தேடல் 2
தன் உயிரை விட உயர்வாய் நேசிக்கும் புது அடர் சாம்பல் நிற Honda Hness CB 350 ல் தன் அன்னையை உட்காரவைத்து காற்றை கிழிக்கும் வேகத்துடன் மருத்துவமனை வாயிலை கடந்தவளை பார்த்து சற்று கலக்கமுற்றாலும் பின்னால் தன் அத்தையின்..
“யேலே தீரா இனி உன்னை பாப்பேனா னு தெரியல டா…பெத்த பிள்ளய என்னை முடிச்சி விட்ருமாட்டு…ரு…க்…கு..” என தேய்ந்த குரலில் இளநகை புரிந்தான் விழியாளன். தன் குடும்பத்தின் ஆணிவேராய் பொறுமை காக்கும் பேதையவள் என தெரிந்தே வைத்திருந்ததால் பயமின்றி நண்பனிடம் விரைந்தான்.
தோவாளை மையப்பகுதியில் உள்ள ‘நிலா விருந்தகம்’ முன் தேர்ந்த ஓட்டுனராய் வண்டியை நிறுத்தியதும் தான் மூச்சே வந்தது மரகதத்திற்கு. அவள் தோளை தட்டியவாறே..
“நீ தலைகீழா நின்னாலும் உன்னைய பந்தயத்துக்கு விட மாட்டேன்..ஒழுங்கா படிச்சு நம்ம ஹோட்டல கவனிக்க பாரு..” என கூறி செல்லும் தாயை அசட்டை செய்தவாறே பின் தொடர்ந்தாள் நிலா..தன் மாமனிருக்க பயமேன்..?
விருந்தகத்தில் மாலை வேளையில் மக்கள் கூட்டம் கூட நிற்க நேரமின்றி அனைவரும் பம்பரமாக சுழன்றனர். கூட்டம் மெல்ல குறையவும் தன் அன்னையிடம் சொல்லிக்கொண்டு வீட்டிற்க்குள் நுழைந்தாள் நிலா.
நிலா விருந்தகத்தின் தனி சிறப்பே வழக்கமான இட்லி, தோசை என இல்லாமல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் தோதான எளிதில் செரிமானமாகும் படி தரமான உணவுகளை வழங்குவதே..மரகதம் கை பக்குவத்தில் காய்ச்சிய கருப்பு கவுனி கஞ்சி பெரியவர்களுக்கு என்றால் நிலன்யாவின் பரிந்துரைப்படி வித விமான நாட்டு காய்கறிகளுடன் பசலை, முளைக்கீரை சேர்த்து பரிமாறப்படும் கட்லெட் வகைகளுக்கு சிறுவர்களின் ரசிக பட்டாளம் மாலையில் குவிந்திருக்கும்..எண்ணெயில் மிதக்கும் பலகாரங்களை விட காய்கறி கட்லட்டுடன் சொந்தமாக தயாரித்து விற்கும் தக்காளி சாறுக்காக உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பயணிகளும் உணவருந்தி செல்வர்..விருந்தகம் முழுக்க தன் அத்தை மற்றும் நிலாவின் பொறுப்பில் இருந்தாலும் தரமான மளிகை பொருட்களை வாங்குவது முதல் விருந்தகத்தில் வேலை பார்ப்பவர்களின் தேவைகளை உடனுக்குடன் நிவர்த்தி செய்து விருந்தகத்தை மென்மேலும் முன்னேற வைப்பதில் தீரனின் பங்கு இன்றியமையாதது.
முகம் கழுவி வந்த நிலாவிடம் கமலா..
“இந்தா டா சுக்கு மல்லி காபி..நாயர் எப்படி இருக்கான்..?..மரகதம் வந்ததால என்னால கடையை விட்டு வரமுடியல..
இப்ப ஓகே தான் அத்தை, மாமா அவரை நம்ம தோப்பு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க..
என்னமோ போ..அந்த பயலுக்கு தீரன் மேல அப்படி என்ன தான் பகையோ..கட்டைய தூக்கி அடிக்க வந்தானாமே..?..”என கமலா கேட்கவும் சற்று அதிர்ந்து தான் போனாள் நிலா.
பதின்ம வயதில் சைக்கிளில் தொடங்கி இன்று புது வித ஸ்போர்ட்ஸ் பைக் வரை நேர்த்தியாய் லாவகமாய் தான் ஈன்றெடுத்த பிள்ளை போல தன் வாகனத்தை கையாளும் வினுயுகனின் கை தேர்ந்த திறமையில் அவ்வப்போது நேரில் கண்டதில் விழுந்த விதை தான் இன்று நிலாவை பந்தயத்தில் கலந்து கொள்ளுமளவு உத்வேகத்தை கொடுத்திருந்தது.
படிப்பில் தான் நாட்டமில்லையே தவிர மோட்டார் வாகனம் தொடர்பான அனைத்து கருத்தரங்குகளில் தவறாமல் கலந்து கொண்டு மக்களின் சந்தேகங்களை தீர்த்து வைப்பதில் வல்லுனனாய் கண்ணை உறுத்தாத இனநகையுடன் அனைவரையும் எதிர்கொள்வதில் பேரழகனாய் திகழும் வினுவிற்கு இளம்பெண்களின் ரசிகை பட்டாளம் அதிகமே..அவனின் ஏனைய குணங்களை கண்டும் கேட்டும் மனம் சுணங்கிய போதும் அதில் ஒருவளாய் வேறு பெயரில் அவனை இன்ஸ்ட்டா யூட்டீயூபில் பின்பற்றுபவளில் நிலாவும் ஒருத்தி. தன் மனதை மறைத்து கமலாவிடம்..
“எல்லாத்தையும் மாமா பாத்துக்கும்..விடுங்க அத்தை..” என தன் பாடங்களில் கவனம் செலுத்தினாள்.
இரு தினங்கள் கடந்து ராஜீவனை அவன் வீட்டில் விட்டு தன் இல்லம் திரும்பினான் விழிதீரன். வயல்களுக்கு செல்ல தயாராகி வந்த மகனை அமரவைத்து அவனுக்கு பிடித்த சாதம் மொச்சை கத்தரிக்காய் புளி குழம்பு பரிமாறினார் கமலா.
மேலும் ஒரு அப்பளம் வைத்த அன்னையை ஏறிட்டவன்..
“நான் இல்லாத டைம் ல டோரா வண்டியை எடுத்துச்சா ம்மா..?
இல்ல பா..பஸ் ல தான் போய் வருது..
சரி மா..மதிய சாப்பாட்டுக்கு வர முடியுமா தெரியல..வாழை தார் லோடு ஏத்தனும்..அப்படியே நம்ம கேசவன் பொண்ணு ஸ்கூல் ல சேர்க்கிற விஷயமா என்ன னு பார்க்கனும்..நைட் சீக்கீரமா வந்துடுவேன்..
பார்த்து போயிட்டு வா தம்பி..” என்ற தாயின் கையை சற்று அழுந்த பற்றியபடி கை கழுவ எழுந்தான் தீரன்.
வழக்கம் போல தன் வண்டியை எடுத்தவனின் விழிகள் அருகில் உள்ள நிலா விருந்தகத்தில் படிய, கால காலமாய் தன் ஆச்சி முதல் இன்று அத்தை வரை காலத்துக்கேற்ப தன்னை மாற்றிக்கொண்டு அவன் வீட்டு பெண்களின் முதுகெலும்பாய் விளங்கும் கட்டிடம் சற்றே கர்வத்தை கொடுக்க, கல்லாவில் இருந்த அத்தையை பார்த்து தலையசைத்தபடி தன் தோட்டத்திற்கு சென்றான் தீரன்.
வாழை தார் லோடு ஏற்றி முடித்து வயல்காட்டில் மற்ற வேலைகளை பார்த்து முடித்து மதியம் போல தன் தூரத்து உறவினனான கேசவனுடன் அவ்வூரில் புகழ் மிக்க பள்ளிகளுள் ஒன்றான சிஷ்யா மெட்ரிக்குலேசன் உயர் நிலை பள்ளிக்கு சென்றான்.
முதல்வரை சந்தித்து கேசவன் மகளை ஒன்றாம் வருட பாட பிரிவில் சேர்த்து இதர வேலைகளையும் முடித்து கொண்டு வெளியே வந்தனர்.
மாலை மூன்று மணியளவில் பள்ளி மணியடிக்கவும் பார்க்கிங்கை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவனை இடித்து கொண்டு ஓடிய சிறுவனை பிடித்து நிறுத்துவதற்க்குள் கீழே விழுந்திருந்தான். மண் தரையில் விழுந்ததில் கை முட்டி மற்றும் காலில் சிறு சிராய்ப்பு ஏற்பட்டிருக்க வலியில் முகம் கசங்கி அழும் சிறுவனை தூக்கி நிறுத்தும் முன் தீரனை தாண்டி பிஞ்சு தளிர்க்கரம் ஒன்று அச்சிறுவனை எழுப்பி அமர வைத்தது.
இது யாரடா என திரும்பி பார்க்கும் முன்..கீழிருந்த நைஸ் மண்ணை அவன் காயங்களில் வைத்தாள் அச்சிறுமி. இதை பார்த்த கேசவன்..
“அச்சோ பாப்பா..மண் வைச்சா இன்னும் செப்டிக் ஆயிடும்..இங்க பர்ஸ்ட் எய்ட் இல்லியா..?..” என சுற்றும் முற்றும் பார்த்தவனை..
“அங்கிள்..இந்த மண்ணோட வேல்யூ தெரியாம பேசிட்டிருக்கீங்க..இது மஞ்சள் க்கு ஈக்வல்..ஒரு ஆன்டிபயாடிக் மாதிரி..” என பெரிய மனுஷி போல பாடமெடுத்த நவீன நம்மாழ்வரை சுவாரசியமாக பார்த்து நின்றான் தீரன்.
தீரனை பார்த்து கேசவன்..
“என்ன தீரா..உன் மினியேச்சரை பாத்த மாறி இருக்கு..உண்மைய சொல்லு…உன் மகளா..?ஜாடை கூட லைட்டா மேட்ச் ஆகுதே..” என கலாய்த்த நண்பனை முறைத்த தீரன் அச்சிறுமியை பார்த்து..
“உன் பேர் என்ன..?” என கேட்கவும் சிறுவனின் காயங்களில் ஊதிக்கொண்டிருந்தவள் தலை நிமிர்த்தி..
“கிருஷிகா..எழு வைபவ்..பெரிசா காயமில்ல..வா..இனி பெல்லடிச்சதும் இப்படி அவசரமா ஓடி வரக்கூடாது என்ன..?” என தன் குட்டி நண்பனை கை தூக்கி அவன் தோளணைத்து வாயிலை நோக்கி நடந்து செல்லும் குட்டி தேவதையை கண்டு மனதில் இனம் புரியா பரவசம் உண்டாவதை திகைப்புடன் உணர்ந்து நின்றான் தீரன்.
சொந்த வேலை விஷயமாக தோவாளை பஸ்நிலையம் அருகில் உள்ள கடைக்கு வெளியே காத்திருந்த வினுயுகன் தூரத்தில் தோழிகளுடன் வந்துக்கொண்டிருந்த நிலன்யா கண்ணில் பட அவன் விழிகள் லேசர் வீச்சாய் தலை முதல் கால் வரை அவளை மையலுடன் அளவிட்டன. அவள் நெருங்கி வரவும் கண்ணாடி அணிந்த படி திரும்பி நின்று கொண்டான்.
கள்ளனை போலவே அக்கள்ளியும் அவனை கண்டுக்கொண்டவள் அவன் செய்கைகளை கண்டும் காணாதது போல அவனை பார்த்தவாறே கடந்து சென்ற நிலவிற்கு தன் மாமனின் ஆஸ்தான எதிரியாக இருப்பவனின் மேல் ஏன் தன் விழிகள் ஆவலாக படர்கின்றன..?அவன் திருந்தி நல்லதொரு பாதையை தேர்ந்தெடுக்க மாட்டானா என ஏன் மனம் அல்லாடுகின்றது..? என மீண்டும் மீண்டும் தன் மனதிடமே சண்டையிட்டு கொண்டிருந்தது.
இரு பழச்சாறு குவளைகளுடன் வந்த பிரணவ் ஒன்றை வினுவிடம் கொடுத்து..
“என்ன மச்சி…ஆடுக்கிட்ட வான்டடா சண்டைக்கு நிக்கிற..ஆனா குட்டிக்கிட்ட மட்டும் நல்லவனாட்டம் பம்முறியே..என்ன மேட்டர்..?
என்னமோ தெரியல..அவ பேருக்கேத்த மாதிரி தூரத்தில பார்க்கும் போது வேற பீஃல். அவ கிட்ட வரும்போது என்னால தாங்க முடியல..எப்படி சொல்ல தெரியல..இது வரைக்கும் அவளை கிட்ட பாத்ததேயில்ல..பாக்க முடியுமா னும் தெரியல டா..
உன் சீரியஸ்னஸ் எனக்கு புரியுது..இது பர்ஸ்ட் ஒர்க்அவுட் ஆகுமா னு தெரியாது..பெருசா நம்பிக்கை வைக்காதடா..கிடைக்காம போனா வாழ்க்கை நரகமாயிடும்..என் அனுபவத்தில் கிடைச்ச படிப்பினை..” என குரல் கமற கூறிய பிரணவை தோளோடு சேர்த்து இறுக்கி அணைத்துக்கொண்டான் வினு.
தீரனை பார்த்ததும் இயல்பாகவே தன்னுள் புடைத்தெழும் நாடி நரம்புகள் அவன் நிலவினை கண்டதும் இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கி கொள்வது மட்டுமின்றி இது வரை அனுபவித்திராத புது உணர்வு உடல் முழுதும் ஆர்ப்பரித்து தளும்புவதை இனிய அவஸ்த்தையுடன் நித்தமும் கடந்து செல்லுவது வினுவின் வாடிக்கையாகிற்று.
தோவாளை அதன் சுற்றுப்புற நகரங்களில் விழிதீரன் மற்றும் வினுயுகன் தீராப்பகை அனைவரும் அறிந்ததே..ஆயினும் காட்டில் பூத்த கற்றாழை கொடிக்கு பகைவனின் வீட்டு அல்லியின் மீது காதல் சொல்லி வைத்து வருவதா அல்லது நல்லவன், கொடியவள் என குணம் பார்த்து வருவதா..? இயற்கையாக இரு உள்ளங்களிலும் வேரூன்றிய வலுவான நேசம் மனை சேருமோ இல்லை மண் சேருமோ..விதி விட்ட வழி.
எட்டா உயரத்தில் இருப்பவளை தன் காதல் உண்மையானதாக இருப்பின் எப்படியும் அவளை தன் கைக்குள் சேர்த்துவிடும் எனும் நம்பிக்கையில் பிரணவுடன் அங்கிருந்து கிளம்பினான் நம் நிலா நாயகன்.
நிலா விருந்தகத்தை கடக்கையில் பாதையில் மட்டுமே கவனம் செலுத்தி ஓட்டி செல்பவனின் ப்ரத்யேக ஒலியில் ஜன்னலருகே வந்து எட்டி பார்த்த நிலாவின் செயலில் வினுவின் முகமே ஜொலிக்க, சொல்லா காதலை போல அவன் உணர்வுகளையும் அவன் கருநீல நிற முகக்கவசம் மறைத்திருந்தது.
இருவரின் கண்ணாமூச்சி ஆட்டத்தை கண்டுக்கொண்ட பிரணவ் மனதினுள் ‘இதுங்களை எப்படியாவது சேர்த்து வச்சுடு முருகா…அந்த தீரனை எப்படியாவது பாதயாத்திரையா திருச்செந்தூர் கூட்டி வந்து அவனுக்கு கண்டிப்பா மொட்டை போடுறேன்’ என மனதார வேண்டிக்கொண்டான்.
அதே சமயம் மொட்டை மாடியில் தன் மொபைலில் விவசாயம் தொடர்பான முக்கியமான காணொளியை பார்த்து கொண்டிருந்த தீரனுக்கு சட்டென விக்கல் ஏற்பட்டது.
நீர் அருந்தியவன் சற்று காலாற நடந்தும் விடாமல் விக்கல் தொடரவே..
‘நம்மள யாரு டா நினைக்கிறது..? ‘ என கீழே வீதியை எட்டி பார்க்க, வளைவில் திரும்பும் ஆஸ்தான எதிரியை கண்டதும் உள்ளம் கொதித்தது..அதுவும் லைட்டாய் சரக்கடித்து பின்னால் உட்கார்ந்திருந்த பிரணவ் தலையை திருப்பி இவனை நோக்கி தம்ப்ஸ் டவுன் என காட்டி சென்றது அடக்க முடியாத ஆத்திரத்தை கிளப்பியது தீரனுக்கு.
ஆயினும் நிற்காமல் தொடர்ந்த விக்கலை அடக்க வழியின்றி தவித்தவனின் மனமோ மாலை பள்ளியில் சந்தித்த குட்டி தேவதையை நினைத்ததும் சட்டென விக்கலும் மாயமானது.
தனக்கும் அந்த தேவதைக்கும் ஏதேனும் விட்ட குறை தொட்ட குறை இருக்குமோ என தீரனின் மனம் அலை பாய தொடங்கியது.
தொடரும்.

Last edited:
Author: STN - 90
Article Title: NTYU - 2
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.