வீட்டு வாசலில் தென்னவன் புல்லட்டை நிறுத்தியதும், அதன் பின்னால் அமர்ந்து வந்த அன்பிற்கினியன் மெதுவாகக் கீழே இறங்கினான். தாயை இழந்த துக்கம் அவனது முகத்தில் அப்பியிருக்க, கால்கள் தள்ளாட, அந்த வீட்டை ஒரு அந்நியனைப் போல வெறித்துப் பார்த்தபடி நின்றான்.
மகனின் வருகையை எதிர்பார்த்து வாசலையே பார்த்துக் கொண்டிருந்த நீலகண்டனுக்கு, அவன் வந்துவிட்டான் என்று தெரிந்ததும் கண்கள் கலங்கித் தவித்தன.
நீர் கோர்த்த கண்களோடு தவித்துக் கொண்டிருந்த தந்தையின் அருகில் சென்ற அன்பிற்கினியன், எவ்வித உணர்ச்சியையும் வெளிப்படுத்தாமல் அமைதியாக வந்து நின்றுகொண்டான்.
அவன் பின்னாலேயே வந்த அவனின் நண்பன் தென்னவன், மாரிமுத்துவிடம் மெதுவான குரலில், "ஏண்டா மாரி... அன்புக்கு மொட்டை போடணுமா? என்ன ஏதுன்னு கேட்டுச் சொல்லு" என்றான்.
மாரிமுத்துவிற்கும் சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாம் சரிவரத் தெரியவில்லை. அந்தக் குழப்பத்தில் வேறு வழியின்றி, 'எனக்கும் சரியாத் தெரியலைண்ணே... இருங்க, எங்க அம்மாகிட்டக் கேட்டுட்டு வாரேன்' என்று கூறிவிட்டு வீட்டுக்குள் ஓடினான்.
அங்கே மங்கம்மா ஆச்சியும், பாக்கியமும் ஊர் பெண்களோடு அமர்ந்து ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க, மாரிமுத்து தன் தாயின் அருகே குனிந்து, “அம்மா... அன்பு அத்தான் வந்திட்டாரு. அவருக்கு மொட்டை போடணுமான்னு தென்னவன் அண்ணா கேக்குறாரு” என்று இரகசியமாகக் கேட்டான்.
மாரிமுத்து சொன்னது மங்கம்மா ஆச்சியின் காதுகளிலும் விழ, 'என் பேரன் வந்திட்டானா? என் ராசா வந்திட்டானா?' என்று கதறியபடி எழுந்திருக்க முயன்றார்.
பாக்கியம் அவரை எழவிடாமல் கையைப் பிடித்துத் தடுக்க முயன்றார். ஆனால், தன் பலம் கொண்ட மட்டும் மகளின் கையை உதறித் தள்ளிவிட்டு, வாசலை நோக்கி வேகமாக ஓடினார் மங்கம்மா.
வேகமாக வாசலை நோக்கிப் போகும் மங்கம்மாவைப் பார்த்து பாக்கியம் திகைப்பாக நிற்க, மாரிமுத்து தன் தாயிடம் கோபமாக, 'அம்மா... பார்த்தியா? இந்த அம்மத்தா வேணும்னேதான் இப்படிப் பண்ணுது' என்று எரிச்சலோடு சொன்னான்.
“அவன் வந்தா நீ முன்னாடி போயிடாதே, அவன் ரொம்ப கோபக்காரன்” என்று இவ்வளவு நேரமும் சொல்லிக்கொடுத்ததற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருந்தவர், பேரன் வந்த செய்தி கேட்டவுடன் நாணிலிருந்து புறப்பட்ட அம்பாக எழுந்து ஓடிவிட்டார்.
அவர் இப்படி ஓடுவது ஏதோ உணர்ச்சி வேகத்தில் நடந்தது போலப் பாக்கியத்திற்குத் தெரியவில்லை. பேரனைத் தன் பிடிக்குள் கொண்டு வர அவர் வேண்டுமென்றே திட்டமிட்டுச் செய்வது போலவே தோன்றியது.
மாரிமுத்து தன் தங்கையிடம் விவரம் கேட்டு வரச் சென்றதைப் பார்த்திருந்த நீலகண்டன், வாசலையே பார்த்தபடி நின்றிருந்தார். அப்போது, ஆவேசமாக ஓடிவந்த தன் தாயை, அவர் மகனை நெருங்கவிடாமல் இறுகப் பிடித்துத் தடுத்தார்.
அங்குவந்த தன் பாட்டியைக் கண்டதும் அன்பிற்கினியவன் முகம் கோபத்தில் சிவந்தது. அங்கிருந்து உடனே கிளம்ப அவன் எத்தனிக்க, அவன் நண்பன் தென்னவன் மட்டும் அவன் கையை விடாமல் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டான்.
“ப்ளீஸ்டா... விடுடா என்னை!” என்று தென்னவனிடம் அன்பிற்கினியன் கத்தினான்..
அவன் நண்பனின் பிடியிலிருந்து தன் கையை விடுவிக்கப் போராடியபடி, “என்னை ஒரு கொலைகாரன் ஆக்காம விட்டுடு... நான் இங்கிருந்து போறேன்!” என்று கத்தினான்.
தென்னவன் அவன் கையை விடாமல், “டேய்... இங்க செத்துப் போயிக் கிடக்குறது உன்னைப் பெத்த அம்மாடா!” என்று உணர்ச்சி பொங்க தடுத்தான்.
“அது தெரியாமலா நான் இங்க வந்தேன்? நான் வீட்டுக்கு வர்றதுக்கு முன்னாடியே மாரிமுத்துகிட்டத் தெளிவாச் சொன்னேன்... எக்காரணம் கொண்டும் அவன் பாட்டியை என் கண்ணு முன்னாடி கொண்டு வந்திடாதேன்னு! ஆனா பாரு... நான் சொன்னதுக்கு அப்படியே எதிர்ப்பதமாச் செஞ்சு வச்சிருக்கான்!” என்று ஆத்திரத்தில் வெடித்தான் அன்பிற்கினியவன்.
மாரிமுத்து பதறியபடி அவன் அருகில் ஓடிவந்து, “அன்பு அத்தான்... நானும் எவ்வளவோ சொன்னேன். இவங்களும் சரிசரினு கேட்டுட்டு, இப்ப வந்து முன்னாடி நிக்கிறாங்க. நான் என்ன செய்யட்டும்?” என்று மங்கம்மாவைப் பார்த்துக் கோபப்பட்டான்.
அங்கே நீலகண்டனின் பிடியில் இருந்த மங்கம்மாவோ, “என்னை விடுடா... நான் என் பேரன்கிட்டப் போறேன்!” என்று மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்.
“அம்மா! என்ன பண்ணுறீங்க? அவன் தான் உங்களைப் பார்க்கக் கூடாதுன்னு சொல்றான்ல... உள்ள போங்கம்மா!” என்று நீலகண்டன் அதட்டினார்.
மங்கம்மாவின் கோபம் இப்போது மகன் பக்கம் திரும்ப, “ஏய்! என்ன என் வீட்டிலேயே நின்னுகிட்டு எனக்கு அதிகாரம் பண்ற? இது என் வீடு! நான் யாரைப் பார்க்கணும்னு சொல்ல நீ யாருடா?” என்று நீலகண்டனிடம் சண்டைக்குப் போனார்.
“கேட்டியா இல்லையா? இது அவங்க வீடாம்... அவங்க வீட்ல எனக்கு என்ன வேலை? நான் கிளம்புறேன்!” என்று அன்பிற்கினியன் ஆத்திரத்துடன் அங்கிருந்து நகர முயன்றான்.
“டேய்... நில்லுடா!” என்று நீலகண்டன் கத்தி, “உன்னைப் பெத்தவ கடைசியா ஆசைப்பட்டது உன் கையால ஒரு கொள்ளி வாங்கணும்னுதான்டா! அந்த ஒரு ஆசையைக்கூட உன்னால நிறைவேத்த முடியாதா? ஏண்டா... கட்டின பொண்டாட்டியைப் பறிகொடுத்துட்டு நிம்மதி இல்லாம நிக்குறவனை, இப்படிப் போட்டுப் படுத்துற?” என்று மகனிடம் ஆத்திரத்துடன் சீறினார் நீலகண்டன்.
அன்பிற்கினியவனும் தன் பங்கிற்கு"என்னால இங்க ஒரு நிமிஷம் கூட நிக்க முடியாது! காலெல்லாம் நெருப்புல நிக்கிற மாதிரி எரியுது... என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நீங்க இப்பதான் உங்க வாழ்க்கைத்துணையைத் இழந்திட்டு நிக்குறீங்க. ஆனா நான்... எட்டு வருஷத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் தொலைச்சிட்டு நிக்குறேன்! எனக்கு மட்டும் வலியில்லையா? உங்களுக்காகத்தானே இங்க வந்தேன்!” என்று அவனும் பதிலுக்கு ஆவேசப்பட்டான்.
“டேய்... அப்பாவும் புள்ளையும் சேர்ந்து ஒரு இறந்த ஆத்மாவை இப்பவாச்சும் நிம்மதியா இருக்க விடுங்கடா!” என்று தென்னவன் இருவரையும் அடக்கினான்.
நீலகண்டனுக்கு ஏற்கனவே தாயின் குணம் பிடிக்காது. பெத்த தாயாகப் போய்விட்டாரே என இத்தனை வருடங்கள் பல்லைக்கடித்துக் கொண்டு பொறுத்து போனவருக்கு இன்றைய அவரின் நடவடிக்கை சுத்தமாகப் பிடிக்கவில்லை என்பதால், சட்டென்று ஒரு முடிவுக்கு வந்தவராக,
“மாரி... உன் அத்தையைத் தூக்கிட்டுப் போயி கிழக்கால இருக்குற நம்ம வீட்டுல வைங்கடா. இனி நானும் என் பையனும் அங்கேதான் இருக்கப் போறோம். அது என் பொண்டாட்டியோட வீடு... அங்க யாரும் இது என்னோட வீடுன்னு உரிமை கொண்டாடிட்டு வர முடியாது! முக்கியமா என் பையனுக்கு வேணாம்னு தோணுற ஆளுங்க அங்க காலை வச்சா, நானே ஒட்ட நறுக்கிடுவேன்!” என்று ஆவேசமாகக் கூறிவிட்டு, தோளில் இருந்த சால்வையைத் தூக்கி உதறிப் போட்டுக்கொண்டு வேகமாய் வீட்டின் படலையை நோக்கி நடந்தார்.
அவரை ஒரு நிமிடம் வியப்புடன் பார்த்த அன்பிற்கினியன், மறுபேச்சின்றி அவர் பின்னாடியே வேகமாய் எட்டெடுத்து நடந்து சென்றான்.
மாரிமுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து முழிக்க, தென்னவனோ, “அப்பாவும் புள்ளையும் பிடிவாதத்துல பிறந்தவங்கடா. நீ அம்மாவைத் தூக்கச் சொல்லி, கார்ல அந்த வீட்டுக்குக் கொண்டு போக ஏற்பாடு பண்ணு" என்றான்.
தன்னை விட்டு மகனும் சென்றுவிட்டானா என்ற திகைப்பில் சிலையென நின்றுகொண்டிருந்த மங்கம்மாவைப் பார்த்த தென்னவன், “உங்களால ஏற்கனவே ஒருத்தன் வாழ்க்கை முடிஞ்சு போச்சு... அது பத்தாதுன்னு இந்த வயசான காலத்துலயும் இன்னும் என்னென்ன வம்பை இழுக்கலாம்னு பார்த்துட்டுத் தனியா நில்லுங்க! மாரி... நீ இந்த மனுஷி இருக்குற இடத்துல மூச்சுக் காத்தைக் கூட சுவாசிக்காதே... இது முழு விஷம்!” என்று கடுமையாகச் சொன்னான்.
பிறகு அங்கே நடந்த சண்டையைக் கண்டு அதிர்வுடன் நின்றுகொண்டிருந்த சொந்தங்களிடம், “எல்லாரும் அந்த வீட்டுக்குக் கிளம்புங்க" என்று கூறிவிட்டுப் பாக்கியத்திடம் திரும்பி, “அத்தை... அப்பாவோட ரெண்டு வேட்டியை எடுத்துக் கொடுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல ஐயர் வந்திடுவாரு. எனக்கு வேட்டி எடுக்க நேரமில்லை” என்றான்.
மனைவியிறந்த துக்கத்திலிருந்த அண்ணா வீட்டை விட்டு போய்விட்டாரே எனக் கலங்கியபடி நின்றிருந்த பாக்கியம் “நான் கொண்டு வர்றேன்... நீ போடா" என்று தழுதழுத்த குரலில் சொன்னார்.
பாக்கியத்துக்கு தன் அண்ணா இந்த முடிவை முதலே எடுத்திருந்தால் வீட்டில் நிம்மதி நிலைத்திருக்குமோ என்று தோன்றாமல் இல்லை.
மாரிமுத்து தன் நண்பர்கள் மற்றும் சில உறவினர்களின் உதவியோடு அம்புஜத்தின் இறந்த உடலை காரிலேற்றி மற்ற வீட்டுக்குக் கொண்டு செல்ல, மங்கம்மாவை வெறுத்த பார்வை பார்த்தபடி மாரிமுத்துவும், பாக்கியமும் அந்த இறந்த உடலுக்கு பின்னாலேயே கிளம்பிவிட்டார்கள்.
மங்கம்மாவின் வயதிலிருக்கும் ஒருத்திமட்டும் “சொந்த மருமகளின் பிணத்தைக் கூட நிம்மதியாக எடுக்கவிடாமல், என்ன இப்படிப் பண்ணிட்டாய்..” என்று ஆதங்கப்பட
பக்கத்திலிருந்த பெண்மணியோ “சில ஆட்களுக்கு வயது போகப் போகப் புத்திமழுங்குமாமே அது போலத்தான் இருக்கு” என்று நொடித்தார்.
“நாம என்னத்தக் கதைச்சு என்ன பிரியோசனம், தப்புச் செய்ததுக்கு தண்டனை அனுபவிக்கிற நேரம் வந்திட்டுப் போல.. அது தான் அன்பு மாதிரித் தங்கமான பேரனையும், நீலகண்டன் அண்ணா மாதிரி பாசமான பிள்ளை கூடவும் கூட இருக்கக் கொடுப்பினை இல்லை” என்று அவர்கள் பேசியபடி வீட்டிலிருந்து கிளம்பிவிட்டார்கள்.
மங்கம்மாவை மட்டும் தனியே அந்தப் பெரிய வீட்டில் விட்டு விட்டு எல்லோரும் கிளம்பிவிட்டார்கள்.
கொஞ்ச நேரத்துக்கு முதல் உறவுகளின் ஒப்பாரியில் சலசலத்துக்கொண்டிருந்த வீடு திடுமென நிசப்தம் ஆகிவிட்டது.
இத்தனை காலமும் தன்னை நேரில் பார்க்காததால் தான் தன் பேரன் கோபத்தை வளர்த்து வைத்திருப்பதாகவும், ஒருமுறை நேரில் பார்த்துவிட்டால் தன்மேல் அவன் வைத்திருக்கும் பாசம் கோபத்தை வென்றுவிடும் என்றும் மங்கம்மா கனவு கண்டு கொண்டிருந்தார்.
ஆனால், இன்று நடந்ததோ வேறு. பேரனைத் தேடிப் போன இடத்தில், பேரனோடு சேர்ந்து தன் மகனின் உறவும் அடியோடு அற்றுப்போனதை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
'இனி இந்த வீட்டில் எனக்கென்று யாரும் இல்லை' என்ற கசப்பான உண்மை உறைக்கவே, இடிந்துபோய் அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டார்.
***
அம்புஜத்தின் உடலைக் கொண்டு வந்து இந்தப் புதிய வீட்டில் வைத்த பின், நீலகண்டனின் தோழன் கருப்பண்ணா அவர் அருகில் வந்து நீலகண்டனுடன் அமர்ந்து, “எதுக்குடா உனக்கு இவ்வளவு கோபம்? உன் அம்மாவைப் பத்திதான் உனக்குத் தெரியுமே... தேவையில்லாம செத்த ஆத்மாவை அலக்கழிச்சு எதுக்கு இங்க கொண்டு வந்த?” என்று மெல்லக் கடிந்து கொண்டார்.
நீலகண்டன் தன் மனைவியின் முகத்தையே பார்த்தபடி, ஒருவிதமான சோகப் புன்னகையோடு, “என் பொண்டாட்டிக்கு நிம்மதியான மோட்சம் கிடைக்கணும்ல... அதுக்குத்தான் இங்க வந்தேன். இப்ப என் மனுசி, ‘மகனோட நீ மட்டும் சந்தோஷமா இருக்கப் போறியா?’ன்னு என்னைப் பார்த்துப் பொறாமைப்பட்டுக்கிட்டே நிம்மதியா மேல போவா" என்றார்.
கருப்பண்ணாவும் அம்புஜத்தின் சாந்தமான முகத்தில் பார்வையைப் பதித்தபடி, “உன் மகன்... அவளை ஒரு தடவையாவது வந்து பார்த்திருக்கலாம்டா" என்று வருத்தப்பட்டார்.
அவன் வாழ்க்கைத்துணையைத் தொலைச்சுட்டு இன்னைக்கு அநாதையா நிக்கிறதுக்கு, செத்துப் போன இவளும் ஒரு காரணம்தானேடா? இவ மாமியாரை அடக்கி வச்சிருக்கணும்... இல்லையா, எனக்கோ என் மகனுக்கோ ஒரு போன் பண்ணியாவது உண்மையச் சொல்லியிருக்கணும். அது எதுவுமே செய்யாம, ஒரு தப்பு நடக்கும்போது கைகட்டி வேடிக்கை பார்த்தாளே... அந்த மௌனமும் ஒரு குற்றம்தானே? அப்படியிருக்க அவன் எப்படிடா மன்னிப்பான்?
நான் தாலி கட்டின பொண்டாட்டி, பெத்த அம்மான்னு பாவம் பார்த்து, பாவம் செஞ்சவங்களோடயே இத்தனை காலமா குப்பை கொட்ட வேண்டியதாப் போச்சு. அவனாவது அவங்க முகத்தைப் பார்க்காம நிம்மதியா இருக்கட்டும்னுதான் அன்னைக்கு விட்டுட்டேன். இனிமே எவன் வயலையாவது குத்தகைக்கு எடுத்து, விவசாயம் பார்த்துக்கிட்டு என் பையனோட மீதி காலத்தைக் கழிச்சிருவேன். அந்த வீட்டை விட்டு வெளிய வந்த பிறகு எனக்கும் இப்ப ஒரு பெரிய விடுதலை கிடைச்ச உணர்வு இருக்குடா கருப்பண்ணா!" என்று தன் மனக்கிடக்கையைக் கொட்டினார் நீலகண்டன்.
பக்கத்திலிருந்தே இதைக் கேட்டுக்கொண்டிருந்த அன்பிற்கினியனுக்கு, தன் தந்தை தன்னை எவ்வளவு ஆழமாகப் புரிந்து வைத்திருக்கிறார் என்பது புரிந்தது. அதனால்தான், தாயைப் பார்க்க வா என்று அவர் ஒருமுறை கூடத் தன்னை அழைக்கவில்லை என்பதை உணர்ந்து அவன் நெஞ்சம் நெகிழ்ந்தது.
புரோகிதர் வந்து இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினார். அன்பிற்கினியனோடு சேர்ந்து தென்னவனும் மொட்டை போட்டுக்கொண்டான். தென்னவன் ஏற்கனவே சிறுவயதிலேயே தாயையும், நான்கு ஆண்டுகளுக்கு முன் தந்தையையும் பறிகொடுத்தவன் என்பதால், நண்பனின் துயரம் அவனுக்குத் தன் சொந்தத் துயரமாகவே இருந்தது.
கிரியைகள் தொடங்குவதற்கு முன், உறவினப் பெண்கள் அம்புஜத்தின் உடலை நன்னீராட்டி, மஞ்சள் பூசி, மங்கலமாகக் குங்குமம் இட்டு, பட்டுடுத்தி அலங்கரித்தார்கள். தாயின் மேல் மலையளவு கோபம் இருந்தாலும், மகாலட்சுமி போலக் கலை குறையாமல் உயிரற்றுக் கிடக்கும் அவர் உடலைப் பார்த்தபோது, அன்பிற்கினியனின் கண்கள் அவன் அறியாமலே கலங்கித் துடித்தது.
அடுத்தடுத்து கிரியைகள் மளமளவென்று தொடங்கி, வாய்க்கரிசி போடுதல், பந்தம் பிடித்தல் எனச் சடங்குகள் ஒவ்வொன்றாக நிறைவேறி, அந்த உடலைச் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லும் நேரமும் வந்தது.
குடும்பத்தார்கள், உறவினர்கள், அயலவர்கள் என அனைவரும் கூடி ஒப்பாரி வைக்க, தாரை தப்பட்டைகள் முழங்க, மலர் தூவியபடி அம்புஜத்தின் இறுதி யாத்திரை தொடங்கியது.
மயானத்தில் தாயின் உடலைத் தகனம் செய்யும் தருணம் நெருங்கிய பொழுது, இனி ஒருபோதும் தன் தாயின் முகத்தை நேரில் காணவே முடியாது என்ற கசப்பான உண்மை உறைக்க, அன்பிற்கினியன் அடக்கி வைத்திருந்த துக்கம் அணை உடைந்த வெள்ளமாகப் பெருகியது. அவன் தேம்பித் தேம்பி அழுவதைக் கண்டு, தென்னவனும் மாரிமுத்துவும் அவனுக்குத் துணையாக நின்று ஆறுதல் சொன்னார்கள்.
நீலகண்டனோ, மனைவியின் சிதைக்கு அருகில் சென்றால் தன் மனம் தாளாது என்று அங்கிருந்த மண்டபத் தூணைப் பிடித்தபடி தள்ளி நின்றுகொண்டார். அம்புஜம் நோய்வாய்ப்பட்டது முதல் எண்ணற்ற வைத்தியர்களைப் பார்த்தும், அவர் உடலுக்கு என்ன குறை என்று கண்டறியவே முடியவில்லை. அவர் பாயிலேயே படுத்தபடி அனுபவித்த கஷ்டத்தைப் பார்க்க முடியாமல், 'இப்படித் துடிக்காமல் அவள் உயிர் போய்ச் சேர்ந்தால் கூடத் தேவலையே' என்று அவர் பலமுறை எண்ணியதுண்டு. ஆனால், இன்று அது நிஜமாக நடக்கும்போது, 'தன் மனைவி அசைவில்லாவிடினும் உயிருடன் அந்தப் பாயில் படுத்திருக்கக்கூடாதா?' என்று அவர் மனம் ஏங்கித் தவித்தது.
ஒரு ஆத்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்றி, அந்த ஆன்மாவை விண்ணுலகிற்கு அனுப்பி வைத்துவிட்டு அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
வீட்டு வாசலில் நின்றிருந்த பாக்கியம் கைகளைப் பிசைந்தபடி பதற்றத்துடன், “அண்ணே... அம்மாவுக்கு ரத்த அழுத்தம் கூடி மயங்கி விழுந்துட்டாங்களாம். நம்ம வீட்டுப் பக்கத்துல இருக்குறவங்க ஆஸ்பத்திரியில சேர்த்துட்டு இப்ப வந்து சொன்னாங்க" என்று தயக்கத்துடன் சொன்னார்.
நீலகண்டன் எவ்விதச் சலனமும் இல்லாமல், “இதை என்கிட்ட எதுக்குச் சொல்ற? உன் அம்மா தானே... நீ வேணா போய்ப் பார்" என்று கறாராகச் சொல்லிவிட்டு, தலைக்குத் தண்ணி ஊற்றிக் கொள்ளக் கிணற்றடிக்குச் சென்றார்.
மாரிமுத்துவோ, “இது மாமாவை வீட்டுக்கு வரவழைக்க ஏதாச்சும் ஒரு நாடகமாத்தான் இருக்கும். மாமா போகலைன்னா நீயும் போகாதே" என்று தாய்க்கு உத்தரவிட்டான். பிறகு, “மாமாவுக்குச் சுடுதண்ணி வைக்கச் சொன்னேனே... வச்சியா?” என்று கேட்டான்.
“அச்சோ... அம்மா ஆஸ்பத்திரியிலன்னு சொன்னவுடனே பதற்றத்துல அதை மறந்திட்டேண்டா!” என்றார் பாக்கியம்.
“நீங்க எது முக்கியமோ அதை மட்டும் பாருங்கம்மா. தேவையில்லாததை யோசிக்காதீங்க. இங்க காரியம் முடிஞ்சதும் அப்படியே நம்ம வீட்டுப் பக்கம் கிளம்ப வேண்டியதுதான். எனக்குத் தெரியாம நீங்க எங்கேயும் போறதில்லை, சரியா?” என்று கடுகடுப்புடன் சொன்ன மாரிமுத்து, தென்னவனிடம் வந்தான்.
“அண்ணே... அம்மா சுடுதண்ணி வைக்க மறந்திட்டாங்களாம்" என்று அவன் சொல்ல, தென்னவனோ அன்பிற்கினியனைக் காட்டி, “அவன் அப்பாவுக்காக அடுப்பு மூட்டிச் சுடுதண்ணி வச்சுக்கிட்டு இருக்கான் பாரு" என்றான்.
கிணற்றுக்கட்டில் அமர்ந்து சுடுதண்ணீருக்காகக் காத்திருந்த நீலகண்டன், மாரிமுத்துவைப் பார்த்து, “மாரி... உங்க அம்மா கிளம்பிட்டாளா?” என்று கேட்டார்.
“நான் போகக்கூடாதுன்னு சொல்லிட்டேன் மாமா" என்று கூறிவிட்டு அவர் பக்கத்தில் அமர்ந்தான் மாரிமுத்து.
“டேய்... நீயுமாடா?” என்று தலையில் அடித்துக்கொண்ட தென்னவன், “இங்க இருக்குற இந்த ரெண்டு பேரையே என்னால சமாளிக்க முடியல... நீயும் அவங்க கூடச் சேராதடா. பாவம் அத்தை... அவங்க அம்மாவைப் பார்க்க அனுப்பி விடு" என்றான்.
“முடியாதுண்ணே! அந்தக் கிழவிக்கு நாமெல்லாம் இருக்கோம்ங்கிற திமிர்லதான் இவ்வளவு நாளா அகம்பாவம் பிடிச்சுத் திரிஞ்சுது. இப்பவாவது காசு முக்கியமில்லை, உறவுதான் முக்கியம்னு அதுக்கு புரியட்டும். அப்புறம் பாத்துக்கலாம்" என்று உறுதியாகச் சொன்னான் மாரிமுத்து.
“காலம் போன காலத்துல உன் அம்மத்தா திருந்தப் போகுதாக்கும்? சின்ன வயசுல இருந்தே எல்லாரையும் உருட்டி மிரட்டி வேலை வாங்கி சொர்ணாக்கா மாதிரி வாழ்ந்த மனுஷிடா அது!” என்றான் தென்னவன்.
“அப்படியே காலம் முழுக்க வாழ்ந்திட முடியுமாண்ணே? ஒரு நாள் உச்சத்துல இருக்குறவன் கீழ விழும்போது தூக்கிவிட ஒரு மனுஷக் கை வேணும்ல... அதை அந்த மனுஷி உணரட்டும்" என்ற மாரிமுத்துவின் வார்த்தைகளைக் கேட்ட தென்னவன், “போங்கடா நீங்களும் உங்க பிடிவாதமும்!” என்று விட்டு நண்பனிடம் சென்றான்.
அன்பிற்கினியன் எல்லாரையும் விட முன்னதாகவே புல்லட்டில் வந்து தலைக்குத் தண்ணீர் ஊற்றிவிட்டு, பிறகு தன் தந்தைக்காக அடுப்பு மூட்டிச் சுடுதண்ணி வைத்துக் கொண்டிருந்தவன்"என்னடா விஷயம்?” என்று கேட்க,
தென்னவன் விபரத்தைச் சொல்லும் பொருட்டு"உன் அப்பத்தா ஆஸ்பத்திரியிலாம்... ஆனா உங்க அப்பா போகமாட்டேன்னுட்டாரு. இந்த மாரி அத்தையையும் போகவிடாம தடுத்துட்டான். கேட்டா ‘உன் அப்பத்தா திருந்தணும்’னு சொல்றான். நீ என்ன நினைக்கிற? அவங்க திருந்துவாங்களா?” என்று கேட்டான் தென்னவன்.
“திருந்தலாம் வேண்டாம்டா... யாரும் இங்க மேலேயும் இல்லை, கீழேயும் இல்லை. எல்லாரும் வெறும் மனுஷ ஜென்மம்தான்ங்கிறதை புரிஞ்சுக்கிட்டா போதும். ஆனா, அது அவங்களுக்கு இந்த ஜென்மத்துல புரியும்னு எனக்குத் தோணல" என்றான் அன்பிற்கினியன் விரக்தியுடன்.
“விடுடா... எவனாவது வந்து சம்மட்டியால அடிச்சு புரிய வைப்பான்" என்ற தென்னவன் மெதுவான குரலில், “உங்க அப்பா ரொம்ப உடைஞ்சு போயிட்டார் போல... விடியல்ல இருந்து எதுவும் சாப்பிட்ட மாதிரியும் தெரியல" என்றான்.
“அம்மா ஓடி ஆடி வேலை செஞ்சப்ப இவருக்கு எல்லாமே அவதான். அப்புறம் அவ படுத்த படுக்கையானதும் அந்த வலியப் பார்த்து இவர் மனசே வெறுத்துப் போயிட்டார். இப்ப அவ இல்லவே இல்லைன்னு நினைக்கும்போது பாவம் தான்...” என்றான் அன்பு.
“நாம பாத்துக்கலாம்டா" என்று தென்னவன் ஆறுதல் சொல்ல,
அன்பிற்கினியனோ, “யாராலயும் அவங்க வாழ்க்கைத்துணையோட இழப்பை ஈடு கட்ட முடியாதுடா தென்னவா!” என உணர்சியற்ற குரலில் சொல்லும் பொழுது, அவன் நெஞ்சுக்குள்ளும் ஒருத்தியின் நீங்காத நினைவுகள் ரணமாய் அலைமோதிக் கொண்டிருந்தன.