்திருந்த ராஜீவ் மரகதம் கமலாவை பார்த்து..
“நம்ம தீரனை குறிச்சு நான் புதுசா என்ன சொல்ல..? உங்க மனசு எனக்கு மனசிலாயி..பக்ஷே காலத்துக்கு வாழப்போறது அவன்..அவனுக்கு இஷ்டமுள்ள பொண்ணா இருக்கட்டுமே..செந்தாழினி பத்தி இன் & அவுட் தெரிஞ்சு தான் இத சொல்றேன்..சொல்லப்போனா ஆ பெண்ணுக்கு..” என மேலே கூறும் முன் தட்டுடன் எழுந்த தீரன் கை கழுவ சமையலறைக்கு விரைந்தான்.
“மாமா..மாமா..” என பின்னே ஓடினாள் நிலா. கையை கழுவிக்கொண்டு தன்னை திடபடுத்திக்கொள்ள போராடினான் தீரன். அவனை நெருங்கிய நிலா அவன் கைகளை இறுக்க பற்றி அவன் முதுகை இதமாக நீவிவிட்டாள்.
புண்பட்ட காயத்தை மேலும் கீறி பின்பு மருந்திடுவதை போல ராஜீவன் சிறிதும் வைத்து பார்க்காமல்..
“இதே மாதிரி நான் சிந்திசிருனெங்கில் நிலன்யா என் பார்யாவாகிருக்குமோ..? “ என கேட்கவும் திகைப்புடன் அவனை பார்த்தனர் இரு பெண்களும். உள்ளிருந்து தன் கணவனின் கூற்றை கேட்டதும் அவள் கை தன்னால் இறங்க இம்முறை தீரன் அவளை இறுக பற்றினான். நிலாவை பற்றி இது வரை ஒரு வார்த்தை பேசியிராத தன் ஆருயிர் நண்பன் தன் வாழ்விற்காக அவனையே பணயம் வைக்கிறானே என வருந்தினான் தீரன். செய்யாத தவறுக்கு எத்தனை முறையடா தீக்குளிப்பது என உள்ளுக்குள் நொறுங்கினாலும் வெளியே காட்டாது விறைப்பாக நின்றிருந்தாள் நிலா.
அதிர்ச்சியில் இருண்ட முகத்துடன் தன்னை ஏறிட்ட கமலா, மரகதத்தை பார்த்து ராஜீவன்..
“நீங்கள் ரெண்டு பேரும் மனசார சம்மதிச்சா மாத்திரமே அவன் விவாஹம் நடக்கும்..அல்லங்கில் உங்க மகனாவே இருப்பான்..என்டே கடைசி மூச்சு வரையிலும் நிலன்யா என் பொறுப்பானு..இதுக்கு மேல நிங்கள் இஷ்டம்..” என சமையலறைக்கு வந்தவன் தன் மனைவியை தாங்கி பிடித்தபடி கடுப்புடன் தன்னை பார்த்து நிற்கும் நண்பனை கண்டு சிறு புன்னகையுடன்..
“இங்கனயானு இவங்கள டீல் செய்யனும்..நகரு டா..” என இருவருக்கிடையில் கையை விட்டு கழுவியவன் நிலாவின் துப்பட்டாவை கொண்டு கையை துடைத்தபடி..
“இந்த மாதிரி உன் மாமனும் பண்ணனுமில்ல..அதுக்கு தான்..உனக்கே தெரியும் என்னை பத்தி..பூவாம் வா..” என தன் மனைவியை இழுத்து கொண்டு வெளியேறினான் ராஜீவன். வாசலை அடைந்ததும்..
“நைட் எங்க வீட்டுக்கு போயிடுவோம் அத்தை..” என்றபடி நிலாவுடன் காரில் ஏறினான் ராஜீவன். மருமகனின் ஒவ்வொரு சொல்லும் ஒரு கூடை தீங்கங்குகளை நெஞ்சுக்குள் வாரியிறைத்ததை போல துடித்தார் மரகதம். வரமாக வந்த ஒற்றை மகளின் வாழ்வு குறித்து விமர்சனங்களை அது அவளை புரிந்து கொண்ட அவள் கணவனே எனினும் பதைபதைக்கும் மனது செந்தாழினி விஷயத்தில் எதிர்ப்பதமாய் யோசிப்பதில் தவறு என்ன..? சிறு வயதிலிருந்து மகனை போல தங்களை தாங்கி நிற்கும் கல்தூண் அவனுக்கு ஏன் இந்த நிலை எனவே யோசித்தது. இதற்கு மாறாய் பொட்டில் அடித்து புரியவைத்தவனின் கூற்றில் தன் இயல்பை விடுத்து மகனுக்காய் யோசிக்க ஆரம்பித்தார் கமலா.
சில மணி நேரங்கழித்து மீண்டும் வந்த ராஜீவன் தன்னறையில் படுத்துக்கொண்டிருந்த தீரனை எழுப்பி கையோடு கூட்டி சென்றான்.
வழக்கம் போல தங்களுக்கு பிடித்த குளிர்பானங்களுடன் எதிரே சலசலவென ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றினை பார்த்தபடி அமைதியாக அமர்ந்திருந்தனர் ராஜீவன் மற்றும் தீரனும். நீண்ட பெருமூச்செறிந்து தன் நண்பனை பார்த்து தீரன்..
“உண்மைய மட்டும் சொல்லு ராஜீவன்..என் கௌரவத்துக்கு, பழி வெறிக்கு உன்னை பலி கொடுத்துட்டேனா..?” என வேதனை ததும்பும் விழிகளுடன் கேட்க..ராஜீவன்..
“எந்தாடா இது..?பட்டி..பட்டி..இப்படி பேசாத பேசாத னு எத்தனை முறை சொல்றது..? இன்னிக்கு நான் சொன்னது உனக்காக தான்..இதை நிலன்யாவே சரியா புரிஞ்சுக்கிட்டா..நீ ஏன் டா..? உனக்காக இல்ல எனக்கு நிலன்யாவை நிஜமாவே பிடிக்கும் டா..மனசார கூட எனக்கு கெட்டது நினைக்க உன்னால முடியாது மிஸ்டர் விழிதீரன்..” எனக்கூறவும் அவன் மிஸ்டரில் விழிமகன் கண்டனப்பார்வை வீச..ராஜீவ்..
“எனிக்கும் கோவம் வரும்..பஷே நீ கீழே நோக்கும் போ சுந்தரமாயிருக்குன்ன உன் ஐ லேஷஸ் பாக்க எனக்கு ஆச தான் வருது டா விழிதீரா..” என மலையாளம் கலந்த தமிழில் கொஞ்சும் சேரமைந்தைனை இறுக தழுவிக்கொண்டான் தீரன். தனக்காகவே பாடுபடும் மற்றொரு ஜீவனுக்காய் அவனுள்ளம் பாகாய் உருகியது. தீரனை பார்த்து..
“நீ மலையிறங்கிட்டா உன் அத்தை மண்ணு சாரி பொண்ணு பாதியிறங்கிடுவா மீதி நான் கரெக்ட் பண்ணிப்பேன்..” என கண்ணடித்து கூறியவனின் தலையில் மெல்ல தட்டிய தீரன்..
“நடக்கும் போது தானா நடக்கட்டும்..இனி நம்ம வேலைய மட்டும் பாப்போம் வா..நிலா தனியாயிருக்கும்..நேரத்தோடு வீட்டுக்கு போய் சேரு..” என ராஜீவின் கை பற்றி எழுப்பினான் தீரன்.
ஏழாம் வகுப்பு முடிந்து எட்டாம் வகுப்பு புது பள்ளி, புதியதொரு தொடக்கம் என புதிய சூழலில் தன்னை அழகாய் பொருத்தி கொண்டாள் கிருஷிகா. தூரமாய் இருப்பினும் தன் தூரத்து உறவினர் உதவியுடன் அவள் மீது மட்டுமன்று செந்தா மீதும் தன் பார்வையை பதித்தபடி தன் கடமைகளை செய்து வந்தான் தீரன்.
அன்று வழக்கம் போல பள்ளி முடிந்து தனக்கு வீடியோ காலில் பேசும் கிருவிற்காக காத்திருந்தவன், அவள் அழைக்காமல் போனதும் ஏன் என குழம்பி நின்றான். சில நிமிடங்கள் அங்குமிங்கும் நடந்தவன் கிருவிற்கு
அழைக்க எதிர்புறம் அழைப்பு ஏற்படாமல் போக மனதில் மெல்ல கிலி பரவ ஆரம்பித்தது தீரனுக்கு.
சட்டென செந்தாவிற்கு அழைக்கும் முன் அவளிடமிருந்தே அழைப்புவர அடக்கவியலா பதட்டம் உடலில் விரவ முயன்று நிதானத்துடன் அழைப்பை ஏற்று..
யா..ழி..” என சொல்வதற்குள் மாணிக்கம்..
“தீரா நம்ம கிருவை யாரோ கடத்தி வச்சிருகாங்களாம்..உன்க்கிட்ட தான் பேசனுமாம்..இப்பவே கிளம்பி..” இங்க வா என முடிக்கும் முன்னரே மடமடவென வெளியேறி தன் பைக்கில் பறந்திருந்தான் தீரன் தன் உயிரானவர்களிடம்.
ப்ளுடூத்தில் ஒருபுறம் தன் அன்னையிடம் அழைத்து விஷயத்தை பகிர்ந்தவன் உடனே ராஜீவை அழைத்து விஷயத்தை கூறி..
“மச்சி முடிஞ்ச வரை ருஷியோட வருவேன்..நான் வராம போனாலும் இனி நீ தான் என் இடத்திலிருந்து எல்லாரையும் பாத்துக்கனும்..” என போனை அணைத்தவன் காற்றை கிழித்துக்கொண்டு சீறி பாய்ந்தான் சிவப்பேறிய விழிமகன்.
ஆரல்வாய்மொழியில் உடல் குலுங்க அழுதுக்கொண்டேயிருந்த செந்தாவை தேற்றவியலாது வேதா தடுமாற மாணிக்கம் தன் மகனை அழைத்தார்.
தன் தொழில் தொடர்பான செமினார் விஷயமாய் தூத்துக்குடி சென்றிருந்த வினுயுகன் கிருஷிகா கடத்தப்பட்டாள் என அறிந்ததும் அவன் வேலைகளை விட்டு உடனே கிளம்பியிருந்தான். போனில் ப்ரணவை அழைத்து தன் வீட்டிற்கு செல்லுமாறு பணிக்க வினுவின் வீட்டை நோக்கி பறந்தான் ப்ரணவ்.
தொடரும்.