அத்தியாயம் 22
கடந்த காலத்தின் இனிமையான பக்கங்களை மீட்டிப் பார்த்த அந்த உள்ளங்களுக்கு, சிற்பிகாவை மங்கம்மா வீட்டை விட்டுத் துரத்திய அந்த ரணமான நாளை நினைத்துப் பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை.
நிகாரிகாவின் வார்த்தைகள் மூலம் அந்தத் துயரச் சம்பவத்தைக் கேட்டபோதே அன்பிற்கினியனின் இதயம் ரத்தம் வடித்தது. அதன் பிறகு அவள் கடந்து வந்த இருண்ட நாட்களை மீண்டும் எண்ணிப் பார்க்க அவனுக்குத் துணிவில்லை. அவள் சொன்ன சில நிமிடக் கதையே அவனது உள்ளத்தை நிலைகுலையச் செய்யப் போதுமானதாக இருக்க, அந்தத் தீயாய் சுடும் நினைவுகளுக்குள் மீண்டும் நுழைய அவன் பெரும் அச்சம் கொண்டான்.
பிறப்பில் நிகாரிகாவாக இருந்து, வளரும் பொழுது சிற்பிகாவாக மாறி, மாரிமுத்து, தென்னவன் மற்றும் அன்பிற்கினியனுக்கு ‘அழகு’ என்று செல்லப்பெயருடன் இதயம் கவர்ந்தவள், மீண்டும் காலத்தின் கட்டாயத்தால் நிகாரிகாவாக மாறிய அந்த மாற்றத்தை நினைக்கும் பொழுது அன்பிற்கினியனின் கண்களின் ஓரத்தில் ஒரு துளி ஈரம் எட்டிப்பார்த்தது.
விதியின் சதியால் ஒரு பணக்கார வீட்டு இளவரசியாகக் காசில் புரள வேண்டியவளை, ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லாமல் திண்டாட வைத்த அந்தத் தலைவிதியை நினைத்து அவன் நெஞ்சம் விம்மியது.
அன்பிற்கினியன், தென்னவன், நிகாரிகா ஆகிய மூவரும் அந்தப் பழைய நினைவுகளிலிருந்து சட்டென்று மீள முடியாமல், சிறிது நேரம் மௌனத்தில் அமிழ்ந்து போயிருந்தனர்.
நிகாரிகாவின் நிலையும் அத்தனை ஒன்றும் மகிழ்ச்சிகரமாக இருக்கவில்லை. தன் ஏழு வயது வரை துன்பமே அறியாமல் வளர்ந்தவளுக்கு, அதன் பிறகு ஒரு நாள்கூட நிம்மதி என்பது வாய்க்கவில்லை.
அன்பிற்கினியனோடு அவள் வாழ்ந்த அந்த நாற்பது நாட்களுமே, மங்கம்மாவிற்குத் தங்கள் உறவு தெரியவந்தால் என்ன நடக்குமோ எனும் பயத்திலேயே கழிந்துபோனது. அந்தப் பயம் அவளது உள்ளத்தை முழுமையாக ஆக்கிரமித்திருக்க, அப்பொழுதும் ஒரு நிம்மதியான சந்தோஷ வாழ்க்கை அவளுக்கு அமையவில்லை.
விதி அவளை மீண்டும் தன் தந்தையிடம் கொண்டு சேர்த்த பிறகும்கூட, அவள் இதயம் அன்பிற்கினியனைச் சுற்றியேதான் கிடந்தது. தான் இல்லாவிட்டால் அவன் என்ன ஆவானோ? நிச்சயம் அவன் மறுமணம் செய்யமாட்டான் என அவன் மீது கடலளவு நம்பிக்கையினாலும் அவனது வாழ்க்கை அப்படியே தனித்துப் போய்விடுமோ என்ற எண்ணம் அவள் மனதில் ஒரு முள்ளாக எப்போதும் உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த எண்ணம் அவளைச் சற்றும் நிம்மதியாக இருக்க விடவில்லை.
ஆரியன் பிறந்த பிறகு, அவனது உருவம் அவளைப் பிரதிபலித்தாலும், அவனது குணமோ அச்சு அசலாகத் தந்தையுடையது. பிடித்தால் பிடிதான்... அவன் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்ற அந்தப் பிடிவாதம் அப்படியே அன்பிற்கினியனுடையது. தன் மகனின் இந்த முரட்டுத்தனமான சுபாவத்தைக் கண்டு, ‘எங்கே தன் குழந்தையைத் தன் பிறந்த வீட்டினருக்குப் பிடிக்காமல் போய்விடுமோ?’ என்ற பயம் ஒரு தாயாக அவளை எப்போதும் அலைக்கழித்துக் கொண்டிருந்தது.
எல்லாவற்றிற்கும் மேலாக, தன் ரத்தமே தன்னை ‘அத்தை’ என்று அழைக்கும் அந்த வலி... அது அவளது வாழ்க்கையில் நிம்மதி என்பதையே மொத்தமாகத் துடைத்தெறிந்துவிட்டது.
தன்னுடைய வாழ்க்கையைக் காலம் எப்படித் திசைமாற்றி அடித்துவிட்டது என்ற பழைய நினைவுகளிலிருந்து மெல்ல நிகழ்காலத்திற்கு மீண்ட நிகாரிகா, ஒரு நீண்ட பெருமூச்சை விட்டுத் தன்னை நிதானப்படுத்திக் கொண்டாள்.
அன்பிற்கினியனுக்கோ வண்டியைத் தொடர்ந்து செலுத்த முடியாமல் கைகள் நடுங்கின. அவன் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தினான். அவனது கைகள் ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றிக்கொண்டிருக்க, கண்கள் சிவந்து போயிருந்தன.
“என்னடா..” என்று காரின் பின் இருக்கையில் இருந்த தென்னவன், அன்பிற்கினியனின் தோளைத் தொட்டு மென்மையாகக் கேட்க, அவனது கை நடுக்கம் ஸ்டீயரிங்கில் அப்பட்டமாகத் தெரிந்தது.
அன்பிற்கினியனின் பார்வை எதிரே இருந்த வெட்டவெளியையே வெறித்துக் கொண்டிருந்தது. அவன் கண்களில் நீர் முட்டி நிற்க, ஒரு நீண்ட பெருமூச்சோடு தென்னவனைத் திரும்பிப் பார்த்தான்.
“எல்லாம் என்னால முடியும்னு நினைச்சேன்டா... ஆனா என்னைத் தப்பா கணக்குப் போட்டு, அவ வாழ்க்கையோடு விளையாடிட்டேன்னு இப்போ புரியுதுடா" என்று சொல்லும்போதே அவனது குரல் உடைந்தது.
அன்பிற்கினியன் பக்கத்திலிருந்த நிகாரிகாவிற்கோ, அவன் ஊரில் இல்லாத தைரியத்தில் மங்கம்மா ஆடிய அந்த வஞ்சக ஆட்டம் கண்முன் விரிந்தது. பாட்டி மங்கம்மா, சிற்பிகாவின் கழுத்தைப் பிடித்து ஆவேசமாக வெளியே தள்ளிய அந்த ஒரு நொடி... "போடி வெளியே! சொத்துக்காக என் பேரனை மயக்கப் பார்க்கிறியா?" என்று அவர் கத்திய அந்த அசிங்கமான வார்த்தைகள் இப்போதும் அவள் காதுகளில் ரீங்காரமிட்டன.
அந்தத் தள்ளலில் சிற்பிகா மண்கரையில் போய் விழுந்ததும், கைகள் உரசி ரத்தம் கசிந்ததும், அவமானம் தாங்காமல் அவள் கதறியதும்... ஒரு கணவனாய் அவளைக் காக்க வேண்டியவன் அந்த இடத்தில் இல்லையே என்ற வேதனை அவள் நெஞ்சைக் குடைந்தது.
மண்ணில் விழுந்து கிடந்தவளின் கழுத்தில் இருந்த தாலியைப் பறிக்க மங்கம்மா முயன்றதும், அம்புஜம் அதை கையாலாகாதத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்ததும், இறுதியில் தன் தாலியை மங்கம்மா பறித்துவிட்டுக் கெக்கலித்துச் சிரித்ததையும் நிகாரிகாவால் மறக்க முடியுமா என்ன? அவள் அந்த நினைவில் முகம் கசங்கி அமர்ந்திருந்தாள்.
அன்று வீட்டுக்கு வந்த அன்பிற்கினியனிடம் மங்கம்மா, “அவள் யாரோ பணக்காரனுடன் ஓடிவிட்டாள்” என்று சொன்னதையும், தன் தாய் தன் முகத்தைப் பாராமல் குற்ற உணர்வுடன் நின்றதையும் பார்த்தபோதே, மங்கம்மா ஏதோ பெரிய சூழ்ச்சி செய்து அதில் வெற்றி பெற்றுவிட்டார் என்று அவர் முகத்தில் தெரிந்த வெற்றிக்களிப்பிலேயே அவன் கண்டுகொண்டான்.
“அன்னைக்கு நான் மட்டும் அங்கே இருந்திருந்தா, அவ கழுத்தைப் பிடிச்சுத் தள்ளின அந்தப் பாட்டியோட கையை அப்படியே பிடிச்சுத் தடுத்திருப்பேன்டா. ஆனா, நான் வர்றதுக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. இவளைத் துரத்திட்டு, அவளா யாரோ பணக்காரனுடன் ஓடிப் போயிட்டான்னு வாய் கூசாமல் சொன்ன அந்தப் பொய்யை நான் நம்புவேனா? அதான், அவளுக்கு இடமில்லாத அந்த வீட்டில் எனக்கும் இடம் வேண்டாம்னு எல்லாத்தையும் மொத்தமாக முடிச்சுட்டு வந்தேன்" என்ற அன்பிற்கினியன் தன் தலையை ஸ்டீயரிங்கில் சாய்த்துக் கொண்டு கண்கலங்கினான்.
தென்னவனால் அவனைத் தேற்ற முடியவில்லை. நிகாரிகாவிற்கும் அவனைத் தேற்ற ஏனோ மனம் வரவில்லை. அதனால் அவளும் இருக்கையில் அப்படியே சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.
தென்னவன் சூழலை மாற்ற எண்ணி, “அன்பு, வண்டியை நான் ஓட்டுறேன். நீ பின்னாடி வந்து உட்காரு. உன் பையன்னு தெரிஞ்ச பிறகு ஆர்யனைப் பார்க்கணும்னு உனக்கு ஆசையா இருக்கும்ல? வாடா...” என்று அவனைத்திசை திருப்பினான். அப்பொழுதுதான் அன்பிற்கினியன் முழுமையாக நிகழ்காலத்திற்குத் திரும்பினான்.
“நானே ஓட்டுறேன்டா...” என்று ஸ்டீயரிங்கை இறுக்கமாகப் பற்றிக்கொண்டான் அன்பிற்கினியன். பக்கத்தில் அமர்ந்திருந்த நிகாரிகாவின் கையை மென்மையாக அழுத்திக் கொடுத்தவன், அவள் காதுகளில் மட்டும் விழும்படி, “எனக்காகத் திரும்ப வந்ததுக்கு தேங்க்ஸ் அழகு” என்றான். அவனது குரலில் அத்தனை நாள் பிரிவின் ஏக்கமும், ஒரு சிறு நன்றியும் கலந்திருந்தது.
ஆனால், அதற்குப் பதிலளித்த நிகாரிகாவின் குரலில் ஒருவிதமான எச்சரிக்கை கலந்திருக்க, “ஆரியனைப் பற்றி இப்போ யார்கிட்டயும் சொல்லாதீங்க...” என்று அவள் கெஞ்சலாக வேண்டுகோள் விடுக்க, அன்பிற்கினியனின் முகம் சட்டென்று மாறியது.
அவனது பிடி ஸ்டீயரிங்கில் இறுகியது. “ஏன்? என்னிடம் பிள்ளையைக் காட்டுற மாதிரி காட்டிட்டு, அப்படியே அவனைத் தூக்கிட்டுப் போய் வேறு எங்கேயாவது மறைச்சு வைக்கப் போறியா?” என்று அவனது சந்தேகம் எரிச்சலாக வெளிப்பட்டது.
“ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... எனக்கு இப்போ அவன் என் பிள்ளைன்னு மத்தவங்களுக்குத் தெரியுறதுல உடன்பாடு இல்லை. உங்களுக்கு அவனைத் தெரிஞ்சிருக்கணும்னு மட்டும்தான் இங்க கூட்டிட்டு வந்தேன். அவனை மாதிரி இன்னொரு பிள்ளையும் நம்ம கூட இருந்திருக்கும்... அதை இல்லாமல் செய்தவங்களைச் சும்மா விடச் சொல்றீங்களா?” என்று நிகாரிகா தன் வேதனையை வெளிப்படுத்த, அன்பிற்கினியன் சற்று அடங்கினான். தன் வயிற்றிலிருந்து கருவிலேயே காணாமல் ஆக்கப்பட்ட தன் இன்னொரு குழந்தையின் மரணத்திற்கு நிகாரிகா ஒரு கணக்கு வைத்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்தது.
“நீ என்னமோ பண்ணு... ஆனா என்னை உன்கிட்ட இருந்தும், பிள்ளைகிட்ட இருந்தும் பிரிச்சு வச்சுடாதே!” என்று ஆதங்கப்பட்டான் அவன்.
“அவனை அடுத்த வருஷம் இங்கே பள்ளிக்கூடத்துல சேர்க்கிறதுக்குப் பேசி வச்சுருக்கேன். இப்போ இடையில அவன் படிப்பை நிறுத்தினா சிலபஸும் புரியாம திணறிப் போவான்" என்று ஒரு தாயாக நிகாரிகா தன் முடிவைச் சொன்னாள்.
பத்து மாதம் சுமந்து பெற்றதோடு மட்டுமல்லாமல், கடந்த ஏழு வருடங்களாக இமை போலப் பேணிப் பாதுகாத்து வளர்த்தவள் அவள்தான். ஆகவே, தன் மகனின் மீதான முதல் உரிமை அவளுக்கே உண்டு என்பதை உணர்ந்த அன்பிற்கினியன், அவளது முடிவை பிடித்தமில்லாவிட்டாலும் ஏற்றுக்கொண்டான்.
வழியில் நிகாரிகாவின் பேச்சால், அவளது சொற்கள் அவன் மனதைக் குடைந்து கொண்டிருந்த நிலையில் , மகனைப் பற்றிய எண்ணம் சற்றுப் பின் தங்கியிருந்தது உண்மைதான். ஆனால், காரின் கதவைத் திறந்து கால் வைத்த அந்த நொடியில், 'தந்தை' எனும் உணர்வு அவனுக்குள் எரிமலையாய்ப் பொங்கியது.
உள்ளே நுழையப் போகும் பதற்றத்தில் அவனது கைகள் நடுங்கின. நெற்றியில் வேர்வைத் துளிகள் அரும்பிக் கொட்டின. இதோ, இன்னும் சில அடிகளில் தன் பிம்பத்தைக் காணப்போகிறோம் என்ற எண்ணமே அவனது உடலை ஒருவித சிலிர்ப்புக்கு உள்ளாக்கியது. அவனது கண்கள் அந்த வீட்டின் வாசலைத் தவிப்போடு துழாவின. ‘அவன் எப்படி இருப்பான்? அழகைப் போலவே இருப்பானா?’ என்ற கேள்விகள் அவனது அடிமனதில் மோதி அவனை நிலைகுலையச் செய்தது.
இதயத் துடிப்பு சட்டையை மீறி வெளியே கேட்கும் அளவுக்கு எகிறிக் குதிக்க, அவனது கால்கள் தன்னிச்சையாக முன்நோக்கி நகரத் துடித்தன. அவனது அவசரம் ஒவ்வொரு அசைவிலும் அப்பட்டமாகத் தெரிய, அவனது அதீத படபடப்பைக் கண்டு மிரண்ட தென்னவன், “டேய்... கொஞ்சம் அடக்கி வாசிடா! அமைதியா இரு!” என்று அன்பிற்கினியனை அதட்டி நிதானப்படுத்தினான்.
“என் பிள்ளை என்னை அப்பான்னு கூப்பிடாம மாமான்னு கூப்பிட்டுருவானோ?” என்று வார்த்தைகள் நடுங்கக் கேட்டான் அன்பிற்கினியவன்.
தன் மகனே தன்னை ‘அத்தை’ எனக் கூப்பிடும் பெரும் வலியை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருப்பவள் என்பதால், நிகாரிகாவின் உடலும் ஒரு கணம் ஆட்டம் கண்டது.
“சாரி...” என்று மெல்லிய குரலில் நிகாரிகா சொல்ல, “நீ என்ன பண்ணுவ? விதி உன்னையும் என்னையும் ஃபுட்பால் மாதிரி சுழட்டி அடிக்குது" என்றான் விரக்தியின் உச்சியில்.
“நான் என் பையனைப் பார்க்க வரலடா... விட்டுடு! என்னால இவளை மாதிரி பெத்த பிள்ளை அத்தைன்னு கூப்பிடுற வலியைத் தாங்கிக்க முடியாது. அவன்கிட்ட போயி மாமான்னோ, அங்கிள்ன்னோ என்னை அறிமுகப்படுத்துறதைக் கேட்டுட்டு நிக்கிற மனுஷன் நானில்லை. அதைக் கேக்குறதுக்கு பதிலா என் நெஞ்சு வெடிச்சு செத்துப் போயிடுவேன்!” " என்று வந்த காரிலேயே மீண்டும் ஏறப் போனான் அன்பிற்கினியன்.
அப்போதுதான், காயம்பட்ட இதயத்திற்கு மருந்தாகப் பொழிந்த தேனிசையைப் போல... “அப்பா...!” என்ற ஒரு மெல்லிய குரல் வீட்டுக்குள் இருந்து ஒலித்தது.
அந்தக் குரலைக் கேட்டதும், அன்பிற்கினியனின் நாடி நரம்புகளில் எல்லாம் புது ரத்தம் பாய்ந்தது போல இருந்தது.
நிகாரிகா ஸ்தம்பித்துப் போய் நிற்க, அன்பிற்கினியனோ சிலையாக உறைந்தான். காரில் எடுத்து வைத்த கால் அப்படியே நிற்க, அவன் கண்கள் மட்டும் கட்டுக்கடங்காமல் கண்ணீரைச் சொரிந்தன.
தென்னவன்தான் அவனை உலுக்கி நிதானத்திற்குக் கொண்டு வந்தான். அடுத்த நொடியே, “அப்பா!” எனக் கூவிக்கொண்டே ஆரியன் ஓடிவந்து அன்பிற்கினியனைக் கட்டிக்கொண்டான். அந்தப் பொக்கிஷமான தருணத்தைத் தென்னவன் தன் கைபேசியில் படமாக்கத் தொடங்கினான்.
தென்னவனின் கைகள் படம்பிடித்தாலும், உள்ளமோ ‘எப்படி இந்த மாயம் நிகழ்ந்தது?’ எனச் சிந்தித்தது. அப்போது வாசலில் இரு கைகளைக் கட்டியபடி காஞ்சனா இதைப் பார்த்துக் கொண்டிருப்பதை கண்டதும் அவர்தான் இந்தச் சிறுவனுக்குத் தந்தை யார் என்பதைச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என தென்னவனுக்குப் புரிந்தது.
தன்னைத் தூக்கிக் கொண்ட தந்தை, தன் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த ஆர்யன், “Why are you looking at me?” என்று மழலை ஆங்கிலத்தில் வினாத் தொடுத்தான்.
தென்னவனுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்தது. அன்பிற்கினியன் அவனை முறைக்க, “அங்கால ஒருத்தி நீ என்னைப் பாசமாப் பார்க்கிறாய்னு பொங்கப் போறாள்டா!” என்று நிகாரிகாவையும் ஞாபகப்படுத்தினான் தென்னவன். தன்னைச் சிறையெடுத்தவளைப் பார்த்துக் கண்ணடித்தான் அன்பிற்கினியன்.
தன் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அவர்கள் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்த ஆரியன், சட்டென அன்பிற்கினியனின் தாடையைத் தன் பக்கம் திருப்பி, “I have a question for you... answer me! ” என்று அதட்டலோடு கேட்டான்.
அன்பிற்கினியனுக்கு ஆங்கிலம் சட்டென்று வாயிற்குள் நுழைந்துவிடாது. அவன் தடுமாற, ஆரியனைத் தன் கைகளுக்கு மாற்றிய தென்னவன், “டேய் செல்லம்... உன் அப்பாக்கு இங்கிலீஷ் வாடை ஆகாதுடா!” என்றான்.
“Why?” என்றவன், தந்தையின் முகத்தைப் பார்த்ததும் அவருக்குத் தமிழ்தான் தெரியும், ஆங்கிலம் தெரியாது போல என நினைத்துக் கொண்டான். உடனே, “எனக்குத் தமிழும் பேசத் தெரியுமேப்பா..” என்று தன் தந்தை அன்பிற்கினியனிடம் பவ்யமாகச் சொன்னவன், அப்படியே தென்னவனையும் பார்த்தான். தன் தந்தைக்கு ஏன் ஆங்கிலம் பிடிக்காது என்ற ரகசியத்தை அவன் தான் சொல்லுவான் என்பது போல ஒரு பார்வை பார்த்தான் ஆரியன்.
அவன் பார்வையைப் புரிந்து கொண்டு சிரித்த தென்னவன், “ஏன்னா அது வெள்ளைக்காரன் மொழியாம்! நம் நாட்டுக்கு அது எதுக்குன்னு கொடி பிடிக்கிற ஆளு இவரு. இவர்கிட்ட போயி நீயும் உன் அம்மாவும் வாயைத் திறந்தாலே இங்கிலீஷ்ல பேசினா, என் தோஸ்து பயந்துட மாட்டானா?” என்று கிண்டலாகச் சொன்னான்
“யார் அம்மா?” என்று ஆரியன் சட்டெனக் கேள்வி கேட்க, வாய் தவறி உண்மையைச் சொல்லிவிட்ட தென்னவன் திகைத்துப் போனான். ‘காஞ்சனா ஏன் அன்பிற்கினியனை மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு, நிகாரிகாவைப் பற்றி எதுவும் சொல்லவில்லை?’ என்று புரியாமல் அவன் காஞ்சனாவைப் பார்த்தான்.
காஞ்சனாவோ அங்கே நடப்பதற்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல நின்றிருந்தார்.
அன்பிற்கினியன் மெல்ல ஆரியனின் முகத்தைத் தன் கைகளுக்குள் ஏந்தி, “உங்களுக்கு அப்பா யார்னு சொல்லிக் கொடுத்தவங்க அம்மா யார்னு சொல்லித்தரலையா?” என்று மெல்லிய குரலில் கேட்டான்.
“யாரும் எனக்கு உங்களை அடையாளம் காட்டலப்பா...” என்று தன் மழலை மாறாத குரலில் மறுப்பாகத் தலையசைத்த ஆரியன், “என் டாடி எப்பவும் சொல்வார், நான் அப்படியே என் அப்பா மாதிரி இருக்கேன்னு. அப்புறம் அத்தையும் கிராண்ட்பாகிட்ட அடிக்கடி சொல்லுவாங்க... ஆரியனை அவங்க அப்பாக்கிட்ட கண்டிப்பா ஒருநாள் கூட்டிட்டுப் போய் காட்டணும்னு. அவங்க பேசிக்கிட்டதை நான் கேட்டிருக்கேன். அதான், நீங்கதான் என் அப்பான்னு நானே கண்டுபிடிச்சேன்!” என்று அவன் பெருமையாகச் சொல்லச் சொல்ல, அங்கு நின்றிருந்தவர்களுக்கு வியப்பாகிப் போனது.
அன்பிற்கினியன் ஆச்சரியத்துடன், “என்னை எப்படி கரெக்டா கண்டுபிடிச்சிங்க?” என்று கேட்க,
“அதுவா... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் கிராண்ட்மா, கிராண்ட்பாகிட்ட ரொம்பக் கோபமாக உங்க மகராஜாவுக்கு இன்னும் இந்த இளவரசனைப் பார்க்க நேரம் வரலை போல... அவரோட தூதுவன்தான் முதல்ல வந்தான். அவன் ஆரியனைப் பார்த்துட்டுப் போய் சொன்ன பிறகுதான் மகராஜா வருவாரோ என்னவோ?ன்னு கிண்டலாப் பேசினாங்க. அவங்க அப்படிச் சொன்ன கொஞ்ச நேரத்துலயே நீங்க கார்ல இருந்து இறங்குனீங்க. அதான்... டக்குனு கண்டுபிடிச்சிட்டேன்!” என்று அவன் மழலை மாறாத குரலில் சொல்ல, அங்கிருந்தவர்கள் ஒரு கணம் திகைத்துப் போயினர்.
“எவ்வளவு நேரம் வெளியேவே நிற்கப்போறிங்க உள்ளே வாங்க” என்று சொல்லிவிட்டுக் காஞ்சனா உள்ளே செல்ல, அன்பிற்கினியனும் தென்னவனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

Last edited:
Author: நிதனிபிரபு
Article Title: அழகுப்பதுமையின் அன்பிற்கினியவன் - 22
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.