• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

NTYU - 19

STN - 90

New member
தேடல் 19

file_0000000034f47207bc8530980f3a4071.png

ஓர் குடும்பத்தையே அழிக்க துணை நின்ற தன் தந்தையை நினைத்து இது வரை அவர் மீது வைத்திருந்த பிம்பம் சரிய அவமானத்தில் குறுகினான் தீரன். ஒழுக்கம், நீதி, நேர்மை என போதித்து தன்னை நேர்வழியில் நடக்க செய்தவரா இப்படி என நம்ப முடியாமல் தத்தளிக்க தன் கணவனின் இன்னொரு முகத்தை கண்டு அதிர்ச்சியில் பேச்சின்றி நின்றார் கமலா. ஷிவநந்தன் மரகதத்தை பார்த்து..

“சுமார் மூணு வருஷங்களுக்கு முன்ன இதே மாதிரி ஒரு மலைக்குகை ல உன் பொண்ணு கடத்தபட்டு அவ காதலனோட…ம்ப்ச்.. ஊரே கைக்கொட்டி சிரிச்சுதே..ஆனா அங்க உண்மையா நடந்தது என்ன தெரியுமா..?” என சிறு இடைவெளி விட்ட ஷிவாவை பதட்டத்துடன் காதை தீட்டிக்கொண்டு அவனையே கூர்ந்து பார்த்திருந்தான் வினு. ஷிவா ப்ரணவிடம்..

“பேபி மா உன் வாட்சப்பை ஓபன் பண்ணு..” எனக்கூற சட்டென தன்
அலைபேசியை எடுத்து வந்திருந்த வீடியோ பதிவை கவனிக்கலானான். பக்கத்திலிருந்த தீரனும் அதை பார்க்க பார்க்க அவன் தலை முதல் கால் வரை வேர்த்தது. மேலும் ஷிவ்..

“அப்படியே அந்த மெயின் கேரக்டர்க்கிட்ட காட்டு பேபி..” எனக்கூற உடனே வினு மற்றும் மாணிக்கத்திற்கு அனுப்பி விட்டு மரகதத்திடம் அலைபேசியை கொடுத்தான். தன் மகன் சம்பந்தபட்டது என தெரிந்ததும் உள்ளம் படபடக்க அந்த வீடியோ பதிவை பார்த்தனர் இருவரும். இங்கு பார்த்து முடித்திருந்த வினுவிற்கு தன்னை திடப்படுத்திக்கொள்ளவே சில நொடிகள் தேவைபட்டது. நன்றாக உள்ளிழுத்து நீண்ட பெருமூச்செறிந்தவனுக்கு அன்றிலிருந்து இக்கணம் வரை தன் மனதை அழுத்தியிருந்த பெருஞ்சுமை விலகியதை உணர்ந்து உரக்க கத்த வேண்டும் போலிருந்தது. சூழ்நிலை கருதி தன்னை அடக்கியவனுக்கு இரண்டாம் முறையாக மீண்டும் கண்ணீர். அன்று அவன் நிலவை களங்கபடுத்திவிட்டானென பழி சுமந்து பின் மாற்றான் மனைவியாய் சில நொடிகளில் மாறிய போது கலங்கி நின்றவன் இதோ இன்று காதலை வென்ற இளவரசனாய் கண்ணீர் வழிகிறது..ஆனந்தமாய், நிலாவின் கறைபடாத நாயகனாய்.

ஓர் மூர்க்கத்தனமான சிரிப்புடன் ஷிவ்..

“இந்த ஒரு நாளுக்காக தான் பல வருஷமா கூடவே இருந்து பழகி, உங்க எல்லாருடைய நம்பிக்கையை சம்பாதிச்சு அழகா ஸ்கெட்ச் போட்டு முள்ளை முள்ளால எடுக்கனும் னு இவனோட பரம எதிரிக்கு போதை மருந்தை கலந்து கொடுத்து அவனை தூக்கி, உன் பொண்ணை கடத்தி அம்சமா தன்னந்தனி குகைக்குள்ள ரெண்டு பேரையும் படுக்க வச்சி காமரா ஆன் பண்ணி வச்சா நார்மலா என்ன நடக்கும்..? ஆனா நம்ம தலைவன் அந்த போதையிலும் எங்கேயும் நிதானம் தவறல..அவன் காதலி அரைகுறை ஆடை ல பக்கத்துல இருந்தும் அவக்கிட்ட தப்பா நடக்கல..அங்க தான் எனக்கே காதல் மேல குறிப்பா வினுயுகன் மேல அபிமானம் வந்தது..அடடடா சமயம் கிடைச்சும் தப்பா நடக்காம மனசை நேசிக்கிற நல்லவங்களும் இருக்காங்ளே னு..ஆனா உங்க பொண்ணு தப்பா நினைச்சு அது எங்கெங்கேயோ போய் இளைய ஜமீன் உள்ளே வந்து யோசிக்காம அதிரடியா அவள அவன் நண்பனுக்கே கல்யாணம் பண்ணி வைப்பாரு னு எதிர்ப்பார்க்கல..இதுல அவரும் சேர்ந்து குடும்பஸ்தன் ஆனதுல தான் இன்னுமா டா அடுத்தவனுக்கும் சேர்த்து நீங்களே முடிவெடுப்பீங்க னு வெறி தலைக்கேறுச்சு எனக்கு..இவுங்க குடும்பம் பண்ண தப்புக்கு என் பொண்ணு ஏன் னு நீ கேட்டா பதில் உனக்கே தெரியும் மா..எனக்கு வேற வழியில்ல..”என கயிறை நோக்கி நகர்ந்த ஷிவா மெல்ல மெல்ல அதை அறுக்க ஆரம்பிக்க, அது வரை மறைந்திருந்து ஷிவா எதிர்பாரா நொடியில் அவனை பின்னால் மடக்கி பிடித்து கத்தியை தட்டிவிட்டு கிடுக்குபிடியாய் அவனை அசைய விடாமல் அவன் கழுத்தருகே கத்தியை வைத்தது ஓர் உருவம்.

கீழேயிருந்தவர்கள் இது யார் புதிதாய் என திகிலுடன் பார்வையிட வினு அவ்வுருவத்தை வைத்தே கண்டுக்கொண்டவன் பட்டென தலையில் அடித்துக்கொண்டான்.

தன்னை இறுக்கி பிடித்திருந்தது யாரென கண்டு ஷிவாவின் இதழ்கள் சிறு புன்னகை கீற்றாய் மலர்ந்தது..சில நொடிகள் மௌனமாய் நின்றவன் அசையாது தன் நிலையில் நின்றபடி அவ்வுருவத்திடம்..

“எண்டே பார்யாக்கு எல்லாம் அறியுமோ..?

அசையாதீங்க..உங்க லாப்டாப் ல எல்லாம் பாத்துட்டேன். நீங்க கொஞ்சம் திமிறானாலும்..

நீயே என்னை கொன்னுடுவியா..நிலன்யா?

ம்ஹ்ம்..நான் குதிச்சிடுவேன்..” என சொல்லவும் ஓர் நொடி ஷிவ்வின் உடல் இறுகியது. அதை உணர்ந்த நிலா தன் முகத்திரையை விலக்கியபடி அவனின் முகமூடியையும் விலக்கி கத்தியை கீழிறக்கியவள் அவன் கண்களை தீர்க்கமாய் பார்த்து நின்றாள். மனைவியின் விழி வழி கடத்திய கேள்விக்கணையில் தலை குனிந்து நின்றான் ராஜீவன் எனும் ஷிவநந்தன்.

மறுநொடி தன் கணவனின் கைகளோடு கைகோர்த்து நின்றபடி சற்று வெளிச்சம் உள்ள பகுதிக்கு வந்து நின்றாள் நிலா. நிலன்யா மற்றும் ராஜீவனை கண்டு அனைவருமே அதிர்ச்சியில் உறைந்து நிற்க தீரன் தன் கண்களை நம்ப மறுத்து மீண்டும் பார்த்தான். ருஷியை கடத்தி வைத்திருப்பவன் தன் ஆருயிர் தோழனா..?கண்கள் ஆமென சொல்ல உள்ளம் நம்ப மறுக்கிறதே..தன் ராஜீவனா..?அறியா சிறுவனாய் அடைக்கலம் வேண்டி நண்பனாய் நுழைந்து தன் உயிரில் கலந்து அனைத்துமாய் நின்றவன் என் எதிரியா..? என் நிலாவின் வாழ்க்கையை சிதைத்தவனா..? என தீரன் மூளைக்குள் மின்னல் வெட்டாய் பல கேள்விகள் எழ பிறந்ததிலிருந்து அச்சமென்பதே அறியாத விழிமகனின் விழிகள் பயத்தில் மின்ன சுயநினைவில் இருக்கும் பொழுது உயிரை உடலிலிருந்து உருவி எடுத்தது போல உச்சி முதல் பாதம் வரை அவன் உடல் தள்ளாட அப்படியே தரையில் மடங்கி அமர்ந்தான்.

மகனிடம் விரைந்த கமலா அவனை தோளோடு அணைத்துக்கொள்ள தீரன்..

“ம்மா..” என மேலே கை காட்டவும் நிலா..

“மாமா..” என உரக்க அழைத்தாள். தன் நிலாவின் குரலில் அவளை நிமிர்ந்து பார்க்க..

“ஒரு அஞ்சு நிமிஷம் நான் சொல்ல போறத நிதானமா கேப்பியா..? கிருஷிகாவை உன்க்கிட்ட பத்திரமா சேர்க்கிறது என் பொறுப்பு..இதுவரைக்கும் ஆத்திரம், ஈகோ, கோபத்துல நீ முடிவெடுத்து நம்மை நாமளே நாசமாக்கிக்கிட்டது போதும்.. அமைதியா நான் சொல்றதை மனசுல நல்லா ஏத்திக்க..” என தன் தாயை அற்ப புழுவை போல் பார்த்த நிலா தொடர்ந்து ஷிவ்வின் கரங்களை பிடித்தபடி..

“நண்பனா உன்னை ஏமாத்தி அவர் அக்காக்கு நியாயம் கிடைக்க இவர் செஞ்ச துரோகத்தை விட இதோ இந்தம்மா, அவுக அண்ணன் ஒரு அப்பாவி பொண்ணோட வாழ்க்கையில விளையாடினது கொடூரம்..மூணு வருஷம் இவரை பக்கத்திலிருந்து பாத்திருக்கேன்..லட்டு மாதிரி சான்ஸ் கிடைச்சும் அவர் நினைச்சதை செய்ய முடியல ஏன் தெரியுமா..? வினுயுகன் என் மேல வச்சிருந்த ஆழமான காதல்..பலவீனமான நேரத்திலும் தன்னிலை இழக்காம என்னை அரவணைச்ச..” என சிறு இடைவெளி விட்டு மீண்டும்..

“ என் யுகன்..அந்த காதலை ஆராதிக்க எனக்கு தான் தகுதியில்ல..அடுத்து பழி வாங்க நம்ம வட்டத்துக்குள்ள வந்திருந்தாலும் உனக்கு மனசார கெடுதல் பண்ண இவரால முடியாது..ஏன்னா இவர் சபாபதி இரத்தம்..பல்லுக்கு பல் மாதிரி என்னை அசிங்க..ப.டு..” என நிலா குரல் மீண்டும் கரகரக்க சலனமற்ற பார்வையுடன் தன் மனைவியை பார்த்தான் ஷிவ். நொடிகளில் சுதாரித்த நிலா..

“அன்னைக்கு அவரும் அவர் மாமாவும் பட்ட வலியை என்னை வச்சு திருப்பி கொடுத்துட்டாரு..இப்பவும் நீ கைப்பிடிச்சு இவர்க்கிட்ட கொடுத்த அதே பழைய நிலாவா தான் இருக்கேன் மாமா..அவர் நிழல் கூட என் மேல பட்டதில்ல..இந்த கண்ணியம், பாதுகாப்பு தான் மாமா ஒரு பெண் ஆண்க்கிட்ட அது அவ புருஷனேயிருந்தாலும் எதிர்ப்பார்க்கிறது..நான் நேசிச்ச என் யுகனை எனக்குள்ள புதைச்சிட்டு புது நிலாவா நான் தயாராயிட்டேன் னு தெரிஞ்சும் செத்து போன காதலுக்கு தள்ளி நின்னு மரியாதை கொடுத்தவர்க்கிட்ட என் வாழ்க்கையை ஏன் கெடுத்த னு கேட்க கூட நமக்கு தகுதியில்ல..கிருவை தண்ணில தள்ளிவிடறது கூட உன்னை பயமுறுத்த இவர் போட்ட ட்ராமா தான்..வருஷ கணக்கா உள்ளுக்குள்ள நெருப்பா தகிச்சிட்டுருக்க அவர் காயத்துக்கு ஒரு சின்ன வடிகால் தான் இது..இங்கிருக்கிற எல்லாரையும் விட பரிசுத்தமான எண்ணங்களும் அழகான இதயமும் படைச்ச என் கணவருக்கு அன்பு பரிசா என் உயிரை கொடுக்கிறது தவிர வேறொன்னும் இல்லை என்க்கிட்ட..” என திரும்பி ஷிவ்வை பார்த்தாள் நிலா. நெற்றி சுருங்க அவளை பார்த்தவனிடம்..

“சின்ன பொண்ணு கிருஷிகா..போதும் அவளை விட்ருங்க..சீக்கிரமா இதெல்லாம் கடந்து உங்களுக்கு னு ஒரு வாழ்க்கை அமைச்சுக்குங்க நந்தன்..என் யுகனை நான் தப்பா நினைச்சதும் அன்ட் சான்ஸ் கிடைச்சும் என்னை சிதைக்காம என் கனவை நனவாக்குன உங்க பெருந்தன்மையும் இனி என்னை நிம்மதியா வாழ்விடாது..மனசார என் வாழ்க்கையை முடிச்சுக்க விரும்பறேன்..” என அவனை விட்டு விலகி பாறை விளிம்பில் நின்றவளை ஷிவநந்தன் தடுக்கும் முன் அருவியில் குதித்திருந்தாள் நிலன்யா. அவளை உயிருடன் மீட்கும் பொருட்டு வினு மற்றும் ஷிவநந்தன் சடுதியில் நீர்வீழ்ச்சியில் பாய்ந்தனர். சில நொடிகளில் நடந்து முடிந்த விபரீதத்தை கிரகித்து கொள்ள கூட சொரணையற்று ஸ்தம்பித்து அமர்ந்திருந்தான் தீரன். அதற்க்குள் ப்ரணவ் மற்றும் செந்தாழினி மேலேறி கூண்டை இழுத்து கிருஷிகாவை மீட்டிருந்தனர். ப்ரணவ் தடதடவென கீழிறங்கி தன் நண்பனை நோக்கி ஓட..இங்கு மரகதம் அன்று தான் விதைத்த வினை தன் மகளின் வாழ்க்கையில் நின்று சதிராட்டம் ஆடியதுமின்றி பெற்ற மகளே தன்னை முற்றிலும் வெறுத்து ஒதுக்கி உயிரை விட துணிந்ததை ஏற்க முடியாமல் அருவிக்கரை நோக்கி ஓடினார். இத்தனை நடந்தும் தன் மகன் அசைவற்று அமர்ந்திருப்பது கண்டு பீதியுடன் கமலா..

“தீரா..நிலா அருவிக்குள்ள குதிச்சுட்டாடா..” எனக்கூற சிலையென சமைந்திருந்தான்..அவன் தோளை உலுக்கி..

“நம்ம ராஜீவனும் நிலாவை காப்பாத்த தண்ணிக்குள்ள குதிச்சுட்டான் டா..” என்றதும் ‘ராஜீவன்..தண்ணி’.என்பது மட்டும் தீரன் ஆழ்மனதை உலுக்க ‘ஐயோ அவனுக்கு நீச்சல் தெரியாதே.. என ’பதறி எழுந்தவன் சரேலென அருவியினுள் பாய்ந்திருந்தான்.

அரைமயக்கதிலிருந்த மகளை நெஞ்சோடு அணைத்தபடி கீழிறங்கி வந்த செந்தாவை வேதா கவனித்துக்கொள்ள, அருவியில் குதித்த இளையோர் அனைவரும் நலமாக திரும்ப வேண்டுமே என அவர்களை பெற்றவர்கள் உயிரை கையில் பிடித்தபடி காத்திருந்தனர்.

தொடரும்.
 
Last edited:
Top Bottom