தேடல் 5

வெடித்து சிதறும் நெருப்பு ஊற்றாய் கண்கள் சிவக்க செந்தாழினியின் தொண்டையை இறுக்கினான் தீரன். மூச்சு திணற அவள் இருமினாள்.
“கைய எடு தீரா. “ என கமலா கத்தவும் அவர் அதட்டலில் அவளை விடுவித்தான். விஷயத்தை கேள்விப்பட்டு கன்னியாகுமரியிலிருந்து விரைந்து வந்தனர் மாணிக்கமும் வேதாவும். பெற்ற மகனின் கோலத்தை பார்த்து ஓர் நொடி திகைத்து நின்றுவிட்டார் வேதா. அவனிடம் ஓடியவர் கண்கள் கலங்க அவன் காயங்களை தன் புடவையால் துடைத்தார். அன்னையின் அரவணைப்பில் அவரிடம் இன்னும் ஒட்டி அமர்ந்தான் வினுயுகன்.
பொறுமையை கடைபிடிக்கும் மாணிக்கத்திற்கே தலை கவிழ்ந்து உடல் முழுக்க காயங்களுமாய் அமர்ந்திருக்கும் மகனை கண்டு சினம் தலைக்கேறியது. ஆயினும் நிலன்யாவின் நிலையை கண்டு அமைதியாக ஊர் பெரியவர்களை பார்த்து..
“எங்க பையன் அடிதடி, பஞ்சாயத்து னு இருக்கிறவன் தான்..ஆனா ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடறளவு ஈன பிறவி இல்ல..இதுல ஏதோ தப்பிருக்கு..என்ன ஏது னு விசாரிக்காம இது என்னங்க கை நீட்டுற பழக்கம்..?” என்றார். அதற்கு ஊர் பெரியவர்..
“சரி தான் மாணிக்கம்..தப்போ, சரியோ..ஒரு வயசுப்பொண்ணு எதிர்காலமே நாசாமா போச்சுதுல்ல..” என்றவரை இடைமறித்த வேதா..
“எங்க வளர்ப்புல தப்பில்லங்க..எங்க பையன் தெரிஞ்சு தப்பு பண்ணிருக்கமாட்டான்..” என்ற வேதாவை இடைமறித்து தீரன்..
“அன்னிக்கு பந்தயத்துல உங்க பையன் என்ன சொன்னான் னு தெரியுமா உங்களுக்கு..? யார்க்கிட்ட அவனோட வேலையை காட்டுறான்..?” என மீண்டும் எகிறி கொண்டு வர, அவனை இழுத்து பிடித்து நிறுத்தினான் ராஜீவ். தீரனின் பங்காளி ஒருவர்..
“ஏம்மா இவன் பவுசு தா ஊருக்கே தெரியுமே..மைனர் கணக்கா சுத்திக்கிட்டிருந்தவன எந்த பொண்ணு ஆசைப்படும்..? “ என்று கூறியதும் சட்டென விழிகளை உயர்த்தி நிலாவை பார்த்தான் வினு. இன்னுமே தன் அன்னையின் மடியில் புதைந்து போனவளையே வெறித்திருந்தன அவன் விழிகள். ஊர் பெரியவர்கள்..
“மாணிக்கம்..தெரிஞ்சோ தெரியாமையோ தப்பு நடந்தது நடந்தது தான். அதுல பாதிக்கப்பட்டது வயசுப்பொண்ணு..இதுக்கு என்ன சொல்ற..?
பஞ்சாயத்து முடிவுக்கு நாங்க கட்டுப்படுறோம்..” என மாணிக்கம் கூறவும்..அவர்..
“வர்ற முகூர்த்த நாள் பார்த்து இவங்களுக்கு முறையா கல்யாணம் பண்ணி வச்சிருவோம்..தீரா..நீ என்ன பா சொல்ற..?” என கேட்க தீரன் சற்று குரல் உயர்த்தி..
“மன்னிக்கனும்..எங்க வீட்டு பொண்ணை இவனை மாறி தரங்கெட்டவனுக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியாது மாமா..” என்றான். அவரோ..
“ஏலே தீரா..உன் வீட்டுக்குள்ள இருக்கிறவரை உன் முடிவு…ஆனா விஷயம் பொதுவுல வந்ததுக்கப்புறம் நீ ஊருக்கு கட்டுப்பட்டாகனும் யா..
இல்ல மாமா..கெடுத்தவனுக்கே கல்யாணம் பண்ணி கொடுக்குற காலமெல்லாம் மலையேறி போச்சு. அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பார்த்து கட்டி வைக்க வேண்டியது என் பொறுப்பு..எந்த நிலைமையிலும் இவனை எங்க வீட்டு மருமகனா ஏத்துக்க முடியாது..இந்த ****** நம்பி எந்த பொண்ணு வரும்..? “ என்றான் தீரன். அவன் கூற்றில் பொங்கியெழுந்தார் வேதா..
“தம்பி..நீங்க வேணா பெரிய கட்டா இருக்கலாம், ஆனா நாங்க உங்க தகுதி, அந்தஸ்துக்கு குறைஞ்சவக இல்ல..இப்பவும் சொல்றேன் எங்க பையன் தெரிஞ்சு தப்பு பண்ணிருக்க மாட்டான்..பொண்ணு குடுக்குறது குடுக்காதது உங்க விருப்பம்..ஆனா என் பையனை மட்டும் அசிங்கமா பேச நான் அனுமதிக்க மாட்டேன். இந்த நிமிஷத்திலயும் அவனுக்கு ஒரு பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வைக்க முடியும்..ஆனா உங்க வீட்டு பொண்ணை நினைச்சு அமைதியா போறேன்..வார்த்தைங்கள விடறதுல கவனம் தம்பி..
என்ன மா..ஏதோ நல்லவன பெத்து வளர்த்தின மாதிரி பேசுறீங்க. ? ஊருக்கே தெரியும் உங்க பையனோட யோக்யதை என்ன னு..புத்தியுள்ள எந்த பொண்ணும் கிடைக்க மாட்டா னு தான் எங்க நிலாவை கலங்க படுத்தியிருக்கான்..நான் ஜெயிலுக்கு போனாலும் பரவால்ல இவனை கொல்லாம விட மாட்டேன்..” என தீரன் அருகிலிருந்த பெரிய கருங்கல்லை எடுத்து வினுவை நோக்கி ஓட, அவனை ஊரார் தடுப்பதற்குள் பெரும் பாடாகி போனது. அனைத்தும் காதில் விழுந்தும் ஒரு பெண்ணின் அதுவும் தான் காதலித்தவளின் மானத்தை வைத்து விளையாடுமளவிற்கு தங்களை பகடை காய்களாக பயன்படுத்திய கயவர்கள் மட்டும் கையில் சிக்கினால் என அவனுள்ளம் அனல் மழையாய் கொதித்தது. இருவருக்குள்ளும் முகிழ்ந்திருந்த தூய காதல் சின்னாபின்னமாய் அவள் மாமன் மகன் வாயில் அரைபடுவதை தடுக்காத தன் நிலவை நசுக்கினால் தான் என்ன என அவளையே அனல் தெறிக்கும் விழிகளால் பார்த்திருந்தான் வினு.
தீரனை அமைதிப்படுத்தி அமரவைத்த பெரியவர்கள்..
“தீரா..நீ பொறுப்பான பையன் னு நினைச்சா இவங்க விஷயத்துல நிதானமில்லாம இருக்க..ஏன் நீயே முறை தானே..? உன் அத்தை மவளை நீயே கட்டிப்போடு..” என்றதும் திகைத்து நின்றான் தீரன். இதனை கேட்ட வினுயுகனின் மனமோ வெடி வைத்த பாறாங்கல் போல சுக்கு சுக்காக நொறுங்கியது. மரகதம் தன் மருமகனை பார்த்ததில் அவர் எண்ணம் புலப்பட தலை குனிந்தான். சில நொடிகளில் தன்னை மீட்டுக்கொண்டு..
“ஐயா..ஒரு அஞ்சு நிமிஷம் டைம் கொடுங்க..” என ராஜீவனை தன்னுடன் இழுத்து சற்று தூரம் சென்று நின்றான்.
நண்பனின் தவிப்பை காண பொறுக்காது ராஜீவ்..
“தீரா..எதுவெங்கிலும் சமாளிப்போம்..விடடா..எனக்கு அறியும் நிலா உனக்கு குட்டி போல னு..” என்றதும் அவன் தோளில் சாய்ந்து கட்டிக்கொண்டான் தீரன். மெல்ல எழுந்தவன் ராஜீவை பார்த்து..
“எனக்காக இல்ல நமக்காக என் நிலாவை நீ கல்யாணம் பண்ணிக்க முடியுமா..?
அடேய்..பிராந்தா..என்ன பேசுறே னு தெரியுமோ..?
அவ..அவ..கெ..ட்..டு போயி..” என திணறிய தீரனின் தோளில் வேகமாக அடித்த ராஜீவ்..
“அடிச்சேன் னா பல்லு பேந்துக்கும்..பட்டி..பட்டி..” என எச்சரித்த ராஜீவின் கைகளை பிடித்த படி..
“என் நிலாக்குட்டி உன்க்கிட்ட மட்டும் தான் அவளா இருக்க முடியும் ராஜீவன்..அவளுக்கு எல்லாமா என்னால இருக்க முடியும்..ஆனா பிறந்ததிலிருந்து இப்ப வரை அவளை பாக்கும் போது ஒரு தங்கச்சி பீலிங் தான் டா வருது எனக்கு.. தெரிஞ்சே அவ வாழ்க்கேயோட திரும்பவும் விளையாட என்னால முடியாது டா..பிரண்ட் னு உரிமையெடுக்கிறதா நினைக்காத..நீயும் நானும் ஒன்னு ன்ற நம்பிக்கையில கேக்கிறேன்..ஆனா உனக்கு இஷ்டமில்ல னா அதையும் சொல்லு ராஜீவ்..வேற பையன பாப்போம்..ஆனா அவனுக்கு மட்டும் கட்டி தர முடியாது..
இப்படி சட்டுனு கேட்டா என்ன சொல்ல தெரியலை டா..என்னை விடு.. மரகதம், கமலா ஆன்டி..அத விட நிலன்யாவுக்கு விருப்பமா னு தெரியாம..எப்படி டா..?
என் வீட்டுல நான் எடுக்கிறது தான் முடிவு..உன் விருப்பத்தை மட்டும் சொல்லு ராஜீவ்..
எனக்கு னு இருக்கிறது நீ மட்டும் தான் தீரா..உனக்காக தான் இந்த உயிரே..நிலன்யாவை கட்டிக்க சம்மதம் டா..” என்றவனை நெகிழ்வுடன் கட்டிக்கொண்டான் தீரன்.
மீண்டும் கூட்டத்தை நெருங்கிய தீரன்..
“பெரியவங்க மன்னிக்கனும்..என் நிலாக்குட்டிக்கு நான் முறை தான் னாலும் இதுவரைக்கும் நாங்க அப்படி பழகினதேயில்ல..இது நிலாக்கும் தெரியும்..அவ கனவை நோக்கி ஓடிட்டிருக்கிற இந்த நேரத்துல..” என சற்று இடைவெளி விட்டு மீண்டும்..
“ஊர் முடிவுக்கு கட்டுபட்டு என் நண்பன் ராஜீவனை எங்க வீட்டு மாப்பிள்ளையாக்க முடிவு பண்ணிருக்கேன்..” என தன் வீட்டினரை பார்க்க..அனைவரும் திகைப்புடன் நிமிர்ந்தனர். நிலா சட்டென வினுயுகனை பார்த்தாள். அவனோ உணர்விழந்த முகத்துடன் கருவானத்தில் பார்வையை பதித்திருந்தான். தன் நிலாவிற்க்கும் வினுவிடம் பிரியம் இருக்குமோ என்ற தீரனின் ஐயத்தை உறுதிபடுத்தியிருந்தது அவள் பார்வை.
கமலா ஏதோ சொல்ல வருமுன் தீரன்..
“அம்மா..இது நம்ம குடும்பம் சார்பா நான் யோசிச்சு எடுத்த முடிவு தான்.. என்னை நம்புறீங்க னா தயவு செய்து அனுமதி கொடுங்க..” என்றான். இனி பேசி என்ன என அவர் அமைதியாகிவிட நிலாவின் உள்ளமோ இதை தடுக்கும் படி வினுவிடம் மன்றாடியது.
ஊர் பெரியவர்களில் ஒருவர்..
“அப்புறம் என்ன பா..ஏதோ அந்த பிள்ளைக்கு நல்ல வாழ்க்கை அமைஞ்சுது..மாணிக்கம் உன் பையனுக்கு என்ன தண்டனை னு ஊர் பஞ்சாயத்துல முடிவு சொல்றமப்பா..எலே செங்கோடா கோயிலுக்கு போய் தாலிக்கவுறு கொண்டு வா..” என பூசாரியை பணித்தார்.
சட்டென எழுந்த வேதா செந்தாழினியின் கையை பற்றி..
*செந்தா..உன்னை இப்படி கேக்கறேன் னு தப்பா நினைக்காத..இந்த நிலைமை வரலனாலும் உன்னை என் மருமகளாக்கிக்கனும் னு நான் நினைச்சிருந்தேன். உன்னை பத்தி எல்லா தெரிஞ்சதால கேட்குறேன்..என் பையனை நீ கல்யாணம் பண்ணிக்கிறாயா மா..? “என்றவரை தீயை மிதித்தது போல தவிப்புடன் பார்த்தான் விழிதீரன். இதை சற்றும் எதிர்ப்பார்க்காத வினுயுகன், செந்தாழினி விழிகள் அதிர்ச்சியில் விரிந்தன.
இதேதடா புதுக்கதை என மீண்டும் ஊரார் இவர்களை பார்த்தனர். ஓர் நிமிடம் தடுமாறிய செந்தா..
“ம்மா..நான் எப்படி அதும் உங்க பையனை போய்..?
அவன் தப்பு செஞ்சிருப்பான் னு நீயும் நம்புறியா மா..?
ஐயோ அப்படி சொல்லல..ஆனா என்னை பத்தி தெரிஞ்சும்..
எல்லாம் தெரிஞ்சு தான் கேட்குறேன் செந்தா..தவமா தவமிருந்து பெத்த ஒரே மகன்..முருகனோட அம்சம் நிறைஞ்சவன் மா..துடுக்கானவன் தான் ஆனா பொண்ணுங்க விஷயத்துல நெருப்பு மா..அவனை அசிங்கமா வார்த்தைகளால அவமானபடுத்தினதுல்லாம நாயடிக்கிற மாதிரி அடிச்சும் அவன் அமைதியாயிருக்க காரணம் அவன் தப்பு செய்யல ன்ற அவன் நம்பிக்கை தான்..அது பெத்தவங்களுக்கு மட்டும் தான் புரியும்..இதே ஊர் முன்னால இப்பவே என் மகனும் தப்பானவன் இல்ல னு நிருபிக்க எனக்கு வேற வழி தெரியல மா..இந்த கைய உன் காலா நினைச்சு கேக்குறேன் மா..” என அவர் மண்டியிடவும் துடித்து பின்னால் நகர்ந்தாள் செந்தா.
“அம்மா…..” என அந்த மலையே அதிரும்படி சீறினான் வினுயுகன். தன் மனைவியை எழுப்பிய மாணிக்கம்..
“என்ன வேதா இது..நமக்காக அந்த பொண்ணை போய்..
நம்ம பையன் தப்பானவனில்ல னு நிருபிக்க வேற வழி தெரியல ங்க..“ என கணவரின் தோளில் விசும்பினார்.
வேதாவின் செயலில் வெகுண்டெழுந்த தீரன்..
“அருமையான ஜோடி தான்..**** கூட இன்னொரு **** தானே கலக்கும்..”என்றவனின் நாக்கை அறுத்தெறிந்தால் என்ன என அவனை கண்களால் பஸ்பமாக்கினாள் செந்தா. வெந்த புண்ணில் மேலும் மேலும் ஈட்டி போன்ற வார்த்தைகளை ஏவி விடும் தீரனின் வாயை அடக்கவியலாமல் வினுவை நெருங்கிய வேதா அவனை பற்றி எழுப்பி மளமளவென மலைஉச்சியை நோக்கி ஏற தொடங்கினார்.
மனைவியின் நோக்கம் புரிந்த மாணிக்கம் பதட்டத்துடன்..
“அடியே பைத்தியக்காரி..அவசரபடாத நில்லு..” என பின்னால் ஓடினார். தீரனை நெருங்கிய செந்தா..
“உன் வாய் மட்டுமில்ல உன் மனசு பூரா அழுக்கு தான் இருக்கு..இப்ப வரை வினுவை கட்டிக்கனும் னு எண்ணமில்ல..ஆனா உன் பேச்சுக்காகவே அவரை கட்டிக்கிட்டா என்ன னு தோணுது..அவர் கூட வாழ்ந்து அவர் நல்லவர் னு முக்கியமா உங்கிட்ட நிருபிக்க தோணுது..சீ நீயெல்லாம் என்ன ஜென்மம்..?” என காறி உமிழாத வண்ணமாய் அவனிடம் சொல்லிவிட்டு திரும்பியவளின் கையை இறுக்க பற்றியவன் நொடியும் யோசிக்காமல் பூசாரியிடமிருந்த மஞ்சள் கயிறை பறித்து ஒரே கையால் மின்னல் வேகத்தில் அவள் கழுத்தில் போட்டிருந்தான்.
சற்று முன் நடந்தது என்ன என கிரகித்து கொள்ளவே சுற்றியிருந்தவர்க்கு சில நொடிகள் தேவைபட்டன. யாரை அடியோடு வெறுத்தாளோ, யாரை இனி பார்க்கவே கூடாது அவன் மூச்சிருக்கும் இடத்தில் கூட இருக்க கூடாது என நினைத்தாளோ அவனே தன்னை ஒற்றை கையால் அடக்கி விருப்பமின்றி கட்டாயமாக தாலி கட்டியவனை வனபத்ரகாளியாய் மாறி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தாள் செந்தா.
கமலா தன் நெஞ்சில் கையை வைத்தபடி தரையில் மடிந்து அமர்ந்தார். ஊர் பெரியவர்கள் அதிர்ச்சியில் வாய் பிளந்து நின்றனர்.பரம்பரை
பரம்பரையாக தங்களை வாழ வைத்த ஜமீன்தார் குடும்பத்தின் இன்றைய தலைமுறையினரின் நடவடிக்கையில் என்ன சொல்வது என தெரியாமல் விழித்தனர்.
அறைந்தவளை கொல்லும் வெறியுடன் அவளை பற்றும் முன் கமலா..
“விடு டா அந்த பொண்ணை..” என ஆங்காரத்துடன் கத்தினார். தன் மகனை நெருங்கி அவன் சட்டையை கொத்தாக பிடித்து கீழிறக்கி மறு கன்னத்தில் பளாரென அறைந்ததில் தடுமாறி கீழே மடங்கி விழுந்தான் தீரன்.
சாந்தமான அன்னையின் ருத்ர தாண்டவத்தை கண்டு உடல் வெலவெலத்தது அவனுக்கு. கமலா..
“கல்யாணங்கறது அவ்வளவு விளையாட்டா போச்சா உங்களுக்கு..?அறிவு வளர வளர குடும்பம், உறவு, பாசமெல்லாம் உங்களுக்கு ரெண்டாம் பட்சமில்ல..? உன் திமிருக்கு உனக்கு வேண்டப்பட்ட இல்ல தெரியாத பொண்ணுங்க அவங்க சுயத்தை தொலைச்சிட்டு வாழனுமா..? குறைந்த பட்ச பொறுமை வார்த்தைகள் ல கூட இல்லாம நீ எப்படா இப்படி மாறுன..?” என அவனை உலுக்கி எடுப்பவரை தடுக்க கூட தோன்றாமல் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் உறைந்து நின்றான் ராஜீவன்.
தொடரும்.