தேடல் 20

நிலா விழுந்த பகுதியில் மின்னல் வேகத்தில் நீந்தி வந்த வினு சுற்று முற்றிலும் தேடி பார்க்க சற்று தூரத்தில் மூச்சு திணறி தத்தளித்து கொண்டிருக்கும் ஷிவநந்தனை கண்டதும் அவனிடம் விரைந்தான். பேரிரைச்சலுடன் வழிந்து ஓடும் நீர்வீழ்ச்சியில் தட்டு தடுமாறிபடி நிலாவின் கழுத்தை வளைத்து பிடித்தபடி போராடிக்கொண்டிருந்தான் ஷிவநந்தன். மயங்கிய நிலையில் நீருக்குள் மூழ்கியபடி ஷிவாவையும் இழுத்து செல்லும் நிலன்யாவை தன் தோளில் போட்டபடி விரைவாக நீந்தி தரையை அடைந்தான் வினு. ஓடி வந்த ப்ரணவிடம் அவளை ஒப்படைத்து கண்ணை காட்டிவிட்டு மீண்டும் நீரினுள் பாய்ந்தான் வினு.
கண்கள் எட்டும் தூரம் வரை நீர்பரப்பில் தேடி ஓய்ந்தவனுக்கு கரைக்கோடியில் இரு தலைகள் தெரிய இன்னும் சற்று தூரத்தில் சுழல் இருக்குமே என கலவரத்துடன் அடித்து பிடித்து அவர்களை நோக்கி வேகமாக நீந்தினான் வினு. தன் கையை உதறி தள்ளி நீரோடு அடித்து செல்லும் ஷிவாவின் தலைமுடியை கொத்தாக பிடித்து வெளியே எடுத்த தீரன் மூச்சு வாங்க..
“என்னை விட்டு போக முடியுமா டா உன்னால..?” என கேட்க கண்களில் வலியுடன் தன் தோழனை பார்த்த ஷிவ்..
“நான் உன்னை ஏமாத்தியிருக்கேன் தீரா..உன் குடும்பத்தை பழி வாங்க உன் நட்பை யூஸ் பண்ணிருக்கேன்..ஆனா உன் கூட பழக ஆரம்பிச்சதும் நீ கமலாம்மா வளர்த்த பையன் னு புரிஞ்சுது..இருந்தாலும் என் இழப்பை உங்களுக்கு புரிய வைக்க இப்படி ஒரு துரோகத்தை என் மனசு வலிக்க வலிக்க உனக்கு கொடுத்துருக்கேன்..இதோ இப்போ கூட உன் நிலாவை விட என்னை தேடி வந்து நிக்குற உன்னை விட்டு நான் எங்கயும் போகமாட்டேன்..செந்தாவை பத்திரமா பாத்துக்க..அவளும் நம்ம நிவிக்கா மாதிரி பாதிக்கபட்டவ..இதுக்கு மேல என்னால தம் பிடிக்க முடியல..போடா..என்னை விட்டு போ..” என நெருங்கி வந்த வினுயுகனிடம் தீரனை உதைத்து தள்ளிவிட்டான் ஷிவநந்தன்.
ஷிவ் அசந்த நேரத்தில் அவனையும் காப்பாற்றிவிட சற்று முன்னேறிய வினுயுகனை தடுத்து..
“வினு..இனி இவங்கல்லாம் உன் பொறுப்பு..தீரா..சாரி & தாங்க்ஸ் பார் எவ்ரிதிங்..“ என விரிந்த புன்னகையுடன் நீரினுள் மறைந்து அமிழ்ந்து போனான் ஷிவ்நந்தன்.
சற்று முன் கண்ணெதிரே ஜலசமாதியான தன் உயிர் நண்பனை கண்டு சப்த நாடியும் அடங்கியது போல அசைவின்றி இருந்த தீரனை இழுத்துக்கொண்டு நீந்தி தரைப்பரப்பை அடைந்தான் வினு.
தன் மகனின் படைத்தளபதியாய், ஆறாம் விரலாய் என்றும் உடனிருப்பவன் உயிரை விட்டுவிட்டான் என தெரிந்து நிலைகுலைந்து நின்றார் கமலா. மறுபுறம் கண்கள் மூடிய நிலையில் மயங்கி கிடக்கும் நிலன்யாவை ஆவேசத்துடன் தட்டியெழுப்பிக்கொண்டிருந்தான் வினு. தன்னை விட தன் மகளிடம் உரிமையுடன் ஆதிக்கம் செலுத்தும் வினுவின் பதட்டத்தை கண்டு குறுகி நின்றார் கமலா. தன்னவளின் நெஞ்சில் காதை வைத்து பார்க்க அவளின் இதய துடிப்பு லேசாய் கேட்கவும் வேக வேகமாய் அவள் கன்னத்தை தட்டி எழுப்பினான் வினு. ப்ரணவ் அதற்குள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தான். சிறிதளவும் ஸ்மரனையின்றி நீர்வீழ்ச்சியில் நிலைகுத்திய விழிகளுடன் அமர்ந்திருந்த தீரன், நீர் சொட்ட சொட்ட பரிதவிப்புடன் தன்னவளை மீட்க போராடும் வினு என அவ்விடமே நரகமென காட்சியளித்தது. நிலைமையை உணர்ந்த செந்தாழினி கிருஷிகாவை வேதாவிடம் ஒப்படைத்துவிட்டு நிலன்யாவிடம் ஓடி வந்தாள்.
அவள் வயிற்றை அமுக்கி தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்தான் வினு. 'எங்கே அந்த வேகாதவன்' என தன் விழியனை தேடின செந்தாவின் விழிகள்..நனைந்த உடலுடன் சிலை போல சமைந்திருந்தவனை பார்த்து பெருமூச்சுடன் நிலாவின் உள்ளங்கையை விரித்து அழுத்தி தேய்த்தாள்.
ஆம்புலன்ஸ் வந்துவிட நிலன்யாவை தூக்கிக்கொண்டு விழுந்தடித்து ஓடினான் வினு. மரகதம் பின் தொடர இங்கு தீரனை எழுப்புவதே பெரும் பாடாகி போனது அனைவருக்கும். கமலாவின் நிலைமை மிகவும் பரிதாபத்திற்குரியதாய் விழித்தபடி நின்றார்.
தவித்து நின்றிருக்கும் கமலாவை நெருங்கிய செந்தாழினி..
“உங்க பையனை கூட்டிட்டு வீட்டுக்கு போங்க மா..ப்ரணவ் நீங்க இவங்கள வீட்டுல விட்டுட்டு வரும்வரை நான் இங்க இருக்கேன்..வேதாம்மா நீங்களும் கிருவோட கிளம்புங்க ..” என்றாள். யாரை ஒதுக்கி அவளிடத்தில் வேறொரு பெண்ணை கொண்டு வர நினைத்தாரோ இதோ மகனுக்கு மகளாய் தோள் கொடுத்து நிற்பவளை கண்டு கமலாவுக்கு குற்றவுணர்வில் நெஞ்சடைத்தது.
மயக்கும் வசீகர புன்னகையுடன் ராஜீவன் எனும் ஷிவநந்தன் உயிரை விட்டிருந்த நொடி முதல் தீரனின் உலகமே இயங்க மறுத்தது போல பார்க்கும் இடமெல்லாம் நண்பனின் முகமே தெரிய ஆழ்ந்த மௌனத்தில் தன்னை மறந்து எடுப்பார் கைப்பிள்ளை போல அன்னையை பின்தொடர்ந்தான் தீரன்.
மருத்துவமனையில் சேர்த்து நிலன்யாவிற்கான சிகிச்சைகள் ஆரம்பித்து ஒரு மணி நேரமாகியும் கண் விழிக்காமலிருந்தவளை கண்டு வினுவின் உள்ளம் பக் பக்கென அடித்து கொண்டது. ஓர் இடத்தில் நிற்காமல் இங்கும் அங்கும் நடந்துக்கொண்டிருப்பவன் தவிப்பை கண்டு நிலா விஷயத்தில் தவறியதை தாமதமாக உணர்ந்தார் மரகதம்.
வெளியில் வந்த மருத்துவரிடம் ஓடிய வினு..
“டாக்டர்..லயா எப்படி இருக்கா..?
பேனிக் அட்டாக்..அதான் செடேஷன் ல வச்சிருக்கோம்..இன்னிக்கு நைட்க்குள்ள கண் முழிக்கனும்..லெட்ஸ் வெயிட்..” என்றபடி அவன் தோளை தட்டி சொல்லி சென்றார். மாலையில் மீண்டும் நிலாவை பரிசோதித்த மருத்துவர் வினுவிடம்..
“அவங்க ப்ரெயின் ஆக்டிவா இருக்கு..பேராமீட்டர்ஸ் ஸ்டேபிள், பல்ஸ் நார்மல்..ஸ்டில் இவங்க முழிக்க ட்ரை பண்ண மாட்டேங்கறாங்க னு தோணுது..பேஷன்ட் கோஆபரேட் பண்ணா அடுத்தடுத்து ரெக்கவரி ஈஸியா இருக்கும்..அவங்க மனசுக்கு நெருக்கமானவங்க பேசி பாருங்க..” என்றார். விழிக்கவே மாட்டேன் என அடம் பிடித்து படுத்திருப்பவளை கண்டு கண் மண் தெரியாத ஆத்திரம் வந்தது அவனுக்கு.. ‘நீ எழுந்து வாடி..உனக்கு இருக்கு..’ என முயன்று தன்னை கட்டுபடுத்திக்கொண்டான்.
சில நிமிடங்கள் கழித்து மாணிக்கமும் வேதாவும் நிலன்யாவை வந்து பார்த்தனர். மாணிக்கம் வினுவிடம்..
“நீ போய் கொஞ்ச நேரம் தூங்கிட்டு சாயங்காலம் வா..அதுவரை நாங்க இங்க இருக்கோம்..” என மகனை அனுப்பி வைத்தார். தீரனை தனியாக விட முடியாத நிலையில் கமலா மரகதத்திடம் போனில் கேட்டு தெரிந்து கொண்டார்.
மாலை நண்பனுடன் மருத்துவமனை வந்த வினு தன் பெற்றோர் முன்னிலையில் மரகதத்திடம்..
“எனக்கு உங்க பொண்ணு கூட ஒரு பத்து நிமிஷம் தனியா பேச அனுமதி கிடைக்குமா..?எனக்கு எப்படியாவது பழைய லயா திரும்பி வரணும்..இந்த நிலையில உங்க அண்ணன் பையனை கூப்பிட முடியாது..வேணும் னா மொபைல் ல வீடியோ ஆன் பண்ணிகங்க..ஆனா அவக்கிட்ட பர்சனலா நான் பேசனும்..அதுவும் அவளை காப்பாத்த மட்டுமே..” எனக்கேட்க அடிபட்ட பார்வையுடன் சரியென கண்ணீர் மல்க தலை குனிந்தார் மரகதம். வினுயுகன் ஒரு முடிவுடன் நிலன்யா அறையில் நுழைந்தான்.
சீரான இடைவெளியுடன் மூச்சுவிட்டபடி மெல்லிய வாட்டம் பரவிய முகமுமாய், இறுக்க மூடிய விழிகளுமாய் ஆழ்ந்த உறக்கத்திலிருந்த தன் நிலாப்பெண்ணின் அருகில் அமர்ந்து அவள் முகத்தை சில நொடிகள் பார்த்தான் வினு. பின் அவள் காதருகே தன் அலைபேசியை வைத்து ஓர் ஒலிப்பதிவை ஓடவிட்டான். இவ்விருவரும் காதலித்த சமயங்களில் வினு மோட்டார் பைக்கின் தனித்துவமான ஒலியில் துள்ளிக்கொண்டு ஓடி வருவாள் நிலா. மீண்டும் மீண்டும் அந்த ஒலிப்பதிவை ஓடவிட்டவன் அவள் கையை எடுத்து தன் நெஞ்சில் பதித்துக்கொண்டு..
“லயா..மத்தவங்கிட்ட நடிக்கிற மாதிரி என்க்கிட்ட நடிக்காத..உன்னை காதலிக்க ஆரம்பிச்சதுலிருந்து இப்ப வரைக்கும் எனக்குள்ள வினுவோட லயாவா தான் இருக்க..நம்ம வாழ்க்கையில நடந்து முடிஞ்ச எதுக்கும் நீயே நானோ பொறுப்பில்லடி..விதி னு சொல்லமுடியாது எல்லாம் உன் மாமன்காரன் பண்ண சதி..ஆனா எல்லாத்துக்கும் நீ தான் காரணம் னு நீயே ஏன் பொறுப்பேத்துக்குற..?..முட்டாள்..! நமக்குள்ள இருக்குற காதல் எத்தனை வலிமையானதாயிருந்தா ஒருத்தன் உயிரை கொடுத்து நிருபிச்சிருப்பான்..? உண்மை காதல் வாழனும் னு மனசார ஆசபட்டு உயிரை விட்ட ஷிவ்நந்தனை நீயே அவமானபடுத்தாத..இது வரைக்கும் உன்க்கிட்ட நான் முகம் பாத்து சரியா பேசினது கூட இல்ல..பர்ஸ்ட் டைம் உன்க்கிட்ட கெஞ்சி கேக்குறேன்..எனக்காக எழுந்து வா..நீ இல்ல னா நானில்ல..இத மட்டும் நல்லா மண்டையில ஏத்திக்கோ..இதுக்கு மேல நான் எதுவும் சொல்ல போறதில்ல..” என அவள் கைகளை இறுக்க பற்றி ஆழ்ந்து முத்தமிட்டவன் சரேலென வெளியேறினான்.
மருத்துவமனையின் நீண்ட காரிடாரை கடந்து அங்கிருந்த சிறு பிள்ளையார் மண்டபத்தின் முன் போடப்பட்டிருந்த கல்பெஞ்சில் அமர்ந்து தலை சாய்த்து கண்களை மூடிக்கொண்டான் வினுயுகன். ஆர்ப்பரிக்கும் உணர்வுகளை அடக்க வழி தெரியாமல் தளும்பியது அவனுள்ளம். வேறொருவன் மனைவியாய் காதலி கைமாறிய கணத்தில் நெருப்பில் குளித்தெழுந்தான் என்றால் இதோ இன்று அவள் உயிருடன் மீண்டால் போதும் என தன் முருகனிடம் மன்றாடுகிறது. வினுவின் மனம் என்ன பாடுபடும் என நன்கு அறிந்ததால் சற்று தள்ளி நின்று வேதாவிடம் தான் பார்த்துக்கொள்வதாய் கூறிவிட்டு இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான் ப்ரணவ்.
எமனை விரும்பி துரத்தி சென்ற சாவித்திரியை விடாது போராடி மீட்ட நவீன சத்தியவானின் உயிரோடு கலந்த காதலில் கண் விழித்திருந்தாள் நிலன்யா. வினுவிடம் ஓடி வந்த ப்ரணவ் அவன் தோளை தொட்டு.
“மாப்ள..நிலன்யா கண் முழிச்சிட்டா..” எனக்கூற..கண்கள் மூடியிருந்த நிலையில் கன்னத்தில் நீர் கோடாய் கண்ணீர் வழிய தன் முருகப்பெருமானிடம் மானசீகமாக நன்றி தெரிவித்தான் வினு. தன் மாமனென்ன ஷிவநந்தன் உயிருடன் மீண்டு வந்து நிலாவிடம் பேசியிருந்தால் கூட கன்னியவள் தன்னை முடித்து கொள்ள துணிந்து நிற்பாள்..ஆனால் அவளுக்குள் ஆழமாக புதைத்து வைத்து என்றுமே வெளிக்காட்ட விரும்பாத அவனுக்கே அவனுக்கான உயிர்நேசத்தை அவளிடமே சுட்டிக்காட்டி காதல் சரித்திரத்தில் இதோ மீண்டும் புதிதாய் இரு உதயம். இருவருக்குள் நிலவும் ஆன்மபிணைப்பை உணர மறுக்கும் மங்கையவளை மாயக்கண்ணன் தன் அளவிடமுடியாத பிரியத்தில் முழிக்க வைத்த நொடி..ஓவென கத்தி கூப்பாடு போடவேண்டும் போல தோன்றியது நிலாபிரியனுக்கு. சில நொடிகளில் தன்னை மீட்டெடுத்துக்கொண்டு கன்னத்தை துடைத்தபடி..
“இங்கிருந்து அவ வீட்டுக்கு போற வரைக்கும் கூடயிருந்து பாத்துக்கோ டா..நான் இப்பவே திருச்செந்தூர் கிளம்புறேன்..அம்மாக்கிட்ட சொல்லிடு..
ஹெவி வேண்டுதலா மாப்ள..?” என கேட்டவனின் தலைமுடியை கலைத்தவாறு புன்சிரிப்புடன் ஓட்டமும் துள்ளலுமாக நடந்து சென்றான் லயாவின் லியோ.
தொடரும்