• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

Akalya

New member
#நிலவின் அக ஒலி
#கதை விமர்சனம்

ஆரன் விஸ்வேஸ்வரன்🫡

Crime dept ACP 😍.

லஷ்மி நிலாயினி Bank manager😇.

இவங்களுக்கு இடையே சுவாரசியமான காதலும் நம்ம ஆரனின் காவலும் கடமையும் சேர்ந்தது தான் இந்த கதை...

➡ஒரு பெண்ணோட தற்கொலையை விசாரிக்க வரார் நம்ம ஆரன் அந்த ஒரு வழக்கு எப்படி ஒரு பெரிய உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வருது அதான் கதை... உலகத்தில நம்மள சுத்தி இதெல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு அதுல சந்தேகம் இல்லை💔..

இன்னமும் பெண்கள் சில விசயத்தை எப்படி கையாள்வது தெரியாம உயிரை விட்டுட்டா எல்லாமே முடிஞ்சது நினைக்கிறாங்க குறைந்த பட்சம் அவங்கள போல இன்னொருத்தர்க்கு இப்படி நடக்க விடக்கூடாதுன்னு நினைச்சாவது இது போல விசயங்களை தைரியமா வெளியே சொல்ல முயற்சி பண்ணணும்...

✨தகப்பன் சரியில்லாத குடும்பத்தோட மூத்த பிள்ளையா நிலாயினியின் பொறுப்பு குணம் எல்லாம் 👏👏👏 அவ்வளவு அருமை..

✨வினோதினி கதாபாத்திரம் கூட சராசரி அம்மாக்கள் எதார்த்த குணமா தான் தெரிஞ்சது ஆனா அப்படி அவங்க இருந்தது எனக்கு கொஞ்சமே கொஞ்சம் நிலாயினி போல கோவம் தான் வந்தது ..சுயமரியாதை ரொம்ப முக்கியம் வினோம்மா...

✨ மதுரன் 😂😂😂😂நினைச்சாலே சிரிப்பு தான் தம்பி வருது.

ஆனாலும் cute ra nee அருமையான காதலன் காவலன் நண்பன் நல்ல ஆண் மகனும் கூட...

✨தங்கமாடத்தி அம்மா உங்க வாய் தான் உங்க பையனுக்கு கொஞ்சம் அதிகமாகவே வந்துருக்கு நினைக்கிறேன் 😂.

✨சந்திரா தீஷி அருமையான சகோதரிகள்🥰..

இப்போ வருவோம் என் ஆரன் கிட்ட 🙈

ரைட்டரே என்ன ஒரு opening song namma Hero ku adada angaye nan flatuuuuuuuuu😁..

ஆரன் 😍 உனக்கு அழகே அந்த வாய் பேச்சு தான்டா குறும்புக்காரன்😆..

ஆரன் வர இடமெல்லாம் நம்ம BP பறந்து போயிரும் அந்த அளவுக்கு வாய் விட்டு சிரிச்சேன் அவன் சேட்டையை பார்த்து ☺...

ஆரன் பாடுற பாட்டேல்லாம் தனி அழகு ரைட்டர் 🙈👏... ரசிச்சேன் ரொம்ப அந்த இடமெல்லாம்...

ஆரன் investigation super செமையா கொண்டு போனிங்க உங்க கூடவே சேர்ந்து நானும் கண்டுபிடிச்சுட்டேன் குற்றவாளிய😏...

கலகலப்பான சுந்தர்.சி படம் பார்த்த போல ultimate feel good story 🥰.... எனக்கு ரொம்பவே பிடிச்சது...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐 💐 💐

Nan guess panuna writer elanu solringa neenga 🫣 waituvommmmm result varum varai யாரேன்று தெரிய ஆவலுடன் அகல்யா☺.....
 

zeenath Sabeeha

New member
Nithani Prabu அவர்களின் தளத்தில் நடக்கும் செந்தூரம் தமிழ் நாவல் போட்டி கதைகள்.
#STN40
"நிலவின் அக ஒலி.."
ஆரணி விஸ்வேஸ்வரன்..
ஏ சி பி கிரைம் பிரெஞ்ச் ஆபிஸர்.. இவனின் திறமைக்காகவே முடியாமல் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகளின் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்காகவே இவனை அணுகுகிறார்கள். கண்டுபிடிக்கும் இவனிடம் கெஞ்சியும் கேட்டுக் கொள்கிறார்கள். பிடிக்கும் குற்றவாளிகளை உயிரோடு தங்களிடம் கொடுத்து விட வேண்டும் என.. ஆனால் அதை இவன் செயல்படுத்தினான் என்பது தான் கேள்வி. சேட்டைக்கார காவலாளி சேட்டை செய்யும் குற்றவாளிகளை தன் பாணியில் களை எடுக்கிறான் 👏👏👏
இவனின் அன்னை இவனுக்கு பெண் பார்க்க எதுவுமே அமையவில்லை. பிறகு தன் அம்மாவிடம் ஐஓபி இல் வேலை செய்யும் பெண்ணை திருமணம் முடித்து தர கேட்கிறான். அப்படிப் பெண் கிடைக்கவில்லை என்றால் தானே விலாசமும் தருவதாக கூறுகிறான். தன் மனதில் இருப்பவளை பற்றி அன்னையிடம் கூறுவது எல்லாம் சிரிப்பு 🥰😀 எதிர் வீட்டில் மூன்று பெண் பிள்ளைகளோடு வாழ்கிறார் வினோதினி. அதில் மூத்த பெண் லக்ஷ்மி நிலாயினி மேல் கண் நம் காவலனுக்கு 🥰 அவளை சீண்டி எப்போதும் கோபத்தோடு முறைக்க வைத்துக் கொண்டே இருக்கிறான் இவன் ஆனாலும் ஏனோ அவன் மீது வெறுப்பு வர மறுக்கிறது பெண்ணவளுக்கு. அவளுடன் வம்பு வளர்த்து காதல் புரிந்து திருமணமும் செய்து கொள்கிறான் இவனின் அடாவடியில் அவள் தான் அயர்ந்து நிற்கிறாள். குழந்தை இல்லா விரக்தியில் தொடராக பெண்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அது ஏன் என்பதையும் கொலையாளி யார் என்பதையும் கண்டுபிடிக்கிறான் காவலாளி தன் இணை காவலாளி மதுரனுடன்.
ஆரன் மதுரன் பாண்டிங் வெகு அழகு 🥰
தன் காதலியை பார்ப்பதற்காக அவள் வீட்டில் எதிர் வீட்டையே தன் உயரதிகாரிக்கு பிடித்துக் கொடுத்து தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ளும் மதுரனின் தைரியமும் அழகு அதை கண்டுபிடிக்கும் ஆரணின் புத்திசாலித்தனமும் அழகு 🥰
நிலா சந்திரா தீக்ஷிதா பாண்டிங் வெகு அழகு 🥰

வெரி சுவாரஸ்யமாகும் விறு விருப்பாகும் நகர்ந்தது கதை 🥰👏
நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 🥰❤
Good luck ❤🌹
 

STN - 117

New member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
காதல் காவியம் நீ
நாயகன்: ரொஷான்
நாயகி: மீரா
இலங்கையில் நடைபெறும் இராணுவ நடவடிக்கைகள் அதனால் வரும் பிரச்சனைகளும் கதைக்களம் 🥰 🥰
தமிழ் இனப்பிரச்சினை என்றும் தீர்க்கப்படாத உன் என்பது இக்கதையின் மூலம் தெரிகிறது 😥 😥 😥
சிறுவயதில் தாயை பறிகொடுத்த நம் நாயகிக்கு மாற்றாந்தாய் ஆக வரும் விசாலாட்சி தனக்கு பிறந்த பெண் பிள்ளையின் உரிமையை நிலை நாட்ட மீராவிற்க்கு செய்யும் துரோகம் தன் பெண்ணின் நிம்மதியை இரண்டாம் கல்யாணம் தடுத்து விட்ட குற்ற உணர்வில் தவிக்கும் தகப்பன் கந்தன் தன் பேத்திக்கு தாயாக அரவணைக்கும் பாட்டி கமலம் என்னும் குடும்ப அரசியலில் வளரும் நாயகி 😞😞😞
படித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி கொள்ள வேலை தேடி செல்லும் இடத்தில் இராணுவ பிரச்சினைகளால் படிப்பு சான்றிதழ்களை இழந்து விபத்தில் சிக்க நம்ம நாயகன் அவளை காப்பாற்றி அடைக்கலம் தருகிறார் சிங்கள குடியிருப்பில் தமிழ் பெண் இருக்க இயலாத காரணத்தால் எதிர்பாராத திருமண பந்தத்தில் இணைகின்றனர்🥰🥰🥰
நாயகன் சிங்கள மேஜர் கர்னல் ரோபோ போன்ற அவன் இறுக்கமான வாழ்வில் தென்றலென மீராவின் வரவில் மகிழ்ச்சி கொள்ள முடியாமல் அவளின் ஒதுக்கம் தடுக்கிறது 😔😔😔
மீராவும் ரொஷனை காதல் கொண்டு வாழ்க்கை ஆரம்பித்து வாழ ஆரம்பிக்கும் நேரம் எதிர்பாராத ரொஷனின் பணியின் காரணமாக எங்கே சென்றான் என்று தெரியா நிலையில் கர்ப்பிணியாக மீராவின் தவிப்பு வேதனை என்று கண்கலங்க வைக்கும் நிமிடங்கள் 🥺🥺🥺
பேபி பேபி என்று ரொஷான் சீனாவிடம் உருகும் போது ரோபோவுக்கு காதலா🤣🤣🤣
இந்த ரொஷான் பய காதல் உண்மையில் காவியக் காதல் தான் 🥰🥰🥰
ரொஷான் என்ற கண்ணனை தேடி மீராவின் காதல் பயணம்
நல்ல வித்தியாசமான அழுத்தமான கதைக்களம் அருமை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 🥰 🥰 🥰
Thank you so much for your valuable comments....😍😍
 

ShaSri

New member
#குழலில்_காற்றாகினாள்_விமர்சனம்
காதல் அதுவே பிரதானம் கதையில் ❤💖💖 இப்படியெல்லாம் கூட காதல் செய்ய முடியுமா ❣❣❣ பிரம்மிப்பா இருக்கு 😯😯 திலோவின் காதல் மெய் சிலிர்க்க வைக்குது 👌👌 அதே சமயம் சில காட்சிகள் சற்று கனமாக தான் இருந்தது. சீக்கிரம் கடந்திடனும்னு அவசரமா படிக்க வெச்சிட்டீங்க 🥺🥺

ஒரு கதையை படிச்சு முடிச்சப்பிறகும் ,அந்த கதையின் தாக்கம் நமக்குள்ள இருந்தாவே அது அந்த கதைக்கு கிடைத்த வெற்றி தானே ❣❣

திலோ , இளங்கோ இருவரும் மனசை நிறச்சுட்டாங்க ♥♥
என்ன கதையினே சொல்லாமலே என்னென்னமோ சொல்லிட்டு இருக்கேனோ 😃😃
திலோ, ரஞ்சனி, அமர் மற்றும் இளங்கோ இவங்க நால்வரின் நட்பும் காதலும் தான் கதையே 💙💖

திலோவுக்கு அமரின் மீது மூன்று வருடங்களாக ஒரு தலை காதல் 💘 அவளின் காதலை அமர் எப்படி உணர்கிறான் அவர்களின் காதல் சேர்ந்ததா? அப்படி எல்லாம் சுலபமா சேர விட்டுருவேனானு ஒரு பிரச்சினை வருது அது என்ன? கதையில் மிகவும் சுவாரஸ்யமாக ❣❣
இளங்கோவின் நட்பு வியக்க வைக்கிறது 💙💙 மோதலில் ஆரம்பித்த இளா ரஞ்சனி காதல் அழகு 😍💓

திலோவின் காதல் ஒரு வித அழகு என்றால் அமரின் காதல் ஒரு விதமான அழகு 😍💓
எதோ ஒரு பிரச்சினை வர போகுதுனு மனசை தயார்படுத்திடே தான் படிச்சே ஆனால் இப்படி ஒன்றை சற்றும் எதிர்ப் பார்க்கவில்லை 👏👏 திலோ செய்தது தப்பு சரிய தாண்டி அவளின் காதல்!!!

கடக்க சற்று கடினமாக தான் இருந்தது காதலுக்காக அவளவனுக்காக அவளின் செயல்😔😔

சில வார்த்தை பிரயோகங்கள் மிகவும் பிடித்தது ❤ ஒற்றை வரியில் அமரின் காதலின் ஆழத்தை சொன்னது நல்லா இருந்தது 😍😍 மொத்தத்தில் கதையை எனக்கு மிகவும் பிடித்தது ❤

குழலின் இசையில் மட்டுமல்ல
திலோவின் காதலிலும் லயித்து
மீள முடியாமல் தவிக்க வைக்கிறது கதை ❣❣

குழலின் இசை அனைவரின் மனதையும் வசியபடுத்தி போட்டியில் வெற்றி பெற வைக்க வாழ்த்துக்கள் 👍
 

ShaSri

New member
#நிலவின்_அக_ஒலி_விமர்சனம்

மொத்தமே 12 அத்தியாயங்கள் தான் ஆனால் அதற்குள் அழகான காதல் இருக்கு, சஸ்பென்ஸ் இருக்கு, காமெடி இருக்கு, குடும்பப் பிரச்சினை இருக்கு, சமூகம் சார்ந்த சிந்தனைனு எல்லாமே இருக்கு ❣❣

கதையின் நாயகன் ஏசிபி அகரன் 😍😍 இவரின் அதிரடி நடவடிக்கை,பேச்சு ,செயல்பாடு எல்லாவற்றிலும் நம் நாயகி நிலா விழுறதுக்கு முன்னமே நான் விழுந்து டேன் 🥰🥰

முக்கியமா மதுரனுடனான இவனது காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி தான் 🤣🤣 நல்லா வாய்விட்டு சிரித்தேன் 🤣🤣

நிலா மூத்த பொண்ணா இரண்டு தங்கைகளுக்கு அக்காவா அவளின் பொறுப்புணர்ந்து நடந்துக்கிறது ஆகட்டும் ♥ அப்பா செய்த தப்புக்காக அவளெடுத்த முடிவாகட்டும் அதில் அவள் உறுதியா நின்னது ஆகட்டும் ❣
படிப்பு வேலை குடும்ப சுமைனு அவளின் நிலைபாட்டை அழகா சொல்லீருக்கீங்க ♥ எனக்கு நிலா பொண்ணை எல்லாமாகவும் ரொம்ப பிடித்தது 💞💞

மதுரன் குருவிடம் மாட்டிக்கிட்டு முழிப்பது நல்லா இருந்தது 🤣 எப்படியோ ப்ளான் பண்ணி ஏசிபியை நிலாவோடு கோர்த்துவிட்டுடே மேன் நீ 👌👌

தீஷி கடை குட்டி 💞 சுட்டி பெண் நல்லா இருக்கு இவளின் வெளிபடையான பேச்சும் செயல்களும் ♥

செல்வகுமார் 😡 தங்கமா வீட்டுல மூனு பொண்ணுங்க நல்ல பொண்டாட்டி வெச்சு வாழ தெரியல 🥶 உன்னால அவங்க அசிங்கபட்டு நின்னது தான் மிச்சம் 😡😡

குரு தேவ் சைகோ தான் இவன் 😡😡 உனக்கு நிலா கேட்குது 🥵

வினோதினி அம்மாவா பொண்ணுங்க வாழ்வை நினைச்சு கணவனை வீட்டுல சேர்த்துக்கிட்டாங்க புரியுது ஆனாலும் அவங்க சேர்த்துக்கிட்டது தப்பு தான். இப்படி பட்டவரை அப்பானு முன்னிருத்தறதுக்கு பதில் பொண்ணுங்களுக்கு அப்பா இல்லை காணாம போய்டாருனு சொல்லீருக்கலாம் 😞

நிலா பொண்ணும் ஏசிபியும் அனைத்து வாசகர்களின் அக ஒலியாகி போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்👍🎉🎊
 

ShaSri

New member
#தேன்_நாட்டு_பைங்கிளி_விமர்சனம்
தேன் நாட்டு பைங்கிளி வானதிக்கும் தென் நாட்டு சூரியன் அருள்மொழிவர்மனுக்குமான காதல் தான் கதை ❤❤
இலங்கையில் பிறந்து வளர்ந்த வானதி பெற்றோர்கள் மறைவிற்கு பின் வேறு வழி இன்றி தமிழக பிரயாணம். ✈✈✈
இந்த இடத்தில் அவளை சீதையாகவும் கரிகாலனை இராவணனாகவும் உருவகப்படுத்தினது நல்லா இருந்தது ❤❤
அவளை மீட்க்கும் இராமனை சந்தித்தாளா? காவியத்தில் இராமன் ஏக பத்தினி விரதன் ஆனால் இவளின் இராமன்? கதையில் ,எதிர்ப்பார்க்காத திருப்புமுனைகளுடன் அழகாக 😍😍
இந்த கதையில் எனக்கு மிகவும் பிடித்தது லவ்-ஹேட் ரிலேசன்சிப் 😍😍
வித்தியாசமாவும் நல்லாவும் இருக்கு ♥♥
காதலை குழி தோண்டி புதைத்து வைத்து வெறுப்பை மட்டும் காட்டும் நம் நாயகியின் அனலை அணைக்க வழி தெரியாமல் சற்றும் மொழி 🤣இறுதியில் காதலுக்கு உயிர் கொடுத்தானா என்பதை சிறப்பாக சொல்லிருக்கீங்க ❣❣
வானதியின் கதாபாத்திரம் அருமை எனக்கு மிகவும் பிடித்தது 💜💜
வானதி கரிகாலனின் மோதலும் பாசமும் மிகவும் அழகு 😍💓
தன்னையும் தன் தமையனையும் இழிவுபடுத்துவோருக்கு பாரபட்சம் பார்க்காமல் திருப்பிக் கொடுப்பது அட்டகாசம் 😍
வானதியின் காதலும் பழி உணர்ச்சியும் வெறுப்பும் அக்கரையும் வேற மாதிரி 👌 முக்கியமா தகுதியில்லைனு சொல்லி சுத்தலில் விட்டது 🤣🤣

கரிகாலன் பெற்றோருக்கு நல்ல மகன் ❤ தனக்கு இளையவர்களை பாதுகாப்பதிலும் வழிநடத்துவதிலும் மனசை கவர்ந்திட்டான் 😍 இவனுக்கு ஒரு தனி கதை எழுதுனா நல்லா இருக்கும் ❣❣

அருள்மொழிவர்மன் பெயர் மட்டுமல்ல வானதி விழி வழியாக இவனை பார்க்கும் போது அழகன் இவன் 🥰🥰நம்மால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை 🙈🙈

முக்கியமாக காதல் வயப்பட்டப்பின் அவனின் செயல்கள் ஒவ்வொன்றும் இரசிப்புக்குறியவை 💜😌
ஒரு டீசர்ட்க்கு ஒரு வாரமா 🤣🤣🤣 அடேய் 🤣🤣 அவளுக்காக புது வாகனம் மாற்றுவது, கடிதத்திற்க்காக காத்திருப்பது எல்லாம் எப்படி இருந்த மொழி இப்படி ஆகிட்டான் தருணங்கள் 🤣

வெண்மதி அருமையான அம்மா 😍 நல்லா இருக்கு இவர் வரும் காட்சிகள் அனைத்தும் 💞💞
என் மனதிற்க்கு கொஞ்சம் நெருடலான விஷயங்கள்,
🙄சின்ன சின்ன எழுத்துப்பிழைகள்
🥺ஜெய் என்ன ஆனான் அவனைப் பற்றி இறுதியில் ஒரு வரியிலாவது குறிப்பிட்டு இருக்கலாம்
😔 மாறன் யாரை திருமணம் செய்ய போகிறானு மொழிக்கு எப்படி தெரியாமல் இருக்கும் ? தெரிந்திருந்தால் அவன் தன் காதலி யாரு என்று தன் தாயிடமோ அல்லது அண்ணனிடமோ சொல்லிருக்கலாம் அல்லது அவனுக்கு அந்த மணப்பெண் யாரு என்று தெரியவில்லை என்றால் ஏன் என்று தக்க காரணம் சொல்லிருக்கலாம் .

அதை தவிர்த்து எதார்த்தமான கதாபாத்திரப் படைப்புகளுடன் அழகான கதை ❤
தேன் நாட்டு பைங்கிளி அனைவரின் மனதிலும் இடம் பிடித்து போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
 
#STN_29_குழலில்_காற்றாகினாள்

#செந்தூரம்_தமிழ்நாவல்கள்_போட்டி_2026

நாயகன் : அமரவேந்தன்

நாயகி : திலோத்தமா

புல்லாங்குழல் வித்தகனான பார்வைத்திறன் குறைபாடுள்ள நாயகன் அமரை அவனோட பிரச்சனை தெரியாமலேயே ஒரு தலையா காதலிக்கும் நாயகி திலோ. பத்து வயசு வரை சாதாரண வாழ்க்கை வாழ்ந்து ஒரு விபத்தில பெத்தவங்களை விட்டு பிரிஞ்சு அந்த விபத்தால பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு ஆசிரமத்தில அடைக்கலமா வர்ற அமரை அரவணைச்சுக்குறான் பொறந்ததில இருந்தே அங்கேயே வளர்ற இளங்கோ. அப்போ அமரை அரவணைச்ச கை வாலிப வயசிலேயும் விடாம அரவணைக்குது. நட்புன்னா நட்பு அப்படி ஒரு நட்பு. சின்ன வயசிலேயே பெற்றோரை இழந்த திலோ மாமா வீட்ல அத்தையோட ஏச்சு பேச்சு தாங்கி அரசு பள்ளியில உதவித் தொகையோட படிச்சு நல்ல வேலைல ஏறிக்குறா. தாய்மாமா இருந்தும் யாருமில்லாத உணர்வை போக்க அவளோட கை கோர்க்கிறா அவளை மாதிரியே உறவுகள் இருந்தும் பெற்றோர் இல்லாததால தனிமையாக்கப்பட்ட ரஞ்சனி. அமரோட அழகையும், திறமையையும், புகழையும் பாத்து விட்டில் பூச்சி மாதிரி சுத்தின பெண்கள் அவனோட குறைபாடு தெரிஞ்சதும் இடிச்சத்தம் கேட்ட பறவைகள் மாதிரி பறந்திடுறாங்க. இதையெல்லாம் அனுபவிச்ச அமருக்கு திலோ முதல்ல பத்தோட பதினொண்ணா தெரியிறா. ஆனா திலோ அவளோட எதிர்பார்ப்பில்லாத காதலால அவன் மனசை ஜெயிச்சு அவனுக்கு பார்வைத்திறனுக்கு வழியே இல்லைனு கிட்டத்தட்ட எல்லா மருத்துவர்களும் சொன்ன நிலைமையில அவனோட பார்வை வர்றதுக்கான ஒரே ஒர வழிமுறை தெரிய வருது. ஆனா அதை செய்ய முடியாதுன்னு அந்த மருத்துவரும் சொல்றாங்க. திலோ என்ன பண்ணினா? அமருக்கு பார்வை வந்திச்சா? ன்னு கதை படிச்சு தெரிஞ்சுக்கோங்க தோழிகளே.❤❤

அமர் ரொம்ப ரொம்ப அமைதி. நிறைய ஏமாற்றங்களை சந்திச்சதாலேயோ என்னமோ எதிலேயும் பற்றில்லாத ஒரு நிலைல இருக்கிறான். அவனோட குறைபாடு யாருக்கும் தெரியாத அளவுக்கு அவனோட செயல்பாடுகள் இருக்கு. திலோ மேல காதல் வந்தும் அவளோட வாழ்க்கைக்காக அவளை மோசமா விரட்டி அடிக்கிற இடத்தில அவனோட வார்த்தைகள் நம்மளை கோபப்படுத்தினாலும் அவனோட எண்ணம் புரிஞ்சுக்க முடியுது. திலோவோட தியாகம் தெரிய வரும் போது அவன் பட்ட வேதனை, அந்த தியாகத்துக்காக அவன் இருந்த தவநிலை இந்த இடங்கள்ல எல்லாம் கலங்க வைக்கிறான் இந்த இந்திர ராஜா.😍😍😍

திலோ இவ காதலை என்னன்னு சொல்றது. இப்படியும் காதலிக்க முடியுமா ஒருத்தியால. நேரா மூக்கை தொடுற வசதி இருந்தும் தலையைச் சுத்தித்தான் தொடுவேங்குற மாதிரி அரை மணி நேரத்தில ஆஃபீஸ் போற மாதிரியான இடத்தில இருந்துக்கிட்டு அமருக்காக ரெண்டு மணி நேரம் டிராவல் பண்ற மாதிரி இருந்தாலும் அவன் வீட்டுக்கு எதிர்க்கவே வந்து இருட்டுல பால்கனில உக்காந்து அரைமணி நேரம் தரிசனம் தந்துக்கிட்டு போற அமரை ரசியோ ரசின்னு ரசிக்கிற பைத்தியக்காரி.அவ உலகத்தில அவளை விடவுமே அமரை உயர்வா நெனைக்குற மனம், அவனோட குறைபாடு தெரியாமலேயே அவனை காதலிச்சு அது தெரிய வரும் போது அவனை இன்னும் அதிகமா காதலிச்சு தன்னை அவன் விரட்டும் போதெல்லாம் அதை ரொம்ப சரியான கோணத்தில புரிஞ்சுக்கிற அவளோட குணம், தன் காதலை அவன் மறைக்க காரணமான அவனோட பார்வைக் குறைபாட்டை களைய அவ மேற்கொண்ட முயற்சி, அதுக்கான அவளோட தியாகம், கடைசில அமர் அவக்கிட்ட நடந்துக்கிட்ட முறையிலேயும் கோபப்படாம அவனை புரிஞ்சுக்கிற புரிதல் இப்படி இவளைப் பத்தி சொல்லிக்கிட்டே போகலாம். மொத்தத்தில அமரோட தேவதை இவ.😍😍😍😍

இளங்கோ அழகு, படிப்பு, திறமை,புகழ்னு அமருக்கு கொஞ்சமும் சளைக்காதவன் கூடவே ஆரோக்கியமானவனும். ஆனாலும் நண்பனை விட்டுப் பிரியாத அவனோட தூணா இருக்குறான். அமர் இவனோட உயிர் ஆனாலும் திலோவோட காதல்ல பிரமிச்சு அவளை மானசீக தங்கையாக்கி அவளோட காதலுக்காக அமர்கிட்டேயே மல்லு கட்டுற உன்னதமான அண்ணன். திலோவுக்காக அவன் அமரோட சண்டைக்கு போனாலும் திலோவோட உயிர்த்தோழி ரஞ்சி அப்போ அப்போ அமரை திட்டி தீர்க்கும் போது அவ மேல வந்த காதலை உள்ளுக்குள்ள பொதைச்சிட்டு அவக்கூட சண்டை போடுற ஆத்மார்த்த நண்பன். மொத்தத்தில அப்பழுக்கில்லாத ஜீவன்.🥰🥰

ரஞ்சனி அமருக்கு இளங்கோன்னா திலோவுக்கு ரஞ்சனி. அமரோட குறைபாடு தெரிய வரும் போது திலோக்கிட்ட திலோவோட வாழ்க்கைக்காக கெஞ்சுறதிலேயும், மனசில தோணினதை பட்டு பட்டுன்னு நிதானமில்லா கோபத்தில வார்த்தைகளை கொட்றதிலேயும் திலோ மேல இருக்கிற அன்பை அவ்வளவு தெளிவா காமிக்கிற ஒரு பிரியமான தோழி. ❤❤

இதில அமர் - திலோ காதல், இளங்கோ - திலோ பாசம் , அமர் - இளங்கோ பிணைப்பு ,திலோ- ரஞ்சி நட்பு, இளங்கோ - ரஞ்சி இணைப்பு ன்னு பல விதமான பந்தங்கள் அந்தந்த அழகியலோட சொல்லியிருக்கீங்க ரைட்டரம்மா. அமரோட குறைபாடு தெரிஞ்சதும் திலோவோட அழுகை, அவ மேல காதல் வந்தும் அதை வெளிய சொல்ல முடியாம அமரோட வேதனை, அவளோட புரிதல் பாத்து அவனோட அழுகை, நட்புகளுக்காக இளங்கோ - ரஞ்சி போடுற சண்டை, அமருக்காக தியாகம் செய்ற திலோ அதை யாருக்கிட்டேயும் கொண்டவன்கிட்ட கூட சொல்ல முடியாம வாய் விட்டு அழ முடியாம படுற அவஸ்தை, பார்வைத் திறன் சரியா இல்லேனாக்கூட தன்னோட சரிபாதியோட உணர்வுகளை சரியா புரிஞ்சிக்கிற அமரோட உணர்வு, அவளோட தியாகம் தெரிய வரும் போது அவனோட மனசு துடிச்ச துடிப்பு, அந்த தியாகத்தை செம்மையா பாதுகாக்க அவன் எடுத்த நடவடிக்கை அப்பப்பா மொத்தமா கதை முழுசும் உணர்வுக்குவியல்கள்தான் ரைட்டரம்மா❤❤❤❤❤. கதை நிறைவா முடிஞ்சிருக்கு. வெற்றி பெற வாழ்த்துக்கள்.👍👍👍👍👍
 

Kalai Karthi

Active member
என்னை களவாட வந்தவளே கதை அருமை. குடும்ப உறவுகள் கொண்ட கதை அண்ணா தங்கை குடும்ப பாசம் பிரச்சினை அதை சமாளித்து காதல் ஜோடிகள் கரையேறும் கதை. பெண் குழந்தை வன்முறை காதலித்த தன்னவளை உயர்த்தி அவளுடைய ஆசையை நிறைவேற்றுவது சூப்பர். மொத்தத்தில் கதை அருமை.
 

Kalai Karthi

Active member
அசோவனத்தில் ராமன் கதையும் வித்தியாசமானது தான். ஆண் தான் தனது விருப்பம் தன் உணர்வை தீர்த்து வேற ஒருவருடன் செல்வது கல்யாணத்தில் விருப்பம் இல்லாமல் இருப்பது என்று நடக்கும் ஆனால் இங்கு ஹீரோயின் அந்த வகையை சார்ந்தவள்.ஹீரோவை பார்த்ததும் பிடிக்க. சித்தார்த் வேற ஒருத்தி காதலிக்க அவள் ஹீரோயின் வேலை பார்க்க கையாடல் விசயமாக மாட்டும் ஒருநாள் வந்தால் கடன் எல்லாம் அடைத்து விடலாம் என்க அவன் இருக்கிற பணத்தை கொடுத்து மன்னிக்க சொல்ல காதலும் விலகி போகிறது. திரும்ப தங்கை தன் காதலனுக்கு பரிசாக ஹீரோயின் வாட்ச் கொடுக்க அந்த பிரச்சினையில் மாட்டி அவளுடன் இணையும் போது அவளுக்கு அவன் மேல் காதல் வர சித்தார்த் வெளியே வர தங்கை காதலன் பார்க்க பிரேக்கப் ஆக ஊட்டி போக அங்கே லீலா சித்தார்த் காதலிக்க தங்கை வேலைக்கு போக சித்தார்த் பாட்டி தான் அரண்மனை வைத்திருக்க . ஹீரோயின் அவன் நினைவாக குழந்தை பெற அவளும் வளர திரும்ப சந்திக்க தங்கை காதல் வெற்றி பெற உதவ சித்தார்த் ஹீரோயின் உறவு தெரிய வர அவள் வளர்ப்பு அவள் தந்தை எல்லாம் தெரிய சித்தார்த் அவளை பிடிக்க சில பிரச்சனைகள் வரும் தான். ஹீரோயின் காதல் சூப்பர் தான். ஹீரோ சூப்பர். மொத்தத்தில் கதையின் முடிவு சூப்பர். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
 

thanga then mozhi

Active member
செந்தூரம் தமிழ் நாவல்கள் போட்டி 2026
கதையின் பெயர் : என்னை களவாட வந்தவளே
நாயகன்: இளமாறன்
நாயகி: பூங்கொடி
நல்ல கிராமத்து மண் மனம் வீசும் மாமன் பையன் அத்தை பொண்ணு காதல் கதை ❤ 🧡 🥰
நான்கு ஜோடிகள்
இளமாறன் ❤ பூங்கொடி
செந்தூர்பாண்டியன் 🧡அல்லி ராணி
இளஞ்செழியன்💚தீபிகா
பொற் செழியன் 💙ஜெயராணி
நான்கு ஜோடிகளின் காதல் கல்யாணம் அதற்கு பிறகான வாழ்க்கை பிரச்சினைகளே கதையின் கரு 🥰 💐 💐
சிறுவயதில் இருந்தே கொடியை காதலிக்கும் மாறன் கொடிக்கும் தன்னை பிடிக்குமா என்று தவிக்கும் தவிப்பு ஆண்களின் காதலே அழகுதான் 💖💖
செந்தூர்பாண்டியன் அல்லிரானி அமைதியான பெண்ணுக்குள் குடும்பத்திற்க்கு ஒரு பிரச்சினை என்றதும் வீரமங்கை யாக நின்றது சூப்பர் 🥰🥰
இளஞ்செழியன் தீபிகா காதலுக்காக காத்திருந்து கரம்பிடிக்கும்விதம் வெளியில் இருந்து வந்த மருமகளாகவே இருந்தாலும் குடும்பத்துடன் ஒட்டி விட்டுக்கொடுத்து வாழ்வது மரத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இருவரும் சேர்ந்து சமாளித்து வெளிவருவது என்று நல்ல புரிதல் நிறைந்த காதல் 💖💖
பொன் செழியன் 💙 ஜெயராணி இந்த பூனையும் பால் குடிக்குமா அப்படி இருந்தே சின்ன புள்ளை மை கரெக்ட் பண்ணிட்டான்🥰🥰
கருணா யாரு வீட்டு நிலத்தை யாருக்கு பங்கு கேட்டு வருவ போடா வெண்ணை 😡😡😡😡
பரத் உன் மூஞ்சிக்கு இரத்தத்தில் லெட்டர் ஆக்ஸிடென்ட் வேற பண்ற மாமனார் வீட்டில் உபச்சாரம் நல்லா இருக்கும் 😡😡😡😡
விஷ்வா பரதேசி நாயே உன்னை எல்லாம் கொன்று போடனும் 😡😡😡
கொடி உன் காதலுக்கு பரிசாக போனதை விட கடவுள் அதிகமாவே கொடுத்துட்டா ரன்💖💖💖 இளமாறன் ❤ பூங்கொடி
நல்ல கதை போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டரே 🥰 💐 ❤
 
Top Bottom