அத்தியாயம் 15
காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை. அது ஓடுகின்ற வேகத்தில், ஆறாது என்று நினைத்த ரணங்களை மெல்ல மெல்ல ஆற்றிவிடும், சில கசப்பான நினைவுகளை மங்கச் செய்துவிடும். சில புதிய உறவுகளை ரத்த பந்தத்தையும் தாண்டி இதயத்தின் ஆழத்தில் வேரூன்றச் செய்துவிடும்.
அப்படித்தான் அந்த வீட்டிலும் மாற்றங்கள் நிகழ்ந்தன. சிற்பிகாவின் பழைய நினைவுகள் அனைத்தும் கால ஓட்டத்தில் முற்றிலுமாக மங்கிப்போக, வீதியோரம் கண்டெடுக்கப்பட்ட அந்தச் சிறுமி, இன்று அந்த வீட்டின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாகவே மாறிப்போனாள்.
மாரிமுத்து எனும் ஒற்றை மனிதனின் அரவணைப்பில், அவனது அசைக்க முடியாத அன்பில் அவளது உலகம் மெல்ல மெல்ல வண்ணமயமாகத் தொடங்கியது. தனக்கென ஒரு அடையாளமோ, உறவோ இல்லாத அந்தச் சூழலில், மாரிமுத்து யாரை என்ன உறவு சொல்லி அழைக்கிறானோ, அஅதையே அவளும் தனதாக்கிக்கொண்டாள். மாரிமுத்துவின் சொல்லே அவளுக்கு வேதமானது.
ஒருமுறை அன்பிற்கினியனை மட்டும் மாரிமுத்துவைப் போலவே அன்பு அத்தான் என்று அவள் உரிமையோடு அழைக்க, அதைக் கேட்டுவிட்ட மங்கம்மாவின் முகம் ரௌத்திரமாகி, "யார் யாருக்கு அத்தான்? இப்படிக் குழைந்து பேசி என் பேரனை மயக்குற வேலை எல்லாம் இங்கே வேண்டாம்!" என்று அவர் நஞ்சைக் கக்கினார்.
மங்கம்மாவின் குணம் தெரிந்த மாரிமுத்து, "அவர் பேசுவதையெல்லாம் ஒரு காதால் வாங்கி மறு காதால் விட்டுவிடு" என்று முன்பே சிற்பிகாவைத் தயார் படுத்தியிருந்தான். அதனால், எதையுமே சீரியஸாக எடுத்துக்கொள்ளாத சிற்பிகா, அந்தப் பேச்சிற்குப் பிறகு அன்பு அத்தான் என்று கூப்பிடுவதில் ஒருவித ஒட்டாத தன்மை தெரிவதைக் கண்டு, சட்டென்று அன்பு என்று மட்டுமே அழைக்கத் தொடங்கினாள்.
காலப்போக்கில் நீலகண்டன் மாமாவாகவும், அம்புஜம் அத்தையாகவும், பாக்கியம் அம்மாவாகவும் அவளுக்கு மாறிப்போயிருந்தனர். விதியால் தன் மகளைப் பறிகொடுத்த பாக்கியம், அந்தத் தாயுள்ளத்தின் ஏக்கங்களையெல்லாம் சிற்பிகாவிற்குச் செய்து அழகு பார்த்தார். ஆனால் மங்கம்மாவிற்கு மட்டும், சிற்பிகாவின் அந்த வசீகரமான அழகைக் காணும்போதெல்லாம், எங்கே தன் பேரன் அவளிடம் மனதைப் பறிகொடுத்துவிடுவானோ என்ற அச்சம் ஆழமாக இருந்தது. அவளைக் காணும் நேரமெல்லாம் வார்த்தைகளால் நிந்தித்துக் கொண்டே இருப்பார்.
மங்கம்மா வீட்டில் இருக்கும் நேரங்களில், மாரிமுத்து தன் செல்லத் தங்கையை அவர் கண்ணில் படாமல் பாதுகாப்பாகவே வைத்திருந்தான். சில நேரங்களில் மங்கம்மா அவளது சாதி, குலத்தைச் ஜாடைமாடையாக இழுத்துப் பேசினால், சிற்பிகா அமைதியாக இருக்கவில்லை.
"நான் என்ன ஜாதின்னு எனக்குத் தெரியாமல் இருக்கலாம்... ஆனா, நீங்க பேசுறது ரொம்பக் கீழ்த்தரமான ஜாதின்னு மட்டும் எனக்கு நல்லாத் தெரியுது!" என்று அந்தத் தஞ்சம் புகுந்த வீட்டிலேயே மங்கம்மாவின் கண்ணைப் பார்த்துப் பேசும் துணிச்சல் அவளுக்கு வந்திருந்தது.
தன் பேச்சிற்கு அவள் அழுது வடித்திருந்தால் மங்கம்மாவின் ஈகோ திருப்தி அடைந்திருக்கும்; ஆனால் அவளது அந்தத் தைரியமும், நேருக்கு நேர் பார்க்கும் நிமிர்ந்த பார்வையும் அவரை இன்னும் மூர்க்கமாக்கியது. சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் அவளை வீட்டை விட்டு அடித்துத் துரத்த வேண்டும் என்ற நச்சு எண்ணம் அவர் மனதில் கறுவிக்கொண்டிருந்தது.
ஆரம்பத்தில் அன்பிற்கினியனின் கறுத்த நிறத்தைக் கண்டு அவனிடம் ஒட்டாமல் எட்டி நின்றவளுக்கு, காலப்போக்கில் அவனது ஆழமான அக்கறை பல சந்தர்ப்பங்களில் புரியக் கூடியதாக இருந்தது
அதில் முதலாவதாக, அவளின் தமிழ் பேசும் திறன் குறைவாக இருக்க, அவள் பார்ப்பதற்க்கு வேறு நாலு ஐந்து வயதுத் தோற்றத்திலிருக்க எத்தனை வயது என்று தெரியாமல் மாரிமுத்து நேர்சரிக்கு சேர்ப்போம் என்று சொல்ல, அவளுக்கு மொழிமட்டுமே பிரச்சனை என்று கண்டு கொண்ட அன்பிற்கினியன், "மாரி அவள் நடந்துகொள்ளுறதைப் பார்த்தால் புத்திசாலி போல இருக்குடா.. நேற்று நீ சொல்லிக் கொடுத்த நேர்சரி ரைம்ஸ்சை அரைமணித்தியாலத்திலேயே ஒப்பிச்சா பார்த்தியா? அதனால் பள்ளிக்கூடமே சேர்க்கலாம்" என்றான்.
சிற்பிகாவிடம் "பள்ளிக்கூடம் போறிங்களா குட்டி" என்று கேட்க, மாரிமுத்துவும், அன்பிற்கினியனும் பள்ளிக்கூடம் போனபின் பாக்கியத்துடன் நேரத்தை செலவழித்தாலும் போரடிக்க உடனேயே தலையை சரியென்று அட்டிவிட்டாள்.
அன்பிற்கினியனும், மாரிமுத்துவும் அவளைப் பாடசாலைக்கு அனுப்புவோம் என்று பெரியவர்களுக்கு சொல்ல, நீலகண்டன் சரியென்று சொல்லிவிட்டார்.
"பொட்டைப் பிள்ளையை எதுக்கு பள்ளிக்கூடம் அனுப்பணும்? வீட்டு வேலை செஞ்சுட்டு அடுப்படியிலேயே கிடக்கட்டும்... காசாவது மிச்சமாகும்" என்று மங்கம்மா முட்டுக்கட்டை போட்டபோது, "ஆண்களை விடப் பெண்களுக்குத்தான் படிப்பு ரொம்ப முக்கியம்! அவளைப் படிக்க விடலைன்னா, நானே அவளைத் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் போவேன்" என்று அன்பு அடம் பிடித்தபோதுதான் அவனது பாசம் அவளுக்குப் புரியத் தொடங்கியது.
அன்பிற்கினியன் பாடசாலையைத் தவிர வேறு இடங்களுக்குச் செல்ல அம்புஜம் அனுமதிக்க மாட்டார் என்பதால், சிற்பிகா ஆசைப்படும் பொருட்கள் அனைத்தையும் அவளின் கண்ணைப் பார்த்து அவளைக் கேட்காமல் அவன் வாயிலாக வரவழைத்துக் கொடுக்க மகிழ்ந்தாள். அந்த நெருக்கத்தில் அவர்களுக்கு இடையே இருந்த இடைவெளி சிறுகச் சிறுகக் குறைந்து, ஒரு கட்டத்தில் மொத்தமாக மறைந்தே போனது.
அதன் பின்னான ஒரு நாளில், "மகனை விளையாடக் கூட வீட்டை விட்டு வெளியே அனுப்ப மாட்டேன்" என்று அம்புஜம் பிடிவாதம் பிடித்தார். அப்போது சிற்பிகாவே அன்பிற்கினியனுக்காக முன்வந்து,
"அத்தை, உங்க பிள்ளையைப் பாதுகாக்குறேன்னு சொல்லி அவனோட அழகான சின்னப் பிள்ளைத்தனத்தையே சிதைச்சுக்கிட்டு இருக்கீங்க. விதிப்படி எது நடக்கணுமோ அது நடந்தே தீரும்!" என்று மாரிமுத்து அவளுக்குச் சொல்லிக் கொடுத்த வார்த்தைகளை, அப்படியே வரி மாறாமல் அம்புஜத்திடம் சொன்னாள். அவளது அந்தத் தெளிவான பேச்சும் துணிச்சலும் அம்புஜத்தை யோசிக்க வைத்தது. அப்படித் தான் அன்பிற்கினியனின் கைதி வாழ்க்கைக்குச் சுதந்திரம் வேண்டிக் கொடுத்தாள் சிற்பிகா.
அதன் பிறகு அன்பிற்கினியன், மாரிமுத்து மற்றும் தென்னவனுடனான அவளின் பிணைப்பு இரும்பைப் போல இறுகியது. இதைக் கண்டும் மங்கம்மாள் ஒரு மூலையில் அமர்ந்து புழுங்கிக் கொண்டிருக்க, அவரைப் பொருட்படுத்த அங்கே யாருமில்லை.
வருடங்கள் யாரையும் எதிர்பாராமல் உருண்டோடின. சிற்பிகாவின் வருகைக்குப் பின், அம்புஜத்தின் மனதில் குடி கொண்டிருந்த அந்த இனம் புரியாத பயத்தை அவள் வெகுவாகக் குறைத்திருந்தாள். அன்பிற்கினியனும் இப்போது சுதந்திரமாகத் தன் கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்துகொண்டிருந்தான். அவனுக்கு இருபது வயது தொட்டிருந்த அந்த வேளையில்தான், அந்த ஜோதிடர் ரூபத்தில் அடுத்த இடி அவர்கள் குடும்பத்தைத் தேடி வந்தது.
எதேர்ச்சையாக ஒருநாள் அம்புஜம் அந்த ஜோதிடரைத் தெருவில் கண்டார். மகனின் ஜாதகத்தை மீண்டும் ஒருமுறை அவரிடம் காட்டிப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் சட்டென்று தோன்ற, அவரை அப்படியே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டார்.
அப்போது அன்பிற்கினியன் கல்லூரிக்குச் சென்றிருந்தான். வீட்டின் ஒரு ஓரத்தில் அமர்ந்து, மாரிமுத்து சிற்பிகாவிற்குத் தன் பாணியில் கணக்குப் பாடத்தில் இருந்த சந்தேகங்களைச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான். ஜோதிடரைக் கண்டவுடனேயே மாரிமுத்துவின் முகம் சுளித்தது.
"இந்த ஆள் இன்னைக்கு என்ன பூகம்பத்தைக் கிளப்பப் போறாரோ தெரியலையே!" என்று அவன் முணுமுணுத்ததைக் கேட்ட சிற்பிகா, "என்னண்ணா?" என்று மெல்லிய குரலில் கேட்டாள்.
"பொறுத்திருந்து பார்... நம்ம வீட்டு நிம்மதி திரும்பவும் காணாமல் போகப்போகுது. அத்தைக்கு வேற வேலையே இல்லை, எப்பப் பார்த்தாலும் ஜோசியர், ஜாதகம்னு இதையே பிடிச்சுத் தொங்கிட்டு இருக்காங்க. இவர் வந்துட்டுப் போனாலே நம்ம வீடு சாவு வீடு மாதிரி ஆயிடும். இனி நமக்கு நிம்மதி இருக்காது, நீ படி..." என்று எரிச்சலுடன் சொன்னான் மாரிமுத்து.
அம்புஜம் பதற்றத்துடன் மகனின் ஜாதகக் கட்டை எடுத்து ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு, அவரது பதிலுக்காகக் காத்திருந்தார். ஜாதகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த ஜோதிடரின் முகம் மாற மாற, அதுவரை தைரியமாகத் தன்னைக் காட்டிக்கொண்டிருந்த அம்புஜத்தின் கைகளும் நடுங்கத் தொடங்கின.
அங்கே அமர்ந்திருந்த நீலகண்டனும் படபடப்புடன், "என்ன ஜோசியரே... என் பிள்ளைக்குத் திரும்பவும் ஏதும் பிரச்சனையா?" என்று வினவினார்.
ஜோதிடர் ஒரு பெருமூச்சைத் தட்டிவிட்டு, "உங்க பையனோட தோஷம் இப்போ உச்சக்கட்டத்துக்குப் போயிருக்கு. அவன் உயிர் வாழ்வதே இன்னும் ஒரு வருஷம்தான் என்று கட்டம் சொல்லுது" என்று குண்டைத் தூக்கிப் போட, அம்புஜம் அப்படியே மயங்கி விழும் நிலைக்குச் சென்றுவிட்டார்.
பாக்கியம் பதறியபடி, "ஐயோ... இதுக்குத் தீர்வே இல்லையா?" என்று கேட்க, நீலகண்டனும் "என்ன பரிகாரம் என்றாலும் செய்கிறோம்" என்று உறுதி அளித்தார்.
ஜோதிடர் நிதானமாக, "இனி உங்க மகனைக் காப்பாற்றப்போவது ஒரு தாலிப் பலன் தான். நீங்க உங்க மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தால் அந்தப்பொண்ணோட மங்கல்ய பாக்கியம்தான் அவன் உயிரைப் பிடித்து நிறுத்த முடியும். அதுமட்டுமில்ல, இன்னொரு சிக்கலும் இருக்கு... இருபத்தைந்து வயதில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை நடந்து, அம்மாவுக்கும் மகனுக்குமான உறவு முற்றிலும் தடைப்படும் என்று ஜாதகம் காட்டுது" என்று சொல்லி அதிர்ச்சியூட்டினார்.
"இருபது வயதில் கல்யாணமா?" என்று நீலகண்டன் திகைக்க,
"காலத்தைக் கடத்தாமல் சீக்கிரம் முடிங்க... கல்யாணம் முடிஞ்ச அடுத்த நாளிலிருந்து, அந்தப் பொண்ணை நம்ம முருகன்கிட்ட, தன் கணவனோட உயிரைக் காத்துத் தான்னு வேண்டிக்கச் சொல்லுங்க. ஒரு மண்டலம் வரைக்கும், ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே நீராகாரம் எடுத்துக்கிட்டு, வெறும் சிமெண்ட் தரையில படுத்து, நம்ம மௌனமலை முருகனுக்கு விளக்கேத்தச் சொல்லுங்க. அவளால விளக்கேத்த முடியாத நாள்ல, உங்க பையனை விளக்குப் போடச் சொல்லுங்க" என்று அவர் கூறினார்.
"என் பேரனுக்குக் கல்யாணம் பண்ணி வைச்சா, அவனோட உயிருக்கு இருக்கிற கண்டம் நீங்கிடுமா? வேற ஏதும் சிக்கல் வருமா?" என்று நிதானமாக மங்கம்மா கேட்டார்.
அன்பிற்கினியனின் ஜாதகத்தை மீண்டும் ஒருமுறை கூர்ந்து ஆராய்ந்தவர், "உங்க பேரனுக்கு ரெண்டு தாலி யோகம்னு ஜாதகம் சொல்லுது..." என்று இழுத்தவர், எதையோ கணித்துவிட்டுத் தொடர்ந்து, "உங்க பேரனோட முதல் மனைவியோட தாலி நிலைக்காது. அவங்களோட இவர் வாழுற காலம் ரொம்பக் குறைவாத்தான் இருக்கும் போலத் தெரியுது. ஆனா, அந்தப் பெண் இறந்துடுவான்னு கட்டத்துல இல்லை" என்று நிதானமாகச் சொன்னார்.
"அப்ப சரி!" என்ற மங்கம்மா, அங்கே படித்துக் கொண்டிருந்த சிற்பிகாவைச் சற்றும் ஈவிரக்கமின்றிச் சுட்டிக்காட்டி, "இவ சரி வருவாளா?" என்று அவளையே பார்த்துக் கேட்டார்.
"அம்மா... அவ இன்னும் சின்னப் பொண்ணுங்கம்மா" என்று நீலகண்டன் பதறினார்.
"என் வீட்டுச் சோத்தைப் போட்டதுக்கு, இந்த நன்றியையாவது அவ காட்டட்டும்!" என்று மங்கம்மா துளியும் இரக்கமில்லாமல் வெடுக்கென்று சொன்னார்.
"என் தங்கச்சி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க மாட்டா!" என்று மாரிமுத்து ஆவேசமாகக் கத்தினான்.
அவனை ஏறிட்ட மங்கம்மா, "உன் தங்கச்சியால உன் அத்தான் உயிரைக் காப்பாத்த முடியும்ங்கிறதுதான் நிஜம். அப்படியும் அவ கல்யாணத்துக்குச் சம்மதிக்கலைன்னா, தாராளமா இந்த வீட்டை விட்டு வெளியே போகலாம்" என்று கறாராகச் சொன்னாள்.
யாரையும் பாராமல் நிமிர்ந்து நின்ற சிற்பிகா, "நான் இவங்களுக்குப் பயந்து சம்மதிக்கலை... அன்பு என் பிரண்ட் அதுக்காக சம்மதிக்கிறேன்" என்று எவ்விதப் பதற்றமுமின்றிச் சொன்னாள்.
"வேணாம்டா... சம்மதிக்காதடா!" என்று பாக்கியம் பதறினார்.
மகனின் உயிர் மட்டுமே முக்கியமென நினைத்த அம்புஜம், "அண்ணி... உங்க பொண்ணை ஒரு தாலி மட்டும் தானே கட்டிக்கச் சொல்றோம்? இந்த வீட்டுச் சோத்தைப் போட்ட நன்றிக்கடனுக்காக இதைக்கூட அவ செய்யக் கூடாதா?" என்று கேட்டார்.
அம்புஜத்தை நக்கலாகப் பார்த்த நீலகண்டன், "கடவுள் உனக்கு ஏன் பெண் குழந்தையைக் கொடுக்கலைன்னு இப்பதான் புரியுது" என்று சொல்லிவிட்டுப் பாக்கியத்திடம் திரும்பி, "பாக்கியம்... நீ உன் ரெண்டு பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு எங்கேயாவது போயிடும்மா. இங்கே இருந்தா உன் பொண்ணோட வாழ்க்கையைச் சிதைச்சுடுவாங்க" என்றார் ஆத்திரமாக.
"மாமா... நான் அன்பைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்" என்று மீண்டும் உறுதியாகச் சொன்னாள் சிற்பிகா.
மாரிமுத்து அவளை உலுக்காத குறையாக, "உனக்கு நிலைமை புரியுதாடி? உன்னைப் பலியாடாக்கிட்டு, காரியம் முடிஞ்சதும் உன்னைத் துரத்திவிட்டுட்டு அவருக்கு வேற கல்யாணம் பண்ணி வைப்பாங்க. உன் வாழ்க்கை என்ன ஆகும்னு யோசிச்சியா?" என்று கத்தினான்.
"நான் ஒண்ணும் அவர் மேல இருக்கிற காதல்ல இதைப் பண்ணலை. அவர் ஒண்ணும் அந்தளவுக்கு வொர்த் கிடையாது. மாமாவுக்காகவும், அவருக்காகவும் செய்யுற ஒரு சின்ன உதவி, அவ்வளவுதான். என்னால ஒரு உயிர் பிழைச்சதுன்னு இருக்கட்டுமே... நான் ஒன்றும் அவருகிட்ட வாழ்க்கை பிச்சை கேட்டு கெஞ்சுற ஜாதி இல்லை" என்று தெளிவாகப் பதிலடி கொடுத்தாள்.
அப்போது கல்லூரி முடிந்து அங்கே வந்த அன்பிற்கினியவன், "உன் கழுத்துல நான் ஒருமுறை தாலி கட்டிட்டேன்னா... அப்புறம் என் கட்டை வேகுற வரைக்கும் நீதான் என் பொண்டாட்டி!" என்று அதிகாரத்தோடு சொன்னான்.
"அதுக்கு உங்க பாட்டி விடமாட்டாங்க..." என்று சிற்பிகா எவ்விதச் சலனமும் இல்லாமல் சாதாரணமாகச் சொன்னாள்.
"அதைப் பத்தி எனக்குக் கவலையில்லை! நீ என் கையால தாலி கட்டிக்கச் சம்மதிக்கிற அந்த நொடியிலிருந்து, நான் சாகுற வரைக்கும் நீ மட்டும்தான் என் பொண்டாட்டியா இருப்பாய். அதுக்கு யார் குறுக்கே வந்தாலும், அந்த உறவு எனக்குத் தேவையில்லாத உறவுதான்!" என்று கறாராகவும் கடினமாகவும் சொன்னான் அன்பிற்கினியன்.
மாரிமுத்து இடையில் புகுந்து, "அத்தான்... நான் அவளை உங்களைக் கல்யாணமே பண்ணிக்க வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன். நீங்க என்னடான்னா..." என்று ஆத்திரமாகச் சொல்ல வர,
"எனக்குப் பொண்டாட்டியா அவ மட்டும்தான் வருவான்னு ஏற்கனவே நான் அவகிட்ட சொல்லிட்டேன்" என்று சிற்பிகாவின் கண்களை ஊடுருவிப் பார்த்தபடிச் சொன்னான் அன்பிற்கினியன்.
"என்னது?!" என்று அங்கே இருந்தவர்கள் அனைவரும் ஒருசேரத் திகைத்துப் போய் நின்றனர்.