அத்தியாயம் 14
சென்னை வந்திறங்கியதுமே நேரே விஹானை காணச் சென்றாள் ஆத்மீகா கண்ணபிரான்.
வரவேற்பறையில் அவளை கண்டதும், முகம் மலர்ந்தார் கோகுல ப்ரகாஷ்.
மனைவியிடம் அவளை மாய்ந்து மாய்ந்து கவனிக்கச் சொன்னார்.
அசௌகரியமாய் உணர்ந்தவள் ‘சீக்கிரம் வந்து தொலையேன்டா விஹான்’ என்று மனதிற்குள் கத்தினாள்.
அவன் வேகமாக படிகளில் இறங்கினான். அவளை கண்டதும் சிநேகமாய் புன்னகைத்தான்.
அவள் உடனே அவன் கரம் பற்றி, அவன் பெற்றோரிடம் விடைபெற்றாள்.
ஆனால், அவளின் நடவடிக்கைகள் எதுவும் பிடிக்காத விஹானின் தாய் குறைபட்டார் கோகுலபிரகாஷிடம்.
அவரோ, ‘பழம் நழுவி பாலில் விழப்போகும் சமயம். வாயை மூடு!’ என்று அடக்கிவிட்டார்.
காரிற்குள் ஏறியதும், என்ன விசயமாக என்றான் விஹான்.
உன் கல்யாண விசயமாக தான் என்றதும், அவன் முகம் இருளடைந்தது.
“விளையாடாத ஆத்மீ!” என்று சலிப்பாக சொன்னான்.
“நானும் இப்ப விளையாடுற மூடுல இல்ல விஹான். அங்கிள் நீ என்னை விரும்பறதா நெனைக்கறாரு. இத்தனை வருசமா நீ கல்யாணத்தை தள்ளிப் போட்டுட்டு வர்றதுக்கு காரணமும் நான் தான்னு நினைக்கறாரு” என்றதும்,
“இதான் உன் பிரச்சனையா? விடு ப்ரஸ் மீட் வச்சி சொல்லிடுறேன். என் தேவதாஸ் தாடிக்கு காரணமான பார்வதி நீ இல்லைனு” என்று பற்களில் நட்சத்திரங்களை சிதறவிட்டான் விஹான்.
“அப்படியே அந்த பார்வதி பானுமதி தான்னு சொல்லிட்டா, இன்னும் எனக்கு வசதியா போயிடும்.” என்று நட்சத்திரங்களை மின்னவிடுவது அவள் முறையானது.
அவன் கண்கள் தீக்கங்குகளாய் ஜொலித்தன. முகம் ரௌத்திரம் பூசியது.
“இந்த உலகத்துலயே நான் அதிகம் வெறுக்கற பெயர்னா அது பானுமதி தான். உன் மூலமா அவக்கிட்டயிருந்து தூது வரும்னு நான் சத்தியமா எதிர்பார்க்கல ஆத்மீ” என்றான் காரமாக.
“நீ தப்பா புரிஞ்சிக்கிட்டிருக்க விஹான். நான் அவ அனுப்பி வரல” என்றதும்,
“அப்ப அவ அண்ணன் அனுப்பி வந்தியா?” என்று வெடித்தான்.
அவனால் எப்போதுமே அவளை காயப்படுத்த முடியாது. தன்னையும் மீறி வந்துவிட்ட சொற்களுக்காக வருந்தினான்.
அவளிடம் எவ்வித சலனமுமே தென்படவில்லை.
“நான் யார் சொல்லியும் வரல. நானா வந்தேன். என் நண்பனுக்காக வந்தேன். அவன் ஆறரை வருசமா யாரை மறக்க முடியாம கஷ்டப்படுறானோ, அந்தப் பொண்ணும் அதே கஷ்டத்தை தான் பட்டுட்டு இருக்கானு சொல்லச் சொல்லி, என் உள்மனசு உந்தினதுனால வந்தேன். நான் உன்கிட்ட பொய் சொல்ல மாட்டேனு உனக்கு நிச்சயம் தான விஹான்? பானுமதி நல்லப்பொண்ணு. நீ அவளை அவளா மட்டுமே பார்க்கறது தான் உத்தமம். ஏன்னா அவ மட்டும் தான் உன்கூட உன் வீட்டுல வந்து வாழப்போறா. குற்றம் பார்க்கின் சுற்றமில்ல விஹான். அப்பறம் அவளை சேத்துல மலர்ந்த செந்தாமரையா நினைக்க அவசியமில்ல. முள்ளோட மலர்ந்த ரோஜாவா நினைச்சாலே போதும்” என்றதும், யாருக்காவும் இதுவரை அவள் வக்காலத்து வாங்கி பார்த்திராத விஹான் திகைத்து நின்றான்.
“நீ அவளுக்காக பரிஞ்சு பேசுறதை என்னால நம்பவே முடியல ஆத்மீ. காரணம் தெரியலைனா என் தலையே வெடிச்சிரும்” என்றான் பரிதாபமாக.
அவனின் கதறலில் வாய்விட்டு சிரித்தவள், “என் வருங்கால நாத்தனாருக்காக நான் தான பேசியாகனும்?” என்றதும், அவன் கண்கள் சோழிகளாயின.
“ஆத்மீ உண்மையாவா? நீ கல்யாணம் பண்ணிக்கப் போறியா? அதுவும் பானுமதி அண்ணனை?” என்று அசூயையாகக் கேட்டதும்,
“அவர் எந்த வகையில எனக்கு தகுதியானவர் இல்லைனு நீ நெனைக்கற விஹான்? அது எதுவாயிருந்தாலும்- நான் ஆத்மீகா கண்ணபிரான்! உடைச்செறிவேன். ஞாபகமிருக்கட்டும்! அப்பறம் என் பொண்ணோட அப்பா மேல நீ எந்தவிதமான தப்பான அபிப்ராயங்களும் இனி வச்சிக்கிட்டா, நாம மேற்கொண்டு நண்பர்களா தொடர்றது பத்தி நான் யோசிக்க வேண்டியிருக்கும்.” என்று திடமான குரலில் தெரிவித்ததும், அவனுக்கு கிலி உண்டானது.
அவள் சொன்னதை யோசித்தான்.
இந்த ஆறரை வருடங்களும் பானுமதி மேல் வன்மம் கொண்டு- அவளை ஒவ்வொரு நாளும் நினைத்து அனல் மூச்சு விட்டானே தவிர, ச்சீ போ! என்று நினைவுகளை விரட்டியா விட்டான்?
இந்த ஜென்மத்தில் அவளை மறக்க முடியாது என்பது திண்ணமாகிவிட்ட பிறகு, எதற்கிந்த வீண் கௌரவம் என்று ஒரு முடிவெடுத்தவன், “பானுமதி இப்ப எங்க?” என்றான்.
“ஊட்டில” என்று ஆர்வமாக சொன்னவள், “ஒரு வாரம் கழிச்சி என் பொண்ணுக்கு வெக்கேசன் ஸ்டார்ட் ஆகுது. நான் அவளை கூட்டிட்டு அங்க தான் போகலாம்னு இருக்கேன். நீ விருப்பப்பட்டா எங்க கூட ஜாயின் பண்ணிக்கலாம்” என்றதும், அவன் காரை விட்டு இறங்கினான்.
“பதில் இன்னும் வரல?” என்று கத்தினாள்.
“என் லக்கேஜ்ல வைக்க ஜெர்கின்ஸ் செலக்ட் பண்ணப்போறேன்” என்றவன் பதிலுக்கு கத்தியதும், சிரித்துக்கொண்டே காரை தனது வீட்டை நோக்கி திருப்பினாள் அவள்.
*
அங்கு தன் தாயைக் கண்டதும் ஓடி வந்து அணைத்தாள் அந்த குறும்பி.
“மிஸ் யூ மம்மி” என்று குழைந்தாள்.
“நானும் தான்டா” என்று பதிலுக்கு குழைந்து, முத்தங்களால் குளிப்பாட்டினாள் ஆத்மீகா.
“ஒன் வீக் அப்பறம் நாம ஸ்விஸ் தான போறோம் மம்மி? என் ஃப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் சொன்னேன்” என்று இரு கைகளையும் அகல விரித்தாள் மகள்.
“இல்லடா, இந்த தடவை நாம போகப்போறது ஊட்டிக்கு” என்றதும்,
“நோ மம்மி, எனக்கு ஸ்விஸ் தான் போகணும்” என்று சிணுங்கினாள்.
“நெக்ஸ்ட் ஹாலிடேக்கு போகலாம்டா. இந்த தடவை ஒரு இம்பார்ட்டன்ட் பெர்சனை மம்மி உனக்கு காட்டப்போறேன்” என்றதும், யார் என்று யோசித்தாள் மகள்.
பின், பொறுமையின்றி, “யாரு மம்மி?” என்று சிணுங்கினாள்.
“சஸ்பென்ஸ்” என்று முத்தமிட்டவள், ஓட்டுநர் காத்திருக்கவும், அவளை பள்ளிக்கு வழியனுப்பினாள்.
*
அந்த ஒரு வாரமும் மிக உற்சாகமாய் இருந்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.
அவள் தாம்பரம் கிளைக்குச் சென்றபோது, நந்தினி அவளை சந்தேகமாகப் பார்த்தாள்.
இந்த ஆறரை வருடத்தில் நான்கு பேரை காதலித்து கழற்றி விட்டிருந்தாள் நந்தினி. யாரும் சித்தார்த்தன் அளவு அவளை ஏங்கவிடவில்லை. அவள் தான் ஏங்கவிட்டாள்.
ஈயாய் தன் மேல் மொய்த்து காரியத்தில் கண்ணாயிருந்தவர்களை, தனது பணத்தேவைக்கு அன்றி அவர்களை நெருங்கும் ஆர்வமே அவளுக்கு எழவில்லை.
அவளின் மனதில் அழகால் சிம்மாசனமிட்டவன் சித்தார்த்தன்.
அவன் எப்படி தன்னை வேண்டாம் என்கலாம் என்ற கோபம் அவளுள் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. தனது தோழி இந்துமதியிடம் நைச்சியமாக பேசி அவனின் முகவரியை பெற்றவள், இருமுறை அவனை நேரில் சந்தித்து பேசிவிட்டாள். ஆனால், அவன் மசியவில்லை.
அந்தக் கோபத்தில் அஞ்சலிதேவி தான் அவனது உண்மையான தந்தை வழி பாட்டி என்ற உண்மையைக் கூட அவள் சொல்லவில்லை. அவன் தன்னை ஏற்றால் சொல்லலாம் என்று கொடும்புத்தி கொண்டிருந்தாள்.
அவளுக்கு நிறுவனத்தில் ஆத்மீகா அடிக்கடி செய்யும் சோதனைகள், வகையான கிடுக்குபிடிகள் என்று அனைத்தும் கடுப்பாய் இருந்தது.
ஒருமுறை அவளிடம் நேரடியாகவே, “என்னை நம்புறதாவே உத்தேசம் இல்லையா மேடம்?” என்று கேட்டுவிட்டாள்.
அதற்கு விழுந்து விழுந்து சிரித்தாள் ஆத்மீகா கண்ணபிரான்.
“பாம்பை நம்பி எனக்கு பழக்கமில்ல மிஸ் நந்தினி” என்று கரியை கரைத்து அவள் முகத்தில் ஊற்றினாள்.
அவமானத்தில் கன்றிய முகமாய் வெளியேறியவள், ‘எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கிடைச்சா, உன் அகங்காரத்தை அடியோட அழிப்பேன்டி’ என்று வன்மமாய் கறுவினாள்.
அவளின் சூனிய பார்வைக்கு தயங்காது சூர்ய பார்வை வீசும் ஆத்மீகா, இன்று அனைவரின் மீதும் பனிப்பார்வை வீசியது அவளுக்கு குழப்பத்தை உண்டு பண்ணியது.
ஒரு கோப்பில் கையெழுத்து வாங்கும் சாக்கில், “இந்த தடவை என்ன மேடம் இருபது தேதிக்கு முன்னமே இங்க வந்துட்டீங்க?” என்று விசயத்தை கறக்க முயன்றாள்.
உள்ளம் மின்னலில் மலரும் தாழையாய் பூத்துக் குலுங்க இருந்தவள், அவளின் கேள்வியில் கிண்டலாய் அவளை அளந்தாள்.
“ஏன் மிஸ் நந்தினி இன்னைக்கு நான் இங்க வந்ததுல தேள் எதுவும் உங்களை கொட்டிட்டு இருக்கா?” என்று குட்டினாள்.
இவள் இப்படித்தான் என்று தெரிந்தும் கேள்விகேட்ட தனது மடத்தனத்தை நொந்தாள் நந்தினி.
அவ்வேளை ஆத்மீகாவின் ஐபோன் அழைத்தது. ஏற்றாள்.
எதிர்புறம் அவளின் ஃபேஷன் டிசைனர் சிந்து தான் எனவும், நந்தினியை ஊடுருவிக்கொண்டே பேசினாள்.
“சொல்லு பேபி, நான் கேட்ட மாதிரியே எனக்கும், என் பொண்ணுக்கும் ட்ரெஸஸ் பர்சேஸ் பண்ணியாச்சா? ஓ! ஓகே ஓகே. அது பிரச்சனையில்ல. ஊட்டி குளிரை ஒன் மன்த் மேனேஜ் பண்ணனும் அவ்வளவு தான். ஓகே பேபி. நீ உன் ஆள்கிட்ட கொடுத்தனுப்பிடு. என் வீட்டுல ரிசீவ் பண்ணிக்குவாங்க” என்று சொல்லிவிட்டு அலைபேசியை அணைக்க, நந்தினி தன் முகத்தை மாற்றாமல் இருக்க மிகவும் சிரமப்பட்டாள்.
அவளிடம் கையெழுத்துப் பெற்ற கோப்பை வாங்கிக்கொண்டு திரும்பும் போது, முகம் பத்ரகாளியானாள்.
“கேட்டுச்சா மிஸ் நந்தினி? ஊட்டி போறேன். அதான் இந்த முன்கூட்டிய தரிசனம். நீங்க ஊட்டி போயிருக்கீங்களா மிஸ் நந்தினி?” என்றதும், உடல் அதிர்ந்தது அவளுக்கு.
கண்களோ மாட்டிக்கொண்டாற் போல் தப்பிக்க அக்கம் பக்கம் பார்த்தது.
“அங்க சீசன் டைம் குளிரை தாக்கு பிடிக்கறது கஷ்டம் தான் இல்லையா? ஆனா சித்தார்த்தன் மாதிரி ஒரு ஆள் பக்கத்துல இருந்தா குளிர்பிரதேசம் கூட வெப்பமண்டலமா மாறிப்போயிடும். என்ன நான் சொல்றது சரி தான மிஸ் நந்தினி?” என்றதும், முதலில் பேந்த பேந்த விழித்தவள், பிறகு ஆமாமென்று தலையை லேசாக அசைத்தாள்.
அவ்வளவு தான் இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்தாள் ஆத்மீகா கண்ணபிரான். அவளை நெருங்கி கண்களோடு கண்கள் உற்று நோக்கினாள்.
“மிஸ்டர் சித்தார்த்தன் எனக்கு மட்டுமே சொந்தமானவரு. அவரை எதுக்காகவும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் நான். ஒருவேளை.. ஒருவேளை உங்க மனசோட ஏதோ ஒரு அடி ஆழத்துல அவர் மேல ஒரு சின்ன ஆசை இருந்தாக்கூட, அதை இப்பவே அடியோட அழிச்சிடுங்க மிஸ் நந்தினி. ஏன்னா நான் அழிச்சா நீங்க தாங்க மாட்டீங்க!” என்று எச்சரித்தாள்.
முதுகுத் தண்டு குளிர்ந்தது நந்தினிக்கு. இவள் எமனின் மகள் என்று ஒரு கணம் அவளுக்கு தோன்றியது. கோப்புடன் பதட்டமாக அங்கிருந்து வெளியேறினாள்.
தனது அறைக்கு வந்ததும், தண்ணீரை மடக் மடக்கென குடித்தாள். அவளால் ஆத்மீகா கண்ணபிரானின் வெளிப்படையான மிரட்டலை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
“சித்தார்த்தன் எனக்கானவரு. அவர்கிட்ட முதல் முதலா காதலை சொன்னவ நான். இவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா சித்தார்த்தனை நான் நினைக்கக்கூடாது- நெருங்கக்கூடாது சொல்லுவா? உன் ஆட்டத்துக்கு நிச்சயம் நான் ஒரு முடிவு கட்டுவேன் ஆத்மீகா கண்ணபிரான். சித்தார்த்தன் உனக்கு மட்டுமே சொந்தமானவரா? அந்த உன் நினைப்பை தகர்க்கறது தான்டி இனி என் லட்சியமே” என்று சூளுரைத்தாள்.
தொடரும்…
நந்தினி என்ன விதமான சூழ்ச்சி செய்வாள் என்று உங்களால் யூகிக்க முடிகிறதா நண்பர்களே?
லைக், கமெண்ட்ஸ் பண்ணினால் தான் அடுத்த எபி சீக்கிரம் வரும் நண்பர்களே!